Showing posts with label எஸ் ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ் ராமகிருஷ்ணன். Show all posts

Wednesday, December 26, 2012

இந்திய தேசியக்கொடி உருவான வரலாறு - எஸ் ராமகிருஷ்ணன்

எனது இந்தியா!

தையல்காரர் தயாரித்த கொடி! 


இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டதன் பின்னால், பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இந்திய தேசியக் கொடி முதன்முதலாக கல்கத்தாவில் ஏற்றப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்கு முன்பே பெர்லின் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியப் புரட்சியாளர் மேடம் காமாவால் 1905-ம் ஆண்டிலேயே ஏற்றப்பட்டது என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேடம் காமா தயாரித்த அந்தக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று 
 
 
பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், எட்டு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் பட்டையில் நீல வண்ணத்தில் 'வந்தே மாதரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்ததாகவும், பச்சைப் பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் பிறை நிலவு இருந்ததாகவும் கூறுகின்றனர். மேடம்  காமா எனப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பம்பாயில் வாழ்ந்து வந்த செல்வச்செழிப்பு மிக்க பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.


 இளம் வயது முதலே தேச விடுதலைப் போரில் அக்கறையுடன் இருந்தார் காமா. அதனால், அவரு​டைய தந்தை 1885-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி ருஸ்தம் காமா என்பவருக்கு மணம்செய்து வைத்தார். ருஸ்தம் காமா, பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால், மனைவி மேடம் காமாவோ, நேர் விரோதமானவர். அதனால், வீடு அரசியல் களமானது. 


பம்பாயில் பிளேக் நோய் பரவியபோது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக, அவருக்கும் அந்த நோய் ஏற்பட்டது. இருப்பினும், தேச சேவையில் தொடர்ந்து பணியாற்றினார். நோய் காரணமாக உடல் நலிந்து பலவீனமாக இருந்ததால், அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினர். அதனால், மேடம் காமா 1902-ம் ஆண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்ற மேடம் காமா, 1905-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கே, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழுநலம் பெறச் செய்தது.



அப்போது, லண்டனில் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அவருடைய செயலாளராகப் பணி​யாற்றினார். அந்தக் காலத்தில் லண்டனில் இயங்கி வந்த, 'இந்தியா ஹவுஸ்’ இந்திய விடுதலைக்காகப் பாடு​படுவோரை எல்லாம் ஒன்று திரட்டியது. 



ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே.சு.ஐயர், வீர சாவர்க்கர் போன்றவர்களின் நட்பும் மேடம் காமாவுக்குக் கிடைத்தது. 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில்  இந்திய தேசியக் கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் ​காட்டிய மேடம் காமா, 'இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி. இந்தக் கொடி இப்போது வானளாவப் பறக்கிறது'' என இந்தியாவின் முதல் கொடியைப் பறக்கவிட்டார். இந்தக் கொடி உருவாக்கத்துக்கு தனக்கு ஆலோசனை சொன்னவர்கள் வ.வே.சு, ஐயர் மற்றும் வீர சாவர்க்கர் என்று காமா குறிப்பிட்டுள்ளார்.



1917-ம் ஆண்டில் அடுத்த தேசியக் கொடி உருவானது. இதை வடிவமைத்தது திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும். அந்தக் கொடியில் மேலி ருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் ஏழு பட்டைகளில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம் பிறையும் அதற்கு மேல் ஒரு நட்சத்திரமும் இடம்பெற்று இருந்தன. உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டு இருந்தது.


 இதை, தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்துகொண்டு அவர்களுடன் நாம் சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். அதனால், அந்தக் கொடி கைவிடப்பட்டது. அதன் பிறகு, 1921-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்தியக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. 


அப்போது, பிங்காலி வெங்கைய்யா என்பவர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். பிங்காலி வெங்கையா ஒரு தையற் கலைஞர். அவர் உருவாக்கிய தேசியக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்புகளான இந்து முஸ்லிம் இருவரையும் குறிக்கிறது என்றார் பிங்காலி வெங்கையா. அந்தக் கொடியைப் பரிசீலித்த காந்திஜி, அந்த தையற் கலை ஞரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, கூடுதலாக சில யோசனை வழங்கினார். 




அதை, வெங்கையா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொடுத்தார். அதுவே பின்னாளில் நமது தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் உருக்கொண்டது. நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பெங்காலி வெங்கைய்யா, அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-ம் ஆண்டு இறந்தார். 



அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி இந்தக் கொடியை அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே, காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநா டுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகவே, பின்னர் அந்தக் கொடியை காங்கிரஸ் அங்கீகரித்துக்கொண்டது. கொடியில் இடம் பெற் றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாக இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, சில இடங்களில் சண்டை நடந்தது.


1931-ம் ஆண்டு கராச்சியில் காங்கிரஸ் மகா​சபை கூடியபோது, அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்​தக்க வகையில் ஒரு தேசியக் கொடியை உருவாக்குவது அவசியம் என்றும் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட மூவண்ணக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. 




அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடி ஆனது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே இருந்ததால், அரசாங்கக் கொடிக்கும் கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. 



1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், சம அளவில் அமைந்த மூன்று நீண்ட செவ்வகப் பாகங்கள்கொண்ட நீள்சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. மத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.




ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்தியத் தர நிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் ராணுவ உடைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேஸரி’, 'இந்தியப் பச்சை’ என்று பெயர். உலகில் உள்ள வண்ணத் தர நிர்ணயப் பட்டியல்களில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. 




 எனவே, இந்தியத் தேசியக் கொடிக்கு என்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் தேசியச் சின்னம், மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசகம் 'சத்யமேவ ஜெயதே’. அதன் பொருள், வாய்மையே வெல்லும். இது, முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களைப் பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்மச் சக்கரங்கள் எனப்படுகின்றன. அதில் 24 ஆரங்​கள் இருக்கின்றன. இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக்​கொண்ட தர்மச் சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.


சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் அமைந்துள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்​றன. சாரநாத்தில், மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோ​கச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல் தூணை நிறு​வினார். அதுவே, தேசிய சின்னமாகத் தேர்வு செய்யப்​பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும், அரசு விழாக்​களிலும் மட்டுமே நாம் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை முதன்மைப்படுத்துகிறோம். அதுவும்கூட, சம்பிரதாய​மாகவே.



இவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நமது தேசிய அடையாளங்கள். அதன் மகத்துவத்தை நாமே அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தப்பட​வேண்டிய உண்மை.


 thanx - ஜூ வி  , எஸ் ராமகிருஷ்ணன்

Saturday, February 25, 2012

ரஜினியின் பாராட்டில் நனைந்த எஸ் ராமகிருஷ்ணன் -இலக்கிய விழா உரை

கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது 2011 ஆம் ஆண்டுக்கு இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான பாராட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகைதந்து பாராட்டு விருதை எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கிய ரஜினிகாந்த், தனக்கும் அவருக்கும் உள்ள நட்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார். 

வரவேற்புரையாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், "எஸ்.ராமகிருஷ்ணனுடன் சமகாலத்தில் ஒப்பிடக்கூடிய இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இளைஞர்களுக்கு உலக சினிமாவை, உலக இலக்கியத்தை அறிமுகம¢ செய்யக்கூடியவராக அவர் இருக்கிறார். நமது மொழிக்கும் நமது இலக்கியத்துக்கும் எஸ். ராவுக்கு அளிக்கப்பட்டிருக்கிற விருது பெருமை சேர்க்கிறது. அதைவிட அந்த விருதுக்கே கிடைத்த கௌரவம் என்று சொல்லலாம்" என்றார். 


அடுத்து பேசிய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், "இந்த விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ஏன் வருகிறார் என்று என்னிடம் நண்பர்கள் கேட்டார்கள். ராமகிருஷ்ணனுக்கு பாபாவே அவர்தான் என்று அவர்களிடம் சொன்னேன். எழுத்தாளர்களை மதிக்காத இந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்திருந்து வாழ்த்துவது வியப்புக்குரிய விஷயம். பெரிய மரியாதையையும் பெரிய மகிழ்ச்சியையும் இந்த விழா ஏற்படுத்தியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக எஸ்.ரா இருக்கிறார்" எனறு பாராட்டியவர் அவரது நாவல்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.


வெ.இறையன்பு, உலக இலக்கியங்களை வாசிப்பதில் உலகின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதில் எஸ்.ரா ராட்சத பசியுள்ளவராக இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். நிறைய விருதுகளைப் பெற்ற பின்னரும்கூட அவர் அமைதியாக இருக்கிறார் என்றார்.


 நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளராக எஸ். ரா இருப்பதாகச் சொன்னார் கவிஞர் வைரமுத்து, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த விழாவிற்கு வந்திருப்பது பற்றி ஆச்சரியமாகப் பேசுகிறார்கள். ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த வாசகர். அவரை உணர்ந்து சொல்கிறேன். நிறைய கதைகள் அவரிடம் இருக்கின்றன. ஞானபீடம் விருதுபெற்ற ஜெயகாந்தனை முதல் நாள் இரவே வீட்டுக்குப் போய் வாழ்த்தி வந்தவர் அவர். இங்கு வந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 எஸ். ராமகிருஷ்ணன் அனுபவங்களைத் தேடி பயணம் செய்துகொண்டே இருக்கிறார். படித்துக்கொண்டே இருக்கிறார். படிக்காத ஒருவர் பெரிய படைப்பாளியாக இருக்கமுடியாது. படிப்புதான் மழை. படிப்புதான் ஜீவன். என்னைவிட அதிகம் படித்தவராக எஸ். ரா இருக்கிறார் என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.


அடுத்து ப்ரெண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினார்கள். 


தனது ஏற்புரையில் எஸ். ராமகிருஷ்ணன், ''இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். ஒரு மகத்தான ஆத்மாவாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் குறையாத தாயன்பை வைத்திருக்கிறார். சிறந்த நடிகராக சிறந்த வாசகராக இருக்கிறார். வரலாற்றைத் தேடித்தேடி படிக்கிறார். பல மூத்த படைப்பாளிகளை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அவர் வந்திருந்து வாழ்த்தியதை பெருமையாக நினைக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கிற இந்த விருது தமிழ் மொழிக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் பேசியபோது, "என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். எழுத்தாளர் பாராட்டுவிழா போஸ்டரில் உன் பெயரைப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. உண்மையா? என்று கேட்டான். நான் வந்திருப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் பார்த்த சபைகள் வேறு. இந்த சபையில் பெரிய எழுத்தாளர்கள் மீடியாக்காரர்கள் வந்திருக்கிறார்கள். மைக் முன்னால் வந்தாலே எனக்கு மொழி மறந்துபோய்விடுகிறது.


 தமிழ், கன்னடம், தெலுங்கு தெரியும். ஆனால் எதுவும் முழுமையாகத் தெரியாது. ஆங்கிலம் தெரியும். அதுவும் அரைகுறைதான். இப்போது தமிழ் வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. எப்படி எஸ். ராமகிருஷ்ணன் நண்பரானார் என்பதைச் சொல்லவேண்டும். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது என்னைப் பார்க்க பலரும் விருப்பப்பட்டார்கள். யாரும் வரவேண்டாம். நானே வருகிறேன் என்று சொன்னேன். ஒருநாள் எஸ்.ராவைச் சந்திக்கலாம் என்று போனில் கேட்டேன். அப்போது ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னார். மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்தார்.


 ஏழு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்தார். அவரது வீட்டிற்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே சென¢னை முழுவதும் ஒரு ரவுண்ட அடித்தோம். பாபா படத்தில் சொர்க்த்தை விஷூவலாக எப்படி காட்டமுடியும் என்பதற்காக எழுத்தாளர் சுஜாதா சொல்லி, அவரிடம் பேசினேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரமித்துப்போனேன்.


 அவருடன் ஆந்திரா, கர்நாடகா என்று பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் குழந்தையைப்போல ஆச்சரியமாகப் பார்த்துப் பேசுகிறார். எழுத்து என்பது கடவுள் கொடுத்த வரம். குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எதிர்காலத்திலும் நிறைய எழுதவேண்டும்" என்று பல ஆன்மிக தத்துவ கதைகளை எடுத்துக்காட்டி சுவாரசியமாகப் பேசினார். 

 நன்றி - த சண்டே இந்தியன்

Saturday, May 07, 2011

பகவான் கிருஷ்ணரை விட பீஷ்மர் பெரியவரா? ( ஆன்மீகம்)

http://2.bp.blogspot.com/_MmxeaSxLM4o/TQnzXXfdBJI/AAAAAAAAAPU/mVM5uPiXKUg/s1600/krishna-946833.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!



லகத்து மனிதர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக் கிறது. அந்தக் கடமையை அவர்கள் செய்தே ஆக வேண்டும்.
அது என்ன என்கிறீர்களா?
நம் சந்ததிகளுக்கு, அதாவது அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருவது! அந்தச் சொத்துக்களைக் கொண்டு, நம் குழந்தைகள் சந்தோஷ மாகவும் நிம்மதியாகவும், குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ்வார்கள் என்பது உறுதி!
ஒரு நிமிஷம்... இங்கே சொத்து என்று நான் காசு- பணத்தையோ, வீடு- வாசலையோ சொல்லவில்லை;

நிலங்களையும் தோப்புகளையும் சொத்து என்று நினைத்துவிடாதீர்கள். வாகனங்களையும் நகைகளையும் சேர்த்து வைத்தால், அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
 http://www.ammandharsanam.com/magazine/November2010unicode/images/Unnathavalvukku2.jpg
நான் சொல்கிற சொத்து இவையல்ல! அந்தச் சொத்து அளவிடற்கரியது; நாம் நன்றாக இருக்கவேண்டும், அடுத்தடுத்த சந்ததிகளும் குறைவின்றி நிறைவுடன் வாழவேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆசை ஆசையாக வைத்துவிட்டுப்போன அற்புதமான சொத்து. நமது பூர்வீகச் சொத்து!

அந்தச் சொத்து... மகாபாரதம்! வேதவியாசர், பீஷ்மர் போன்றோர் நமக்கு அருளிய மிக உயர்ந்த சொத்து இது.
இதில் நம் கடமை என்ன என்கிறீர்களா?
முதலில், வேதவியாசருக்கும் பீஷ்மருக்கும் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அவர்களுக்கு நன்றியை எவ்விதம் தெரிவிக்கப் போகிறோம்? ஆளுயரத்துக்கு மாலை சார்த்தி வணங்கலாமா? சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாமா? ஏதேனும் ஒருநாளில் விரதமிருந்தால், இவர்கள் மனம் குளிர்வார்களா? இப்படியெல்லாம் செய்தால், அவர்களுக்கு நன்றி செலுத்தியதாக ஆகிவிடுமா, என்ன?இவை எதையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியினரும் மகாபாரதத்தைப் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி, உய்யவேண்டும்; இறைவனது அருளைப் பெறவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்! அவர்கள் கொடுத்திருக்கிற அளப்பரிய சொத்தான மகாபாரதத்தை, பகவத்கீதையை, இறைவனின் சகஸ்ர நாமங்களைச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமது முக்கியமான கடமை! இதுதான் வேதவியாசர், பீஷ்மர் போன்ற ஆச்சார்யர்களுக்கு நாம் செய்கிற பிரதியுபகாரம்.

அதேநேரத்தில், வாழையடி வாழையாக வளரக்கூடிய நம் சந்ததிக்கு இதனைச் சரியாகவும் முறையாகவும் எடுத்துச் சென்றோம் என்றால், அவர்கள் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்!
'என்னதான் சொன்னாலும், மகாபாரதம் படிக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே..! அவ்வளவு சுலபத்துல புரியாதே!’ என்று மலைக்கத் தேவையே இல்லை.


இன்றைய காலகட்டத்தில், வேதங்கள் தெரிந்த நல்ல அறிஞர்கள் பலர், மகாபாரதத்தைச் சுவையாகவும் எளிமையாகவும் அழகுறத் தந்துள்ளனர். அவை அனைத்துமே புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. சொல்லப்போனால், நம் தாத்தாக்களும் அப்பாக்களும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்து, கீதையின் சாரத்தையும் ஸ்ரீகிருஷ்ண நாமங்களையும் தெளிவுறத் தெரிந்து வைத்துள்ளனர். 

கொஞ்சம் நம் வீட்டு அலமாரிகளிலும் பரணிலும் தேடினாலே, அந்தப் புத்தகங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது, கடைகளில் இருந்து அந்தப் புத்தகங்களை வாங்கி, நம் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துரைக்கலாம்.

இன்னொரு விஷயம்... ஒண்ணேகால் லட்சம் கொண்ட கிரந்தத்தில், நமக்காகவே வடிகட்டி, சலித்து, பிரித்து, ஸ்ரீபகவத் கீதையையும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.

இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!

பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி. அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான். கடைக்காரரிடம் 'ஒரு வாழைப்பழம் வேண்டும்’ என்று கேட்க, உடனே கடைக்காரர், 'கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’ என்றார். 

உடனே பழம் வாங்க வந்தவர், 'அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’ என்று சோகத்துடன் கேட்டாராம்! அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!


சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!


'என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு... கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’ என்று குழப்பமாக இருக்கிறதா?

கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!

ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.
பிறகு, யார் சொன்னார்கள்?
அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான். ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisT-FyafZ2ZTE4H-NQqkHwwnBBfMaKz-OC4gL_I5LQYtBKhTLzMZRjdLkQnNrMfZzraKOva4qYiG4zm0luphMJbQ6Z_appqOf6t-KeMe8Hgrmy8XHTdOxV9GE-0JPnEMu_fA4qwympj3k/s400/keethaasaram+(1).jpg
முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி. அதாவது பரமாத்மா! 'நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ... ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள். ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!

அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ''பீஷ்மர் என்பவர் ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்'' என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.

இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர். 'நான் சொன்ன கீதையே போதும்; அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள். மாறாக, 'ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான். அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!

இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!
அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... மனசு, தாமரையாய் பூரிக்கும்; பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில், ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!

நன்றி - விகடன்

Thursday, February 17, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி கதைகள் - எஸ் ராமகிருஷ்ணன் கதை - விமர்சனம்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
மேஜிக் ரியலிசம் எனும் அலிபாபாவும் அற்புத விளக்கும் கான்செப்ட் இந்த வார கலைஞர் டி வி யில் ஞாயிறு காலை 10 .30 மணிக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கொடுத்தாங்க. லட்டு மாதிரி சப்ஜெக்ட்.ஆனா கலந்துக்கிட்ட 4 கதைகள்ல சந்தேகத்துக்கு இடமே இல்லாம எஸ் ராமகிருஷ்ணன் கதை தான் கலக்கி முதல் பரிசை தட்டிச்சென்றது.அது கடைசில......

1. தேய் மச்சி தேய்  - இயக்கம் ராஜேஷ் குமார் ( எழுத்தாளர் ராஜேஷ் குமார் அல்ல)

க்ரெடிட் கார்டு யூஸ் பண்றது ரொம்ப டேஞ்ஜர்,கைல இருக்கற காசுக்கு தக்கபடி செலவு பண்ணி சிக்கனமா இருக்கனும்கற சாதாரன படிப்பினையை தரும் கதை. ஃபேண்ட்டசி எனும் தளத்துக்கு இவர் எடுத்துக்கிட்ட தீம் ரொம்ப சுமார்தான்.
2 நிமிஷத்துல கிட்டத்தட்ட 120 ஷாட்ஸ்ஸை ஸ்பீடா காண்பிக்கறாங்க. விழலுக்கு இறைத்த நீர். டைம் மிஷின் மாதிரி மினி ரிமோட் கிடைக்கப்பெற்றவன் இப்படி அல்ப சொல்பமா ஒரு ஷாப்பிங்க் மட்டும் தானா போவான்? கற்பனை எல்லைகளை இன்னும் விஸ்தாரப்படுத்தனும்.....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

http://i.ytimg.com/vi/gDRftuVBnFc/0.jpg
2. கைக்குள் சொர்க்கம்  - ரமேஷ்

ஆட்டையைப்போட்டுட்டு வந்த ஒரு செல்ஃபோன்ல தற்செயலா கால் (CALL) சொர்க்கத்துக்கு போகுது... என்ன வேணும்னாலும் கேட்கலாம்.ரொம்ப சாதாரண ஆசைகளை நிறைவேத்திக்கறாரு ஹீரோ.க்ளைமாக்ஸ்ல ஃபோனுக்கு சொந்தக்காரர் வந்து அந்த ஃபோனை பிடுங்கிகறார். லாஜிக்கே இல்லை. 

கதைல குறிப்பிட்டு சொல்ற மாதிரி கிராஃபிக்ஸ் ஒர்க் மட்டும் தான் நல்லாருந்தது.அதுவும் செல் ஃபோன் எண் அப்படியே வளைஞ்சு வானத்துக்கு போற சீன் அழகு. எதிர்பார்த்த மாதிரியே அந்த பட  கிராஃபிக்ஸ் ஒர்க்கிற்கு பரிசு கிடைச்சுது.

3.  வானவில் - கல்யாண்

இது கொஞ்சம் அம்புலிமாமா கதை டைப்பா இருந்தது.பணக்கார வீட்டுப்பசங்க விளையாடறதை ஏக்கத்தோட பார்க்கறான் ஏழைச்சிறுவன்.. அவனோட ஆசை ,லட்சியம் எல்லாமே பிரியா கூட விளையாடனும், அவ்வளவுதான்.குளத்துல இருக்கற மீன், “ நான் தான் தேவதை ,உனக்கு என்ன வேணும்”னு கேக்கறப்பக்கூட பிரியா கூட விளையாடனும்கற அதே பல்லவியைதான் பாடறான்.அவனுக்கு அந்த சான்ஸ் கிடைக்குது. 

பிரியா கிட்டே தேவதை பற்றி சொல்றான். அவ நம்பாம ஆற்றங்கரைக்கு வந்து பார்க்கறா.அப்போ இருட்டிடுது. தேவதை வர்ல.( தேவதைங்களுக்கு இருட்டுன்னா பயம் போல..?)உடனே நீ பொய் சொன்னே.. தேவதைனு யாரும் கிடையாதும்ன்னு அந்த பிரியா சொல்லீட்டு போயிடறா..அவ்வளவுதான் கதை.ரொம்ப சுமாரான திரைக்கதை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg
4. கொக்கரக்கோ - அருண்

மத்த 3 படங்களும் சொதப்புனதுக்கு வட்டியும் முதலுமா இந்தப்படம் செம கலக்கு கலக்கிடுச்சு. எஸ் ராம கிருஷ்ணனின் கதையைப்படிக்கறப்ப இருந்த அதே பாதிப்பு, உற்சாகம்,பர பரப்பு , சஸ்பென்ஸ் இந்தப்படத்துல அட்சரம் பிசகாம அப்படியே கொண்டு வந்தது இயக்குநரின் சாமார்த்தியம்.

சரவெடி சண்முகம்னு ஒரு அரசியல்வாதி - ஒரு மேடைல அவருக்கு சேவல் டாலர்  செயினை பரிசா போடறாங்க. அப்போதிருந்து அவருக்கு பேச்சு வர்றதில்லை.. வாயைத்திறந்தா கொக்கரக்கோன்னு தான் சத்தம் வருது.அதை வெச்சு நடக்கற காமெடி கூத்துக்கள் தான் திரைக்கதை. க்ளைமாக்ஸ்ல அவர் மனம் நொந்துபோய் பீச்ல உக்காந்திருக்கறப்ப ஒரு திருடன் வந்து அவர் கிட்டே இருக்கற செயினை பறிச்சிட்டுப்போயிடறான்.இப்போ இவருக்கு பேச்சு வந்துடுது, திருடனுக்கு கொக்கரக்கோ குரல் வந்துடுது.

சரவெடி சண்முகமா வர்ற வரோட நடிப்பு, பாடிலேங்குவேஜ்,வசன உச்சரிப்பு எல்லாமே பிரமாதம்.கலக்கீட்டார் மனுஷன்.இந்தப்படத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா படத்துல வர்ற எல்லா கேரக்டரும் சீரியஸா இருப்பாங்க.. ஆனா பார்க்கற ஆடியன்ஸ் சிரிச்சிட்டு இருப்பாங்க.ரொம்ப ரேர் (RARE)  இந்த மாதிரி கான்செப்ட் கிடைக்கறது. கிட்டத்தட்ட எஸ் வி சேகரின் ஃபார்முலா..

ஜட்ஜா வர்ற ஹாய் மதன் பேசறப்ப தான் ஒரு அறிவு ஜீவிங்கறது எல்லாருக்கும் தெரியனும்கறது மாதிரி பேசறாரோன்னு டவுட்டா இருக்கு. சாதாரணமா பேசுனா தேவல. (நிறைய கமல் படம் பார்ப்பார் போல)

பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை  நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் , படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு.

என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும். 

இயக்குநர் கே பாலச்சந்தர் கருத்து சொல்றப்ப நல்லாருந்தா அருமைங்கறார். நல்லாலைன்னா ரொம்ப நாசூக்கா இதப்படத்தை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு இதமா சொல்றார்.

ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.