Showing posts with label 29(2026)-தமிழ்- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label 29(2026)-தமிழ்- சினிமா விமர்சனம். Show all posts

Monday, May 11, 2026

29(2026)-தமிழ்- சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா)

  

ஜிகிர்தண்டா 2 ,ரெட்ரோ ஆகிய படங்களில் வில்லன் ஆக நடித்த நடிகர் விது நாயகன் ஆக நடிக்கும் முதல் படம் இது .    அயோத்தி,கிஸ் பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி தான் இதிலும் நாயகி.மேயாத மான்(2017),ஆடை(2019) ,குளுகுளு(2022) ஆகிய படங்களின் இயக்குநர் ரத்னக்குமார் தான் இந்தப்பட இயக்குநர்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2010.

21 வயதான நாயகிக்கு ஐ ஏ எஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.ஆனால் இப்போதைக்கு டிகிரி முடித்து விட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள்.


29 வயதான நாயகன் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து  வேலை செய்பவன்.அக்ரிகல்ச்சர் டிகிரி முடித்திருந்தாலும் ஐ டி கம்பெனியில் பணி புரிபவன்.இவனுக்கு என்று பெரிதாக லட்சியம் எதுவும் இல்லை.


நாயகன் ,நாயகி இருவரும் ஒரே கம்பெனியில் பணிபுரிவதால் பழகி ,நண்பர்கள் ஆகி காதலர்கள் ஆகிறார்கள்.


ஒரு முறை பேச்சு வாக்கில் உன் லட்சியம் என்ன?என நாயகி நாயகனிடம் கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நாயகன் கூறி விடுகிறான்.இந்த விவாதத்தில் இருவருக்கும் மனத்தாங்கல் ஆகி பிரிய  இடைவேளை.

இதற்குப்பின் அவரவர் லட்சியப்பாதையில் பயணித்தார்களா?பிரிந்த காதல் ஒன்று சேர்ந்ததா?என்பது தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக விது நடித்திருக்கிறார்.வில்லன் ரோலில் பார்த்த இவரை நாயகன் ஆகப்பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் போகப்போக கதையின் போக்கில் செட் ஆகி விடுகிறார்.

நாயகி ஆக ப்ரீத்தி அஸ்ராணி பிரமாதமான நடிப்பு.இவர் ஸ்ரீவித்யா ,ஷோபனா போல நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இவருக்காகவே ஸ்பெஷலாக நடனத்திறமையை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைத்து ஆட வைத்தது இயக்குநரின் சாமார்த்தியம்.

வில்லன் ஆக மாஸ்டர் மகேந்திரன் பரவாயில்லை ரகம்.


நாயகனின் நண்பன் ஆக வரும் அவினாசின் ஒன் லைனர்கள் கல கலப்பு.

நாயகனின் அம்மாவாக வரும்  ஆதிரா,நாயகியின் அம்மாவாக வரும் சிந்து இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.


இவர்கள் போக மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்த அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மாதேஷ்  மாணிக்கம்.கடற்கரைக்காட்சிகளில் முத்திரை  பதிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன்.6 பாடல்களில் 3 ஹிட்.பின்னணி இசையும் அருமை.

எடிட்டிங் ஆர் எஸ் சதீஷ் குமார்.முதல் பாதி நல்ல வேகம்.பின் பாதி ஸ்லோ.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  ரத்னக்குமார்.



சபாஷ்  டைரக்டர்


1 இதயம் படத்தை வரைவது அவ்வளவு ஈசி இல்லை.நாம ரெகுலராப்பார்க்கும் ஹார்ட் ஷேப் வேற,நிஜ இதயத்தின் வடிவம் வேற என்பதை விளக்கும் இடம் அருமை

2 கடற்கரையில் மறைந்திருக்கும் ஒரு இடத்தில் நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் இடம் கவிதை.

3 காதலின் பயணம் இறுதியில் காமத்தில் தான் முடியும் என்ற கருத்தை கண்ணியமாகக்காட்சிப்படுத்திய விதம் அழகு.

4 பாச்சிலர் ரூம் காட்சிப்படுத்திய யதார்த்தம் பிரமாதம்.

5 காதலை வெளிப்படுத்தும்போது பட்டாம்பூச்சி பறக்கும் விதத்தைக்கவிதையாக சொன்ன தருணம் செம.

6 இயக்குநர் ஒரு விஜய் ரசிகர் என்பதால் படம் முழுக்க விஜய் ரெப்ரன்ஸ் வைத்திருப்பது தியேட்டரில் கொண்டாட்ட மனநிலையைக்காட்டுகிறது.

7 கவித்துவமான காதல் படமாகக்காட்ட சேப்ட்டர் 1 சேப்ட்டர் 2 என பிரித்து வரிசைப்படுத்திய விதம் அருமை





  ரசித்த  வசனங்கள் 


1 வாழ்க்கையே வேண்டாம்னு வெறுத்து ஒதுங்கும் ஒருவனுக்கு வேண்டி விரும்பி  ஒரு பொண்ணு வந்தா எப்படி இருக்கும்?

2  வாழ்க்கை பூரா நீ என்னை அண்ணாந்து பார்க்கத்தயாரா?

3 சிலை வைக்கிற அளவுக்கு நாம வளரலைன்னாலும் உலை வைக்கிற அளவுக்காவது வளர்ந்திருக்கோமே?

4  நான் யாரு?என்னோட அடையாளம் என்ன?இந்த தேவதையோட ஆளு என்பது தான் இப்போதைக்கு என்னோட அடையாளம்.

5  பெரியவனா ஆகும் முன் நீ என்னவா ஆகனும்னு ஆசைப்பட்டே?

பெரியவனா ஆகனும்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன்.

6  அவன் ஒண்ணும் நமக்காக மாறலை.அவன் நேசித்த பொண்ணுக்காக மாறி இருக்கான்.

7  காதல் என்னைக்கொஞ்சம் கொஞ்சமா பிச்சுத்திங்குது.


  8  லவ் பண்ணும்போது கெமிஸ்ட் ரி நல்லா இருந்தாப்போதும்,ஆனா அதுக்குப்பின் மேட்ச் வேணும்

9   அவனுக்குன்னு ஒரு அடையாளமே இல்லாம அழிச்சுக்காமிக்கிறேன்.

10 திருக்குறளை கவுத்துப்போட்ட மாதிரி அவளோட லிப்ஸ். அவளோட மேல் உதட்டை விட, கீழ் உதடு கொஞ்சம் பெருசு"
11 சாகப்போற கடைசி நிமிஷத்துல நான் முனகிட்டு இருக்கப்போற பேரை, அவ பேப்பர்ல எழுதுனா.
12 காத்துல பறக்காம இருக்க பேப்பர் வெயிட் வைக்குற மாதிரி அவ தலையில கொஞ்சூண்டு மல்லி பூ... அவளையே பரிசுப்பார்சல் பண்ண மாதிரி வந்து நின்னா"
13 இப்படி வழி அனுப்புனா நான் தீ மிதிக்க கூட தயார்.

14. ஹிந்தித்திணிப்புக்குத்தான் நாங்க எதிர்ப்பு ,ஹிந்தி மொழிக்கு அல்ல

15 ஒரே செடியை எத்தனை தடவை தான் பிடுங்கிப்பிடுங்கி நடுவீஙக?

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 இயக்குநர் கவுதம் மேனன் படஙகளில் வருவது போல நாயகன் வாய்ஸ் ஓவரில் பேசுவது பல இடங்களில் எரிச்சல்.

2 மாஸ்டர் மகேந்திரனின் கேரக்டர் டிசைன் இன்னும் வலுவாக எழுதி இருக்கலாம்.க்ளைமாக்சில் திடீர் எனத்திருந்துவது நம்பும்படி இல்லை..

3  முன் பாதி லவ் ஸ்டோரி ஆகக்கொடுத்து பின் பாதியில் ட்ராக் மாறுவதை எத்தனை பேர்களால் ஜீரணிக்க முடியுமோ?தெரியவில்லை.

4 திரைக்கதை அமைத்த விதம் பழைய பாணியில் என்பதால் சலிப்பு

5 செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியின் பாதிப்பு பல காட்சிகளில் தெரிகிறது.

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரசிக்க வைக்கும் முதல் பாதி காதல் கதை,சிந்திக்க வைக்கும் பின் பாதி லட்சியப்பயணக்கதை. என்பதால் பார்க்கலாம்.,80s,90s கிட்ஸ்க்கு மிகவும் பிடிக்கும்.ரேட்டிங் 3/5