16/10/2025 ல் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 17 கோடி ரூபாய் வசூலைக்குவித்த இந்தப்படம் இப்போது 29/11/2025 முதல் ஜீ 5 ல் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.கோலமாவு கோகிலா,ரிவால்வர் ரீட்டா டைப் கதை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா ஒரு டிடெக்ட்டிவ்.அதனால் நாயகனும் டிடெக்ட்டிவ்.அப்பா முதல்வர் எனில் மகனும் முதல்வர் ஆவது போல்.
மெக்சிகோவின் மிகப்பெரிய டான் தான் வில்லன்.அவனை யாரும் நேரில் பார்த்ததே இல்லை.பார்த்தவர்களை போட்டுத்தள்ளிடுவான்.அப்படிப்பட்ட வில்லனை நாயகனின் அப்பா ஒரு டிடெக்ட்டிவ் ஆக போட்டோ எடுத்து விடுகிறார்.அவரை வில்லன் பார்த்து விடுகிறான்.உடனே உயிருக்கு பயந்து நாயகனின் அப்பா தப்பி விடுகிறார்.
இங்கே கட் பண்ணினா 20 வருடங்கள் கழித்து...
நாயகன் தன் அப்பாவைப்போலவே டிடெக்டிவ் ஆக நினைக்கிறான்.அப்பாவின் டிடெக்டிவ் ஆபீசையே தூசு தட்டிக்குடி ஏறுகிறான்.நாயகனுக்கு ஒரு காதலி உண்டு.காதலியின் பக்கத்து வீட்டு ஆண்ட்டியுடைய செல்ல நாய் காணாமல் போகிறது.இந்தக்கேசைத்துப்பு துலக்கி நாயகன் நாயைக்கண்டு பிடித்து விடுகிறான்.
இங்கே கட் பண்ணினா
30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை கடத்திட்டு வரும் பிராஜெக்ட்டில் ஒருவன் அதை ஆட்டையைப்போடப்பார்க்கிறான்.அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக சராப்யுதின் காமெடி யுடன் நடித்திருக்கிறார்.ஆக்சன் சீக்வன்சிலும் நல்ல உழைப்பு.
நாயகி ஆக அனுபமா பரமேஸ்வரன் அழகாக வந்து போகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் அருமை.ஆடை வடிவமைப்பும் அசத்தல்.
வில்லன்களில் ஒருவராக வினாயக் நடித்திருக்கிறார்.
விஜயராகவன் சம்சாரத்துக்கு எடுபுடி கணவர் ஆக வரும் காட்சிகள் கலகலப்பு.
எடுபுடி ஆகப்பார்த்து விட்டு பிற்பகுதியில் ட்ரான்ஸ்பர்மேஷன் சீன்களில் அவரைக்கண்டு பயம் வரவில்லை.திரைக்கதையில் அது ஒரு பின்னடைவு.
இசை ராஜேஷ் முருகேசன்.பாடல் சுமார்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவு சந்திரன்.நாயகியை அழகாகக்காட்டி இருக்கிறார்.எடிட்டிங அபினவ் சுந்தர் நாயக்.116 நிமிடஙகள் டைம் ட்யூரேசன்.
ஜெய் விஷ்ணு வுடன் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரணீஷ விஜயன்
சபாஷ் டைரக்டர்
1 டிடெக்டிவ் ஆன நாயகனும்,போலீஸ் ஆபீசர் ஆன அவரது நண்பரும் சின்ன வயசில் கைகேயி என்ற க்ளாஸ்மேட்டை ரூட் விட்ட விஷயம் இப்போது வரை தொடர்வது நல்ல காமெடி கண்ட்டெண்ட்
2 வீட்டில் எலி வெளில புலி என்பது போல வெளி உலகம் பயந்து நடுஙகும் ஒரு ஆள். வீட்டில் பொண்டாட்டிதாசனாக , வேலைக்காரனாக இருப்பது செம காமெடி
3. கடைசி 20 நிமிடஙகளில் நடக்கும் காமெடிக்கலக்கல் சம்பவங்கள்
ரசித்த வசனங்கள்
1 டிடெக்டிவ்னா என்ன? டிஸ்பென்சரின்னா என்ன? எனத்தெரியாத ஜனஙகளால என் டிடெக்ட்டிவ் ஏஜென்சியை மூட வேண்டியதாப்போச்சு
2 வாழ்க்கைல எப்போ எல்லாம் ரிஸ்க் என்னைத்தேடி வந்துச்சோ அப்போ எல்லாம் நான் ஓடி ஒளசிருக்கேன்
3 உன் வாழ்க்கைல ஒரு ஹீரோ யிக் மொமெண்டாவது இருந்திருக்கா?
4 போலீஸ் - மூவ்
என் கிட்டே இல்லை,கீழேதான் மெடிக்கல் ஷாப் இருக்கு,வாங்கிட்டு வரவா?
5 நேத்து நைட் நீ எங்கே இருந்தே?
கைகேயி கூட அவ வொட்ல இருந்தேன்
நைட் அங்கே என்னடா செஞ்சே?
அது பர்சனல்
பப்ளிக்கா சொல்லு
6 சுனில் எங்கே இருப்பான் ?
இருக்கற இடத்துலதான் இருப்பான்
7. எனக்கு இரண்டில் ஒண்ணு தெரிஞ்சாகனும்
என்னது?
ஒண்ணு நீ என்னைக்கட்டிக்கனும்,அல்லது நான் உன்னைக்கட்டிக்கனும்
8. உனக்கு நான் ஹெல்ப் பண்ணினது வெளில தெரிஞ்சா என் வேலையே போயிடும்
பெஸ்ட் ஆப் லக்.
9. நீங்க எப் பி ஐ ஏஜெண்ட்டா?
எஸ் பி ஐ ல கூட எனக்கு அக்கவுண்ட் இல்லைஙக .
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
,1 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு காரின் பின் சீட்டில் இருக்கும்போது ரன்னிஙகில் இருக்கும் காரின் டிரைவரைக்கொல்வது ஆபத்தாச்சே? கார் எங்காவது மோதி தீப்பிடித்தால் சரக்கு எரிஞசிடுமே?
2 க்ளைமாக்சில் ஒர்க் அவுட் ஆன காமெடி சீக்வன்ஸ் படம் நெடுக ஒர்க் அவுட் ஆகவில்லை.
அடல்ட் கண்ட்டெண்டவார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிளாக் காமெடி ரசிகர்கள் பார்க்கலாம்.பிரமாதமும் இல்லை.மோசமும் இல்லை.பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 / 5
| The Pet Detective | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Praneesh Vijayan |
| Written by | Praneesh Vijayan Jai Vishnu |
| Produced by | Gokulam Gopalan Sharaf U Dheen |
| Starring | Sharaf U Dheen Anupama Parameswaran Vinayakan Vinay Forrt Shyam Mohan Joemon Jyothir |
| Cinematography | Anend C. Chandran |
| Edited by | Abhinav Sunder Nayak |
| Music by | Rajesh Murugesan |
Production companies | Sharaf U Dheen Productions Sree Gokulam Movies |
| Distributed by | Sree Gokulam Movies |
Release date |
|
Running time | 116 minutes[1] |
| Country | India |
| Language | Malayalam |
| Box office | ₹17.05 crore[2] |
