Showing posts with label சட்டமும் நீதியும் (2025) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (. Show all posts
Showing posts with label சட்டமும் நீதியும் (2025) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (. Show all posts

Tuesday, July 22, 2025

சட்டமும் நீதியும் (2025) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா ) @ ஜீ 5

     

                   

18/7/2025 முதல் ஜீ 5 ல்  வெளியான வெப் சீரிஸ் மீடியாக்களின்  பாசிட்டிவ் விமர்சனங்களையும் , பொது மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று வருகிறது .அறிமுக  இயக்குனர் பாலாஜி  செல்வராஜ் ஸ்டார்  வேல்யூவை நம்பாமல்  திரைக்கதையை நம்பி இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் இது .மிக யதார்த்தமான திரைக்கதை நம்மைக்கட்டிப்போடுகிறது . மொத்தம்  7 எபிசோடுகள்  கொண்ட  இந்த  வெப் சீரிஸ் தலா  20 நிமிடங்கள்  என்ற  டைம் ட்யுரேஷனில் 140  நிமிடங்களில்  ஒரு சினிமாப் படம்  அளவு  மட்டும்   நீளம்  கொண்டதாக இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு வக்கீல் , ஆனால்  கோர்ட்டில் அவர் இதுவரை வாதாடியதே இல்லை .கோர்ட் வாசலில்  நோட்டரி  பப்ளிக் ஆக டாகுமெண்ட் டைப் பண்ணித்தரும் ஆளாக இருக்கிறார் .இவருக்கு வீட்டிலும் பெரிய மரியாதை இல்லை, கோர்ட் வளாகத்திலும் இல்லை . டீன்  ஏஜ்  மகனும் ,மகளும் உண்டு பலரின்  கேலி,கிண்டலுக்கு ஆளான இவருக்கு  ஒரு பொது நலக்கேஸில் கோர்ட்டில் வாதிடும் வாய்ப்பு உருவாகிறது . அதில் அவர் வெற்றி அடைந்தாரா? என்பது தான் கதை 


குப்புசாமி என்ற  நபர்   தன மகளை யாரோ கடத்திக்கொண்டு போய் விட்டனர்  என போலீசில்  புகார் தருகிறார் . ஆனால்   போலீஸ்  அதைக்கண்டு கொள்ளவே இல்லை .இதனால்   மனம்   வெறுத்த அவர்  கோர்ட் வாசலில்  தீக்குளித்து  இறக்கிறார் . அவரது மரணத்துக்கு  நியாயம் கேட்டு  நாயகன் போராடுவதுதான் திரைக்கதை 



நாயகன்  ஆக  பருத்தி வீரன்  புகழ்  சித்தப்பு சரவணன்  அருமையான குணச்சித்திர  நடிப்பை வழங்கி இருக்கிறார் மகனிடம்  அவமானப்படும்போதும் , கோர்ட்டில்  வாதிடும்போதும்  ஜொலிக்கிறார் 


நாயகி ஆக  நாயகிக்கு உதவி  வக்கீல் ஆக  அவரது  மகள்  போல்  வரும்  நம்ரிதா  நடிப்பு   பிரமாதம் .குரலும் , முக வசீகரமும் செம . ஆனால் சில   இடங்களில்   மட்டும் ஜோதிகா மாதிரி   ஓவர் ஆக்டிங்க் 


குப்புசாமியாக  வரும் சண்முகம்  நடிப்பு கலங்க வைக்கிறது . உருக்கமான நடிப்பு .குப்புசாமியின்  மகள் வெண்ணிலாவாக  வரு இனியா   ராம்  சோகக்காட் சிகளில்  சுடர் விடுகிறார் 


குப்புசாமியின்  மனைவி   வள்ளி  ஆக   வரும் விஜய ஸ்ரீ பிரமாதப்படுத்தி இருக்க வேண்டிய ரோல் . அனுபவமின்மை காரணமாக சுமாராகத்தான் நடித்திருக்கிறார் பெரும்பாலும்  புதுமுகங்கள்  தான் நடித்திருக்கிறார்கள் 

அரசுத்தரப்பு  வக்கீல்  ஆக வரும் ஆரோனின் வில்லத்தனம் அருமை 


விபின்   பாஸ்கரின் பின்னணி  இசை அருமை . தீம் இசை கலக்கல் ரகம் .திரைக்கதை  சூரியப்பிரதாப் 


சபாஷ்  டைரக்டர்


1  குப்புசாமி மனநலம் பாதிக்கப்பட்டு  22 வருடங்களாக  சிகிச்சை  பெற்று வந்தவர்   என்பது  அறிந்து  இந்தக்கேஸ் கோர்ட்டில் நிற்காது என கலங்கும் இடம் அருமை 


2 குப்புசாமியின்   மகள்  காணாமல்  போனது  27 வருடங்களுக்கு முன்  என்பதும்  அவர்  காணாமல்  போய் 5 வருடங்களில்  அம்மாவிடம்  ஒப்படைக்கப்பட் டார்   என்பதும்   தெரிய   வந்ததும்  இனி எப்படிக்கேஸை  மூவ்   செய்வது என்று தடுமாறும் இடம் அருமை 


3 குப்புசாமியின்  மனைவி  இன்னொரு திருமணம்  செய்து கொள்வதும்  , மகள் வெண்ணிலாவை  அநாதை ஆசிரமத்தில்   சேர்த்து விடுவதும்  திருப்பங்கள் 


4 குப்புசாமியின்   மகள்  வெண்ணிலா வுக்கு   என்ன ஆனது   என்ற   டிவிஸ்ட்   குட் 


5  கோர்டடில்  நடக்கும் வாதங்கள்   யதார்த்தம் 


  ரசித்த  வசனங்கள் 


1  என்னை  மாதிரி  பெய்லியர்  கேஸ்க்கு  கோபமும் ஆதங்கமும் எதுக்கு ? 


2 எல்லாருக்கும்  எல்லாம் வராது , ஒருத்தருக்கு இருக்கும் திறமை இன்னொருத்தருக்கு இருக்காது  


3  மக்கள்   மனசு வைத்தால் இந்த  அரசாங்கம் மட்டும்  அல்ல , ஆண்டவனால்  கூட இந்த நிலத்தை எதுவும் செய்ய முடியாது 


   

4 எல்லா  இடங்களிலும் சண்டை  போட்டுக்கொண்டு இருந்தால்  நம் குரலுக்கு மரியாதை இருக்காது 


5  நாம்  பதட்டமா  இருந்தா   எதிரிக்கு டதைரியம்  உருவாகும் , நாம அமைதியா, பொறுமையா , நிதானமா இருந்தா எதிரிக்கு  பயம்   வரும் 


6  எமோஷன்ஸ்க்கு மதிப்பு இல்லை , எவிடென்ஸ் தான்  முக்கியம் 


7 நீங்க   வாங்கும்   லஞ்சப்பணம்  தப்பு பண்ண  மட்டும் இல்லை , மாட்டிக்காம இருக்கவும் தன 


8  சட்டம்   ஊருக்கு ஊர்   மாறும் , ஆனா நீதி எல்லா இடங்களிலும் ஒன்று தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 குப்புசாமியின்   மகள்  வெண்ணிலாவின்  வளர்ப்புத்தந்தையை  சந்திக்கும்   நாயகன் வெண்ணிலாவின் போட்டோ  கொடுங்கள் எனக் கேட்கவே இல்லையே? கோர்ட்டில் ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டாமா? 


2 கோர்ட்   வாசலில்  போலீஸ்   யூ னிபார்முடன்  அப்படியா   பப்ளிக்காக லஞ்சம்  வாங்குவார்கள்?


3  கவுன்சிலரின்  மகன்  ஒரு வில்லனாக உருப்படியாக எதுவும் செய்யவில்லை . ஈசியாக  தப்பி இருக்கலாம் 


4 சிவப்பு விளக்குப்பகுதியில்  ஒரு விலை மாதிடம்  விசாரிக்க வரும் நாயகன்  விபரங்கள்  கிடைக்கும் முன்பே  பணத்தைத்தருவது எதனால் ? 


5   போலியாக ஒரு வெண்ணிலா வை ஆஜர்படுத்த்தும்  வில்லனின் ஐ டியா  சொதப்பல்  ரகம் . டி என் ஏ  டெஸ்ட் காட்டிக்கொடுக்கும்  என்பது தெரியாதா? ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு நிஜ சம்பவத்தின்  உருவாக்கம் என சொல்லப்படுகிறது , நேர்த்தியான  திரைக்கதை , மேக்கிங்க்காக பார்க்கலாம் .ரேட்டிங்க்  3 / 5