Tuesday, November 25, 2025

மிடில் கிளாஸ் (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி ட்ராமா)

             

        பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர்,கார்ப்பரேட் புரொடக்சன் இந்த காம்பினேசனில் வரும் டப்பாப்படங்களுக்கு நடுவே இது மாதிரி தரமான திரைக்கதை உள்ள லோ பட்ஜெட் படங்கள் அவ்வப்போது       நம்மை அசத்தி விடுவது உண்டு.இது போன்ற திரைக்கதை பலமாக இருக்கும் படங்களின் வெற்றியும் ,வருகையும் தான்  மாஸ் ஹீரோக்களின் அட்ராசிட்டியை அடக்க வல்லவை.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்து வருபவன்.15,000 ரூபாய் தான் சம்பளம்.மனைவி ஹவுஸ் ஒய்ப்.ஒரு மகன் ,ஒரு மகள் .சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி

பல வருடங்களுக்கு முன் நாயகனின் அப்பா தன்னிடம் வேலை பார்த்த ஒரு சேட்டுப்பையனுக்குத்தன் கடையையே தானமாகத்தந்து விடுகிறார்.


அந்த சேட்டு அந்தக்கடையை வைத்துப்பெரிய ஆள் ஆகி விடுகிறார்.ஒரு கட்டத்தில் அந்த சேட்டு நாயகனுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு   செக் போட்டுத்தந்து விடுகிறார்.நாயகனின் அப்பா செய்த உதவிக்குக்கைம்மாறு


அந்த ஒரு கோடியை வைத்து என்ன என்ன அலப்பறை பண்ணலாம் ?என நாயகனும் ,நாயகியும் திட்டம் போடுகிறார்கள்.ஆனால் அந்த செக் தொலைந்து விடுகிறது.


தொலைந்த செக்கை நாயகன் கண்டு பிடிக்க எடுத்த முயற்சிகளும் ,சில சர்ப்பரைஸ் சம்பவங்களும் தான் மீதி திரைக்கதை

நாயகன் ஆக முனீஷ் காந்த் கதையின் நாயகன் ஆக அருமையாக நடித்து இருக்குறார்.மொக்கைக்காமெடி பல படஙகளில் கை கொடுக்காமல் போனாலும் அவரது குணச்சித்திர நடிப்பு இதில் கை கொடுத்து இருக்கிறது.


நாயகி ஆக விஜயலட்சுமி சில இடஙகளில் ஓவர் ஆக்டிங ,பல இடஙகளில் மிதமான நடிப்பு என மிக்ஸ்டு ஆக்டிங தந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் நாயகியை இது போல கண்ணியமான உடையில் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது


செக்கைக்கண்டு பிடிக்க உதவும் கேரக்டரில் ராதாரவி ,டாக்டர் ஆக வரும் மாளவிகா அவினாஷ இருவர் நடிப்பும் இதம்


நாயகனின் நண்பர்களாக வரும் கோடாங்கி வடிவேலு,குரேசி ,மகன்,மகள் ஆக வருபவர்கள் நடிப்பும் ஓக்கே ரகம்.


நாயகனின் அப்பாவாக வரும் வேலை ராம மூர்த்தி  சேட்டு இருவர் நடிப்பும் கம்பீரம்.


இசை பிரணவ் முனி ராஜ்.2 பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை குட்.

ஒளிப்பதிவு சுதர்சன் சீனிவாசன்.கிராமத்தில் வரும் ஒரே ஒரு டாப் ஆங்கிள் ஷாட் அருமை.


திரைக்கதை ,இயக்கம் கிஷோர் முத்து ராமலிஙகம்.


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் ,நாயகி இருவரும் கச்சிதமான நடிப்பை வழஙகியது.

2  சாதா ஒரு வரிக்கதையை வேறு விறுப்பான திரைக்கதையால் பலம் சேர்த்த விதம்

3 செக்கைத்தேடும் படலம் தான் பின் பாதித்திரைக்கதை  என்றாலும் அதை திரில்லர் படத்திற்கு இணையாக சொன்ன விதம்

4 நாயகி நாயகனைத்திட்டி வைரல் ஆன வீடியோவை வைத்து க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை  அமைத்த ஐடியா

5 அயோத்தி ,டூரிஸ்ட் பேமிலி மாதிரி ஒரு Feel Good மூவிக்கான தகுதியைக்கடைசி 20 நிமிடஙகளில் சொன்ன விதம்

6 க்ளைமாக்ஸ் சீனில் நாயகியின் ஒப்பனை குறைந்த அழகு பேரழகு.அது வரை மற்ற காட்சிகளில் ஓவர் மேக்கப் போட்டதே இந்த எபெக்ட்க்கு தானோ? 


  ரசித்த  வசனங்கள் 

1   வக்கில்லாத ஆம்பளைக்குப்பொண்டாட்டி எதுக்கு?

2 எப்படியாவது பிழைப்பு நடத்தறவன் தான் ஆம்பளை


3 நம்மை மாதிரி மிடில் கிளாஸ்க்கு ஆண்டவன் கொடுக்கனும்னு நினைச்சாதான் கொடுப்பான்

4 என் துக்கத்தை நிறையப்பேர் கொண்டாடிட்டு  இருக்காஙக

5 எல்லாருக்கும் தெரியற மாதிரி கவுரவமா வாழ்தது தான் வாழ்க்கைனு நினைச்சேன்,ஆனா மனசுக்குப்பிடிச்ச மாதிரி வாழ்வது தான் வாழ்க்கை

6 உலகத்துலயே பெரிய சேமிப்பு எது தெரியுமா? மனுசனோட கஷ்டத்துல கூட நிற்பது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 தன் மகனுக்குத்தெரியக்கூடாது என்று நினைக்கும் சேட்டு ஒரு கோடி ரூபாயைக்கேஷ் ஆக நாயகனுக்குத்தருவதுதானே சரி?  செக் ஆகக்கொடுத்தால் பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் ட்ரான்செக்சன் தெரிந்து விடாதா!?


2 பிளாங்க் செக் வாங்கும் நாயகன் தன் பெயரை சேட்டு கையாலயே எழுதி வாங்குவது தானே சேப்டி.ஒரு கோடி ரூபாய் செக் ஆச்சே? பெயரே வாய்க்குள் நுழையலை என்று சொல்லும் சேட்டிடம் ஒரு பேப்பரில் தன் பெயரை எழுதிக்காட்டி

அதே போல் எழுதித்தரச்சொல்லி இருக்கலாமே?

3 அவ்வளவு பிரச்சனைகளுக்குப்பின் செக் கிடைத்ததும் நாயகன் தன் மனைவிக்கு ஏன்  போன் போட்டு சொல்லவில்லை?

4 நாயகனின் அப்பாவுக்கு சேட்டு எழுதிக்கொடுத்த கடன் பாண்டு பத்திரம் நாயகன் கால தானே இருக்கு? அதை சேட்டு மகனிடம் ஆதாரமாகக்காட்டி இருக்கலாமே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் + க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த ஒரு ஆல் செண்ட்டர் ஹிட் படம்.விகடன்  மார்க் யூகம் 44 .குமுதம் ரேங்க்கிங்.அருமை.ரேட்டிங்க் 3/5