Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டின் அடுத்த சி எம் கனவில் இருக்கும் கேப்டன் நடித்த ஏ வி எம் மின் மாநகரக்காவல் ல பாரதப்பிரதமரை வில்லன் கிட்டே இருந்து ஹீரோ காப்பாத்துவாரு,அமரர் திருப்பதிசாமி இயக்கிய நரசிம்மா படத்துல கேப்டன் தீவிரவாதியா  அவங்க கூட்டத்துல ஊடுருவி  டபுள் கேம் ஆடுவாரு.இந்த 2 கதையையும் மிக்ஸ் பண்ணுனா  டக்னு நம்மாளுங்க கண்டு பிடிச்சுடுவாங்க . அதனால  மசாலாப்பொரி ல சீரகம் சேர்த்தற மாதிரி THE TRAITOR ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி தாலிபான்கள் வாழ்க்கை பற்றி கொஞ்சம் சேர்த்தி  அர்னால்டு ஸ்வார்செனேகர் நடிச்ச TRUE LIES  படத்துல இருந்து கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவுனா கம கமக்கும் பர பரக்கும் ஆக்‌ஷன் மசாலா ரெடி .


4 படங்கள் பார்க்கும் செலவை ஒரே படத்துல  ஆடியன்ஸ் பார்த்துவிடுவதால் டிக்கெட் 4 மடங்கு போல .. 


ஓப்பனிங்க்ல நாட்டியக்கலைஞரா வரும் கமல் காட்டும் நளினங்கள், கண் அசைவுகள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் அட்டகாசம் . ஆல்ரெடி வரலாறு படத்துல அஜித் பண்ணின கேரக்டர்தான் என்றாலும்  கமல் டச் இன்னும் மெருகு .ஆணழகன் ல பிரசாந்த் ட்ரை   பண்ணுனார்,ஆனா இந்த அளவு நளினம் இல்லை. அந்தப்பாடலில் வரும் அட்டகாசமான 75 மார்க் ஃபிகர்கள் 6 பேரால்
   கூட காட்ட முடியாத நளினத்தை , பெண்ணின் பாவத்தை அநாயசமாய்க்கமல் காட்டி விடுகிறார்

முஸ்லீமாக  கமல் வரும் காட்சிகளில்  அசல் முஸ்லீமாகவே தெரிவது கமலின் தனிச்சிறப்பு.இந்த 2 டானிக் தவிர நடிகர் கமல் பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங்க்தான். அவரை சர்வசாதாரணமாக இயக்குநர் கமல் ஓவர் டேக்கி விடுகிறார். 



 வில்லனாக வரும் ராகுல்போஸ் என்னமா  முகத்துல குரோதத்தை தேக்கி வெச்சிருக்கார் . அற்புதம் . ஆஜானுபாவகமான தோற்றம் + உயரம் அவருக்கு பெரிய பிளஸ்.. 


ஹீரோயின் பூஜா குமார் .அல்வாத்துண்டு உதட்டழகி .கிறங்க வைக்கும் மேனி அழகை அவர் ரொம்ப இறங்கி வந்து காட்டினாலும் , உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டாமலேயே எழுப்பினாலும் , தமிழ் ரசிகர்கள் இந்த அளவு இறங்கிப்போன அழகை ரசிப்பார்களா என்பது சந்தேகமே. அவர் இனி வரும் படங்களில் மல்லிகா ஷெராவத் , ஏஞ்சலினா ஜூலி இவர்களின்  பேடு  வைக்கும் நாலெட்ஜை கற்றுக்கொண்டால் நல்லது .


ஊறுகாயாக வரும் ஆண்ட்ரியா  பெருசா ஏதும் நடிப்பை(யும் ) காட்டலை . அவருக்கு வாய்ப்பு கம்மி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. தாலிபான்கள் வாழ்க்கையில் நிகழும் அவலங்கள் , அகதி வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம் ,குழந்தைகள் கூட தீவிரவாதப்பயிற்சி எடுப்பது, டாக்டருக்குப்படிக்க விரும்பும் சிறுவன் ஆசை நிராகரிக்கப்படுவது என முழுக்க முழுக்க ஒரு மணி நேர வரலாற்றுப்பதிவு ஆக்கியது தமிழ் சினிமா வில்  ஒரு மைல் கல். ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டதும் தமிழில் இதுவே முதல் படம் 


2. கமல் விஸ்வரூபம் எடுக்கும் ஓப்பனிங்க் ஃபைட் காட்சி அட்டகாசம் . தியேட்டரில் கரகோஷம் அடங்கவே இல்லை . இதே போல் தமிழ் சினிமாவின் அட்டகாசமான ஃபைட் காட்சிகள்  கேப்டன் பிரபாகரனில் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட் , ரன்  படத்தில் மாதவன் ஓடிப்போய் ஷட்டரை இறக்கும் காட்சி , பாட்ஷா படத்தில் ரஜினி யின் இடைவேளை ஃபைட்  அரங்கு அதிரும் உதாரணங்கள் 



பூஜா குமார் அதே ஃபைட் சீனை நினைத்துப்பார்ப்பதும் அது ஸ்லோ மோஷனில் வருவதும் தமிழ் சினிமாவுக்கு முதல் முறை ) ஆல்ரெடி சிறையில் பூத்த சின்ன மலர் -ல் கேப்டன்  40 செகன்ட் அப்படி ஸ்பீடு , ஸ்லோ மோஷன் என டபுள் எண்ட்ரி ட்ரை பண்ணி இருந்தாலும் இது டியூரேஷன் , மேக்கிங்க் உலகத்தரம் .ஜாக்கிசானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் பட ஃபைட்டை நினைவு படுத்தியது .ஸ்டண்ட் மாஸ்டர் , பின்னணி இசை அமைப்பாளர் , கமலின் உழைப்பு மூன்றுக்கும் ஒரு  ராயல் சல்யூட்



3. கமலின் மனைவி கேரக்டர் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது போல் நடிப்பது கடந்த 20 வருட கமல் சினிமா வாழ்வில் இது முதல் முறை . இமேஜ் பார்க்காமல் நடித்தது குட்.. ( 20 வருடங்களுக்கு முன் அவர் நடிச்ச படங்கள்ல ஒரு வேளை இருந்திருக்கலாம் ) 


4. ஒரு மீடியமான ஆக்‌ஷன் படத்தை உலக  அளவில் கவனத்தை ஈர்த்த விதம் , 100 கோடி ரூபாய் செலவு பண்ணினாலும் கிடைக்காத நெகடிவ் பப்ளிசிட்டி , அப்படி தடை பண்ணும் அளவு என்னதான் படத்துல இருக்கு என சாமான்ய ரசிகனையும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய சாமார்த்தியம்  எல்லாம் கமலுக்கே போய்ச்சேரவேண்டிய கிரடிட்.. 

5. உனைக்காணா பாட்டில் கமல் காட்டும் அபிநயங்கள், பாடல் இசை எல்லாம் அற்புதம் . அதே போல் யார் என்று புரிகிறதா? பாட்டும் நல்ல மேட்சிங்க் 






இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்



1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 



2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 



3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 



4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .



6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 



8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 




9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 





11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 



13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 



14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 



15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 



19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?






 மனம் கவர்ந்த வசனங்கள்( காதுக்கு கேட்ட கொஞ்சமாச்சும் புரிஞ்ச வசனங்கள் )




1. நான் கெட்டவ இல்லை டாக்டர் 


இங்கே வர்ற பேஷண்ட்ஸ்  யாரும் கெட்டவங்க கிடையாது




2. பிடிக்காத விஷயத்தை எப்படி ரசிச்சு செய்யறீங்க?



 என் மனைவிக்கு சிக்கன்  ரொம்பப்பிடிக்கும் , எனக்கு என் மனைவியை ரொம்பப்பிடிக்கும் . மணவாட்டியே மணவாளன் பாக்கியம் இல்லையா? 



3. ஒபாமா ரேட்டிங்கை ஏத்திக்கறார்

 இது தப்பில்லையா? 




4.  அப்பா இல்லாத பசங்க சராசரி ஆளுங்களை விட  உஷாரா இருப்பாங்க உன்னை மாதிரி .. தமாசு 



அப்பா யாருன்னே தெரியாத  பசங்க எல்லாரையும் விட உஷாரா இருப்பாங்க , உன்னை மாதிரி , இதுவும் தமாசு 


5.  என்ன மொழி பேசுனாலும் என் மகன் போராளியாத்தான் வருவான், என்னை மாதிரி 


6. பொம்பள நீ முக்காடு போடு , உடம்பை மூடு , ஊரை விட்டு ஓடு 




7. நீங்க உங்கப்பாவை விட நல்லவரா? 


 நோ


 ஏன் அப்டி இல்லை?


8. கடவுள் தான் காப்பாத்தனும் 


 எந்தக்கடவுள் ?


9.  என் வாழ்க்கைல நான் நல்லதும் செஞ்சிருக்கேன், கெட்டதும் செஞ்சிருக்கேன் , ஐ ஆம் எ ஹீரோ அண்ட் ஐ ஆம் எ வில்லன் 



10. அல்லா நம்மை மன்னிக்கவே மாட்டார் 


 நம்மை? உங்களைன்னு சொல்லுங்க 



11.  என் கடவுளுக்கு 4 கை 


 அப்போ எப்படி சிலுவைல அறைவீங்க? 




சி.பி கமெண்ட் -  கமல் ரசிகர்கள் , போர் அல்லது  போராளிகள் பற்றிய படம் விரும்பிப்பார்ப்பவர்கள்  இந்த இரு தரப்பு மட்டுமே படம் பார்க்கலாம். மற்றபடி படத்தில் வன்முறைக்காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதால் பெண்கள் , மைனர்கள் , மாணவ மாணவிகள் பார்க்க முடியாது . 


ஆனந்த விகடன் ஆல்ரெடி 46 மார்க் போட்டுட்டாங்க. கம்மி. ஏழாம் அறிவுக்கே 48 கொடுத்தவங்க இதுக்கு  தாராளமா 50 மார்க் கொடுத்திருக்கலாம்



 ரேட்டிங்க் - 7 / 10 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 


 



டிஸ்கி - இன்னைக்கு சண்டே , படம் போட்டு 3 நாட்கள் தான் முடிஞ்சிருக்கு , ஆனா 30 % சீட் தான் ஃபுல் ஆகி இருக்கு . கமல் ன் விஸ்வரூபம் ரஜினி யின் எந்திரனை மட்டுமல்ல விஜய் ன் துப்பாக்கியை கூட தாண்ட முடியாது # தமிழ்நாட்டில்.ஆனால் வசூலில் ஆல் ஓவர் த வோர்ல்டு  100 கோடியை அள்ளிடும்

Friday, February 01, 2013

கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் .



 படத்தோட முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தான் . கலக்கிட்டாரு மனுஷன் . கடல் அலைகளை , வானம் , சூரியன் , நிலா , பீச் , துளசி க்ளியவேஜ் -னு அவர் ராஜாங்கம் தான் ஓரளவாவது தியேட்டர்ல உக்கார வைக்குது 


 அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ஆர் . நெஞ்சுக்குள்ளே, என்னை நீ எங்கே கூட்டிப்போறே? , ஏ லே கீச்சான்  , மகுடி  என 4 பாட்டு ஹிட்.  படமாக்கிய விதம் அழகு 


படத்தை டாமினேட் பண்ணுவது ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் தான் தாதா . ஆயுத  பூஜை பட கெட்டப்ல அசத்திட்டார். அவரோட கேரக்டரைசேஷன் இயக்குநர் ஹரி பட காப்பி . 
 அர்விந்த்சாமி  நல்ல பாதிரியாரா வர்றார். சின்ன சின்ன டயலாக் குடுத்து அவரையும், நம்மையும் காப்பாத்திட்டார்  இயக்குநர் . 
 ஹீரோவா கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்  சைடுல இருந்து பார்த்தா அவர் முகச்சாயல் தெரியுது, நடிக்க முயற்சி பண்ணி இருக்கார். ஒரு முதல் படம் ஹீரோ எந்த அளவு   பண்ணுனா போதுமோ அந்த அளவு பண்ணி இருக்கார் . 



 ஹீரோயின் துளசி. அவர் நல்ல கட்டையோ இல்லையோ அவர் குரல் செம கட்டை. முடியல . தமிழர்கள் குரல் வளத்தைப்பார்க்க மாட்டாங்க சாரி கண்டுக்க மாட்டாங்க என்பது உண்மைதான் , அதுக்காக இப்படியா? ராதா முகச்சாயல் கார்த்திகாவை விட துளசிக்கு ஜாஸ்தி .புருவம் அக்காவை விட தங்கச்சிக்கு சின்னது . ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ). அவர் சிரிக்கும்போது ஒரு மாதிரி உதட்டை சுளிக்கிறார். உதட்டை மட்டும் கவனிச்சவங்க கடுப்பாகிடுவாங்க .என்னதான் 15 வயசுல அபார வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் பாப்பா சினி ஃபீல்டுல வளர்றது கஷ்டம் தான் . 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கதைக்கு சம்பந்தமே இல்லாம மீனவன் , கடல் , ஏ லே கீச்சான் பாட்டு எல்லாம்  ரெடி பண்ணி பில்டப் கொடுத்து நீர்ப்பறவையில் சொல்லாத , விடு பட்ட ஏதோ ஒரு மீனவர் பிரச்சனையை , ஈழத்தமிழர் பிரச்சனையை இவர் சொல்லப்போறார்னு எதிர்பார்ப்பை ஏற்படுத்துனது . 



2.  போஸ்டர் டிசைனை நல்ல படம் மாதிரியே உருவாக்குனது




3. விஸ்வரூபம்  வராத சைக்கிள் கேப்ல படம் ரிலீஸ் பண்ணி 7 நாள் ஓட்ட வெச்சது ( அதாவது 7 நாள் ஓடிடும் ) 



4. தான் உண்டு தன் பிஸ்னெஸ் உண்டுனு தேமேன்னு கிடந்த அர்விந்த் சாமியை நல்ல கேரக்டர்னு ஏமாத்தி ரீ எண்ட்ரி கொடுத்து நடிக்க வெச்சது 



5. படத்தை பிரமோட் பண்றதுக்காக தேவையே இல்லாம லிப் லாக் கிஸ் சீனை   வலுக்கட்டாயமா புகுத்துனது .



6 கிறிஸ்டியன்ஸ் ஏதாவது பிரச்சனை பண்ணட்டும் , உலக ஃபேமஸ் ஆகிடலாம்னு வேணும்னே அவங்களை வம்புக்கு இழுத்தது . ( ஆனா அவங்க செம டேலண்ட், யாரும் கண்டுக்கலை , ஏன்னா பிரச்சனை பண்ணுனா பர பரப்பா ஓடும் , இப்போ வந்த சுவடே தெரியாமல் போகும் ) 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சார், அலைபாயுதே , மவுன ராகம், கீதாஞ்சலி ( இதயத்தை திருடாதே)  நிஜமாவே உங்க கதை தானா?  ஏன்னா நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்க எடுக்கப்போகும் காதல் கதை பட்டாசைக்கிளப்பப்போகுதுன்னு நினைச்சா தியேட்டருக்கு வந்த ஆடியன்சை பாதிலயே கிளப்பி விடுதே? 



2. அர்விந்த் சாமி பாதிரியார் , படிச்சவர் . பண்பானவர் , ஆனா அவர் செருப்பு போட்டுட்டு 2 சீன்ல ஷூ போட்டுட்டு 4 சீன்ல தேவாலயத்துக்குள் போய்ட்டு வந்துட்டு இருக்கார், படிப்பறிவே இல்லாத பொடியன்க வெறும் கால்ல போறாங்க



3.  நீங்க 30 வருஷம் சினி ஃபீல்டுல இருந்தீங்க என்பதற்காக 30 வருடங்களுக்கு முன் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை எல்லாம் இப்போ வெச்சா எப்டி? சார். 

ஒரு பொண்ணு நல்லவனை கை காட்டி இவன் என்னை ரேப்பிட்டான் ஐ மீன் கெடுத்துட்டான்  அப்டினு பொய்ப்புகார் குடுத்தா அந்தக்காலத்துல அய்யோ பாவம்னு ஜனங்க பார்ப்பாங்க . இப்போ பெஞ்ச் ரசிகன் கூட ஏம்பா அதான் ஏதோ டி என் ஏ டெஸ்ட் இருக்காமில்ல அதை பார்த்தா தெரிஞ்சுடுது அப்டினு சொல்றான் .
 திரைக்கதை அமைச்ச ஜாம்பவான்கள் 2  பேரு , அதுக்கு அசிஸ்டெண்ட்டா 18 பேரு ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யாரும் கவனிக்கலை? இந்த லாஜிக் ஓட்டையை உங்க பேசும் படம் சுஹாசினி மேடம் கூட சொல்லலையோ?  ( ஒரு வேளை அவரோட  வசன வாய்ப்பை நீங்க  ரைட்டருக்கு குடுத்துட்டதால நல்லா வேணும் , எப்டியோ போகட்டும்னு விட்டுடாரோ?



4. கடல் ஓரம் வாழும் ஒரு பெண் ணின் முகம் மினுமினுப்பாக ஆயில் போட்ட மாதிரி  இருக்கே, அது எபப்டி?



5. அப்பாவை ஊரே அடிச்சுப்போட்டுட்டு இருக்குன்னு ஒருத்தன் வந்து சொன்னா அப்படியே  பதறி ஹீரோ ஓட வேண்டாமா? அவர் என்னமோ ரஞ்சிதா கிட்டே விசாரனை பண்ற மாதிரி யார் அடிச்சா? எதுக்கு? ஏன்? அப்டினு 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு இருக்காரு?  ( டயலாக் எழுத டோட்டலா படத்துக்கு இத்தனைன்னு இனி பேசிடுங்க , ஐ திங்க்  ஒரு பக்கத்துக்கு ரூ 10,000 அப்டினு காண்ட்ராக்ட் போட்டுட்டீங்க போல , அண்ணன்  புகுந்து விளையாடிட்டார் ) உங்க படத்துலயே அதிக வசனம் கொண்ட படம் இதுதான் 


6. ஒரு யூத் பையன் சைக்கிளைத்தூக்குவது ரொம்ப சாதாரண விஷயம் . இதுல ஹீரோ சைக்கிளைத்தூக்குவதை ஓவர் பில்டப் கொடுத்து க்ளோசப்ல பை செப்ஸ் எல்லாம் நரம்பு முறுக்கேறுவதைக்காட்டுவது ரொம்ப ஓவர். அவர் என்ன நமீதாவையா தூக்கறார்?




7.  நண்பன் படத்துல ஷங்கர் சார்  பிரசவக்காட்சி ஒண்ணை க்ளைமாக்ஸ்ல வெச்சார்னா கதைக்கு அது தேவையா இருந்தது , அப்டி வெச்சா படம் ஹிட் ஆகிடும்னு யாரோ சொன்னாங்கன்னு கேட்டு கதைக்கு சம்பந்தமே இல்லாம பிரசவ காட்சி . அதுக்கு கேமரா ஆங்கிள் உஷ் அப்பா முடியல . மலையாளப்படம் மாதிரி .. 




8. தேவாலயத்தில்  சின்னப்பையன் உச்சா போகும் காட்சி ,  வசனத்தில் மிக மலிவான  கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் உங்க தரத்தை குறைக்குது. ப்ளீஸ் டோண்ட் ஃபர்க்ட் யூ ஆர் ஏ செண்ட்டர் டைரக்டர் , இப்படி சி செண்ட்டர் மாதிரி இறங்கி  அடிக்கக்கூடாது . ( கேட்டா அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு ஒரு நொணை நாட்டியம் ( சால்ஜாப்பு) பேசுவீங்க )

9. உங்களுக்கு காமெடி அவ்வளவா வராதுன்னு எல்லாருக்கும் தெரியும் , அதுக்காக இப்படியா? ரொம்ப ட்ரை ( DRY)


10. மன வளர்ச்சி குறைந்த துளசியை  மருத்துவப்பணி பார்க்க விடுவது எப்படி? சும்மா காயத்துக்கு மருந்து போடுவது என்றால் கூட பரவாயில்லை,பிரசவம் பார்க்கறார், விட்டா  பை பாஸ் ஆபரேஷன் பண்ணிட்வார் போல


11. அர்விந்தசாமி பாதிரியார் கேரக்டர்,  அவர் எப்படி டபால்னு அர்ஜூன் உடம்புல பாய்ஞ்ச புல்லட்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார்? உங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாருமே டாக்டர்களா?


12. ட்ரெய்லர்ல , போஸ்டர்ல , ஸ்டில்ஸ்ல துளசிக்கு  லிப் லாக் கிஸ் சீன் வெச்சீங்க , ஆனா படத்துல அது இல்லையே? சென்சார்லயே விட்ட சீனை எதுக்கு தூக்குனீங்க? இது சீட்டிங்க் இல்லையா? ஒரு வேளை  10 நாட்கள் கழிச்சு இணைக்கப்பட்ட லிப் கிஸ் காட்சியுடன்னு ஓட்ட வைக்க தந்திரமா?







மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்மூருக்கு புது சாமியார் வந்துருகார்ல.. எம்ஜிஆரு போலவே இருக்கீரே .
2. சந்தோசமா இருக்க கூடாதுன்னு எந்த பைபிள்லயும் சொல்லல, ஏன் உம்முன்னு இருக்கீங்க?
3.  எனக்கு பைபிளும் தெரியும், பசியும் தெரியும்
 எனக்கு  பைபிள் மட்டும் தான் தெரியும் 
4.பாவத்துல நீ தலை குப்புற விழனும், அதை நான் பார்க்கனும் 
5. பாவ மன்னிப்புக்கு 10 ரூபா, ஜெபத்துக்கு 15 ரூபா , ஆனா லேடீஸ் க்கு எல்லாம் ஃபிரீ ஹி ஹி 
6. திஸ் ஈஸ் சாமியார், சாமியார் ஈஸ் குட் 
 யோவ் அது பாதிரியார்யா 
7. எல்லாருக்கும் அம்மா சொல்லித்தான் அப்பாவைத்தெரியும்.
8.  அஞ்சு ரூபா குடுத்து வாரியா? ( வர்றியா? )னு கூப்பிட்டவங்க மத்தில என் கூட வாழ்றியா? வா! கட்டிக்கறேன்ன்னு சொல்ற ஆளை இப்போத்த்தான் பார்க்கறேன்  


9. மனசுக்குள்ளே சூரியன் உதிப்பது போல இருக்கு  ( நீ என்ன டி எம் கேவா?/ )



10. பாதிரியார் யாரோ ஒரு பொண்ணுகூட ஓடுவது மாதிரி தெரியுதே?


 இன்னும் 2 கிளாஸ் சரக்கு அடிச்சுப்பாரும் . 2 பேரோட ஓடிப்போற மாதிரி தெரியும் 



11. சுடறதா இருந்தா எப்பவோ  சுட்டிருப்பே , இப்படி பேசிட்டு இருக்க மாட்டே 



12. நிம்மதியா இருக்கறதை விட உஷாரா  இருக்கறதை நான் விரும்பறேன்


13.  அவ ஏன் அப்படி மன வளர்ச்சி கம்மியா இருக்கான்னா ஆழ்மனசு செய்யும் தந்திரம் , அவ  வளர்றதை விரும்பலை , எதையோ பார்த்து பயந்திருக்கலாம் 


14,.  இப்போதான் உன்னைப்பத்தி நினைச்சேன் 


 என்ன?னு ?



 தெரில , மறந்துட்டேன்



15.  நீ என்னை கை விட்டுட்டியா? 


 நோ , கை நழுவிடுச்சு 


16. நன்மைக்கு இந்த உலகத்துல இடம் இல்லை , எனக்கே தெரியாம என் வாழ்க்கைல ஒரு நன்மை நடந்தா அதை அழிச்சுடுவேன் . அது என் மகளா இருந்தாலும் சரி



17. மனுஷனுக்கு பாவம் செய்யச்சொல்லித்தரத்தேவை இல்லை , நடக்கற மாதிரி அது தானா வந்துடும் 


18.  நான் நிறைய பாவம் பண்ணி இருக்கேன். பாவம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? 


 ம்ஹூம் 


-------

 சரி சரி , இனி பண்ணாதே, எல்லாம் சரியாப்போச்சு 


( ஆடியன்ஸ் - பாவம் எது தெரியுமா? இந்தப்படத்துக்கு நாங்க வந்தது )










எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 (  ஆக்சுவலா 37 தான் தரனும் , ஆனா விகடன்ல எப்பவும் ஷங்கர், கமல், மணி 3 பேருக்கும் ஷாஃப்ட் கார்னர் உண்டு  

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார் 

 ரேட்டிங்க் -  2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 



 சி பி கமெண்ட் -  மணிரத்னம் சாரின் தீவுர ரசிகர்கள் இடைவேளை வரை பார்த்துட்டு ஓடிவிடவும் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் எஃப் எம்மில் பாட்டுக்கேட்டுக்கொள்ளவும் ,பொது மக்கள்  டி வி ல எப்போ போடுவாங்கன்னு வெயிட் பண்ணவும். தமிழ்ப்புத்தாண்டுக்கு போட்டுடுவாங்க  .மணிரத்னத்தின் சாதனை அவரோட அட்டர் ஃபிளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு

diSki -

டேவிட் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/02/blog-post_5252.html










Saturday, November 10, 2012

Barfi! (2012) - சினிமா விமர்சனம்

http://img.hindilinks4u.net/2012/09/Barfi-20121.jpg

என் மன வானில் ஹீரோ போல், மொழி ஹீரோயின் போல் இந்தப்பட ஹீரோவும் வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி . காதல் மன்னன் அஜித் போல் இவர் ஆல்ரெடி மேரேஜ் நிச்சயம் ஆன  இலியானாவுக்கு ரூட் விடறார்.அவர் நாட் ஓக்கேன்னு சொன்னாலும் மனசளவுல லவ் இருக்கு. வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்பதால் தயக்கம், இருந்தாலும் சைக்கிள் கேப்ல  சத்யா கமல் அமலா முத்தம் மாதிரி ஒரு லிப் கிஸ் வரை போயிடுது.


இலியானாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையுடன் மேரேஜ் ஆகிடுது. ஹீரோ தேவதாஸ் எல்லாம் ஆகலை. அவரோட அப்பாவுக்கு திடீர்னு உடல் நலக்குறைவு. ஆபரேஷனுக்கு பணம் வேணும். அப்பா கார் டிரைவரா வேலை செய்யும் முதலாளியிடம் செலவுக்கு பணம் கேட்டா கர்நாடகா நமக்கு தண்ணீர் விஷயத்துல என்ன பண்ணுச்சோ அதை பண்றாரு.கடுப்பான ஹீரோ தன் அப்பாவின் முதலாளியின் மகளை  குணா கமல் மாதிரி கிட்நாப் பண்ணிடறாரு .


 இவ்ளவ் பணம் குடுத்தாத்தான் மகளை ஒப்படைப்பேன்னு மிரட்டி  அந்தப்பணத்தை வாங்கி ஆபரேஷன் பண்ண வைக்கிறாரு. முதலாளியின் மகள் பிரியங்கா சோப்ரா  மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி மனநலக்குறைவு  உள்ளவர். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். இருவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிடுது.


பிரியங்காவின் அப்பா ஒரு டிராமா போட்டு  ஹீரோவை போலீஸ்ல சிக்க வைக்கிறார். பழைய காதலி இலியானா தாலி கட்டுன புருஷனை அம்போன்னு விட்டுட்டு ஹீரோ கூட இருந்து அவர் காதலை சேர்த்து வைக்க ட்ரை பண்றாரு. என்ன ஆச்சு என்பதே மிச்ச மீதிக்கதை.. 

 படத்தோட இயக்குநர் பல உலகப்படங்கள் பார்த்தவர் போல். செய் நேர்த்தி, தொழில் நுட்பக்கலைஞர்களிடம் வேலை வாங்கிய முறை எல்லாம் பிரமாதம். சீன் பை சீன் ஆல்ரெடி வந்த பல படங்களின் கலவையா இருந்தாலும் சாதா ரசிகனுக்கு சிந்திக்க வாய்ப்பே கொடுக்காத திரைக்கதை அமைப்பு , காட்சிகளின் விவரிப்பு அழகு.


ஹீரோ  ரன்பீர் கபூர் சிம்மா சொல்லக்கூடாது, செம நடிப்பு. பிறவிக்கலைஞனும், தன் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான  ரசனைக்கு தீனி போடும்  கேரக்டர்  தேர்வு செய்யும் ஜீவ கலைஞனுமாகிய   கமல் செய்யமுடிந்த கேரக்டரை சர்வசாதாரணமாக அநாயசமாக ரன்பீர் செஞ்சுடறார். படம் முழுக்க அவருக்கு வசனங்கள் இல்லை, ஆனாலும் அந்த குறையே  தெரியாத வண்ணம் தன்  பக்குவமான நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். 


ஹீரோயின் இலியானா ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். அநேகமாக இவர் இடுப்பை காட்டாமல் நடிப்பைக்காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ( ஒரே ஒரு சீன்ல பேக்ல இருந்து லைட்டா இடுப்பை காட்டறார் ) குடும்பப்பாங்கான தோற்றம் அபாரம். நிச்சயிக்கப்பட்ட பெண் காட்டும் தடுமாற்றம், காதல்  , வெட்கம் எல்லாம் வெளிப்படுத்தும் அழகிய கேரக்டர். வெல்டன் 


  பிரியங்கா சோப்ராக்கு லைஃப் டைம் கேரக்டர். மூன்றாம் பிறையில் ஸ்ரீ தேவிக்கு குழந்தை மாதிரி நடிச்சா போதும், ஆனா இதுல அதை விட சவால் நிறைந்த கேரக்டர்.  சாதா ஜனங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத உயர் குடி மக்கள் மட்டுமே அறிந்த நோய் தாக்கிய கேரக்டரை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 


அது போக ஆசிஸ் வித்யார்த்தி மிடுக்கான நடிப்பு, போலீஸ் ஆஃபீசராக வரும் தொந்தி கேரக்டர், அப்பா கேரக்டர் எல்லாரும் அளவான நடிப்பு


http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/07-2012/first-look-ranbir/barfi23.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இது 1972 மற்றும் 1978 ஆகிய கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் ஒளிபப்திவு , ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஒர்க். அதி அற்புதமான பங்களிப்பு.கொல்கத்தா , டார்ஜிலிங்கில் கேமரா புகுந்து விளையாடுகிறது


2. ஹீரோ இலியானாவுக்கு பிரபோஸ் பண்ணியதும் தான் ஆல்ரெடி எங்கேஜ்டு என்று இலியானா சொன்னதும் டக் என இலியானா தோழிக்கு ரூட் விடும் குறும்புத்தனம் , மிக இய்ல்பாக நடக்கும் அந்த லிப் டூ லிப் கிஸ் சீன் அந்த சீனில் லைட்டிங்க்


3. ஹீரோ தன் ஷூவை கழட்டி அதில் டாட்டா காட்டுவது. பிரியங்காவுக்கு தன் இருப்பிடம் , வருகை அறிவிக்க தன் ஷூவை மேலே எறிந்து எறிந்து சோர்வது 


4. இலியானாவின் விரலில் மாட்டப்பட நிச்சய மோதிரத்தை  கழட்டி வீசி , அருகம்புல்லால் மோதிர முடிச்சு இடுவது கவிதையான சீன் 


5. பிரியங்கா சோப்ரா கோசாப்பழம் ( தர்பூசணி) சாப்பிடும்போது மேட்சுக்கு மேட்சாக ரத்த சிவப்பில் கோட் அணிந்து இருப்பது கொள்ளை அழகு 


6. இடைவேளை கார்டு போடும்போது பிரியங்கா தூக்கக்கலக்கத்தில் தன் விரலை ஹீரோ கையோடு இணைப்பது , பின் ஹீரோ எழுந்து அவர் தூக்கம் கலக்காமல் தன் விரலை விடுத்து அவர் விரலுடன் கோர்ப்பது 


7. ஹீரோவுக்கு காது கேட்காது என்பதால் காலிங்க் பெல்லுக்கு பதிலாக  செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு செம 


8. பிரியங்கா கயிற்றுப்பாலத்தை கடக்கையில் ஹீரோ குறும்பாக அதை ஆட்டுவது, பின் ஒரு காட்சியில் இருவரும் நாசியில் நாசி வைத்து கொஞ்சுவது ரொமாண்டிக் சீன்ஸ் 


9. ஹீரோ  ஆளில்லா வயல்காட்டில் நெம்பர் ஒன் போவதும் திடீர் என ஒரு கூட்டம் அவர் முன் தோன்றுவதும் பின் சேம் டிட்டோ போலீசுக்கும்  நடப்பதும் ரகளையான காமெடி 


10. ஹீரோயின் இலியானாவின் அம்மா கேரக்டர் நடிப்பும் , அவர் தரும் ஆதரவும் பேச்சும் அழகு


http://blog.bookmyshow.com/wp-content/uploads/image/BMS%20Reviews/BARFI!/barfi-2.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தின் முதல் காட்சியான போலீஸ் , ஹீரோ சேசிங்க் சீன் ஆல்ரெடி ஜாக்கிசானின் பிராஜக்ட் ஏ படத்தில், ஆர் பாண்டிய ராஜனின் நெத்தி அடி, ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்  படத்தில் வந்ததுதான், புதுசா யோசிச்சு இருக்கலாம்.அதேபோல் பல கட்சிகள் சார்லி சாப்ளின் படங்கள் சாயல்


2. இந்தப்படத்தின் மார்க்கெட்டிங்க் மகா மோசம். போஸ்டர் டிசைன் எல்லாம் ஹீரோ சைக்கிளில் நிற்கும் காமெடிப்படம் போல் தோற்றம். இது அழகிய கவிதை மாதிரி லவ் ஸ்டோரி, போஸ்டர் டிசைன் மணிரத்னத்தின் கீதாஞ்சலி, மவுன ராகம் போல் அமைந்திருந்தால் செமயா இருந்திருக்கும். படத்துக்கான ஓப்பனிங்க் கிடைக்காததுக்கு காரணம் போஸ்டர் தான் ( பி & சி செண்ட்டரில் படம் சரியா போகலை ) 


3. ஹீரோ அடிக்கடி ரயிலில் ஜன்னலில் பிடி போட்டு ரயிலுடன் பயணித்து விளக்குக்க்ம்பத்தில் மோதி கீழே விழறார், கம்பமும் விழுது. அது எப்படி? சைக்கிள் தான் டேமேஜ் ஆகும். இரும்பு கம்பம் சாதா லைட் வெயிட் லேடீஸ் சைக்கிள் மோதி கீழே விழுமா?


4. அடிக்கடி ஹீரோ கதவில் மோதி இடிச்சுக்குவது ஆல்ரெடி சாகர் ஹிந்திப்படம் முதல் பல படங்களில் கமல் செஞ்சதுதான், சிப்பிக்குள் முத்து , மூன்றாம் பிறை , பாச வலை போன்ற கமல் படங்கள் தாக்கம் ஆங்காங்கே 


5. இலியானா பாரம்பரியம் மிக்க குடும்பப்பெண்ணாக நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து வர்றார், ஆனால் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. அது எப்படி? அவர் அம்மா கேரக்டர் நெற்றி வகிடு , நெற்றியில் குங்குமம் வெச்சு வர்றாரே? அதே போல் இலியானாவையும் நடிக்க வைக்கலையே? 


6. திரைக்கதை அமைப்பு சாதா ஜனங்களுக்கு புரியாது. நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே. தேவையே இல்லை. நேரடியா ஒரே நேர் கோட்டில் கதை சொல்லி இருக்கலாம் 


7. ஒரு பென்ச் ரசிகனின் கேள்வி. படத்தில் ஹீரோவுக்கும் ப், பிரியங்காவுக்கும் மேரேஜ் ஆகுது. பல வருடங்கள் ஒண்ணா வாழறாங்க, ஆனா குழந்தை இல்லை, சோ அவங்களூக்கு இடையே மேட்டர் நடந்ததா? இல்லையா? என்பதை நாசூக்காகவாவது சொல்லி இருக்க வேண்டாமா? 


8. இலியானா தன் புருஷனை அம்போன்னு விட்டுட்டு வந்துடறார், புருஷன் மிக்சர் பார்ட்டியா? எந்த ஸ்டெப்பும் எடுக்கலையா? அவர் காலம் முழுக்க ஹீரோவுக்கும், பிரியங்காவுக்கும் சேவை செஞ்சாரா? ஹீரோ கூட மேட்டர் பண்ணாரா? என்ற  கேள்வுக்கும் தெளிவான விடை இல்லை . (  நெம்பர் 7 , 8 கேள்வி சந்தேகங்கள் எழுப்பிய பெஞ்ச் ரசிகன் நான் தான் ஹி ஹி )


9.ஒரு  சீன்ல சன்பாத் எடுக்கும் ஆண் நிர்வாணமா படுத்திருக்கார், அவர் இடுப்பருகே பேப்பர், அந்த நியூஸ்பேப்பரில் ஹீரோவை போலீஸ் தேடும் விளம்பரம், ஹீரோ அந்த பேப்பரை பார்க்க ,, அந்த ஆள் ஹீரோவை ஹோமோ என நினைக்க மேற்படி காமெடி ஹாலிவுட்டுக்கு ஓக்கே, ஆனா இங்கெ? அதே சீனை ஒரு பெண்ணை வைத்து எடுத்திருந்தா கிளாமருக்கு கிளாமர், கிளு கிளுப்புக்கு  கிளு கிளுப்பு


10. மன நலம் குன்றிய பிரியங்கா ஒரு சினில்  நெம்பர் டூ போக  சல்வாரை உயர்த்தி நிக்கரை கழட்டுன்னு ஹீரோ கிட்டே சொல்றார். அந்த சீனில் கேமரா ஹீரோயினுக்கு பேக்கில் வைக்கப்படிருக்கனும், கண்ணியத்துக்கு கண்ணியம். எதிர்பார்ப்பான கிளு கிளுப்புக்கு கிளுகிளுப்பு . கேமரா ஹீரோயினுக்கு முன்னால பட்டவர்த்தனமா வெச்சிருக்க வேணாம்.


http://zns.india.com/upload/2012/9/23/priyanka-barfi.jpg


சி.பி கமெண்ட் - இது வித்தியாசமான அனுபவம் தரும் நல்ல காதல் கதைதான். ஆனால் ஆஸ்காருக்கு அனுப்பி பிரமாதப்படுத்தும் அளவு ஒரிஜினல் சரக்கு இல்லை. அதாவது வழக்கு எண்  18 /9 படம்  20 கிமீ வேகத்தில் ஓடும் இளைஞன் எனில் பர்ஃபி 30 கிமீ வேகத்தில் ஊக்க மருந்து சாப்பிட்டு ஓடும் இளைஞன். குவாலிட்டியில் ஒரு படி கீழே இருந்தாலும் வழக்கு எண்  18 /9  தான் நல்ல படம். மசாலா ரசிகர்கள், மாமூல் ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு படம் பிடிக்காது. ஏ செண்ட்டரில் மட்டுமே ஓடும். ஈரோட்டில் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகி 2 நாள் தான் ஓடுச்சு. நான் பார்க்கும்போது தியேட்டரில் 12 பேர்தான்.

http://content.internetvideoarchive.com/content/photos/7918/702611_131.jpg

Friday, November 09, 2012

Cameraman Gangatho Rambabu - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDEj5MBh4HouCKP-SSHXdXpYK1nRv-tWCjzFOiLi0i__9z1zYBIsCW77VTQpp6gJd4Qqqqv429u6Is1BICRHVNPmhgGu_fge0CcYe-pwBcqMCPUYb368cz8bc8J_v9u7xh6YrRN6mad4/s1600/Cameraman-Gangatho-Rambabu-New-Posters-1048.jpgஹீரோ ஒரு மெக்கானிக், ஆனா ஒரு சீன்ல கூட அவர் அந்த வேலையை செய்யவே இல்லை. அநியாயம் எங்கே அஜித்தினாலும் ( நடந்தாலும்) அதை தட்டி கேட்பார்.யாருக்காகவும், எதுக்காகவும் அஞ்சாதவர். ஹீரோயின் டி வி மீடியாவில் கேமராவிமன். ஹீரோவை பார்த்து அவரையும் மீடியாவுல சேர்த்து விட்டுடறார். 


 இப்போ ஹீரோ சேனல் ரிப்போர்ட்டர்.வில்லன் கலைஞர் மாதிரி கெட்டப்ல எதிர்க்கட்சித்தலைவர். அவருக்கு அழகிரி மாதிரி ஒரு பையன் . நல்ல வேளை ஸ்டாலின் மாதிரி இன்னொரு பையனை காட்டலை. இவங்க 2 பேர் பண்ற அநியாயங்களை ஹீரோ சேனல் மூலம் வெட்ட வெளிச்சம் ஆக்கறார். ஒரு நாளுக்கு 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தும் இப்படி நம்ம ஊழலை எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கறானேன்னு வில்லன் க்ரூப்புக்கு கோபம். இரு தரப்புக்கும் ஏற்படும் மோதலை கிட்டத்தட்ட ஷங்கரின் முதல்வன் போல் பரபரப்பா கொண்டு போக முயற்சி ( அண்டர் லைன் முயற்சி மட்டும் )  பண்ணி இருக்காங்க,.. 


 பவன் கல்யாண்க்கு என்ன நினைப்புன்னா எப்படியாவது அரசியல்ல புகுந்துடனும் , பெரிய ஆள் ஆகிடனும்னு.. அதுக்கு தக்க படி கதை.. இந்த மாதிரி கதை எல்லாம் ரஜினி மாதிரி பவர் ஃபுல் ஹீரோ அல்லது 100 படங்கள் ஹீரோவா நடிச்ச அனுபவம் மிக்க ஆட்கள் பண்ண வேண்டிய கதை.. ஆனாலும் சமாளிக்கறார்.. ஆந்திரா கேப்டனா மாறி ஏ 4 ஷீட்ல பக்கம் பக்கமா வசனம் பேசறார். 2 ஜோடி கூட டூயட், குத்தாட்டம் எல்லாம் போடறார். நம்ம ஊர் அஜித், விஜய் மாதிரி ஃபைட் , டான்ஸ் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தறார். 


 ஹீரோயின் லெமனா அவதாரம் எடுத்திருக்கும் தமனா.எலுமிச்சை கலர் தேகம். ஆனா வாய் தான் என்னமோ மாதிரி இருக்கும், தொட்டு விடத்தூண்டும் இடை அழகி. கேமராமேனுக்கு என்ன கோபமோ இவரை மிக மோசமா காட்டி இருக்காரு. ஹேர் ஸ்டைல் மகா மட்டம். அடிக்கடி க்ளோசப் ல உதட்டை சுளிச்சு வசனம் பேசும்பேது ஓங்கி நாலு அப்பு அப்பலாம் போல உள்ளது . டூயட் காட்சி 2 தவிர வேறு ஒரு சீனில் கூட இவரை பார்த்தால் கிக் வரவில்லை. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdWAVEng8JRid8txExPMpso4NRIwiPEMyjtsyIKiUDAyoOEHNsetlvzXOUoZwE19UUhtmYsnh9ioOHf0w6UhdT34_zQZI73kfGdo9Pr_qVCN5C5Hro6aSGIPr1OXvJfIMiRwMCB8yCdPQ/s1600/gabriela-bertante-hot-stills-7.jpg
 2 வது ஹீரோயின் Gabriela Bertante. நாசூக்கா இருப்பது எப்படின்னு 365 நாள் டியூசன் வெச்சு சொல்லிக்குடுத்தாலும் கத்துக்க முடியாத விளைஞ்ச கட்டை.. பார்வையே சரி இல்லை.. டைரக்டர் உக்காருன்னா பாப்பா படுத்துக்கும் போல.. ஆண்டவா.. என்னை ஏன் இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் பார்க்க வைக்கறே?அய்யோ ராமா!!  இவர் போட்டு வரும் லோ லோ லோ வெரி லோ கட் ஜாக்கெட்கள்  பிரம்மாச்சாரிகளை வெறி ஏற்றும்.செம டப்பாங்குத்து பாட்டு இருக்கு இவருக்கு 


வில்லன்  கோட்டா சீனிவாச ராவ். இயக்குநருக்கு செம நக்கல், அச்சு அசல் கலைஞர் மாதிரியே மேக்கப், கெடப், கண்னாடி, ஹேர்ஸ்டைல் எல்லாம். அவர் நீலிக்கண்ணீர் வடிக்கும்போது தமிழ் இனத்தலைவரையே நேரில் பார்த்தது போல் இருக்கு. 


 அவர் பையனாக வரும் பிரகாஷ் ராஜ்க்கு அப்படியே அழகிரி பாத்திரம். பட்டாசு. அவர் நடிப்பு பிரமாதம் என்றாலும் நமக்கு வெரைட்டி இல்லாததால் சலிக்கிறது. ஒரே மாதிரி நடிப்பை பல படங்கள்ல காட்டிட்டாரு..


காமெடிக்கு பிரம்மானந்தம். இன்னும் நல்லா வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அதிக காட்சிகள் இல்லை.. வந்த வரை ஓக்கே. 

 நாசர் அமைதியா வந்து போறார். சொல்லிக்கொள்ளும்படி பெரிசா இல்லை..


http://www.tupaki.com//twdata/2012/0912/news/Cameraman-Gangatho-Rambabu-New-Photos-14.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கரண்ட் பாலிடிக்ஸ் ,மேட்டரை சாமார்த்தியமாக திரைக்கதையில் நுழைத்தது. கலைஞர் , அழகிரி, தெலுங்கானா, மீடியாக்கள் டி ஆர் பி ரேட்டிங்க் ஏற்றிக்கொள்ள செய்யும்  தகிடு தித்தங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்குவது 


2. நடைப்பயணம் செல்லும் பிரகாஷ் ராஜை ஹீரோ மடக்கி கேள்வி கேட்டு தரமசங்கடப்படுத்துவது  ( வை கோ வை தாக்கல்? ) 


3. அபாரமான வசனங்கள்,  அற்புதமான எடிட்டிங், க்ளைமாக்ஸ் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஒர்க்


4.  கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம 2 ஹீரோயினையும் காட்டு காட்டுன்னு காட்ட வெச்சது


5. பிளாக் டிக்கெட் விற் பவர்கள் ஆன் லைன் புக்கிங்க்க்கால் எப்படி பாதிக்கப்படறாங்க? என பிரமானந்தம் விளக்கும் காமெடி காட்சி


http://powerofandhra.com/wp-content/gallery/pawan-kalyan-movie-cameraman-ganga-tho-rambabu-latest-stills/pawan-kalyan-movie-cameraman-ganga-tho-rambabu-latest-stills-2.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. மீடியாவில் ஒர்க் பண்ணும் ஹீரோவுக்கு சி எம்  லேண்ட் லைன்ல ஃபோன் பண்றார். ஏன்? அவர் செல்லுக்கே கூப்பிடலாமே? அட்லீஸ்ட் இண்டர் காம் மூலம் கனெக்‌ஷன் குடுத்திருக்கலாம். என்னமோ கதை 1980ல நடப்பது போல் ஃபோன் வந்திருக்கு என்றதும் ஹீரோ தன் கேபினில் இருந்து 1 பர்லாங் தூரம் ந்டந்து எடிட்டர் ரூம்க்குப்போய் ஃபோன் அட்டெண்ட் பண்றார்


2. ஹீரோ வேல்யூ காட்ட பிரகாஷ் ராஜை தர தர என நடு ரோட்டில் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரி இழுத்துட்டு வர்ற சீன் எல்லாம் ஓவரோ ஓவர், இவர் என்ன போலீஸா? பிரகாஷ் ராஜ் கேரக்டர் ஏன் ஒரு கேல்வி கூட கேட்கலை? தம்பி நீ யாரு?  என்னை இழுக்க? என கேட்டிருக்கனும். அட்லீஸ்ட் பிரகாஷ் ராஜ் டைரக்டர் கிட்டயாவது இது பற்றி ஆட்சேபம் தெரிவிச்சிருக்கனும் 


3. மாசம் 35,000 சம்பளம் வாங்கும் மீடியாவிமன் தமனா அடிக்கடி அழும்போது சகிக்கலை,. அட்லீஸ்ட் அஞ்சு ரூபாய்க்கு கர்ச்சீஃப் கூட வெச்சிருக்க மாட்டாரா? கஷ்டகாலம்டா சாமி 


4. பரத நாட்டிய உடைக்கு மரியாதை செய்யாட்டி பரவாயில்லை. அதை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.  பரத நாட்டிய உடை அணிந்து ஹீரோயின் அண்ட் 17 பேர் குரூப் டேன்சர்ஸ் குத்தாட்டம் ஆடுவது அன்சகிக்கபிள் அட்டகாசம்


5,.ஹீரோ அடிக்கடி மீடியாவில் தன்னை விட ஹையர் ஆஃபீசரை பளார் பளார் என அறைவது ஏன்?காமெடியா? முடியல


6. தன்னை ஊரே வேடிக்கை பார்க்க அடிச்சு இழுத்து வந்த ஹீரோவை பழி வாங்க வில்லன் பிரகாஷ் ராஜ் அடியாளுங்க 65 பேரை அடிக்க விட்டு  16 பேரை வீடியோ ஷூட் எடுக்க வைக்கும் காட்சி செம காமெடி. அது என்ன ப்ளூ ஃபிலிமா? பல கோணங்கள்ல படம் எடுத்து வெட்டி ஒட்ட? 3 பேர் வீட்யோ ஷூட் பண்ணா பத்தாதா? ஏன்னா அந்த 65 பேரும் ஒன் பை ஒன்னாத்தான் ஹீரோ கிட்டே போய் ஃபைட் போடறாங்க .


7. பிரகாஷ் ராஜ் கூட ஃபைட் சீனில் ஹீரோவுக்கு உதடு, கன்னம் எல்லாம் ரத்தக்காயம், ஆனா அடுத்து அவர் டயலாக் பேசும் காட்சியில் ஒரு காயமும் இல்லை. பேசி முடிச்ச பின் உதட்டில் மட்டும் காயம். எடிட்டிங்க் ஃபால்ட்டா? அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்னப்பா பண்றீங்க?  


http://www.indiancinemagallery.com/Gallery2/d/910058-1/Tamanna+in+Cameraman+Ganga+Tho+Rambabu+movie+stills+26_09_12+_14_.JPG


8. இடைவேளை வரை கதை ஒழுங்கா போச்சு, இடைவேளைக்குப்பிறகு கதை சம்பந்தம் இல்லாம 2 ஹீரோயின் கிட்டே மாட்டி தவிக்கும் ஆயுத  பூஜை அர்ஜூன் கணக்கா கேவலமா போகுதே ஏன்? 


9. இத்தனை நாளா திருநங்கைகளை நடனக்காட்சிகளில், பாடல் காட்சிகளில் தான் கிண்டல் பண்ணி அவங்க  மனம் புண் படி சினிமா உலகம் ந்டந்தது, இதுல கோரமான ஃபைட் சீன். 45 அரவாணிகள் ஹீரோ கூட ஃபைட் போடுவது கொடூரம், ஆபாசம் , அருவெறுப்பு 



10. அந்த அரவாணிகள் ஃபைட் சீன் முடிஞ்சதும் 2 போலீஸ் ஆஃபீசர்ஸ் வர்றாங்க. அதுல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லைட் கலர் காக்கி யூனிஃபார்மும், டார்க் கலர் கேப்பும் போட்டிருக்காரு, செம காமெடி 



11. பொதுவா அரசியல்வாதிங்க ஒயிட் அண்ட் ஒயிட் தான் போட்டிருப்பாங்க. இதுல பிரகாஷ் ராஜ் மட்டும் பி:ளாக்  அண்ட் பிளாக் போட்டுட்டு அச்சு அசல் தாதா மாதிரி வர்றார். எடுபடலை. டிரஸ்ஸிங்க் சென்ஸ் மகா மட்டம் . அவர் என்ன தி க கட்சி ஆளா? 


12. வில்லியாக மாறும் 2 வது ஹீரோயின் ரிவால்வரில் ஒரே ஒரு முறை ஹீரோவை சுடறார். உடனே புல்லட்ஸ் காலி. மீதி 5 புல்லட்ஸ் காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? இவர் பிளான் பண்ணித்தானே தாக்க வர்றார்? அதைக்கூட செக் பண்ணி வர மாட்டாரா? 


13. க்ளை8மாக்ஸ்ல பாரதிராஜா  படம் மாதிரி பொது ஜனங்கள் கூடி வில்லனை பழி வாங்கும் காட்சி சி ஜி ஒர்க் என சொல்ல்ப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சீன் கலக்கல் தான். ஆனா அவங்க வர்றப்ப பில்டிங்கே அதிர்றது ரொம்ப ஓவர்.. 


14. பாடல் காட்சிகளில் தூம் தூம் பாட்டில் அச்சு அசல் அந்நியன் பாட்டான ரண்டக்க ரண்டக்க உல்டா பின்னணி இசை 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAvs02daDiJhLx9a1mgjJ3w2TnJSddxggjAAfq7xai1x8WiNhgK38yyZdQDlnW6I1X-j1u0h1IaGbmzUHW5LB79-thrE_x19u0xJexHILwlKec4v0J-Z3oyplDGiNt9K8RVqBkJuLMp7tn/s1600/Tamanna958.jpg


 சி.பி கமெண்ட்  - தமிழ்ப்படங்கள் அதிகம் பார்க்காத ஜனங்கள், தெலுங்குப்பட ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். மற்றபடி இது அரைச்ச மாவுதான் . மீறிப்போனா சாவு தான் . இந்த மாமூல் மசாலாக்குப்பையை  ஈரோடு அண்னாவில் பார்த்தேன்

http://telugu.way2movies.com/wp-content/uploads/2012/03/Puri-ropes-in-Gabriela-Bertante-for-hot-item-song.jpg

Friday, October 26, 2012

ஆரோகணம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtlkTxJ1iFmgoiSECtbk5ghCcxge-zbG74omb9KFzCWKwGOcM3n2kGI-KQqX0CoM-e8I2Gilrz8cdcqkzwx-puwvOiQTEM1aQcEU0j7k1qMzGbjq5TfPlQK0R97aRrIXPu9tBOeIgXM-U/s1600/Aarohanam.jpg

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க்லயே ஒரு ஆக்சிடெண்ட். விபத்துக்கு காரணமானவங்க மேல் தட்டு வர்க்கத்தை சார்ந்த ஃபீமேல் தட்டு சர்ப்பங்கள்.. ஐ மீன் 2 ஹை கிளாஸ் லேடீஸ். விபத்துக்குள்ளானது  ஒரு சாதாரண லேடி.. 


அந்த லேடி மேரேஜ் ஆகி 2 குழந்தைகள் இருக்கு.. தேர்தல் வர்ற நேரத்துல எல்லாம் எப்படி கலைஞருக்கு ஈழத்தமிழர் நினைவு வருதோ அப்படி  இக்கட்டான டைம்ல  எல்லாம் அந்த லேடிக்கு பயங்கர கோபம் வருது.. என்ன கோளாறுன்னா . ஒரு வித மன நோய் .அதாவது சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் தனுஷ்க்கு மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் வருமே அந்த மாதிரி பை போலார் டிஸ் ஆர்டர் வியாதி,.,

புருஷன் காரன் சரி இல்லை.. பொதுவாவே  ஆம்பளைங்க அக்கம் பக்கம் பாரடா சின்ன  வீடுடா, ஆகாசப்பார்வை என்ன?ஜொள்ளு ராசா அப்டிங்கற மனோபவம் உள்ளவங்க என்ற மனோ பாவம் உள்ள அவ புருஷன் அவளை அம்போன்னு விட்டுட்டு வேற ஒரு லேடி பின்னால போயிடறான், எலக்‌ஷன் முடிஞ்சதும் கேப்டனுக்கு ஜெ டாட்டா காட்டின  மாதிரி.. ,


அவ தனியா 2 பேரையும் வளர்த்தறா.ஒரு பொண்ணு, ஒரு பையன், பொண்ணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு . இந்த மாதிரி ஒரு சூழல்ல தான் இந்த விபத்து நடக்குது, என்ன ஆகுது? என்பதே மிச்ச கதை.. 




அபலைப்பெண்ணா, மனநோய் பிடித்த பெண்ணா வர்ற விஜி நடிப்பு ஓக்கே. அவர் நெத்தில இருக்கற எட்டணா சைஸ் குங்குமத்துக்கு சமமா அவர் கண்கள்  அடேங்கப்பா.. சாமி வந்த மாதிரி ஆடும்போதும், திடீர் திடீர்னு  முறைக்கும்போதும் அப்ளாஸ் வாங்குகிறார்.அழகி சீரியல் ரொம்பவே யூஸ் ஆகி இருக்கு போல..



அவரது பொண்ணா வரும் ஃபிகர்  யார்னு சரியா தெரியல , பேரு ஜெயகுஹோனினு நினைக்கறேன். சிக்குன்னு இருக்கு பாப்பா.. மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பால், கவுரவமான தோற்றத்தால் மனம் கவர்கிறார்.



அழகிரி மாதிரி கெட்டப்ல வரும் ஜெயப்ரகாஷ் தேவை இல்லாத கேரக்டர், அதே போல் சம்பத். உமா பத்மநாபன் பியூட்டி பார்லர்க்கு 2 டைம் அட்டர் டைம்ல போய்ட்டு வந்த மாதிரி ஓவர் மேக்கப், ஆனாலும் ரசிக்க வைக்கிறார், அவர் கூட வரும்  லேடி கி கி கி


http://www.tamilnow.com/movies/gallery/aarohanam/tamil-movie-aarohanam-332.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏய், டிரைவர் வெச்சுக்கலையா? 


நோ, பிரைவேசி போயிடும் 



2. அண்ணே, பார்ட்டிக்கு லேட் ஆகுது


 அந்த பார்ட்டியை  விடுடா, இந்த பார்ட்டியை பாரு



3. இந்தக்காலத்துல பொண்டாட்டி நல்லா இருக்கும்போதே  தொடுப்பு வெச்சுக்கறானுங்க, இவ இப்படி இருக்கா.. நான் வேற ஒரு பொண்ணு கூட போனா என்ன தப்பு?


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-aarohanam-movie-audio-launch/images/tamil-movies-aarohanam-movie-audio-launch01.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தமிழ் சினிமான்னா மினிமம்  2 மணி நேரமாவது ஓடற மாதிரி நீளம் வேணும் , இல்லைன்னா தமிழனுக்கு குடுத்த காசு வேஸ்ட்டோன்னு எண்ணம் வந்துடும், இருந்தாலும்  30 நிமிஷத்துல சொல்ல வேண்டிய கதையை சுவராஸ்யமாய் ஒன்றரை மணி நேரம் இழுத்து சொன்னது.



2. கே பாலச்சந்தர் மூலம் பப்ளிசிட்டிக்காகவோ, நிஜமாகவோ ஒரு பாராட்டை வாங்கி அதை விளம்பரம் பண்ணியது 



3. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், வேலை வாங்கிய விதம் , வெரி லோ பட்ஜெட் ( ஜஸ்ட் 34,55,500 தானாம்)  எல்லாம் அபாரம், திரைக்கதை அமைத்த விதம்  அழகு.


http://www.cinemahour.com/gallery/events1/audioreleases/Aarohanam%20Movie%20Audio%20Launch/5684599Aarohanam_Movie_Audio_Launch-(7).jpg

திரைக்கதையில் சில ஆலோசனைகள்



1. படத்துல முதல் ரீல்லயே அந்த லேடி உமா கிட்டே இங்க்லிபீஸ்ல பேசிட்டே இருக்கு, அது எப்படி சாமான்ய ஜனங்களுக்கு புரியும்? அட்லீஸ்ட் திரையிலாவது தமிழ்  மொழிபெயர்ப்பை ஓட விட்டிருக்கலாம், ஒரு லைன், 2 லைன்னா பரவாயில்லை, கிட்டத்தட்ட  ஏ 4 ஷீட்ல ஒன்றரை பக்கம் பேசுது


2. ஜெயப்ரகாஷ்க்கு இங்க்லீஷ் தெரியாது ஓக்கே, ஆனா இங்க்லீஷ் தெரிஞ்ச ஒரு பி ஏ வைக்கூடவா கூட வெச்சுக்க மாட்டார்? ஒரு எம் எல் ஏ வேற அவரு.. அந்த காமெடி எடுபடலை




3. நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஹாஸ்பிடல் உள்ளே.. பையனும், பொண்ணும்  டாக்டர் எதிரே. சைக்கிள் கேப்ல டாக்டர் எதுக்கு  ஆறுதல் சொல்ற மாதிரி அந்த பொண்ணு தோள்ல தட்டிக்குடுக்கறாரு? பயப்பட ஒண்ணும் இல்லைன்னு வெறும் வசனமா சொன்னா போதாதா? அவர் ஃபேமிலி டாக்டரும் இல்லை, அடிக்கடி பார்த்து பழக்கம் ஆன டாக்டரும் இல்லை


4. ஓப்பனிங்க் சீன்ல 45 கிமீ வேகத்துல போகும் கார் ஹீரோயினை ( 50 வயசு ) இடிச்சு அவரை 7 அடி உயரத்துல தூக்கி போடுது. ஆனா அவர் மேல ஒரு கீறல் கூட விழலை.. நம்பற மாதிரியே இல்லை. ஆனா சால்ஜாப்பா ஒரு டயலாக் பின்னால சேர்த்து இருக்கீங்க. ( இதெல்லாம் மெடிக்கல் மிராக்கிள், 10 வது மாடில இருந்து  கீழே விழுந்தவன் எல்லாம் துளி காயம் இல்லாம பிழைச்சிருக்கான்னு ) ஆனாலும் உறுத்துது



5. படத்துல ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணீன மாதிரி விபத்து நடந்ததையே கடைசில காட்டி இருந்தா இன்னும் பெப் கூடும்


6.  ஹிட்சாக்கின் கருத்தான ஒரு சஸ்பென்ஸ்  எப்படி இருக்கனும்கற  விளக்கப்படி காட்சிகள் இல்லை. ஆடியன்ஸ்க்கு  ஹீரோயின்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுடுது, ஆனா படத்துல வர்ற கேரக்டர்ஸ்க்கு தெரியல , அவங்க பாட்டுக்கு 3 ரீல்க்கு தேடிட்டே இருக்காங்க. போர் அடிக்குதே. பொதுவாவே தமிழ் சினிமால பலர் பண்ற தப்பு இதுதான். புலன் விசாரணை படத்துல வர்ற மாதிரி கேரக்டர் காணாம போனா என்ன ரீசன்? எதனால காணோம் என்பது ஆடியன்சுக்கும் தெரியக்கூடாது


7. இந்தக்கதைக்கு சம்பந்தம் இல்லாம அந்த ஜொள்ளு ஜக்கு கேரக்டர் எதுக்கு?


8.  எப்படிப்பட்ட கெட்ட புருஷனும் பொண்டாட்டியை திட்டுவான், கண்டுக்காம இருப்பான், அன்பு செலுத்தாம இருப்பானே தவிர  “ நீ கைல காசு இல்லைன்னா என்ன பண்ணுவே? தொழிலா? அப்டினு எல்லாம் கேட்க மாட்டான். ஒரு பெண்ணா பெண்ணாதிக்கவாதியா அந்த வசனத்தை வெச்சாலும் ஆண்கள், பெண்கள் யாருமே அதை ஏத்துக்க மாட்டாங்க..


9. ஒரு மோசமான கணவன் உலகத்துல  பலர் இருக்கலாம், ஆனா மோசமான அப்பா அதுவும் பெண் குழந்தை கொண்ட அப்பா இருக்க முடியாது,  ரொம்ப ரேர். அப்படியே இருந்தாலும்  இந்த மாதிரி மேரேஜ் டைம்ல இப்படி நடந்துக்க மாட்டான்.


10.  எப்பவும் ஆணை வில்லனா காட்டனும்னா மனைவி மேல பாசம் இல்லாத மாதிரி காட்டுனா ஏத்துக்குவாங்க, ஆனா மகள் , மகன் மேல பாசம் இல்லாத கேரக்டர்னா செற்கையா இருக்கும்.


11. ஹீரோயினுக்கு விபத்தில் காயம் ஆகி , அந்த காயத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வில் ஹாஸ்பிடல் செலவை ஏற்று  அப்படியே  நோயை குணப்படுத்தினார்கள் என்று கதையை கொண்டு போய் இருக்கலாம், அதே போல் ஹீரோயினுக்கு அந்த நோய் வந்ததே கணவனின் கொடுமை தாங்காமல் தான் என்பது மாதிரி காட்டி இருக்கலாம்







எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி. பி கமெண்ட் - இது நல்ல படம் எடுப்பதற்கான ஆரோக்யமான முயற்சி தானே தவிர பலரும் சொன்னது போல் இது  பிரமாதமான படம் அல்ல. பெண்கள் , ஆரோக்யமான சினிமாவை விரும்புவர்கள் பார்க்கலாம்.


 இந்தப்படத்தை பற்றி சிலாகித்து கே பாலச்சந்தர் ஆற்றிய மேடைப்பேச்சு


http://www.adrasaka.com/2012/10/blog-post_620.html

Wednesday, September 26, 2012

Heroine - சினிமா விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2012/bollywood-movie-heroine/kareena-kapoor-heroine-movie-wallpaper01.jpgநாட்ல மேரேஜ் ஆகாம 1008 நல்ல ஆண்கள் , அப்பாவிகள் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரப்பொண்ணுங்க, நடிகைங்க கண்ல மாட்டறது, அல்லது அவங்களா போய் மாட்டிக்கறது ஆல்ரெடி மேரேஜ் ஆன அயோக்கியப்பசங்க கிட்டேதான். நயன் தாரா எப்படி ரம்லத்க்கு துரோகம் பண்ணி பிரபுதேவாவை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி இந்தப்படத்து ஹீரோயின் கரீனாகபூரும்  ஒரு புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை வளைச்சுப்போடறார். அவருக்கு ஆல்ரெடி மனைவி, குழந்தை எல்லாம் இருக்கு. 


 இவருடைய நோக்கம் தான் எப்பவும் மீடியாவில் பேசப்படனும், பர பரப்பான செய்தி நம்மை பற்றி வந்துட்டே இருக்கனும்னுதான். ஒரு தடவை ஷூட்டிங்க் ஸ்பாட்டில் தன் கள்ளக்காதலனின் முதல் மனைவியின் குழந்தையிடம் ஆசையா பேசிட்டு இருக்கும்போது முதல்  மனைவி ஐ மீன் சக்களத்தி வந்து படு கேவலமா  திட்டிடறா?அது சம்பந்தமா செம காண்ட்ல இருக்கும்  கரீனா  தன் காதலன் கிட்டே நியாயம் கேட்கறாரு.



 கார்ல போய்ட்டு இருக்கும்போது 2 பேருக்கும் வாக்குவாதம் வந்து கமல் ஹாசன் எப்படி வாணி கமலை மாடிப்படிக்கட்டுல இருந்து தள்ளி விட்டாரோ அப்படி காரை நிறுத்தி தள்ளி விட்டுடறார் ( அந்த கால கட்டத்தில் வாணி மாடியில் இருந்து தவறி விழுந்தார் என சொல்லப்பட்டாலும் பின்னாளில் ஸ்டார் டஸ்ட் இதழில் வாணி கமல் ஹாசன் உண்மையை சொன்னார் ) 


 இவருக்கு  அதாவது கரீனாவுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுது. பழி வாங்கத்துடிக்கறார்.மார்க்கெட் டல்லா இருந்தப்போ எப்படி லட்சுமிராய் தனக்கு சம்பந்தமே இல்லாத கிரிக்கெட் ஃபீல்டுல இருந்த டாப் ஹீரோ டோனியை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி கரீனாவும் ஒரு கிரிக்கெட் ஸ்டாரை வளைச்சுப்போடறார்.

 http://www.cinmass.com/wp-content/uploads/2012/09/Kareena-hot-stills-in-Heroine-10.jpg




பல காரணங்களால கரீனாவுக்கு மார்க்கெட் டல் ஆகிடுது. சோகமா இருக்கும்போது ஆறுதலா   ஒரு  பெங்காலி நடிகை கூட லெஸ்பியன் உறவு வெச்சுக்கறாங்க.. இது எப்படின்னா ஃபயர் படத்துல படத்தின் கதைக்கு தேவை , முக்கியம்னு தீபா மேத்தா சொல்லி நந்திதா தாஸ் , ஷபனா ஆஷ்மி கூட கோர்த்து விட்ட மாதிரி. ஆனா அப்போ கரீனா போதைல இருந்ததால அதுக்கு ஓக்கே சொல்லிட்ட மாதிரி ஒரு சப்பைக்கட்டு வேற 


மார்க்கெட் இழந்த அல்லது மங்கிய கரீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க ஒரு வங்காள இயக்குநர்ட்ட  ஆர்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கேட்கறார். அதுக்கு பரிகாரமா அல்லது பிரதிபலனா அவர் கூட படுக்கறார். 


 புகழ் வெறி, புகழ் போதையால என்ன எல்லாம் பிரச்சனை வருது, அதுக்கு என்ன தீர்வு என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


 படத்தின் மெயின் ஹீரோ   ஹீரோயின்  கரீனாகபூர்-ன் நடிப்புத்தான். பட்டாசு.படத்தில் நடிக்கும் அனைவரையும் சர்வசாதாரணமாக டாமினேட் செய்கிறார். காதல் , கோபம் , குரோதம், ஏமாற்றம் , கில்மா, சோகம், கண்ணீர் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் காட்டுகிறார். கிளாமரை தன் தேகத்தில் காட்டு காட்டு என காட்டுகிறார்.. இந்த கிளாமர் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா?  போடுங்கம்மா ஓட்டு கரீனாகபூர் சின்னத்தை பார்த்து அப்டினு பிரச்சாரம் ஒண்ணுதான் பண்ணலை..


 ரகுவரன் கணக்கா கரீனா டென்ஷன்ல கத்துவது, கோபத்தில் எல்லாத்தையும் போட்டு உடைப்பது , போதைல இருப்பது என நவரச நடிப்பு.. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு  குறை சொல்ல ஏதும் இல்லை.. குட்.  சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான  குணச்சித்திர நடிப்பு, உறுத்தாத அழகு எல்லாம் ஓக்கே ரகம் .


Shahana Goswami

http://www.moviegupshup.net/data/media/274/shahana848.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏன் ஒதுங்கறே? நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா? 



அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லை.  மேக்கப் கலைஞ்சுடுமேன்னு பார்க்கறேன் ( இவ தாண்டா பத்தினி - நன்றி டாக்டர் ராஜசேகர்)



2. ஏதோ இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்னு சொன்னீங்க.. அவ பிளாட்டுக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. அங்கே தான் மீட்டிங்க் நடந்ததா?



3. நடிகர்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா நடிக்க வருது



4. என்ன என்னைப்பார்த்து ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் சொல்றே? என்னைப்பார்த்து உனக்கு சந்தோஷம் இல்லை? 


 ஹாய்! யா



divya dutta
http://www.actresspics.in/wp-content/gallery/divya-dutta/divya-dutta-actress-hot-pics-wallpapers-2.jpg



5.  அவர் எந்த மாதிரி பர்ஃபார்மென்சை எதிர்பார்க்கறார்னு சரியாத்தெரியலை..


சரி சரி நான் சொல்லித்தர்றேன்



6. ஃபிலிம் ஸ்டர்னா தன்னைத்தவிர யாரைப்பற்றியும் சிந்திக்காத சிந்திக்கத்தெரியாதவர்னு அர்த்தம்


7. சுய கட்டுப்பாடு ஒரு கன்யாஸ்திரிக்கு ரொம்ப முக்கியம். உங்க கோபம், ஆவேசம், எல்லாத்தையும் பார்க்குறப்ப நீங்க அதுக்கு தகுதி இல்லைன்னு ஈசியா சொல்லிடலாம்,. எஸ் யூ ஆர் அன் ஃபிட்  ஃபார் தட் ( மேஜர் சுந்தர்ராஜன்)



8. அமெரிக்கா போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கப்போறேன்


 பரிவு, அக்கறை மட்டும் தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.. 

 lillete dubey
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoDiNWbH-jMiMOp-lcy9S-y_Qa3o2sfrVR6yxHfQkLP8BGTIl9ymvalKmYQnMuu6ite59-j2V-M-i2p4JBbXI3GPI55nnuz5mJ5i_o5VmvDa2wgU9MgO6h_1IbOPuq0ldIuisg8tiz7Rk/s1600/jiah-khan04.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. டைட்டில் டிசைன், போஸ்டர் டிசைன் எல்லாம் ஏன் வித்யாபாலன் நடிச்ச டர்ட்டி பிக்சர் மாதிரி இருக்கு? பார்க்கறவங்க அந்த பட கதைன்னு நினைக்க சான்ஸ் அதிகம்..  ஒரு வேளை அதான் நீங்க எதிர்பார்த்ததா? 


2. நடிகையா வர்ற நடிகை ஒரு பாட்டு சீன்ல காமதேனு என சொல்லப்படும் பசுவின் சிலை மேல் அமர்ந்து குத்தாட்டம் ஆடறாங்க. இதுக்கு எப்படி சென்சார் கிடைச்சதுன்னு தெரியலை.. அவங்களை விடுங்க, இந்த சீன் எடுக்கும்போதே இது இந்துக்களை , அவங்க மனசை புண் படுத்தும்னு தெரியாதா? இந்து முன்னணியினர் தகராறு செஞ்சா படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்கட்டும்னுட்டு வேணும்னே அந்த சீன் எடுத்தீங்களா?



3. படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேர்க்டர்ஸும் தம் அடிக்கறாங்க, சரக்கு அடிக்கறாங்க, அதுவும் கரீனா சீன் பை சீன் ரஜினி மாதிரி ஐ மீன் ஆரம்பக்கட்ட ரஜினி மாதிரி சிகரெட்டோடயே சுத்தறாரு.. எதுக்கு அப்படி ?


4. ஹீரோயின் கரீனா புகழ் பெற்ற ஒரு நடிகை. அவங்க ஒரு சூப்பர் ஸ்டார் கூட கில்மா பண்றப்போ அதை செல் ஃபோன்ல வீடியோ  எடுக்கறாங்க. ஏதாவது ஃபைட் வந்தா நமக்கு ஆப்புன்னு அந்த ஹீரோவுக்கு தெரியாதா?எப்படி அதுக்கு அலோ பண்றார்?



5. அந்த கில்மா வீடியோவை மீடியா கிட்டே கொடுப்பேன்னு கரீனா மிரட்டும்போது ஹீரோ ஏன் பம்மறாரு? ஏண்டி ! பொம்பளை உனக்கே அந்த ஏத்தம்னா ஆம்பளை எனக்கு எவ்ளவ் ஏத்தம் இருக்கும்? மானம் போனா உனக்கும்தானே போகும்? நீயும் தானே அந்த வீடியோவில் இருக்கே?ன்னு கேட்கலையே? ஏன்?



6. அப்படி மீறிப்போனா இருக்கவே இருக்கு நித்யானந்தா பாணி டயலாக் - இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நான் அவன் அல்ல அப்டினு சொல்லிட்டா தீர்ந்தது. ஏன் பயப்படனும்?

 pallavi sharda
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=winter-festive-preview-2011_132221587610.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. தமிழ்ல  எப்படி முதல் பாவம்ல அபிலாஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன்ல குஷ்பூ , ஜம்புல அந்த ஆண்ட்டி எப்படி ஹையஸ்ட் கிளாமர் காட்னாங்களோ அதே போல் கரீனா கபூரின் உயர்ந்த பட்ச சீன் படம் இதுதான் என்ர லேபிள் வெச்சுக்கிட பாடு பட்டது 



2. படத்துல வர்ற முக்கியமான 4 லேடீஸ்க்கும் கிளாமர் காட்சிகள் வெச்சது 



3. படத்தை விறு விறுப்பா முடிஞ்சவரைக்கும் போர் அடிக்காம கொண்டு போனது 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDYzFcFnyKla7l6k7R5vZFkFSsyc42spEvGUJYQZ7a0rbsCKm_S3Umkk4hM-FVEqCPRzuRI56LtNPQOXxWd8SqeVUb1cdtEs2_YNCAZ2o6fEc1ACE5lXUbkjDSF14wlFnOzJzwq1KGRo/s1600/Kareena+Kapoor+navel.jpg

 சி.பி கமெண்ட் -  கரீனா கபூரின் ஆண் ரசிகர்கள் சீனுக்காக பார்க்கலாம். ஆனா வெளில நடிப்புக்காக பார்த்தேன்னு ரீல் விட்டுக்கலாம்.. பெண்கள் பார்க்கத்தேவை இல்லாத தகுதி இல்லாத படம்.. ( ஆனா நான் பார்த்த ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் படம் பார்க்க வந்தவங்க பாதிப்பேர் லேடீஸ் தான், வாழ்க பெண்ணுரிமை)

டிஸ்கி - இந்தப்படத்துல பல ஆண்கள் நடிச்சிருந்தாலும் பெண்கள் ஸ்டில் தான் போட்டிருக்கேன். 33 % இட ஒதுக்கீட்டுக்கே போராடும் பெண்களுக்கு அட்ராசக்கவுல் மட்டும் எப்போதும் 93 % இடை சாரி இட ஒதுக்கீடு. இதுக்காக பெண்ணியம் காக்கும் கண்ணியம் கொண்ட காரிகன் பட்டம் கொடுத்தா கலைஞர் போல் கூச்சமே இல்லாம அதை வாங்கிக்கத்தயாரா இருக்கேன் .


Director:

Madhur Bhandarkar

Writers:

Madhur Bhandarkar, Niranjan Iyengar

Stars:

Kareena Kapoor, Randeep Hooda and Arjun Rampal

Tuesday, September 25, 2012

திருமதி சுஜா என் காதலி -சினிமா விமர்சனம்




மினரல் வாட்டர் டிஸ்ட்ரிபியூஷன் பண்றாரு ஒருத்தர். அவர் கடைல 4 பசங்க..  ஓனருக்கு என்ன பழக்கம்னா பசங்க யார் வேலைக்கு சேர்ந்தாலும் அவங்க நேர்மையை டெஸ்ட் பண்ணிடுவாரு.. வேலைக்கு சேர்த்துனது பொண்ணா இருந்தா அவ பாத்ரூம்ல குளிக்கும்போது ஹமாம் சோப் போட்டு குளிச்சா நேர்மையானவ-னு நினைச்சுக்குவார் போல.. அவ்ளவ் அப்பாவி. 90,000 பணம் இந்தா போய் பேங்க்ல என் பேர்ல போட்டுட்டுவான்னு ஒரு லட்சம் ரூபா தர்றார்.. அந்தப்பையன் ஏமாத்தாம ஒரு லட்சத்தயும் அவர் அக்கவுண்ட்லயே போட்டுட்டு வந்துடறான். ஆஹா.. இவன் நேர்மையானவன், நம்பிக்கையானவன்னு ஓனருக்கு நம்பிக்கை வந்துடுது.



அவன் தான் இந்த படத்துக்கு ஹீரோ.ஓனர் சம்சாரம் தான் ஹீரோயின். அதெப்பிடி? ஓனர் தானே ஹீரோ? ஹீரோயின் புருஷன் தானே ஹீரோவா இருக்க முடியும்னு யாரும் லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. இந்த மாதிரி கில்மாப்படத்துல  கள்ளக்காதலன் தான் ஹீரோ, கள்ளக்காதலிதான் ஹீரோயின்.


 ஹீரோயின் மொட்டை மாடில  தன்னோட பிராவை காயப்போட்டிருக்கா.. அது காத்துல பறந்து 2 பர்லாங்க் தூரத்துல நிக்குற ஹீரோ மேல விழுது. 2 தத்திங்களும் கேவலமா சிரிச்சுக்கறாங்க.. வெட்கமாம்.. அடேய்


அப்பப்ப ஓனர் ஏதாவது வீட்டு வேலை சொல்லும்போது ஹீரோவும் , ஹீரோயினும் சந்திச்சுக்கறாங்க.. அப்பவெல்லாம் எந்த முக்கிய சம்பவமும் நடக்கலை.. ( முக்கிய சம்பவம்னா ம் ஹூம் , ஏய்  இச் இந்தமாதிரி முக்கிய முனகல் சம்பவங்கள் )10 நிமிஷம் லேட்டா வர்றவங்க தொந்தரவு தாங்க முடியறதில்லை.. சார்.. சீன் ஏதாவது போயிடுச்சா? அப்படினு கேட்டே உசுரை எடுப்பானுங்க.அந்த மாதிரி லேட் கமர்ஸ்க்காகவே படம் போட்டு 20 நிமிஷம் வரைக்கும் எந்த சீனும் இல்லை.




ஓனர் வேலை விஷயமா வெளியூர் போறார். போகும்போது  அந்த தத்தி ஓனர் என்ன பண்ணறார்னா  கடை பசங்க 2 பேரை நைட் அவர் வீட்ல வாசல்ல காவலுக்கு படுத்துக்குங்கன்னு சொல்லிட்டு போறாரு,. அமலாபாலை கேரவுன் வேன்ல உக்கார வெச்சு வெளில சிம்புவை காவலுக்கு வெச்சா என்னாகும்?

அதான், ஹீரோ பாட்டுக்கு நல்ல பிள்ளையா வாசல் திண்ணைல படுத்து இருக்கான், ஹீரோயின் என்னமோ குல்பி ஐஸ்காரனை கூப்பிடற மாதிரி சாதாரணமா கூப்பிடறா. கூச்சமே இல்லாம , பார்க்கற நமக்குத்தான் கூச்சமா இருக்கு..



 அப்புறம் என்ன நடக்குது? டக்னு இடைவேளை. இங்கே தான்யா டைரக்‌ஷன் டச்.. ஹீரோ ஹீரோயின் இடைல வேலையா இருக்கும்போது இடைவேளை.. சிம்பாலிக் ஷாட்டாம்.



இது தொடர்கதை ஆகுது.. பல மாசமா இது நடக்குது. என்ன ஆகும்? ஹீரோயின் மாசமா ஆகிடறா, புருஷன் கிட்டே சொல்றா. அத்தான் நீங்க அப்பா ஆகப்போறீங்க.. ஓனர் ஷாக் ஆகிடறான், நாம கடைக்கு மட்டும் தான் ஓனர். எவனோ நம்ம சம்சாரத்துக்கே ஓனரா இருந்திருக்கான்னு .



 இந்த இடத்துல யாருமே  எதிர்பார்க்காத ட்விஸ்ட். ஓனர் எப்படி டவுட் ஆகறார்னா ஆல்ரெடி டாக்ட அவர் கிட்டே உனக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை. எடியுரப்பா மாதிரி டம்மியா இருக்க வேண்டியதுதான்னு சொல்லி இருக்கார். இது சம்சாரத்துக்கு தெரியாது.


 இதுக்குப்பின் என்ன ஆகுது என்பதுதான் மிச்ச மீதி சதை சாரி கதை.. ஒரே முகத்தை (!!!!!!??) 2 மணீ நேரம் பார்த்தா ரசிகர்களுக்கு போர் அடிக்கும் என்பதாலே  இன்னொரு கிளைக்கதையும் உண்டு. சஹானா மாதிரி பல பாய்ஸ் ஃபிரண்ட் உள்ள ஆனா கில்மா பண்ண அனுமதிக்காத தில்லாலங்கடி பாப்பா கதை..



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. ஹீரோயின், ஹெல்ப் ஹீரோயின் (உதவி நடிகை ஹி ஹி )  2 பேரும் 20 டூ 25 வயசு ஆளுங்களா பிடிச்சு போட்டது. ஏன்னா இந்த மாதிரி கில்மாப்படத்துல  35 வயசு ஆண்ட்டிகளைத்தான் போடுவாங்க .


2. படத்தில் போர் அடிக்கும் காட்சிகளே இல்லை.. செம ஜாலிதான். சீன் இருக்கோ இல்லையோ அது 2 வது மேட்டர். ஆனா சீனுக்கான லீடு இருக்கு கிளுகிளுப்பு இருக்கு..



3.பட போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங்க் உத்தி எல்லாம் ஓக்கே




கில்மா பட இயக்குநரிடம் சில கொல்மா கேள்விகள்



1. வழக்கமா இந்த மாதிரி படத்துல கணவன் கையாலாகதவனாகவோ, குடிகாரனாகவோ காட்டுவாங்க, ஆனால் நீங்க ஹீரோ ஆரோக்யமானவனா காட்டி இருக்கீங்க. மனைவி ஏன் தடம் புரள்றான்னு தெளிவா சொல்லலை.அவ ஒரு அலைஞ்சான் கேஸ் அப்டிங்கற மாதிரியும் காட்டலை
,ஹீரோ ஆள் கலரோ பர்சனாலிட்டியோ கிடையாது, அவனும் புருஷனை விட மோசமாத்தான் இருக்கான். தென் ஒய் ஒய்? வீ வாண்ட் டூ நோ த ரீசன் ..

2. ஒரே கட்டில்ல கணவன், மனைவி படுத்திருக்காங்க , கணவன் தூங்கறான், அப்போ கள்ளக்காதலன் வீட்டுக்குள்ளே வர்றதே ரிஸ்க். ஆனா அவன் கட்டில்லயே படுத்து கில்மா பண்றான். ஹாலிவுட் படத்துல கூட அபப்டி வர்லை.. யாராவது அசட்டுத்தனமா அப்படி பண்ணுவாங்களா? வீட்ல பாத்ரூம் , கிச்சன் ரூம் எங்காவது போய்க்க மாட்டாங்களா?


3. தன்  மனைவி ஒரு கேடு கெட்ட சிறுக்கின்னு அந்த கிறுக்கனுக்கு தெரிஞ்ச பின் முறைப்படி அந்த மனைவியைத்தானே கொலை பண்ணனும்? எதுக்கு கள்ளக்காதலனை கொலை பண்றார்?மனைவியை கொலை பண்ணிட்டா ஒரே ஒரு கொலையோட மேட்டர் ஓவர். க காதலனை கொலை பண்ணிட்டா அவ இன்னும் எத்தனை பேர் கூட போவாளோ? எல்லாரையும் தேடி தேடி கண்டு பிடிச்சு கொலை பண்ணிட்டு இருக்க முடியுமா? அட்லீஸ்ட் மனைவி திருந்தி மன்னிப்பு காட்ற மாதிரியும் சீன் வைக்கலை..



4. ஓனர் தன்  கடைல வேலை செய்யற 5 பேர் மேல சந்தேகப்படறார். யார் அந்த புல்லுருவின்னு கண்டு பிடிக்க லூஸ் தனமா ஒரு ஐடியா பண்றார். அதன் படி தான் ஏதோ மறந்துட்டு வந்துட்டதாகவும் வீட்ல போய் அக்கா கிட்டே வாங்கிட்டு வாங்க என சொல்லி 5 பேரையும் தனித்தனியா அனுப்பறார். இவர் பின்னாலயே போய் செக் பண்றார். அந்த லூசு பொண்டாட்டி கள்ளக்காதலன் வந்ததும் அவனைக்கூட்டிட்டு உள்ளே போகுது, தொடர்ந்து 4 பேர் இப்படி வந்துட்டாங்களே, இதுல ஏதோ சூது இருக்குன்னு நினைக்க வேண்டாம்? சூது வாது தெரியாத புள்ள போல..


5. கள்ளக்காதலனுக்கு கூட அறிவில்லை. வீட்டுக்கும், கடைக்கும் உள்ள தூரம் 1 கிமீ. நாம அரை மணி நேரமா இங்கே கிடைக்கோம், டவுட் வராதா?ன்னு நினைக்க வேண்டாம்?


6. கிளைக்கதைல வர்ற அந்த டொக்கு ஃபிகரு கேரக்டரைசேஷன் சரியா சொல்லப்படலை.7 பசங்க கூட சுத்தறா, ஆனா யாரையும் தொட விடலை.. நல்ல விபரம். அப்பப்ப அவளை டிராப் பண்ண , செலவு பண்ண யூஸ் பண்ணிக்கறா, ஓக்கே  படத்துல அவரால என்ன யூஸ்? ( உங்களுக்கோ தயாரிப்பாளருக்கோ யூஸ் இருந்திருக்கலாம் )




சி.பி கமென்ட் -  படம் ஜாலியா காமெடியா போகுது, ஆனா சீனை எதிர்பார்த்தா ஏமாந்தே போயிடுவீங்க.. ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்