Wednesday, October 19, 2011

The Three Musketeers - ஆக்‌ஷன் வித் கிளாமர் பேக்கேஜ் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://blog.80millionmoviesfree.com/wp-content/uploads/2011/09/the-three-musketeers-movie-poster.jpg

அட்டகாசமான லொக்கேஷன்ஸ், கண்களில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு, சின்னப்பசங்க கூட ரசிக்கற அளவு அளவான ஆக்‌ஷன்ஸ், எல்லாத்துக்கும் ”மேலே” ,படத்தில் வரும் அனைத்து இளம் ஃபிகர்களுக்கும் கண்ணியமான லோ கட் ஜாக்கெட்  ஆடை வடிவமைப்புக்காக இந்தப்படம் பார்க்கலாம்னு முடிவெடுத்தேன்..( ஆஹா, என்ன ஒரு கொள்கைப்பூர்வமான முடிவு?!!)

நிகழ்ச்சிக்குள்ளே ( அதாவது விமர்சனத்துக்குள்ளே) போறதுக்கு முன்னே கண்ணியமான லோ கட் என்றால் என்ன? என்ற வரலாற்று உண்மையை பதிவு பண்ணிடறேன்.. அதாவது கவர்ச்சி நடிகைகளான பாபிலோனா, குயிலி,அபிலாஷா, டிஸ்கோ சாந்தி, அனுராதா, சில்க், ஜெய மாலினி இவங்க நடிச்ச படங்கள்ல வர்ற ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா  அவ்வளவு ரசிப்புத்தன்மையா இருக்காது ( 167 தடவை பார்த்தா பின்னே எப்படி ரசிக்க முடியும்?) ஆனா தமனா, அனுஷ்கா, அஞ்சலி,தப்ஸி போன்ற ஃபிகர்கள் லோ கட் ரசிக்கும்படி கோணத்தில் இருக்கும், இது ஒளிப்பதிவாளர்கள் கை வண்ணமா? அல்லது சைக்காலஜியாவே அப்படியா? என ஆராய்ச்சி பண்ணனும்... சரி.. அதை விடுங்க.. படத்தோட கதை என்ன?

3 ஹீரோஸ்  ( ஆனா  4  அல்லது 5 பேர் எப்பவும் ஒண்ணாவே இருக்காங்க ) ,அரசாங்கத்துக்கு சொந்தமான, அதாவது அரசிக்கு சொந்தமான  வைர நெக்லஸை கொள்ளை அடிச்சுட்டுப்போன ஆளை  பிடிச்சு அதை மீட்டுட்டு வர்றதுதான் கதை.. பஸ் டிக்கெட் பின்னால எழுதிட்டுப்போற சாதாரண கதை தான் என்றாலும் ஆர்ட் டைரக்‌ஷனுக்காகவே படம் பார்க்கலாம்.. அடடா.. என்ன உழைப்பு?

திரைக்கதைல ஃபிரான்ஸ்க்கும், இங்கிலாந்துக்கும் போர் ஏற்பட வில்லன்கள் செய்யும் ராஜ தந்திரங்கள், அதை ஹீரோக்கள் முறியடிப்பது என படம் ஸ்பீடா போக உதவி செய்யுது..

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் தீவ்ஸ் படம் பார்த்தவங்களுக்கு மட்டும் ஒரு தகவல், அந்தப்படத்தோட முதல் பாதி போலவே பல காட்சிகள் இதுலயும் வருது.

இதுல நடிச்சவங்க Cast: Logan Lerman, Matthew Macfadyen, Ray Stevenson, Milla Jovovich;
Director: Paul. W.S. Anderson;


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3kcc8pRGD4PM68PxjQ1EmiWsQwMbexNaUQCJUCVKXoXnDavbskDBdJBaSYylNhcHAIMAe3i7qhOuSjo6YjbmIx4oKuQVqYWH51tk98KB0i-UPe2OYEtFNkNhExeX0WGY2lZpu6ltvh2uQ/s1600/milla-jovovich-as-milady-de-winter-the-three-musketeers-2011.jpg

படத்தில் ரசிக்க வைத்த வசனங்களில் என் நினைவில் நின்றவை

1. ஃபிகரு - என்னை எதுவும் செஞ்சுடாதீங்க..


தப்பா பேசாதீம்மா

( சி.பி - பசங்க கம்முனு இருந்தாலும் பொண்ணுங்க ஞாபகப்படுத்திடறாங்கப்பா)

2. அந்த விஷத்தால நீங்க செத்துட மாட்டீங்க, ஆனாலும் நீங்க செத்த மாதிரிதான் ( கோமா ஸ்டேஜ்னு மாமா பாமா கிட்டே சொல்றாரு)

3. என் குதிரைக்கு நான் கொள்ளு காட்டனும்..


பார்த்தா மாடு மாதிரி இருக்கு..?

4. முட்டாள்ட்ட நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..

பரவால்ல, என் கிட்டே கேட்கலாம்..

5. பொம்பளைங்க கிட்டே கையேந்த சொல்றியா?அது நடக்காது.. முத்தத்துக்கு வேணா ட்ரை பண்றேன்

6. என் கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை..

நீ எப்பவுமே இப்படித்தானா?

இல்ல, செவ்வாய்க்கிழமை மட்டும்..

7. இது சிட்டி , தம்பி, இங்கே வாழ கத்தி நோ யூஸ்.. மூளை வேணும்/

8. லைஃப்ல நான் நம்பாத விஷயங்கள் 3 இருக்கு  1. காசு. 2. சரக்கு 3. கத்தி
http://moviesmedia.ign.com/movies/image/article/114/1145064/the-three-musketeers-paul-ws-anderson-version-20110502004143472_640w.jpg

9. நான் குடிக்கறதே இல்லை.. அந்த பழக்கம் எனக்கு இல்லை ( 2 வாக்கியத்துக்கும் ஒரே அர்த்தம்தான், அண்ணன் மேஜர் சுந்தர்ராஜன் ரசிகர் போல.. )

10. இப்போ என்னை சுட்டா சத்தம் கேட்கும் நீ மாட்டிக்குவியே, இப்போ என்ன பண்ணுவே?

இப்போ 3 நிமிஷத்துல 12 மணி ஆகும், அப்போ 12 தடவை வால் கிளாக் பெல் அடிக்கும்.. அப்போ சுடுவேன்..  ( லயன் காமிக்ஸ்ல 1997லயே இந்த ஐடியா வந்துடுச்சுங்கோவ்!!)

11. முழுமையான காதல் அவன் கூட இருந்ததுன்னு என் மனைவி எழுதி வெச்சிருக்காளே, அதுக்கு “அது”தான் அர்த்தமா?

நீங்க தப்பா நினைக்கலைன்னா அதுதான் அர்த்தம்,.. ( ஹி ஹி ஹி அடங்கோ!!)

12. அவங்களை எதிர்க்க முடியாது, ஆனா ஏமாத்தலாம்..

13. நீயா அந்த வைர நெக்லஸை கழட்ட்டித்தர்றியா? அல்லது உன் பிணத்தில் இருந்து நான் கழட்டிக்கவா?


ஃபிகரு - வேற எதாவது கழட்டனுமா? ( எள் என்றால் எண்ணெய்!!! ஆக நிற்கும் அழகு வெண்ணெய்!!!)

14. தன் இஷ்டப்படி எல்லாம் வாழ்ந்தா, தன் இஷ்டப்படியே செத்துட்டா...

15. நாம அந்த சூறாவளியை தாண்டி போக முடியாது

டமார் ( கருத்து சொன்னவன் பரலோகம்)

வேற யாராவது கேள்வி கேட்கனுமா? ( இதுக்கு ஜெ சட்டசபையே தேவலை போல.. அவ்வ் )

16. டேய்.. உனக்கு மனசாட்சியே இல்லையா?அவனவன் உயிரை பணயம் வெச்சுக்கிட்டு சண்டை போடறான்.. சம்பளம் சேர்த்துக்கேட்கற நேரம் இதாடா?

17. உன் கிட்ட என்ன பிரச்சனை?

புத்தர் என் ஃபிரண்ட்னு நான் சொன்னா எல்லாரும் நம்பனும்.. 

 http://cdn.buzznet.com/media-cdn/jj1/headlines/2010/09/orlando-bloom-miranda-kerr-three-musketeers-set.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் காட்சிகள்

1. அரண்மனைக்காட்சிகளில் 10 ஷங்கர் படங்களை ஒன்றாகப்பார்த்தது போல் பிரம்மாண்டம் காட்டியது, எது கிராஃபிக்ஸ்?, எது நிஜம்? என்றே கண்டு பிடிக்க முடியாத அளவு.. செய் நேர்த்தி

2. வைர நெக்லஸை அபகரிக்கும் காட்சி மார்வலஸ், ஆனால் அந்த பவுடர் ஊதி கண்ணுக்குத்தெரியாத எக்ஸ் ரேக்களை காண வைத்து வில்லி  ஊடுருவது ஆல்ரெடி எலக்ட்ரா, என் சுவாசக்காற்றே என பல படங்கள்ல பார்த்ததா இருந்தாலும் ரசிக்க வைக்குது..

3. வாள் சண்டை வரும்போதெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பு தெரிகிறது..வாட்போர் புரிபவர்களின் பாடிலேங்குவேஜ். ரீ ஆக்‌ஷன்  எல்லாம் அழகு.. 

4. போர்க்காட்சிகளில், அதிக கூட்டம் இருக்கும் காட்சிகளில் எல்லாம் ஹெலிகாப்டரில் எடுக்கப்பட்ட ஏரியல் வியூ காட்சிகள் படு பிரம்மாண்டம்..

5. ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் ரசனையாக எடுக்கப்பட்டது  பாராட்டத்தக்கது..

6. ஒரு கப்பலையே விமானம் போல் பயன்படுத்தியது, அது அரண்மனை மேல் வந்து விழுவது எல்லாம் பிரம்மாண்டம்..  ஆச்சரியம்.. 

http://geektyrant.com/storage/post-images-2011/mae_whitman.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1302034001565

இயக்குநர்க்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

இந்தப்படத்துக்கு மட்டும் எந்த கேள்வியும் கிடையாது.. காரணம் நான் படத்தை மட்டும் ரசித்தேன், நம்புங்கப்பா.. ஃபிகர்கள் வர்றப்ப எல்லாம் கண்களை மூடிக்கொண்டேன்.. #நீதி - படத்துல மைன்ஸ் பாயிண்ட் யாருக்கும் தெரியக்கூடாது, அல்லது யாரும் கண்டுக்கக்கூடாதுன்னா ஃபிகர்களை காட்டனும், அல்லது ஃபிகர்ங்க எதாவது காட்டனும்..

இந்தப்படத்தை ஈரோடு ஆங்கிலப்பட ஸ்பெஷல் தியேட்டர் வி எஸ் பி யில் கண்டேன்.. அதுல 3 டி எஃபக்ட் இல்லை.. 

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்களும், ஃபிகர்களை ரசிக்கும் நல் உள்ளங்களும் காணலாம்..  இது யு படம் தான்...

http://flickfeast.co.uk/wp-content/themes/yamidoo/scripts/timthumb.php?src=http://flickfeast.co.uk/wp-content/uploads/2011/04/TheHighnessNataliePortman.jpg&w=390&h=600&zc=1