Showing posts with label chinese film. Show all posts
Showing posts with label chinese film. Show all posts

Sunday, January 23, 2011

சைனீஷ் சினிமா விமர்சனம்-FIRE BALL 19+


கோலிவுட்டுக்கு ஒரு வெண்ணிலா கபாடிக்குழு எப்படியோ,பாலிவுட்டுக்கு ஒரு லகான் (அமீர்கான்) எப்படியோ,ஹாலிவுட்டுக்கு பிளட் ஸ்போர்ட்  (ஜீன் கிளாட் வேண்டம்)எப்படியோ அதே போல் சைனீஷ் பட உலகிற்கு ஒரு ஃபயர் பால் ( FIRE BALL).

பேஸ்கட்பால் விளையாட்டை இவ்வளவு வன்முறையாகச்சொன்ன ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.1985 களில் தமிழக கிராமங்களில் ஊமைப்பந்து என ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.குழுவில் உள்ள வீரர்களை ஓட விட்டு பந்தை அவர்கள் மீது எறிந்து அது அவர்கள் மேல் பட்டால் அவுட்.அந்த விளையாட்டையே கொஞ்சம் மாடர்ன் ஆக்கி ,வன்முறையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்தால் ஃபயர்பால் கேம் ரெடி.

அதாவது 2 டீம்.பேஸ்கட் பால் கிரவுண்டில் இறங்கும்.பாலை (BALL)எடுத்து யார் வலைக்குள் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.ஆனால் அதற்குள் அவர்களூக்குள் அடித்துக்கொள்ள வேண்டும்.நோ ரூல்ஸ்,நோ கண்ட்ரோல்,நோ அம்ப்பயர்.எப்படி இருக்கும்.?அடி போட்டு பின்னு பின்னு என பின்னுகிறார்க்ள்.

இந்த விளையாட்டில் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருக்கும் அண்ணனை மருத்துவ சிகிச்சை செய்து காப்பாற்ற ஜெயிலில் இருக்கும் தம்பி பெயிலில் வருகிறான்(அண்ணன்,தம்பி 2 பேரும் ஒருவரே-வாழ்க் டபுள் ஆக்ட்பாலிசி)
கஜினி சூர்யா மாதிரி கெட்டப்பில் இறுகிய முகத்துடன் வரும் ஹீரோ கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்.மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் 2 குரூப்களீடம் சிக்கி விளையாட்டு குழுக்கள் எப்படி சின்னாபின்னன்மாகின்றன என்பதே கதை.
கேம் ட்ரூப்பில் இருப்பவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்ட்டிமெண்ட் டச் குடுத்து உலவ விடிருப்பது டைரக்டரின் சாமார்த்தியம்.வீட்டு வாடகை கட்ட முடியாததால் துரத்தப்படும் ஒரு அம்மாவின் மகன்,மோசமான தொழிலை கணவன் செய்கிறான் என தெரிந்தும் வேறு வழி இல்லாத நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு இருக்கும் மாசமான மனைவி (கர்ப்பவதி),இப்படி கேரக்டர்களை உருவாக்கி இருப்பது அவர்கள் மேல் ஈடுபாடு காட்ட உதவும் திரைக்கதை சாமார்த்தியம்.
இந்த மாதிரி கடுமையான படங்களில் வசனங்கள் பொதுவாக ரொம்ப ட்ரையாக (DRY) இருக்கும்.இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.இருந்தாலும் பாலைவனத்தில் நீரூற்று போல ஆங்காங்கே சில பளீச் வசங்கள் உண்டு.

கோர்ட்ல இருந்து உனக்கு சம்மன் வந்திருக்கு.
ஹூம்,நல்லவனா வாழ விடமாட்டாங்களே?

மனசாட்சியை கழட்டி வெச்சிட்டுதான் சில தொழிலை  செய்ய வேண்டி இருக்கு.

என் கிட்ட அவ பணம் கடன் வாங்கி இருக்கா.பணத்தை கொடுத்துக் கழிக்கிறாளா?படுத்துக் கழிக்கிறாளா?
 தமிழ் படம் ஏதாவது பார்த்திருப்பாரோ டைரக்டர் என சந்தேகப்படும் அளவு ஏகப்பட்ட தமிழ்ப்பட ஃபார்முலாக்கள் ஆங்காங்கே.
படத்தின் ஹீரோயின் நிலாப்பெண்ணே பட ஹீரோயின் திவ்யபாரதியின் சாயலில் இருக்கிறார்,மாசு மரு இல்லாத,மச்சம் ஒன்றைக்கூட சருமத்தில் மிச்சம் வைக்காத அழகு முகம்.செர்ரிப்பழங்களை தோற்று விடச்செய்யும் அழகு சிவப்பில் அதரங்கள்.உடல்நிலை சரி இல்லாத காதலனாக இருந்தாலும் எஸ்கேபாகாமல் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் கதாபாத்திரம்.மிக நன்றாக செய்திருக்கிறார்.

மருத்துவ சிகிச்சைக்கான செலவுப்பணத்துக்கு அவள் விலைமகளாக பணி புரிந்துதான் பணம் ஈட்டுகிறாள்ள் என்பதை மிக நாசூக்காக ,ஒரே ஒரு லாங் ஷாட்டில் 2 செகண்டில் சொல்லி விடுவது டைரக்டரின் சாமார்த்தியம்.படத்தின் டைட்டில் போடும்போது திரைக்கதை என்ற லிஸ்ட்டில் 6 பேர் பெயர் வருகிறது.எனக்குத்தெரிந்து எந்த தமிழ்ப்படத்திலும் அப்படி வந்ததாக வரலாறே இல்லை.இருக்கவே இருக்காங்க  அப்பாவி  உதவி டைரக்டர்கள் குழு.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 முக்கிய மைனஸ்கள்-

1.ஒளீப்பதிவு. மகா மட்டம்.தன்னை மேதை எனவும் ,ஆடியன்ஸை முட்டாள் எனவும் நினைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் இப்படி மோசமாக பணீயாற்ற முடியும்.லைட்டிங்க் அடிப்பது பார்ப்பவர் கண்களை உறுத்துகிறது.படம் பார்ப்ப்த்ற்குள் கண் வலி வந்துவிடும் போல.

2.பிண்ணனி இசை.என்னதான் சண்டைப்படமாக இருக்கட்டும்.இப்படியா டம் டம் டமால் டமால் என 2 மணி நேரம் நான் -ஸ்டாப் ஆக இசை அமைப்பது?

காதலனான அண்ணன் ஹாஸ்பிடல் பெட்டில். (HOSPITAL BED)காதலனின் தம்பி அதே முகச்சாயல்.கூடவே தங்க,பழக வேண்டிய சூழல் ,இவை அனைத்தையும் பிரமாதமாக கண்களில் வெளீப்படுத்தி கோல் போட்டிருக்கிறார் ஹீரோயின்.ஆனால் இருவரும் இணையும் காட்சிக்கான லீட் ஜீன் கிளாட் வேண்டம்மின் ஹார்டு டார்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணம் நுகரும் மசாலாக்காட்சியைக்கூட அழகியல் உணர்வு வெளிப்படுவது மாதிரி எடுத்தது  சபாஷ் டைரக்டர் என சொல்ல வைக்கிறது,

மேற்கூறிய காட்சிகளில் கத்திரியுடன் அத்து மீறி நுழைந்து முக்கியமான சீன்களை கட் செய்த இந்திய சென்சார் குழுவை அகில இந்திய அஜால் குஜால் சீன் பட ரசிகர் மன்றம் இளைஞர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.

படத்தின் நீதி -பணத்திற்காக வாழ்க்கையைத்தொலைக்கிறோம்.அது தெரிவதற்குள் நமக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.