Thursday, November 30, 2023

I SAW THE DEVIL (2010) - சவுத் கொரியன் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் ஆக்சன் & ரிவஞ்ச் த்ரில்லர்) @ அமெசான் பிரைம்

   


  6  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு 13  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  படம் . பல  சர்வ தேச  விழாக்களில்  கலந்து  கொண்டு  பல  பிரிவுகளில்  பல  விருதுகளை  வென்ற  படம், விருதுப்பட்டியலை  சொன்னால்  ஏ 4  சீட்டில்  அதுவே  இரண்டு  பக்கங்கள்  வரும்    . 19  விருதுகளுக்குப்பரிந்துரைக்கப்பட்டு  16  விருதுகளை  வென்ற்  படம்.  ஜெயம்  ரவி  நடித்த  தனி  ஒருவன்  படத்தில்  இந்தப்படத்தில்  இருந்து  உருவப்பட்ட  சீன்  உண்டு 


தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்போது  ஏகப்பட்ட  வன்முறை  என  பல  இடங்களில்  கட்  கொடுக்கப்பட்டது .  அடிச்ச  கைப்புள்ளைக்கே  இவ்ளோ  காயம்னா  அடி  வாங்குனவன்  உசுரோட  இருப்பான்னா  நினைக்கறே? என்பது  போல  சென்சார் ல  கட்  வாங்கின  போர்சனே  இவ்ளோ  கொடூரமா  இருக்கே? அன்  கட்  வெர்சன்  எப்படி  இருக்குமோ? என  குலை  நடுங்க  வைக்கிறது 


இது  19+  மூவி. 18+  கேட்டு  மூன்று  முறை  சென்சாருக்குப்போயும்  கிடைக்கவில்லை . ப்யங்கர  வன்முறைக்காக  19+  வாங்கிய  படம் 


இந்தப்படத்தை  ரீமேக்  செய்ய  இந்தியாவில்  பல  மொழி  ஆட்கள்  படை  எடுத்தார்களாம்,  ஓவர்  ரேட்  சொன்னதால்  பேக்  அடித்து  விட்டார்கள்  என  தகவல் .


  ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு சைக்கோ. ஒரு  ஸ்கூல்  வேன்  ஓட்டும்  டிரைவரா  இருக்கான். இரவு  நேரத்தில்  யாரும்  இல்லா  ரோட்டில்  பெண் யாராவது  தனிமைல  சிக்குனா  அவ்ளோ தான். உப்புக்கண்டம்  போட்டுடுவான்


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . அவனின்  வருங்கால   மனைவி ஒரு  இடத்தில் தனிமையில்  மாட்டிக்கொள்கிறாள் . இவள்  கர்ப்பம்  வேற . வில்லன்  பார்வையில்  பட்டு  விடுகிறாள். வில்லன்  நாயகியைக்கொலை  செய்து  விடுகிறான் 


நாயகனின்  மாமனார்  30  வருடங்கள்  போலிஸ்  டிபார்ட்மெண்ட்டில்  டிடெக்டிவ்  ஆக  பணி  செய்தவர் , அதனால்  கேஸ்  தீவிரம்  ஆகிறது 


போலீசோட  சந்தேக  பட்டியலில் 4  பேர்  சிக்கறாங்க . நாயகன்  முதல்  3பேரை  பிடித்து அடித்துத்துவைத்துக்காயப்போட்டு  ஹாஸ்பிடலில் சேர்க்கிறான், அவங்க  ரெண்டு  பேரும்  அலறி  அடிச்சுக்கிட்டு  போலீசில்  சரண்டர்  ஆகிடறாங்க . இவங்களும்  சைக்கோக்கொலைகாரர்கள்  தான். ஆனால்  நாயகியைக்கொலை  செஞ்ச  வில்லன்  வேற 


கடைசியில் நாயகன்  வில்லனைக்கண்டு பிடித்து  விடுகிறான். ஆனால்  கொலை  செய்யலை. ஜிபிஎஸ்  கருவியை  மாத்திரையில் செலுத்தி  அதை  வில்லன்  உடலில்  வைக்கிறான். துரத்து  துரத்தி  சித்ரவதை  செய்து  அவனைக்கொல்வதே   நாயகனின்  திட்டம் .


 இது  வில்லனுக்கு  ஒரு  கட்டத்தில்  தெரிந்து  விடுகிறது . நாயகனின் மச்சினி, மாமனார்  இருவரையும்  கொல்ல  வில்லன்  கிளம்ப  நாயகன்  வில்லனைத்துரத்த  போலீஸ்  நாயகன்,   வில்லன்  இருவரையும்  துரத்துகிறது . இந்த  பரபரப்பான  சேசிங்  த்ரில்லரில்  யார்  வெற்றி  பெற்றார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


கொடூரமான  சைக்கோ  கில்லர்  ஆக  வில்லன்   ரோலில் சோய்  மின்  சிக்  மிரட்டி  இருக்கிறார். (   இப்படி  எல்லாம்  ஆட்கள்  இருப்பார்களா?  என  வியக்க  வைக்கும்  அளவு  வில்லத்தனம்  செய்யும்  ரோல். ஒரு  ஸ்ட்ராங்க்  ஆன  திரைக்கதைக்கு  வில்லனின்  ரோல்  எவ்வளவு  வலிமையாக  கட்டமைக்கப்படவேண்டும்  என்பதற்கு  உதாரணமாக  வில்லன்  ரோலை    நிறுவி  இருக்கிறார்  இயக்குநர் . ஓல்டு  பாய்  படத்தின்  நாயகன்  ஆக  நடித்தவர்  இவர்  தான் 


லீ பின்   ஹங் தான்  நாயகன். பால்  மணம்  மாறா  பாலகன்  போல  இவரது  முகம்  சாந்த  சொரூபமாக  இருக்கிறது. நம்ம  ஊர்  சித்தார்த்  மாதிரி  அப்பாஸ்  மாதிரி  இருக்கிறார் 


144  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டிங்  செய்து  இருக்கிறார்கள் . கிட்டத்தட்ட  தமிழ்ப்படம்  போல  நீளமாக  ஓடுகிறது . ஆனால்  எங்கும்  போர்  அடிக்கவில்லை 


பார்க்  ஹூ ஜங் என்பவர்  தான்  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்.கிம்  ஜி  வூன்  தான்  இயக்கி  இருக்கிறார்.


இசை , பின்னணி  இசை , ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  எல்லாமே  பிரமாதம்., இதன்  திரைக்கதையை , காட்சிகளை  அட்லீ  ஒர்க்  

( திருட்டு  வேலை )    செய்த  படங்களின்  பட்டியல்  பார்த்தால்  நீண்டு  கொண்டே  போகும் . ரிவஞ்ச்  த்ரில்லரில் ஒரு  லேண்ட்  மார்க்  படம்.பெஞ்ச்  மார்க்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  வில்லனின்  உடம்பில்  ஜிபிஎஸ்  டேப்லெட்  பொருத்தி  இருக்கியே? அவனுக்கு  அது  தெரிந்து  பேதி  மாத்திரை  சாப்பிட்டு  வெளியே  எடுத்தால்  தப்பிடுவானே? என  நண்பன்  நாயகனிடம்  கேட்கும்போது  அதை  அரை  மயக்கத்தில்  இருக்கும்  வில்லன்  ஒட்டுக்கெட்கும்  இடம்  மாஸ்  சீன் 


 2  வில்லனின்  நண்பன்  அவனை  விட  பெரிய  சைக்கோவாக  இருப்பதும்  அவனுடன்  வில்லன்  நடத்தும் உரையாடலும் 


3   நாயகன்  மாமனாரை  எச்சரிக்க  ஃபோன்  செய்யும்போது  ஃபோன் ரிங்  அடிப்பதும்  அதே  சமயத்தில்  வாசலில்  சார்  , பார்சல்  டெலிவரி  என  குரல்  கேட்பதும்  , இரண்டில்  எதை  அட்டெண்ட்  செய்ய  என  அவர்  தடுமாறும்  காட்சி   


ரசித்த  வசனங்கள் 


1 இதுக்கும்  மேல  நீ  பேசுனா  நீ  சாப்பிடற  சாப்பாட்டில்  விஷம்  வைத்து விடுவேன்

 நீ  போடற  சாப்பாடே  விஷம்  மாதிரி  தான்  இருக்கு 


2  நாமளே  ஒரு  சைக்கோ , இவன்  நம்மளை  விட  பெரிய  சைக்கோவா  இருப்பான்  போலயே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தன்  உடலில்  இருக்கும்  ஜிபிஎஸ்  டேப்லெட்டை  கண்டுபிடித்து  எடுக்கும்  வில்லன்  நாயகனை  திசை  திருப்ப  த்ரிஷ்யம்  படத்தில்  வருவது  போல  மூவ்  ஆகும்  ஏதோ  ஒரு  வாகனத்தில்  அதை  தூக்கிப்போட்டிருக்கலாம், அதை  விட்டு  விட்டு  ஒரு  காயம்  அடைந்த  ஆளின்  உடம்பில்  செலுத்தி  டைம்  வேஸ்ட்  செய்வது  ஏனோ ?


2  வில்லன்  துரத்தி  தேடி  வருகிறான்  என்ற  தகவலை  நாயகன்  மாமனாருக்கும்,  மச்சினிக்கும்  வாட்சப்பில்  வாய்ஸ்  மெசெஜ்  அனுப்பி  அலர்ட்  பண்ணி  இருக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கொடூரமான  வன்முறைக்காட்சிகள் , அடல்ட்  கண்ட்டெண்ட்  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பயங்கரமான  ரிவஞ்ச்  ஆக்சன்  த்ரில்லர்  பார்க்க  விரும்புவர்  பார்க்கலாம். சாப்பிட்டுக்கொண்டே  படம்  பார்ப்பதை  தவிர்க்கவும் . ரேட்டிங்  3 / 5 


I Saw the Devil
Theatrical release poster
Hangul
Hanja
를 보았다
Literal meaningSaw an angma (evil spirit, demon)
Revised RomanizationAngmareul boatda
McCune–ReischauerAkmarŭl poatta
Directed byKim Jee-woon
Written byPark Hoon-jung
Produced byKim Hyun-woo
Starring
CinematographyLee Mo-gae
Edited byNam Na-yeong
Music byMowg
Production
companies
  • Peppermint & Company
  • SoftBank Ventures Korea
  • Finecut
Distributed by
Release dates
  • 12 August 2010 (South Korea)
  • 21 January 2011 (Sundance)
  • 4 March 2011 (US & Canada)
Running time
144 minutes
CountrySouth Korea
LanguageKorean
BudgetUS$6 million[1]
Box officeUS$12.9 million[2]

0 comments: