10/10/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் கமர்ஷியலாகப்பிரமாத வெற்றி பெறா விட்டாலும் பாசிட்டிவ் மீடியா விமர்சனஙகளைப்பெற்றது.இப்போது 10/11/2025 முதல் அமேசான் ப்ரைம் ஓடி டியில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு விவசாயி.தனது நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறான்.மனைவி ,ஒரு மகன் உண்டு.
நாயகனின் அப்பா பேங்க்கில் லோன் வாங்கிததாகவும்,அதை அடைக்காததால் நிலத்தை ஏலம் விட்டு விட்டதாகவும் பேங்க் ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறது.
ஆனால் நாயகனின் அப்பா லோன் எதுவும் வாங்கவில்லை.பேங்க் மேனேஜர் தான் மோசடி செய்து இருக்கிறார்.
நாயகன் சட்டப்படி கோர்ட்டில் வாதாடி எப்படி ஜெயிக்கிறார் என்பது மீதித்திரைக்கதை.
நாயகன் ஆக விதார்த் இயல்பான நடிப்பு.ஹீரொயிசம் காட்டாத ஹீரோவைத்தமிழ் சினிமாவில் பார்ப்பதே அரிதாகி விட்டது
நாயகி ஆக ரக்சனா பாந்தமான குடும்பப்பெண்ணாக வந்து போகிறார்.தமிழ் சினிமாவில் குடும்பப்பெண்களைப்பார்ப்பதே குதிரைக்கொம்பு ஆகி விட்டது.அரை குறை டிரசுடன் தான் அலைகிறார்கள்.
நாயகனின் நண்பன் ஆக லொள்ளு சபா மாறன் தன் ஒன் லைனர்களால் சில இடஙகளில் கலகலப்பு ஊட்டுகிறார்.
நாயகனுக்கு வாதாட ஐடியாக்கொடுக்கும் வக்கீல் ஆக தினந்தோறும் நாகராஜ் கை தட்டல்களைப்பெறுகிறார்.இவர் ஒரு நல்ல திறமைசாலி.
பைனான்ஸ் பார்ட்டியாக வரும் அருள் தாஸ் ,பேங்க் மேனேஜர் ஆக வரும் சரவணன் சுப்பையா ,வக்கீல் ஆக வரும் மேத்யூ வர்கீஸ் அனைவரும் கச்சிதமான நடிப்பை வழஙகி இருக்கிறார்கள்.
இசை ரகுநந்தன்.4 பாடல்களில் 2 தேறுகிறது.பின்னணி இசை கச்சிதம்.ஒளிப்பதிவு அருள் கே சோமசுந்தரம்.கிராமத்து அழகைக்கண் முன் காட்டுகிறார்.
பி சந்துரு வின் எடிட்டிஙகில் படம் 96 நிமிடங்கள் ஓடுகிறது.
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வி கஜேந்திரன்
சபாஷ் டைரக்டர்
1 படிப்பறிவில்லாத விவசாயிகளை ஏமாற்றும் வங்கி அதிகாரியின் கதையை சொல்ல இயக்குனர் எடுத்த முயற்சிகள்
2 இது ஒரு உண்மை சம்பவம் என்பதால் கவனத்தைக்கவரும் வகையில் திரைக்கதை இருக்கிறது
3 அனைவரது நடிப்பும் கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 உழவன் உங்க கிட்டே லோன் வாங்குவதற்குள் கிழவன் ஆகிடுவான்
2 வடநாட்டில் இருந்து வந்த சேட்டு கூட ஒரு கையெழுத்துதான் வாங்கறான்.உள்ளூர்க்காரனை நம்பாம இத்தனை கையெழுத்து வாங்கறீங்க.
3 அந்தப்பொண்ணு உங்களைத்திட்டிட்டுப்போகுது,சிரிக்கறீங்க?
திட்டினாலும் இங்க்கீஷல தானே திட்டுது?
4 உங்க தாத்தா செத்துட்டார்,நான் இன்னும் சாகலை,அவ்ளவ் தான்மா வித்யாசம்
5 நாங்க தான் ஜெயிக்கலை.நீங்களாவது ஜெயிக்கனும்.நீங்க ஜெயிச்சா நாங்க ஜெயிச்ச மாதிரி.
6 தெரியாதவன் ஏமாத்தறாந்னுதான் தெரிஞ்சவஙககிட்டே போறோம்,அவஙகளும் ஏமாத்தினா என்ன செய்ய?
7 திருட்டுப்பசஙகதான் கோர்ட்டுக்கு வருவானுஙக,இவன் கோர்ட்லயே திருட வந்திருக்கான் போல
8 இவனாக்கத்திட்டு நம்மளை சைலண்ட்னுசொல்லிட்டுமாட்டாங்க
9 மனுசனோட மனசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா மாறும்.நான் கத்துக்கிட்ட பாடம் இது.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 விவசாயத்தை உயர்த்திப்பிடிக்கும் படத்தில் அரசுப்பள்ளியில் படிப்பதற்கு எதிரான காட்சி.தனியார் பள்ளியில் படித்தால் தான் கவுரவமா?.
