10/10/2025 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 14/11/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு கிராமம்.அங்கே ஒரு ஆள் நைட் டைம் சரக்கு அடிச்ட்டு வீட்டுக்குக்கிளம்பும்போது ஒரு கள்ளக்காதல் ஜோடி தோப்புக்குள்ளே இருப்பதைப்பார்த்துடறான்.
அடுத்த நாள் அவன் அவனோட நண்பன் கிட்டே விஷயத்தை சொல்றான்.இப்போ ரெண்டு பேரும் அதே டைம்க்கு அதே ஸ்பாட்க்குப்போறாங்க
ரிப்பீட்டு.அதே க.கா ஜோடி (க.கா = கள்ளக்காதல்) வர்றாஙக.இருட்டுல ஆண் யார்? என தெளிவாகத்தெரிந்து விடுகிறது,ஆனால் பெண் யார்?என முகம் சரியாகத்தெரியவில்லை.
அந்த ஊர்லயே ஒரே ஒரு டெய்லர்தான்.அவனுக்கு பெண்களோட அளவுகள் எல்லாம் தெரியும்.அதை வெச்சு இருட்டில் ,நிழல் உருவத்தை வெச்சே இந்தப்பொண்ணாத்தான் இருக்கும்னு யூகம் பண்ணிக்கறான்.
அந்தப்பொண்ணோட புருசன் கிட்டே சொல்றான்.ஊரில் இருக்கும் வேலை வெட்டி இல்லாத பசஙக எல்லாம் ஒன்று கூடி அந்த ஜோடியைக்கையும் களவுமாப்பிடிக்க பிளான் போடறாஙக.
இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
இந்தப்படத்தில் நாயகன், நாயகி,வில்லன் என யாரும் இல்லை
ஒரே கிராமத்தில் நடக்கும் கதை என்பதால்,பெரிய நட்சத்திரங்கள் என யாரும் இல்லாததால் சம்பள செலவும் ,லொக்கேஷன் செலவும் இல்லை
ஒளிப்பதிவு ஸ்ரீ ராஜ் அண்ட் ரமேஷ். கச்சிதம்.
இசை ஸ்ரீ ராக் சஜி.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.. எடிட்டிங் சிவராஜ்.106 நிமிடஙகள்.
கதை ,திரைக்கதை அம்பரீஷ.இயக்கம் சென்னா ஹெக்டே
சபாஷ் டைரக்டர்
1 இந்த துக்ளியூண்டு கதையை 2 மணி நேரப்படமாக எடுத்த சாமார்த்தியம்
2 கோக்கு மாக்கான படம் என்பது மாதிரி மார்க்கெட்டிங் செய்த உத்தி
3 போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 லைட்டா ,லைட்டான்னு சொல்லி சொல்லி வெய்ட்டாக்குடிக்கிறான்
2 எந்த சரக்கா இருந்தாலும் உள்ளே தள்ளிடுவேன்,அது தான் தொழிலாளர் சரக்கு
உனக்கு தான் வேலை வெட்டியே இல்லையே? அப்புறம் என்ன தொழில்?
3 டி வி சீரியலில் காட்டாத சீன் எல்லாம் இப்போ நான் காட்றேன்
4 ஏம்ப்பா,அந்த க.கா ஜோ டி கிட்டே இருந்து சத்தம் எதுவும் வர்லியே?
டால்பி சவுண்ட் சிஸ்டம் ரெடி பண்ணிடலாமா?
5. வருசா வருசம் ஓணம் பண்டிகை முடிஞ்சதும் பொண்ணுங்க 2 இஞ்ச் பெருத்துடுவாங்க
6 இது என்ன ஊர்த்திருவிழாவா? எல்லாரும் போய்ப்பார்க்க?
7 என்னடா? காலஙகாத்தாலயே வந்துட்டீஙக?
சரி.போய்ட்டு நைட் வரவா?
8. செக் அவுட் பண்றியா?
வாட்?
பின்னே? வீட்டுக்கு நைட் வர்றே? காலைல கிளம்பிடறே! லாட்ஜ் மாதிரி
9 பொண்ணுங்க மேல எப்பவும் ஒரு கண் வெச்சிருக்கனும்.அது அம்மாவோ,தங்கையோ,மனைவியோ...இல்லைன்னா தலை மேல ஏறிக்குவாஙக.
10 தளறாம முன்னேறிப்போவதுதான் நம்மை பலசாலி ஆக்கும்
11. அம்மா,ஒரு முக்கியமான வேலையாப்போறேன்,ஆசீர்வாதம் பண்ணுஙக
என்ன?ந்னு பண்ண?
என்னத்தையாவது சொல்லுங்க
பஸ்ல நடு சீட் கிடைக்கட்டும்
நக்கலு?
12 இவன் முகத்தைப்பாரு,சீரியல் கில்லராவே தெரியறான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. மாவு மில்லில் மாவு அரைப்பவன் தான் அந்தக்கள்ளக்காதலன்.அவன் தான் ஓனர்.அதுவே பாதுகாப்பான இடம் தான்.அவன் அங்கே வரச்சொல்லாம வேற ஒருவர் வீட்டு தோட்டத்துக்கு வரச்சொல்வது ரிஸ்க்
2. நிர்மலா என்ற பெண் தான் அந்தக்காதலியோ என்ற சந்தேகம் அனைவருக்கும்.ஆனால் அவள் கணவன் நைட் ஷிப்ட் வேலையில் இல்லை.வீட்டில் மாமியார் ,10 வயது மகள் இருக்கும்போது கணவனுக்குத்தெரியாமல் மிட் நைட்டில் வெளியே போக முடியாது.
3 க்ளைமாக்சில் அகப்பட்ட அந்த பெண் பேசும் வசனஙகள் அபத்தம்.புருசன் பிடிக்கலைன்னா டைவர்ஸ் பண்ணிட்டு அவன் கூடப்போக வேண்டியது தானே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இந்தப்படம் 30 நிமிடஙகளில் முடிக்க வேண்டிய குறும்படம்,ஜவ்வாய் இழுத்து விட்டார்கள். ரேட்டிங்க் 2 /5
| Avihitham | |
|---|---|
![]() | |
| Directed by | Senna Hegde |
| Written by |
|
| Story by | Ambareesh Kalathera |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography |
|
| Edited by | Sanath Sivaraj |
| Music by | Sreerag Saji |
Production companies |
|
| Distributed by | |
Release dates |
|
Running time | 106 minutes |
| Country | India |
| Language | Malayalam |

