Tuesday, June 11, 2024

AA OKKATI ADAKKU( 2024 ) - ஆ ஒக்கட்டி அடக்கு - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

                      

 


அறிமுக  இயக்குநர்  மல்லி  அங்கம்  தனது முதல்  படத்துலயே  காமெடி  டிராமாவாக  ஒரு  சமூக   மெசேஜைக்கலந்து  சொல்லி  இருக்கிறார். மேட்ரிமோனியல்  சைட்களில்  நடக்கும்  தில்லுமுல்லுகளைத்தோல்  உரிக்கிறார் . 3/5/24   அன்று  திரை  அரங்குகளில்  வெளீயான  இப்படம்  இப்போது  31/5/2024  முதல் அமேசான்  பிரைம்   ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  பேச்சிலர். ரெஜிஸ்டர்  ஆஃபீசில்  அரசாங்க  ஊழியர்  ஆகப்பணி  புரிகிறார். இதுவரை  200  ஜோடிகளுக்குத்திருமணம் செய்து  வைத்திருக்கிறார், ஆனால்  அவருக்கு  இன்னும்  மேரேஜ்  ஆகவில்லை 


  மேட்ரிமோனியல்  சைட்டில்  தன்  பெயரைப்பதிவு  செய்து  தீவிரமாக  வரன்  பார்த்துக்கொண்டிருக்கிறார். நாயகி  அவர்  பார்த்த  வரன்களில்  ஒருவர் . நாயகனுக்கு  நாயகியைப்பிடித்து  விடுகிறது  . ஆனால்  நாயகியின் எண்ணம்  வேறாக  இருக்கிறது 


 எனக்கு மொத்தம்  10  புரொஃபைல்ஸ்  வந்திருக்கு.  எனக்கு  உங்களைப்பிடிச்சிருக்கு , ஆனா  மீதி 9  வரன்களையும்  பார்த்து  எது  பெஸ்ட்னு  செலக்ட்  பண்ணனும், அதே  மாதிரி  நீங்களும்  மீதி  உள்ள  9  புரொஃபைல்சையும் பார்த்து  சூஸ்  பண்ணுங்க  என்கிறார்


  மேலோட்டமாக  நாயகி  இப்படிச்சொன்னாலும்  நாயகியின்  உள்  நோக்கமே  வேறு . நாயகி  அதே  மேட்ரிமோனியல்  சைட்டில்  சீனியர்  ஸ்டாஃப்  ஆகப்பணிபுரிபவர் 


 நாயகியின்  திட்டம்  என்ன?  நாயகன் - நாயகி  காதல்  கை  கூடியதா? அல்லது  நாயகன்  தன்  அண்ணியின்  தங்கையைத்திருமணம்  செய்தாரா? என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  அல்லரி  நரேஷ் அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார். அப்பாவித்தனம் , காமெடி  இரண்டும் இயல்பாக  வருகிறது 


 நாயகி  ஆக   ஃப்ரியா  அப்துல்லா  தன்  பெயருக்கு  ஏற்றாற்போல  ஃப்ரீயாக  படம்  முழுக்க  ஸ்லீவ்  லெஸ்  டிரஸில்  கிளாமராக  வருகிறார். அவரது  புன்னகை  அவரது  பிளஸ் 


நாயகனின்  நண்பன்  ஆக    வெண்ணிலா  கிஷோர்  காமெடியன்  ஆக  வருகிறார் 


 இசை  கோபி  சுந்தர். 3  பாடல்களுமே  ஹிட். பின்னணி  இசை  குட் 


சோட்டா  கே  பிரசாத்  எடிட்டிங்கில்  படம்  131  நிமிடங்கள்  ஓடுகிறது 


 சூர்யாவின்  ஒளிப்பதிவில்  நாயகி , நாயகனின்  மச்சினி , உட்பட  பல  பெண்    கேரக்டர்களை அ ழகாக்காட்டுகிறது  கேமரா 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  ஸ்கூல்  மேட்  தன்  மகள்  கல்யாணத்துக்கு  அழைக்கும்போது  அங்கே  வரும்  நாயகனின்  அக்கா  நாயகனுக்கு  வரன்  இருந்தா  சொல்லுங்க  என்றதும், பள்ளித்தோழி  இன்னுமா  உனக்குக்கல்யாணம்  ஆகலை  என  கலாய்ப்பது  காமெடி கலக்கல் 


2   முதல்  பாதி  காமெடி கலாட்டா  , பின்  பாதி  ரொமாண்டிக்  டிராமா  என  கமர்ஷியலாகக்கொண்டு  போன  விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஓ  மேடம்  ஐ ஆம் வெயிட்டிங்  ஃபார்  யூ


2  காதலை  மறைப்பது  கஷ்டமான  காரியம் 


3  மாங்கல்யம்


  ரசித்த  வசனங்கள் 


1   சார் , ஒரு  டெலிவரி  இருக்கு 


 அவருக்கு  இன்னும்  மேரேஜே  ஆகலையே? அதுக்குள்ளே  டெலிவரியா? 