2 நாயகனிடம் கவுன்சிலர் அந்த பிரைவேட் ஸ்கூலில் பையனை சேர்க்கனும்னா லட்சக்கணக்கில் செலவாகும்னு சொல்றார்.அடுத்த சீனில் நாயகன் தன் மனைவியிடம் 3 லட்சம் செலவாகும்னு கவுன்சிலர் சொல்றார் என்கிறாரே? எப்படி?
3 நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் நாயகன் கூட்டுறவு வங்கியில் வாங்காமல் அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடம் வாங்குவது ஏன்?
4 மகனை எல் கே ஜி யில் சேர்க்கவே இருக்கும் ஒரே சொத்தான நிலத்தை அடமானம் வைக்கும் நாயகன் அதைத்தொடர்ந்து ஒவ்வொரு டொனேசனுக்கும்,பீஸ்க்கும் பணத்துக்கு என்ன செய்யப்போகிறோம்? என நினைக்க மாட்டாரா?
5. பேங்க் மேனேஜர் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறுகிறார்.அது நாயகனுக்கு எப்படித்தெரியாமல் போனது? சைன் பண்ணித்தானே வாங்க முடியும்?
6 பிரைவேட் ஸ்கூலில் டொனேசன் ,பீஸ் எல்லாம் பிரித்து இவ்வளவு என்பதைத்தெளிவாக சொல்லி விடுவார்கள்,ஆனால் நாயகன் 3 லட்சம் டொனேசன் கட்டி விட்டு டோட்டலாவே அவ்ளவ் தான் என்று நினைப்பது எப்படி?
7 நிலத்தின் ஒரிஜினல் பத்திரம் நாயகனிடம் இருக்கும்போது பேங்க் எதை வைத்து அந்த நிலத்தை ஏலம் விட முடியும்?
8 நாயகனின் மகனை பிரைவேட் ஸ்கூலில் சேர்த்து விடுகிறான்.ஆனால் எப்போ நாயகன் வீட்டுக்கு வந்தாலும் மகன் வீட்டில் தான் இருக்கிறான்.எப்படி?
9 கேஸ்க்கு வாதிட வக்கீல்10 லட்சம் ரூபா செலவு ஆகும் என்கிறார்.3 லட்சம் அட்வான்ஸ் கேட்கிறார்.இலவச சட்ட உதவி மையம் மூலம் அரசாங்கம்திட்டுதுஇலவச வக்கீல் வைத்துக்கொள்ளலாமே?
10 கோர்ட்டில் நாயகன் வணக்கம் வைக்கும்போது ஜட்ஜூம் வணக்கம் வைக்கிறார்.அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. தலையை சின்னதா அசைக்கக்கூட மாட்டாங்க
11 பேங்க்கில் லோன் கட்டலைன்னா நோட்டீஸ் அனுப்பி பின் நேரில் ஆபீசர் ஒரு முறை ,பேங்க் மேனேஜர் ஒரு முறை கட்டாத நபர் வீட்டுக்கு வந்து வார்னிங் கொடுத்த பின் தான் நிலத்தை ஏலம் விட முடியும்
12 டைவர்ஸ் நோட்டீசில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி விட்டதாகத்தன் மாமனாதைக்குறை கூறுகிறார் மாறன்.ஆனால் நடந்ததை சொல்லி கோர்ட்டில் எதிர்ப்புத்தெரிவிக்கலாம்.
13 பேங்க் மேனேஜர் தனக்கு எதிரான சில விஷயஙகள் தன் லேப் டாப்பில் இருப்பது தெரிந்தும் அதை ஏன் கோர்டுக்குக்கொண்டு வருகிறார்?
14 படிப்பறிவே இல்லாத நாயகன் கோர்ட்டில் திறமையாக வாதிடுவது எப்படி? ஓப்பனிங சீனில் இங்க்லீஷ தெரியாது என சொன்னவர் கோர்ட்டில் லேப்டாப்,பென் டிரைவர் உட்பட பல ஆங்கில வார்த்தைகளை சொல்வது எப்படி?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நல்ல கதைக்கரு தான்.இயல்பான திரைக்கதை தான்,ஆனால் பல விஷயஙகளில் லாஜிக் அடி வாங்குகிறது.விகடன் மார்க் யூகம் 41 ,குமுதம் ரேங்க்கிங்க். ஓக்கே.ரேட்டிங்க் 2.5 /5
| Marutham | |
|---|---|
![]() Theatrical release poster | |
| Directed by | V. Gajendran |
| Written by | V. Gajendran |
| Produced by | C. Venkatesan |
| Starring |
|
| Cinematography | Arul K. Somasundharam |
| Edited by | Chandru B |
| Music by | N. R. Raghunanthan |
Production company | Aruvar Private Limited |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |
