Sunday, April 05, 2026

Funky (2026)-தெலுங்கு/தமிழ் -சினிமா விமர்சனம். (ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்





 படத்தோட விமர்சனத்துக்குப்போகும் முன் இந்தப்படம் போலவே சினிமா விகடன்ஷூட்டிங் சம்பந்தமான கதை அம்சம் உள்ள தமிழ்ப்படங்கள் பட்டியலைப்பார்ப்போம்.


சினிமாவுக்குள் சினிமா  என்ற   கான்செப்ட்டில்  தமிழ்  சினிமாவில்  உருவான  சில படங்களின்  வெற்றி தோல்வியைப்பார்ப்போம் .

திரைக்கதை மன்னன்  கே பாக்யராஜின்  அஸிஸ்டெண்ட்  டைரக்டர்   ஆன  வி  சேகர்  இயக்கிய  முதல் படமான  நிழல்கள்  ரவி நடித்த நீங்களும்   ஹீரோ  தான் (1980)  மீடியாக்களால் பெரிதும்  பாராட்டப்பட்டாலும் , கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை .  இயக்குனர்  இமயம்  பாரதிராஜா  நாயகன் ஆக  நடித்த   கல்லுக்குள்  ஈரம் (1980)  மிகப்பெரும் தோல்விப்படம் .முந்தானை  முடிச்சு  மெகா ஹிட்டுக்குப்பின்  பெரிய எதிர்பார்ப்புடன் வந்த  தாவணிக்கனவுகள் (1984) தோல்வி  அடைந்தது . சிவாஜி +பிரபு  நடித்த சாதனை (1984) தோல்வி . ஆர் சி சக்தி இயக்கத்தில் விஜயகாந்த் ,கமல் நடித்த  மனக்கணக்கு (1986) சுமார் ஹிட்

  பிரகாஷ் ராஜ் , பிருத்விராஜ்   நடித்த வெள்ளித் திரை  (2008)  ஹிட் . சாவித்திரியின் கதை சொன்ன நடிகையர் திலகம் (2018) ஹிட்.துல்கர் சல்மான்,சமுத்திரக்கனி நடித்த காந்தா (2025) மீடியம் ஹிட்.

ஸ்பாய்லர் அலெர்ட்



நாயகி ஒரு சினிமாத்தயாரிப்பாளரின் மகள்.நாயகன் அவர்கள் எடுக்கும் சினிமாப்படத்தின் இயக்குநர்.4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் முடித்துத்தருகிறேன் என்று வாக்குக்கொடுத்தவர் இன்னமும் முடிக்கவில்லை.

இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான நாயகியின் அப்பா பி பி ஏறி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார்.

நாயகி நாயகன் மீது கடும் கோபம் கொண்டு அவனை வர வைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள்.

ஆரம்பத்தில் உதார் காட்டிய நாயகன் பின்பு நாயகியிடம் பம்மி எனக்கு வாய்ப்புக்கொடுங்கள்.இன்னமும் ஒரே ஒரு கோடி ரூபாயில் மொத்தப்படத்தையும் முடித்து விடுகிறேன் என்று வாக்குக்கொடுக்கிறான்.

நாயகியின் மேற்பார்வையில். நாயகன் இயக்க ஷூட்டிங்க் தொடர்கிறது.

நாயகன் ,நாயகி இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதல் வசப்படுகிறார்கள்.ஆனால் இதயம் முரளி மாதிரி மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் வெளியே சொல்லவில்லை.

ஒரு கட்டத்தில் நாயகியின் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து விடுகிறது.

நாயகன் ,நாயகி இருவரும் காதலை க்ளைமேக்ஸ் வரை சொல்லிக்கொள்ளவே இல்லை.இதற்குப்பின் நிகழ்ந்தது என்ன? என்பது தான் சுவராஸ்யமான திரைக்கதை.

நாயகி ஆக கயாடு லோஹர்.இவரது இளமை,அழகு,நடிப்பு இந்த மூன்றும் தான் படத்தின் பெரிய பலம்.பிரமாதமான  நடிப்பு.

உயிரே உனக்காக படத்தில் நதியா அணிந்தது போல படம் முழுக்க வெரைட்டியான காஸ்ட்யூம்கள் கலக்கல் ரகம்.வசந்த் இயக்கிய நீ பாதி நான் பாதி படத்தில் நிவேதா என்ற பாடல் காட்சியில் 138 கட் ஷாட்கள் வரும்.ஒரு நாயகி அதிகப்படியான எண்ணிக்கையில் வித விதமான ஆடை அணிந்தது அந்தப்படத்தில் தான்.அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தப்படத்திலும் நாயகிக்கு சேலை,சுடி ,என ஏகப்பட்ட உடைகள்.எல்லாவற்றிலும் அலங்கார தேவதை ஆக வலம் வருகிறார்.

நாயகன் ஆக விஸ்வக் சென் அப்பாவி ஆன கதாப்பாத்திரத்தில் காமெடிக்கலக்கல் ஆன கேரக்டர் டிசைனில் வந்து நம் மனதைக்கொள்ளை அடிக்கிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் நரேஷ் குணச்சித்திர நடிப்பிலும் சரி.காமெடியிலும் சரி ஸ்கோர் செய்கிறார்.


காமெடி வில்லன் ஆக வரும் சம்பத் ராஜ் சிரிக்க வைக்கிறார்.கொடூரமான வில்லன் ஆகவே பார்த்த அவரை இப்படிக்காமெடிக்கேரக்டரில் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.


நாயகனின் அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ் கவனிக்க வைக்கிறார்.

இவர்கள் போக படத்தில் நடித்த மற்ற அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பீம்ஸ் செசிரோலியோ வின் இசையில் நான்கு பாடல்களும் ஹிட்.குறிப்பாக க்ளைமாக்சுக்கு முன்பு வரும்  அடியே நான் உனையும் நான் விடுவேனா செம கலக்கல் சாங்க்.கில்லி படத்தில் வரும் அப்படிப்போடு பாட்டுக்கு நிகரான   செம ஸ்பீடு பாட்டு.

பின்னணி இசை கச்சிதம்.

நவீன் நூலியின் எடிட்டிங்கில் படம் 128 நிமிடங்கள் ஓடுகிறது.

ஒளிப்பதிவு சுரேஷ் சாரங்கம் ஜால வித்தை காட்டி இருக்கிறார்.ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கிறார்.

நாயகியின் க்ளோசப் ஷாட்கள் கொள்ளை அழகு.

மோகன் சாட்டோ என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார்  கே வி அனுதீப்

சபாஷ் டைரக்டர்



1 வில்லனாக வரும் சம்பத் தன் கெத்தைக்காட்ட ஒரு சேரைத்தூக்கிக்கோபமாக விசிற கூடவே வரும் அல்லக்கை அதை சரி செய்து உக்காருங்க  பாஸ் என சொல்லும்போது முறைக்கும் சீன் செம காமெடி.படம் முழுக்கவே வில்லன் செய்யும் காமெடிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

2 நாயகியின் காஸ்ட்யூம் டிசைன், நாயகியின் அழகு ,நடிப்பு.

3.  நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ்க்கு ஒளிப்பதிவாளர் மெனக்கெட்ட விதம்,லைட்டிங்க் எல்லாம் அட்டகாசம்.

4 முதல் பாதியில் சில காட்சிகளும்,பின் பாதியில் பல காட்சிகளும் காமெடிக்கலக்கல் தான்.

5 ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குநரால் ஏற்படும் மன உளைச்சல்களைக்காமெடியாக சொன்ன விதம்,குறிப்பாக இயக்குநர்  ஷங்கரைக்கலாய்த்த விதம் 

6 கிரேசி மோகன் டைப் காமெடி வசனங்கள், வார்த்தை ஜால ஜோக்குகள்,எஸ் வி சேகர் டைப் கவுண்ட் டவுன் டயலாக்ஸ் செம


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 முழுப்படமும் காமெடி என்று முடிவெடுத்த பின் க்ளைமாக்சில் பெண்கள் மனம் கவர வைக்கப்பட்ட அந்த அம்மா-மகன் செண்ட்டிமெண்ட் காட்சி படத்தோடு ஒட்டாமல் தனியாகத்தெரிகிறது

2 மொத்தப்படத்திலும் இளவரசி மாதிரி ஆளுமையாக வந்து போன நாயகி க்ளைமாக்சில் ஐ லவ் யூ சொல்லும் முக்கியமான தருணத்தில் செயற்கையான நடிப்பு எடுபடவில்லை.

3 நாயகியின் மனதைக்கவரும் விதமாக நாயகனிடம் எந்த பிளஸ் பாயிண்ட்டும் இல்லை.எதைப்பார்த்துக்காதலில் விழுந்தார் என்பதில் தெளிவில்லை


அடல்ட்ஸ் கண்ட்டெண்ட் வார்னிங் - யு


சி பி எஸ் பைனல் கமெண்ட் - நம்ம ஊர் யாரடி நீ மோகினி மாதிரி தெலுங்கில் செம ஹிட் ஆன படம்.ஜாலி காமெடி பட்டாசு.ரேட்டிங்க் 3/5


Funky
Theatrical release poster
Directed byK. V. Anudeep
Written by
  • K. V. Anudeep
  • Mohan Sato
Produced by
  • Naga Vamsi S
  • Sai Soujanya
Starring
CinematographySuresh Sarangam
Edited byNaveen Nooli
Music byBheems Ceciroleo
Production
companies
  • Sithara Entertainments
  • Fortune Four Cinemas
  • Srikara Studios
Release date
  • 13 February 2026
Running time
128 minutes[1]
CountryIndia
LanguageTelugu

Saturday, April 04, 2026

யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)

                 

        யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)


     முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க  அறிமுக இயக்குநர் பால்ராஜ் கதை,திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் இது.இவர் யாரிடமும் உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றாமல் ஷூட்டிங்க் வேடிக்கை பார்த்தே தொழில் கற்றுக்கொண்டவர்.

புகழ் பெற்ற பாடல் வரியை டைட்டிலாகக்கொண்ட இந்தப்படம் திரைக்கதை அம்சத்திலும் வித்தியாசமாக இருக்கிறதா?என்பதைப்பார்ப்போம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு மெக்கானிக்.சொந்தமாக ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்.இவருக்கு ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை.ஆனால் எந்தப்பெண்ணும் அதற்கு சம்மதிக்கவில்லை.கடைசியில் ஒரு பெண் அவரது கண்டிஷனுக்கு. ஓக்கே சொல்ல திருமணம் நடக்கிறது.ஒரு குழந்தையும் பிறக்கிறது


இதற்குப்பின் தான் பிரச்சனை வெடிக்கிறது.ஒரு குழந்தையை வைத்தே என்னால் சமாளிக்க முடியவில்லை.இன்னமும் ஐந்து பேரா?என்னால் முடியாது என நாயகனின் மனைவி ஸ்ட்ரிக்ட் ஆக மறுத்து விடுகிறார்.இருவருக்குள் மோதல் ஏற்படுகிறது.ஒரே வீட்டில் இருந்தும் இருவரும் தனித்தனியே இருக்கிறார்கள்.


நாயகி திருமணம் ஆனவர்.கணவன் மாமா மகன் தான். ஆனால் குடிகாரன்.தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் சண்டை.இவர்களுக்குக்குழந்தை இல்லை.ஆனால் நாயகிக்குக்குழந்தை என்றால் கொள்ளை ஆசை.இப்படிப்பட்ட தருணத்தில் நாயகியின் கணவன் ஒரு விபத்தில் இறந்து விடுகிறான்.


நாயகன்,நாயகி சந்திப்பு நடக்கிறது.ஆரம்பத்தில் நட்பாகப்பழகியவர்கள் பின் காதலர்களாக மாறி விடுகிறார்கள்.


நாயகனின் மனைவி ஒரு சந்தர்ப்பத்தில்  நாயகனை நாயகியுடன் ஜோடி யாகப்பார்த்து விடுகிறாள்.சண்டை வெடிக்கிறது.

நாயகன் ,நாயகி இருவரும் பிரிகிறார்கள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக பால்ராஜ் நடித்திருக்கிறார்.இவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை.முடிந்தவரை சமாளித்து இருக்கிறார்.அவ்வளவுதான்.

நாயகனின் மனைவி ஆக காயத்ரி ரேமா குடும்பப்பாங்கான நடிப்பைத்தந்திருக்கிறார்.

நாயகி ஆக ஸ்வேதா ஸ்ரீ நடித்திருக்கிறார்.இவரது முக பாவனைகள் அருமை.

வில்லன் ஆக ரவி மரியா நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.வந்த வரை ஓக்கே ரகம்.


படத்தில் நடித்த மற்ற துணை நடிகர்கள் ஆன அம்பானி சங்கர் ,பசஙக பட புகழ் சிவக்குமார் போன்றோர் நடிக்க அதிக வாய்ப்பில்லை,ஸ்க்ரீன் ஸ்பேஸ் தரப்படவில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார்கள்.

இசை விஜய் பிரபு.பாடல்கள் சுமார் ரகம் தான்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.


ஒளிப்பதிவு உதயன்.இரு நாயகிகளை அழகாகவே காட்டி இருக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி தயாரித்து இருக்கிறார் நாயகனாக நடித்து இருக்கும் பால்ராஜ்.


சபாஷ்  டைரக்டர்

1 போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ரவி மரியா வரும் காட்சிகள் எல்லாம் சுவராஸ்யமாகவே இருக்கிறது.

2 நாயகி ஆக வரும்  ஸ்வேதா ஸ்ரீ யின் அழகும் நடிப்பும் தான் படத்துக்குப்பக்க பலம்

3 பேமிலி டிராமாவாகக்கொண்டு போகலாம் என்ற இயக்குனரின் முயற்சி குட்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகிக்குத்திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை வாழவே இல்லை என்பதை நம்ப முடியவில்லை.என்ன தான் குடிகாரன் என்றாலும் ஒரு நாள் கூடவா கணவர் ஆக நடந்து கொள்ளாமல் இருப்பார்?

2  தன்னை நம்பி வந்தவர்களைக்கை விட மாட்டேன் இது தான் என் கொள்கை என்று கூறும் நாயகன் மனைவிக்கு துரோகம் செய்வது ஏற்புடையதாக இல்லை

3 நாயகி மேல் ஆசைப்படும் போலீஸ் ஆபீசர் திடீர் எனக்கொலை செய்யப்படுவது அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமாரான ,பழக்கப்பட்ட கதை தான் ,போர் அடிக்காமல் கதை சொல்ல முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர்.ரேட்டிங்க் 2.5 /5

Friday, April 03, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 3/4/2026. ஏப்ரல் முதல் வாரம் ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம் 5 படங்கள் வெளியாகின்றன.அவற்றில் நான்கு  தமிழ்ப்படங்கள்,ஒரு தெலுங்குப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது.








1 லீடர்.   ஆக்சன் திரில்லர்

லெஜெண்ட் சரவணன் நாயகன் ஆக நடிக்க துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் இது.இந்தப்படத்தின் டீசர் கட்,ட்ரெய்லர் கட் பார்க்கும்போது விஸ்வாசம் படத்தை பட்டி டிங்கரிங்க் பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஏற்கனவே தெலுங்கில் சிரஞசீவி -நயன் தாரா நடிப்பில் வெளிவந்த மனசங்கர வரப்பிரசாத் காரு படமே விஸ்வாசம் படத்தை சுட்டு காமெடி கலந்து எடுத்த கதை தான்.இதில் ஆக்சன் ,அடிதடி ,சண்டை என மசாலா சேர்த்து இருக்கிறார்கள் போலத்தெரிகிறது.

வில்லன் - நீ என்ன பெரிய ஹீரோவா?

ஹீரோ - எல்லாக்குழந்தைக்கும் அவங்கவங்க அப்பா  ஹீரோ தாண்டா.

கடவுள் நேரடியா யாருக்கும் உதவி செய்யறது இல்லை.மனிதர்கள் மூலமாத்தான் உதவுவார்.

வில்லன் -யார்றா அவங்க மேல கையை வெச்சது?போலீசா?மிலிட்ரியா?கேங்க்ஸ்டரா?நேவியா?

அடியாள் - அப்பாண்ணே.நாம கடத்தி வெச்சிருக்கும் பொண்ணோட அப்பா


மேலே கண்ட டயலாக்சில் இருந்து கடத்தப்பட்ட தன் மகளை மீட்க நாயகன் நடத்தும் ஆக்சன் அதகளம் தான் மொத்தப்படமும் என யூகிக்கலாம்.

போலீஸ் ,கேங்க்ஸ்டர் என இரு தரப்புக்களையும் எதிர்த்து நாயகன் ஒற்றை ஆளாகப்போராடுகிறார் போல.

12பி புகழ் ஷாம் ,ஆயிரத்தில் ஒருவன் புகழ் ஆண்ட் ரியா ஜெராமின் ,பாயல் ராஜ்புத்,சந்தோஷ் பிரதாப்,மலையாள நடிகர் லால் ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

படம் ரிலீஸ் அன்றே லெஜெண்ட் சரவணனை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வதற்காகவே பலரும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

=======================================================





2 காளிதாஸ் பாகம் 2.   சஸ்பென்ஸ் திரில்லர்

பரத் போலீஸ் ஆபீசர் ஆக  நடித்திருக்கும் படம் இது.முதல் பாகக்கதைக்கும் ,இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை.இது தனிக்கேஸ்.

நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை ஒரு சீரியல் கில்லர் தான் செய்கிறான் என்று சந்தேகப்பட்டு நாயகன் ஆன போலீஸ் ஆபீசர் வரவழைக்கப்படுகிறான்.அரக்க வேட்டை என்று பிராஜெக்ட்க்குப்பெயர் சூட்டப்படுகிறது.

வில்லன் பெயர் ஸ்டீபன்.இவன் செய்யும் குற்றஙகள் என்ன?ஏன் செய்கிறான் என்பதை துப்பு துலக்குவதுதான் கதை.

ட்ரெய்லர் பிரமாதமாக வந்திருக்கிறது.

ரசித்த சில வசனங்கள்

1. இங்கே நடக்கும் எல்லாப்பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டா?தெரியாது.எல்லாக்குற்றங்களுக்கும் தண்டனை கிடைக்கிறதா?என்றால் ஒரு சிலரால் அதுவும் கிடைப்பதில்லை.

2.  ஒரு மனுசனை சாகடிக்கறது அவனுக்கான தண்டனைன்னு நினைக்கிறோம்.ஆனா அது அவனுக்கான விடுதலை.

3 நான் நல்லவனுக்கு ஒரு படி கீழேயும்,கெட்டவனுக்கு ஒரு படி மேலேயும்

ஒரு அபார்ட்மெண்ட்டில் மித்ரா என்ற பெண் காணாமல் போகிறாள்.ரெகுலராகக்கொலை செய்யும் சீரியல் கில்லர் வேலையா?வேறு யாரோவா?என்பதை நாயகன்  விசாரித்துக்கண்டுபிடிப்பதுதான் கதை

இதில் பிரகாஷ் ராஜ் போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார்.அவர் போக பவானி ஸ்ரீ,அபர்நதி,சுரேஷ் சந்திரமேனன்,அஜய் கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவு பிரமாதம்.லொக்கேஷன்கள் கலக்கல் ரகம்.

=================================================================


3 நீளிரா. மெலோ டிராமா

கார்த்திக் சுப்புராஜ் + ராணா டகுபதி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் .நவீன் சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் சோமீதரன் கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

1988ல் இலங்கை யில் நடந்த போரின் பின்னணியில்  நடந்த உண்மைக்கதை.

படத்தின் ட்ரெய்லர் கட் பார்க்கும்போது நாயகிக்குத்திருமணம் நடக்க  இருக்கும் சூழலில் போர் நடக்கிறது.திருமணம் நடக்குமா?நடக்காதா?என்ற கேள்வி  எழும்போது முதலில் இந்த இரவு நாம் உயிருடன் இருப்போமா?தெரியலை என்ற பதில்  வருகிறது.

ஒலி அமைப்பு பிரமாதம்.நீளிரா என்ற பெண்ணின் பார்வையில் கதை நகரா

============================================================




4. கார்மேனி செல்வம்.   திரில்லர்

இயக்குநர் சமுத்திரக்கனி+ இயக்குனர் கவுதம் வாசுவேம் மேணன்  இருவரும் இணைந்து நடித்து இருக்கும் படம் இது.

நாயகன் ஒரு கார் டிரைவர்.நடுத்தரக்குடும்பம்.சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது இவர் கனவு. பணக்காரன் ஆக வாழ வேண்டும் எனில் கடன் வாங்கியாவது இஷ்டத்துக்கு செலவு. செய்ய வேண்டும் என்பது இவர் பாலிசி.

மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்க நினைக்கிறார்.முதலாளியிடம் விசுவாச மான வேலைக்காரனாக இருந்த நாயகன் இதற்குப்பின் என்ன  செய்தான்?லட்சியத்தை அடைந்தானா?என்பது மீதிக்கதை.

நாயகன் ஆக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.வழக்கமாக நேர்மையானவராக நடிக்கும் இவர் இந்தப்படத்தில் மோசடி வேலை செய்பவர் போல வருகிறார்.

லட்சுமிப்ரியா,அபினயா,கார்த்திக் குமார்,படவா கோபி,முல்லை கோதண்டம், மற்றும் பலர் நடிக்க ராம் சக்ரி இயக்கி இருக்கிறார்.

இது. தமிழ் ,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என சொல்லப்பட்டாலும் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது.

ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது.

=============================================================





5. பைக்கர் (தெலுங்கு/தமிழ்). ஸ்போர்ட்ஸ். டிராமா

சர்வானந்த் +மாளவிகா நாயர் ஜோடியாக நடிக்கும் ரொமாண்டிக் டிராமாவாக இருந்தாலும் மோட்டார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இந்தியாவில் வெளியாகும் முதல் படம் என்ற வாசகத்துடன் வருகிறது.

இந்தப்படத்தில் நடிக்க சர்வானந்த் இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.ஒரு ரேஸ் வீரர் எப்படிக்கார் ஓட்டுவார்?அவரது உடல் மொழி எப்படி இருக்கும் என்பதைக்கற்றுக்கொண்டாராம்.

படத்தை இயக்கி இருப்பவர் அபிலாஷ் கங்காரா

இதுதாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகர்  ஹிந்தி நடிகர் அதுல் குல்கர்னி ,பிரம்மாஜி இணைந்து நடித்த படம்.

மூன்று தலைமுறைகளில் என்ன என்ன மாற்றங்கள்  பைக் ரேஸ் கண்டிருக்கிறது?என்பதை சொல்லும் ஸ்போர்ட்ஸ் டிராமா மூவி இது.ஆக்சன் ,காதல் கூட உண்டு.


======================================

Thursday, April 02, 2026

MADE IN KOREA (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

                            

  

  நித்தம் ஒரு வானம்  (2022)  என்ற தரமான   படத்தைக்கொடுத்த  இயக்குனர்  ர கார்த்திக்  அவரது  பாணியில்  இருந்து  கொஞ்சம்   மாறி   தந்திருக்கும்  ஒரு வித்தியாசமான படம் தான் இது .சமூக   வலைத்தளங்களில்  வெறித்தனமான  ரசிகர்களை  வைத்திருக்கும் பிரியங்கா மோகன்  பூவே  பூச்சூடவா   நதியா   மாதிரி   ஒரு கேரத்டரில்  நடித்திருக்கும் படம்   தான் இது  

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகிக்கு சின்ன வயதில் இருந்தே கொரியா போக வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருக்கிறது.இதனால் இவர் பார்க்கும் சினிமாக்கள் கூட கொரியன் படஙகள் தான்.


நாயகியின் அப்பா ஒரு மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.நாயகிக்கு சின்ன வயதில் இருந்தே தன்னுடன் படித்த மாணவனுடன் காதல் உண்டு .இது நாயகியின் பெற்றோருக்குத்தெரியாது.


நாயகியின் காதலனுக்கு வேலை ,வெட்டி எதுவும் இல்லாததால்  கல்யாணத்தைத்தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறான்.


ஒரு கட்டத்தில் நாயகியின் பெற்றோருக்கு நாயகியின் காதல் விஷயம் தெரிய வர வீட்டில் கடும் எதிர்ப்பு.இதனால் ஊரை விட்டுப்போக திட்டம் போடுகிறார் நாயகி.

நாயகி தன் காதலனுடன் சென்னை வருகிறார்.அங்கே இருந்து இருவரும் கொரியா போகத்திட்டம்.


ஆனால் இங்கே தான் ஒரு ட்விஸ்ட்.நாயகியின் காதலன் நாயகியின் அப்பா தந்த பணத்துடன். எஸ்கேப் ஆகி  விடுகிறான்.


அறிமுகம் இல்லாத இடம் ,மொழி தெரியாத இடம் என்று நாயகி கொரியா போய் என்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.


நாயகி செண்பாவாக பிரியஙகா மோகன் நடிப்பு அருமை.அவரது உடைகள் ,அலங்காரங்கள் எல்லாம் கலர்புல் கலக்கல்.


நாயகியின் இளம் வயது தோற்றத்தில் ரியா மனோஜ் நடிப்பும் குட்.

நாயகியின் காதலன் ஆக வரும் ரிஷி காந்த்  கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


மற்ற அனைவரின் நடிப்பும் ஓக்கே ரகம்.

அந்தோணியின் எடிட்டிங் கில் படம் 113 நிமிடங்கள் ஓடுகிறது.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்தின் முதுகெலும்பு.

தரண் குமார் பின்னணி இசையில் முத்திரை பதித்து இருக்கிறார்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ரா கார்த்திக்.



சபாஷ்  டைரக்டர்


1   நாயகி  கொரியா போன  பின்  கதை  நன்கு  செட்  ஆகி விடுகிறது . பிரமாதமான  ஒளிப்பதிவு , அருமையான லொக்கேஷன்கள்      கண்களுக்குக்குளிர்ச்சி 


2  நாயகியின்   முக பாவனைகள் , உடல் மொழி ,  டயலாக்   டெலிவரி   என்று  அனைத்தும்   அசத்தல் . ஒன விமன்  ஆர்மியாக  படத்தில்  கோலோச்சுகிறார் 


3 கொரியன்   பாட்டி  , அவளது   பையன் , காதலன்   நடிப்பு   அருமை . 


4  நாயகி  கொரியா   வில்    அழும்   சீனில்  கிதாரில்  பூங்காற்றினிலே  உன் சுவாசத்தை ( உயிரே)  பாடலை  வாசிக்கும் சீன டச்சிங்க் 

5 பாட்டி + நாயகி காம்போ சீன்கள் பூவே பூச்சூடவா பத்மினி-நதியா காம்போ சீன்களை நினைவுபடுத்தும் அளவு எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம்.


 6. நான் எவ்வளவு பெரிய வலியில் இருக்கிறேன் என்பதை சொல்லக்கூட அருகில் ஆள் இல்லை என்பதே ஒரு பெரிய வலி என நாயகி சொல்லும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி கிளாசிக்.


7 பெண்களுக்குக்கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காட்சிகள்,உறவுகள் நம் வாழ்வின் வசந்தம் என்பதை சொல்லும் காட்சிகள் அருமை.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கங்கனா ரனாவத்  நடித்த   க்யூன் (2013) , ஸ்ரீ  தேவி  நடித்த  இங்க்லீஷ் விங்க்லீஷ் (2012)  ஆகிய   இரு படங்களில்  வரும்  பல  காட்சிகள்   இந்தப்படத்தில்  பயன்படுத்தப்பட்டிருப்பது  இயக்குனர்  அட்லி ரசிகரோ ? என்ற  சந்தேகத்தை  எழுப்புகிறது 


 2   நாயகி  வெளிநாட்டில்  வந்து  கஷ்டப்படுவது  போல்  காட்சிகளே   இல்லை . அவர் சந்திப்பவர்கள்     எல்லோரும்   நல்லவர்களாகவே இருப்பது எப்படி ? இயக்குனர்  விக்ரமன்  படத்தில்  தான்   எல்லோரும் நல்லோர்   என்று  பாசிட்டிவாக காட்டுவார்  


3 பாட்டி,நாயகி தவிர   படத்தில்   வரும்   வேறு எந்தக்கேரக்டரோடும்  எமோஷனல்   கனெக்ட்  கொடுக்கவில்லை 


4   நாயகியின்   அப்பா  தான்   கொண்டு  வந்த பணத்தை  நாயகியின்  காதலனிடம்  தந்து  ஏமாறுவது   நம்பும்படி இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்..ரேட்டிங்க் 3/5

Made in Korea
Release poster
Directed byRa. Karthik
Written byRa. Karthik
Produced bySreenidhi Sagar
Starring
CinematographyPrasanna Kumar
Edited byAnthony
Music bySongs:
Hesham Abdul Wahab
Simon K. King
Dharan Kumar
Score:
Dharan Kumar
Production
company
Rise East Entertainment
Distributed byNetflix
Release date
  • 12 March 2026
Running time
113 minutes[1][2]
CountriesIndia
South Korea
LanguagesTamil
Korean





Wednesday, April 01, 2026

நீ For Ever (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

 நீ For Ever (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


     


       


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு சினிமாப்பட இயக்குநர்.ஒரு நிறுவனத்திடம் கதை சொல்லப்போகிறார்.காதல் கதையாக இருந்தால் தேவலை என்கிறார்.நாயகியிடம் காதல் கதை இல்லை.ஒரு அனுபவத்துக்காக காதலிப்பது போல் நடித்து அந்த அனுபவத்தைப்படம் ஆக்கலாம் என நினைக்கிறார்.


நாயகன் ஒரு டேட்டிங்க் ஆப்  உருவாக்கும் முயற்சியில் இருக்கிறான்.அதற்கு முதலீடு செய்ய ஆள் தேவை.அவரோ உனக்குக்காதலில் அனுபவம் இருக்கா?எனக்கேட்கிறார்.அந்த அனுபவத்தைப்பெற காதலித்துப்பார்ப்போம் என நாயகன் முடிவு செய்கிறான்.


நாயகன் ,நாயகி இருவரும் ஒரு டேட்டிங்க் ஆப் மூலம் அறிமுகம் ஆகி நண்பர்கள் ஆகிறார்கள்.பிறகு காதலிக்கிறார்கள்.இருவருமே உண்மையாகக்காதலிக்கவில்லை.இது பரஸ்பரம் இருவருக்கும் தெரியாது.ஒரு கட்டத்தில் நடிப்புக்காதல் மறைந்து நிஜமாகவே ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.


நாயகிக்கு பெற்றோர் இல்லை.ஆனால் நாயகனுக்கு அம்மா உண்டு.அம்மாவும் லவ் மேரேஜ் தான்.ஆனால் அப்பா விட்டு விட்டுப்போய் விட்டார்.லவ் மேரேஜை எதிர்த்த நாயகனின் தாத்தாதான் நாயகனின் அம்மாவுக்கு அடைக்கலம் தந்தவர்.அவருக்கு லவ் என்றாலே பிடிக்காது.

