Thursday, November 23, 2023

மாம்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? எப்போது சாப்பிட வேண்டும்?


 முக்கனிகளில்  ஒன்று  மாம்பழம்  என்பது  எல்லோருக்கும்  தெரியும், இது  கோடை  காலம்  ஆன  ஏப்ரல், மே , ஜூன்  ஆகிய  மூன்று  மாதங்களில்  கிடைக்கிறது . பொதுவாக  இயற்கை  நமக்கு  அளிக்கும்  சீசனல் பழங்களை  அந்தந்த  காலத்தில்  நாம்  தாராளமாக  சாப்பிடலாம். ஆனால்  பல  பெரியவர்கள்  மாம்பழம்  சூடு  அதிகம்  சாப்பிடக்கூடாது என  சொல்லக்கேள்விப்பட்டிருப்பீர்கள்  , இது  உண்மை  தான்.மாம்பழமம்  அதிகம்  சாப்பிட்டால் சூட்டைக்கிளப்பி விடும், வயிறு  உபாதைகள் , வயிற்றால்  போவது  போன்ற  சங்கடங்கள் வரும் . குறிப்பாக  குழந்தைகள் 10  வயது  வரை ஒரு  நாளில்  ஒரு  முழு  மாம்பழம்  சாப்பிடக்கூடாது . ஒரு  துண்டுஅல்லது  2  துண்டுகள்  மட்டும்  சாப்பிடலாம்

அதே  போல  மாங்காய் , மாங்காய்  ஊறுகாய்  எல்லாவற்றிற்கும் இந்த  விதி  பொருந்தும். பெரியவர்கள்  அதாவது  18  வயது  முதல்  50  வயது  வரை  உள்ளவர்கள்  தினசரி  ஒரு  மாம்பழம்  அல்லது  இரு  மாம்பழங்கள்  சாப்பிடலாம். காலை , மதியம் , இரவு  மூன்று  வேளைகளில்  எப்போது  சாப்பிடலாம்  என்றால்  மதியம்  உணவுக்கு  முன்  சாபிடுவது  நல்லது. இரவில்  சாப்பிட்டால்  ஜீரணக்கோளாறு  ஏற்படலாம் . காலை  சாப்பிடுவது  உகந்தது  அல்ல . மதியம் 2  மணிக்கு  லஞ்ச் சாப்பிடுகிறீர்கள்  எனில்  1 மணி  அல்லது   ஒன்றரை  மணிக்கு  மாம்பழம்  சாப்பிடலாம். 


 இந்தப்பழம்  என  இல்லை  வேறு  எந்தப்பழ்ம்  சாப்பிடுவதாக  இருந்தாலும்  உணவு  சாப்பிடுவதற்கு  முன்  தான் பழம்  சாப்பிட  வேண்டும் , ஏன்  எனில்  பழம்  எளிதில்  ஜீரணம்  ஆகும்,  உணவு  செரிமானத்துக்கு  நேரம்  எடுத்துக்கொள்ளும். உணவு  சாப்பிட்ட  பின்  பழம்  சாப்பிட்டால்  முதலில் சாப்பிட்ட  உணவு  செரிக்கும்  முன் பழம்  செரிமானம்  ஆகி  விடும், இது  இரைப்பையில்  குழப்பத்தை  ஏற்படுத்தும். எனவே  எப்போதும்  பழத்தை  முதலில்  சாப்பிட்டு  பின் உணவு  சாப்பிட  வேண்டும் 


 பழமாகத்தான்  சாப்பிட  வேண்டும் . பழ ஜூஸ்  கடையில்  சாப்பிட்டால்  அது  கெடுதல் , அதில்  கூடுதலாக  சர்க்கரை  இன்னும்  சில  வேதிப்பொருட்கள் சுவைக்காக  சேர்ப்பார்கள்  அது  கெடுதல் . மாமபழம்  தோலோடு  சாப்பிட்  வேண்டும், நார்ச்சத்து கிடைக்கும் , அப்போதுதான்  அதன்  முழுப்பயன்கள்  நமக்குக்கிடைக்கும் . சர்க்கரை  நோயாளிகள்  முக்கனிகள்  மூன்றையும்  தவிர்க்க  வேண்டும் . சுக்ரோஸ்  என்னும்  சர்க்கரைச்சத்து  அதிகம்  இருப்பதால்  இது  ரத்தத்தில்   சர்க்கரை  அளவை  ஏற்றி  விடும், ரொம்ப  ஆசையாக  இருந்தால்  ஒரு  துண்டு  மட்டும்  சர்க்கரை  நோயாளிகள் சாப்பிடலாம்

0 comments: