Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Monday, September 24, 2012

சாட்டை - சினிமா விமர்சனம்

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsSaattai_(2012)cover.jpgஉன்னால் முடியும் தம்பி படத்தை சமூக சீர்திருத்தக்கருத்துக்களோடு கே பாலச்சந்தர் கொடுத்த மாதிரி அரசுப்பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் எப்படி நடந்துக்கனும், என்ன செய்யனும் என்பதை பிரச்சார நெடி இல்லாமல்  கமர்ஷியலாகச்சொல்ல முயன்று இருக்கும் நல்ல ஆரோக்யமான தமிழ் சினிமா இது. 


ஒரு அரசுப்பள்ளில புதுசா வாத்தியாரா சேர வந்திருக்காரு ஹீரோ. அந்த ஸ்கூல்ல எல்லாமே உதவித்தலைமை ஆசிரியர்தான், ஹெச் எம் டம்மி. காரணம் என்னன்னா ஸ்கூல்ல எல்லாருமே  அவர் (உதவித்தலைமை ஆசிரியர்) கிட்டே வட்டிக்கு கடன் வாங்குனவங்க. 

ஸ்கூலை ஸ்கூல் மாதிரி நடத்தாம தன் சொந்த சத்திரம் போல் நடத்திட்டு இருக்கும்  அவர் கிட்டே இருந்து  எப்படி திறமையா அந்த பள்ளியை மீட்டு முன் உதாரண ஸ்கூலா மாத்தறார் ஹீரோ என்பதே கதை. 


படம் பிரச்சார நெடியுடன் இருக்கக்கூடாது, ரொம்ப போர் அடிச்சுடக்கூடாதுன்னு ஒரு காதல் கதையை ஊடால விட்டதும் , பசங்க அடிக்கற லூட்டிகளை இயல்பான காமெடி டிராக்காக அமைத்ததும்  இயக்குநரின் திறமைக்கு  சான்று.


 படத்தில் முதல் ஹீரோ வசனகர்த்தாதான். சும்மா ச்சாட்டையால  அடிச்சா மாதிரி சுளீர் பளீர் வசனங்கள். ஹீரோ வசனம் பேசும்போதெல்லாம் தியேட்டரில் கைதட்டல் ஒலி ,விசில் சத்தம் பறக்குது


ஹீரோவாக எம் சசிகுமாரின் ஆருயிர் நண்பர்  சமுத்திரக்கனி. ஆள் செம கம்பீரம்.அவரது கணீர்க்குரல் படத்தின் உயிரோட்டமான திரைக்கதைக்கு பெரிய பிளஸ். நிர்மலா பெரிய சாமிக்கு செம போட்டி.


 ஏ ஹெச் எம்மாக வரும் தம்பி ராமையா நண்பன் பட சத்யராஜ் மாதிரி வில்லனிக் கேரக்டர்.. செம நடிப்பு.. குணச்சித்திரக்கேரக்டர் கொடுத்தால் பிச்சு உதறிடுவேன்னு சொல்லாம சொல்றார்.. 


இன்னொரு ஹீரோவாக வரும் யுவன் முதல் படம் என்ற அளவில் ஓக்கே.. 


ஹீரோயினாக அறிவழகி கேரக்டரில் வரும்  மஹிமா  குண்டு முகம், ஒல்லி உடல் , சமச்சீரான நடிப்பு, கண்ணியமான உடை அலங்காரம் , உறுத்தாத அழகிய ஒப்பனை , சட் சட் என மாறும் முக பாவனைகள் என கவனிக்க வைக்கிறார்.

http://mimg.sulekha.com/tamil/saattai/stills/saattai-stills-0248.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கு ஒரு மனைவி இருந்தும்  படத்தின் திரைக்கதையில் அவருக்கு டூயட்டோ முக்கியத்துவமோ தராமல் ஒப்புக்குச்சப்பாணி போல் அதிமுக ஆல் மினிஸ்டர்ஸ் போல் அடக்கி வாசிக்க வைத்திருப்பது.. 


2. ஸ்கூலில், வகுப்பறையில் படத்தின் 70% சம்பவங்கள் நடப்பதால் படம் பார்ப்பவரை அவர்கள் பதின்ம பருவ நினைவுகளை கிளறி விட்டு படத்தோடு ஒன்ற வைத்தது 



3. ஹீரோ அந்த ஸ்கூலை எப்படி ஸ்டெப் பை  ஸ்டெப் பாக மாற்றுகிறார் என்பதை விலா வாரியாக காட்டுவது 


4. லேடீஸ் டாய்லெட் எப்படி இருக்கும் என்று  ஒரு  ஆர்வத்தில் அந்த பாத்ரூமில் எட்டிப் பார்த்ததற்காக ( வெறும் காலி பாத்ரூம் தான் ) முட்டிப் போட வைக்கப்பட்ட சிறுவனுக்காக டீச்சரிடம்  ஹீரோ பேசும் பாசிட்டிவான காட்சி, தோப்புகரணம் போட்டால் ஞாபகசக்தி  எப்படி அதிகரிக்கும்? என்பதை விளக்கும் காட்சி ,ஹீரோ வித்தியாசமான முறையில் பாடம் நடத்தும் முறைகள், மாணவர்களை பக்குவமாக அவர் அணுகுவது, தேவைப்படும் இடங்களில் கண்டிப்பு காட்டுவது என பல பால பாடங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்து சொல்வது






5. டி இமானின் இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் 2 செம மெலோடியை கொடுத்திருப்பது, பின்னணி இசை உறுத்தாமல் தேவைப்படும்போது தலை காட்டுவது.அடி ராங்கி என் ராங்கி, நீ போறே என் உசுரை வாங்கி ,


6. க்ளைமாக்ஸில் தான் வந்த வேலை முடிந்தது என வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச்செல்லும் ஹீரோவை தடுக்கும் மாணவர்களிடம் அதுக்கு விளக்கம் சொல்லு ஹீரோ பேசும் அட்டகாசமான வசனங்கள்


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/saattai/wmarks/saattai04.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ ஒரு சாதாரண அரசு ஆசிரியர்தான். ஆனா அவர் என்னமோ போலீஸ் ஆஃபீசர் மாதிரி கெத்தா சீன் பை சீன் வர்றார். அவர் நடை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஜிம்முக்கு போய் செஸ்ட்க்கு வெயிட் லிஃப்ட் 4 செட் அடிச்சுட்டு அப்படியே கிளம்பி வந்தவர் போல் தேவையற்ற செயற்கைத்தனம் எதுக்கு? கேப்டன் பிரபாகரன் விஜய்காந்த் போல் , சி பி ஐ டைரி குறிப்பு மம்முட்டி போல் ஒரு கம்பீரம் தேவை இல்லாதது.. ( ஈசன் பாதிப்பு?)



2. ஹீரோவா நடிப்பவர் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு ஏகப்பட்ட ஸ்கோப் குடுத்த மாதிரி இருக்கு. நாயகன் படத்துக்குப்பின் கமலுக்கு  இப்படி ஒரு நினைப்பு,எண்ணம் உண்டு. அதாவது ஸ்க்ரீன்ல சீன் பை சீன் தான் மட்டும் தான் டாமினேட் பண்ணனும்னு ஒரு எண்ணம் அவருக்கு உண்டு.. அது போல் சமுத்திரக்கனியும் ஆகி விட்டாரோ? டவுட்.


3. படத்தின் முக்கியமான டர்னிங்க் பாயிண்ட்டே ஹீரோ மேல் அபாண்டமான பழி விழுவதும், ஊர் மக்கள் அவரை தப்பா நினைப்பதும்தான். எஜமான், சின்னக்கவுண்டர் படங்களில் வருவது போல், ஆனால் அந்த சீனில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ். மாணவி மீது தப்பான எண்ணம் வரக்கூடாது என்பதற்காக, சக மாணவனை காப்பாற்ற என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் நம்பற மாதிரியோ ஏத்துக்கற மாதிரியோ இல்லை..



4. ஹீரோயின் மாணவி பாட்டனி ஆசிரியரால் பாலியல் அத்துமீறலுக்கான முன்னோட்ட அணுகுமுறை வலை வீசலுக்கு ஆளாக நேரிடும்போது  அந்த மேட்டரை , தகவலை ஏன் ஸ்கூலே கொண்டாடும் ஹீரோ ஆசிரியரிடம் சொல்லவில்லை? பின் வரும் காட்சியில் பெற்றோரிடம் ஏன் சொல்லலை? என சப்பைக்கட்டு கட்டுவது நம்பும்படி இருந்தாலும்  ஹீரோவிடம் ஏன் சொல்லலை? என்பதற்கு பதில் இல்லை.



5. தம்பி ராமையா கேரக்டர் வில்லன் மாதிரி தான். அவரைப்பார்த்ததும் வெறுப்பு வர வேணும் என்பதற்காக ரொம்ப ஓவரா அவரை வில்லன் ஆக்கி இருக்க வேண்டாம்.. ரசிக்க வைத்தாலும் இயல்பாய்  இல்லை..


http://moviegalleri.net/wp-content/gallery/sattai-movie-stills/sattai_movie_stills_0102.jpg



6. ஹீரோ உயிருக்குப்போராடும் நிலைல ஹாஸ்பிடலில் இருக்கார்.கூட ஒர்க் பண்ணுன ஆசிரியர்கள், படிச்ச மாணவர்கள் எல்லாம் பதட்டத்தோட  ஹாஸ்பிடல் வாசல்ல கூடி நிற்கறாங்க. ஆனா அப்போதான் பிறந்த குழந்தையுடன் வரும் ஹீரோவின் மனைவி கொஞ்சம் கூட பதட்டமே படாம என்னமோ ஜான்சி ராணி கணக்கா வீர வசனம் பேசுவதும், அவருக்கு ஒண்ணும் ஆகாது என்று கம்பீரமாய் சொல்வதும் நம்பற மாதிரியே இல்லை.. தேவையே இல்லை. ஓவரா சீன் போட்டு அழ வேண்டாம். அட்லீஸ்ட் அந்த பதட்டத்தையாவது ,பயத்தையாவது பதிவு பண்ணி இருக்கலாம் .


7. ரெக்கார்டு நோட் சப்மிட் என்பது எல்லா மாணவிகளும் ஒரே டைமில் செய்வது, ஏன் அந்த 4 மாணவிகள் மட்டும் தனியா போறாங்க? பின்னால வரும் ஒரு வசனத்தில் அந்த ஆசிரியர் அப்படித்தான் எங்களுக்கு முதல்லியே தெரியும், பலர்ட்ட கை வைக்க ட்ரை பண்ணி இருக்கார் என்று மாணவிகளே பேசறாங்க. அப்புறம்  ஏன் தனியா போகனும்? அட்லீஸ்ட் 4 பசங்களை கூட கூட்டிட்டுப்போய் இருக்கலாமே?


8. விளையாட்டுப்போட்டி நடக்குது. படத்துல முக்கியமான சீன் அது. வில்லன் குரூப் தூக்க மருந்தை  கலந்து கொடுக்கறாங்க. ஓட்டப்பந்தயத்தில் ஓடும் மாணவன் தூக்கத்தை முறியடிக்க பச்சை மிளகாயை  கடிச்சு வெறி ஏத்துவது , எலும்மிச்சை பழச்சாற்றை  முகத்தில் ஊற்றி கண்களை எரிய வெச்சுத்தூக்கத்தை விரட்டுவது இந்த வேலை எல்லாம் பண்றார். இது எல்லாம் போட்டில அனுமதி உண்டா? ஊக்கமருந்து மாதிரிதானே இதுவும்? ( ஜாக்கி சானின் மிராக்கிள்ஸ் படத்தில் வெறி ஏத்திக்க ஹீரோ அப்டி செய்வார்)



9. நடப்பது 200 மீ ஓட்டப்போட்டி . அதிக பட்சம் 20 விநாடிகள் தான். அதுல ஹீரோ மாணவன் பின் தங்கி நிற்பது பின்   லெமன் ஜூசை முகத்தில் ஏற்றி வெற்றி இலக்கை எட்டுவது இதுக்கே 1 நிமிஷம் ஆகுமே? அட்லீஸ்ட் அந்த ஓட்டப்பந்தயம்  800 மீ ஓட்டப்பந்தயமாகவாவது அறிவிச்சிருக்கலாம்.


10. ஆரம்பத்துல லவ்வுக்கு நாட் ஒக்கேன்னு சொன்ன ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஓக்கே சொல்றா. ஹீரோ மாணவன் அப்போ பெரிய இவரு மாதிரி  நான் லவ்க்கு ஓக்கே இல்லைங்கறார். அதுக்கு அவர் சொல்ற ரீசன் ஏத்துக்கற மாதிரியே இல்லை.. அந்த பொண்ணு கிட்டே “ இப்போ காலதல் வேணாம், படிப்பை முடிப்போம், அப்புறம் லவ்வலாம், என்னைக்கு இருந்தாலும் நீ எனக்குத்தான் “ அப்டினு வசனம் வெச்சிருந்தா காதலுக்கு காதலும் ஜெயிச்சா மாதிரி, படத்தின் பேஸ் மேட்டரான ஆசிரியர் கண்டிப்பு மாணவர் நன்னடத்தை கான்செப்ட்டும் சரி பண்ண மாதிரி ..


http://moviegalleri.net/wp-content/gallery/saattai-movie-new-stills/saattai_movie_new_stills_samuthirakani_magima_ajmal_khan_61e6ee3.jpg


11. க்ளைமாக்ஸில் ஏ.ஹெச்.எம்மாக வரும் தம்பி ராமையா  கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவில் தயாளனைக் கொல்ல இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டு போவதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். அப்படி பப்ளிக்கா குத்துனா அவர் ஜெயிலுக்குத்தான் போவார், கமுக்கமா கலைஞர் மாதிரி ஊழல் பண்ணாம  இப்படியா ஜெயா - வளர்ப்பு மகன் மேரேஜ் மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க?


12. அதே போல் ஹீரோ தன்னை கொலை செய்ய ஆள் வெச்சு அடிச்ச வில்லனை  தனக்குப்பின் இந்த ஸ்கூலை வழி நடத்த சொல்லி பொறுப்பை ஒப்படைப்பது, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயன் செய்து விடல் குறளுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் படு செயற்கை..



13. தனியார் பள்ளி ஆகட்டும், அரசினர் பள்ளி ஆகட்டும், எந்த பள்ளி காலை 9,30 மணிக்கு திறக்கிறது? எல்லா பள்ளிகளும் காலை 8.30 டூ 9 மணி தான்.அதே போல் மாலை 4.30 க்கு ஸ்கூல் முடிஞ்ச பின் ஸ்பெஷல் கிளாஸ் வைப்பது ஓக்கே , நைட் 9 மணி வரையா? ஓவர் ஓவர்/. அவ்ளவ் லேட்டா ஸ்கூல் விட்டும் ரிசீவ் பண்ண பேரண்ட்ஸ் தரப்பில் யாரும் வராமல் பெண்கள்  அதாவது மாணவிகள் தனியே போவதும் லாஜிக் மிஸ்டேக்கே ( இதை குறிப்பிட்டு சொல்லக்காரணம் படத்தின் முக்கிய ட்விஸ்ட்டே இந்த இடத்தில் வருவதால் தான் )

14. க்ளைமாக்ஸில் வில்லன் திருந்துவது எல்லாம் விக்ரமன் டைப் பழைய ஸ்டைல். ரொம்ப செயற்கையா இருக்கு..அவரை விட்டா வேற ஆளே கிடையாதா என்ன? அந்த ஸ்கூலை காப்பாற்ற , முன்னின்று நடத்த?


http://moviegalleri.net/wp-content/gallery/saattai-movie-new-stills/saattai_movie_new_stills_samuthirakani_magima_ajmal_khan_9b17c6f.jpg


இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோவை பி டி மாஸ்டராக காட்டி இருக்கலாம்.அவர் பாடி லேங்குவேஜ், உயரம் எல்லாத்துக்கும் மேட்சா இருந்திருக்கும்


2. அரசுப்பள்ளியின் அவலம் குறித்து சொன்னதெல்லாம் சரிதான். அதுக்கு என்ன தீர்வு என்பதை படத்தில் சொல்லவே இல்லை.. அரசுப்பள்ளியில் படிப்பவருக்கே அரசாங்க வேலை என்று அறிவிக்க வேண்டும் என்றோ அரசுப்பள்ளி மாணவர்களுக்கே அரசுப்பணியில் முன்னுரிமை என்றோ வாதிடுவது மாதிரி காட்சி வைத்திருக்கலாம்.


3. க்ளைமாக்ஸ் திரைக்கதையின் போக்கில் தேவை இல்லாமல் ஹீரோவை தூக்கி நிறுத்தும் ஒளி விளக்கு எம் ஜி ஆர் மாதிரி இறைவா உன் மாளிகையில் பாடல் போடாதது ஒன்று தான் குறை.. கே பாலச்சந்தரின் வானமே எல்லை க்ளைமாக்ஸ் முகத்தில் அறைவது போல் இருந்தது அது போல் அரசுப்பள்ளி சார்பாக சீன் யோசிச்சு இருக்கலாம்..


http://moviegalleri.net/wp-content/gallery/sattai-movie-stills/sattai_movie_stills_4718.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 50


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று



 சி.பி கமெண்ட் - மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சமூக நல ஆர்வலர்கள் அனைவரும் பார்த்து கற்றுக்கொள்ள , பின் பற்ற ஏகப்பட்ட மேட்டர்கள் இருப்பதால் எல்லாரும் பார்த்துடுங்க. டோண்ட் மிஸ் இட்..



டிஸ்கி - படத்தின் மனம் கவர்ந்த வசனங்கள் 72.. அவற்றில் எடிட்டிங்கில் தேர்வான 52 பளீர் வசனங்களை தனி பதிவாக பின்னர் போடுகிறேன்.. இவ்வளவு குறை சொல்லி எதுக்கு  50 மார்க்னா  இது எல்லோரும் பார்க்க வேண்டிய சமூக சீர்திருத்தப்படம் என்பதால் குறைகளை பின் தள்ளி நிறைகளை  பின் பற்ற..

சாருலதா -http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
http://www.moviephotos.in/tamil/movies/sattai/saattai-new-movie-stills-9.jpg

Friday, September 14, 2012

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

http://www.ithayakkani.com/ITHAYAKKANI/OpenFile?r1=speeches&r2=/doc_Aug_27_2012_0_24_2_AM1.jpg



எம் ஜி ஆர் ஃபார்முலா, ரஜினி ஃபார்முலா மாதிரி எம் சசிகுமார் ஃபார்முலா என்று ஒன்று உருவாகி வருது.. நண்பர்களுக்காக  உயிரையும் கொடுக்கலாம், காதலர்களை சேர்த்து வைத்தல், காதலை மதித்தல் இதான் அந்த ஃபார்முலா .சுப்ரமணியபுரம்,நாடோடிகள் படத்தை தொடர்ந்து  இந்த முறையும்  சசிகுமார் அந்த ஃபார்முலாவில் ஜெயிச்சிருக்கார்.. ( போராளி,ஈசன் 2ம் சறுக்கல்)


ஹீரோவோட ஃபிரண்ட் பஸ்ல ரெகுலரா ஒரு பொண்ணை 5 மாசமா சைட்டிங்க்..சொல்ல தைரியம் இல்லை.. ஹீரோ கிட்டே உதவி கேட்கறாரு.. ஹீரோ நண்பன் கூடவே அந்த பஸ்சில் போய்ட்டு வந்துட்டு இருக்கார்.. அப்போ ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அதே பொண்ணை அதே பஸ்ல 7 மாசமா சைட் அடிக்கறார்.. அவரும் ஹீரோ கிட்டே உதவி கேட்கறார்.. 


 இப்போ ஒரு டீலிங்க்.. ஒரு மாசம் ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அந்த பொண்ணை ரூட் விட வேண்டியது செட் ஆகலைன்னா அடுத்து இவர் ரூட் விடுவாரு.. இதுதான் டீலிங்க்.. அவருக்கு தோல்வி... அடுத்து இவர் முறை.. ஹீரோ நண்பனுக்காக  தூது போறாரு ..  இந்த கலாட்டா சம்பவங்கள் எல்லாம் அட்ட கத்தி, பார்த்தேன் ரசித்தேன் மாதிரி ஜாலியா இடைவேளை வரை போகுது.. 



 இடைவேளை ட்விஸ்ட்.. அந்தப்பொண்ணு அதான் ஹீரொயின் ஹீரோவை லவ் பண்ணுது.. இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. நம்ம ஹீரோ தான் அந்த பொண்ணை முத முத லவ் யூ சொல்லி அப்ரோச் பண்ணினது.. ஆனா அப்போ பாப்பா மைனர்.. அதனால ஒண்ணும் சொல்லலை.. இப்போ மேஜர் . ஓக்கே சொல்லிடுது.. ( இதனால நமக்கு தெரிய வரும் நீதி என்னான்னா பொண்ணு வயசுக்கு வந்து குடிசைல சீர் பண்ண உக்கார வைக்கறப்பவே கர்சீப்பையோ துண்டையோ போட்டு இடம் பிடிச்சுடனும்,, கவர்மெண்ட் ஆஃபீஸ் மாதிரி சீனியருக்குத்தான் மரியாதை.. )


இப்போ பஸ்ல  எல்லாருக்கும் ஹீரோ ஹீரோயின் லவ்வர்ஸ்னு தெரிஞ்சுடுது.. ஹீரோவோட ஃபிரண்ட் கூட அதை ஏத்துக்கறார். ஆனா ஹீரோவோட ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அதை ஏத்துக்கலை.. ஹீரோயின் கிட்டே தகறாரு பண்றான்.. ஒரு கைகலப்புல  ஓடற பஸ்ல இருந்து அவன் கீழே விழுந்து ஹீரோ மேல கொலைக்கேசு.. ஜெயிலுக்கு போயிடறாரு..  இடைவேளை.. 


http://www.cineulagam.com/photos/full/movies/sundarapandian_003.jpg


இதுக்குப்பிறகு  திரைக்கதைல 2 முக்கியத்திருப்பம் இருக்கு.  அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  ஹீரோ & ஹீரோயின் சேர்ந்தாங்களா? கொலைப்பழியில் இருந்து ஹீரோ தப்பிச்சாரா? என்பதுதான் கதை.. 



படத்தோட முதல் ஹீரோ  திரைக்கதை ஆசிரியர் தான்.. எம் சசிகுமார்ட்ட அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணி அவர் கிட்டே சான்ஸ் கேட்க கூச்சப்பட்டு வெளி ஆட்களிடம் கதை சொல்லி வந்திருக்கார்.. அந்த கதையை கேள்விப்பட்டு சசியே வாய்ப்பு கொடுத்திருக்கார்..  சசி ஃபார்முலாவை கப்னு பிடிச்சிருக்கார்.. 


 ஹீரோவா வரும் சசிகுமார்க்கு இது ரெடிமேட் சர்ட் மாதிரி.. சாதாரணமா பொருந்தி இருக்கு..ஹேர் ஸ்டைல் , தோற்றத்தில் டி ஆர் , ஸ்டைலில் வலியப்புகுத்திய ரஜினி ஸ்டைல், நடன அசைவுகளில் எஸ் ஜே சூர்யா என மிக்சிங்க் பர்சனாலிட்டி ..   நண்பர்களுக்காக அவர் பேசும் வசனங்கள் எல்லாம் வழக்கம் போல் கிளாப்ஸ் அள்ளிக்குது..


 ஆல்ரெடி இவருக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்குன பிறகும்  இவர் ஏன் ரஜினி ரசிகன்னு சொல்லிட்டு அவர் ஸ்டைலில் வருவதும், ஆண் பாவம்  ஆர் பாண்டியராஜன் ஸ்டைலில்  கிழவிகளுடன் காமெடி செய்வதும் ஏன்? புதுமுக நடிகர்கள் தான் ஒரு அங்கீகாரத்துக்காக அப்டி ரஜினி பேரை சொல்லிட்டு இருப்பாங்க..  க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் சாணக்யன், தேவர் மகன் கமல் மாதிரி பாடி லேங்குவேஜில் கலக்குகிறார்.. அந்த சண்டைக்காட்சியில்  அவரது நடை ,வீச்சு , ஆக்ரோஷம் செம செம.. 



 ஹீரோயின் புதுமுகம் , கும்கி படத்தில்  முதல் முதலாக புக் ஆனாலும் ரிலீஸ் ஆவதில் இது முந்திக்கொண்டது.. லட்சுமிமேணன் பேரு.. குங்குமச்சிமிழ் இளவரசி மாதிரி முகபாவனை சதா மாதிரி சிரிப்பழகு என மனதை கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்பு.. உண்மையில் ஹீரோவை விட  உயரமானவர்..  சொன்னா நம்ப மாட்டீங்க.. 15 வயசுதானாம்..  



 மேல் உதடு கீழ் உதடு இரண்டும் ஒரே அளவில் கொண்ட மிகச்சில  நடிகைகளில் இவரும் ஒருவர்.. ஒப்பனை இல்லாத , பவுடர் பூச்சோ லிப்ஸ்டிக் தீற்றலோ இல்லாமலேயே அழகு உள்ள முகம்.  ஒரே ஒரு குறை இடது கண் கீழே ஒரு சின்ன தழும்பு.. கேமரா கோணம் அதை மறைத்திருந்தால் இன்னும் செமயா இருந்திருக்கும்.. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.. ஆடை வடிவமைப்பு, உடுத்தி இருக்கும் விதம் எல்லாவற்றிலும் கண்ணியம்..


ஹீரோவின் நண்பர்களாக வருவதில் புரோட்டா சூரி வழக்கம் போல் காமெடி பண்ண முயற்சித்து இருக்கார்.. அப்புக்குட்டி 2 படங்களில் ஹீரோவாக நடித்தும் இதில் கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரோல் பண்ணி இருக்கார். அதுக்கு ஒரு சபாஷ்.. அவர் நடிப்பும் அருமை..ஹீரோவின் உயரமான ஃபிரண்டா வரும்  சவுந்தர் ராஜா ஆள் நல்ல பர்சனாலிட்டி.. அவர் நடிப்பும் ஓக்கே..  வில்லனாக வருபர்கள் நடிப்பும் பக்கா..  எனிகோ ( அறிவழகன்) நடிப்பு கனகச்சிதம்
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/sundarapandian-audio-launch.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. காதல் ஒரு பொய்யடா பாடல் காட்சி, கண்களில் உந்தன் காதலை நான் கண்டேன் பாடல் காட்சி ( இதில் ஆத்தங்கரை மரமே , அரச மர இலையே பாடலில் வரும் சரண வரிகளான மாமனே உன்னைச்சேராம  பாட்டின் வரி மெட்டை அப்படியே நைசாக சுட்டிருக்காங்க,.,. ஆனாலும் இனிமை தான் ) இந்த பாடல்காட்சிகள் அழகு.. 

2. ஹீரோ ஹீரோயினிடம் தனிமையில் பேச சந்தில் நிற்கையில் கூட வந்த தோழியை தலையில் குட்டி குறும்புடன் துரத்துவது அக்மார்க் சசிகுமார் டச் ( இந்த டச்சை எல்லாரும் ஃபாலோ பண்ணிக்கலாம் , பிற்காலத்துல யூஸ் ஆகும் ;-0 )


3. ஹீரோயின் காதல் விஷயம் தெரிஞ்ச பின் ஹீரோயினை பிரெயின் வாஷ் பண்ண வரும் சித்தி கேரக்டர் கலக்கல் நடிப்பு.. அநாயசமான வசன உச்சரிப்பு.. 



4. ஆங்காங்கே பளிச்சிடும் புத்திசாலித்தனமான வசனங்கள் .. திரைக்கதையில் ஸ்பீடு வித்தை.. 


http://nellaionline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/Sundarapandian_10.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ அழகான மாவுக்கோலத்தில் செருப்புக்காலுடன் மிதித்து நிற்பது.. ஆன்மீகப்பார்வை, செண்டிமெண்ட் பார்வை, பகுத்தறிவுப்பார்வை எதிலுமே அதை ஒத்துக்க முடியாதே? 


2. படத்தின் கதைக்கும் ஹீரோ ரஜினி ரசிகர் என்பதற்கும் என்ன சம்பந்தம்? ரசிகர்கள் கைதட்டல் பெறவா? 



3. பொதுவா ஒரு பொண்ணு ஒருத்தனை லவ் பண்றது தெரிஞ்சுட்டா நம்ம ஆளுங்க விலகிடுவானுங்க.. அடுத்த பட்சிக்கு ரூட் விடுவாங்க . ஆனா நிஜத்தில் கோழையான அப்புக்குட்டி ( ஐ மீன் கதைப்படி கோழை) ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றது தெரிஞ்சும் “ எனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தா நான் இன்னும் ட்ரை பண்ணி பார்ப்பேன் என வாக்குவாதம் செய்வது செயற்கை.)



4. பொதுவா எந்த பிரச்சனை வந்தாலும் ஹீரோ அந்த பிரச்சனையை ஒரு தனிமையான இடத்துல சம்பந்தப்பட்ட .  நபரை அழைச்சுப்போய் பேசும் வழக்கம் உள்ளவரா  வரும் பொறுமை சாலி ஹீரோ இடைவேளை ட்விஸ்ட்டுக்காக ஆத்திரப்பட்டு ஓடும் பஸ்ஸில்  தகராறு செய்வது உறுத்தல்



5. ஹீரோ ஜெயிலுக்குப்போன பின் ஹீரோயின் வீட்டில் ஏக கெடுபுடி.. ஆனா எல்லார் முன்னாலயும் ஹீரோ கூட அவர் ஃபோன்ல கடலை போடறார்.. 



6. பொதுவா கிராமத்து பொண்ணுங்க கோபமோ, அழுகையோ, சிரிப்போ அதை அப்படியே வெளிக்காட்டிடுவாங்க , நகரத்துப்பொண்ணுங்க தான் உள்ளே ஒண்ணு வெளில ஒண்ணுன்னு நடிப்பாங்க.. ஆனா கிராமத்துப்பொண்ணா வர்ற ஹீரோயின் ஹீரோ ஜெயிலுக்குப்போன பின்பும் எந்த ரீ ஆக்‌ஷனும் காட்டாமல் இருப்பதும், பின் ஹீரோவை சந்திக்கும்போது அசால்ட்டாக பேசுவதும் முரண் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv36Umx9O9k25rY69b6X39qAnSmpsELRkcW-TJZlhIXI5suAcWDIZZ9oL45iRiP31kRb68iJpN5nwpIEZ3rldTOiVgaLg_0sCNzIiP8A08sjRa7kB7n0tIu4VZIz8biv6FD2vkNZj9DK4/s1600/sundarapandian.jpg
7. ஹீரோயினுக்கு சிரிச்ச முகம்.. அப்போதான் அழகாவும் இருக்கார்.. ஆனா இயக்குநர் ஏன் அவரை உம்மனாம்மூஞ்சி மாதிரி, சிடு சிடு சின்மயி மாதிரி கேரக்டரா காட்டனும்? தேவையே இல்லையே? 


 8. கேமராமேன் ஏன் எப்போ பாரு கேமராவை க்ளோசப்ல ஹீரோயின் இடது கன்னத்துலயே வைக்கறாரு?அங்கே தான் தழும்பு இருக்குன்னு தெரியுதல்ல? 


9. படத்தோட கதை இடைவேளைக்குப்பிறகு நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சுப்ரமணிய புரம் டிராக்லயே ஏன் போகுது?



10. மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி மண்டபத்துல எல்லாரும் இருக்கும்போது ஹீரோ ஏன் நண்பன் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டான்னு அந்த அத்துவானக்காட்டுக்கு போறாரு? செல் ஃபோன்ல பேசலாம்.. அவனை இங்கே வரச்சொல்லி பேசலாம்.. 


11. ஹீரோ படு காயம் அடையறாரு.. அது போதாதுன்னு  நடு முதுகில் அரை அடி ஆழத்துக்கு  கத்தியால குத்திடறாங்க.. அதுக்குப்பின் அவர் நடக்கறதே கஷ்டம்.. பிழைப்பதும் கஷ்டம்.. ஆனா அவர்  4 பேரை துரத்தி துரத்தி அடிக்கறாரு.. 


12. இந்தப்படத்துக்கு மார்க்கெட்டிங்க் மேனேஜர் யாரு? மீடியாவில் , டி வி யில் பரபரப்பான விளம்பரம் ஏதும் பண்ணலை. ஒரு ஹிட் படத்துக்கு இப்படியா ஓபனிங்க் இருக்கும்? ரிலீஸ் டேட்க்கு ஒரு வாரம் முன்னால க்ளிப்பிங்க்ஸ் டி வி லபோட்டு பட்டாசைக்கிளப்பி இருந்தா செம ஓப்பனிங்க் ஆகி இருக்குமே? இனி படம் பிக்கப் ஆகி ஓடுறது வேற கணக்கு.. அப்புறம் மார்க்கெட்டிங்க் க்கு என்ன மரியாதை? 


