Monday, December 11, 2017

குருவே!"லட்சுமி" கடாட்சம் கிடைக்க என்ன செய்யனும்?

1 சார், பாரதியார் கவிதை தெரிஞ்சா பொண்ணுங்களை கரெக்ட் பண்ணிடலாம்னு சொல்றாங்களே? நிஜமா?

ஒரிஜினல் பாரதியார் சம்சாரத்துக்கே அவர் கவிதை பிடிச்சிருக்குமா?டவுட்தான்


==============

2  இயக்குநர் சுசீந்தரன் படத்துல நமீதா நடிச்சா டைட்டில் என்னவா இருக்கும்?


நெஞ்சில் துணி இருந்தால்==============


3 டாக்டர்,காது குடையும் போது பஞ்ச விட காதுக்கு தான் சுகம் அதிகம். ஆனாலும் காதுகள் அத ஒத்துக்குறதில்ல ,ஏன்?


ஏன்னா டேமேஜ்,இமேஜ் காதுக்குதான்=============

4 மேடம்,லட்சுமி குறும்படத்தை சினிமாவா எடுக்கறோம்


அது என் இமேஜை பாதிக்கும்
எப்டி?
அட்லீஸ்ட் 5 பேராவது ஜோடியா போடனும்.அதுல 2 ஹீரோதானே?=============


5 தரகரே!பொண்ணு எப்டி இருக்கும்?


"லட்சுமி"கரமா
அய்யய்யோ


================


6 இன்ஸ்பெக்டர்,முறைப்பொண்ணுக்கு லவ் லெட்டர் தர்றது ஒரு சைபர் க்ரைம் குற்றமா?எப்டி?


டேய்.அது FB ID name


===============


7 நைட்டானா வீட்ட சுத்தி கொலுசு சத்தம் கேக்குது..என்னவா இருக்கும்? பேயா?


லட்சுமியோட அபார்ட்மென்ட்டா இருக்குமோ?===========


8 குருவே!லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்யனும்?


சிஷ்யா!கதிர் போல பஸ் ஸடேண்ட் ,ரயில்வே ஸ்டேஷன் ஏரியா ல டேரா போடனும்


==============


9 என் மாமனாரை 35 வருசமா எதிர்க்கறேன்


இந்த மேட்டர் அவருக்கு தெரியுமா?
தெரியாது,தெரிஞ்சா வீட்டோட மாப்ளையா குப்பை கொட்ட முடியாது==============


10 மேடம்.பொண்டாட்டியோ அப்டினு ஹேண்டில் வெச்சிருக்கீங்களே எதுக்கு?


புருஷோ னு கூடத்தான் ஐடி இருக்கு,அவரை கேட்டீங்களா?===============

11 டைரக்டர் சார்,நீங்க அவர் கிட்டே இருந்து கதை திருடுனதை ஒத்துக்கறீங்களா?


அவரோட லேட்டஸ்ட் படமும் உல்டாவாம்
நீங்க திருடரா?இல்லையா?===============


12 டாக்டர்,எந்த பொண்ணைப்பார்த்தாலும் பார்த்த உடனே சுண்டி இழுக்குற ஒருவித கவர்ச்சி குவிஞ்சு கிடக்கு னு சொல்றாரு


அவருக்கு கண் அவிஞ்சு கிடக்கோ?=================


13 நான் ஐஏஎஸ் க்கு பிரிப்பேர் பண்ணப்போறேன்...இனி FB வரமாட்டேன் அதிகமா.


அதிகமான்னா எவ்ளோ மேடம்?
இனி டெய்லி 12 மணி நேரம் மட்டும்தான் ஆன்லைன்=========

14 என் பருஷன் மேரேஜ்க்கு அப்புறம் FBல இருந்தா அப்படியே மொபைலோடு சேர்த்து அவனையும் பொதைச்சிடுவேன்


மிஸ்.மொபைலை மட்டும் என்கிட்டே தந்துடுங்க==============


15 மாப்ளை எவ்ளோ சம்பாதிக்கறார்
?
அவருக்கு போதுமான அளவு சம்பாதிச்சுக்குவாராம்
அதென்ன அளவு?
குவாட்டர்


===============

16 "ஆண்களின் எந்த பழக்கவழக்கங்கள் பெண்களுக்குப் பிடிக்கும்?"

அவங்க மொபைல் ரீசார்ஜ் பண்ணித்தர்றது,ஷாப்பிங் செலவை ஏத்துக்கறது இப்டி==============


17 டாக்டர்,ஒரிஜினல் லேடி ஐடிகளை ஆண் தான் டியூன் செய்யவேண்டும்.கறாங்களே நிஜமா?

தானா தேடி வந்தா அது FAKEகு
தேடினேன் வந்ததுனு நினைச்சா நீ பேக்கு


============


18 உங்க பையன் பொண்ணுங்க இடுப்பையே சைட் அடிச்ட்டு இருக்கானே?

ஹிப் னாடிசம் படிக்க வெச்சேன்,ஒரே "குஷி" ஆகிட்டான்


==============


19 சார்.வடைக்கு பேர் போனது தமிழ்நாடா?ஆந்திராவா?

முதல் கட்டமா தமிழ்நாட்லதான் வடை சுடறாங்க.ஒரு வாரம் கழிச்சு அதை ஆந்திராக்கு பார்சல் பண்ணிடறாங்க


===============


20 அர்ஜூன் ரெட்டி டவுன்லோட் லிங்க் இருந்தா கொடுத்துதவுங்க

மிஸ்,அது ஒரு மார்க்கமான படம் ஆச்சே?
ஒரு மார்க் தானா?ஏன் அவ்ளோ கம்மி மார்க்?


=================

Friday, December 08, 2017

ஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்,சோ ஐ ஆம் அனபிள் டூ அட்டெண்ட்"எலக்சன்

“ஆர். கே. நகரில் போட்டியில்லை” -விஷால் # சும்மா ட்ரெய்லர் விட்டிருக்காப்டி,எடுபடலைனு தெரிஞ்சதும் பேக் அடிச்சாச்சு


==========


2 அதிக குற்றங்கள் பட்டியலில் சென்னைக்கு மூன்றாவது இடம்: செய்தி - பார்த்தாயா உடன் பிறப்பே?கழக ஆட்சியில் இந்த அவப்பெயர் அகலும்.நாமே நெ 1 ஆவோம்


================


3 தொப்பி சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி # தமிழிசை அளபடை கடுப்பாகி இருப்பாரே?


=============


4 அரசுப் பேருந்தில் பயணித்த கடலூர் ஆட்சியர்: அதிகாரிகளையும் உடன் அழைத்துச்சென்றார் # சபாஷ்.நம்ம அரசியல்வாதிங்க சில"பஸ்"லயே இது இல்லையே?


=============


5 சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்க எந்த அரசியல் விலையையும் கொடுப்பேன் - மோடி # வித்துடாம இருந்தா சரி.


=============


6 எந்த சின்னம் ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் - தினகரன்

# சின்னம்மா அண்டை மாநிலத்தில்
சின்னம் அவங்க கிட்ட
இருந்தாலும் வெத்து கெத்து


==========


7 பாம்பன் கோவிலில் "தீபம்" காட்டப்படாததால் 2015 ல் சென்னையில் வெள்ளம் வந்தது - H.ராஜா
இனிமே தீபம்,கணையாழி,தீராநதி வெச்சு பூஜை போட்ரலாம்


=============


8 மைக்கேல் ராயப்பன் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை-சிம்பு# நயன் தாரா அப்பா,ஹன்சிகா அப்பா புகாருக்கே நாங்க பதில் சொல்லல======================


9 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்கனும்- லதா ரஜினி # எவ்ளோ விழிப்புடன் இருந்தாலும் சிலர் வாடகை தராம அல்வா தராங்க


==============


10 கொலை மிரட்டல் எதிரொலி: ஜெ.-சோபன்பாபு மகள் என கூறிய அம்ருதா தலைமறைவு # இதே ஜெ வாரிசை அறிவிச்சிருந்தா இதே கூட்டம் கால்ல விழுந்துகிடக்கும்


===============


11 திமுக தமிழகத்தை ஆளக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் அதிமுக

அமைச்சர் ஜெயக்குமார் கலைஞர் இரு தனி மனித ஈகோ வால் உருவானதே அதிமுக===============


12 உடல்நிலை குறைவு காரணமாகவே கங்கை அமரன் போட்டியிடவில்லை - தமிழிசை # ஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்,சோ ஐ ஆம் அனபிள் டூ அட்டெண்ட்"எலக்சன்


===========13 13 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுகவுக்கு ஆதரவு தந்த மதிமுக.. # ஏழரை நாட்டு சனி சூரியனையும் விட்டு வைக்காது


==============


14 திராவிடர் இயக்கத்தைப் பாதுகாக்கவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு : வைகோ டைம் பொட்டி கோபாலபுரத்தில் இருந்தா?


==============


15 MGRஉழைத்து உருவாக்கிய ADMKஎப்பொழுதும் தொழிலாளர் பக்கமே இருக்கும்; Cm Eps # குறிப்பா முன்னாள் தேயிலை தொழிலாளி பக்கம்


==============


16 பாரதீய ஜனதாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது - தமிழிசை. # நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை வளரவிடுவதும்,தமிழகத்தில் தாமரை மலர விடுவதும் ஆபத்து


================


17 ஆர்கே நகர் தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியை கலைத்து விடுவேன் - சீமான் # டெபாசீட் வாங்க வழி பாருங்க முதல்ல


===============


18 சங்கப்பதவியை ராஜினாமா செய்தபின் விஷால் தேர்தலில் நிற்கட்டும்-சேரன்
சமயத்துல லட்சுமிமேனன்,வரலட்சுமி னு 2 பேருக்கு Fb ல request தந்தாரே


===============19 நிறம் மாறும் அரசியலை தமது சுயமரியாதையும் தன்மானமும் ஏற்று கொள்ளவில்லை- சரத்குமார் # நாட்டாமை,நாமளே இதுவரை நாலு தடவை கட்சி மாறிட்டமே?


==============


20 விஷால் தினகரனின் பினாமியாக கூட இருக்கலாம் - எஸ்.வி சேகர் # பாஜக விஷால் வாங்கப்போகும் ஓட்டுகள்ல பாதியாவது வாங்குனாதான் கவுரவம்


=========================


பீர் அடிக்காதே என்பதன் சுருக் ?

வயசில்,படிப்பில்,அனுபவத்தில் தன்னை விட 2 மடங்கு மூத்தவரை 4 பேர் முன் மட்டம் தட்டுவதை பெருமையாக நினைத்துக்கொள்கிறான் நெட் தமிழன்


=============


2 தமிழிங்க்லீஷ்ல ஏன் எழுதறீங்க?

10 வருசமா அப்டிதான் எழுதறேன்
சுத்தம்.இனிமேலாவது திருத்திக்கலாமில்ல?


என் தனித்தன்மையே அப்டி தப்பா எழுதறதுதான்


=============

3 ஜெ மகள் அம்ருதா என்பது நிரூபிக்கப்பட்டால் நம்ம துரோகிங்க 2 பேரும் ஓடிப்போய் கால்ல விழுந்துடுவாங்க.


============


4 பிரிவிற்குப் பிறகான பிரியத்திற்குப் பெயர் சொல்லேன்.

வம்சாவலி/ பரிவு


=============


5 அழகுத்தோற்றம் கொண்டோர் அனைவரும் அன்புடையவராய் இருப்பர் என எதிர்பார்க்காதீர்.ஆனால் அன்புடையோர் அனைவரும் அழகானவர் என்று உணர மறக்காதீர்!


=================6 வாழ்வாதாரத்திற்காகவோ ,கமர்ஷியல் வெற்றிக்காகவோ உன் தனித்தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே!


=============


7 கடலோர குடியிருப்புகள் ,வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் நீச்சல் கற்றுக்கொள்வது நல்லது


=============


8 சந்தர்ப்பவாதம் எப்படி இருக்கும் என்பதற்கு வாழும் கேவலமான உதாரணம் அதிமுக MLAக்கள்


==============


9 ஏழையின் பசியை,அதன் வலியை நீங்களும் உணர மாதம் ஒரு நாள் ,ஒரு வேளை உண்ணாவிரதம் இருங்கள் .உங்கள் வயிற்றுக்கு,மூளைக்கு,மனதுக்கு நல்லது


=============


10 உங்கள் சம்பளம் /வருமானம் எவ்வளவு என்று கேட்டால் கவுரவத்துக்காகவோ ,வேறு எதற்காகவோ பெரும்பாலானோர் 50% கூட்டி சொல்கிறார்கள்


=============


11 எந்த ஊர் பஸ் ஸ்டேண்டாக இருந்தாலும் அங்கே இருக்கும் ஹோட்டல்கள் உணவு தரம் குறைந்ததாக ,விலை அதிகமாகவே இருக்கும்.வாடகை அதிகம் என்பதால்.


=============

12 பீர் அடிக்காதே என்பதன் சுருக் தவிர்ப்"பீர்"


============


13 ரிலீசுக்குப்பின் சூர்யா ரசிகர்கள் தானா சோர்ந்த கூட்டம் ஆவார்கள் என கணிக்கிறேன்


=============


14 தகுதி,திறமை,உழைப்பு எல்லாம் இருந்தும் பலர் முன்னேறாம இருக்க முக்கியக்காரணம் தகுதியே இல்லாதவங்க தன் செல்வாக்கால ஆக்ரமித்து இருப்பதே!=============


15 நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதும் ஹார்லிக்ஸ் வாங்கி தரீங்களே அத நல்லா இருக்கும் போது வாங்கி தந்தா என்ன!!

அழுத பிள்ளைக்குதான் பாலு


============


16 வெளியூர் பயணங்களில் மெஸ்சில் சாப்பிடுவது உடல் நலனுக்கு,பொருளாதார நலனுக்கு நல்லது.பிராமண/அய்யர்/ செட்டியார் மெஸ் சைவர்களுக்கு உகந்தது


==============


17 சூர்யா ரீமேக் படம் பண்ணது இல்லையா?

1 பேரழகன் (குஞ்சு கூனன்) மலையாளம்
2 பிரண்ட்ஸ் ( பிரண்ட்ஸ்)மலையாளம்
3 தா சே கூ


==============


18 காலைல 8 மணிக்கு "சாப்ட்டாச்சா?"னு ஒரு பொண்ணு கிட்டே நெட் தமிழன் கேட்டான்.அதுல நியாயம் இருந்துச்சு.நைட் 10 மணி.அதே கேள்வி,அதே பொண்ணு.ஷப்பா==============


19 ஜாதி மல்லி வேற ,ஜாதி முல்லை வேற.கூகுள் 2ம் 1ங்குது.ஒருவேள அட்மின் ஆபாயிலோ?


===============


20 ஒரு குடிகாரனால் சமூகத்துக்கு நிகழும் கெடுதலை விட சிகரெட் புகை விடுபவனால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசு பல மடங்கு அதிகம்


================

Thursday, December 07, 2017

க்ரூப்ல டூப்.அட்டென்சன் சீக்கிங் ஆர்யமாலா

பயணிகளுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதை நிறுத்துங்கள் ரெயில்வேக்கு டெல்லி ஐகோர்ட்# இதுதான் சாக்கு குடிநீர் சப்ளையையே நிறுத்திடாம இருந்தா சரி


===============


2 என்னிடம் கூறிவிட்டே 3MPக்கள் அணிமாறினார் என டிடிவி கூறுவது 21ம் நூற்றாண்டின் சிறந்த ஜோக்- ஜெயக்குமார் # அடுத்த ஜோக்கை நீங்க சொல்வீங்களா?


=============


3 தாமரைக்கு தேவை வட்ட இலை. இரட்டை இலை அல்ல - தமிழிசை
# மேடம்,இரட்டை இலையையே வட்ட இலையா ஆல்டர் பண்ணிக்கலாம்,யாரும் கண்டுக்க மாட்டாங்க


================
4 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி.. தமிழிசை திட்டவட்டம் # டெபாசிட் வாங்குமா?வாங்காதா?அதையும் நீங்களே சொல்லிடுங்க


============


5 பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவம்: பிரதமர் மோடி ,பெரும்பாலான ஆண்கள் சக்தி இல்லாமயே காலத்தை ஓட்டறாங்க


===========


6 போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான்: டி.டி.வி.
# விரைவில் ஆட்சி கவிழும் ,ஆட்சி மாற்றம் ஏற்படும்னு அறிக்கை விடுவதில்தானே?


=============


7 மத்தவன் கொடுத்தா பைனான்ஸ்,
தமிழன் கொடுத்தா கந்துவட்டியா ?-சீமான் # லூஸ்தனமா உளர்றாரு.ஒருத்தன் ரேப்/கொலை செய்யறான்,தமிழன்னு ரிலீஸ் பண்ணலாமா?


============


8 பாவம் செய்தால் கேன்சர் வரும் -அசாம் அமைச்சர்
# அதாவது சிகரெட் குடிச்சா அது பாவம் ,அந்த பாவத்தை செஞ்சா கேன்சர் வரும்


============


9 செல்லூர் ராஜு வீடு அருகே தூர்நாற்ற ஓடை! 40 வருட அவலம் - செய்தி
# அரசியல் ஒரு சாக்கடை பார்முலாப்படி அரசியல்வாதி வீடு அருகே சாக்கடை−தப்பில்ல=============


10 இந்தியாவின்பொருளாதாரத்தை சிறப்பானநிலையைநோக்கி மோடி அழைத்துச் செல்கிறார் - இவாங்கா டிரம்ப் # மோடிக்கு டானிக் குடிச்ச மாதிரி "சிரப்பா" சொல்றாக


============

11 கோயம்பேடு சந்தையில் துணை முதல்வர் OPS திடீர் ஆய்வு. # OPS டம்மி இல்ல பவர் இருக்கு னு OPSசையே நம்ப வைக்க EPS போட்ட பிராஜக்ட் தான் இது


===========


12 'புதிய இந்தியா' 2022க்குள் பிறக்கப் போகிறது.. உலக தொழில்முனைவோர் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு # பழைய இந்தியாவே போதும்.னு அவனவன் புலம்பறான்


============


13 தினகரன் அணியில் இருந்து யார் வந்தாலும் வரவேற்போம்: வைத்திலிங்கம் # எந்த கட்சில இருந்து யார் எப்போ வந்தாலும் எல்லா கட்சியும் வரவேற்கும்


================

14 RK.நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை;
யாருக்கும் ஆதரவும் இல்லை - Gkவாசன் நாலுநாளா உக்காந்து ஒட்டிட்டு இருந்தீங்களா?


=============


15 Rkநகர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை : வைத்திலிங்கம். சூதானமா இருங்க.மதுசூதனன் வெளீல போய்டப்போறாரு


==============


16 வெளிநாடுகள் இருந்து மணலை இறக்குமதி செய்து தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் - உயர்நீதிமன்றம்
மண்வளம் பாதிச்சா பரவால்லியா?


==============


17 காவல் நிலையம் அருகே ரூ. 12 லட்சத்துடன் இருந்த ATM திருடப்பட்டது # காவல் நிலையத்துல திருடி இருந்தா இன்னும் அதிகம் கிடைச்சிருக்கும்


==============


18 சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தில் தானும் நர்ஸ்தான் என போலீசாருடன் பிக்பாஸ் ஜூலி தகராறு :# க்ரூப்ல டூப்.அட்டென்சன் சீக்கிங் ஆர்யமாலா


===============


19 இந்தியாவில் ஸ்மார்ட்ph பயன்படுதுபவர்கள் எண்ணிக்கை 53%- மோடி "PMனு பேர் எடுக்க விரும்பினா விவசாயிகள் எண்ணிக்கை உயர்த்தப்பாருங்க


==============


20 ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் மொட்டைபோட்டு கொள்கிறேன்.
- ப.வளர்மதி # யார் ஜெயிச்சாலும்"மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறீக


=============