Thursday, November 09, 2023

இன்ஃபினிட்டி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

   


சதுரங்க  வேட்டை  என்ற  ஒரே  படத்தின்  மூலம்  புகழ்  பெற்றவர்   நட்டி. சாய் கார்த்திக்  என்ற  இயக்குநரின்  இயக்கத்தில்  வெளியான  சராசரி  த்ரில்லர்  இது . கதை , ட்விஸ்ட்  இரண்டும்  ஓக்கே , ஆனால்  திரைக்கதை , இயக்கம்  இரண்டிலும்  ஏகப்பட்ட  சொதப்பல்கள்       


ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஓபனிங்  ஷாட்டில் ஒரு  இளம்பெண்  கொலை  செய்யப்பட்டு  பெட்ரோல்  ஊற்றி எரிக்கப்படுகிறாள் . அடுத்து  சாராயக்கடையில்  ஒரு ஆள்  மர்மமான  முறையில்  இறந்து  கிடக்கிறார். ஒரு   பிரபல  எழுத்தாளர்  அவர்  வீட்டில் கொலை  செய்யப்பட்டு  இருக்கிறார்


முதலில்  கொலையான  இளம்பெண்ணின்  பெற்றோர்  புகார்  கொடுக்க  போலீஸ்  ஸ்டேஷன்  வருகின்றனர் . அடுத்த  நாளில்  இருந்து  அவர்களைக்காணவில்லை . வீடு  பூட்டி  இருக்கிறது . இந்த  கேசை  டீல்  செய்யும்  போலீஸ்  ஆஃபீசர்   கொலை  செய்யப்படுகிறார்


 நகரில்  நடக்கும்  இந்த  தொடர்  கொலைகள்  செய்வது  யார்? என்பதைகண்டு  பிடிக்க  நாயகன்  ஆன  சிபிஐ  ஆஃபீசர்  களம்  இறக்கப்புடுகிறார்.  மேலே  சொன்ன  அனைத்துக்கொலைகளுக்கும்  ஒரு  சங்கிலித்தொடர்பு  இருப்பதைக்கண்டு  பிடிக்கிறார் . கொலைகாரன்  யார்? அது  போக  ந்டக்கும்  ஒரு  மெடிக்கல்  க்ரைம்  மாஃபியா  பார்ட்டியையும் அடையாளம்  காண்கிறார் . அவர் எப்படி கண்டுபிடிக்கிறார்  என்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  நட்டி . சுறுசுறுப்பான  நடிப்பு வேகமான  நடை .  லேடி  டாக்டர்  ஆக  வித்யா  பிரதீப்க்கு  வழங்கப்பட்ட  கேரக்டர்  டிசைன்  அருமை . ஆனால்  அவரது  நடிப்பை  இன்னும்  மெருகேற்றி  இருக்கலாம்


 காமெடியன்  முனீஸ்காந்த்  தண்டம் . கொலை  காரனைப்பார்த்தால்  பயம்  வரவில்லை , பரிதாபம்தான்  வருகிறது 


 ஒளிப்பதிவு  , பின்னணி  இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  சுமார்  ரகமே , இன்னும்  மெனக்கெட்டிருக்கலாம் . மேக்கிங்கில்  அனுபவக்குறைவு  தெரிகிறது . ஏனோ  தானோ  என  படம்  ஆக்கி  இருக்கிறார்  இயக்குநர்  


சபாஷ்  டைரக்டர் ( சாய் கார்த்திக்) 


1   வில்லியின்  பாத்திர  வடிவமைப்பு , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இரண்டும்  அருமை 


2  முழு  திரைக்கதையை  சொல்லாமல் இது  ஒரு  த்ரில்லர்  கதைங்க  என  மொட்டையாக  சொல்லி நாயகனை  புக்  செய்த  சாமார்த்தியம்


  ரசித்த  வசனங்கள் 


1  சிபிஐ  கிட்டே சில  கேஸ்களை  கொடுப்பதே  அதை  தொட்டில்ல  போட்டுத்தாலாட்டி  நிரந்தரமா  தூங்க  வைக்கத்தான்


2  ஒரு  கேஸ்  ஓவர்  நைட்  ல  முடியனும்னா  கொலைகாரனே  வந்து  ஒத்துக்கிட்டாத்தான்  சாத்தியம்


3  நமக்குப்பிடிக்காததை  அனுபவித்தால்தான்   பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் 


4  கடவுளைத்தேடிப்போனா  வரம்  கிடைக்கும் ,சாத்தானைத்தேடிப்போனா சாபம் / இறப்பு  தான்  கிடைக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தமிழ்ப்படத்தின்  டைட்டில்  ஓடும்போது  பேக்  கிரவுண்டில்  ஹிந்தி  நியூஸ்  பேப்பரில்  செய்தி  ஓடுதே? இதைப்பார்ப்பது  தமிழனா? சேட்டுகளா? 


2  வில்லன்  அரைக்கிறுக்கனா  இருக்கான் , நாயகனைக்கொலை  பண்ண  1009  ஈசியான  வழிகள்  இருக்கும்போது பட்டப்பகல்ல  ஆஃபீஸ்  ல  ( ஜி ஹெச்) அவரு  இருக்கும்போது  ஷூட்  பண்றான்/ நாயகன்  ஆஃபீஸ்  வாசலில்  பைக்  நிறுத்தும்போதோ  எடுக்கும்போதோ  குறி  பார்த்தால் ஈசியாக  போட்டுத்தள்ளி  இருக்கலாம் . இப்படியா  வாண்ட்டடா  மாட்டுவாங்க ? 


3  வில்லன்  முன்னால  பைக்ல  போகும்போது  நாயகன்   பின்னால  பைக்ல  துரத்தறாரு. அவரை  வில்லன்  திரும்பித்திரும்பி பார்த்துக்கிட்டே  பைக்  ஓட்றாரு/ ரிவர்யூ  மிரர்  எதுக்கு  இருக்கு ? 


4   நாயகன்  சிபிஐ  ஆஃபீசர்  அவரு  ஏன்  நக்கீரன்  கோபால்  மாதிரி  வீரப்பன்  மீசைல  கொஞ்ச  நாள் , சபரிமலை  சாமி  மாதிரி  தாடியோட  பல  நாள்  சுத்திக்கிட்டு இருக்காரு ? 


5  பைக்ல  போகும்போது  ஹெல்மெட் போடும்  பழக்கம்  தமிழ்  சினிமா நாயகர்களிடம்  பெரும்பாலும்  இல்லை 


6  போலீஸ்  ஸ்டேஷனில்  முனீஸகாந்த்  வீடியோ  கேம்  ஆடுவதும் , ஒரு  எஸ் ஐ லாக்கப்  ரூமில்  தூங்குவதும்  ஓவர் . எந்த  ஊர்ல  அப்டி  நடக்குது ? 


7 போஸ்ட்  ,மார்ட்டம்  பண்ணிய  டாக்டரிடம்  நாயகன்  கொலை  நடந்து  எத்தனை  நாட்கள்  இருக்கும்?னு  கேட்கறார். அப்போதுதான்  போஸ்ட்  மார்ட்டம்  முடித்த  டாக்டர் ஒரு  நிமிசம்னு  ஃபைலைப்பார்த்து  பின்  3  டூ  5  டேஸ்  இருக்கலாம்கறார்.  ஃபைலை  பார்க்காம  அதை  சொல்ல  முடியாதா? 


8 படத்தில்  நாயகன்  , வில்லன்  ., வில்லி ., காமெடியன்  இவங்க  தண்ணிஅடிக்கற  சீன் ,தம்  அடிக்கற  சீன்ஸ்  கட்  பண்ணினா  அதுல  20  நிமிசம்  மிச்சம்  ஆகும்

9  கொலைகாரனை  நாயகன்  பைக்கில்  சேஸ்  பண்ணும்போது  அவன்  ஏதோ  ஒரு  சுருக்குப்பையை  நாயகன்  மீது வீசுகிறான். அப்படியே  நாயகன்  ஸ்டன்  ஆகி  நின்று  விடுகிறார். இன்னும்  5  நிமிசம்  சேஸ்  பண்ணி  இருந்தால்  பிடித்திருக்கலாம்


10 நாயகன்  டாக்டரிடம்  பேசும்போது  அந்த  அறையில்  ஜன்னல் , வெண்டிலேட்டர்  எதுவும்  இல்லை . ஆனால்  ஸ்னிப்பர்  ஷாட்டில் வில்லன்  நாயகனை சுடுவது  எங்கே  இருந்து ? எப்படி?


11  படத்தின்  மேக்கிங்  ரொம்பவே  சுமார் , நாயகன், அந்த  லேடி  டாக்டர்  தவிர   மற்ற அனைவரது  நடிப்பும்  எடுபடவில்லை 


12முனீஸ்காந்த்தின்  மொக்கைக்காமெடி செம  கடுப்பு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+  காட்சிகள்  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அனுபவம்  மிக்க  இயக்குநர்  கைவசம்  இந்தக்கதைகரு  சிக்கி  இருந்தால்  நாம்  இந்த  இயக்குநரிடம்  சிக்கி  இருக்க  மாட்டோம் . ரேட்டிங் 1 / 5 


 

Infinity
Release poster
Directed bySai Karthik
Written bySai Karthik
Produced by
  • V. Manikandan
  • U. Prabhu
  • K. Arputharajan
  • D. Balabaskaran
Starring
CinematographySaravanan Srii
Edited byS.N Fazil
Music byBalasubramanian G
Production
company
Menpani Production
Release date
  • 7 July 2023
CountryIndia
LanguageTamil

0 comments: