Showing posts with label KEEPER(2025)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம்(. Show all posts
Showing posts with label KEEPER(2025)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம்(. Show all posts

Monday, December 15, 2025

KEEPER(2025)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம்(ஹாரர் திரில்லர்)@அமேசான் பிரைம்

             

               

14/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது.

6  மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 5 மில்லியன் டாலர் மட்டுமே வசூலித்து இருக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு அழகி.பொதுவா அழகான பொண்ணுங்க எல்லாம் விளஙகாதவனைத்தான் லவ் பண்ணுவாஙக.அது ஏன் என்பது அவர்களுக்கே விளஙகாதபோது நமக்கு மட்டும் எப்படி விளஙகும்?


நாயகி ஒரு டாக்டரை ஒரு வருசமா லவ் பண்றா.வெற்றிகரமான 365 வது தினத்தைக்கொண்டாட அந்த டாக்டர் நாயகியைக்கூட்டிட்டு  ஒரு கிராமத்தில் இருக்கும் ஒதுக்குப்புறமான பங்களாவுக்கு அழைத்து வருகிறான்.


ஜாலியா இருவரும் பேசிட்டு இருக்காஙக.அங்கே குடி இருக்கும் தன் அண்ணன் ,அண்ணி இருவரையும் அறிமுகம்  செய்து வைக்கிறான் நாயகன்.ஆனால் நாயகிக்கு அவஙக ரெண்டுபேரையும் பிடிக்கலை.


அப்போ நாயகனுக்கு ஒரு போன் கால் வருது.அர்ஜெண்ட்டா ஒரு பக்கம் போக வேண்டி இருக்கு.போய்ட்டு மாலையில் வந்து விடுகிறேன்னு சொல்லிட்டு நாயகன் கிளம்பிடறான்.

அவன் போன பின்பு நாயகி  குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு படுக்கும்போது நாயகனின் அண்ணன் கதவைத்தட்றான்.நாயகிக்குப்பயம் வந்துடுது.நாயகனுக்கு போன் பண்றா.அவன் எடுக்கலை.

இதற்குப்பின் நடக்கும் சில அமானுஷய சம்பவங்கள்,அதை நாயகி டீல் செய்த விதம் இவை தான் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக டாட்டியானா மஸ்லாசி பிரமாரமாக நடித்திருக்கிறார்.கொள்ளை அழகு முகம்.இந்திய அழகி போலவே சாயல்.

நாயகன் ஆக ரோசிப் சதர்லேண்ட் சும்மா வந்து போகிறார்.அதிக வேலை இல்லை.வில்லத்தனம் அவர் முகத்தில் வரவில்லை

மற்றவர்களுக்குப்பெரிதாக வேலை இல்லை.

நாயகிக்குத்தான் படம் முழுக்க நடிக்க அதிக வாய்ப்பு


எடோவான் ப்ரீமன் இசையில் திகில் காட்சிகள் பயமுறுத்துகின்றன.

ஜெர்மி காக்சின் ஒளிப்பதிவு அருமை.

கிரஹாம் போர்டின் எடிட்டிஙகில் படம் 99 நிமிடங்கள் ஓடுகிறது


நிக் லிபார்ட் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் ஆஸ்குட் பெர்கின்ஸ்



சபாஷ்  டைரக்டர்

1  லோ பட்ஜெட்டில் நான்கே நடிகர்களை வைத்து ஒரே வீட்டில் முழுப்படத்தையும் எடுத்த சாமார்த்தியம்

2 நாயகியின் நடிப்பு படத்துக்கு முதுகெலும்பு

3 ஒளிப்பதிவு ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கை கொடுத்து இருக்கின்றன



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகியின் தோழி நாயகியை எச்சரிக்கிறாள்.உன் ஆளுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி இருக்கும்னு தோணுது என.எப்போ?லவ் ஆகி ஒரு வருசம் கழித்து.இனி எச்சரித்து என்ன பயன்?

2 க்ளைமாக்ஸ் காட்சி புரியவில்லை.விக்கி பீடியாவில் கதை படித்துத்தான் புரிந்தது.விளக்கி இருக்கலாம்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஹாரர் திரில்லர் ரசிகர்கள் இரவில் பார்க்கவும்.திரில்லிங்காக இருக்கும்.ரேட்டிங்க் 2.5 /5