
பொதுவாக தமிழ் சினிமா திருநங்கைகளை காமெடிக்காகவும்,டப்பாங்குத்துப்பாடல் காட்சிக்கு மட்டுமே உபயோகித்து வந்த சூழ்நிலையில் முதன் முதலாக ஒரு திரு நங்கை எப்படி உருவாகிறார் என்பது முதற்கொண்டு அவரது முழு வாழ்க்கையை பதிவு செய்யும் முதல் தமிழ்ப்படம் என்ற அளவில் இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.. ஆனால்.......
சிலம்பாட்ட வீரரின் குடும்பத்தில் 3 பெண்குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. ஆனால் வீரனாக தான் வளர்க்க விரும்பும் ஆண் குழந்தை சின்ன வயதிலேயே பெண் தன்மையுடன் வளர்வது கண்டு கோபம் அடைந்த தந்தை அவனை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.அவன் மும்பை போய் முறைப்படி திரு நங்கை ஆகிறான்.அதற்குப்பிறகு அவனை சமூகம் எப்படி வஞ்சிக்கிறது,அவன் என்ன செய்கிறான்,அவன் வாழ்க்கை திசை எப்படி பயணப்படுகிறது என்பதை வலி நிறைந்த திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்கள்.
சிலம்பாட்ட வீரர்+ மனைவி இருவர் நடிப்பும் செம யதார்த்தம்.இருவரும் 3 குழந்தைகளையும் வீட்டிலேயே வைத்துக்கொண்டு கண்களாலேயே காதல் மொழி பேசுவது செம கிளு கிளு.. அதுவும் சிக்கன் பீஸின் எலும்புத்துண்டை மனைவி வாயில் வைத்து உறிஞ்சும்ப்போது கணவர் குறும்புப்பார்வை பார்க்கிறாரே.. அக்மார் கே பாக்யராஜ் பாணி டச்சிங்க் சீன்... அந்த சீனில் மனைவியாக வருபவரின் முக பாவனைகள் அழகு கவிதை..

சிலம்பாட்ட வீரர் தனது மகனுக்கு சிலம்பம் கற்றுத்தரும்போது அவரது மகன் பரத நாட்டிய ஸ்டெப் போடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தனது மகன் பெண்ணியல்புக்கு போவதை கண் கூடாக உணர்வதும் அழகிய படப்பிடிப்பு.
அதேபோல் ஹீரோவிடம் ஆசையாகப்பேச ஆரம்பிக்கும் 17 வயது ஹீரோயின் தனது முகத்தில் காதல் 60 % +காமம் 40 என உணர்ச்சிக்கலவையாக இருக்கும்போது தன் காதலன் பெண் தன்மை உள்ளவன் என அவன் வாய்ச்சொல்லாலேயே உணரும்போது சடார் என அவரது முக உண்ரவுகள் மாறி ஒரு அசூயை+ அருவெறுப்புடன் பார்ப்பது அட்டகாசமான நடிப்பு..
ஆனால் ஹீரோ தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக ஹீரோயின் கிட்டத்தட்ட ஹீரோவை ரேப் பண்ணுவது போல் காட்டி இருக்க தேவை இல்லை. அது ஒரு பெண்ணுக்கு 20 வயசுக்குப்பின்னே மனோ பலம் வரும். 16 அல்லது 17 வயசுப்பெண்ணுக்கு வெட்கமும், தயக்கமும் தானே வரும்?
ஹீரோ மும்பைக்கு போனதும் கொஞ்சம் அந்நியத்தன்மை தலை தூக்குகிறது. ஹிந்தியில் ஏகப்பட்ட வசனங்கள் வரும்போது சப் டைட்டிலாக தமிழ் வசனங்களை திரையில் ஓட விட்டிருக்கலாம்.
பரத நாட்டிய வர்ஷினி டீச்சராக வரும் ஃபிகர் நல்லாத்தான் இருக்கு. ஆனால் எடிட்டிங்க் அல்லது ஃபுட்டேஜ் பிராப்ளமோ என்னவோ அவரை திடீர்னு காணோம்.
படத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ஆண் பெண் தன்மை அடைவான் என்ற கருத்து மறை முகமாக சொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்.எத்தனையோ பரத நாட்டிய கலைஞர்கள் ஆண்கள் மிகச்சிறப்பாக வாழ்கிறார்களே? அவர்கள் அசைவில் ஒரு நளினம் வரலாம்.. அவ்வளவு தான்.
டி வி சீரியல்களில் ஒரு பாத்திரம் கால்ஷீட் பிராப்ளம் என்றால் உடனே இனி இவருக்குப்பதில் இவர் நடிப்பார் என டைட்டில் கார்டு போட்டு டகார் என ஆள் மாற்றுவது போல் படத்தின் மெயின் கேரக்டராக வரும் திரு நங்கை கேரக்டர் ஹீரோவை வளர்ந்த ஆளாக காட்டும்போது வேறொரு பெண்ணை காட்டுவது திரைக்கதையின் மைனஸ்.. ஹீரோவின் மேல் தோன்ற வேண்டிய அனுதாபம் மிஸ் ஆகிறது..

படத்தில் மனதை தொட்ட வசனங்கள்
1. எங்கம்மா சொன்னதுக்காக உங்களை கட்டிக்கிட்டேன். என்ன சுகத்தை கண்டேன்? 4 குழந்தைகளைத்தவிர.. ( ஏம்மா? குழந்தையே ஒரு சுகம் தானே?)
2. டேய்.. ஏண்டா இப்படி இருக்கே? கோழையா 100 வருஷம் வாழறதை விட வீரனா ஒரு வருஷம் வாழ்ந்தா போதும்.. ஆம்பளையா நடந்து குடும்ப கவுரவத்தை காப்பாற்று..
3. ஏண்டி.. சும்மா புலம்பறே.. நான் வீரண்டி.. என்னை கட்டிக்கிட்டதுக்கு சந்தோஷப்படு....
அப்போ வீரனைக்கட்டிக்கிட்டதுக்காக ஒரு பொண்ணூ வாழ்க்கை பூரா கோழை போல வாழனுமா? ( ஆஹா செம கேள்வி..)
4. மகளே.. இப்படி ஆம்பளை ஆசை பிடிச்சு அலையாதேம்மா.. அப்புறம் ஆம்பளை வளர்த்த புள்ள அதனால தான் இப்படின்னு ஊர்ல தப்பா பேசுவாங்க..
5. எங்களை மாதிரி திரு நங்கைகளுக்கு நல்ல படியா வாழனும்னு ஆசை இருக்கு. ஆனா அதுக்காக அரசாங்கமும் , மக்களும் எங்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு..
6. அம்மா.. எனகு ஆணா இருக்க பிடிக்கலை.. உடம்புக்குள்ள ஒரு முள் செடி முளைச்ச மாதிரி நரம்பெல்லாம் தெறிக்கற மாதிரி இருக்கு.. ( சபாஷ்.. அவர்கள் வலியை உணர்த்தும் நுட்பமான வசனம்)
7. எனக்கு அழுகையே வராது..ஏன்னா சின்ன வயசுல இருந்தே அதை முழுங்கி முழுங்கி வளர்ந்துட்டேன்..
8. என்னை மாதிரி தனியா இருக்கறவங்களுக்கு புத்தகங்கள் தானே துணை..
9. அளவுக்கதிகமான காதல் என் கண்னை மறைச்சிடுச்சு..என் கால் கூட என் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது..
10. என்னதான் தோஷ நிவர்த்தி என்றாலும் என் புருஷன் இன்னொரு பொண்ணு கூட படுத்துட்டு வர்றதை எப்படி ஒத்துக்க முடியும்?( அதானே.. அதே பொண்டாட்டி வேற ஒரு ஆண் கூட படுத்துட்டு வந்தா தோஷம் சரி ஆகிடும்னா ஒத்துக்குவாங்களா?)
11. என்ன சார்.. இப்படி சொல்லீட்டீங்க? நீங்க தானே அவரை எனக்கு அறிமுகம் பண்ணீ விட்டீங்க?
அதுக்கு? நீங்க அவரை லவ் பண்ணுவீங்கன்னு எப்படி தெரியும்?
12. மன வலிகளை இசையால மட்டும் தானே கரைக்க முடியும்?
13. ஆணோ, பெண்ணோ காதல் தோல்வி ஏற்பட்டா மறுபடி வேற காதல், வேற வாழ்க்கை என சீக்கிரம் மாறிக்கலாம். ஆனா எங்களை மாதிரி திரு நங்கைகளுக்கு இது ரொம்ப பெரிய வலி..
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. களஸ்தர தோஷம் என்பதற்க்குப்பரிகாரமாக கணவன் வேறொரு திருநங்கைக்குத் தாலி கட்டி 2 நாட்கள் (இரவுகள்) இருந்தால் தோஷம் சரி ஆகி விடும் என ஒரு வசனம் வருகிறது.. அது ரொம்ப தப்பு..
பரிகாரம் 1
லக்னதிற்கு 7 வது இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வாறு 7 ஆம் இடத்தில் சூரியன் , செவ்வாய் , சனி , சுக்கிரன் , ராகு , கேது இருந்தாலும் 7 ஆம் அதிபதி பலம் குன்றி இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
இதற்க்கு அந்த கிரகத்தை பிரீத்தி செய்ய விரதங்கள்// வழிபாடுகள் செய்வது தோஷத்தை நிவர்த்திகும்.,
இதற்க்கு அந்த கிரகத்தை பிரீத்தி செய்ய விரதங்கள்// வழிபாடுகள் செய்வது தோஷத்தை நிவர்த்திகும்.,
பரிகாரம் 2 - வாழை மரத்துக்கு தாலி கட்டி அதை வெட்டி விட்டால் அதுவும் தோஷ நிவர்த்தியே.. இது சில செவ்வாய் தோஷத்துக்கும் செய்வார்கள் .
2. ஒரு ஆண் திரு நங்கையிடம் ஐ லவ் யூ என்று சொல்லும்போது அவள் அதை அவ்வளவு ஈஸியா நம்பி விடுவாளா?எப்படி திருமணத்துக்கு சம்மதிகிறாள்?
3. கேரளாவில் உள்ள மலையாளிகள்( பெண்கள்) பொதுவா தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து நெற்றியில் சந்தன கீற்று வைப்பார்கள். படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் அதை ஃபாலோ பண்ணவே இல்லையே?
4. திருநங்கையாக வரும் ஹீரோ தனக்கு பிடிக்காத இடத்தில் வாழும்போது ஒரு கார் வருது.. ஒரு இடத்துக்கு போலாம்னு கூப்பிடறாங்க..நைட் 10 மணீக்கு தவறான நோக்கத்துக்குத்தான் கூப்பிடறாங்க என அவருக்கு தெரியாதா?
5. ஹீரோயின் 16 வயசுப்பொண்ணு என்பதால் அந்த டூயட் சீனை இன்னும் கண்ணியமாக எடுத்திருக்கலாமே? எதற்கு கவர்ச்சி உடை? 20 வயசு பெண் என்றால் ஓக்கே..
6. ஹீரோவுக்கு திருநங்கை மாற்ற பூஜை சம்பந்தப்பட்ட சீன்களில் உண்மையை பதிவு செஞ்சது ஓக்கே.. இன்னும் கண்ணியமாக காமெரா கோணங்களை வைத்திருக்கலாமே?
இந்தப்படம் ஒரு ஆர்ட் ஃபிலிம் என்ற அளவில் தான் பேசப்படும்..
எல்லா செண்ட்டர்களிலும் இது 10 நாள் தான் ஓடும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் எதிர்ப்பார்ப்பு ரேங்க்கிங்க் - ஓக்கே
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ஓடுது
எச்சரிக்கை-1 - இந்தப்படம் மனோ ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மென்மையான மனம் படைத்த பெண்கள்,(பெண்மை என்றாலே மென்மைதானே?)மாணவ மாணவிகள், தனிமையில் இருக்கும் ஆண்கள்,மேன்சனில் குடி இருக்கும் பிரம்மசாரி ஆண்கள்,மனதளவில் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது..
எச்சரிக்கை 2 - வழக்கமாக காமெடி பதிவுகளில் கும்மும் நண்பர்கள் இந்த போஸ்ட்டில் கும்ம வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அது திருநங்கைகளை கேலி செய்வதாக நம்மையும் மீறி நடந்து விடலாம்..
எச்சரிக்கை 2 - வழக்கமாக காமெடி பதிவுகளில் கும்மும் நண்பர்கள் இந்த போஸ்ட்டில் கும்ம வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அது திருநங்கைகளை கேலி செய்வதாக நம்மையும் மீறி நடந்து விடலாம்..