Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Tuesday, July 29, 2014

ஜெர்க் ஜெகன் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்த இரு பெண் ட்வீட்டர்கள்

1. ஜானகி = ஜா நஹி = போகாதே #,தினமும் ஒரு ஹிந்தி வார்த்தை தப்பாய் கற்போம் கற்பிப்போம்


=============


2 ஏழை ,எளியோர் ,மாற்றுத்திறனாளிகள் பற்றி எழுதும்போது பாசிடிவ் செய்தி சொன்னாலும் வாக்கிய அமைப்பை நன்றாக செக் செய்து விட்டு எழுதவேண்டும் நாம்

=============


3 எனக்கு நாளைய சூப்பர் ஸ்டார் பட்டத்துல ஆசை இல்லை.அதை பெருசா நினைக்கலை.ஆனா அந்த பட்டம் குடுத்த குமுதம் க்கு நன்றி.மதுரை லஒரு விழா


===============


4 நான் ரொம்ப சிம்பிள்.அதுக்கு மதுரையில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான விழா தான் ஒரு சாம்ப்பிள்.்


===============

5 மதுரை என்றால் நினைவுக்கு வருவது 1 மல்லிகை 2 மீனாட்சி அம்மன் கோவில் 3 அழகிரி 4,அழகிய தமிழ் மகன் நடத்தப்போகும் பிரம்மாண்ட விழா


===============


6 மதுரைக்குப்போகாதடி ;-)))

==============

7 மச்சான் பேரு மதுர.
நின்னு பாரு எதிர.
நான் கப்பம் கட்டி பட்டம் வாங்கி இன்ட்டர்நெட்டில் தினம் ட்ரெண்ட் ஆகும் பொய்க்கால் குதிர.

=============

8 ஹோட்டல்ல அப்பளம் பரிமாறுன அடுத்த மைக்ரோ நொடில அத நொறுக்கி வெச்ச சர்வருக்கே வெச்சமா?வைக்கலையா?னு நினைக்க வைப்பான் தமிழன்


==============

9 வாழ்வில் அனுபவப்பட்டவர்கள்
் பட்ட கஷ்டத்தை பிறர் படக்கூடாது என்ற நல்லஅறிவுரை சொன்னால் அவங்களை எதிர் கேள்வி கேட்டு மடக்குவான் தமிழன்

==============

10 வழக்கமா குமா குமா னு மெசேஜ் அனுப்பும் நண்பர் புதுசா கூகுமா குமார் னு SMS.என்னய்யா னு கேட்டா கூட்டாஞ்சோறு குட்மார்னிங் கின் சுருக் காம்

=============

11 பொடுசு ல இருந்து பெருசு வரை நர்சு ன்னா ஒரு சாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது


============


12 திருமணச்சந்தைல ஆம்பளைங்களுக்கு ஏதுங்கமதிப்பு?அழகானகுடும்பப்பொண்ணு கிடைச்சா பவுன் போட்டு கட்டிக்கபணக்கார மாப்ளைங்க லைன் கட்டி நிக்கறாங்க


================

13 வாக்் கிரவுண்ட்ல ஒரு குறிப்பிட்ட இடம் வந்தா மட்டும் பொண்ணுங்க முத்தம் குடுக்கற மாதிரி என்னமோ பண்ணாங்க.கோவில்.சாமி கும்பிடறாங்க்ளாம்


============


14 சீரகம் = சீர் அகம் = நம் உடம்பை (அகம்) சீராக வைத்துக்கொள்ள உதவும்


===============


15 பார்க்ல இருக்கும் சறுக்கல் ல குழந்தைங்க எல்லாம் ஈசியா சறுக்கி விளையாடறாங்க.நாம உக்காந்தா சறுக்கவே மாட்டேங்குதே.ஒய்?


=================

16 சூரிய நமஸ்காரம் செய்பவன்.,சூர்ய உதயத்தை ரசிப்பவன் ,சன் ரைஸ் காபி குடிப்பவன் என 3,வகையினருக்கும் கட்சி முத்திரை குத்தாதீங்க ;-))



=============


17 அன்பே! நான் பார்க்கும்போதெல்லாம் நீ நொறுக்குத்தீனி தின் கிறாயா? நீ தீனி தின்னும்போது உன்னைப்பார்க்கிறேனா?


==============

18 அடேங்கப்பா.பஸ் ல முன் சீட் பிகர் தன் முதுகுக்கு (ம்) ரோஸ் பவுடர் ,FAIR& லவ்லி எல்லாம் போட்டிருக்கு.ரொம்ப பண்க்கார வீடு போல


============


19 கிளு கிளு ட்வீட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்களான சுடர்க்கொடி,மீனம்மாகயல், திடீர் என தத்துவமழை பொழிவது அதிர்ச்சி அளிக்கிறது # ஜெர்க் ஜெகன்


==============

20 பஸ் ல கண்ணாடி ஜன்னலை நான் முன்னே தள்ள முன் சீட் பிகர் பின்னால தள்ளி விடுது.அட!,இந்த கேம் கூட நல்லா தான் இருக்கு ;-))


=============

Monday, July 28, 2014

கூட்டாஞ்சோறு அமைப்பு என்ன செய்யும் மேடம்?

1. டாக்டர்! நர்ஸ்  நளினா வைப்பார்க்கனும்



 யோவ்! டாக்டரைப்பார்க்க மாட்டீங்களா?



ம்க்கும், நா நளினாவோட புருசன்.2 நாளா  வீட்டுக்கே வர்லை!


======================

2 டாக்டர் . டெய்லி  ஒரு லட்டு சாப்பிட்டா  என்ன ஆகும் ?



 இது எனம்மா கேள்வி? மாசம் 30 லட்டு வயித்துக்குள்ளே  போய் சுகர் ஃபார்ம் ஆகும்






=======================






3 மன்னா! எதிரி யாரும் துரத்தலையே? எதுக்கு பதுங்கு குழியில் அமர்ந்து சாப்பிடறீங்க?


இது குழிப்பணியாரம். ஆச்சே?


=================


4   டைரக்டர் சார்.உங்க படம் என்னை கண் கலங்க வெச்சுட்டுது.



 ஓ!எந்த இடத்துல அழுதீங்க. ?

தியேட்டர் ல நான் உக்காந்திருந்த இடத்துல, அப்புறம்  வீட்டுல போய் டைங்க் டேபிள் ல



=================


5  என் சம்சாரம் எத்தனை சப்பாத்தி கேட்டாலும் , உப்புமா கேட்டாலும் சலிக்காம சுட்டுத்தருவா, செஞ்சு  தருவா


. அடடா.மைதா மாவை , ரவையை ஜல்லடை ல சலிக்காம சுட்டா நல்லதில்லையே?


====================


6   உங்க பக்கவாதம் சரி ஆகனும்னா ஒரு ஆபரேசன் பண்ணனும்.



டாக்டர்.என் உயிருக்கு உத்தரவாதம் உண்டா?


==================


7 மேடம்.உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு.எல்லா டெஸ்ட்டும் பண்ணி கண்டு பிடிச்ட்டேன்.5000 ரூபா பில்.



டாக்டர்.கொழுப்பா?அது எனக்கே தெரியுமே?


=================


8  ஜட்ஜ் = இளம் பெண் குளிக்கையில் எதுக்காக எட்டிப்பார்த்தீங்க?



சப் இன்ஸ்பெக்டர் = நான் கொஞ்சம் ஹைட் கம்மி. கதவு உயரமா இருந்தது.அதான் .



=====================



9  நமீதா =,டாக்டர்.பிபி ,சுகர் கம்மியா இருக்கோ னு டவுட் .செக் பண்ணனும்



மேடம்.செக் பண்ணாமயே சொல்றேன்.எல்லாமே ஜாஸ்தியாத்தான் இருக்கு


==================



10   Dr.வயித்துக்குள்ள1000் பட்டாம்பூச்சி பறக்கிற பீலிங் .




பட்டுப்புடவை கட்டும்போது அப்டித்தாம் feel ஆகும் மேடம்.காட்டன் சேலை கட்னா சரி ஆகிடும்



=====================


11  ஜட்ஜ் = ஒரு எஸ் ஐ நீங்க.பொண்ணு குளிக்கும்போது பாத்தீங்களே?,வெட்கமா இல்லை ?


S I = நோ யுவர் ஆனர்.கிளுகிளுப்பாதான் இருந்தது.



=================



12   யுவர் ஆனர்.நான் குளிக்கும்போது இவர் பார்த்துட்டாரு.



சும்மா கதை விடாதம்மா.நீ தான் 3 மாசமா முழுகாம இருக்கியே?எப்டி குளிச்சிருக்க முடியும்


================


13  சார்.FRUIT மிக்ஸர் ஐஸ் தூக்கலா.1



வேணாம் சார்.அப்புறம் எல்லாரும் உங்களை ஐஸ் ப்ரூட் மிக்சர் பார்ட்டி னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாங்க


===============



14  டியர்.சமையல் தான் முடிஞ்சுதே.சீக்கிரம் பரிமாறு.பசிக்குது



சாரி டியர்.FB ஸ்டேட்டஸ் போட்டு 500 லைக் விழும் வரை காத்திரு


==============



15   நயன் தாரா = ஆடி கார் வாங்கலாம்னு இருக்கேன்.



மெக்கானிக்= புதுசுங்களா? வழக்கம் போல் செகன்ட் ஹேன்டா?



===================


16 டாக்டர்.டெய்லி வாழைத்தண்டு பொரியல் சாப்ட்டா என்ன ஆகும் ?



உங்க வீட்டு அரிவாள் மனை சுத்தமாகும்.துலக்கவே தேவை இல்ல


===================



17 பெண் பார்க்கும் மாப்ளைக்கு நகம் இருக்கா?னு ஏன் கேட்கறீங்க? கிள்ளி வெச்சுடுவார்னு பயமா?


ச்சே ச்சே நகம் இருந்தா பூண்டு ,வெங்காயம் உரிக்க ஈசி


================


18 டாக்டர்.அடிக்கடி சோர்வா துயரமா இருக்கு.துக்கம் தொண்டையை அடைக்குது.என்ன செய்ய?


ஒருடம்ளர் தண்ணீர் குடிங்க.அடைக்காது.கன்சல்டேசன் FEES 500RS


==================


19 கூட்டாஞ்சோறு அமைப்பு என்ன செய்யும் மேடம்?


ஹோட்டலுக்கு கூட்டமா போய் சோறு சாப்பிடுவோம்.


================


20 டியர்.உங்க மடில படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்தை எல்லாம் எண்ணனும்.


அதுக்கு உன் வீட்டு மொட்டை மாடி போதுமே?என் மடி எதுக்கு?


=======================


இது கதிர் வேலன் ன் கள்ளக்காதல்

1. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் கேசத்தை ,உடையை சரி செய்யாதீர்" ! கலைந்திருப்பதும் அழகுதான்


===============



2  ஒரு பொண்ணு தலை வகிட்டில் 2 ஜான் அளவுக்கு குங்குமத்தால ரோடு போட்டு விட்டிருக்கு.ரொம்ப பக்தியா? ஓ சி குங்குமமா னு விசாரிக்கனும்


==============


 3  பஸ் ,ரயில் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருக்கும் பிகர் கூந்தலைக்கோதி விட்டுக்கொண்டிருந்தால் அது அவர் "் சவுரி"யம்.


===============


4 வெத்தலை பாக்கு ,லிப்ஸ்டிக் ஏதாவது 1 போட்ட எல்லாப்பொண்ணுங்களும் செவ்வாய் ஸ்பெஷல் லேடீசே!


==============


5 லிப்ஸ்டிக் என்ன சுவை? லிப்ஸ்டிக் போட்ட பெண்களோ ,காதலியை கமல் பிராண்ட் கிஸ் அடித்த ஆண்களோ விளக்கவும்


================


6  ஒருத்தன் பைக் பின் சீட்ல டர்க்கி டவல் ( தேங்காய்ப்பூத்துண்டு) விரிச்சு அதுல அவனோட காதலியை உக்கார வெச்சு கூட்டிட்டுப்போறான்.அடேய்! ;-)))


===============


7  லவ் லெட்டர் ல 4 மூலைலயும் மஞ்சள் தடவி மங்களகரமா இருக்கட்டும்னு கொடுத்தா அதை மஞ்சக்கடுதாசி னு சில மஞ்சுளாக்கள் நினைச்சுக்குவாங்க


=================


8 அத்தி பூத்தது போல் உன் சிரிப்பு னு எழுதுன லவ் லெட்டர் ல அத்தை பூத்தது மாதிரி னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதி மாட்டிக்காதீங்க.


===================


9   காங் ,பிஜேபி என ஆட்சிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்போது நடிகையின் காதலர் லிஸ்ட் டும் மாறுவதில் என்ன தவறு?


================


10  இது கதிர் வேலன் ன் கள்ளக்காதல்


===============



11  மேடம்.உங்களுடைய வலது கைல சிம்பு பேரையும் இடது கைல பிரபுதேவா பேரையும் பச்சை குத்திக்கிட்டீங்க.இப்போ உதயநிதி பேரை எங்கே குத்துவீங்க?


===============



12   கவுண்டமணி நமீதாவை வர்ணித்தால்= அடங்கப்பா! இது உலகமகா இடுப்புடா மாமி சாரி சாமி !


================


13  பிரபல நடிகையின் நிஜ மாப்ளை யின் முதல் இரவில் டியர்! ஏன்? கூச்சமா இருக்கா? ம்ஹூம்! இது எத்தனாவது முதல் இரவு னு குழப்பமா இருக்கு


=================



14  சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா ,உதய நிதி ஸ்டாலின் மற்றும் பலர் இணைந்து வழங்கும் நயன் தாரா IN & AS இது நம்ம ஆளு # வெச்சாம் பார்யா.டைட்டில்


===============



15  விராலி மலை டூ புதுக்கோட்டை போகும் சாலையில் 10 வது கிமீ உள்ள ஒரு ஊர்ப்பெயர் ராப்பூசல்



===============


16 அசைவத்தமிழன் சிக்கன் மட்டன் னு டெட் பாடியையே சாப்பிடறான்.தம்மாந்தூண்டு புழு பூச்சி அதுல உயிரோட இருந்தா கவலைப்படுவது ஏனோ?


===============



17 SUN FLASH NEWS - நல்ல தங்காள் படத்தில் நாயகியாக நயன் தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்து முன்னணி எதிர்ப்பு ,குஷ்பூ ஆதரவு ( கற்பனை)


==================


18 ஒரு பெண் ட்வீட்டரோட ஹேன்டில் ல 10 டிஜிட்நெம்பர் இருந்தது.அவங்க போன் நம்பர்னு நினைச்சு ரிங் போட்டேன்.ஆத்துக்காரர்து போல.ஓடிடுடா கைப்புள்ள


=============


19 பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு .காம் ஆரம்பிக்கறாங்களாம்.அவள் விகடன் ,தோழி ,மல்லிகை மகள் வாங்கத்தேவை இல்லை


=================

20 புருசனிடம் கோவிச்சுக்காத , இம்சிக்காத பொஞ் சாதிகள் இல்லையடி பாப்பா!


===============

Sunday, July 27, 2014

"வைரமுத்துவுடன் வேலை செய்ய் யோசித்தார் மணிரத்னம்.." - கே.பாலசந்தர்

1.வருமான வரித்துறையுடன்  ஜெ திடீர் சமரச மர்மம் என்ன?- கருணாநிதி  # தலைவா! 2 ஜி,ல கலைஞர் டி வி 200 கோடி மேட்டர்ல நாம என்ன செஞ்சோம்?


====================

2 என்னைவிட என் படங்கள் பெரிதாக இருக்க வேண்டும்: சூர்யா  # நல்ல வேளை , இந்த ஸ்டேட்மெண்ட்டை நமீதா சொல்லலை!


======================



3 தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு அறவே இல்லை;-் ஜெ #நல்ல வேளை.இதுக்கு அம்மா மின்சாரம் னு பேர் வைக்கலை.ஷாக் நியூஸ் ஆகி இருக்கும்


=================


4 கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி வழக்கு: கருணாநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு # அவர் என்னமோ அடமானம் வெச்ச மாதிரிபேசறாங்க்ளே?


===============

5  ரிலையன்சுக்கு மேலும் ரூ.3,475 கோடி அபராதம் பாராளுமன்றத்தில் தகவல் # சங்கமே அபராதத்துல தான் ஓடிட்டிருக்கு


================


6  முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர் . # நல்லா விசாரிங்க.பெரிய பண முதலை யா இருக்கும்


==============



7 மேல் சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம் # சிகிச்சை சரியா செய்யலைன்னா டாக்டர் தலை மேலயே 1 போடுவாரோ?


==============



8  720 மணிநேர சினிமாவிற்கு 72 நிமிட டீசர்: 2020ல் படம் ரிலீஸ் # படத்தோட டைட்டில் ரயிலா?,ரொம்ப நீளமா இருக்கும் போல


===============


 9  மாறிமாறி கூட்டணி வைத்ததால் பா.ம.க. தோல்வி அடைந்தது: ராமதாஸ்..# மாறி மாறி கூட்டணி வெச்சதே மொள்ளமாரி ,கேப்மாரி கூடத்தானே ?


================

10 உலகின் மிக உயரமான துருக்கி டீன்ஏஜ் பெண் 7 அடி # கைக்கும் எட்டலை வாய்க்கும் எட்டலை வெத்தலை பாக்கு பத்தலை சொந்த ஊரு குளித்தலை


=================


11  விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் 299 காலியிடங்கள் # இன்னும் ஒருத்தனை காலி பண்ணிட்டா ரவுண்டா.300 காலி இடம் ஆகிடும்


===============


12  திருமண உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படுகிறது: அமைச்சர் வளர்மதி. # மேடம்.அப்டியே திருமண உதவி பொண்ணும் பாத்துக்குடுத்துட்டா தேவலை


================


13 குலசேகரம்- இளம்பெண் குளித்ததை எட்டிபார்த்த எஸ் ஐ கைது # சத்தம் இல்லாம பார்த்திருக்கலாம்.இது என்ன சோப்?னு கேட்டு மாட்டிக்கிட்டாராம்


=============


14  23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலா # அமலா போனார் அமலாபால் வந்தார் ்.இப்போ அமலாபால் போனார்.அமலா வந்தார் டும் டும்டும்


================


15 உதயநிதி ஸ்டாலினுக்கும்- நயன்தாராவுக்கும் காதல். -வார இதழ் # நிதி இருக்கும் இடம் நடிகைகள் காதல் (!!),உதயம் ஆகும் இடம்



===================


16  ஆண்டிப்பட்டி-கள்ளக்காதல் ஜோடி தற்க்கொலை முயற்சி ; காதலி சாவு # காதலன் பிளான் பண்ணி விஷத்தை வாய்லயே.வெச்சிருந்து கொப்புளிச்சிருப்பான்.



\=================


17   நூன் ஷோவில் பிக் அப் ... மேட்னியில் பேக் அப்.. இதுதான் இன்றைய காதல் -T R  # தன் பையன் பண்றதைப்பார்த்துட்டு தரணி பூரா இப்டி-னு பரணி?




=================




18 "வைரமுத்துவுடன் வேலை செய்ய் யோசித்தார் மணிரத்னம்.." - கே.பாலசந்தர் # அவருக்கு தமிழ் மணிமுத்தாறு ஆறு மாதிரி கொட்டும்.இவருக்கு சுருக் தமிழ்


===============


19 பாமக ஆரம்பித்து 25 ஆண்டுகளாகியும் ஆட்சி அமைக்காதது வருத்தமளிக்கிறது - ராமதாஸ்
# நல்ல வேளை அமைக்கலை.மகிழ்ச்சி அளிக்கிறது!


===============


20 தி.மு.க.வை வெறுத்தவர் அல்ல காமராஜர்: கருணாநிதி .# தியேட்டர் நல்லாருக்கு தான்.ஆனா ஓடிட்டிருக்கும் படம் தான் சரி இல்லை


===================

ஐஸ்டிக் - மாடர்ன் ஃபிகர்களுக்கான புதிய கண்டு பிடிப்பு

1. லஸ் கார்னர் ல் நகைக்கடை வைத்தால் நெக்லஸ் கார்னர் ஆகி விடும்


==================


2 அன்பே! வளர்மதி! உனக்கு மூளை தினம் தினம் வளர்ந்துட்டே இருக்குமா?


====================


3 பொதுவா பொண்ணுங்க கிட்டே அவங்க செய்யும் தப்பை நாம சுட்டிக்காட்டுனா கண்டுக்கமாட்டாங்க.இன்னொரு பெண் மூலம் சொன்னா கேட்டுக்குவாங்க #தமிழச்சிடா


=====================


4 கம்மல் திருகாணி இவ்ளவ் நீளமாப்போட்டிருக்கும் நீளவேணி! நீ தலையை திருப்பும் திருப்புறசுந்த்ரி ஆகும்போது குத்தாதா?


================



5 பஸ்ல ஒரு பிகரு 3 மீட்டர் மஞ்சள் கயிறை மணிக்கட்டில் கட்டி இருக்கு.மாரியம்மன் கோவில் வேண்டுதல் போல.இதை லவ்வினா அவசரத்தாலி ரெடி



=======================


6 டவுன் பஸ்ஸில் பூ வைத்த பூவையர் ஏறி விட்டால் மணம் வீசும் மல்லிகைப்பூ பந்தல் ஆகிவிடாதோ !


======================


7 வேட்டி விவகாரம் முற்றுப்புள்ளி வைக்க  பிரதமர் வேட்டி கட்டி  ஒரு நாள் பாராளுமன்றம் போக வேண்டும் . ஹிந்தி கற்பதை விட வேட்டி கட்டுவது எளிது




=======================






8 உப்புமா க்கு இங்க்லீஷ்ல என்ன?னு யாராவது கேட்டா  ஒரு நொடி கூட யோசிக்காம சால்ட்மா -னு சொன்ன கூட்டம்யா நாம எல்லாம் ;-))




=========================



9 ஸ்வீட் கேர்ள் -னு எல்லாரும் சொல்லனும்கறதுக்காக டெய்லி லட்டு , ஜிலேபி, மைசூர்பாக்னு ஸ்வீட்டா சாப்பிடுவாள் தமிழச்சி


=========================


10 வாய்மை எனப்படுவது  லிப்ஸ்டிக் எனில் கண் மை எனப்படுவது  ஐஸ்டிக் தானே?




======================






11  1001 எலுமிச்சம்பழ மாலை கோர்த்துட்டு இருக்காங்க ் ஒரு அம்மா.சமயபுரம் மாரியம்மனுக்கு சூட்ட.100 லெமன் சாதம் கழறி ஏழைகளுக்கு தந்திருக்கலாம்


================


12   காமராஜர் பிறந்த தினம்.எளிமையின் இலக்கணம்.முடிந்த வரை எளிமையுடன் வாழ்வோம்.எளியோர்க்கு இயன்ற அளவில் உதவுவோம்  ( 15 7 2014 _)



================


13  நாம பசியோட இருக்கும்போது FBல யாராவது இதை சாப்ட்டேன்னு போட்டோ அப்டேட்ஸ் பார்க்கும்போதுஅட்ரஸ் கேட்டு அங்கே போய் அதை பிடுங்கி சாப்பிட்ரனும்


================



14  பொண்ணுங்க மனசு அலிபாபா குகை மாதிரி.பாஸ்வோர்டு தெரிஞ்சாதான் உள்ளே போக முடியும். இதுல சோகம் என்னான்னா 40 பேரு தெரிஞ்சு வெச்சுக்கறாங்க


=================


15  இரு கால்களும் இல்லாதவர் ரயிலில் தவழ்ந்து வந்து ரயில் பெட்டியில் சீமாற்றால் கூட்டி பிச்சை கேட்கிறார்.நெஞ்சை நெகிழ வைக்கிறது


================


16  நமக்கு அது இல்லை இது இல்லை என குறை கூறுவதை விட்டு விட்டு நம்மை மிக ஆரோக்யமாக பரிபூரணமாகப்படைத்த இயற்கைக்கு நன்றி நவிலுவோம்


=================


17 குழந்தையாய் நாம் இருக்கும்போதும் ,வளர்ந்த பின் நோயுற்ற பொழுதுகளில் நமக்கு பணி விடை செய்வதிலும் சலித்துக்கொள்ளாதவர்கள் நம் பெற்றோர்


=================


18   கர்ம வீரர் காமராஜர் இறக்கும் முன் கடைசியாகப்பேசியது ( தன் உதவியாளரிடம் ) "வைரவா!விளக்கை அணைத்து விடு!"


==============


19  ரஜினி ரசிகன் கோச்சடையான் எனில் அவன் காதலி ஜடையில் பூ வைத்திருந்தால் பூச்சடையாள்!


==============



20   பூக்களை நாரில் இறுக்கிக்கட்டுவது மென் முறை எனவும் ,ஊசியால் காம்பை குத்தி கோர்ப்பது வன்முறை எனவும் தவறாகப்புரிந்து கொள்ளாதீர்!



==================


Saturday, July 26, 2014

டாக்டர்!தூத்துக்குடி பரோட்டா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?

1. கண்டக்டர் = ஆம்பளைங்க எல்லாம் பின்னால நகருங்க !

சாரி.முன்னால தான் பிகருங்க.


===================


2 டாடி.காது குத்தும்போது வலிக்குமா?



 ச்சே ச்சே அதெல்லாம் வலிக்காது. சும்மா காது குத்தாதேப்பா!


==================


3 எங்க வீட்ல குடும்ப உறுப்புனர்கள் மட்டும் 52 பேர்



. அடேங்கப்பா.சொந்தமா ஒரு பஸ்ஸே வாங்கிக்குங்க.


==================

4 டாக்டர்.நீங்க வெட்னரி டாக்டர் என்பதால் ஒரு டவுட் கேட்கறேன்


. ம் கேளு



 வாயில்லா ஜீவன் கள் லிப் கிஸ் அடிக்குமா?அதுக்குத்தான் வாயே இல்லையே?


===================


5 தலைவரே! ஏன் இப்பவெல்லாம் ஜாகிங் போறதில்லை?



 ஓடுகாலி னு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான்


===================


6 குட்மார்னிங் சார்.டுடே ரிப்போர்ட்.



இன்னைக்கு சன் டே!


 சாரி சார்.மறந்துட்டேன்.ஒர்க் பத்தியே நினைச்சுட்டு இருந்தேன் # ஐ நம்பிட்டாரு


==================

7 டொக் டொக்


 யார் சார் நீங்க?என்ன வேணும்?



டெய்லி உங்க பொண்ணு காலை 6 க்கே கோலம் போட்டுடும்.இன்னைக்கு 7 ஆகியும் காணோம்?FEVER?


====================


8  ஜட்ஜ் = எல்லா வீட்லயும் பூட்டை உடைக்காம எப்டி திருடுனே?



கைதி = முதல் கட்டமா 6 மாசம் பூட்டு கம்பெனி நடத்துனேன்.பூட்டு வாங்குனவங்க வீட்ல மட்டும்  திருடுவேன்


====================


 9 டியர்.என் கிட்டே ஏதாவது தவறு இருந்தா சுட்டி காட்டுங்க.



உன் நெத்தி சுட்டி விலகி இருக்கு.வகிடுக்கு நேரா இல்லை #,இடம்"சுட்டி்பொருள் விளக்கு


=======================


10 எங்க கிளப் ல வேட்டி கட்டிட்டு வருபவர்களுக்கே அனுமதி.எப்பூடி?



 "கிளப் "பிட்டீங்க!,சபாஷ்


======================



11  மிஸ்!,எதுக்காக ஸ்கூட்டியை வித்துட்டு ஆக்டிவா வாங்கிட்டீங்க?



இன்ட்டர்வ்யூவுல இந்த வேலை கிடைக்கனும்னா ஆபீஸ்ல "ஆக்டிவா"இருக்கனும்னாங்க


======================



12 பொண்ணுக்கு மூல நட்சத்திரம்.மாமனார் இல்லாத மாப்ளை தான் வேணும்



. பொண்ணோட அப்பா கூட மாப்ளைக்கு மாமனார் தான்


=======================


13 உங்க வீட்டுக்காரரை என்ன சொல்லி கூப்பிடுவீங்க?


ஹவுஸ் ஓனரே னு


=======================


14 பெண் பார்க்கும் படலத்தில் =


பொண்ணுக்கு வாய்ஸ் நல்லாருக்குமா?


 ஒரே ஒரு வாய் தான்.எதுக்கு ப்ளூரல் ல வாய்ஸ் னு சொல்றீங்க?


=======================


15 டியர்.என் பேச்சைக்கேட்கலை.3 நாளைக்கு பேச மாட்டேன் அதான் தண்டனை.



 300 நாள் கூட பேசாம இரு.ஐ ஜாலி


====================


16 புருசன் கூட 2 வருசமா பேச்சு வார்த்தையே இல்லைங்கறீங்க.அப்புறம் எப்டி 3 மாசமா மாசமா இருக்கீங்க?



 டாக்டர்.அவரு மவுனராகம் ரசிகர் மன்றத்தலைவர்.


======================


1 7 ஸார்.நீங்க எழுதுன நாவல் ல ஹீரோ ஏன் அடிக்கடி ஒரு பக்கா பொரி கடலை வாங்கறாரு?



 இது ஒரு பக்கா கதை னு ஜம்பமா சொல்லிக்கலாமே?


========================

18  கப்பல் ல ஒரு டூர் கம்பெனி செலவுல செய்யனுமா? எதுக்கு?



டீம் லீடர் ங்க எல்லாம் லீடர்"ஷிப்" குவாலிட்டியை வளர்த்திக்க வேணாமா?


==========================


19 மிஸ்! இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க்ளா?


எப்டி தெரியும்?


 5 வருசமா பஸ் ல வரேன்.இன்னைக்கு மட்டும் கன்னத்துல புதுசா ஒரு மச்சம் இருக்கே?மை  விட்டு வரைஞ்சுக்கிட்டீங்களா?


=================



20 டாக்டர்!தூத்துக்குடி பரோட்டா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?




 யோவ்! புரோட்டாவே உடம்புக்கு கெடுதல் தான், அதை எந்த ஊரில் போய் சாப்ட்டா என்ன?



=========================

பூமி கிரகத்தில் உள்ள மிக ஷை டைப் ஹீரோ யாரு? - சமந்தா அதிரடி

1. செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு.# ஆன்ட்ராய்டு போன் இலவசமா தரும் கட்சிக்கே என் ஓட்டு என எதிர்பார்ப்பான்


===================


2 நெஞ்சுவலியால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி # 7 தேமுதிக எம் எல் ஏ அதிமுக வுக்கு தாவப்போறதா வந்த செய்தியாலா?


==================



3  விஷால் ன் புதிய பட டைட்டில் = ஆம்பளை # இந்தப்படம் ஹிட் ஆகும்னு நான் நம்பலை


===================


4 சாமியாராக மாறினார் மாஜி ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஆர்.பெருமாள்! (கர்நாடகம் ) # சிறப்பு விருந்தினர் ஜிஞ்சிதா வா?


===================


5 சிகரெட் வரி 72 சதவீதம் உயர்வு!!! # முகேஷ் களுக்கு திண்டாட்டம்.முகேஷ் களின் பெற்றோருக்கு கொண்டாட்டம்


=================


6 வரி குறைப்பால் காலணிகள் விலை குறையும் # டீசல் பெட்ரோல் கேஸ் விலை உயர்வால் அனைவரும் நடராஜா சர்வீஸ் க்கு மாற உதவியமைக்கு நன்றி சர்க்கார்


==================


7 சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணமில்லை -ஜெட்லி # ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப்பண பட்டியலை வெளியிடுவோம்னு ஒரு மானஸ்தர் சொன்னாரே


==================


8  பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட்:் ஜெ # வை கோ வுக்கு அழைப்பா?,"மறுமலர்ச்சி" திமுக.னு மக்கள் நினைப்பாங்களே?


======================


9  ராஜஸ்தானில் MLA க்கள சட்டசபைக்கு லேட்டா வந்தா 500 ரூபா அபராதம் -செய்தி # FINE.லேட்டா வந்த 15 MLAக்களும் ஆன் த ஸ்பாட் லயே FINE கட்னது FINE


================ 


10 இளைய தளபதி விஜய் பூமி கிரகத்தில் உள்ள மிக ஷை டைப் ஹீரோ - சமந்தா # அட கிரகமே! அவர் வெட்கப்படும் அளவு என்ன சொன்னீங்க?



======================


11  ஓடுகாலி என்பது கெட்ட வார்த்தை அல்ல -சபாநாயகர் # அதே சமயத்தில் அது நல்ல வார்த்தையும் அல்ல.சொன்னவர் கட்டிக்காத்த இமேஜ் காலி


========================


12 சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் இல்லை-ஜெட்லி # அதுக்குள்ளே சுண்ணாம்பு தடவி வெள்ளை ஆக்கிட்டாங்களா?


=======================


13 டீசரை விட 100 மடங்கு பிரமாதமா ட்ரெய்லர்்.ட்ரெய்லரை விட 1000 மடங்கு படம் இருக்கும் -அஞ்சான் எடிட்டர் # உங்க சம்பளம் பேசுனதை விட 2 மடங்கு


====================


14 அஞ்சான் படத்த ரொம்ப எதிர்பார்த்து பேராசையோடு வராதீங்க.ஆசையோட வாங்க - லிங்குசாமி # அஜித் ன் ஆசை DVD எடுத்துட்டு வந்துடப்போறாங்க


======================


15 விரைவில் ட்விட்டர் ,FACEBOOK வருவேன் - சூர்யா # நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் சூர்யா வாங்க வாங்க.வெல்கம்


========================


16 இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு# ராமன் ஆண்டாலும் ,ராவணன் ஆண்டாலும் இலங்கைக்கு ஒரு பிரச்னை இல்லை


======================


17  சுரத்தில்லாமல் பேசுவதா: ஸ்டாலினை கண்டித்த கருணாநிதி # டாடி ஒரு டவுட்டு.நம்ம கட்சியே சுரத் இல்லாம தானே இருக்கு?




==============================


18  அலுவலகம் உள்பட அனைத்து இடங்களுக்கும் வேட்டி அணிந்து செல்ல வேண்டும்: கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் உ.சகாயம் # ஆமா, பேண்ட்டை விட வேட்டி சகாயம்


==========================


19 பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க புதிய சட்டம்: அரசுக்கு கோரிக்கை  # முதல்ல அடுக்கு மாடிக்கட்டிடத்தை எல்லாம் செக் பண்ணுங்க 


=====================



20 சென்னை -கல்லூரி மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் ஆர்யா #  ஆர்யா ஆண்களுடன் விளையாடுவது இதுவே முதல் முறை!



==============================

Friday, July 25, 2014

நீங்க கட்டிக்கப்போகும் பொண்ணு பேரு அங்கயற்கண்ணி என இருந்தா

1. கொல்லிமலை சித்தர் வாக்கு - வே இ ப பிளாப் ஆகும்.சதுரங்க வேட்டை ஹிட் ஆகும் ( எப்பவும் எல்லாரும் எதிர்பார்க்கும் படம் காலை வாரும்.)


=====================


2 நாளைய கணிதத்தை நேற்றே கணித்தவர் ராமானுஜன். நாளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை நேற்றே பெற்றவர் எங்க இளைய தளபதி விஜய் # ஈரோடு கத்தி ரசிகர் மன்றம்


====================


3 ஈரோடு விஜய் ரசிகர் மன்றக்காரங்க வந்து விஜய் பெருமை சொல்ற மாதிரி பேனர் வாசகம் கேட்டாங்க.பூடகமா புகழ்ந்து வ பு அணி ல எழுதிட்டேன்


=======================


4 விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட கம்மஞ்சோறு ,சட்டி(பானை)தயிர் ,தோட்டத்தில் விளைந்த சின்ன வெங்காயம் = தமிழனின் பாரம்பர்ய ஆரோக்ய உணவு


============================


5 கலைஞர் TV யி ல் செய்தி வாசிக்கும் சம்பங்கி கலர் சேலை சரோஜா.உங்க கழுத்தில் போட்டிருக்கும் 8 பவுன் நெக்லஸ்க்கு போன மாசம் ட்யூ ஏன் கட்டலை?



============================


6 ஏய் அமுல்பேபி.உன் புருசனை இது வரை வீட்டுக்காரனாத்தானே பாத்தே? சமையல்காரனா பாக்கலையே ? இப்போ பார்ப்பே! # வே இ ப ரீமிக்ஸ் பஞ்ச்


=====================



7 புட்டுக்கிட்ட ட்விட்டர் லவ் ஸ்டோரி 2014 # மிஸ்.ஐ லவ் யூ னு சொன்னீங்க.அதான் நிச்சயம் பண்ண வந்தேன். சாரி சார்.மென்ஷன் மாறிடுச்சு


=======================


8  ஜெர்மனி ஜெயிச்சா = ஜெர்மனியின் செந்தேன் மலரே! அர்ஜென்ட்டினா ஜெயிச்சா = தினக்கு தான் தின் தின்னா தீனா தீனா டீனா.


======================


9 பெண் ட்வீட்டர்கள் தங்கள் பிறந்த நாள் அன்று சொந்த டிபி வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் - கொல்லிமலை சித்தர் வாக்கு


======================


10 குரல் நல்லாருந்தா பிகர் அழகு கம்மியா வும் குரல் சரி இல்லைனா அழகு பிரமாதமா இருக்கும் எனவும் குயில் ,மயில் வெச்சு எடை போடக்கூடாது


==========================



11 உலகக்கோப்பை கால் பந்து போட்டி முடிந்து விட்டதால் இனி மோடி அரசு ஏதாவது விலை ஏற்றினா இணைய போராளிகளின் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரும்்


========================



12 ரோஜா வின் ராஜா யார் னு டீச்சர் கேட்கும்போது நேரு னு பதில் சொல்லாம ஆர் கே செல்வமணி னு பதில் சொல்ற கூட்டம்யா நாம


======================


13 நீங்க கட்டிக்கப்போகும் பொண்ணு பேரு அங்கயற்கண்ணி என இருந்தா காலம் பூரா நீங்க சந்தோஷமா ஹாய் கன்னி என கூப்பிட்டு மகிழ்ச்சிப்படுத்தலாம்


=======================


14 பெண்களின் வாய் ம்யூட் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் முகம் க்யூட் ஆக இருக்கிறதே! அடடே!


========================


15 புதிய பறவை - எங்கே நிம்மதி - 300 இசைக்கருவிகளுடன் பாகப்பிரிவினை -தாழையாம் பூ முடிச்சு - 3 இசைக்கருவிகளுடன் # MSV சாதனை


====================


16 காதல் என்பது தேர்தல் மாதிரி.தோத்தாலும் தொகுதிக்கு தொண்டு செஞ்சுட்டே இருக்கனும்.அப்போதான் வாய்ப்பு கிடைக்கும்



======================



17 அவசரப்பட்டு எந்த வேலை செய்தாலும் தோல்வி தான் கிடைக்கும் #,அர்ஜென்ட் டினா


==================

18 கன்னக்கதுப்பில் மங்கு தோன்றினால் CLEAR ALL சோப் போட்டு குளிக்கவும்.இரவில் படுக்கும் முன் SKIN SHINE க்ரீம் (15 கி =110 ரூ) தடவவும்

====================


19  வெற்றி பெற்றவனின் மூளையை விட தோல்வி அடைந்தவன் மூளை மிகக்கூர்மையாக வேலை செய்யும் என்பதால் தோல்வி அடைந்தவனிடம் ஜாக்கிரதையாக இரு


=====================


20 எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற சித்தாந்தத்தில் ஒரு அரேஞ்டு மேரேஜூம் ,விதியை மதியால் வெல்வேன் என ஒரு லவ் மேரேஜூம் செய்பவன் கில்லாடி அல்ல


========================