Friday, August 19, 2011

மிட்டாய் - கில்மா படமா? கொல்மா படமா? - சினிமா விமர்சனம்

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/10748_17_Mittai.jpg 

ஒரு பெண் ஒரே சமயத்தில் 2  ஆண்களை காதலிப்பதும், பின் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்வதும் தான் இந்தப்படத்தின் சர்ச்சைக்குரிய கதை என்று இந்தப்படத்தின் இயக்குநர் மீடியாக்ளில் கொளுத்திப்போட்டார். நம்ம ஆளுங்க உடனே அது ஒரு கில்மாப்படமா இருக்கும்னு ஆர்வமா வெயிட்டிங்க். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சோ, பெண்ணியவாதிகளின் எதிர்ப்போ தெரில இயக்குநர் கதையை மாத்திட்டார் போல. 

பட ஷூட்டிங்க் நடக்கும்போது கூட ஹீரோயின் மணக்கோலத்தில் இரு ஆண்களுடன் மண மேடையில் இருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. ஆனால் எல்லாம் டுபாக்கூர். 

இப்போ ரிலீஸ் ஆன பின்னாடி படத்தோட கதை என்ன? 2 ஃபிரண்ட்ஸ், ஒருத்தன் ஒரு ஃபிகரை லவ்வறான், இன்னொருத்தன் படிக்காம அடிதடில சுத்திட்டு இருக்கான்,அவனை திருத்தறதுக்காக யாரோ ஒரு பொண்ணு எழுதற மாதிரி ஒரு ஃபோர்ஜரி லெட்டர் அனுப்பறான்.அதுல நீங்க நல்லா படிச்சு பெரிய ஆள் ஆகனும், அதுக்கப்புறம்தான் நாம் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு இருக்கு.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4LeJxgfG7qWoO2og9wbV9E1ioEP-YgGhSp-6U2x8URxaEugvfuEo4MIfVJhSsA_MqIwgR1P30tSPNwZFkl-QTUd3uz5wnKU9fdFh1gGYmiwZItntNwv8iB4rpbbAyU2uh0vyeheS9a8A/s400/mittai__5_.jpg
உடனே அவன் நல்லா படிச்சு காலேஜ் ஃபர்ஸ்ட் ஆகிடறான். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமா  லெட்டர் அனுப்புன ஃபிகர் தன் நண்பனோட காதலிதான்னு தப்பா நினைச்சுக்கறான்.ஆனா தன் நண்பன் காதலிக்கறது அவனுக்குத்தெரியாது. இதனால என்னென்னெ குழப்பம் வருதுங்கறதை முடிஞ்ச வரை பொறுமையை சோதிக்க வைக்கும் மகா மட்டமான திரைக்கதை உதவியுடன் இயக்குநர் போட்டு சொதப்பி எடுத்த படம் தான் மிட்டாய்.. 

டைட்டில் போடறப்ப  சன் நியூஸ் டி வி  ல வர்ற மாதிரி ஸ்க்ரீன்ல காட்டி டெக்னீஷியன் நேம் எல்லாம் போடும்போது ஆஹா , நல்லா புதுசா சிந்திக்கற இயக்குநர் கிடைச்சுட்டார்னு சந்தோஷப்படறோம்.. படம் போட்ட 4 வது ரீல்லயே வார்னிங்க் அலாரம் அடிக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

படத்துல வர்ற 2 ஹீரோக்களூமே ஏன் தாடியோட வர்றாங்கன்னு தெரில, அவங்க கேரக்டர்  மாதிரியே தாடியும்  கேவலமா இருக்கு. ஹீரோயின்  ஓக்கே, தேறிடும், ஆனா அவர் உதடு மகா மைனஸ். இதுல அடிக்கடி அந்த உதட்டை சில்க் ஸ்மிதா மாதிரி சுழிக்கறாரு. ஹய்யோ ஹய்யோ..

http://www.myfirstshow.com/img/2524_mittai_hori-11.gif-galleryimages-l.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. எதுக்காக இங்க்கை என் மேல தெளிச்சே?

ஒரு பேனாவை சுட்டேன்,அதுல இங்க் இருக்கா?ன்னு செக் பண்ணுனேன்.

2.  காலேஜ் லெக்சரர் - முந்தி எல்லாம் நான் இருக்கற இடம்  தேடி வந்து டவுட்ஸ் கேட்பாங்க. இப்போ அவனுங்க இருக்கற இடம் தேடிப்போய் அட்டெண்டென்ஸ் எடுக்க வேண்டி இருக்கு..

3.  காலேஜ் லெக்சரர் - தம்பிகளா! கூச்சப்படாம  க்ளாஸ் வந்தா பாடம் எடுப்பேன் இல்ல! தயவு செஞ்சு வாங்கப்பா. 

 போர் அடிச்சா நாங்களே வருவோம் இல்ல? போங்க சார் வர்றோம்.

4.  மிஸ்! உங்க பேரு?

சொல்ல மாட்டேன், சொன்னா பூஜா அங்கே வா காபி சாப்பிடலாம், இங்கே வா பூஜா , பீஜ் போலாம்னு கூப்பிடுவீங்க. 

அப்போ. உங்க பேரு பூஜா தானே?  ( கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு. )

அய்யய்யோ. நானே உளறிட்டனா? ( ஆமாண்டி, பேக்குகள் எப்பவும் அப்படித்தான். )

5. படிக்காதவனைக்கூட காலேஜ்ல வெச்சுக்கலாம், ஆனா கொலைகாரனை வெச்சுக்கவே முடியாதுங்க. சாரி. பெத்த பிள்ளைக்காக நீங்க ஆர்கியூ பண்றீங்க, நான் மத்த  பையன்களுக்காக பார்க்கறேன். 

6. சாரிடா. நான் இப்போ குடிக்கறது இல்ல. 

என்னடா  ஆச்சு?

புரில, ? அண்ணன் இப்போ லவ்ல விழுந்துட்டார்,.,. 

7. சார்.. லீவ் வேணும்.. 

காலேஜ்க்கு வாரம் ஒரு தடவைதான் வர்றே. அதுல ஆஃப் டே லீவ் கேட்டா எப்படி?

8.  உன் மனசு எனக்கு பிடிச்சிருக்கு, கேட்டா தருவியோ, மாட்டியோ அதான் நானே எடுத்துக்கிட்டேன்.

9. க்ளாஸ் எப்போ முடியும்?

மணி அடிச்சா.. 


டேய் மணி அவரை அடிடா 


10.  லவ் ஸ்டார்ட் ஆகறப்ப பேரண்ட்ஸ்கிட்டசொல்லாம இருந்தா அது தப்பில்லை, ஆனா லவ் கண்டிநியூ  ஆகறப்பவும் அவன் சொல்லலைன்னா ஃபிராடுன்னு அர்த்தம்


http://www.filmics.com/gallery/d/20789-1/Mittai-Movie-Stills37.jpg


11.பொண்ணுங்க ஐ லவ் யூ சொல்ற வரை அவங்களை துரத்தி துரத்தி லவ் பண்ற பசங்க அவ OK சொன்ன பிறகு கண்டுக்காம இருக்கறதுல ஒரு உளவியல் காரணம் இருக்கு

சரி.. என்ன பண்ணனும்கறே?

டெயிலி ஃபோன் பண்ணனும், பார்க்கும்போதெல்லாம் கிஸ் பண்ணனும்..


12.  சுந்தரி. சுடிதார்ல நீ சூப்பரா இருக்கே.

நாயே.. அவ போட்டிருக்கற்து ஜீன்ஸ்ம் டாப்ஸூம்.

13.  வா மீட் பண்ணலாம்னு லவ்வர் கூப்பிட்டா போயிடாதீங்க பொண்ணுங்களே. வாமிட் பண்ண வெச்சுடுவானுங்க..  ( ஆனந்த விகடன் ஜோக் 2009 பை சி.  பி )

14.  நான் போய் என் ஆளை மீட் பண்ணப்போறேன்..

நாங்களூம் வர்றோம்டா.

நானே இப்போத்தான் அவளை முத முறையா மீட் பண்ணப்போறேன்.. உங்க முகரை எல்லாம் பார்த்தா அவ பயந்துடுவா..

15.  சரி.. விடுங்கடா. அவன் கூடப்போனாத்த்னே தப்பு..? அவனை ஃபாலோ பண்ணிட்டு போவோம்.

16. காதலுக்கு பர்சனாலிட்டி கூட அவ்வளவு முக்கியம் இல்லை, பங்க்சுவாலிட்டி தான் ரொம்ப முக்கியம்..


17. சரி.. நான் வேணா அவ கிட்டே நூல் விடவா?

நீ நூலும் விட வேணாம்.. .....................

டேய்.....!!!!!!!!!

பட்டமும் விட வேண்டாம்னு சொல்ல வந்தேன்..  ( இவ்வளவு மோசமான டபுள் மீனிங்க்  வசனம் உள்ள படம் எப்படி யூ சர்ட்டிஃபிகேட் வாங்குச்சு? )

18. தான் காதலிக்கற பையன் மற்றவங்களை விட பெஸ்ட்டா இருக்கனும்னு ஒவ்வொரு பொண்ணும் நினைச்சா எப்படி?

19.  காதலி கொடுக்கற கிஃப்ட்டை எந்த மடையன் தன் நண்பனுக்கு கொடுப்பான்?

20. புத்திசாலித்தனமாக ஆரம்பித்து முட்டாள் தனமாக முடிகின்றன காதல் திருமணங்கள்


http://www.filmics.com/gallery/d/20765-1/Mittai-Movie-Stills24.jpg

21. ஏமாற்றத்தையும், தோல்வியையும் தாங்கிக்கற சக்தி உள்ளவங்க மட்டும் காதலிங்கப்பா

22.  ஒரு ஃபிரண்டுக்கு பிரச்சனைன்னா காதலியையே கை நீட்டி அடிக்கிற நீ காதலிக்கே பிரச்சனைனா என்ன செய்வே? ( இதென்ன லாஜிக் இல்லா கேள்வி? ஃபிரண்டை அடிப்பான். )

23.  வர்லைன்னு நான் வருத்தப்பட்டாலும், வர முடியலைன்னு நீ வருத்தப்பட்டாலும் அது காதலுக்கு அழகா?

24.  ஒரு பொண்ணு அப்பா கிட்டே தனியா பேசணும்ப்பா அப்டின்னாலே அது லவ் மேட்டராத்தான் இருக்கும்மா.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ‘மண்ணுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் அன்பு.


இவருடைய இரண்டாவது படம்தான் இந்த ‘மிட்டாய்’. இப்படத்தில் இரு சந்தோஷ், பிரபா என இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் கேரளத்து அழகியான மாயா உன்னி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 http://3.bp.blogspot.com/_Zk6F7-r115Q/S6IwTmVU6bI/AAAAAAAACW0/Qom35gffJBk/s400/tamil-actress-maya-unni-in-saree-stills_actressinsareephotos.blogspot.com_32.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. டைட்டில் டிசைனும், ஒவ்வொரு தொழில் நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்திய கண்ணியம் மிக்க மரியாதை சொற்களும் அழகு. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டரை கார மிட்டாய் எனவும், ஹீரோயினை ஸ்வீட் மிட்டாய் எனவும் குறிப்பிட்டது.

2. ஓப்பனிங்க் சாங்கில் ஹீரோவை ஒயிட் & பிளாக்கில் மற்ற நடன குழுவை கலரில் பின் நடன குழுவை  ஒயிட் & பிளாக்கில், ஹீரோவை கலரில் என ஒளிப்பதிவில் ரசிக்க  வைக்கும்  ஜாலம்

3. காலேஜ் பஸ்ஸில் வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே. பாட்டை அதகளப்படுத்தியது.

4.  போஸ்டர் டிசைனும் , தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டில்ஸூம்

http://www.filmics.com/gallery/d/21336-1/Actress-Maya-Unni-latest-Stills10.jpg


இயக்குநரிடம்  பல கேள்விகள்

1. ஹீரோயின் ஹீரோவை வண்டில வந்து மோதறப்ப ஹீரோ கைல இருக்கற கிளிக்கூண்டு எகிறி விழற மாதிரி சீன் எடுக்கனும்.  நிந்த சீன்ல ஹீரோ தன் கைல இருந்து கிளீக்கூண்டை அவரே வீசற மாதிரி அப்பட்டமா இருக்கு..

2.  லவ் சீன்களில் ஹீரோயின் கிட்டே ஒரு வெட்கம், நளினம் ,இத்யாதிகளை பார்க்கவே முடியலை.. வந்து பக்கத்துல உக்காருன்னா பாப்பா படுத்துக்கும்போல. அட்வான்ஸ்டு கேர்ள் போல.

3.  கடலோரக்கவிதைகள் பட பாடல் ஆன அடி ஆத்தாடி இள மனசொன்னு பாட்டை எத்தனை படத்துல ரீ மிக்ஸ் பண்ணுவீங்க?

4.  முதன் முதலா காதலி மீட் பண்ண வர்றதா சொன்ன இடத்துக்கு வர்லைன்னு ஆனதும் காதலன் என்னமோ உலகமே அழிஞ்ச மாதிரி அப்டி ஒரு ஃபீலிங்க் குடுக்கறாரு,. பின்னணி இசைல  ஊருக்கே இழவு விழுந்த மாதிரி அப்டி ஒரு அநியாய சோகம்..

5. எக்ஸாம் எழுதும்போது ஹீரோ கை விரல்களை க்ளோசப் ஷாட்ல காட்றாங்க. அண்ணன் நகங்களை வெட்டாம ஃபுல்  அழுக்கோட நகங்களை மெயிண்டெயின் பண்ணாம வெச்சிருக்காரு. இதைக்கூட ஒளிப்பதிவாளர் கவனிக்க மாட்டாரா?அதை இயக்குநர் சரி பண்ணக்கூடாதா?

6. காலேஜ்க்கு வர்ற 1789 ஸ்டூடண்ட்ஸூம் சாதா சர்ட் போட்டுட்டு வர்றாங்க, ஆனா ஒவ்வொரு ஷாட்லயும் ஹீரோ மட்டும் டி சர்ட்  தான்  போடறார்,. அது ஏன்?

http://lh4.ggpht.com/_561gP6TDhvA/S23TR9uL_0I/AAAAAAAAi-U/aK5kTrd6VPg/actress.maya-unni.mitaai-movie-stills-002.jpg

7. காலேஜ் லேப்ல ஹீரோ கலாட்டா பண்றப்ப பொண்ணுங்க எல்லாம் பயந்து ஓடற மாதிரி சீன்ல எதுக்கு குறுக்கே , நெடுக்கே என்னமோ ஜப்பான்ல பூகம்பம் வந்த மாதிரி ஆளுங்க போய்ட்டும் வந்துட்டும் இருக்காங்க?

8.  ஹீரோயின் எழுதுன லெட்டரை ஹீரோ படிக்கறப்ப எதுக்கு ஊரையே தூக்கிட்டு போற மாதிரி ஹம்மிங்க்? வசனமே புரியலையே?

9. அதே மாதிரி இடைவேளை முடிஞ்ச பின்னால் விஜயகுமார் தன் மகன் பற்றி புலம்பும் காட்சில ஓவர் சத்தத்துல பின்னணி இசை. சோகம் வரலை நமக்கு , எரிச்சல்தான் வருது.

10.  தேவதையே நீ சூறாவளியா? தீபாவளியா? பாடல் வரிகள் ஏற்கனவே விஜய்யின்  தீபாவளி  தீபாவளி  நீ தாண்டி சூறாவளி சூறாவளி நான் தாண்டி பாடலில் வந்தவை தான்..

11. சின்னத்தம்பி குஷ்பூ மாதிரி ஹீரோ பாட்டில்களை அறை முழுது உடைத்துப்போட்டு நடந்து காலில் ரத்தக்களறி ஆவதெல்லாம் ஓவர்.. அடுத்த நிமிஷமே காலில் ரெண்டே இன்ச்சுக்கு பிளாஸ்திரி.. ஹய்யோ ஹய்யோ..

12.  காதல் படம் எடுக்கற எல்லா இயக்குநர்களும் கத்துக்க வேண்டிய முதல் பாடம் காதலை நண்பனுக்கு தாரை வார்த்து தர்ற மாதிரி சீன் வெச்சா நம்பற மாதிரி காட்டுங்க. சொதப்பாதீங்க..

13. க்ளைமாக்ஸ் செம சொதப்பல்.. ஹீரோயின் 2 பேருக்கும் இல்லை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதுல அக்கா பக்கம் பக்கமா டயலாக் வேற பேசுது..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1xmHodrwjtZZpCiIyT00kxTOx2YC9q4kcog3yvC4-OxYML1594IHofGndwebyCgw7J-yISmpA5kamx34P778lOY2ehmfwfbf6Ji6tzTA2OtzhfTkEBfyidqm3xQaIP1v5YulMWilx70CH/s1600/malayalam%25252Bactress%25252BVishnupriya%25252BWallpapers.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் தான் தாங்கும்..
ஈரோடு சங்கீதா வில் படம் பார்த்தேன்.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி  கமெண்ட் - அய்யய்யோ...!!!!!!!!!!!!!!

கலைஞருக்கு ஜெ பகிரங்க அழைப்பு ! தி முக திகைப்பு!!!!!!!!!!!

1.பிரதமருக்கு தமிழே தெரியாது, ஆனா திருக்குறள் புக்கை கைல வெச்சிருக்காரே?

அவர் கிட்டே அதிகாரமே இல்லைன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்களாம் #133

-------------------------------

2. தலைவரே!நான்,நீங்க,உங்க சம்சாரம் 3 பேருதான் கட்சில இருக்கோம், எதுக்கு 3வது அணின்னு பில்டப்? மூவர் அணின்னு சொன்னா போதாதா?

--------------------------

3.  மிஸ் ஜிகினா ஸ்ரீ,ஆகஸ்ட் 15 வெளில எங்கேயும் வர மாட்டீங்களாமே? ஏன்?

சுதந்திர தினத்தை வீட்டுக்குள்ளேயே ”சுதந்திரமா” கொண்டாட முடிவெடுத்துட்டேன்

-------------------------------


4.  காந்தி கண்ட கனவை  த்ரிஷா,ஸ்ரேயா தான் நிறைவேத்துறாங்களா? எப்படி?

பார்ட்டி முடிச்சுட்டு மிட்நைட்ல தைரியமா மவுண்ட்ரோட்ல தனியா வர்றாங்களே?

---------------------------

5. விஜய்காந்த் ஏன் ஜெவை பற்றி விமர்சிக்கறதே இல்லை?

அப்டி செஞ்சா அவரோட டப்பா படமான அரசாங்கம் பற்றித்தான் சொல்றதா யாராவது நினச்சுட்டா?

--------------------------



6.பகுத்தறிவுப்பகலவர் தலைவர் கலைஞர் தில் இருந்தால் கேரளா சென்று பத்மநாபா கோயில் 6 வது அறையை திறக்கவும் - ஜெ பகிரங்க அழைப்பு @ இமேஜினேஷன்


---------------------------

7. யார் வேண்டுமானாலும் என் மீது அன்பு செலுத்தி விட முடியும், ஆனால் உன் போல் அன்பை அப்படியே ஊற்றி விட முடியாது

---------------------


8. அன்பு தான் இந்த உலகை ஆட்சி செய்கிறது, நீ என் உலகம். நான் உன் அன்பு

--------------------

9. மேரேஜ்க்குப்பிறகு மாப்ளை ரொம்ப மாறிட்டரா?


முதல்ல எல்லாம்  மப்புல நடு ரோட்ல விழுந்து கிடப்பாரு, இப்போ பொறுப்பா பிளாட்ஃபார்ம்ல கிடக்காரே?

------------------------

10. தலைவரே!என்கொயரி கமிஷன் ஆஃபீசர் வந்திருக்காங்க.

என்னய்யா அநியாயம் இது? என்கொயரியும் பண்ணிட்டு என் கிட்டேயே கமிஷன்ம் வாங்கிக்குவாங்களா?

--------------------



11. சினிமாவை விட விளம்பரங்கள்ல தான் ரசிகர்கள் டெயிலி என் முகத்தை ரசிக்கறாங்க. -அனுஷ்கா # முகத்தையா? தேகத்தையா? டவுட்டு

------------------

12. தலைவருக்கு தமிழ்க்குடிமகன்னு ஏன் பட்டப்பேரு?

இனிமே சரக்கு அடிக்க மாட்டாராம், கள் மட்டும் தானாம்.


---------------------

13.  உங்க படத்துக்கு ஏன் யூ அப்டின்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?  யூத்னு அர்த்தமா?


ஏ படங்களுக்கு வரி விலக்கு இல்லையாம், அதான்

-----------------------

14. சாந்திங்கற ஃபிகரை கல்யாணம் பண்ணினவங்களுக்கு மட்டும் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு நினைக்கறவன் தான் உலகமகா அப்பாவி # மஞ்சமாக்கான் ஸ்டேட்மெண்ட்

-------------------------

15. உன் காதலி ஃபோன் நெம்பருக்கு எப்போ ட்ரை பண்ணாலும் கிடைக்கறதே இல்லை, பிஸின்னே வருது..

ஹூம், அவ எனக்கே கிடைக்கறது இல்லை..

-----------------------


hansika motwani indian
Hansika-Motwani-New-photos-from-latest-movie-0gfc01.jpg (700×861)

16. நில மோசடித்திட்டத்துல பாரதியார் பேரும் இருக்கே? தலைவரே?

காணி நிலம் வேணும்னு பாடுனாரே?

-------------------------

17.உனக்கு நான் அறிமுகம் ஆன தினத்திலிருந்து ஒரு நாள் கூட  நீ என்னை நினைக்காமல் இருந்ததில்லை என்றே நான் கற்பனை செய்து கொள்கிறேன்

-------------------


18. டியர், டெயிலி ஒரு ரிங்க்  கிஃப்டா தருவேன்னு லவ் பண்றப்ப சொன்னீங்களே?

ஆமா, நான் சர்க்கஸ்ல ரிங்க் மாஸ்டர், அந்த ரிங்கை சொன்னேன்.

-----------------------


19. என்னை மறந்து விடு என்று நீ சொன்ன ஆணையை புறக்கணிக்கிறேன், உன் மனம் மாறும் என்றே கணிக்கிறேன்

---------------------



20. உன்னை விட உயர்ந்தது உலகில் ஏதும் இல்லை என்றே நினைத்திருந்தேன், உன் கண்களில் கண்ணீரைக்காணும் வரை

---------------------







Thursday, August 18, 2011

கனிமொழி சவால் ‍‍ நான் ஸ்டேட்மெண்ட் கொடுத்தா எல்லாருக்கும் செட்டில்மெண்ட் தான்

நான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது!

கம்பிகளுக்குள் கர்ஜிக்கும் கனிமொழி


100-வது நாள் நெருங்குகிறது. 'குற்றச் சதிக்கு உடந்தை’ எனச் சொல்லி, கடந்த மே மாதம் 21-ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் வளைக்கப்பட்ட கனிமொழிக்கு இன்று வரை பெயில் கிடைக்கவில்லை.

சி பி  - அப்பா கிட்டே இருந்து உயிலும் வரலை, கோர்ட்டிலிருந்து பெயிலும் தரலை.

தந்தையின் தவிப்பு, தாயின் போராட்டம், கணவரின் கையறு நிலை எனக் கம்பிகளுக்குப் பின்னால்  கனிமொழியின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த பாசப் போராட்டம் ஒருபுறம் என்றால், கட்சியில் அவருக்கான இடம் என்ன என்கிற போராட்டத்துக்கும் குறைவு இல்லை.


 சி.பி‍‍‍ ‍‍: கணவர்தான் கைவிட்டுட்டார்னா...., 


பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளைக்கூட தன்னைச் சுற்றி அனுமதிக்காத கனிமொழி, 15-க்கு 10 என்கிற சிறு அறைக்குள் இத்தனை நாட்களைக் கடந்ததே பெரிய ஆச்சர்யம். கனிமொழி அடைக்கப்பட்டு உள்ள 8-ம் எண் அறையில், ஏ.சி. வசதி இல்லை. மூன்று பக்கமும் சுவர், முகப்பில் கம்பி வலை என்பதால் எப்போதும் அந்த அறை புழுக்கமாக இருக்கும். ஒற்றைக் காற்றாடி... அதில் இருந்து காற்று வருகிறதோ இல்லையோ... கடுமையான சத்தம் வருகிறதாம். புத்தகம் படிப்பதற்கு அந்தச் சத்தம் மிகுந்த இடைஞ்சலாக இருப்பதால், காற்றாடியைப் பெரும்பாலான நேரங்களில் கனிமொழி பயன்படுத்துவது இல்லை.

 சி.பி‍: நாட்டுக்காக போராடுன தியாகி சிறையில் ரொம்ப சிரமப்படுறாங்க! உப்பை தின்னவன் தண்ணிக்குடிக்கனும், தப்பை செஞ்சவன் களி சாப்பிடனும்.







இரவு 11 மணிக்குத் தூங்கி, காலை 5.30 மணிக்கு எழுவது வழக்கம். சில நாட்களில் மட்டும் இரவு 1 மணி வரை வாசிப்பு, எழுத்து எனக் கழிகிறதாம். மிக முக்கிய ஆட்களுக்கு இதர கைதிகளால் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க போலீஸார் நியமிக்கப்படுவது திகாரின் வழக்கம். கனிமொழிக்கு 24 மணி நேரமும் இந்த கண்காணிப்புத் தொடர்கிறது.

 சி.பி: கனிமொழிக்கு இருக்குற கண்கானிப்பு அவங்க பாதுப்புக்காக இருக்குற மாதிரி தெரியலை. ஜெயிலுக்குள்ள அவங்களுக்கு "வேண்டியப்பட்டவங்க" யாரையும் போய் பார்த்துடக் கூடாதுனுதான் போல இருக்கு.


பக்கத்து அறைகளில் இருக்கும் பெண் கைதிகளிடம் பேச, கனிமொழிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் சிக்கிய உளவு அதிகாரி மாதுரி குப்தா, கனிமொழிக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதற்குப் பக்கத்து அறையில் டெல்லி கவுன்சிலரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற பெண்.


சி.பி ‍ - அடடா!! கொள்ளைக்கார குற்றவாளியை சுற்றி கொலைகாரக் குற்றவாளிகள்!!!! 

திகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கனிமொழியுடன் பேச அவ்வளவு ஆர்வம். கனிமொழியிடம் கோரிக்கை மனு கொடுத்து கண்ணைக் கசக்கி இருக்கிறார் ஒரு பெண். இதனாலேயே, அடிக்கடி இந்தப் பெண் கைதிகளோடு உரையாடுவதும், அவர்கள் மேற்கொள்ளும் சுய தொழில் பயிற்சிகளைச் செய்து  பார்ப்பதும் கனிமொழியின் பொழுதுபோக்கு!


சி.பி : அப்பாவுக்கும் ,பிள்ளைக்கும் இருக்கற தமிழ் ஆர்வம் புல்லரிக்க வைக்குதே?

ஜெயிலுக்கு வந்த புதிதில், மூன்று வேளையுமே வெளியே இருந்து வந்த உணவுகளையே சாப்பிட்ட கனிமொழி, இப்போது வெளி உணவுகளைப் பெரும்பா லும் தவிர்த்துவிடுகிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடும் வழக்கம்கொண்டவர் கனிமொழி. ஆனால், மாலை 6 மணிக்கே இரவு உணவை ஜெயிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனாலேயே பல நாட்கள் இரவு உணவை கட் செய்துவிடுகிறார் கனிமொழி. ஆ.ராசாவின் மனைவி மூலமாக ஸ்பெஷல் சாப்பாடு எப்போதாவது வருகிறது. துணி மணிகள் சரத்தின் சகோதரி மூலமாக கனிக்குக் கிடைக்கிறது.


சி.பி ‍ : ஸ்பெஷல் மீல்ஸ் ஃப்ரம் ஸ்பெசல் பர்சன்

டெல்லியில் இப்போதுதான் மழை சீஸன் தொடங்குகிறது. அதனால், அந்த அறைக்குள் அநியாயப் புழுக்கம் நிலவுகிறதாம். ஆனால், அதிகாலையில் கடுமையாகக் குளிர் அடிக்கிறதாம். இந்த சூழல் மாற்றமும் கொசுக் கடியும் கனிமொழியைப் படுத்தி எடுப்பதாகச் சொல்கிறார்கள்.


சி.பி ‍: எத்தனையோ இலங்கைத்தமிழர்கள் வாழ்வு புழுக்கத்தில் இருக்க காரணமாக இருந்த குடும்பத்தில் இருந்தவர் இப்போது செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கிறார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு?  


கோர்ட் விசாரணை நடக்கும் நாட்களில்தான் கனிமொழியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறதாம். திகாரில் இருந்து பாட்டியாலா வரும் வழியில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் இருப்பதால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸார்தான் கனிமொழியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களோடு மிகுந்த உற்சாகமாகப் பேசிச் சிரித்தபடி கோர்ட்டுக்கு வரும் கனிமொழி, அங்கே காத்திருக்கும் உறவினர்களைப் பார்த்ததும் உற்சாகமாகிறார். பல நாட்கள் டெல்லியிலேயேதங்கி இருந்த கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள், உடல் நலக் கோளாறால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். தி.மு.க- வின் மகளிர் அணி நிர்வாகிகளும் எம்.பி-க் களும்தான் அடிக்கடி கனிமொழியைச் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்கள். பாட்டியாலா கோர்ட் அறைகளில் முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருப்பதால், விசாரணை இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என ஏக்கமோடு பார்ப்பார்களாம் கனி உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் புள்ளிகள்.

 சி.பி ‍: ஸ்பெக்ட்ரம் புள்ளிகளா? கரும் புள்ளிகளா?

ஆரம்பத்தில் கருணாநிதி தொடங்கி சகோதரி செல்வி வரையிலான அத்தனை சொந்தங்களும் டெல்லிக்கு வந்து கனிமொழியைச் சந்தித்தார்கள்; கட்டித் தழுவிக் கதறினார்கள். ஆனால், இப்போது மனைவி காந்தியுடன் டெல்லியிலேயே இருக்கும் அழகிரிகூட, கனிமொழியைக் காணச் செல்லவில்லை.


சி.பி ‍: யாரெல்லாம் கனிமொழியை சந்திக்கறாங்களோ, அவங்களை எல்லாம் நோட் பண்ணி வை, அவங்களையும் உள்ளெ தள்ளிடலாம்னு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததோ என்னவோ? 


'கட்சி நினைத்திருந்தால், நிச்சயம் என்னைக் காப்பாற்றி இருக்கலாம்’ என ஆரம்பத்தில் ஆதங்கப்பட்ட கனிமொழி, இப்போது தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது குறித்துப் பேசுவதே இல்லை.


 சி.பி ‍: கட்சியையே காப்பாற்ற முடியாம கிடக்கு, இதுல கட்சி எப்படிம்மா உங்களை காப்பாற்றும்?நீச்சல் தெரியாதவன் முழுகிட்டு இருக்கறப்ப  அவன் அவனையே காப்பாத்த முடியாது, அவன் மற்றவர்களை காப்பாற்றுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?


மாறாக, தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறார். தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி இழுபறி, அதிரடிக் கைதுகள்பற்றி எல்லாம் பேசி, 'அம்மையார் ஆட்சியில் இதெல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்’ எனச் சிரிக்கிறார்.

சி.பி ‍: தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறாரா? அதாவது நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு எல்லாம் கேட்டிருக்க மாட்டார்,, கோவை பொதுக்கொழுவுல என்ன முடிவாச்சு? ஸ்டாலின் , அழகிரி 2 பேர்ல யார் இப்போ லீடிங்க.. அப்டி விசாரிச்சிருப்பாரு.. நாம எந்தக்காலத்துல மக்களை நினைச்சு கவலைப்பட்டோம்?




''பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தபோதுதான் கனிமொழியைப் பார்த்தேன். ஆதங்கம், வேதனை, குற்றச்சாட்டு என அவரிடம் இருந்து சிறு வார்த்தைகூடப் புலம்பலாக வெளிப்படவில்லை. சில விஷயங்கள் குறித்துப் பேசியபோது, சத்தம்போட்டுச் சிரித்தார். 2ஜி விவகாரம் குறித்துக் கேட்டபோது, 'கலைஞர் டி.வி-க்காக 200 கோடி வாங்கப்பட்டதுபற்றி எனக்கு அறவே தெரியாது. அதுபற்றி எல்லாம் நான் சொன்னால், இப்போ யார் நம்புவாங்க? ஸ்பெக்ட்ரம்பற்றி நான் வாய் திறந்தால் நிச்சயம் யாராலும் தாங்க முடியாது.

 சி.பி ‍: ஆமா, ஏற்கனவே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தொகையை கேட்டே பலரால் தாங்க முடியலை, இதுல இவர் வேற புதுசா எதையாவது உளறி பிரச்சனையை கொண்டாந்திட‌ப்போறாரு.. கண்டு பிடிச்சது கடுகளவு, கமுக்கமா அமுக்குனது கடல் அளவுன்னு.. சொல்லிடப்போறாரு..

ஆனால், அது மீடியாக்களுக்குத்தான் தீனியாக இருக்குமே தவிர, கட்சிக்கு நல்லதா இருக்காது’னு சொன்னார். இந்த அளவுக்குப் படுபக்குவமான பேச்சை கனியிடம் இருந்து நான் இது வரைக்கும் கேட்டது இல்லை!'' என்கிறார் சமீபத்தில் கனியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக அரசியல் புள்ளி.



சி.பி ‍: அடிங்கொய்யால.. இதுதான் பக்குவமான பேச்சா?பச்சோந்தித்தனமான பேச்சு..  


''ஸ்பெக்ட்ரம் வழக்கில் பலரை நோக்கியும் கை காட்டச் சொல்லி தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே கனிமொழியைத் தூண்டினார்கள். இது தெரிந்துதான் திடீரென இரண்டாவது முறையாக டெல்லி வந்து கனிமொழியைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். 'கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன்’ என ஸ்டாலினிடம் உறுதி சொன்னார் கனிமொழி.



சி.பி ‍: ச்சே.. அண்ணன் , தங்கை 2 பேரும் கூடி காட்டிக்கொடுக்கறதைப்பற்றித்தான் பேசுனாங்களா? அது சரி.. 

அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் சாதாரணமானவை அல்ல. ராஜ்யசபா எம்.பி. என்கிற பதவியைத் தவிர, கட்சியில் கனிமொழிக்கு வேறு பதவி இல்லை. கனியின் இடம் இது தான் எனக் கட்சியில் சிறப்பு அங்கீகாரத்தை அவருக்கு ஸ்டாலினே வாங்கிக் கொடுப்பார் பாருங்கள். கனியோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்த செல்வி, இப்போது அடிக்கடி தங்கையின் நிலையை நினைத்து அடிக்கடி தழுதழுக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றங் களைவைத்தே மகளுக்கான மகுடத்தை கருணாநிதி கச்சிதமாகச் சூட்டுவார்!'' என்கிறார்கள் தி.மு.க-வின் டெல்லி புள்ளிகள்.



சி.பி ‍: பெரிய பதவி இல்லாதப்பவே இவ்வளவு அமுக்குனவரு, பதவி கொடுத்துட்டா எவ்வள‌வு அமுக்குவாரு? 


சிறப்பு நீதிமன்றத்துக்குச் சமீபத்தில் அழைத்து வரப்பட்டார் கனிமொழி. அன்றைய தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய, நீதிபதியோடு அதிகாரபூர்வமற்ற முறையில் தனியாக மனம் திறந்து பேசுகிற சந்தர்ப்பம் கனிமொழிக்குக் கிடைத்தது. ''கலைஞர் டி.வி-க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அங்கே என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுபற்றி எல்லாம் எனக்குத் தெரியாது!'' எனச் சொன்னார் கனிமொழி. நீதிபதியின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் எத்தகைய விளைவை உண்டாக்கினவோ?!

 சி.பி ‍: நல்ல வேளை , கலைஞர் டி விக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாரு, அந்த ஸ்டேட்மெண்ட்ல டி வி மட்டும் கட் ஆகி இருந்திருந்தா..!!!!!!!?????

கலைஞர் டி.வி. முடக்கம், இன்னும் சில கைதுகள் என்றெல்லாம் அரங்கேறிய பிறகே, கனிமொழி வெளியே வருவது சாத்தியம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.



கனிமொழி கைது செய்யப்படப்போவதாக மீடியாக்களில் பரபரப்பு கிளம்பிய வேளையில், அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சொன்ன விளக்கம்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...


''நடக்காது என நினைத்த எல்லாமும் நடக்கிறது. நான் கைதாகப்போவதாகக் கிளம்பும் பரபரப்பும் அப்படியே அமையட்டும். ஆரம்பத்தில் அரசியல் ஆர்வமே இல்லாமல் இருந்த என்னைச் சுற்றி இன்றைக்கு இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது. இந்த விசித்திரத்தை நினைத்துச் சிரிப்பதா... அழுவதா?''



சி.பி ‍: நீங்க அழுங்க, மக்கள் உங்களைப்பார்த்து சிரிக்கட்டும்..  


தன் - vikatan

கைப்புள்ளயின் காதல்

Just for Smile.....
3352909583_17cb8e6888_o.jpg


1. டியர், முந்நூற்று நாப்பத்தி ஒண்ணுன்னு ஏன் என்னை கூப்பிடறே?

டேய் லூசு, நீதானே என்கிட்டே 143 சொல்லி என்னை திருப்பி சொல்லச்சொன்னே?

---------------------------

2. மேரேஜ்க்கு முன் குண்டாஇருந்த நீ ஒல்லி ஆகிட்டே, ஒல்லியா இருந்த உன் சம்சாரம் குண்டாகிட்டா!ஏன்?

சக்தி ட்ரான்ஸ்ஃபர் ஆகுதுன்னு நினைக்கிறேன்.


------------------------------

3. சதீஷ்,என்னைத்தவிர வேற யாரையும் நீ தொட்டதில்லையே?


ச்சே ! ச்சே! மீறித்தொட்டாக்கூட மனசுக்குள்ளே உன்னை நினச்சுக்கறேன்,ஓக்கே?

------------------------

 Most Beautiful amazing Places arround World





4.  மாப்ளே! ஆடி மாசம் முடியற வரை என் பொண்ணை பார்க்க வராதீங்க!

மாமா!மொத பொண்ணுக்குத்தானே தாலி கட்டி இருக்கேன், பாக்கி 3 பொண்ணுங்களை பார்க்க வரலாம்தானே?

----------------------------

5. என் இடுப்புல ஒரு அதிர்ஷ்ட மச்சம் இருக்கறதை கரெக்ட்டா ஜோசியர் சொல்லிட்டார்.

அடியே, முதல்ல நீ சேலை லோ ஹிப்ல கட்டறதை நிறுத்திட்டு சுடிதார் போடு.


--------------------

6.  மாசாமாசம் உங்க சம்சாரம் கிட்டே சம்பளம் ரூ 5000 வாங்கிக்கறீங்களே,எதுக்கு?

அவ சேலை துணிமணிகளை துவைச்சுப்போட்டு அவளை ஆஃபீஸ்க்கு டிராப் பண்றேனே?

-------------------------------





7. அத்தான், நான் கண்ணகி பரம்பரை!


ரொம்ப நல்லதாப்போச்சு, மாதவியை ஏத்துக்கற மனப்பக்குவம் உனக்கு இருக்கும். ஐ லைக் இட்

--------------------------------

8.  ஆண்கள் தவறு செய்யக்காரணம் வெரைட்டியை முன்னிட்டு, பெண்கள் தவறு செய்யாததற்குக்காரணம்  சேஃப்டியை உள்ளிட்டு


----------------------------

9. என் கழுத்துல தாலி எப்போகட்டுவீங்க?

நீ எப்போ கடைக்குப்போய் தாலியை வாங்கிட்டு வந்தாலும் அப்பவே கட்டிடறேன் டியர் # பவுன் விலை ரூ 20000

-----------------------------

10. டியர், லவ் பண்றப்ப நான் செம அழகுன்னு கொஞ்சுவீங்களே?


அது போன மாசம்.. ... # கைப்புள்ளயின் காதல்


Wednesday, August 17, 2011

சாந்தி முகூர்த்தம் VS அழையா விருந்தாளி

1.பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'வெடி' # இந்தப்படம் டைரக்டர், ஹீரோ 2 பேர் மார்க்கெட்டுக்கும் வெடி வைக்க வாழ்த்துக்கள்!!!

----------------------

2. கணக்கை வெறுக்கும் ஸ்டூடண்ட்டின் கடிதம் -

டியர் மேத்ஸ், உன் பிராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ,

அடுத்தவங்களை சார்ந்திருக்காதே!

----------------

3. காயப்படாத இதயம் என்று எதுவும் இல்லை,

எல்லா இதயங்களிலும்  சில காயங்கள் உண்டு

--------------------------

4. தோள் கொடுக்க ஒரு தோழன்,

தோளில் சாய ஒரு தோழி

இவை இரண்டும் வேண்டும் மண்ணில் வாழும் உயிர்க்கு

---------------------------

5. உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் மூலம் மனிதன் நடத்தும் நாடகமே புன்னகை

--------------------------




6. உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் என நாம் நினைச்சுட்டு இருக்கோம்,ஆனா எது நடந்தாலும் கை கட்டிட்டு வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் காரணம்

----------------


7. எல்லா விரல்களும் ஒரே நீளம் அல்ல, ஆனா மடங்கி இருக்கும்போது எல்லாமே ஒரே நீளம். சூழ்நிலைகளைப்பொறுத்து வளைந்து கொடுத்தால் வாழ்வும் சுலபம்

-------------------------

8. ஆண்களுக்கு ஒரு அழகிய அறிவிப்பு - கண்ணுல மண்ணு பட்டாலும், பொண்ணு பட்டாலும் கண்ணில் கண்ணீர் வருவது நிச்சயம் # SMS

--------------------------

9. சாமான்யன் விடுமுறையை ஓய்வெடுத்து கொண்டாடுகிறான், படைப்பாளி படைப்புகள் படைத்துக்கொண்டே கொண்டாடுகிறான்

-----------------------


 

10. பணக்காரன் ஆக 2 வழிகள்

1. நீ என்ன வேணும்னு நினைக்கறியோ எல்லாவற்றையும் அடைவது

2. உனக்கு என்ன கிடைச்சுதோ அதை வெச்சு திருப்தி அடைவது

-------------------

11. ஒரு ஆணின் கனவு, ஒரு பெண்ணின் புன்னகை இவை இரண்டும் உலகில் எதையும் சாதிக்கும் சக்தி படைத்தது

----------------------


12. இனியாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்'- விஜயகாந்த்.# எப்படிங்க உருவாகும்? உங்க பையன் வேற ஹீரோவா நடிக்கறாரே?

------------------------

13. தலைவரே! ஆகஸ்ட் 15 ஏன் கொண்டாடலை?

கலைஞர் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே தம்பி ! என் குடும்பமே  உள்ளே!

-------------------------

14. வாரிசுஅரசியலின் தவிர்க்கமுடியாத உதாரணம் கலைஞர்- ஸ்டாலின்,அழகிரி ,வாரிசு சினிமாவின்  தவிக்க வைக்கும் உதாரணம் விஜய்காந்த்,சண்முகபாண்டியன்

------------------

15. சாந்தி முகூர்த்தம் நைட் 9 டூ 10 நேரம் நல்லாருக்கு...


ஜோசியரே! வெறும் ஒரு மணி நேரம் மட்டும் தானா?

-----------------------------




16.  பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கனும், ஃபோட்டோல தலைல இருந்து கால் செருப்பு வரை தெரியனும்.


அப்போ உன் தலைல செருப்பை வெச்சுக்கிட்டு போஸ் குடு


-------------------------


17. லவ்மேரேஜ் செஞ்சா உங்களுக்கு கிடைப்பது உங்களோட லவ்வர்,அரேஞ்ச்டு மேரேஜ் செஞ்சா உங்களுக்குகிடைப்பது அடுத்தவனோட லவ்வர்,  இது தான் லைஃப் # 2021

--------------------------

18. உலகிலேயே ஆணுக்கு கஷ்டமான விஷயம் தன் முத காதலை காதலியிடம் முதன் முதலில் வெளிப்படுத்தும் தருணம்தான், இஷ்டமான விஷயமும் அதுதான்


--------------------------

19. ஆணை விட பெண் தான் செம சுறு சுறுப்பு, மனசை மாற்றிக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை

-------------------


20. தன்னுடையது, காதலியினுடையது, காதலியின் தோழியினுடையது  ( தூதுக்காக )என 3 செல் பில் கட்ட வேண்டிய கடமை ஒரு காதலனுக்கு இருப்பது கொடுமை

---------------------------------




21. ஆண்களிடம் கலகலப்பாக பேசும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு,ஆனால் பெண்களிடம் கலகலப்பாக பேசும் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் # நீதி  - ஆண் ஜாலி டைப்

-----------------------
22. பெண்ணைவிட ஆண் 2 விஷயங்களில் பின் தங்கி இருக்கிறான்

1. நாசூக்காக சைட் அடிப்பது

2. யாராவது சைட் அடிச்சாக்கூட அது தெரியாதமாதிரியே இருப்பது

-----------------------

23. ஆண்களின் அகராதியில் 2 வகைப்பெண்கள் தான்

1.அவனிடம் நல்லா பேசுனா அது நல்ல ஃபிகர் 

2. கண்டுக்காம இருந்தா ராங்கிக்காரி

--------------------

24. காதலை பெண் முதலில் வெளிப்படுத்த தயங்க காரணம் ஆணின் சந்தேக புத்திதான்

-----------------

25.  சீக்கிரமாக காதலில் ஆண்கள் விழுந்து விடுகிறார்கள்,காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர நீண்ட காலம்  எடுத்துக்கொள்கிறார்கள்,பெண்கள் உல்டா

-------------------------