Friday, June 07, 2024

வெப்பம் குளிர் மழை(2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சோசியல் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

                       


அறிமுக  இயக்குநர்  பாஸ்கல்  வேதமுத்து  தனது  முதல்  படத்துலயே  தரமான  கருத்துள்ள , சமூக  விழிப்புணர்வுப்படத்தைக்கமர்ஷியலாக  தந்துள்ளார்..29/3/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் , நாயகி  இருவருக்கும்  பெற்றோரால்  நிச்சயிக்கப்பட்ட   திருமணம்  நடக்கிறது , வாழ்க்கை  சந்தோஷமாகத்தான்  போய்க்கொண்டிருக்கிறது. ஆனால்  மணம்  ஆகி  நான்கு  வருடங்கள்  ஆகியும்  தம்பதிக்குக்குழந்தை  பாக்கியம்  இல்லை .


 மாமியார் , ஊரார்  நாயகியை  மலடி  என  கிண்டல்  செய்கிறார்கள் . டாக்டரிடம்  போய்  செக்  பண்ணலாம்  எனில்  நாயகன்  அதற்குத்தயார்  இல்லை . ஒருவழியாக  செக்கப்  செய்ததில்  நாயகனுக்குத்தான்  குறை  இருக்கிறது  என்பது  தெரிய  வருகிறது . நாயகன்  மனம்  வருந்தக்கூடாது  என்று  உண்மையை  நாயகி  மறைக்கிறாள் 


 டாக்டர்  ஆலோசனைப்படி  தன்  கணவருக்குத்தெரியாமல்  செயற்கை  முறையில்  கருத்தரிக்கிறா:ள். குழந்தை  பிறக்கிறது . ஐந்து  வருடங்கள்  கழித்து  குற்ற  உணர்ச்சி  தாங்காமல்  இந்தக்குழந்தை  உங்க  குழந்தை  அல்ல  என  நாயகி  சொல்கிறாள் . இதற்குப்பின்  நாயகன்  எடுத்த  முடிவு  என்ன?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் சின்ன  சின்ன  ரோல்களில்  நடித்த  இஸ்மத்   பானு  முதல்  முறையாக  நாயகி  ஆக  அறிமுகம்  ஆகி  இருக்கிறார். அட்டகாசமான  நடிப்பு , அருமையான  முக  பாவனைகள் , கிளாமரை  நம்பாமல்  திறமையை  நம்பிய  நடிகை. வாய்ப்பும்  , அதிர்ஷடமும்  அமைந்தால்  ரேவதி , சுஹாசினி   ரேஞ்சுக்கு  வளர  முடியும் 


  நாயகன்  ஆக   திரவ்  இயல்பான  நடிப்பு . ஆனால்  எதற்காக  பிச்சைக்காரன்  மாதிரி  தாடி  கெட்டப்  என  தெரியவில்லை . அக்னி நட்சத்திரம்  கார்த்திக்  மாதிரி  லைட் ஸ்டைலிஷ்    தாடி  எனில்  ரசிக்கலாம்.,  ஆனால்  பஞ்சப்பரதேசி  மாதிரி  தாடி  கெட்டப்  சகிக்கவில்லை.லவ்  ஃபெய்லியர் , கஞ்சா  கேஸ் , பொறுக்கிகள்  தான்  இந்த  மாதிரி  தாடி  வைப்பார்கள் , கவுரவமான  குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்  இப்படி  இருப்பதில்லை 


மாமியார்  ஆக  வரும்  ரமா  பிரமாதமான  நடிப்பு . மாமனார்  ஆக  வரும்  எம்  எஸ்  பாஸ்கர்  நடிப்புக்குத்தீனி  போடும்  கேரகடர்  இல்லை . ஏதோ  வந்தவரை  ஓக்கே  ரகம் 


சங்கர்  ரங்கராஜன்  இசையில்  இரண்டு  பாடல்கள்  அருமை , பிஜிஎம்மும்  குட் 


 தயாரிப்பாளர் , நடிகர் ,  எடிட்டர்  என  மூன்று  அவதாரம்  எடுத்துள்ளார்  திரவ் 


2  மணி  நேரம்  10  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். கடைசி  17  நிமிடங்கள்   டெட்  ஸ்லோ 


பிரித்திவ்  ராஜேந்திரனின்  ஒளிப்பதிவில்  கிராமத்துக்காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்   பாஸ்கல்  வேடமுத்து 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன், நாயகி அறிமுகக்காட்சிக்கு  முன்பே  ஓப்பனிங்  சீன்லயே  கதையின்  மையக்கருவை உணர்த்தும்  விதமாக  காளை  மாடு - பசு  மாடு  காட்சியை  வைத்த  விதம், கே  பாக்யராஜின்  இது  நம்ம  ஆளு  படத்தை  நினைவுபடுத்தினாலும்  கரெக்ட் ஆன  ப்ளேஸ்மெண்ட் 


2  மருமகளைக்கரித்துக்கொட்டும்  மாமியார்  க்ளைமாக்ஸ்க்கு 20  நிமிடங்கள்  முன்பு  ஆறுதல்  கூறும்  காட்சி  அருமை 


3  நாயகியின்  அற்புதமான  நடிப்பு , கண்ணியமான  உடை வடிவமைப்பு 


4  நாயகன்  தன்  மகனை அம்போ  என  விட்டு விட்டுச்செல்லும்  காட்சியில்  பிரமாதமான பிஜிஎம்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  எப்போ  எப்போ    என்  இடுப்புல  சரிஞ்சே? (


2 எங்க   ஊரு  இது , எங்க  சொந்தம்  இது 


  ரசித்த  வசனங்கள் 


1   வழக்கத்தை  மாத்தறேன்னு  பேசறியே? உன்  பொண்டாட்டி  கழுத்துல  நீ  தாலி  கட்டுனியா?  உன்  கழுத்துல உன்  பொண்டாட்டி  தாலி  கட்டுனாளா? 


3 திருப்பி  அடிக்கறது  வீரம்  இல்லை , பொறுமையா  இருப்பதும்  வீரம்  தான் 


3  குழந்தை  பிறக்கும்  முன்பு  குழந்தைக்குன்னு  டிரெஸ்  எடுக்கக்கூடாது 


4  என்னம்மா?ஒண்ணும்  சொல்லாம  போறான்?

அதனால  என்ன?  வேண்டாம்னு  மறுக்கலையே? 

5   என்ன  எட்டிப்பார்க்கறே? இது  வீடா?கிணறா? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வீட்டுக்கு  விலக்கான  நாளிலிருந்து  14  வது  நாள்  தம்பதி கூடினால்  குழந்தை  பிறக்கும்  வாய்ப்பு  அதிகம்  என  நர்ஸ்  கூறுவது  ஓக்கே , ஆனால்  அதற்காக 13  நாட்கள் சேராமல்  14  வது  நாள்  தான்  கரெக்ட்  ஆக  சேர  வேண்டும்  என  நாயகி  கூறுவது  சரியா? 


2 எப்போதும்  மருமகளைக்கரித்துக்கொட்டும்  மாமியார்  நாயகியின்  அம்மா  இறந்த  செய்தியை  சொல்லும்போது  ஓவராக வருத்தப்படுவது  ஒட்டவில்லை


3  நாயகன் , நாயகி  இருவரும் டாக்டரைப்பார்க்க  ஹாஸ்பிடல்  வரும்போது  அவர்களுக்கு  ,முன்பே  பலர்  வெயிட்டிங்க்ல  இருக்காங்க.ஆனா  அப்போதான்  பேர்  கொடுத்த  அவங்களை  உடனே   டாக்டர்  பார்க்கிறரே? எப்படி ? 


4  குழந்தைப்பேறு  சம்பந்தமாக  தம்பதி  ஹாஸ்பிடல்  போவது  நாயகனின்  அம்மாவுக்குத்தெரியக்கூடாது  என  நினைப்பது  ஓக்கே , ஆனால் சினிமாக்கு  போறேன், ஃபிரண்ட்டைப்பார்க்கப்போறேன்னு  சாதாரணமா  பொய்  சொல்ல  வாய்ப்பிருந்தும் , அதை  பெரிய  பிரச்சனை  ஆக்குவது  ஏன் ? 


5  புருசனும், மாமியாரும் , ஊரும்  நாயகியை  மலடி  மலடி  என  சொல்லும்போது  எப்பேர்பட்ட  தங்கமான  பொண்ணாக  இருந்தாலும்  என்  கிட்டே  குறை  இல்லை , புருசன்  கிட்டே  தான்  குறை  என  சொல்வார், ஆனால்  நாயகி  எதுவும்  சொல்லாமல்   தியாகி  ஆவது  எந்த  கிரகத்தில்  இருக்கிறார்? இப்பேர்ப்பட்ட  அபூர்வப்பெண்? 


6   நாயகி  நாயகனிடம்  உண்மையை  வலிய  வந்து  சொல்லி  மாட்டிக்கொள்ளும்  காட்சி  நம்பும்படி  இல்லை . குற்ற  உணர்ச்சி  என  சப்பைக்கட்டு  கட்டினாலும்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  இல்லை , ஆனால்  17  வயதுக்குள்ளானவர்கள்  இந்தப்படத்தின்  கண்டெண்ட்  பார்க்கத்தேவை  இல்லை சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   300  கோடி  பட்ஜெட்டில்  டப்பா  மசாலாப்படங்கள்  எடுத்து  வன்முறையுடன்  அரைச்ச  மாவையே  அரைக்கும்  படங்களுக்கு  நடுவே  தரமான  லோ  பட்ஜெட்  படம்  என்ற  அளவில்  பார்க்கலாம் ,. ரேட்டிங்  2.75 / 5 


Veppam Kulir Mazhai
Promotional poster
Directed byPascal Vedamuthu
Written byPascal Vedamuthu
Produced byDhirav
Starring
CinematographyPrithvi Rajendran
Edited byDhirav
Music byShankar Rangarajan
Production
company
Hashtag FDFS Productions
Distributed bySri Subbulakshmi Movies
Release date
  • 29 March 2024
CountryIndia
LanguageTamil

0 comments: