Saturday, March 21, 2026

தடயம் (2026)-தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் )@ஜீ 5

                 

         தடயம் (2026)-தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் )@ஜீ 5

ஆந்திரா- தமிழக பார்டரில் நடந்த

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை இது.மொத்தம்  6 எபிசொடுகள்.ஒவ்வொரு எபிசோடும்20 நிமிடங்கள் டூ 26 நிமிடங்கள். ஆக மொத்தம்  இரண்டே முக்கால் மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்து விடலாம்.


   


ஸ்பாய்லர்  அலெர்ட்


1999ல் கதை நடக்கிறது.

நாயகன் ஒரு ஊரில் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்கிறார்.அதே இடத்தில் நாயகி இன்ஸ்பெக்டர் ஆக  வேலை பார்க்கிறார்.இருவரும் ஜோடி கிடையாது.காதலர்களோ,தம்பதியினரோ கிடையாது.


ஒரு பால் காரன் மூலம் ஒரு வீட்டில் நடந்த கொலைகள் பற்றிய தகவல் கிடைக்கிறது.ஒரு வீட்டில் கணவன்,மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார்கள்.கணவனின் அரைஞாண் கயிறு,மனைவியின் தாலி செயின் மட்டும் காணவில்லை.மற்ற நகைகள் எல்லாம் அப்படியே இருக்கிறது.எனவே பணத்துக்காக நிகழ்ந்த கொலை இல்லை என்பது தெரிய வருகிறது.

இதைப்பற்றி  துப்பு துலக்க ஆந்திரா போகும்போது ஒரு அதிர்ச்சித்தகவல் கிடைக்கிறது.அங்கேயும் இதே பேட்டர்னில் 76  கொலைகள் நடந்திருக்கிறது.

எதற்காக இந்தக்கொலைகள் நடக்கிறது?யார் அந்த சீரியல் கில்லர்(கள்) என்பதை நாயகன் எப்படிக்கண்டுபிடிக்கிறார் என்பதே மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக சப் இன்ஸ்பெக்டர் ஆக இயக்குநர் சமுத்திரக்கனி நன்றாக நடித்திருக்கிறார்.தன் சீனியாரிட்டிக்கு மதிப்பில்லை,தன் வயது ,அனுபவத்துக்கும் எந்த மரியாதையும் இல்லை என்பதை உணர்ந்து அவர் துடிக்கும் காட்சிகள் சிறப்பு.

பொதுவாக போலீஸ் ஹீரோ சப்ஜெக்ட்டில் ஓவர் பில்டப்கள் இருக்கும் .அதெல்லாம் இதில் இல்லை.

நாயகனுக்கு உயர் அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ரோலில்  ஷிவதா வருகிறார்.இவருக்கு அதிக வாய்ப்பில்லை.சும்மா அழகுக்காக ,ஒரு நாயகி வேண்டுமே என்பதற்காக புக் செய்து விட்டார்கள் போல் தோன்றுகிறது.

மூணாறு ரமேசின் ஆணவம் மிக்க நடிப்பு கச்சிதம்

ராஜ் திரன் தாஸ்,பிரேம்,சுந்தர் பாண்டியன்,புலிப்பாண்டி ,வினாயகன்,அழகன் தமிழ்மணி  போன்றோர் அவரவர்க்குக்கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்து  இருக்கிறார்கள்.


தினேஷ் குமாரின் எடிட்டிங் கில் நான் லீனியர் கட்டில் திரைக்கதை 1999 க்கும் 1995 க்கும் போய்ப்போய் வருகிறது.


நவீன் குமார் பழனிவேல் தான் கதை,திரைக்கதை ,இயக்கம்.தயாரித்து இருப்பவர் அஜய் கிருஷ்ணா



சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் சமுத்திரக்கனியின் கேரக்டர் டிசைன்,அவரது நடிப்பு அருமை.மிக இயல்பாக இருந்தது.

2 கொலைகாரர்களாக வரும் இருவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் பிரமாதம்.கொலை ஏன் நடக்கிறது என்பதை ஓப்பனிஙகில் அவர்கள் விளக்குவது,க்ளைமாக்சில் டீட்டெயில் ஆக சொல்வது கச்சிதம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி யின் திருமானத்தில் நடக்கும் பிரச்சனைகள்,அதை அவர் கையாளும் விதம் இவை எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை.சும்மா ஜவ்வு இழுப்பாக சீரிசை இழுக்கவே பயன் பட்டிருக்கிறது


2 ஒரு ஸ்டேஷனில் ஹையர் ஆபீசர் உத்தரவு போடுவார்.அவருக்குக்கீழ் பணியாற்றும் அதிகாரி  அந்த உத்தரவுக்குக்கீழ்ப்படிந்து நடப்பார்.இதில் எல்லாம் தலை கீழ்.சப் இன்ஸ்பெக்டர் ஆன நாயகன் எல்லா விபரஙகளையும் கண்டு பிடித்து நாயகி ஆன இன்ஸ்பெக்டருக்கு சொல்கிறார்.அடுத்து என்ன செய்ய வேண்டும்?என்ன பிளான்?என்பதையும் அவரே சொல்கிறார்.எஸ் சார் ஓகே சார் என ஹையர் ஆபீசர் கேட்டுக்கொள்கிறார்.எந்த ஊர் போலீஸ் ஸ்டேசனில் இப்படி நடக்கும்?

3 திரைக்கதை அமைக்கும் போது ஹெச் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் ரெடி பண்ண வேண்டும் என்று இயக்குநர் முயற்சித்திருப்பது நன்கு தெரிகிறது.ஆனால் அவர் முயற்சியில் 25% கூட நிறைவேறவில்லை

4  க்ளைமாக்சில் ஒரு எமோஷனல் சாங்க் வைத்து கொலையாளிகள் மீது இரக்கம் வர வைக்க என்னென்னனோ செய்வது எதற்கு?

5 க்ளைமாக்சுக்கு முந்தைய சீனில் நாயகன் கொலையாகிகளைப்பார்த்துத்தேவை இல்லாமல் 72 கொலைகள் செய்தது எதற்கு?எனத்திட்டுகிறார்.அடுத்த சீனில் கொலையாளிகளை நியாயப்படுத்த முனைவது ஏன்?,இயக்குநரிடம் ஒரு தெளிவு இல்லையே?

6 முதல் எபிசொடிலேயே கொலையாளிகள் யார் என்பது தெரிந்து விட்டதால் சஸ்பென்ஸ் ,ட்விஸ்ட்க்கு வேலை இல்லை..இன்வெஸ்டிகேஷன் போர்சனில் புதுமை இல்லை.ரெகுலர் டெம்ப்ளேட் என்கொயரீஸ் தான்.சலிப்பு.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம் உள்ள சராசரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.உண்மை சம்பவம் தான் கதை என்பதால் எழும்  சுவராஸ்யம் திரைக்கதையில் இல்லை.ரேட்டிங் 2/5