 இது  ஃபுட்  டெலிவரி சார் 


2  ரூ 25,000  கொடுத்தா  உடனடியா  உனக்கு  மேரேஜ்  ஆக  வழி  பண்றேன்


 அவ்ளோ  செலவு  ஆகுமா? 


 சரி , 25  ரூபா  பணம்  கட்டி  அங்கே  லைன்ல  நில்லு , 25    வருசத்துல  உன்னைக்கூப்பிடுவாங்க , மேரேஜ்  பண்ணிக்கலாம் 


3 ஆண்கள்  எல்லோரும் ஒரே  மாதிரி  தான் , வாய்ப்புக்காக  காத்திருப்பார்கள்


 என்  ஆள்  அப்படிப்பட்டவன்  இல்லை 


 இதே  டயலாக்கைத்தான்  எல்லாப்பொண்ணுங்களும்  சொல்வாங்க 


4  ஹார்டு ஒர்க் தான் ஜெயிப்பதற்கான  வழினு  சொல்றாங்க , ஆனா  யாரோட  வெற்றிக்கு  யாரோட  ஹார்டு  ஒர்க்  தேவைனு  சொல்லலை , இங்கே  கஷ்டப்படறது  நான்,  அதுக்கான  பலனை  அனுபவிப்பது  அவன்  


5  எந்த  முடிவு  எடுத்தாலும்  ஒரு தடவைக்கு  ரெண்டு  தடவை  நல்லா யோசிச்சு முடிவு  எடுக்கனும், ஏன்னா  நாம்  எடுக்கும்   முடிவு  நம்  வாழ்க்கையையே  மாற்றுவதாகக்கூட  அமையலாம் 


6  என்னால  இதுவரை  200  ஜோடிகளுக்கு  கல்யாணம்  ஆகி  இருக்கு 


 நீ   என்ன சர்ச்  ஃபாதரா? 


7  பிளாட்டினமும்  , வெள்ளியும்  பார்க்க  ஒரே  மாதிரி  இருந்தாலும்  பிளாட்டினம்  தான்  காஸ்ட்லி 


8   இந்த  உலகத்துல  ஆண்களை  விட  பெண்கள்  எண்ணிக்கை  குறைவு  தான். அதனால  பெண்களாகிய  நாம்  தான்  ஆண்களை  ரிஜெக்ட்  செய்வதில்  முன்னணியில்  இருக்கனும் 


9   எனக்கு  நீங்க கரெக்ட்  ஆன  ஜோடி  இல்லைனு  தான்  சொன்னேன், ஆனா  உங்களுக்கு  நான்  கரெக்ட்  ஆன  ஜோடினு  தான்  நினைக்கறேன் 

10  என்  கழுத்துச்செயின் லாக்கெட்ல  தாலி  செயின்  ரெடியா  வெச்சிருக்கேன் , எனக்குப்பிடிச்ச  பொண்ணு  மாட்டுச்சுன்னா  டக்னு  தாலியைக்கட்டிட  வேண்டியதுதான் 


11  எனக்கு  வந்த  காஃபியை  நீங்க  ஏன்  டேஸ்ட்  பண்றீங்க ? 


 ஏன்  கோபப்படறீங்க ? நான்  ஆர்டர்  பண்ன  காஃபியை  நீங்க டேஸ்ட்  பண்ணுங்க, என்ன  இப்போ ? 


இதுல  டபுள்  மீனிங்    ஏதும்  இல்லையே? 


12  எனக்கு  மஞ்சள்  கலர்  தான்  பிடிக்கும்


 நான்  கட்டி  இருக்கும் ஷூ  லேஸ்  கூட  மஞ்சள்  தான் 


13   வாழ்க்கைல  செட்டில்  ஆவது  என்பது  மேரேஜ்  பண்ணிக்கொள்வதில்  இல்லை . நல்ல  வேலை  கிடைப்பதில்தான்  உள்ளது . கடன்  இல்லாத  வாழ்க்கையில்  தான்  உள்ளது லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஃபிரெஷ்  பேச்சிலர்  ஆன  நாயகன்  3  முறை  டைவர்ஸ்  ஆன  பெண்ணை  மணக்கத்துடிப்பதும், அதற்கு  பெற்றோர்  ஓக்கே  சொல்வதும்  நம்ப  முடியவில்லை 


2  நாயகனுக்கு  நடக்க  இருக்கும்  திருமணத்தில்  திருமண  மேடையில்  அமர்ந்த  நாளில்  மணப்பெண்  ஓடிவிட  பெண்ணின்  குடும்ப  கவுரவத்தைக்காப்பாற்ற  மாப்பிள்ளை  ஓடி  விட்டதாக  செய்தி  பரப்பி  நாயகன்  தியாகி  ஆவது  ஓக்கே   ஆனால்  அப்போது  மேடையில் மணப்பெண்  இருக்கனுமே? அவர்  தான் ஓடி  விட்டாரே?  சொந்தக்காரர்களுக்குத்தெரியாமல்  போய்  விடுமா? 


3  நாயகனுக்கு  அவசரமாக  10  லட்ச  ரூபாய்  பணம்  தேவை  என  கேட்கும்போது  அண்ணி    தான் சேர்த்து  வைத்த  சேமிப்புப்பணத்தை  பல்க்  ஆக ரெடி  கேஷ்  ஆக  வீட்டில்  இருந்து  எடுத்துத்தருகிறார். அய்யய்யோ , இது  நீங்க  கார்  வாங்க  வெச்சிருந்த  பணம்  ஆச்சே?  எனக்கேட்கிறார். யாராவது  வீட்டில்  ரெடி  கேஷ்  ஆக  10  லட்சம்  ரூபாய்  சேமித்து  வைப்பார்களா?  பேங்க்கில்  இருந்தால்  வட்டியாவது  வரும் 


4  படத்தில்  அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்  திடீர்  என  மாறி  விட்டார்களா?  முதல்  பாதி  திரைக்கதையின்  திசை  வேறு  , பின்  பாதி  திரைக்கதையின்  திசை  வேறு


5  படத்தின்  ஓப்பனிங்  ஷாட்டில்  நாயகன்  ஏற்படுத்தியதாகக்காட்டிய  விபத்தை  ஆக்சுவலாக  ஏற்படுத்தியது  நாயகி  தான்  என  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  சொல்வது  ஏமாற்று  வேலை  மாதிரி  ஃபீல்  ஆகுது 


6  நாயகன்  க்ளைமாக்சில்  காரில்  இருந்து  இறங்கும்   ஜட்ஜிடம்  நானே  இந்தக்கேசில்  வக்கீல்  ஆக  வாதாட  இருக்கிறேன்  என்கிறார். ஜட்ஜூம்  கங்கிராட்ஸ்  என்கிறார்,. ஆனால்  முறைப்படி  அதை  கோர்ட்டில்  தான்  முறையிடனும், இப்படி  நடு  வழியில்  அல்ல 


7   கடைசி   15  நிமிடங்கள்  கோர்ட்  ரூம்  டிராமாவாக  கதை  மூவ்  ஆகும்போது  செட்  ஆகவில்லை . இது  ஒரு  லவ்  ஸ்டோரி  மாதிரி  கொண்டு  போய்  இப்படி  மடை  மாற்றி  விடுவது  எடுபடவில்லை 


8  மேட்ரிமோனியல்  சைட்  ஓனர்  கோர்ட்டுக்குக்கேஸ்  வந்ததும்  தன்  ஆஃபீசில்  பணியாற்றும்  80  பேரை  டேக்  ஓவர்  செய்ய  மாட்டாரா? இப்படித்தான்  நாயகன்  கஸ்டடிக்கு  விடுவாரா?  நாயகன்  சாமான்யன். ஆனால்  வில்லன்  பல  கோடி  சொத்து  மதிப்பு  உள்ளவன் 


9  சாதா  கேசே  பல  வருடங்கள்  ஜவ்வு  இழுப்பு  இழுக்கும்  காலத்தில்  இந்தக்கேஸ்  ஒரே  சிட்டிங்கில்  வாத  விவாதங்கள் , சாட்சிகள் , தீர்ப்பு  எல்லாம்   ஒரே  நாளில்  முடிவது  எப்படி ? 


10  கோர்ட்டில்  கேஸ்  வாத  விவாதங்கள்  முடிந்து  நாயகன்  வெளியே   வரும்போது  மீடியா  லேடி  உங்க  எல்லா  விவாதங்களையும்  பார்த்தேன்  என்கிறார். லைவ்  டெலிகேஸ்ட்டிங்  கோர்ட்டில் உண்டா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காமெடி  டிராமாவாக , ரொமாண்டிக்  டிராமாவாக , விழிப்புணர்வு   மெசேஜ்  சொல்லும்  சோசியல்  டிராமாவாக  எப்படி  வேண்டுமானாலும்  எடுத்துக்கொள்ளலாம், ரேட்டிங்  2.5/ 5 


Aa Okkati Adakku
Theatrical release poster
Directed byMalli Ankam
Produced byRajiv Chilaka
Starring
CinematographySuryaa
Edited byChota K. Prasad
Music byGopi Sundar
Production
company
Chilaka Productions
Release date
  • 3 May 2024
CountryIndia
LanguageTelugu

0 comments: