Tuesday, October 01, 2013

எல்லா கவர்மெண்ட் ஆஃபீசையும் இழுத்து மூடுங்க - ஒபாமா உத்தரவு

அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒபாமா கேர் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுக்கட்சியினர் அதிகமுள்ள பிரதிநிதிகள் சபையில் ஒபாமாவின் இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்திவைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்தது.
இதனையடுத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1995-96 க்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 



மக்கள் கருத்து


1. மன்னுஜி அங்கே போயிட்டு வந்தார்......உடனேயே இந்த எபெக்ட்......என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி....



2  அமெரிக்கா திவால் ஆகவில்லை. நிதி பட்ஜெட் ஒப்புதலுக்கு இரு கட்சிகளிடையே கருத்து வேறு பாடினால் தடை. 



3 எங்க ஊருல இருந்து நாலு காங்கிரஸ் எம்பி மந்திரிகளை சேத்துக்கங்க. எல்லாம் சரி ஆகிடும். அதுவும் நம்ப நாராயணசாமி, சிதம்பரம் மட்டும் இருந்த குட போதும். வேன பேணி பிரசாத்தையும் செதுகாங்க... நல்ல பாதுகாப்ப அமெரிக்க இருக்கறத நெனைச்ச சுஷில் குமார் வருவாரு.



4 அரசு நிறுவனங்கள் என்றும், சுகாதார நலத்திட்டத்திற்கான எதிர்ப்பினால் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூடுவதென முடிவு செய்ததாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அது அனைத்து அரசு அலுவலகங்களுமா அல்லது சுகாதாரத்துறை அலுவலகங்கள் மட்டுமா என்பதை தெளிவுபடுத்தவும்.



5  உலகின் மிக முன்னேறிய நாடான அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம் நாடு போன்ற முன்னேறாத நாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கதி என்னவாக இருக்கும்.


6  அமரிக்காவில் இன்சூரன்ஸ் கம்பனிகள் வைத்ததுதான் சட்டம். குடியரசுக் கட்சிக்காரர்கள் தான் இவைகளின் முதலாளிகள் இன்சூரன்ஸ் எடுக்க முடியாமல் ஏழைகள் , குறிப்பாக கருப்பு இனத்தவர்கள் படும் பாடு சொல்லிமுடியாது. அதைத் தவிர்க்க முயற்சித்த ஒபாமா , குடியரசுக் கட்சிப பணக்கார முதலைகளிடம் ,தோற்கிறார். அடுத்தவனுக்குத்தான் அமெரிக்க உபதேசம்.

 நன்றி - த ஹிந்து ,விகடன்