இதற்குப்பின் நாயகன் நாயகி காதல் என்ன ஆனது ?என்பது தான் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக அர்ச்சனா ரவி அழகாக ,குடும்பப்பாங்காக இருக்கிறார்.நல்ல நடிப்பு.


நாயகன் ஆக சுதர்சன் கோவிந்த் ஆள் நல்ல உயரமாக அருண் பாண்டியன மாதிரி இருக்கிறார்.ஆனால் அவரைப்போலவே இவருக்கும் நடிப்பு வரவில்லை.


நாயகனின் அம்மாவாக  வித்யா ,அப்பாவாக நிழல்கள் ரவி இருவரது குணச்சித்திர நடிப்பும் அருமை.

தாத்தாவாக ஒய் ஜி மகேந்திரன்.அனுபவம் மிக்க நடிப்பு,ஆரம்ப காலத்தில் இவர் காமெடியனாக மொக்கை போடுவார்.ஆனால் இது போன்ற கேரக்டர் ரோலில் கச்சிதமான நடிப்பு.


நாயகியின் தோழி ஆக வரும் சினேகா சக்தி நல்ல நடிப்பு.துடுக்குத்தனம் ரசிக்க வைக்கிறது.அதே போல் நாயகனின் நண்பன் ஆக வரும் விஜே பப்புவின் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன.


அறிமுக இயக்குநர் அசோக் குமார் கலைவாணி கதை ,வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.படத்தின் ரன்னிங் டைம்  133 நிமிடங்கள்.

சபாஷ்  டைரக்டர்

1  இருவருமே சுயநலத்துக்காகக்காதலிப்பது போல் நடிப்பது,பின் நிஜமாகவே காதலிப்பது இந்த கான்செப்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

2 நாயகியின் ஆடை வடிவமைப்பு ,கண்ணியமான தோற்றம் அழகு.

3 காதல் கதையில் குடும்ப செண்ட்டிமெண்ட்டை இணைத்த விதமும் அருமை

4  காதல் பற்றிய தத்துவ வசனங்கள் அனைத்தும் இயக்குனர் அனுபவப்பூர்வமாக  உணர்ந்து எழுதி இருக்கிறார்.



ஹிட்  சாங்க்ஸ்


1. நீ தானா ? மாஸ் தானா?

2 அடி ஏண்டி ஏண்டி 


  ரசித்த  வசனங்கள் 


1_ ஹீரோ மாதிரி இருக்கும் பசங்க 10% தான்.சுமாரா இருக்கும் பசங்க தான் 90%


2 வாய் எவ்ளோ வேணா பொய் சொல்லும் ,ஆனா கண் காட்டிக்குடுத்துடும்.

3 பெத்த பையனைப்பிரிஞசிருப்பதை விட ஒரு அம்மாவுக்கு வேற என்ன கஷ்டம் இருக்க முடியும்?

4  டேட்டிங்க்  கல்ச்சர்ல ரெண்டே வகை 1 ஏமாத்தறவங்க 2 ஏமாறுகிறவங்க

5  நாம எல்லோரும் சோகத்தையும் ,வலியையும் உள்ளே வெச்சுக்கிட்டு  சந்தோஷத்தையும் ,காதலையும் வெளியே தேடறோம்


6. ஒரு சில விஷயத்தை தூரத்தில் இருந்து பார்த்தாதான் நல்லாருக்கும்.

7 கடந்த காலத்தில் யாரை வேணா நாம் இழந்திருக்கலாம்,அது நம் கையில் இல்லை.ஆனா நிகழ் காலத்தில் நாம் யாரையும் இழக்கக்கூடாது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

, திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன் படம் முழுக்க உம்மணாம்மூஞ்சியாக வருவது எரிச்சல்.தாடி வேற. நடிப்பு வர்லை

2. நாயகனின் தாத்தா. ஒய் ஜி. காதலை எதிர்த்து தூக்குப்போட்டு சாக முயற்சிக்கும் காட்சி படு செயற்கை.ஒட்டவே இல்லை.

3 நாயகன் ,நாயகி இருவருமே பரஸ்பரம் சுயநலத்துக்காகத்தான் காதலிப்பது போல் நடிக்கிறார்கள்.ஆனால் நாயகி மட்டும் மன்னிப்புக்கேட்பது எதற்கு?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் மட்டுமல்ல ,அனைவருமே பார்க்கலாம்.குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் தான் இருக்கிறது.ஒரே ஒரு இடத்தில் டபுள் மீனிங் ஜோக் வருகிதது.ரேட்டிங்க் 3/5


Thanks அனிச்சம் மின் இதழ். 1/4/2026