
ஹீரோக்களின் பஞ்ச் டயலாக் இல்லாமல்,சினிமாத்தனமான புளித்துப்போன காட்சிகள் சொல்லாமல்,கசக்கு முசக்கு (!!!) டர்னிங்க் பாயிண்ட்ஸ்ஸை இடையிடையே தள்ளாமல் ஒரு கிராமத்தில் நடக்கும் சில புலனாய்வுகளை அந்த மண்ணின் வாசம் மாறாமல் எதார்த்தமான படம் கொடுத்ததற்காக இயக்குநர் சுசீந்திரனை பாராட்டலாம்.ஆனால்...?
ஒரு கிராமத்துல விழா நடக்கற டைம்ல அழகர் சாமியோட குதிரை ( சாமி உலா வரும் மரக்குதிரை ) காணாம போயிடுது. போலீஸ் முதற்கொண்டு யார் களவாடுனது என துப்பு துலக்கறப்ப எதேச்சையா பக்கத்து ஊர் நிஜ குதிரை வழி தவறி வந்துடுது. உடனே அந்த குதிரையை அழகர் சாமியின் குதிரையா கிராமத்து ஜனங்க பாவிச்சு அதைக்கொண்டாடறாங்க. கிராமத்துல எதேச்சையா நடக்கிற சில நல்ல காரியங்கள்க்கு குதிரையின் வருகை ஒரு காரணமா சொல்லப்படுது..ஆனா குதிரையோட சொந்தக்காரன் குதிரையை தேடிட்டு வந்ததும் என்ன நடக்குது? சாமி குதிரையை திருடுனது யாரு? என்ன நடக்குதுங்கறது தான் கதை...
படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே இசை ஞாநி தன்னோட கிராமத்து தெம்மாங்குப்பாட்டு இசையை கலக்கலான வாத்திய இசையோட , துள்ளலான மன நிலைக்கு கொண்டு போறாரு. அடியே இவளே.. ஊருக்குள்ளே திருவிழாவாம்... பாட்டில் செமயான இசையில் 4 வித்தியசமான குரல்களுடன் களம் இறங்கி அதகளம் பண்ணி இருக்கிறார் ராஜா..
இயக்குநர் ஹீரோ, ஹீரோயின் அறிமுகத்தை எல்லாம் இடைவேளை வரை தள்ளி வைத்து விட்டு கிராமத்து மக்களின் மனோ பாவம்,அவர்களது மூட நம்பிக்கை ,கலாச்சாரம் போன்றவற்றை பதிவு செய்யும் நோக்குடன் திரைக்கதை அமைத்தது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. ..

ஃபாரீன் வெள்ளைகாரியை கூட்டத்தில் உரசும் வில்லேஜ் ஜொள்ளர் (ஆனா அவருக்கு ஃபுல் ஏஜ் - விக்கி தக்காளி மாதிரி ) திரு விழாக்கூட்டத்தில் ஆண்ட்டியை பார்வையாலேயே கரெக்ட் பண்ணும் மைனர் ( ஆள் பார்க்க அசப்புல நம்ம நாஞ்சில் மனோ மாதிரியே.. ), என சுவராஸ்யமான காமெடிகளுக்குப்பஞ்சமே இல்லை.
திருவிழாவுக்கு செலவுகள் சமாளிக்க ஊர்ப்பெரியவர்கள் வசூல் வேட்டைக்கு கிளம்பும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் , மக்கள் அவர்களை ஏய்ப்பது தனி ஸ்பெஷல் காமெடி சிறுகதை.வசூல் பண்ண ஆட்கள் வந்ததும் காது கேட்காதது மாதிரியே ஆக்ட் குடுக்கும் கிழவி, பையனை போட்டு அடிச்சு பாக்கெட்ல இருந்து பணம் எடுத்தியா? பணம் என்ன மரத்திலா காய்க்குது? என மறைமுகமா மிரட்டும் அப்பா,மானம் கெட்டவனே .. மஞ்சள் அரைத்தாயா? எதற்க்குக்கேட்கிறாய் வரி? என குறிப்பால் உணர்த்தி நக்கல் அடிக்கும் சிறுவன்.என போகிற போக்கில் திரைக்கதை களை கட்டுகிறது.
ஆனால் இந்த சுவராஸ்யங்கள் எல்லாமே இடை வேளை வரை தான். எப்போ அப்புக்குட்டி கேரக்டர் கிராமத்துல வருதோ அப்போ இருந்து திரைக்கதையில் விறு விறுப்பு மிஸ்ஸிங்க்.. இனி எப்படி கதையை கொண்டு போவது என்று இயக்குநர் ரொம்பவே திணறி இருக்கிறார்.
அப்பிக்குட்டி - சரண்யா மோகன் கிளைக்கதையில் காதல் லேசாக எட்டிப்பார்த்தாலும் ஆழம் இல்லை.. செம ஃபிகர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல ஃபிகரான சரண்யா மோஹன் அப்புக்குட்டி மாதிரி ஒரு ஆளை பெண் பார்க்க வந்த அன்றே மனதைப்பறி கொடுப்பது நம்பும்படி இல்லை.
அப்பு- சரண்யா மோஹன் இருவருக்குமான காதல் ஏற்படும் காட்சிகளை அதிகப்படுத்தி குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மலையாள டுபாக்கூர் மந்திரவாதி, அவருக்குப்போட்டியாக களம் இறங்கத்துடிக்கும் புரோட்டா காமெடியன் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. வயல் வரப்பை காட்டும் ஒரு சீனில் தென்னிந்தியா மேப் மாதிரி லாங்க் ஷாட்டில் கிராமத்து பச்சைப்புல் வெளிகளை படம் பிடித்தது..
2. திருநீறு வைக்கமாட்டேன் என அடம் பிடிக்கும் நாயகனிடம் தன் நெற்றியால் தேங்கா முட்டு முட்டி ( நன்றி - சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா)தன் நெற்றியில் உள்ள விபூதியை காதலன் நெற்றிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யும் சீன்..( இந்த ஐடியா எனக்கு தோணலையே - பக்கத்தி சீட் லவ் ஜோடிகள்)
3. அப்புக்குட்டி ஊர்க்காரர்களுடன் சண்டை போடும் கிராமத்து எதார்த்தமான சண்டைக்காட்சியை மிக லாவகமான ஸ்டண்ட் உத்திகளுடன் கிராமத்து சண்டையை கண் முன் நிறுத்தும் கலக்கலான ஃபைட் சீன்..ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சல்யூட்.. இளையராஜாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.. அந்த பதட்டமான இசையை.. அளித்ததற்கு..
4. நாயகன், நாயகி பாத்திரத்தன்மை அறிந்து இருவருக்குமான டிரஸ் கோட் நீட் அண்ட் சிம்ப்பிள்.. குறிப்பா சரண்யா மோகனுக்கான புடவை , பாசி மற்றும் இத்யாதிகள் அனைத்தும் பக்கா..
5. பெண் பார்க்க வந்த அப்பு பெண்ணிடம் ஏங்க நான் உங்களை தொட்டுப்பார்க்கலாமா? என கேட்டு சம்மதம் பெற்று உள்ளங்கையை தொட்டுப்பார்ப்பது.. இந்த சீனில் சரண்யாவின் முகம் வெட்கச்சிவப்பை வெகு இயல்பாக வெளிப்படுத்துவது ..
6. இன்ஸ்பெக்டராக வரும் ஒளிப்பதிவாளரின் நடிப்பில் செம யதார்த்தம். சீமானின் சாயலில் முகம்..

இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்
1. பழக்கமான குதிரை ஏன் திடீர் என தனியே கிளம்பி பக்கத்துக்கு கிராமத்துக்கு வருது? ( இதை திருவிழாவில் மிஸ் ஆன மாதிரி காட்டி இருக்கலாம்0
2. ஹீரோ ஹீரோயினிடம் பூ குடுக்கிறான்.. முகத்தில் ஒரு கில்மா சந்தோஷம் வேணாமா? ( அதென்ன கில்மா சந்தோஷம்? ) என்னமோ வடக்குப்பட்டி ராமசாமியிடம் வாங்கிய கடனை திருப்பித்தருவது மாதிரி வேண்டா வெறுப்பாய் முகத்தை வைத்து தருவதும்,எந்த எக்ஸ்பிரஸ்ஸனும் இல்லாமல் ஹீரோயின் அதை வாங்குவதும்.. வெரி பேடு
3. ஒரு சீனில் ஹீரோ கனகாம்பரப்பூ கொஞ்சம் ,மல்லிகைப்பூ கொஞ்சம் கலந்து ஹீரோயினிடம் தர்றான். அதை வாங்கி தலையில் வைத்து சைக்கிளில் போகும் அடுத்த ஷாட்டிலேயே கனகாம்பரப்பூ 2 முழம் அதிகம் ஆகிறதே எப்படி? ( நாயே.. நாயே.. கண்டென்ட் எப்படி இருக்குன்னு பார்க்காம கண்ட்டினியூட்டி பார்க்கறியா ராஸ்கல்)
4. இடைவேளை வரை வித்தியாசமாக படம் எடுத்த இயக்குநர் அதற்குப்பின் தடுமாறியது கூட தேவலை.. ஆனா சில சீன்களில் ராமநாராயணன் ரேஞ்சுக்கு இறங்கி குதிரையை வைத்து கும்மி அடித்திருக்க வேண்டுமா?

கலக்கலான காமெடி வசனங்கள்
1. இந்த ராசாத்தி மேட்டர் என் பொண்டாட்டிக்கு தெரியாது.. சொல்லிடாதீங்க...
ஊருக்கே தெரியும் உன்னைப்பற்றி...
ஆனா இவலை தெரியாது. புதுசு ஹி ஹி இப்பத்தான் செட் பண்ணேன்..
வெளங்கிடும்....
2. ஏழூர் சாமியைக்காக்கும் நம்ம சாமியோட சிலையையே காணோமே..?
3. சரி.. விடுங்க.. இப்போ குதிரை இல்லைன்னா என்ன?
என்ன பேச்சு பேசறே? அழகர்னா குதிரை வேணும்.. மைனர்னா புல்லட்ல வரனும்./. இல்லைன்னா எவன் மதிப்பான்?
4. கான்ஸ்டபிள்ஸ்.. ஊர்ல பிரச்சனை வராம பார்த்துக்குங்க.. முதல்ல உங்களால ஊர்ல பிரச்சனை வராமப்பார்த்துக்குங்க..
5. டேய்.. நில்லு.. உன்னைப்பார்த்தா களவாணிப்பயல் மாதிரி இருக்கே?
ஆமா போலீஸ் சார்ஸ்.. நானும் உங்களை மாதிரி தான்.. அதாவது.. போலீஸ் தான்..
6. உங்க ஊர்ல மழைத்தண்ணி இல்லை.. 3 வருஷமா பஞ்சம்..
எங்க ஊர் விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது..?
சொல்லித்தானே கூட்டி வந்தோம்..?
டேய்ய்.. பப்ளிக்...
7. உங்க ஊர்ல சுத்தபத்தமே இல்லாத ஒரு மைனர் இருக்கான்.. அதனால தான் சாமி குத்தம் ஆகி இருக்கு.
சாமி அதெப்பிடி கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க..?
அடேய்.. ஊர்னு இருந்தா இந்த மாதிரி ஒரு மைனர் இருக்கறது சகஜம் தான். எல்லாம் ஒரு அஸ்ஸம்ப்ஷன்ல அடிச்சு விடறது தான்..
8. என்னாடா.. என்னை பொம்பள பொறுக்கின்னு நக்கல் பண்றியா? நாயே.. உனக்கும் சம்சாரம் இருக்காடா.. மறந்துட்டியா? ம் ம் நீ ஊருக்கு போவே இல்ல? கவனிச்சுக்கறேன்..
9. மைனர்.. உன்னால தான் ஊர்ல மழையே இல்லையாம்..
டேய்.. எதுக்கும் எதுக்கும்டா முடிச்சு போடறீங்க?
10. பூசாரி ஆகறது சாதாரண விஷயம் இல்ல.. அதுக்கு பல மந்திரங்கள் தெரியனும்..
சாமி.. எங்களுக்கும் பித்தலாட்டம் தெரியும்..
11. சாமி.. சாராயம் இருக்கு.. வேணுமா?
வேணாம்.. எனக்கு சாராயம் பிடிக்காது..
ஆனா உங்க கிட்டே சாராய வாசம் அடிக்குதே..?
கருவாயன் கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டானே?
12. கூறு கெட்ட மனுஷா.. ஊறுகாய் போட எலுமிச்சை வாங்கி வெச்சிருந்தா அதை எல்லாம் நறுக்கி செய் வினை வைக்கிறியா? உன்னை இன்னைக்கு....
டேய் வாடா ஓடிடலாம்.. பூசாரியை விட அவன் பொண்டாட்டி தான் டேஞ்சர் போல..
13. சாமி மேல நம்பிக்கை இல்லாத ஒருத்தன் தான் சாமி சிலையை திருடுவான். சோ ஒரு நாத்திகவாதிதான் இந்த திருட்டை பண்ணி இருக்க முடியும்.
14. சாமி.. என் புருஷனை காணோம்..
எத்தனி நாளா?
40 வருஷமா..
சுத்தம் இனி அவன் வந்து மட்டும் என்னத்தை கிழிச்சிடப்போறான்.. போ போ இன்னும் 10 வருஷம் ஆகும் அவன் வர..
15 . இவ்வளவு அழகான பொண்ணூ எனக்கு வேணாம்.. எனக்கு எப்படி அழகான பொண்ணு வேணூம்னு நினைக்கறனோ அதே மாதிரி தானே அவளும் நினைப்பா..
கடவுள் மறுப்புக்கொள்கையை ,மக்களின் மூட நம்பிக்கைகளை நல்லா கிண்டல் பண்ணீ இருக்கார்.. பிரச்சார தொனி இல்லாம.. அதுக்காக அவரை பாராட்டலாம். அமரர் சுஜாதா எழுதிய கம்ப்யூட்டர் கிராமம் படத்துல ஒரு கம்ப்யூட்டரால கிராமத்துல என்னென்ன மாற்றம் நிகழுது என்பதை அங்கத நடையில் பிரமாதமா சொன்ன மாதிரி குதிரையால நிகழும் மாற்றங்களை சொல்லி இருக்கார் இயக்குநர்.
ஆனா அழகியல் ரீதியா, விமர்சனா ரீதியா இந்த படம் பாராட்டுப்பெற்றாலும் ஜனரஞ்சகமான வெற்றி பெற வாய்ப்பே இல்லை..
ஏ சென்ட்டர்ல 15 நாட்கள் . பி செண்ட்டர்ம் சி சென்ட்டர்கள்ல 10 நாட்கள் மட்டுமே ஓடும்.
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40
குமுதம் ரேங்க் எதிர்பார்ப்பு- ஓக்கே
ஈரோடு அபிராமி தியேட்டர்ல இந்தப்படம் ஓடுது.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப்படம் எடுத்துட்டு எத்தன் வருதாம்.. தியேட்டர் ஓனரே சொன்னார்.. அவருக்கே தெரிஞ்சு தான் படத்தை எடுத்திருக்கார் போல..
ஹூம்.. விழலுக்கு இரைத்த நீர்