இந்த வாரம் 6 தமிழ்ப்படங்களும், ஒரு ஆங்கிலப்படமும் ஆக மொத்தம் 7 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இதுல 3 தேறும்னு நினைக்கறேன்..பரபரப்பான படமா வாச்சாத்தியும், செல்வராகவன் வயிற்றில் புளியைக்கரைக்கும் படமாக ஒரு நடிகையின் வாக்கு மூலம் படமும், பிரகாஷ் ராஜின் பேர் சொல்லும் படமாக தோனியும் அமையும்..

1. வாச்சாத்தி - அண்மைக் காலங்களாக வெள்ளித்திரையில் உண்மைச் சம்பவங்கள் திரைப்படமாக உருவாவது தொடர்ந்து வருகிறது. இவ்வரிசையில் வாச்சாத்தி மலைக்கிராம சம்பவமும் படமாக வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க வாச்சாத்தியிலேயே படமானது என்பது கூடுதல் சிறப்பு.
அறிமுக நாயகன் ரமேஷ் ,நடிகை தர்ஷனி ,ஒளிப்திவாளர் குரு சில்வா ,அறிமுக இசையமைப்பாளர் ஜாக்சன், முன்னணி நடிகர்கள் மகேந்திரன், பாண்டு ஆகியோருடன் நெல்லை சிவா, பாபு ஆனந்த், கொட்டாச்சி, அப்புராஜ் மற்றும் நடிகை ஷகீலா என்ற குழுவுடன் இயக்குனர் ரவித்தம்பி இப்படத்தை இயக்குகிறார்.
பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கு பற்றிய நாம் அறியாத பல உண்மைகள் இந்தப்படத்தில் வெளி வரும்..ஈரோடு ஸ்டாரில் படம் ரிலீஸ்

2. ஒரு நடிகையின் வாக்குமூலம் -சோனியா அகர்வாலின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. முட்டலும் மோதலுமாக எப்படியோ தணிக்கை சான்றிதழை பெற்றிருக்கும் இப்படத்திற்கு சினிமாக்காரர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் உருவாகலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா கூறியிருக்கிறார்.
அந்த அளவுக்கு சோனியா அகர்வாலின் கதாபாத்திரம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துமாம். அதே சமயத்தில் மக்கள் இப்படத்தை பாராட்டவும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் புன்னகை பூ கீதா படத்தை பற்றி கூறுகையில், “எந்த ஒரு தொழிலிலும் நல்லது இருக்கும், கெட்டதும் இருக்கும். சினிமாவிலும் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே இருக்கிறது. அதைத்தான் பதிவு செய்திருக்கிறோம்.
சி.பி - >> மக்கள் இப்படத்தை பாராட்டவும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் புன்னகை பூ கீதா
ஹி ஹி செல்வராகவனுக்கு படத்துல சோனியா ஆப்பு வெச்சிருக்காங்களா?ன்னு பார்க்கத்தான் பாதிப்பேர் படத்துக்கு போவாங்க

இதற்கு முன்பு நான் எடுத்த படங்களில் தவறான கருத்துக்களை பதிவு செய்யவில்லை. நானும் ஒரு பெண் என்பதால் கவர்ச்சியின் எல்லை எது? ஆபாசம் எது? என்று தெரியும். அதை மீறி எப்போதும் நான் படம் எடுக்க மாட்டேன்.” என்றார்.
இப்படம் வெளியான பிறகு இப்படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா இயக்கும் மற்றொரு படத்தை தயாரிக்க இருக்கும் கீதா, இரண்டு நட்சத்திர நடிகர்கள் மற்றும் நட்சத்திர இயக்குநர்களை வைத்து மேலும் இரண்டு படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா, ஈரோடு ஸ்ரீநிவாசா ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ்
ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா, ஈரோடு ஸ்ரீநிவாசா ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ்

3. தோனி - பிரகாஷ்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'தோனி'.வங்காள மொழியில் வந்த படத்தின் தழுவல்..
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.
பிரகாஷ்ராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது
குழந்தை வளர்ப்பு மற்றும் படிப்பு குறித்து 'தோனி'யில் கூறி இருக்கிறாராம் , நண்பன் படத்துல சொன்ன அதே கருத்து ஆனா திரைக்கதை வேற. பையன் படிச்சு பெரிய ஆள் ஆகனும்னு அப்பா நினைக்கறார், பையன் ஒரு கிரிக்கெட் ப்ரியன் கம் டோனி பைத்தியம்... அவன் வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் தான் திரைக்கதை
பிரகாஷ்ராஜ். இப்படத்தின் கதையை கேட்ட உடனே படத்திற்கு இசையமைக்க
ஒப்புக் கொண்டாராம் இளையராஜா.
பிரகாஷ்ராஜுடன் ராதிகா ஆப்டே, 'தலைவாசல்' விஜய் மற்றும் பலர்
இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
படத்தின் ஹைலைட் : பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
சி.பி - நயன் தாராவையும் ஜோடி சேர்த்திருக்கலாம், நிஜ வாழ்க்கைல தான் சேர முடியல ஹி ஹி
ஈரோடு அபிராமியில் ரிலீஸ்.

4.விளையாடவா - திரிபுர சுந்திரி சினி கிரியேசன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் புதிய படம் "விளையாடவா". பாலாஜி ஹீரோவாக நடிக்க, திவ்யா பத்மினி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரம் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் டைரக்டர் கே.விஜயநந்தா.
நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி ஆகியோர் பாடல் வரிகள் எழுத, ஸ்ரீமுரளி இசையமைக்கிறார். திரிபுர சுந்தரி தயாரித்துள்ளார்.கேரம் விளையாட்டை மையப்படுத்தி படம் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி - கபடி, கில்லி, கேரம், ரன்னிங்க் என வரிசைப்படி வருது, அடுத்து அஞ்சாங்கல், பாண்டி ஆட்டம் பற்றி படம் வருமோ?
ஈரோடு அண்ணா, சங்கீதா ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ்
5. சூழ்நிலை -இந்தப்படத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கலை.. இசை தீனா .. இயக்குநர் கம் தயாரிப்பாளர் செந்தூரன்.. டி வி இசை மேடைகளில் பாடிய கே முரளி என்ற பாடகர் பாடிய இளந்தாரி இளந்தாரி என்ற பாடல் ஹிட் ஆகி உள்ளது..ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் ரிலீஸ்

6. ஒரு மழை நான்கு சாரல் - சிகே3 புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கே. பத்ரி நாராயணன் தயாரிக்கும் படம் ஒரு மழை நான்கு சாரல்.
இதில் ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ் ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். நாயகிகளாக அனகா, ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் பிரகாஷ், சிங்கமுத்து, எம்.எஸ். அருள்மணி, கோவை செந்தில், ஷீலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆனந்த் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
சோகத்தை அறியாத இருவர், போராட்ட வாழ்க்கை வாழும் இருவர் ஓரிடத்தில் இணைகின்றனர். நட்பை மட்டும் உறவாக கொண்ட அந்த நால்வருக்கும் லட்சிய போராட்டம் ஆரம்பமாகிறது. அதில் வென்றார்களா? என்பது கதை. நகைச்சுவை யுடனும் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விறு விறுப்புடனும் திரைக் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
சி.பி - யூகிக்க முடியாத திரைக்கதைன்னு தான் எல்லாரும் சொல்றாங்க, ஆனா பாருங்க படம் போட்டு 15 நிமிஷத்துலயே க்ளைமாக்ஸ் வரை எப்படி மூவ் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சுடுது

ஒளிப்பதிவு: டி. மகிபா லன், இசை: ஏ.டி. மேஹன், எடிட்டிங்: வேலாயுதம், சண்டைப்பயிற்சி: ஆக்ஷன் பிரகாஷ், நடனம்: சீனுப்பிரியா, பாடல்: சித்தார்த், தயாரிப்பு மேற்பார்வை: ஜோதிமணி.ஈரோட்ல தியேட்டர் எதுவும் இதுவரை புக் ஆகலை.
7. THE JOURNEY 2 THE MYSTERIOUS ISLAND VANESSAA HUDGENS-
.

ஹீரோ தன் அம்மாவோட பாய் ஃபிரண்ட்டோட சேர்ந்து தன் தாத்தாவை கண்டு பிடிக்கறதுதான் கதை.. படம் பூரா ஒரு தீவுல நடக்குது போல.. ட்ரெயிலர் செமயா இருந்தது.. ஒளிப்பதிவுக்காகவே, லொக்கேஷன்களுக்காகவே படம் பார்க்கலாம் போல ,.. கூடுதல் போனஸா ஹீரோயின் நல்ல ஃபிகர் போல .. ( நாம எந்தக்காலத்துல ஃபிகரை நல்லாலைன்னு சொல்லி இருக்கோம்?
இந்தப்படத்தோட முதல் பாகம் "A Journey to the Centre of the Earth" (1964-ல் )), இப்போ வர்ற படம் இதனோட ரீமேக்கா? அதனோட செகன்ட் பார்ட்டா?ன்னு தெரியலை.. 3டில ரிலீஸ்.. ஆனா ஈரோட்ல 3 டி இல்லை.. ஈரோடு வி எஸ் பி ல படம் ரிலீஸ்..
அ
டிஸ்கி -

அடிஸ்கி -