Showing posts with label ராஜேஷ்குமார்-ன் ரேகை (2025)- தமிழ் -மினி வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts
Showing posts with label ராஜேஷ்குமார்-ன் ரேகை (2025)- தமிழ் -மினி வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts

Tuesday, December 02, 2025

ராஜேஷ்குமார்-ன் ரேகை (2025)- தமிழ் -மினி வெப் சீரிஸ் விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் திரில்லர் )@ஜீ5



       


         1990களில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் எழுதிய உலகை விலை கேள் என்னும் நாவலைத்தழுவி இயக்குனர் எம் தினகரன் உருவாக்கி இருக்கும் மினி வெப் சீரிஸ் இது.     மொத்தம் 6 எபிசோடுகள்.23 நிமிடங்கள் ஒரு எபிசோடு.ஆக மொத்தம் இரண்டே கால் மணி நேரத்தில் பார்த்து விடலாம்.ஒரு தமிழ் சினிமா டைம் ட்யூரேசன் தான்   


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் குற்றாலத்தில் இருக்கும் காவல் நிலையத்தில்  சப் இன்ஸ்பெக்டர் ஆகவும் ,நாயகி ஹெட் கான்ஸ்டபிள் ஆகவும் பணி புரிகிறார்கள்.இருவரும் காதலர்கள்.


ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவனை நாயகன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரிவில் மாதம் ரூ 5000 சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்..

ஒரு நாள் அந்த மாணவன் பாத் ரூமில் குளிக்கும்போது மர்ம மரணம் அடைகிறான்.அந்தக்கேசை நாயகன் விசாரிக்கிறான்.

அதே நாளில் இன்னமும் மூன்று பேர் வெவ்வேறு இடஙகளில் விபத்தில் மரணம் அடைகிறார்கள்.நாயகனுக்கு இந்த நான்கு மரணஙகளும் கொலை ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.


நான்கு பேரின் கை ரேகையும் ஒரே மாதிரி இருப்பது இன்னமும் சந்தேகத்தைக்கிளப்புகிறது.


இந்தக்கேஸ் விசாரணை தான் மொத்தத்திரைக்கதையும்.


நாயகன் ஆக பாலஹாசன் நடித்திருக்கிறார்.ஒரு சாயலில் ஆட்டோகிராப் சேரன் போல இருக்கிறார்..பாடியை பிட் ஆக வைத்திருக்கிறார்.ஆக்சன் காட்சிகளில் இன்னமும் வேகம் காட்டி இருக்கலாம்.


நாயகி ஆக பவித் ரா ஜனனி அழகாக வந்து  போகிறார்.கண்கள் ஒரு ஹைக்கூ கவிதை.காதல் படங்களில் இன்னமுமே சோபிப்பார்.

போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர் ஆக வரும் வினோதினியை இதற்கு முன் காமெடியாகவே பார்த்து இதில் சீரியஸ் ரோலில் பார்க்க என்னவோ போல் இருக்கிறது.ஆனால் அவர் நடிப்பு அருமை.


சைடு வில்லி ஆக வரும் அஞ்சலி ராவ் கச்சிதம்.

மற்ற அனைவரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாகக்கையாண்டு இருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு மகெர்ந்திரா எம் ஹென்றி.ஓப்பனிங மர்டர் சீனில் அவரது டாப் ஆங்கிள் ஷாட் அருமை.நாயகியை அழகாகக்காட்டி இருக்கிறார்.

இசை ராஜ் பிரதாப்.பின்னணி இசை ஒரு க்ரைம் திரில்லர் படத்துக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து இசை அமைத்து இருக்கிறார்.


எடிட்டிஙக் துரை.இரண்டே கால் மணி நேரம் டைம் ட்யூரேசன்.


சபாஷ்  டைரக்டர்

1 மெயின் க்ரைம் கதையை விட சைடு ட்ராக் லவ் ஸ்டோரி இண்ட்ரஸ்ட் ஆக எடுத்த விதம்

2 நாயகியை ஹாஸ்பிடலில் திடீர் எனத்தாக்கும் அந்த லேடி பேஷண்ட்டின் ஆக்சன் சீக்வன்ஸ்

3  முதல் கொலை நடக்கும்போது டாப் ஆங்கிள் ஷாட்டில் கொலைகாரனைக்காட்டும் இடம்

4 பிரமோக்களில் ராஜேஷ் குமாருக்கு முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர்கள் ,ஸ்டில்கள் வெளியிட்டது.சமீபத்தில் எந்த ஒரு ரைட்டருக்கும் கிடைக்காத மரியாதை இது 


  ரசித்த  வசனங்கள் 


1 பொண்ணு பார்க்க அம்மா உங்களை வீட்டுக்கு வரச்சொன்னாங்க


அதான் தினம் உன்னை இங்கேயே பார்க்கிறேனே?


2. குற்றவாளிகளை எப்போதும் சமூகத்தின் எதிரியாகத்தான் பார்க்க வேண்டும்.போலீஸ் ஆபீசர் தன் சொந்த எதிரியாகப்பார்க்கக்கூடாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 காலேஜ் படிக்கிற பையன் நீ,ஹெல்மெட் போட்டுட்டு பைக் ஓட்ட மாட்டியா?எனக்கேட்கும் போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் பைக் ஓட்டும் சீன்களில் ஒரு முறை கூட ஹெல்மெட் போடவில்லை.

2 நாயகன் ,நாயகி இருவரும் காதலர்கள்.வீட்டில் தெரிந்து அனுமதியும் அளித்தாயிற்று.நாயகன் நாயகியை வீட்டில் தினம் ட்ராப் செய்கிறார்.ஆனால் நாயகியின் அக்கா கணவரைப்பார்த்ததே இல்லை என்பது எப்படி? போட்டோ கூட  காட்டி இருக்க மாட்டாரா ? நாயகி?


3 ஒட்டுக்கேட்கும் கருவி ஜீப்பில் இருப்பதை கண்டுபிடித்த பின்னும் நாயகன் ஜீப் அருகே நின்றே பேசுவது ஏன்?

4 பொதுவாக ஒரு டாக்டர் தலைல அடிபட்டிருக்கு என சொல்லும்போது தலையைக்கையால் தொட்டு சைகை காட்ட மாட்டார்.அமெச்சூர் நாடக நடிகன் தான் இடம் சுட்டிப்பொருள் விளக்குவான்

5  விசாரணைக்குப்போகும்போது சிவில் டிரஸ் ல (மப்டி))ல தான் போகனும் என சொல்லும் நாயகன் புத்திசாலித்தனம் அருமை.ஆனால் போலீஸ் ஜீப்பில் மப்டில ல போனா வருவது போலீஸ் எனத்தெரியாதா? இதுதான் உங்க டக்கா?

6 போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் கதை முழுக்க யாரையும் மதிப்பதில்லை.பெரியவர் ,லேடீஸ் என யார் இருந்தாலும் பப்ளிக்கில் ஒருமையில் தான் அழைக்கிறார்.

7 வில்லியைப்பிடித்த நாயகன் நாயகிக்கு என்ன ஆச்சு?அவளை நீ என்ன செஞ்சே? எனக்கேட்கும்போது வில்லி பதில் சொல்ல வில்லை.உடனே கான்ஸ்டபிளிடம் உடனே நீங்க ஜி ஹெச் போய் சந்தியாவுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க என்கிறார்.ஒரு போன் பண்ணி டாக்டரைக்கேட்டால் போதாதா?

8 சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஏழை இளைஞன் ஒரு கட்டத்தில் எந்தப்பின் புலமும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கேட்டு ஒரு கேங்கை மிரட்டத்துணிவது எப்படி?

9  கொல்லப்பட்ட பலரது கை விரல் ரேகை எப்படி ஒரே மாதிரி இருக்கிறது ?என்பதற்கான விடை தெரிய வரும்போது படிப்பறிவே இல்லாத ஒரு சாதா சி செண்ட்டர் ஆள் அந்த அளவு பிரில்லியண்ட் ஆக யோசிக்க முடியுமா? என்ற கேள்வியும் ,சில சந்தேகங்களும் எழுகின்றன.

10  மார்ஷியல் ஆர்ட் கற்காத ஒரு சாதா பெண் எந்த தைரியத்தில் போலீஸ் ஆபீசரை அட்டாக் செய்யத்துணிகிறாள்?

11 மெயின் கதைக்கு ம்,நாயகனின் காதல் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஸ்பீடு பிரேக்கர்

12 ஜி அசோகனின் க்ரைம் நாவலில் முதல் படைப்பாக வந்த நந்தினி 440 வோட்ஸ் நாவலை விட்டுவிட்டு எதற்காக இந்த நாவலைப்படமாக்க வேண்டும்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ராஜேஷ் குமார் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.1990 காலத்தில் வந்த நாவல் என்பதால் பழைய நெடி அடிக்கிறது.அவரது லேட்டஸ்ட் நாவலை எடுத்திருக்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5