1. தலைவரே.. உங்க செல்ஃபோன்ல ஒரு மிஸ்டு கால் இருக்கு...அது ஒரு மிஸ்ஸோட கால் (CALL) தான்னு எப்படி கண்டு பிடிச்சே?
-------------------------------------------
2. தலைவருக்கு டிரஸ்ஸிங்க் சென்சே இல்லை போல..?
அப்படி சொல்லிட முடியாது.. சென்சே ( SENSE) இல்லைன்னு வேணா சொல்லலாம்..
---------------------
3. நிருபர் - சார்.. வடிவேலுவை பழி வாங்குறதை ஏன் 2 நாள் தள்ளி வெச்சிருக்கீங்க?
ஆஃப் அடிச்சாத்தான் ஆப்பு வைக்க முடியும்.. 3 நாள் டாஸ்மாக் லீவ் ஆச்சே?
----------------------------------------------
4. சினிமாவுக்கும் ,அரசியலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
எப்படி சொல்றே?
ஹீரோ என்னைக்கும் ஹீரோ தான்... காமெடியன் என்னைக்கும் காமெடியன் தான்.
------------------------
5. தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் 5 வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும்னு தலைவர் சொல்றாரே?
ஆமா.. 6வது வருஷத்துல எப்படியும் அடுத்த கட்சி தான் வரப்போகுதுன்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சு போல..
---------------------------

6. என்னது? 2016 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவை இப்பவே விடப்போறீங்களா? எப்படி?
இதென்ன பிரமாதம்?5 வருஷத்துக்கு ஒரு தடவை ஆட்சி மாறும்.டி எம் கே, ஏ டி எம் கே என மாறி மாறி வரும் .. இது தெரியாதா?
-----------------------
7. சார்.. இந்த சோப்பை 10 லட்சம் பேர் யூஸ் பண்றாங்க..
அடப்பாவமே.. ஏன் ஒரே சோப்பை அத்தனை பேர் யூஸ் பண்றாங்க?ஆளுக்கு ஒரு சோப் வாங்கிக்கக்கூடாது?
-----------------------------
8. சட்டசபைக்குப்போறப்ப கேப்டன் மேக்கப் போட்டுட்டு போவாரா?
ஆமா.. ரொம்ப முக்கியம்.. விட்டா ஜோடியா ஒரு நடிகையோட போவாரா?ன்னு கூட கேட்டுடுவாங்க போல../
-----------------
9. தலைவருக்கு ஒரே சமயத்துல 2 அதிர்ச்சி....
எப்படி?
12th ரிசல்ட்ல பையன் ஃபெயில்.. 13th ரிசல்ட்ல தலைவர் அவுட்...
-------------------------
10. டியர்.. குழந்தைத்தனமா பேசாதீங்க.. லவ் பண்ணலாம்.. ஓக்கே.. ஆனா நோ மேரேஜ்னு சொல்றீங்களே? ஏன்?
ஹி ஹி .. டியர்.. ஆம்பளைங்களுக்கு ரஸ்க் சாப்பிடப்பிடிக்கும்.. ஆனா ரிஸ்க் எடுக்க பிடிக்காது..
-------------------------------
