Tuesday, October 18, 2011

AJAAN - பாலிவுட் அர்ஜூன் டைப் ஆக்‌ஷன் படம் - சினிமா விமர்சனம்

http://musicjalsha.info/wp-content/uploads/Azaan-2011.jpg 

படத்தோட போஸ்டர்ல இதுவரை காணாத பிரம்மாண்டம்னு போட்டிருந்தாங்க.. இது பொதுவா எல்லா ஆக்‌ஷன் படங்களுக்கும் யூஸ் பண்ற ஒரு ஸ்லாகன் தான்.. ஆனா சப் டைட்டிலா ஒரு நாடு ஒரு தனி மனிதன் ஒரே ஒரு வழி அப்டினு போட்டிருந்தது நல்லாருந்தது.. அதனாலயும் ஹீரோயின் நல்ல ஃபிகரா என் கண்ணுக்கு தட்டுப்பட்டதாலும் போனேன்..


ஹீரோ புது முகம்.. Sachiin J Joshi, Candice Boucher, Aarya Babbar, Amber Rose Revah, Dalip Tahil, Sachin Khedekar, Alyy Khan, Ravi Kissen, Sajid Hassan இவங்க எல்லாம் இதுல நடிச்சிருக்காங்க..


படத்தோட கதை என்ன? ஹீரோ  ரா எனும் உளவுத்துறைல பணி புரியும் சீக்ரெட் ஏஜென்ட்.. அவரோட தம்பி தீவிரவாதி... பயலாஜிக்கல் வார் எனப்படும் ஒரு வைரஸ் கிருமியை பரப்பி இந்தியாவை அழிக்க தீவிரவாதிங்க முயற்சி பண்றாங்க.. அந்த வைரஸ் கிருமியை அழிக்க ஒரே வழி.. விஞ்ஞானிகள் அதற்கான எதிர்ப்பு சக்தியை ஒரு சிறுமியிடம் புகுத்தி ஆராய்ந்து வெற்றி கண்டிருக்காங்க. அந்த பொண்ணோட பிளட் சாம்ப்பிள் வேணும்.. அந்த சிறுமி ஹீரோயின் கூட இருக்கு.. ( அப்போ தானே ஹீரோ ஹீரோயின் லவ் வரும்?)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi19sWOkG1Go9gfcXIIrBvMAa-QcIs0jj06OpDQHoWdhULMUERePZHdy5q-9VWrvhw24J5VMG5ULGBHlGvNB3PanteGpW4JxyqbB_iJz4o1_bT5ztkvhVvv1WkovNmoioTXTuiBmbTm2NZA/s1600/azaan.jpg

ஹீரோவுக்கு 3 வேலை 1. தீவிரவாதிகளை கண்டு பிடிச்சு ஒழிக்கனும் ( ஆக்‌ஷன் பார்ட் ஓவர்) 2. ஹீரோயினை கண்டு பிடிச்சு லவ்வனும் ( கிளாமர் )  3. தன் தம்பி தீவிரவாதியா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்கனும்

( ரொம்ப ஈஸி. தாடி வெச்சிருந்தா தீவிர வாதி.. இல்லைன்னா மித வாதி )



ஹீரோ பார்க்க நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் சன் டி வி ல வந்த ரிஷி மாதிரி இருக்கார்.. அண்ணன் எப்பவும் ஒரே மாதிரி முக பாவம் தான்.. வில்லனை பார்க்கும்போதும் சரி.. ஹீரோயினைப்பார்க்கும்போதும் சரி.. ( 2 மே ஆபத்தான ஆள்ங்க என்பதால் இருக்கலாம்.. )


ஹீரோயின் எபவ் ஆவரேஜ்.. ரசிக்கற அளவு இருக்கு.. ஆனா தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது.. ( அப்போ நீ  தெலுங்கு ரசிகனா?)

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/10-2011/stargaze-stargaze-playboy/candice_630.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. டெரரிஸ்ட்டோட தம்பி ரெரரிஸ்ட்டாத்தான் இருக்கனும்?



உன் ஃபேஸ்ல ஒரு ரீ ஆக்‌ஷனையும் நீ காட்டலை.. ஆஸ்கார் தரலாம்..


2. நன்றியைப்பற்றி எனக்கு சொல்லித்தரத்தேவை இல்லை, ஏன்னா நான் வளர்ந்த மண் அப்படி.. இந்தியா..



3. ஒரு டெரரிஸ்ட்ட்க்கு காதலியா இருக்க நான் விரும்பலை... நான் லவ் பண்றவர் நல்லவரா இருக்கனும்..


4. கண்டிப்பா என் பிரதர் செத்திருக்க மாட்டான்..


எப்படி சொல்றீங்க?

....

அவன் செத்திருந்தா  என் மனசுக்கு முதல்ல தெரிஞ்சிருக்கும்..


5. ஐ ஆம் மாலன்..


தோத்துட்டு என்ன இண்ட்ரடக்‌ஷன் வேண்டிக்கிடக்கு?

http://img1.gomolo.in/images/gallery/L/GL110830006.jpg

6. ஒரு உயிரைக்காப்பாத்தறது ஒரு நாட்டையே காப்பாத்தறதுக்கு சமம்.


7. உன் வாழ்க்கையை என் வாழ்க்கை கூட இணைச்சுக்கிட்டா நீ எங்கேயோ போயிடுவே.. ( ஹீரோ ஹீரோயின் கிட்ட பேச வேண்டிய டயலாக் இது , ஆனா வில்லன் ஹீரோ கிட்டே பேசறார்.. )


8. புரொஃபசர்.. நான் மனுஷங்களை கொல்றதில்லை.. அது ஓல்டு ஃபேஷன்..


9. யுத்தம் மாறிட்டே இருக்கு, யுத்தம் செய்யற விதமும் மாறிட்டு இருக்கு..பயலாஜிக்கல் வெப்பன்.. இந்த வைரஸ் பரப்பிட்டா இந்தியாவுல இருக்கற எல்லாருமே  தற்கொலை செஞ்சுக்குவாங்க அவங்களாவே,.. ( அடேங்கப்பா, எல்லாருமே கல்யாணம் பண்ணிக்குவாங்களா? )


10. ஒரு பெண்ணை பெட்ரூம்ல திருப்திப்படுத்த  ஆக்ரோஷம் தான் தேவை, மென்மையான ஆண் அல்ல.. ( பட சப்ஜெக்ட்க்கு சம்பந்தமே இல்லாத ஆனா ரசிக்க வைத்த வசனம் )


11. நான் உன்னைப்பார்த்ததுமே நான் தேடிட்டு இருந்த ஆள் நீ தான்னு புரிஞ்சுக்கிட்டேன்.. ( ஃபிகர்ங்க எப்படித்தான் இளிச்சவாயன்களை ஈசியா கண்டுபிடிக்கறாங்களோ? )
http://www.mastione.com/wp-content/gallery/shaan-and-ravi-kissan-at-chitkabre/shaan-and-ravi-kissan-at-chitkabre-5-mastione.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காசைப் பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் கிடைத்ததும்  சகட்டுமேனிக்கு திரைக்கதையை பல வெளிநாடுகளில் பயணிக்கும்படி அமைத்தது ( பாரீஸ்,சூடான், பாங்காங்க் )


2. ஹீரோ, ஹீரோயின் செலக் ஷன்... ஒளிப்பதிவு


3. தம்பி தீவிரவாதி என்று தெரிந்ததும் அண்ணனே சுட்டுக்கொள்ளும் அரதப்பழசான சீனைக்கூட ரசிக்கும்படி எடுத்தது..


4. ஹீரோ - ஹீரோயின் கண்ணிய காதல்..

http://enjoypaki.com/blog/wp-content/uploads/2011/06/azaan-movie-hot.jpg

இயக்குநர்க்கு சில கேள்விகள் , சந்தேகங்கள்,ஆலோசனைகள் ( எப்படியும் அண்ணனுக்கு தமிழ் தெரியாது.. புகுந்து விளையாடலம்.. )



1. ஹீரோ இடுப்பில் கயிறு கட்டி மொட்டை மாடில இருந்து குதிக்கறார் , ஓக்கே.. எதுக்கு ஓடி வந்து ஜம்ப் பண்ணி குதிக்கனும்? அவர் என்ன லாங்க் ஜம்ப்பா பண்றார்?


2.  ஹீரோ கயிற்றில் கட்டப்பட்டு ஒரு ரூமில் ஜம்ப் பண்றார்.. அப்போ வில்லன் ஆளூங்க 5 பேர் ரிவால்வரோட ரெடியா இருக்காங்க.. ஆனா அவங்க சுடலை... ஹீரோவை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. ஹீரோ ஜன்னல் வழியா ஜம்ப் பண்ணி ரூமில் லேண்ட் ஆகி, அப்புறமா சூட் பண்ணி அந்த 5 பேரையும் கொன்னுடறார்.. என்ன கொடுமை சார் இது?


3. ஹீரோவும் , ஹீரோயினும் துரத்தப்படறாங்க வில்லனின் ஆட்களால்.. அவங்களை திசை திருப்ப 2 பேரும் பிரிஞ்சு வெவ்வேற திசைல ஓடறாங்க.. ஆனா வில்லன்க 2 பேரும் அதே போல் பிரிஞ்சு 2 பேரையும் துரத்தாம ஹீரோவை மட்டும் துறத்ஹறாங்களே.. அவ்ளவ் மஞ்ச மாக்கான்களா?


4.  க்ளைமாக்ஸ்ல எல்லா படங்களீலும் இப்படி ஒரு சீன் வந்துடுது.. அதாவது வில்லனோட ஆளுங்க எல்லாம் கோட்டைல, மாளிகைல உயரமான இடங்கள்ல காவலுக்கு நிப்பாங்க.. அப்போ ஹீரோ சூட் பண்ணுவாரு.. அவங்க எல்லாம் நெல்லிக்காய் மூட்டை மாதிரி சரிஞ்சு கீழே தொப்ப்னு விழறாங்க.. ஏன் அங்கேயே தரைல விழ மாட்டாங்களா?


5.  முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற சித்தரிப்பு எதற்கு? தீவிரவாதக்கூட்டம் என 50 பேரை காட்டும்போது 5 இந்து, 5 கிறிஸ்டியன் காட்டக்கூடாதா?
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/06/azaan-hindi-movie-2011-hot-wallpapers.jpg

இந்தப்படம் ஸ்ரீ கிருஷ்ணாவுல பார்த்தேன்

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. நாட் சூப்பர், நாட் பேடு