13. ஹீரோயின் அப்பா திடீர்னு மனசு மாறுவது நாடகத்தனம்.. கல்யாணப்பத்திரிக்கை அடிக்கும்போது அவருக்கு ஹீரோ நல்லவர்னு தெரியலையா? 


14. பாரதிராஜா முதல் பாலச்சந்தர் வரை ஜாதியை மையமா வெச்சு படம் எடுக்கறவங்க யாருமே நேரடியா ஜாதிப்பெயரை சொல்ல மாட்டாங்க  பெரும்பாலும், ஆனா இந்தப்படத்துல தேவர் ஜாதியை தூக்கி வெச்சுப்பேசும் வசனங்கள் காட்சிகள்  வருதே ஏன்? ( பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை காலண்டரில் காட்டுவது, அவர் புகழ் ஆங்காங்கே பாடுவது )
 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/30657_1.jpga


மனம் கவர்ந்த வசனங்கள்

1. எத்தனையோ பேர் வாக்கு தவறி இருக்கலாம.ஆனா அதுக்கு அவங்க நாக்கு சுத்தம் இல்லைன்னு அர்த்தம் இல்லை.சூழ்நிலை சரி இல்லாம போயிருக்கும்


2.  டேய், குத்துனது அவன் தான்னு ஏன் சொல்லலை? சொல்லி இருந்தா ஊரே அவனை கும்மி இருக்குமே? 

 நம்மை கொலை பண்ண வந்தது நம்ம நண்பன்னா அவன் பேரைக்கூட காட்டிக்குடுக்கக்கூடாது, அதாண்டா நட்பு 


3. பெரியவங்க நம்ம கிட்டே நாம வெளில போறப்ப பார்த்து போ பார்த்து பழகும்பாங்க.. இப்படி கூட பழகுன நண்பர்களே துரோகம் பண்ணுனா அப்புறம் எப்படி பழக? போங்கடா.. 


4. என்ன மாம்ஸ் கிளம்பிட்டே? 


 கல்யாண வீட்டுக்கெல்லாம் வந்தமா? சாப்பிட்டமா? போனோமா?ன்னு இருக்கனும், உன்னை மாதிரி பாயை போட்டு படுத்துட்டு இருக்கக்கூடாது.. 


5. பதறாம இருந்தா பாதி வேலை முடிஞ்ச மாதிரி 



6. சில விஷயங்கள்ல நாம விட்டுத்தான் பிடிக்கனும்\..


7. விட்டுத்தான் பிடிக்கனும்\..னு என் சித்தி சதித்திட்டம் போடறா.. எனக்கும்  அதே போல் விட்டுத்தான் பிடிக்கனும்\..னு தோணும்னு அவளுக்கு தெரியலை


8. ஏண்டா, ஹெல்ப் பண்றேன்னு சொல்லி ஃபிகரை கொத்திட்டு போவே, அதை பார்த்து நான் பொத்திட்டு போகனுமா? 


9.  பார்க்க பொரி உருண்டை மாதிரி இருக்கான், ஆனா செமயா காமெடி பண்ணுவான்.


 டேய். நான் எங்கடா காமெடி பண்ணேன்? என்னை வெச்சு நீங்க தான் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. 


10.  படிக்கறப்பதான் என்னை படிக்க விடலை.. இப்போ நான் தொழில் பண்ற இடத்திலும் ஏண்டா வந்து உசிரை வாங்கறீங்க? 


 நான் சொல்லலை? காமெடி பண்ணுவான்னு.. ? 


11. நீங்க எத்தனை மாசமா அவளை லவ்வறீங்க? 

 7 மாசமா

 நீ?

 5 மாசமா.. 

 அப்போ அவன் தான் சீனியர்.



12. என்னடி? உன்னை ஏலம் விட்டது போய் இப்போ முத மாசம், அடுத்த மாசம்னு காண்ட்ராக்ட் விட்டுட்டு இருக்கானுங்க./? 


13. .யோவ், வேற வேலை இருந்தா போய் பார்யா.. எனக்கு லவ் எல்லாம் இல்லை..


 அட, நமக்கு வேலையே இதாங்க..



14. எதிரியே இல்லாம போனா நாம வாழ்வோம், ஆனா வளர மாட்டோம்


15. இன்னைக்கு என் காதலை சொல்லலை

 =ஏண்டா?

  இன்னைக்கு ராகுகாலம்..



16. நீ ஏண்டி பதட்டமா இருக்கே?

 அவன் அவசரத்துல உன் கிட்டே லவ்வை சொல்லாம என் கிட்டே லவ்வை சொல்லிட்டா?



17. லவ்வை சொல்ற மாதிரியாடா போனே? என்னமோ அவ செயினை அத்துட்டுப்போறவனாட்டம்..


18. உங்க ஃபிரண்ட் துரத்துன பொண்னை நீங்க லவ் பண்ணலாம், நீங்க துரத்துன பொண்ணை நான் லவ் பண்ணக்கூடாதா? என்ன லாஜிக் இது?


19. பொண்ணுங்க நினைச்சா யானையை பூனை ஆக்குவாங்க, பூனையை யானை ஆக்குவாங்க.. ( மொத்தத்துல சோறு மட்டும் ஒழுங்கா ஆக்க மாட்டாங்க ? - சி பி )


20. கஷ்டம் வர்றப்போ காதலனையே கட்டி இருக்கலாம்னு தோணும், சந்தோஷமா இருக்கும்போது கட்டுனவனே ஓக்கேன்னு தோணும் டி,



21. எதுக்கு சத்தம் போடனும்? சத்தம் போடாம எதை சாதிக்கனும்னு தெரிஞ்சு வெச்சுக்கனும்


22. அப்போ எனக்குக்குடுத்த வாக்கு?

 வாக்கு முக்கியமா? வாழ்க்கை முக்கியமா?.


23. கூடப்பழகிட்டு இருந்தவனுக்கு துரோகம் பண்ணிட்டு ஒரு மேரேஜ் தேவையா?


http://www.tamilspy.com/wp-content/uploads/2012/07/soorya.jpg


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 



 சி பி கமெண்ட் - செம ஜாலி எண்ட்டர்டெயிண்ட்மென்ட் இடைவேளை வரை.,. அதுக்குப்பின் த்ரில்லர்.. பெண்களும் பார்க்கலாம்/./ 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. .

Monday, September 10, 2012

மன்னாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9AZAv40G6mDw1dUN3p6_ZuiNUwnbcvMlhH6YwjtT1t1-Ny4SaDjQ0n3BW42CiF4Iwl-n_Mwa7J7bMlU5-volmtKN2FToINtaFkrXjShJEg-QSadQIPmrQ0tUr2TZ2w2mynUg4g5qtO45N/s640/Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3).jpg ஒரு ஊர்ல ஒரு லவ் ஜோடி ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல மேரேஜ் பண்ணிக்கறாங்க. ஊரை விட்டு ஓட பிளான். வில்லன்கள் துரத்திட்டு வர்றாங்க. மாப்ளை பொண்ணு கூட போக முடியலை.. டக்னு தன் நண்பனை தன் மனைவி கூட அனுப்பி வைக்கறார். மாப்ளை வில்லன்கள் கிட்டே மாட்டிக்கறார். அவரை அடைச்சு வெச்சுடறாங்க.. 


 இப்போ அந்த பொண்ணு, மாப்ளையின் நண்பன் 2 பேரும் கொடைக்கானல் ல லாட்ஜ்ல ஒரே ரூமில் தங்க வேண்டிய சூழ்நிலை.. அப்புறம் மாப்ளையின் நண்பன் தன் ஊருக்கு அவளை கூட்டிட்டுப்போனா அங்கே அவனோட காதலி , ஊர் பெருசுங்க..  என்ன ஆச்சு? எப்படி இந்த இடி ஆப்பச்சிக்கலுக்கு விடை கிடைச்சது என்பதை அனுபவம் குறைவான திரைக்கதையால் சொதப்பி இருப்பதே மன்னாரு.. 



 இந்த கதையை திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் டைரக்‌ஷன்ல யதார்த்த நாயகன் சேரன் ஹீரோவா நடிச்சிருந்தா கனகச்சிதமா இருந்திருக்கும்.. மிஸ் பண்ணிட்டாங்க..


 ஹீரோ அழகர் சாமியின் குதிரை ஹீரோ அப்புக்குட்டி.. படத்தின் முன் பாதியில்  ஆங்காங்கே எரிச்சல் படுத்தும் நடிப்பா இருந்தாலும் இடைவேளைக்குப்பின் அபாரமான நடிப்பு.. இவர் இயல்பாய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் அழகு.. ஆனால் செயற்கையாய்  செய்யும் பல இடங்கள் கடுப்படிப்பு.. 


 ஹீரோயின் ராட்டினம் ஹீரோயின் ஸ்வாதி .மிக கச்சிதமான , பொருத்தமான  தேர்வு.துளியும் ஓவர் ஆக்டிங்க் பண்ணாமல் அச்சு அசலாக அந்த கேரக்டரை முன்னிறுத்துகிறார். கண்ணியமான தோற்றம், கவுரவமான ஆடை வடிவமைப்பு , குடும்பப்பாங்கான தோற்றத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு இவரை இனிமே செலக்ட் பண்ணலாம்.


http://l2.yimg.com/bt/api/res/1.2/qIohxAfyGNtf1s8DNeH7Tg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212333019.jpg



தம்பி ராமையா தான் படத்துக்கு வசனம். அதுக்காக அவர் படத்துல பேசிப்பேசிக்கொல்லனுமா? மைனா படத்துல எந்த அளவு  ரசிக்க வெச்சாரோ அதே அளவு இதுல கடுப்பேத்துறார்.


ஹீரோவின் மாமா பெண்ணாக வரும்  அந்தப்பொண்ணு மேக்கப் போடாம இயல்பா சில காட்சிகளிலும், ஓவர் ஆக்டிங்கா பல காட்சிகளிலும் வருது.


http://www.thaalamcinema.com/uploads/news/original/-MA469318.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. பெண்களைக்கவரும் பாக்யராஜ் ஸ்டைலில் கதை தேர்ந்தெடுத்தது, அழகான ஹீரோயின் செலக்‌ஷன்,ரம்மியமான ஒளிப்பதிவு



2. இங்கே எதுவுமே சரி இல்லை பாடலும், கரகாட்டக்கார பாடலும் துள்ளலான நாட்டுப்புற இசையும் கலக்கல்.. அப்படியே கிராமத்து இசையை, நடனத்தை கண் முன் நிறுத்துது ( பாட்டும் ராமையா தானாம்)


3. இடைவேளை வரை திரைக்கதையை வேகமாக நகர்த்தியது, கொடைக்கானல் லொக்கேஷன்கள்

http://l1.yimg.com/bt/api/res/1.2/oY4JDtnI.0sgMtdND04l5w--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212382399.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அண்ணே! வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க



ஓடற வண்டியை நிறுத்தச்சொல்றியே?



பின்னே? நிக்கற வண்டியையா நிறுத்தச்சொல்வாங்க?



2. அய்யா என் ஊரு  தாண்டிக்குடி, எனக்கு ஒரு டிக்கெட் குடுங்க



 தியேட்டருக்கு வந்தா டிக்கெட் மட்டும் கேளுங்க. ஊர்ப்பேர் எல்லாம் சொல்லி ஏன் கேவலப்படுத்தறீங்க?



3. நாம இப்போ எங்கேடா போறோம்?



மேரேஜ்க்கு



யார் மேரேஜ்க்கு?



என் மேரேஜ்க்குத்தான், ஹி ஹி



4. உழைக்கறவன் கைல ஒரு மோதிரம் கூட இல்லை, ஆனா மொதலாளிங்க கைல  10 விரல்லயும் மோதரம்



5. எனக்கும், என் நண்பன் மனைவிக்கும் ஒரு ரூம் வேணும்.



அடப்பாவிங்களா. இப்போ எல்லாம் இப்படி எல்லாம் ஓப்பனா கேட்க ஆரம்பிச்சுட்டீங்களா?



6. நான் சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க.




 ஏன்?



 அவளவ் மரியாதை என் மேல .



7. இந்த ஊர்த்தலைவர் யார் தெரியுமா? நாந்தேன்..




 இப்போதானே சொன்னீரு?



மறந்துட்டீன்னா?



8. கரகாட்டக்காரி வனஜாவை கற்பாழிக்கப்போறாங்க போல. வாங்க நாமும் போவோம்//


அய்யய்யோ எதுக்கு?


 அடச்சே, அவளைக்காப்பாத்த.



9. நான் ஒருத்தன் மட்டும் படிச்சவனா இருக்கறதால இந்த ஊர்ல எத்தனை பிரச்சனைகளை சமாளீக்க வேண்டியதா இருக்கு?



10. அவன் நெம்பர் ஒன் குடிகாரன்.



அப்போ நீ யாருவே? நெம்பர் டூ  குடிகாரனா?



11. இது என்ன கழுத்தா? தாலி கட்ற மரமா?  எதுக்கு ஆளாளுக்கு  என் கழுத்துல தாலி கட்ட திட்டம் போடறீங்க?



http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_113532000000.jpg

யக்குநரிடம் சில பல கேள்விகள்



1. காதலிக்கறவனுக்கு முதல்ல தைரியம் தான் வேணும். பதிவுத்திருமணம் நடந்த பின் ஏன் வில்லன்களுக்கு பயந்து  மாப்ளை தன் கல்யாண டிரஸ்சை  ஹீரோவுக்கு போட்டு விடறாரு?அவர் மாட்னா பரவாயில்லையா?


2. பஸ் ஸ்டேண்ட்ல மாப்ளை, பொண்ணு , ஹீரோ 3 பேரும் நிக்கறாங்க. வில்லன்கள் அங்கே வர்றாங்க. எதுக்கு மாப்ளை லூஸ் மாதிரி ஹீரோவை நீ என் சம்சாரத்தை கூட்டிட்டு போ. நான் பின்னாலயே வர்றேன்னு சொல்றான்/ அவன் லூஸா? மிக்சர் பார்ட்டியா? தியாகியா? கேனமா? படத்தோட முக்கியமான இந்த காட்சில மாப்ளை ஏன் ஹீரொவை தன் மனைவி கூட அனுப்பறார்னு காரணம் சரியா சொல்ல வேணாமா?


3. மாப்ளை ஒரு சீன்ல சாஃப்ட்வேர் கம்பெனில 3 வருஷம் வேலை செஞ்சதா சொல்றாரு. பொண்ணும் தான். அப்படி இருக்கும்போது சாட்சிக்கையெழுத்து போட யாருமே வர்லையே, ஏன்?


4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம திருநங்கைகளை கேவலப்படுத்தி ஒரு பாட்டு சீன் இருக்கு. எதுக்கு? இந்த லட்சணத்துல ஆர் பாண்டியராஜன் அந்த பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப்போறாரு? அவர் என்ன சாரு நிவேதிதாவா? கிளாமர்க்கு யூஸ் பண்ணிக்க?


5. ஹீரோவோட மாமா பொண்ணு மல்லிகா கிணத்துல தண்ணி சேந்திட்டு இருக்கு. அப்போ ஒரு பொண்ணு வந்து “ உன் மாமன் வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கார்”னு சொல்லுது.  உடனே மல்லிகா சேந்திட்டு இருந்த குடத்தை அப்படியே கிணத்துல தொபுக்கடீர்னு போட்டுட்டு காலியான குடம் ஒண்ணை எடுத்துட்டு போகுது. அங்கே மாமனை பார்த்ததும் அதிர்ச்சில குடத்தை கீழே போடுது. அப்போ தண்ணீர் ஃபுல்லா கொட்டுது. எப்படி? கர்நாடகாக்காரன் தண்ணி குடுத்தானா?


6. ஹீரோவோட மாமா பொண்ணு கிட்டே ஹீரோயின் தனியா கூட்டிட்டுப்போய் இந்த மாதிரி விஷயம், உன் மாமா உன்னைத்தான் நினைக்கறார்னு சொல்லிட்டா 4 வது ரீல்லயே படம் ஓவர்.. ஆனா அவ கடைசி வரைக்கும் அப்படி சொல்லவே இல்லை..



7. ஹீரோ அழகை பற்றி நான் சொல்றதா நினைக்க வேண்டாம். அவர் முகத்தை எதுக்கு அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்டனும்? ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயா இருந்தாலும் சில கோணங்கள்ல அழகு கம்மியா தெரிவாங்க.. அந்த ஆங்கிள்களை அவாய்டு பண்ணனும் . ஹீரோ பல் துலக்காத காரை பற்களை, எண்ணெய் பூசாத தலை முடியை அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்றீங்களே, ஏன்.. கலா மாஸ்டரை க்ளோசப்ல காட்டுன மாதிரி.. உவ்வே..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgazXhCfxOjd0jcrRz4K4NTZHgXKpR7wzCHtTKeKLmn947VWySXYcWS821fDdQvG-cKl4yHrEX1UW-5MLQqf5HNjpRbdyuyAJxPrl-apguag3a5iKT_juxL1YqiEruAoR6AmVs9yfUitO__/s1600/tamil-movies-mannaru-movie-audio-launch15.jpg

8. ஹீரோ ஒரு ஆட்டை திருடுனாருன்னு ஊர் மக்கள் முன்னால அவரை கட்டி வெச்சு ஹீரோவோட அப்பாவே அடிப்பதும், ஆடு திருடு போகலை, கட்டை அவுத்துட்டுப்போயிடுச்சு என்று ஒரு ஆள் வந்து சொல்வதும் 1980 டைப் அரதப்பழசான செண்ட்டிமென்ட் காட்சிகள். ஒட்டவே இல்லை.. இந்தக்காலத்துல  1000 கோடி அடிச்சவனை ஒரு அடி வைக்க முடியலை, ஆடு திருடுனதுக்கு அவ்ளவ் அடியா?


9. ஹீரோவுக்கும், நண்பனின் மனைவிக்கும் எந்த மேட்டரும் இல்லை, ஜோடி சேரப்போவதில்லை. எதுக்கு தேவை இல்லாம  ஹீரோ மேல் நல்ல அபிப்ராயம் அவளுக்கு வர்ற மாதிரி வரிசையா சீன் வெச்சீங்க?



10 . இந்த திரைக்கதையின் முக்கிய மைனஸ் என்ன தெரியுமா? ஆடியன்ஸ் மனசுல ஹீரோவும், அந்த நண்பன் மனைவியும் ஒண்ணு சேர்ந்துடுவாங்களா? என்ற நினைப்பை ஏற்படுத்தனும்.. பதை பதைப்பை கொண்டு  வரனும். ஆனா ஹீரோ யார் கூட சேர்ந்தா நமக்கென்ன? சேராட்டி நமக்கென்ன? என்ற அலட்சியம் தான் வருது..


11. ஒரு சீன்ல மாப்ளை ஒரு ரூம்ல அடைச்சு வைக்கப்பட்டிருக்கார். அவரை சுத்தி வேட்டை நாய்கள் 12 இருக்கு.. அதை எல்லாம் தூங்க வெச்சுட்டு அண்ணன் எஸ் ஆகறார். யோவ்.. நாய்ங்க என்ன கும்ப கர்ணன்களா? அப்படித்தூங்க? தூக்க மருந்தோ, மயக்க மருந்தோ தராம எந்த நாயும் அப்படித்தூங்க சான்ஸே இல்லை..


12. ஆனானப்பட்ட கமல் ஹாசனே அபூர்வ சகோதரர்கள் படத்துல சேர்ல கட்டி வெச்ச சீன்ல அடக்கி வாசிச்சாரு. இந்தப்படத்துல மாப்ளை சேர்ல கட்டி வெச்சாலும் அதை எல்லாம் உடைச்சுட்டு 8 பேரை ஃபைட் போட்டு காலி பண்றாரு..  யப்பா...


13. மாப்ளையும், பொண்ணும் மேரேஜ் பண்ணிட்டாங்க, எம் எல் ஏவோட பையனுக்கு நிச்சயம் ஆன பொண்ணு. மாப்ளையை பிடிச்சிடறாங்க. முதல் வேலையா என்ன பண்ணுவாங்க? மாப்ளை கைல இருக்கற செல் ஃபோனை வாங்கி யார் யார் எல்லாம் கால் பண்றாங்க?ன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி பொண்ணோட இருப்பிடத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணுவாங்க. அதை விட்டுட்டு செல் ஃபோனை லூஸ் மாதிரி ஆஃப் பண்ணி வைப்பாங்களா?  பொண்ணு மாப்ளை செல்லுக்கு எப்போ ஃபோன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அந்த சீன் 2 டைம் வெச்சா பரவாயில்லை 8 டைமா?


14. ஹீரோ ஓப்பனிங்க் ஷாட்ல கில்மா படம் பார்க்க போறாரு. படம் போட்ட உடனே ஆடியன்ஸ் எங்கே பிட்டை காணோம்?னு ஆர்ப்பாட்டம் பண்றாங்க. இயக்குநர் இதுக்கு முன்னே பிட் படம் பார்த்ததே இல்லையா? இடைவேளைக்கு 5 நிமிஷம் முன்னால தான் பிட் வரும். கடைசி வரைக்கும் வர்லைன்னாத்தான் அப்படி சண்டை போடுவாங்க, சீட்டை கிழிப்பாங்க. அதுவரைக்கும் கமுக்கமா உக்காந்து படம் பார்ப்பான் இந்த மறத்தமிழன் ( ர்கள்)


15.  .  டைட்டில் வைக்கும்போது கேரக்டர் நேம் வைக்கனும்னா அந்த ஹீரோ மினிமம் 25 படமாவது நடிச்சிருக்கனும். அப்போத்தான் ஒரு கெத்து இருக்கும். வளரும் நடிகர்கள் படத்துக்கு கதைக்குத்தக்க டைட்டில் தான் வைக்கனும்,. இந்தப்படத்துக்கு நான் வைக்க நினைக்கும் டைட்டில் “ கை மாறிடுமோ ரோஜா? “ ( ஆர் கே செல்வமணி மன்னிக்க )

16. ஒரு சீன்ல ஹீரோயின் அதாவது ஹீரோவின் நண்பனின் மனைவி ஸ்வாதி ஹீரோ கேரக்டர் எவ்ளவ் யோக்கியம்னு வார்த்தைல சொல்றார். நான் தூக்கத்துல படுத்திருந்தப்போ சேலை விலகி இருக்கும், மாராப்பு நகர்ந்திருக்கும்னு.. அதை நாங்க எப்படி நம்பறது? காட்சியா அதை ஏன் எடுக்கலை? எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருந்திருக்கும், கில்மா சீனுக்கு கில்மா  ( இந்த கடைசி கேள்வி மட்டும் சும்மா ) 



http://gallery.southdreamz.com/cache/movie-launch/mannaru/exclusive-mannaru-movie-launch-stills-12_720_southdreamz.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - டைம் பாஸ் படம் தான் இது. பார்க்கலாம்... பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு  ஸ்டாரில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -1-பாகன் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html

2.  RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+-http://www.adrasaka.com/2012/09/raaz-3-18.html

 http://moviegalleri.net/wp-content/gallery/mannaru-movie-latest-stills/mannaru_movie_stills_3251.jpg

Tuesday, September 04, 2012

பெருமான் - சினிமா விமர்சனம்


நம்மூர் அரசியல்வாதி மாதிரி ஹீரோவுக்கு ஒரு எண்ணம், குறுக்கு வழில பெரிய ஆள் ஆகனும், கை நிறைய சம்பாதிக்கனும்..உழைச்சு சாப்பிட்டு ஒரு பாட்டு முடியறதுக்குள்ளே பெரிய ஆள் ஆகறது விக்ரமன் படத்துல தான் சாத்தியம்னு நினைக்கறவரு..

அவருக்கு ஒரு இல்லீகல் காண்டாக்ட் கிடைக்குது. சட்டத்துக்கு விரோதமா வெளிநாட்ல இருந்து 500 கோடி ரூபாயை  இந்தியாவுக்கு கொண்டு வந்துட்டா அவருக்கு கமிஷன் மட்டும் 21 கோடி . அடேங்கப்பா. செம ஆஃபர் ஆச்சே.. ஹீரோ அதை ஆ ராசா மாதிரி பல தில்லாலங்கடி வேலை செஞ்சு சக்சஸ் பண்ணிடறார். 



 கமிஷன் பணம் ஹாட் கேஷா கிடைக்குது. ( ஹாட் கேஷ்னா செம சூடா இருக்குமா?)பணம் குடுக்கும்போதே வில்லன் ஹீரோ கிட்டே பல கண்டிஷன்ஸ் எல்லாம் போடறாரு


1. தாம் தூம்னு செலவு பண்ணி பணம் நிறைய இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிடக்கூடாது.


2. என் ஆளுங்க எப்பவும் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வேவு பார்த்துட்டே இருப்பாங்க . ( ஏன் , அவனுங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லையா? )


3. மீறி போலீஸ்ல மாட்டற மாதிரி தோணுச்சுன்னா உன்னை போட்டுத்தள்ளிடுவோம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqvada6H2rH-Lghlwk9gIGmsnxWrfZjWZNFtBK4VI3ibCTxNllXZQOziiX5uDDe4960M-v2kejjg7Wdkn0afkz660T5XyiVFXj3myxkeGL0kPNef7S62AoF-Nf1G8o0juYqQ56inbd-1No/s640/peruman_movie_wallpapers_04.jpg


ஹீரோ அதுக்கு எல்லாம் ஓக்கே சொல்லிடறார்..பணத்தை பேங்க்ல போட முடியாது. செலவும் பண்ண முடியாது. அதனால அவர் ரூம்ல  படுக்கைக்கு கீழே, அங்கே இங்கேன்னு ஒளிச்சு வைக்கிறார். 


 அவரோட க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே வெளியூர் போறேன். வர ஒரு வாரம் ஆகும், மறுபடி பார்ப்போம்னு டகால்டி விட்டு தலை மறைவா இருக்கார்.


ஹீரோவோட அப்பா ஃபோன் பண்ணி அம்மா சீரியஸ்.. உடனே கிளம்பி ஊருக்கு வா அப்டினு சொல்லியும் ஹீரோ போகலை.. ஏன்னா  புதையலை பூதம் காக்கற மாதிரி  இவர் அந்த பணத்தை பாதுகத்துட்டு இருக்காரே.. இவருக்கு ஒரு காதலி..  அவருக்கு இந்த மேட்டர் தெரிஞ்சு இவரை வெறுக்கறார்.


 சொந்த அம்மாவையே பணத்துக்காக உதறுபவர் நாளை நம்மையும் அப்படி கழட்டி விட மாட்டார்னு என்ன நிச்சயம்?  ஊடல்.. ஹீரோவுக்கு செம டென்ஷன்.. இந்த பணத்தால நிம்மதி, உறவு , காதல் , திருப்தி, சந்தோஷம் நட்பு வட்டம் எல்லாம் போச்சு. 


 என்ன ஆகுது? என்பதே மிச்ச மீதிக்கதை..


ஹீரோவாக  அர்ஜூன்.. ம்ஹூம் அந்த தேசபக்தர் கம் ஜெய் ஹிந்த் அர்ஜூன் அல்ல. இது புதுசு..  நிர்மலா பெரிய சாமி மாதிரி இவருக்கு கணீர்க்குரல். நல்ல பிளஸ் பாயிண்ட்.. படம் கிட்டத்தட்ட ஹீரோவையே 80% நம்பி இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் இவரைச்சுற்றியே நகருது.. முதல்  படம் என்ற அளவில் ஓக்கே.. இவர் ஏன் எப்பவும் தாடியோட இருக்கார்?

ஹீரோயின் ஸ்ருதி .. சித்தார்த் நெத்தில நாமம் போட்டுட்டு ஐஸ்வர்யா தனுஷ் காதுல கம்மல் மாட்டி விட்டாரே அந்த ஸ்ருதி இல்லை.. இது வேற.. 50 மார்க் தான் தேறும்..  க்ளோசப் காட்சிகளில் அவர் அழகு குறைச்சாலாத்தான் தெரியுது.. 


 வில்லன் செம காமெடி.. இயக்குநருக்கு  ஹாரீஸ் ஜெயராஜ் மேல என்ன கோபமோ அதே மாதிரி உருவத்தோற்றம் உள்ளவரை நடிக்க வெச்சிருக்கார். ஹேர் ஸ்டைல் கூட அதே போல். 


http://www.cinemobita.com/uploads/images/a13b407f6b3057dea6790db4f027c418.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.கதைக்களன், களம் எல்லாம் புதுசு.. வழக்கமா ஒரே மாதிரி யோசிக்காம  புதுசா திங்க் பண்ணி இருப்பது குட்.. 



2. சி.ஜே.ராஜ்குமார் தான் படத்துக்கு ஒளிப்பதிவு. லைட்டிங்க் எல்லாம் ஓக்கே.. பெரும்பாலான காட்சிகள் ஒரு ரூமுக்குள்ளேயே வருவதால் இண்ட்டீரியர் டெக்ரேஷன் , லைட்டிங்க் படத்துக்கு ரொம்ப முக்கியம்,. உணர்ந்து செஞ்சுருக்காரு இயக்குநர். கேனான் 5டியில் எடுக்கப்பட்டதாம் இந்தப்படம். பாராட்டுக்கள்



3.  டைட்டில் டிசைன் அழகு.. அதுக்கான பேக் கிரவுண்ட் மியூசிக்கும் ஓக்கே  ( லேசான சுடல் இருந்தாலும் ) .



 மனம் கவர்ந்த ஒரே வசனம் 



1. சாமி கண்ணைக்குத்தி கேள்விப்படிருக்கேன், ஆனா இவன் சாமி கண்ணையே குத்தி ஏமாத்தும் ஆள்


 இவன் இன்னும் சாகலை? போன தீபாவளிக்கே செத்திருப்பான்னு நினைச்சேன்


http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2011/05/peruman-movie-still.jpg.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.  படத்தோட முதுகெலும்பான ஒரு சீன்ல படு பயங்கர லாஜிக் சொதப்பல்..  ஹீரோ 21 கோடி ரூபாயை ஒரு டூரிஸ்ட் பேக்ல என்னமோ 3 செட் டிரஸ் வெச்சு எடுத்துட்டு வர்ற மாதிரி பைக்ல அசால்ட்டா வர்றார்.. 1000 ரூபாய் நோட்டாவே இருந்தாலும் ஒரு கோடி ரூபாய்க்கு  100 கட்டு அப்போ 21 கோடிக்கு 2100 கட்டு வைக்க குறைஞ்ச பட்சம் 4 பேக் வேணும்.. அதே போல் அதன் எடையும் ஜாஸ்தியா இருக்கும். அப்படி அசால்ட்டா எல்லாம் கொண்டு போக முடியாது. புதிய 1000 ரூபாய் நோட்டு கட்டு 10 லட்சம் ரூபா  12 கிலோ வரும் என சொல்றாங்க.அப்போ ஒரு கோடி 120 கிலோ.. 21 கோடி  = 2520 கிலோ வருது. ஒரு மினிடோர் வேன்ல தான் கொண்டு போக முடியும். ஆனா ஹீரோ என்னமோ  காலி கேஸ் சிலிண்டர் கொண்டு போற மாதிரி அசால்ட்டா கொண்டு போறாரே? இதுல சேசிங்க்ல சாகசம் வேற.


2. பேங்க்ல 21 கோடியையும் போட முடியாது என்பது உண்மைதான். 50,000 ரூபாய் போட்டா பேன் கார்டு பேப்பாங்க, இன்கம் டாக்ஸ் காரங்க நோட் பண்ணுவாங்க ஓக்கே.. 49,000  ரூபாயாக பிரிச்சு பிரிச்சு போடலாமே? ஒரு கோடிக்கு  200 பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ண மலைப்பு தான், 21 கோடிக்கு 4200 அக்கவுண்ட் ஒப்பன் பண்ணனும், ரிஸ்க் தான், ஆனா சேஃப்டி. போஸ்ட் ஆஃபீஸ்  பிராஞ்ச்சே போதுமே? வேலை, அலைச்சல் அதிகம்.. ஆனா ஹீரோ படற அவஸ்தைக்கு இது பெரிய விஷயம் இல்லை.



3. ஹீரோ தான் குடி இருக்கும் வீட்டில் பணத்தை ஒளித்து வைக்காமல் தன் சொந்த ஊரில் கொண்டு போய் பணத்தை அப்பாவிடமோ ,  அம்மாவிடமோ கொடுத்து வைத்திருக்கலாம்.. பாதுகாப்புக்கு பாதுகாப்பு.  உடல் நிலை சரி இல்லாத அம்மாவையும் பார்த்த மாதிரி ஆச்சு.. 


4. வில்லன் எதுக்கு வேலைப்பொழப்பத்து ஹீரோவை கண்காணிக்க 3 பேரை நியமிக்கறான்? அவன் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச் ஆஃபீசா நடத்தறார்? அத்தனை பேரை வெச்சு வேலை தர.. தண்டம் வேற முட்டுக்கோல் வேற என்பது போல் பணத்தையும் கொடுத்துட்டு அவன் அதை எப்படி ஹேண்டில் பண்றான்னு பார்க்க ஆளும் போடனுமா? அதுக்கு அவனை போட்டுதள்ளிடலாமே? 


5. கைல 21 கோடி வந்ததும் எந்த லூஸாவது பைக்ல அதை கொண்டு வருவானா? அது பாதுகாப்பா?  ஒரு டாக்சி கூடவா வெச்சுக்க மாட்டான்? சப்போஸ் டிராஃபிக் போலீஸ் பார்த்து டவுட் வந்து விசாரிச்சு செக் பண்ணுனா மாட்டிக்க மாட்டானா? ( டாக்ஸின்னா பேக் பார்க்க வழி இல்லை, ஆனா பைக்ல அவளவ் பெரிய பேக் வெச்சுட்டு போவது டேஞ்சர்.. 



6. ஹீரோ குடி இருக்கும் அபார்ட்மெண்ட்ல ஒரு ஃபிகர் லவ்வரோட ஓடிப்போகுது.. அது பற்றி விசாரிக்க வரும் போலீஸ் என்னமோ ஹீரோவை கிரிமினல் குற்றவாளி மாதிரி விசாரிப்பது ஏன்? மூடு மந்திரமாவே இருக்காரே அந்த போலீஸ்.. எதுக்கு? சஸ்பென்ஸுக்காகவா? சகிக்கலை..



7. அந்நியன் விக்ரம் 3 விதமா மாத்தி மாத்தி நடிச்சது ஷங்கர் டைரக்‌ஷன்ல பார்க்க நல்லாருந்தது, ஆனா இந்தப்பட ஹீரோ ஒரு புதுமுகம். நடிகர் திலகம் ரேஞ்ச்க்கு அவர் அடிக்கடி கண்ணாடி முன்னால நின்னு பண்ணும் மோனோ ஆக்டிங்க் செம கடுப்ஸ்.. ஒரு சீன் வைக்கலாம் . 6 டைம் ஓவரோ ஓவர்..



8. ஹீரோ விலை உயர்ந்த காரை வாங்கி அதை பார்க் பண்ண மாசம் ரூ 3500 வாடகை ல ஒரு கார் ஷெட் பிடிக்கறார். இது தேவை இல்லாத சீன். படத்துக்கு எதுக்கு இந்த சீன்? வில்லனோட கண்டிஷனே பணம் இருப்பதை காட்டிக்கக்கூடாதுன்னு தானே? எதுக்கு ரிஸ்க் எடுக்கறார்? காதலியிடம் பந்தா காட்ட என்றாலாவது பரவாயில்லை. அதுவும் இல்லை.. எதுக்கு பின்னே?


9. இந்தப்படத்தின் கதைக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பின்னே எதுக்கு டைட்டிலை பெருமான் என்கிற ரஜினிகாந்த் -னு டைட்டில் வெச்சீங்க? அப்புறம் ரஜினி கூப்பிட்டு கண்டிச்ச பின் மாத்துனீங்க? பேருக்கு நான் ரஜினி மாதிரி ஆக ஆசைப்படறேன்னு ஒரு டயலாக் ஹீரோ பேசறார். அதுக்காக இப்பவும் டைட்டில்க்கு கீழே சம்பந்தம் இல்லாம ரஜினி பேரு வேற..



10. ஹீரோவை ரொம்ப நேரம் காட்றது செம போர். ஹீரோயின் திருப்பதி லட்டு மாதிரி இருக்கா.. அவளை சேர்த்து காட்டி இருந்தா போர் அடிக்காம படம் போகும், ஆனா அவரை சரியா யூஸ் பண்ணலை.. ( ஐ மீன் படத்துல )


11. டைட்டில் இப்படி கேரக்டர் பேர் வைக்கனும்னா ஹீரோ பெரிய ஆளா இருக்கனும். புதுமுகத்தை வெச்சு ப்டம் எடுக்கற யாருமே டைட்டில் அப்டி வைக்கக்கூடாது.. அவர் என்ன அவ்ளவ் பெரிய அப்பாடேக்கரா?ன்னு  ஆடியன்ஸ் நினைப்பாங்க..  நான் தேர்வு செய்திருக்கும் டைட்டில் - கையில் 21 கோடி ஆர் யூ ரெடி?  அல்லது ”21 வயசு, 21 கோடி  ”

https://lh3.googleusercontent.com/-tAfbx56HmGc/UDUyZU2pMGI/AAAAAAAAab0/k6uR4rZyWio/Peruman.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு
உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான்
படம் இருக்கு. சென்னை ஃபோர் ஃப்ரேம் தியேட்டரில் படம் பார்த்தேன்.


தேநீர் விடுதி உதவி இயக்குநரும், பாடல் ஆசிரியருமான முருகன் மந்திரன் அவர்களுடன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது மகிழ்ச்சி . இடைவேளையின் போது படத்தின் ஹீரோயின் , இயக்குநர் இருவரையும் பார்க்க முடிந்தது


 பலராலும் பாராட்டு பெற்ற டைட்டில்  இசை சுடப்பட்ட லெமன் ட்ரீ ஒரிஜினல் 


a
டிஸ்கி- இணை உலகில் புரட்சி -
http://puradsifm.com/ -

Monday, September 03, 2012

ஆச்சரியங்கள் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiK1gtQiaenWvC6FQBOiLQdRgOgx6ylR6sMr1sCNPgKJMyT26qsSTpbXzfY7DClaR0hFPHELrqn6b_P6vazULZi92AvE72ulnHvpyq4gSD4PZAoBRzi5gI4CWhBiyePBU8aRiVNPjr8QE/s320/Aachariyangal+Movie+Posters+Mycineworld+Com+(1).jpg 

1997 இல் மைக்கேல் டக்ளஸ் நடிச்சு வெளிவந்த  THE GAME  ஹாலிவுட் படம், 2008இல் சல்மான் நடிச்சு வெளி வந்த HELLO  ஹிந்திப்படம்,  சேட்டன் பகத் எழுதுன  ONE NIGHT @ CALL CENTRE நாவல் இந்த மூணையும் மிக்ஸ் பண்ணி தமிழுக்குத்தக்கபடி திரைக்கதை அமைச்சா அதுதான் ஆச்சரியங்கள்.

மெக்கானிக்கல் வாழ்க்கை.. அதாவது ஒரே மாதிரி ரொட்டீன் லைஃப் வாழ்வதில் ஆர்வம் இல்லாதவர் ஹீரோ.. வாழ்க்கை த்ரில்லிங்கா இருக்கனும், ஒவ்வொரு நிமிஷமும் சவால் நிறைந்ததா இருக்கனும்னு நினைக்கறவர்.. அவர் அடிக்கடி கடவுள்கிட்டே அது பற்றி புலம்புவார்.. அவருக்கு ஒரு நாள் கடவுள் கிட்டே இருந்து ஒரு ஃபோன் கால் வருது.. 


 நீ கேட்டபடியே நாளை முதல் உன் லைஃப் அமையும்னு சொல்லுது .. அதுக்குப்பிறகு ஹீரோ வாழ்க்கைல ஏகப்பட்ட திருப்பங்கள்..  



http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/aishwaryaa1/aachariyangal-tamil-movie-heroine-aishwarya-stills-2-24.jpg


1. ஹீரோவோட அண்ணன்  பிஸ்னெஸ் லாஸ்ல  வில்லன் கிட்டே கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதை கட்ட முடியாம திணறிட்டு இருக்கான்.அவனுக்கு தன் தங்கை பொண்ணை கடிக்குடுக்கலாம்னு அப்பா நினைக்கறார். ஆனா அண்ணன் ஆல்ரெடி வேற ஒரு பொண்ணு கூட லிவ்விங்க் டுகெதரா வாழ்ந்துட்டு இருக்கார் கமல் கவுதமி மாதிரி.. கடன் தொல்லை தாங்க முடியாம  வீட்ல இருந்த அத்தை நகையை லவட்டிட்டு ஆள் எஸ் ஆகறார். ஒரு ஆக்சிடெண்ட்ல ஆள் அவுட்


2. ஹீரோவோட அத்தை பொண்ணு  க்கு ஃபாரீன் மாப்ளை கூட நிச்சயம் ஆகுது. அந்த விழாவில் கலந்துக்க கார்ல வர்றப்ப ஒரு விபத்து.. சகுனம் சரி இல்லைன்னு எல்லாம் கேன்சல். அதனால ராசி இல்லாத பொண்ணாகிடும் அவளை கட்டிக்க சொல்லி அப்பா பிரஷர் போடறாரு. ஹீரோ ஓக்கே சொல்றாரு


3. ஹீரோ ஆல்ரெடி ஒரு தலையா ஒரு ஃபிகரை லவ் பண்றாரு.. அந்த பொண்ணு ஆல்ரெடி ஒரு பையனை லவ் பண்ணி ஏமாந்த பொண்ணு .அதனால லவ்னாலே பிடிக்கலை.. ஒன்லி நட்புதான்கற  கண்டிஷனை ஆரம்பத்துலயே போட்டுடுது.


4. ஹீரோவோட அண்ணன் ஏமாத்திட்டு போன  30 லட்சம் ரூபா பணத்தை உடனே தந்தாகனும்னு வில்லன் மிரட்றான்.. கைல நயா பைசா  இல்லைன்னு சொன்னதும்  அட்லீஸ்ட் 3 மாசம் என் கிட்டே குருவியா ஒர்க் பண்ணுனு கேட்கறான் வில்லன்.. விஜய் நடிச்ச குருவியை பார்த்ததே போதும், மறுபடி குருவியா? முடியாதுன்னு ஹீரோ சொல்லி டறாரு


5. வில்லனுக்கு தர வேண்டிய பணத்தை  எப்படி சம்பாதிக்க? ஐடியா . இவர் ஒரு தலையா லவ் பண்ணுனாரே  அந்த பொண்ணு பணக்காரப்பொண்ணு..  அவளை கடத்தி அப்பாவை மிரட்டி பணம் பறிக்கலாம்னு ஐடியா தர்றா.. அதே மாதிரி செஞ்சு பணம் கைக்கு வர்றப்போ  அந்த பொண்ணு  பணத்தோட எஸ் ஆகிடுது.. பழி ஹீரோ மேல விழுது. 


மேலே சொன்ன முக்கியமான அஞ்சு திருப்பங்களும் நடந்து அதை எல்லாம் ஹீரோ கிராஸ் பண்ணின பிறகு  படத்துல ஒரு திருப்பம். இதுவரை நடந்ததெல்லாம் கனவு.. ஆனா இதெல்லாம் நடக்கப்போகுது... இ எஸ் பி பவர் மாதிரி..  ஹீரோ நடக்கப்போற எதையும் தடுக்க முடியாது, ஆனா வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.  


சில வருடங்கள்க்கு முன் அதிகம் பேரால் கவனிக்கப்டாமல் விட்ட கருணாஸ் நடிச்ச புலி வருது படத்தின் முதல் 4 ரீல் இதே போன்ற ஒரு சுவராஸ்ய முடிச்சுத்தான்..  


ஹீரோவாக தமன். எந்த வித ஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்.. தேறிடுவார்.. ஹீரோயின் ஐஸ்வர்யா ..பாதரசம் போல் பளபளக்கும் கண்கள் , கொழுக் மொழுக் கன்னம்  இவருக்கு பிளஸ்.. 60 மார்க் போடலாம்.. இவருக்கும் வாய்ப்பு இருக்கு.. 



 வில்லனாக மகாநதி சங்கர்.. இவரது கெட்டப் நாடக நடிகர் மாதிரி எடுபடலை.. நடிப்பி ஓக்கே.. ஒப்பனை தான் சரி இல்லை.. ஹீரோவோட ஒன் சைடு காதலி மங்கள் ஹீரோயினை விடவே நல்லா இருக்கார்.. அவருக்கு இன்னும் சில சீன்கள் ஐ மீன் காட்சிகள் சேர்த்திருக்கலாம்.. 


கமல் நடத்திய திரைக்கதை பட்டறையில் பயின்ற ஹர்ச வர்தன் என்பவர் தான் இயக்கம். நல்ல எதிர்காலம் இருக்கு..  இசை, பின்னணி இசை சுமார் ரகம்.. ஒளிப்பதிவு சராசரி.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Aachariyangal/Aachariyangal-Stills3729Ee55.jpg



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. இந்த மாதிரி விறு விறுப்பான திரைக்கதைக்கு முதல் எதிரி பாடல்கள் தான்././ அதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு  டூயட்டோ, தேவையற்ற பாடலோ வைக்காதது.. இத்தனைக்கும் 2 ஹீரோயின்கள்.. வைக்க வாய்ப்பு இருக்கு.. ஆனாலும் வைக்கலை.. குட் ஒன் 


2. ஹீரோயின்ஸ் செலக்‌ஷன்.. 2 பேருமே நல்ல தேர்வு..  ஆடை வடிவமைப்பு ரொம்பவே பாந்தம்..  ஹோம்லியா ஒரு ஹீரோயின், மாடர்னா ஒரு ஹீரோயின்னு 2 ஏரியாவையும் கவர் பண்ணி இருந்தாலும்  ரெண்டிலும் கண்ணியமோ கண்ணியம்.. வெல்டன்



3. திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாம் பாராட்டும்படி விறு விறுப்பா இருக்கு.. அங்கங்கே மேடை நாடகம் வசனை அடிச்சாலும் இது நல்ல முயற்சி.. 



4. போஸ்டர் டிசைன்,   அதுல வர்ற பஞ்ச் டயலாக் ஓக்கே. ரசிக்கற மாதிரி இருக்கு.ஆனா லோ பட்ஜெட்ங்கறதால ஈரோட்டில் 7 இடங்கள்ல மட்டும் தான் பார்க்க முடியுது.. சன் பிக்சர்ஸ் படம்னா 400 போஸ்டர்ஸ் ஒட்டுவாங்க. அட்லீஸ்ட்  50 போஸ்டராவது ஒரு  மாநகராட்சில ஒட்ட வேணாமா?


http://www.tamilnow.com/movies/gallery/aachariyangal/tamil-movie-aachariyangal-stills-7428.jpg


மனம் கவர்ந்த வசனங்கள் 


1 டேய், மேனகா  லவ்ஸ் யூ.. நீ ஏன்  அவளை   தவிர்க்கறே? ( ஒய் ஆர் யூ அவாய்டிங்க் ஹெர்?)


 ஒரு பொண்ணைப்பார்த்தா ஃபீலிங்க் வரனும், இவளைப்பார்த்தா எனக்கு அது வர்லையே?



2.  என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்க.. நைட் சரக்கு அடிச்சா காலைல ஃபிரெஷா எந்திரிக்கற மாதிரி ஒரு சரக்கு கண்டு பிடிக்கறாங்களா? 



3.  நீ எம் பி பி எஸ் படிக்கறது எல்லாருக்கும் தெரியனுமா? எதுக்கு வெள்ளைக்கோட்டை கைல மாட்டிக்கிட்டே திரியறே? உள்ளே வையேன்.. 



4. நீ நினைக்கற அளவுக்கு நான் நல்லவனா?ன்னு தெரியலையே?

 ஐ லைக் யுவர் ஹான்ஸ்டி ( உன் நேர்மையை மதிக்கறேன் ) - மேஜர் சுந்த்கர் ராஜன் பாறைகள் 



5. அவசரப்பட்ட முடிவுதான் இது. ஆனா தப்பான முடிவு அல்ல. 


6. போலீஸ்க்கு மெடல் எப்படியோ , திருடனுக்கு  அவன் மேல் போடப்படும் கேஸ் அதிகமாக அதிகமாக அவன் மதிப்பு அதிகரிக்கும்.. ( சஹானா கணவர்கள் மாதிரி ) 



7.  சரி சரி.. மச மசன்னு நிக்காம ஆகவேண்டியதைப்பாரு.. 


 இது கல்யாண வீடுகள்ல பெருசுங்க சொல்ற டயலாக்ஸ் ஆச்சே?




8. என்னடா பண்றே? 


 இவனுக்கு ஷூட் பண்ண ட்ரெயினிங்க் தர்றேன்.. 


 அவன் என்ன ஒலிம்பிக்ல போய் மெடலா வாங்கப்போறான்?



9. வாழ்க்கை எதிர்பாராத விதமா நம்மை பல விதமா தூக்கி அடிச்சுடுது



10.   ஹீரோ - எப்படியோ என்னை நீ கவுத்துட்டே.. 



ஹீரோயின் - நீ சொன்ன அந்த வார்த்தை எனக்கு பிடிக்குதோ இல்லையோ அந்த அர்த்தம் எனக்கு பிடிச்சிருக்கு.. ( குழப்பாதடி, கன்ஃபியூஸ் கொண்டைக்காரி )



http://www.tamilnow.com/movies/misc/aachariyangal-director-harshavardhan-meets-kamalhaasan/aachariyangal-director-harshavardhan-meets-kamalhaasan-3356.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. திரைக்கதையின் நோக்கம் மூட நம்பிக்கையை வளர்த்தல் அல்ல என்றாலும் ஹீரோயின்  கேரக்டரைசேஷன்  அவ ஒரு ராசி இல்லாதவ, தொட்டது துலங்காது  அப்டிங்கற மாதிரி வருதே.. ஏன்?


2. ஹீரோயின் மனசுல என்ன இருக்கு?னு திட்டவட்டமா சொல்லவே இல்லையே? ஃபாரீன் மாப்ளை நிச்சயம் ஆனப்பவும் அதுக்கு ஓக்கே.. அந்த மேரேஜ் நின்னு ஹீரோவோட அண்ணனுக்கு மேரேஜ் பேச்சு நடந்தப்ப அதுக்கும் ஓக்கே,  அவன் ஓடிப்போனதும் ஹீரோ கூட நிச்சயம்னு சொன்னதும் அதுக்கும் ஓக்கே, நிச்சயம் கேன்சல் பண்ணின ஃபாரீன் மாப்ளை மறுபடி வந்து மன்னிப்பு கேட்டு மேரேஜ் பண்ணிக்கறேன்னு சொன்னா அதுக்கும் ஓக்கே. சஹானாவை விட, நயன் தாராவை விட இவங்க கேரக்டர் குழப்பமா இருக்கே..  உன்னை நினைத்து லைலா கேரக்டர் மாதிரியா? எது கிடைச்சாலும் சரி?



3. ஹீரோவோட சிஸ்டர் வில்லனால் கிட்நாப் பண்ணப்படறார்.. அதுக்கு முந்தின ஷாட்ல இன்ஸ்பெக்டர் ஹீரோ கிட்டே அவர் ஃபோன் நெம்பர் குடுத்து “ ஏதாவது உதவி வேணும்னா பர்சனலா கால் பண்ணுங்கன்னு நெம்பர் தர்றார்.. ஹீரோ ஏன் அவருக்கு ஃபோன் பண்ணி “ சார், இந்த மாதிரி ஒரு ரவுடி என் தங்கயை கடத்திட்டான், ஆனா எஃப் ஐ ஆர் எல்லாம் போட வேணாம். மறைமுகமா நீங்க இதுல உதவி செய்யனும்னு ஐடியா கேட்கல? 



4. அண்ணன் இறந்துடறார், டெட்பாடியை வாங்க தம்பி மறுக்கறார் அதுக்கு அவர் சொல்லும்  ரீசன் வீட்ல பெற்றோருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க.. அவன் ஓடிப்போனவனாவே இருக்கட்டும். இது கேனத்தனமா இருக்கு.. அப்போ அண்ணன் அனாதைப்பொணமா  இருக்கனுமா? ஏன் தம்பி போய் அந்த பாடியை வாங்கி சுடுகாட்ல சத்தம் இல்லாம அடக்கம் பண்ணிட்டு வர மாட்டாரோ? 


5. ஹீரோ ஒரு தலையா ஒருத்தியை லவ் பண்றாரு.. அப்பா சொன்னதுக்காக அத்தை பொண்ணுக்கு ஓக்கே சொல்றாரு..  அந்த மேட்டரை ஏன் தன் ஒன் சைடு லவ்வர் கிட்டே சொல்லலை? அது பற்றி குற்ற உணர்வே அவர் முகத்துல இல்லையே?

6. ஹீரோ நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் சீன்கள் எல்லத்துலயும் அவன் தண்ணி அடிச்சுட்டே தான் இருப்பானா? சமீப காலமா இது அதிகரிச்சுட்டு வருது./. சரக்கு அடிக்காதவங்க, பெண்கள் ( ஐ மீன் சரக்கு அடிக்காத பெண்கள் ) பார்த்தா என்னமோ மாதிரி இருக்கு.. ஒரு சீன் 2 சீன் வெச்சா தேவலை.. 


7. இந்தப்படத்துக்கு அழகிய தமிழ் மகன் மாதிரி திரைக்கதை அமைச்சிருக்கலாம்னு தோணுது.. அதாவது ஹீரோவுக்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரியும், ஆடியன்ஸுக்கும் தெரியும், அப்போ அவன் என்ன பண்ணப்போறான்.. இது இன்னும் டெம்போ ஏத்தும்னு நினைக்கறேன். 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓ கே


சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம். உடனே பார்த்துடுங்க.. சீக்கிரம் எடுத்துடுவாங்க.. பெண்களும் பார்க்கும் தரத்தில் மிக கண்ணியமான நெறியாள்கை .  ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி- இணை உலகில் புரட்சி -



http://puradsifm.com/
-