Friday, March 31, 2023

CHOR NIKAL KE BHAGA (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


 சோர்  நிகால்கே  பாகா  என்ற  ஹிந்தி  டைட்டிலுக்கு  திருடன்  தப்பி  ஓடி விட்டான்  என  தமிழில்  அர்த்தம். யமி கவுதம்  நாயகியாக  நடித்த  இந்த  ஹிந்திப்படம்  நேரடியாக  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில் 24/3/2023 அன்று   ரிலீஸ்  ஆகி உள்ளது. 110 நிமிடங்கள்  ஓடும்  இந்த  விறுவிறுப்பான  ராபரி  த்ரில்லர்  படம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  இருந்தால்  நல்ல  வரவேற்பைப்பெற்றிருக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  விமானப்பணிப்பெண்.ஒரு  நாள்  விமானப்பயணத்தில்  ஒரு  பயணி  ஆக  நாயகனை  சந்திக்கிறாள் . தொடர்ந்து  அடுத்தடுத்து  நாயகன்  நாயகியை  சந்திக்க  சந்தர்ப்பங்களை  உருவாக்கிக்கொள்கிறான். ஆரம்பத்தில்  என்னப்பா? என்னை  ஸ்டாக்கிங்  பண்றியா? என்னை  கரெக்ட்  பண்ணப்பார்க்கிறாயா? என  கலாய்க்கும்  நாயகி  நாளடைவில்  அவன்  காதலை  ஏற்றுக்கொள்கிறாள் 


இருவரும்  திருமணம்  செய்து  கொள்ளாமல்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் . இதனால்  நாயகி  கர்ப்பம்  ஆகிறார்


ஒரு  நாள்  ரெஸ்டாரண்ட்டில்  இருவரும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  நாயகனுக்கு  ஒரு  ஃபோன்  கால்  வருகிறது .வெளியே  இருவர்  நாயகனுக்காக  காத்திருக்கிறார்கள் . நாயகனை  அவர்கள்  மிரட்டுகிறார்கள் . நாயகி  என்ன  விஷயம்  என  கேட்டபோது  ஆரம்பத்தில்  மழுப்பும்  நாயகன்  பிறகு  நாயகியின்  வற்புறுத்தலால்  அவனது  பிரச்சனையை  ஓப்பன்  செயுகிறான்


 நாயகனுக்கு  கோடிக்கணக்கில்  கடன்  இருக்கிறது . அதை  உடனடியாக  அடைக்க  வேண்டும் , அல்லது  குறிப்பிட்ட  வைரங்களை  திருடி  அதை  ஒப்படைக்க  வேண்டும். இதுதான்  நாயகன்  தரப்பு  விஷயம் 


 நாயகி  அதற்கு  சம்மதிக்கிறாள் , வைரங்களை  கொண்டு  வரும்  ஆள்  விமானத்தில்  பயணிக்கும்போது  அதை  திருட  முடிவு  செய்கிறார்கள் . 


 விமானத்தில்  நாயகன்  பயணி  ஆகவும் , நாயகி  விமானப்பணிப்பெண்ணாகவும்  பயணிக்கும்போது  திடீர்  என  எதிர்பாராத  ஒரு  திருப்பம். பயங்கரவாதிகள்  நான்கு  பேர்  விமானத்தை  ஹைஜாக்  செய்கிறார்கள் / இதற்குப்பின்  என்ன  நடந்தது ? நாயகன் , நாயகி  உயிர்  பிழைத்தார்களா? வைரங்களை  திருடினார்களா? அரசியல்வாதியின்  தாக்குதல்  என்ன  ஆனது ? எனபதற்கு  எல்லாம்  திரைக்கதையில்  விடை  உள்ளது


நாயகியாக  யாமி  கவுதம்  நன்றாக  நடித்துள்ளார்.ஒரு  விமானப்பணிப்பெண்ணுக்கான   ஆடை  வடிவமைப்பு , உடல்  மொழி  அனைத்தும்  நேர்த்தியாக  உள்வாங்கி   பர்ஃபார்மென்ஸ்  பண்ணி  இருக்கிறார், இடைவேளைக்குப்பின்  ஆன  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  கலக்கி  இருக்கிறார்


 நாயகனாக சன்னி  கவுசல் சராசரி  தமிழ்  சினிமா  நாயகன்  மாதிரி  நாயகியை  துரத்தி   துரத்தி  காதலிக்கும்  நபராக  அறிமுகம்  ஆகி  வில்லன்  ரோல்  செய்யும்போது  கவனிக்க  வைக்கிறார். இவரது  கேரக்டர்  டிசைன்  கனகச்சிதம் 


கேதான் சோதா  தான்   இசை . த்ரில்லர்  படங்களுக்கு  பிஜிஎம்  ரொம்ப  முக்கியம். படத்தை  விறுவிறுப்பாகக்கொண்டு  செல்ல  பின்னணி  இசை  முக்கியப்பங்கு  வகிக்கிறது . சாரு  தக்கர்  தான்  எடிட்டிங். ஷார்ட்  அண்ட்  ஸ்வீட் ஆக 110  நிமிடங்களில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார், இந்தக்கதையை  இரண்டரை  மணி  நேரம்  இழுத்திருந்தால்  போர்  அடித்திருக்கும் . ஜியானி தான்  ஒ:ளிப்பதிவு . பெரும்பாலான  காட்சிகள்  விமானத்துக்கு  உள்ளேயே  நடப்பதால்  சவாலான  வேலை  தான் ,  ஆர்ட்  டைரக்சன்  கச்சிதம் 


அஜய்  சிங்  தான்  இயக்கம் , விறுவிறுப்பாக  கதையை  நான்  லீனியர்  கட்  திரைக்கதையில்  வடிவமைத்து  சொன்னது  சிறப்பு,  எந்த  விதமான  குழப்பமும்  இல்லாமல்   திரைக்கதை   அமைத்த  மூவர்  கூட்டணி  ஆன   சிராஜ்  அஹ்மத் , அமர் கவுசிக் , ராஜ்குமார்  குப்தா  அனைவரும் சிறப்பாக  பணி  ஆற்றி  இருக்கிறார்கள் . திரைக்கதை  எழுதிய  மூவரில்  அமர்  கவுசிக்  தயாரிப்பாளர்களில்  ஒருவர்  என்பது  நல்ல  விஷயம் 
சபாஷ்  டைரக்டர்  ( அஜய்  சிங் ) 


1  ரொமாண்டிக்  போர்சன் ரசிக்கும்படி  இருக்கிறது , அதே  சமயம்  மெயின்  கதையை  ஓவர் டேக்  பண்ணாமல்  அடக்கி  வாசிக்க  வேண்டிய  தேவை  உள்ளதால்  லவ்  போர்சனை  கொஞ்சமாக  வைத்தது  சிறப்பு 


2 இடைவேளை , ட்விஸ்ட்   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இரண்டும்  ரசிக்கும்படி  உள்ளது 


3  த்ரில்லர்  படங்களின்  முக்கிய  எதிரிகளான  மொக்கை  காமெடி  டிராக் ,  தேவையற்ற  டூயட்  காட்சிகள்  இரண்டையும்  தவிர்த்தது  சிறப்பு 

4    இந்தக்கொள்ளை  விமானத்தில்  ஏன்  செய்ய  வேண்டும் > என்ற  கேள்விக்கு  விடையாக  வைரம்  இருக்கும்  செல் ஃபோனில்  ஜிபிஎஸ்  பதிக்கப்பட்டு  இருக்கிறது , அதை  வேறு  இடத்தில்  கடத்தினால்  காட்டிக்கொடுத்து  விடும் , விமானம்  பறக்கும்போது  அங்கே   ஜிபிஎஸ்  ஒர்க்  ஆகாது  என  காரணம்  சொன்ன  விதம்  அபாரம் 


ரசித்த  வசனங்கள் 


1  மிஸ்! இன்னைக்கு  நைட்  என்  கூட  டின்னர்  சாப்பிட  வர்றீங்களா? நீங்க  ரொம்ப  வேகமா  இருக்கீங்க 


 உங்களுக்குப்பிடிக்காதுன்னா  ஸ்லோ  பண்ணிக்கறேன்


2   நான்  உங்களைப்பார்த்தேனா? உங்க  கண்ணை  செக்  பண்ணிக்கறது   நல்லது


 உங்க  கண்ணைத்தான்  செக்  பண்ணனும், ஆனாலும்  உங்க  கண்  நல்லாதான்  இருக்கு 


3  குழந்தை  பிறக்கும்  முன்பே  குழந்தைக்காக  பொருட்கள்  பர்ச்சேஸ்  பண்றது  அபசகுனம்னு  சொல்வாங்க 


4  எந்த  ஒரு  விஷயத்தையும்  முழு  நம்பிக்கையோட செஞ்சா  அதுல  எந்தத்தப்பும்  நடக்காது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  ஒரு  ஏர்  ஹோஸ்டல். இந்தப்பணியில்  இருப்பவர்கள்  கர்ப்பம்  ஆகக்கூடாது, அப்படி  ஆனால்  வேலை  போய்  விடும் இது  தெரிந்திருந்தும்  நாயகி  எப்படி  கர்ப்பம்  ஆனதும்  சந்தோஷப்படுகிறாள் ?  நாயகனுக்கும்  வருமானம்  இல்லை , இவள்  வேலையும்  போய்  விட்டால்  பூவாவுக்கு  என்ன  செய்வார்கள் ? 


2 பெண்ணை  தாக்குதல் , கர்ப்பத்தை கலைத்தல்  இந்த  இரண்டு  தவறுகளை  செய்யும்  ஒருவனை  மிகச்சுலபமாக சட்டப்படியே  தண்டனை  வாங்கித்தரலாம்.  அதைச்செய்யாமல்  நாயகி  போடும்  திட்டம்  தலையைச்சுற்றி  மூக்கைத்தொடுவதாக  இருக்கிறது 


3  ஒரு  ஆக்சன்  சீக்வன்சில் நாயகியின்  செல் ஃபோன்  தெறித்து  ஒரு  இடத்தில்  விழுகிறது . இப்படி  தெறித்து  விழும்போது  செல்ஃபோன்  ஸ்விட்ச் ஆஃப்  தான்  ஆகும், ஆனால்  நாயகியின்  ஃபோன்  மட்டும்  ஸ்பீக்கர்  ஃபோன்  ஆன்  ஆகி  ஒரு  கான்வோவை  ரெக்கார்டு  செய்கிறது 


4   விமானத்தை  விட்டு  பயணிகள்  இறங்கி  வரும்போது  குறிப்பிட்ட  சிலர்  மட்டும்  லக்கேஜ்  உடன்  வருகிறார்கள் .  இதற்கு  அனுமதி  இல்லையே? போலீஸ்  சந்தேகப்பட்டு  பேக்கை  செக்  செய்யவே  இல்லையே? 


5   விமானத்தில்  இருக்கும்  ஒரு  ஆஃபீசர்  மூன்று  தீவிரவாதிகளை  தாக்குகிகிறார். துப்பாக்கிக்குண்டு  பட்டு  அவர்கள்  இறப்பதாகக்காட்டப்படுகிறது , ஆனால்  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  வரவில்லை , இதில்  பயணிகள்  யாருக்கும்  டவுட்  வராதா? 


6  வைரத்தை  விமானத்தில்  கொண்டு  வரும்  நபர்  வைரங்கள்  உள்ள  ஃபோனை  தன்  பாக்கெட்டில்  மறைத்து  எடுத்து  வராமல்  பேக்கில்  வைத்து லெக்கேஜ்  செக்சனில்  விட்டு  அசால்ட்டாகவா  வருவார் ? அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம்சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படையப்பா, மன்னன் , மாப்பிள்ளை , பச்சைக்கிளி  முத்துச்சரம், GONE GIRL  போன்ற  படங்களை  அதில்  உள்ள நெகடிவ்  ஷேடு  வில்லி  கேரக்டருக்காக  ரசித்தவர்கள்  இந்தப்படத்தையும்  ரசிப்பார்கள் , த்ரில்லர்  ரசிகர்களுக்கான ஒரு  நல்ல படம்   ரேட்டிங் 2.75 /5 Chor Nikal Ke Bhaga
Chor Nikal Ke Bhaga film poster.jpg
Official release poster
Directed byAjay Singh
Written bySiraj Ahmed
Amar Kaushik
Raj Kumar Gupta
Produced byDinesh Vijan
Amar Kaushik
Starring
CinematographyGianni Giannelli
Edited byCharu Thakkar
Music byScore:
Ketan Sodha
Songs:
Vishal Mishra
Production
company
Distributed byNetflix
Release date
  • 24 March 2023
Running time
110 minutes[1]
CountryIndia
LanguageHindi

0 comments: