Thursday, October 06, 2011

த்ரிஷா சொல்றதை யாராலும் ஏத்துக்கவே முடியாது!உங்களால? ( ட்வீட்ஸ்)

1.பேசப்படவேண்டிய வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளப்படாதபோது நம் இருவருக்கிடையேயான இடைவெளி அதிகம் ஆகிறது

-----------------------------------

2.காதல் முறியும்போது சத்தம் வருவதில்லை, ஆனால் வலி மட்டும் உணரப்படுகிறது


---------------------------------------

3. பட்ட காலிலே படும்போதுகூட தாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் பட்ட இதயத்திலே மீண்டும் காயம் படும்போது தாங்கவே முடிவதில்லை

-------------------------------

4. ஒருவரிடம் இழந்த அபிமானத்தினை, மதிப்பை, அன்பை மீண்டும் பழைய அளவிலே பெறுவது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருக்கிறது

---------------------------------------

5. புதிய பேனா வாங்கும்போது எல்லோரும் அவரவர் காதலியின் பெயரை கிறுக்கிப்பார்க்கும்போதுதான், சாதாரண கிறுக்கல்கள் கவிதைகள் ஆகின்றன

---------------------------------------

6. முதுகில் குத்துகிறான் எதிரி, நெஞ்சில் குத்துகிறான் நண்பன், இதயத்தில் குத்துகிறாள் காதலி

---------------------------------

7. அழுகைக்கான தொடக்கத்தை உன் கண்ணீர் சுரப்பிகள் ஆரம்பிக்க யத்தனிக்கையில் ஆறுதலின் முடிவை என் விரல்கள் காட்டி விடுகின்றன

------------------------------

8. 2 வரிகளில் ஏதாவது கிறுக்கி விட்டு 3ஆம்  வரியாய் முத்தாய்ப்பாய் உன் பெயருடன் முடித்தால் அது அழகிய ஹைக்கூ

----------------------------------------------

Woman

9. அடிக்கடி ரகசியம் பேசி பேசி உன் காது மடல்கள் எங்கும் என் உதட்டின் ரேகைகள்

---------------------------------

10. டியர், எதுக்கு பீச்சுக்கு பொரி கடலை கொண்டு வந்திருக்கீங்க? 

நீ கண்டதையும் கேக்கறே, வசதி பத்தாது, பாரு 15 ரூபால முடிஞ்சுது செலவு

----------------------------------------

11. ஆண் ஏன் அழ வேண்டும்? -உன் கேள்வி. 

அவன் ஏன் பெண்ணின் காதலில் விழ வேண்டும் ?- என் பதில்!

-------------------------------------------

12. சிம்புவுடன் நடிக்க பயமாக இருக்கிறது- ஹன்சிகா மோத்வானி! # ஹன்சிகா மோத்வானியுடன் நடிக்கும்போது நயமாக இருந்தது - சிம்பு !

----------------------------------

13. மறுஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்,எப்போதும் அடுத்த ஜென்மத்திலாவது இணைவோம் என சொல்லிடாதே

----------------------------------

14. வீடுபுகுந்து தீபிகா படுகோனேயை எச்சரித்த போலீஸ்...!# உண்மையை சொல்லுங்கய்யா! எச்சரிச்சாங்களா? நச்சரிச்சாங்களா?

------------------------------

15. அறிமுகமாகும்போது இருந்தது இப்போதும் இருக்கிறது! - த்ரிஷா #  மேடம், அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், கொஞ்சம் இறங்கிடுச்சு

-------------------------------------

16. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட  நிம்மதியாக வாழ முயற்சிப்பதே நல்லது

---------------------------------------

17. உன் அழகில் நான் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க உன் அன்பு என்னை தாங்கிக்கொள்கிறது

---------------------------------

18. நல்ல மனிதனாக நடப்பது கோல்கீப்பர் போல, எத்தனை கோல்களை தடுத்தோம் என்பதை விட எத்தனை கோல்களை கோட்டை விட்டோம் என்பதையே உலகம் கவனிக்கிறது

-------------------------------------

19. நிலாவைக்காட்டி சோறூட்டும் உலகில் நான் நிலாவுக்கே சோறு ஊட்டினேன் # அவள் மருதாணி வைத்திருந்த சிவந்த பொழுதுகள்

----------------------------------

20. இந்தியாவில் 1,55,618 தபால் நிலையங்கள் இருந்தும் ஒன்றில் இருந்தும் உனது காதல் கடிதம் வரவில்லையே!!

------------------------------

21. மழைத்துளியாய் உன் அன்பு. மழைத்துளி எங்கே விழுந்தாலும் குளிர்ச்சியைப்பரப்புவது போல உன் அன்பு பரவும் இடங்களில்மகிழ்ச்சியை பரப்பிசெல்கிறாய்

----------------------------------

22. வாழ்க்கையின் மதிப்பை காலம் நமக்கு கற்றுத்தருகிறது,அவமானத்தின் மதிப்பை காதல் நமக்கு கற்றுத்தருகிறது