Thursday, March 30, 2023

ERA ORA (2023)இத்தாலி - ( STILL TIME) - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஏண்டா  சுடுதண்ணீரைக்காலில்  ஊற்றிக்கொண்டவன்  போல்  பறக்கிறாய்? என  சிலர்  சொல்லக்கேள்விப்பட்டிருப்போம். இந்த  அவசர  உலகத்தில் நாம்  எல்லோருமே  வேகமாக  பயணிக்கிறோம். இப்படி  இருந்தால்  எதிர்  விளைவுகள்  எப்படி  இருக்கும்  என  காமெடி கற்பனையாக  உருவான  கதை  தான்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கம்பெனியில்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்டாக  பணி  புரிகிறான்.கூடுதல்  நேரம்  பணி புரியும்படி  கம்பெனி  கேட்டுக்கொண்டதால்  ஓவர்  டைம்  ஒர்க்  என  எப்போதும்  பிசியாகவே  இருப்பவன். நாயகி  ஒரு  ஆர்ட்டிஸ்ட். இருவரும்  காதலித்து  திருமணம்  செய்து  கொண்டவர்கள் 


நாயகனின்  40 வது  பிறந்த  நாள் விழா  சிறப்பாககொண்டாடப்படுகிறது. அன்று  இரவு  தம்பதியர்  இருவரும்  தாம்பத்யம்  வைத்துக்கொள்கிறார்கள். அடுத்த  நாள்  காலையில் நாயகனுக்கு  ஒரு  அதிரச்சி. கண்  இமைக்கும்  நேரத்தில்  ஒரு திருப்பம்


நாயகி  6 மாத  கர்ப்பிணியாக  இருக்கிறார். பிறகுதான்  நாயகனுக்கும்  ஆடியன்சுக்கும்  புரிகிறது. நாயகன்  ஒரு நாளில்  ஒரு வருடத்தை  கடந்து  வந்திருக்கிறான், இது  தொடர்கிறது

அதாவது  நாயகனின்  அடுத்தடுத்த  நாட்கள்  அவனது  பிறந்த  நாளாக  வருகிறது. ஒரு  வருடம்  ஒரு  நாளில்  கழிகிறது . இடைப்பட்ட  364  நாட்களில்  என்ன  நடந்தது  என  நாயகனுக்கு  நினைவு  இருப்பதில்லை 


இன்னும்  தெளிவாக  சொல்ல  வேண்டும்  எனில்  முதல்  நாள்  நாயகனுக்கு  40 வது  பிறந்த  நாள் . அடுத்த  நாள்  விடிந்தால் 41 வது  பிறந்த  நாள் .  அடுத்து  42 வது  பிறந்த  நாள்  இப்படியே  போகிறது


 நாயகன்  ஒரு  மனநல  மருத்துவரை  நாடி  இந்தப்பிரச்சனைக்கு  தீர்வு  காண  முயல்கிறான். நாயகனின்  தந்தைக்கு  அல்சைமர்  எனும்  மறதி  வியாதி  இருக்கிறது . அதனால்  இருக்குமோ? என  நாயகன்  ச்ந்தேகிக்கிறான்


இப்போது  நாயகன்  ஒரு  பெண்  குழந்தைக்கு  அப்பா . ஆனால்  குழந்தையுடன்  ஜாலியாக  பொழுதைக்கழிக்க  முடியவில்லை


நாயகனுக்கு  தன்  ஆஃபீஸ்  செகரட்டரியுடன்  தொடர்பு  ஏற்பட்டு  மனைவியைப்பிரிந்து  வாழ்கிறான். அது  எப்படி  நிகழ்ந்தது  என்றே  அவனுக்கு  நினைவு  இல்லை 


 இந்த  பிசியான  வேலையே  வேண்டாம்  என  ரிசைன்  பண்ண  ரிசைன்  லெட்டர்  எம் டி  யிடம்  கொடுக்கலாம்  என  செல்லும்போதுதான்  தெரிகிறது  இப்போது  பிரமோஷன்  கிடைத்து  அவன்  தான்  எம்  டி  என 


  ஆஃபீஸ்  வாழ்க்கையில்  முன்னேற்றம்  கண்ட  நாயகன்  குடும்ப  வாழ்வில்  பின்னடைவை  சந்திக்கிறான்..  நாயகனின்  மனைவி   வேறு  ஒரு  ஆணுடன்  லிவ் இன் டுகெதர்  வாழ்க்கையில்  இருக்கிறார். நாயகன்  ஆஃபீஸ்  செகரட்ரியுடன்  வாழ்கிறார்


 இந்த  சிக்கலில்  இருந்தெல்லாம்  நாயகன்  எப்படி  மீண்டு   வருகிறான்  என்பதுதான்  மிச்ச  மீதி  திரைக்கதை


நாயகனாக  எடோர்டோ  லியோ  நம்ம  ஊர்  கமல்  மாதிரி  பல  கெட்டப்களில்  வருகிறார்.  நடிப்பு  கனகச்சிதம் . நாயகி ஆக  பர்பாரா  ரோன்ச்சி அழகுப்பதுமையாக  வந்து  நடிப்பில்  நம்  மனதைக்கொள்ளை  கொள்கிறார்


நாயகனின்  இரண்டாவது  ,  மனைவியாக , ஆஃபீஸ்  செகரட்ரியாக  ஃபிரான்செஸ்கா  காவலின்  நடித்திருக்கிறார். இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை , கெஸ்ட்  ரோல்  போல 


 நாயகன் - நாயகி  தம்பதியின்  ஐந்து   வயது  சிறுமியாக  நடித்தவர்  கொள்ளை  அழகு


படத்தில்  வில்லன்  என  யாரும்  இல்லை. நாயகன் - நாயகி - குழந்தை - வில்லி  என  நான்கு  பேரைச்சுற்றியே  கதை  நகர்கிறது 22/10/2022  அன்று  உலகம்  முழுக்க  ரிலீஸ்  ஆன  இந்த  இத்தாலியன்  மூவி  இப்போது  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது


 குடும்பத்துடன்  காணத்தக்க  காமெடி  ஃபேமிலி  மெலோ  டிராமா


 148  நிமிடங்கள்  ஓடுகிறது  திரைக்கதை  இயக்கம்  அலெக்சாண்ட்ரியோ  அர்னாடியோ  சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீன்லயே  நாயகியை  பார்ட்டியில்  சந்திக்க  வேண்டிய  நாயகன்  நாயகி  போலவே   உடை  அணிந்த  வேறு  பெண்ணுக்கு  முத்தம்  கொடுத்து  மாட்டிக்கொண்டு  அந்தப்பெண்ணிடம்  அறை  வாங்கும்  காட்சி  காமெடி  ரகளை   (நந்தா  நடித்த  புன்னகை  பூவே (2003)  படத்தில்  இதுதான்  இண்டர்வல் பிளாக்  சீன் ) 


2  நாயகன்  முதல்  நாள்  இரவில்  நாயகியுடன்  தாம்பத்யம்  வைத்ததும்  அடுத்த  நாள்  காலை  நாயகி  6  மாத  கர்ப்பிணி  ஆக  இருப்பதைக்கண்டு  அதிர்வது  அடுத்த  நாள்  நாயகி  வயிறு  சரியானதைக்கண்டு  நிம்மதிப்பெருமூச்சு  விடுவது , திடீர்  என  குழந்தை  அழுகுரல்  கேட்டு  திகைப்பது  எல்லாமே  காமெடி  கண்ட்டெண்ட்


3    தான்  எம்  டி  ஆனதை  அறியாமல்   எம்  டி  ரூமுக்கு  ரிசைன்  லெட்டருடன்  சென்று   அங்கே  எம் டி  சேர்  காலியாக  இருப்பதை  அறிந்து  சக  கொலீக்ஸ்  இடம்  எம்  டி  எங்கே  என  கேட்டு  பல்பு  வாங்குவது 


4 நாயகன்  தன்  குழந்தையுடன்  டைம்  ஸ்பெண்ட்  பண்ண  நினைக்கும்போது  குழந்தை  பேசும்  வசனமும்  அதைத்தொடர்ந்து  வரும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகளும் 


5  நாயகன்  தன்  மனைவியை  விட்டுப்பிரிந்து  ஆஃபீஸ்  செகர்ட்ரியுடன்  வாழ்வதை  அறியாமல்  நாயகிக்கு  ஃபோன்  பண்ணி  உடனே  வீட்டுக்கு  வா  என  அழைப்பதும்  மனைவி  வாசலில்  நின்று  காலிங்  பெல்  அடிக்கும்போது  செகரட்ரி  சமையல்  அறையில்  இருந்து  வருவதைப்பார்த்து  அதிர்ந்து  அவரை  பாத்ரூமில்  ஒளித்து  வைப்பதும்  காமெடி  கலாட்டா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஆள்  மாறாட்டம்  நிகழ்ந்து  நாயகன்  வேறு  ஒரு  பெண்ணுக்கு  முத்தம்  தரும்போது  அந்தப்பெண்  எதுவும்  சொல்லவில்லை ., பிறகு  தப்பு  நடந்துடுச்சு . என்  மனைவி  போலவே  டிரஸ்  போட்டிருந்ததால்   மாறி  கிஸ்  பண்ணிட்டேன்  என  தன்னிலை  விளக்கம்  கொடுக்கும்போது  நாயகனுக்கு  பளார்  கிடைக்கிறது , என்ன  கொடுமை  சார்  இது ?


2  நாயகன்  தன்  ஆஃபீஸ்  செகர்ட்ரியின்  செப்பல் வீட்டின்  டைனிங்  டேபிள்  அருகே  இருப்பதைப்பார்த்து  நாயகி கேட்கும்போது  உனக்கு  கிஃப்ட்  பண்ணத்தான்  வாங்கி  வைத்திருக்கிறேன்  என  சமாளிக்கிறான். யாராவது  இப்படி  மடத்தனமாக  பொய்  சொல்வார்களா? மனைவியை  விட  செகரெட்ரி  ஆள்  ஹைட்  வேற . செப்பல் சைஸ்  மாறுமே ? 


3   முதல்  நாள்  இரவு  படுத்து  உறங்கி எழும்போது  அடுத்த  நாள்  அடுத்த  வருடம்  ஆகிறது  என்ற  லாஜிக்  சரி , ஆனால்  தொடர்ந்து  பகலிலேயே  ஒரு  வருடம்  கழிவது  எப்படி ? அந்த  லாஜிக்  படி  ஒவ்வொரு  நாளும்  இரவு  தூங்கப்போய்  அடுத்த  நாள்  விடியும்போதுதானே  அடுத்த  வருடம்  வர  வேண்டும் ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கதைகளை  விரும்புபவர்கள்  பாரக்கலாம். படத்தில்  டயலாக்ஸ்  அதிகம், ஸ்லோவாகத்தான் காட்சிகள்  நகரும் . ரேட்டிங்  2.75 / 5 
Era ora
Lingua originaleitaliano
Paese di produzioneItalia
Anno2023
Durata109 min
Generedrammaticocommedia
RegiaAlessandro Aronadio
SoggettoAlessandro AronadioRenato Sannio
SceneggiaturaAlessandro AronadioRenato Sannio
ProduttoreCarlo Degli EspostiRiccardo RussoNicola SerraCristina Tacchino
Produttore esecutivoJamie HiltonMichael PontinPiergiuseppe Serra
Casa di produzioneBIM Production
Distribuzione in italianoNetflixVision Distribution
FotografiaRoberto Forza
MontaggioRoberto Di Tanna
MusicheSanti Pulvirenti
ScenografiaDaniele FrabettiLara Sikic
CostumiElena Minesso

0 comments: