Saturday, March 26, 2011

திருச்சியில் கலைஞரின் அத்து மீறிய பேச்சும், தேர்தல் கமிஷனை வம்புக்கு இழுத்த ஏச்சும் - காமெடி கும்மி


திருச்சியில்  25. 3.2011 நேற்று ( வெள்ளிக்கிழமை )இரவு நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதும்  அதற்கான என் கேள்விகளும்...


 தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .  "எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது,


ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?


"நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன்.


தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?
 

இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? 

உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... 

எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம்.


அடடா... திருச்சி செண்ட்டரான ஊருன்னு நினைச்சேன்.. இப்படி டெண்ட்டர்ரான ஊரா?பாவம்.. அந்த ஊரு பண்ணுன பாவத்துக்கு பரிகாரத்தை எப்படி செய்யப்போகுதோ.. பார்ப்போம் ஸ்ரீரங்கத்துல நிக்கற அம்மாவை ஜெயிக்க வைக்குதான்னு... 

 

நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல..  

எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


அவங்களுக்கெல்லாம் ஊழல்ல பங்கு குடுக்க மாட்டீங்க.. கேட்டா என் இதயத்துல இடம் உண்டுன்னு சொல்வீங்க.. எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடுங்க தலைவரே....
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6-வது முறையாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை.

அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற  துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...


என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6-வது முறையாக என்னை முதல்மைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


அண்ணா சொல்லி நீங்க செய்யாத காரியம் வேணா ஒண்ணா இருக்கலாம் தலைவரே.. ஆனா அண்ணா சொல்லாமல் நீங்க செஞ்ச காரியம்தான் எத்தனை எத்தனை....அதன் மூலம் கிடைச்ச வருமானம் தான் எத்தனை..? 

நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதலமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன்.

 அந்த பாலம் கட்டுன மேட்டர்ல எத்தனை தலைவரே தேறுச்சு..? மன்னிச்சுக்குங்க.. அது உங்க குடும்ப மேட்டரு... 


இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.

ஆமாம் தலைவரே.. அடிக்கடி உங்களை சினிமா ஃபங்க்‌ஷன்லயும், பாராட்டு விழாக்கள்லயும் பார்க்க முடியுது.. உலக அளவில இந்த அளவு ஒரு சி எம்  கேளிக்கை விழாக்களில் பங்கெடுத்ததே இல்லையாம் தலைவரே..
நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.


 விடுங்க தலைவரே.. 1000 கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஓட்டுப்போட பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை நமக்கு தோல்வி பயம் இல்லை..

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நடுநிலைமைன்னா தி மு க கட்சிக்காரங்க கள்ள ஓட்டுப்போடறப்ப கண்டுக்கக்கூடாது ...அதானே தலைவரே..?



நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது.
இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்," 


தலைவரே.. கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.. இங்கே இருக்கற பசங்க எல்லாம் படிக்காத பசங்க... எவனும் சிந்திக்க மாட்டான்..ஓட்டுக்கு பணம் வருதா ஓக்கேம்பான்.. மிக்சி கிடைக்குது, கிரைண்டர் கிடைக்குதுன்னு அவனவன் குதிக்கறான்...  கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்...

சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்

http://movies.vinkas.in/files/2011/03/Sattapadi-Kutram.jpg 

சீன் 1 டேக் 1 

விஜய் - அப்பா ,ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்க பழைய பாணில ஒரு படம் பண்ணறீங்க.. மறுபடி ஃபார்ம்க்கு வந்துடுவீங்களா?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.. மறுபடியும் கலைஞர் ஃபார்ம்க்கு வந்துடக்கூடாது.. அதுதான் முக்கியம்.

விஜய் - பல வருஷங்களா அந்த கட்சில இருந்துட்டு இப்படி திடீர்னு பல்டி அடிக்கறீங்களே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆமா , என்ன பிரயோஜனம்.. ஏதாவது தேறும்னு பார்த்தேன்.. ஒண்ணும் பப்பு வேகலை.. சரி ரூட்டை மாத்துன்னு இப்போ அம்மா பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன்..


விஜய் - சரி படத்தோட கதை என்ன?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை...

விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-wNrGLDlgY0pHpIbcXx9ZdO7DqcYBTAc293CXuKankrGNGyrW0iVfG3AalE3z1eksvCiwZcbv1IQtk36Ug0tJf6bI7DsyrzVq8QlWPfEgv1skz_w1suSTs7mK2lRSqNO4S2PI4MKNN4/s320/sattapadi_kutram_movie_stills_010.jpg
விஜய் - சரி ,இந்த டப்பா கதைல எப்படி கலைஞரை தாக்குவீங்க?


எஸ்.ஏ. சந்திரசேகர் - இது ஒரு பெரிய விஷயமா?ஆ ராசா மேட்டர்,நித்யானந்தா மேட்டர் அப்படின்னு இப்பத்த ட்ரெண்ட்ல எதெல்லாம் பரபரப்பா இருக்கோ அதை எல்லாம் தாக்கற மாதிரி பிட் பிட்டா சீன் எடுக்க வேண்டியது.. சம்பந்தமே இல்லைன்னாலும் அதை எடிட்டிங்க்ல சமாளிச்சு கதைல இணைச்சுட வேண்டியது.. எவனாவது பத்திரிக்கக்காரன் மானம் கெடற மாதிரி விமர்சனம் எழுதுனா லாஜிக் இல்லா மேஜிக் அப்படின்னு சமாளிச்சுடலாம்...

விஜய் - சரி.. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மாறு வேஷத்துல போலீஸ் கிராமத்துல வர்ற மாதிரி காட்றீங்களே.. எந்த மாங்கா மடையனாவது அப்படி  ரிவால்வரை பப்ளிக்கா வெச்சிருப்பானா? 

எஸ்.ஏ. சந்திரசேகர்- என்னப்பா சேம் சைடுல கோல் போடுறே...?

விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...

எஸ்.ஏ. சந்திரசேகர் -அதை விடப்பா.. போலீஸ் ஆஃபீசர் எம் பியை செருப்பால் அடிக்கற சீன் எப்படி? கலக்கீட்டமில்ல?

விஜய் - அட போங்கப்பா.. வால்டர் வெற்றிவேல்லயே அதை அவர் பண்ணீட்டாரே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சத்யராஜை சேர்ல கட்டிப்போட்டு வில்லன் குரூப் அவரோட குடும்பத்தை சிதைக்கற சீன் எப்பூடி?

விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... சத்யராஜோட சேகுவாரோ கெட்டப் எப்படி?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgliv13pzOjbwynAO3wVAppRVGqbSXTok8pnMDAkSklOX7Ah0VcJ-3U7DcNwUWAIpUQPM2iknalvGEj9hDlQzplJAkMKlVLrjujA_C2V1KqNxMTxjGNVnvcUO7HFfu9uLaCIoqyIayExz8/s1600/sattapadi_kutram_movie_stills_02.jpg
விஜய் - நல்ல வேளை அவர் உயிரோட இல்லை... ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?

எஸ்.ஏ. சந்திரசேகர் -சரி கோர்ட் சீன்ல சீமான் வக்கீலா எப்படி?

விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஏம்ப்பா ..தாமிரபரணில விஷால்க்கு ஜோடியா நடிச்ச  பானு நல்ல உருப்படி இல்லையா?

விஜய் - ஹூம் அப்பா மாதிரியா பேசறீங்க?..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...கமிஷனர் மனைவியா ஒரு பொண்ணை காட்றீங்களே , வேலைக்காரி மாதிரி இருக்கா.. பாத்திரத்தேர்வுல கவனம் வேணும்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஹூம்.. எல்லாம் என் நேரம்.. அதை நீ சொல்றே.. ஒரே மாதிரி கேரக்டர்ல 19 படம் பண்ணுன நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றே... சரி படத்தோட வசனங்கள் அனல் கக்குமே.. அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaj8PHZ2fZSetyR61sByQ7Vr2a5pEsBczmaQtgDJZ3FVIlbpdqDrnU31AXDradSO-tiV6ZzMTg8UvvsJHIdkBsHmHP-ER5f6ZQsW5nljO3Gg_8L59cOgKSlDQuSXRBeafDlMWnQGtX2zvU/s1600/Sattapadi+Kutram+Audio+Launch+Gallery+%25282%2529.jpg
படத்தின் உயிரோட்டமாய் அமைந்த வசனங்கள்

1.  என் பொண்ணை மட்டுமல்ல.. அவனையே அவன் மறக்கனும்.. புரியலை..? அவனை அடிக்காதீங்க.. அடிக்ட் ஆக்குங்க...


2. நீ காதலை இழந்ததை நினைச்சு கவலைப்படாதே.. நம்பிக்கையை இழக்காதே..


3. தோழர்களே. உங்கள் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் . ( சேகுவாரா ,பிரபாகரன் வீர உரையிலிருந்து சுட்டது)

4.  நீங்க உளவுத்துறையா?

ஹூம்.. அந்தப்படத்தைக்கூட நான் பார்க்கலை.. ( நல்ல வேளை தப்பிச்சாரு)

5.  தீவிரவாதியா? அது ஊரை ஏமாத்த நீங்க எனக்கு வெச்ச பேரு.. நான் போராளி.. காட்டுக்குள்ள கூடி இருக்கற கந்தகக்கோட்டை...

6.  அரிசியைக் கடத்துனாங்க, சாராயத்தை கடத்துனாங்க.. இப்போ அரசாங்க ஆஃபீசரையே கடத்தறாங்களே..

7. எம் பி சார் உங்களை பார்க்க ஆசைப்படறார்... 

நான் என்ன சமைஞ்ச பொண்ணா? ( சத்யராஜின் இந்த நக்கல் கமெண்ட்டுக்கு செம கிளாப்ஸ்)

8. தலைவரே.. அந்தாள் கூட எதுக்கு சாவகாசம்..? சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டீங்க

நம்ம இலாகா (POOR ) புவரா இருக்கலாம்.. ஆனா நான் எப்பவும் பவரா (POWER) இருப்பேன்..

9. டியர்.. நான் ஒரு கவிதை சொல்லட்டா?

ம்.. ( முதல்ல நீ சொல்லு.. கவிதையா.. கருமாந்திரமா?ன்னு நாங்க சொல்றோம் # பக்கத்து சீட் ஆள்)

உன் கண்களில் இவ்வளவு மின்சாரம் இருக்கிறதே.., நீ என்ன நிலக்கரிக்கு பிறந்தவளா?   ( அடங்கோ.... அப்பாவை அவமானப்படுத்திட்டு பேச்சைப்பார்...)

10. இதயத்துக்கும்,மூளைக்கும் நடக்கற போராட்டத்துல உருவாகறதுதான் காதல்.. இந்த உலகமே அதுலதானே இயங்கிட்டு இருக்கு..?

11. ஒரு மினிஸ்டர் என் மேலயே நீ கை வைக்கறியா?

நீ மட்டும் மக்கள் பணத்துல கை வைக்கலாமா?

12. ராசாவை  போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

. 13.  எங்களை மாதிரி ஒரு போராளி சாகலாம்.. ஆனா உங்களை மாதிரி ஒரு லீடர் சாகக்கூடாது..அப்புறம் நம்ம இயக்கமே இல்லாம போயிடும்..

14. எனக்காக ஒருத்தி வாழறதை விட , 4 பேருக்காக நான் வாழ ஆசைப்படறேன்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Sattapadi-Kutram-Audio-Launch/Sattapadi-Kutram-Audio-Launch-0022.jpg

கோர்ட் சீனில் சீமான் அனல் கக்கும் வசனங்கள்

1,  நம்ம தலைவருக்கு திருக்குறள் ஏன் பிடிக்கும் தெரியுமா?

அதுல அதிகாரம் இருக்கே..? ( பாவம் கலைஞர்)

காமத்துப்பால் கூட இருக்கு...

அது அவரோட தனிப்பட்ட விஷயம்...

2.  நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)

3. எல்லாம் தெரிஞ்சவன் வக்கீல்.. எதுவுமே தெரியாதவன் அமைச்சர்.. 

4. யுவர் ஆனர்.. என்னால இந்த குற்றவாளிக்கூண்டுல நிக்க முடியல... ஒரு சேர் குடுங்க ..

யுவர் ஆனர்.. இவருக்கு CHAIR  குடுத்தா உங்களுக்கும் SHARE குடுக்க ட்ரை பண்ணுவாரு...

5. ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)

6. முட்டாப்பசங்க எல்லாம் ஓட்டுப்போட்டு அயோக்கியப்பசங்களை ஆள வைப்பதுக்குப்பேருதான் தேர்தல்னு பெரியார் சொல்லி இருக்காரு.. ( அது எங்களுக்கே தெரியும்.. நீ என்ன சொல்றே # ஆடியன்ஸ்)

7. இப்பவாவது விழிச்சுக்குங்க.. இப்பவும் மக்கள்ட்ட விழிப்புணர்வு வர்லைன்னா அப்புறம் அவங்களுக்கு விழிக்க விழிகளே இல்லாம  போயிடும்.


எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... இந்தப்படம் எத்தனி நாள் ஓடும்?

விஜய் - படத்தோட மேக்கிங்க் ஸ்டைல்  மகா மட்டமா இருந்தாலும் செகண்ட் ஆஃப்ல வர்ற சில வசனங்களுக்காக 30 நாட்கள் ஓடும்... அதுவும் பி செண்ட்டர்ல தான்.. ஏ செண்ட்டர்ல 20 நாள் தான்.. சி செண்ட்டர்ல ஒரு வாரம்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி.. ஆனந்த விகடன் மார்க்?

விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....

எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?

விஜய் - ஓக்கே என ரேங்க்  போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்... 

. ஈரோடு சண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. ( இது மட்டும் சி பி வாய்ஸ்)

டிஸ்கி - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

Friday, March 25, 2011

குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/03/kullanari-koottam-movie-posters.jpg 

போலீஸ் எஸ் ஐ செலக்‌ஷனில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்ததைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அதற்காக அவர் மெனக்கெட்டு அமைத்த ஜனரஞ்சகமான திரைக்கதை இருக்கே .. கலக்கல்...

இடைவேளை வரை காதல் ,அதற்குப்பிறகு போலீஸ் செலக்‌ஷன் ஸ்டோரி என எந்த விதக்குழப்பமும் இல்லாமல் இயக்குநர் சர்வசாதாரணமாக திரைக்கதையை கையாண்ட விதம் பிரமிப்பூட்டுகிறது...

ஹீரோ - ஹீரோயின் சந்திப்பைக்கூட சாதாரண செல்ஃபோன் ரீ சார்ஜ் மேட்டரில் அவர் டெவலப் பண்ணிய விதம் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நல்ல பாடம்..

வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ விஷ்ணு இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப சாதாரணமான தோற்றத்தோடு ,இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்...படத்தில் ஹீரோவுக்கு ஃபைட் இல்லை என்பது கூடுதல் நிம்மதி..

ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்.. நடிப்பு ஓக்கே..இவர் கசாமுசா டிரஸ் எல்லாம் போடாமல் கதையின் கண்ணியத்துக்கு ஏற்றவாறு டீசண்ட்டாக உடை அணிந்து வந்து இயக்குநர் சொன்ன வேலையை கரெக்ட்டாக செய்து பாராட்டை பெறுகிறார்...
http://www.tamilnow.com/movies/gallery/kullanari-koottam/remya-nambeesan-in-kullanari-koottam-2.jpg
படத்தோட கதை என்ன?ஒரு போலீஸ் ஆஃபீசருக்குத்தான் பொண்ணைக்குடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் பெண்ணை காதலிக்கும் பையன் தன் அப்பாவுக்கு போலீசையே பிடிக்காது என்ற முட்டுக்கட்டையை தாண்டி எப்படி எஸ் ஐ ஆகி காதலியின் கையைப்பிடிக்கிறான் என்பதுதான்... அதை எந்த அளவு கதையோட்டத்துடன் கூடிய காமெடியுடன் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவராஸ்யமாய் சொல்லுவதில் இயக்குநர் டிஸ்டிங்க்‌ஷனில் பாஸ் ஆகி இருக்கிறார் .

படத்தோட ஓப்பனிங்க்ல அப்பாவின் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்குப்பதிலாக யாரோ ஒரு பொண்ணுக்கு தவறுதலாக ரீ சார்ஜ் செய்ய அந்தப்பெண்ணை பார்த்து அந்த ரீ சார்ஜ் பணத்தை பெறுவதற்குள் அவர்களுக்குள் காதல் ரீ சார்ஜ் ஆகிறது..இந்த சுவராஸ்யமான சம்பவம் படத்தை இடைவேளை வரை கொண்டு போவது ஆச்சரியம் தான்..
http://gallery.nkl4u.in/wp-content/gallery/kullanari-kootam/kullanari-koottam-movie-exclusive-stills-1.jpg
கதையுடன் கூடிய காமெடியில் கலக்கும் வசனங்கள்

1. அப்பா - டேய், எனக்கு ஒரு உதவி பண்றியா..?

ஹீரோ - வேலைக்குபோன்னு சொல்லாம எது வேணாலும் சொல்லுங்க.. கேட்கறேன்..

அப்பா   - நடக்காததைப்பற்றி நான் எதுக்கு கவலைப்படறேன்..?


2.  இங்கே பாரு பசங்களா... மழைக்குக்கூட   போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கிடக்கூடாது...அது உங்களுக்கு ஞாபகம் வரட்டும்னு தான் நான் இப்படி நடந்துக்கறேன்...


 3.  டேய்.. வாயை மூடிட்டு சாப்பிடு..

அது எப்படி முடியும்?நீ சாப்பிட்டு காமி...

அய்யோ அப்பா முடியலடா சாமி.. வெற்றிங்கற உன் பேரை ஏன் உன் வீட்ல வெட்டின்னு கூப்பிடறாங்கன்னு இப்பத்தான் தெரியுது...

4.  இந்தா.. நான் உன் கிட்டே வாங்குன 10 ரூபா.. சரியா இருக்கான்னு எண்ணிப்பார்த்துக்க...

ஏண்டா.. நீ என்ன 7 ரூபா + 3 ரூபான்னா குடுத்திருக்கே..? ஒரே ஒரு பத்து ரூபாதானே .. எதுக்கு எண்ணி பார்க்கனும்?

5. ஹீரோயின் - நீங்க என்ன பண்றீங்க..?

ஹீரோ -  ...................................

ஹீரோயின் - என்னங்க.. இப்படி சும்மாவே இருந்தா எப்படி? பதில் சொல்லுங்க..

ஹீரோ - நான் வேலைக்கு போகாம சும்மா இருக்கேன்கறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொன்னேங்க..


6.  எந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கீங்க..?

ஹூம்.. என்னை நம்பி ஒரு டீக்கடைல கூட அக்கவுண்ட் வெக்க விட மாட்டேங்கறாங்க...( குமுதம் ஜோக் வெ சீதாராமன்)

7.  ஏங்க.. ஆட்டோ  எல்லாம் வேணாம்ங்க....

காசு நான் தர்றேன்.. 

அப்ப சரி.. இப்பவே போலாம்.. ஹி ஹி 

8.  ஏம்ப்பா.. ஆட்டோ வருமா..?

வந்தா கூட்டிட்டு போ... ( எஸ் வி சேகர் நாடகக்காமெடி- தத்துப்பிள்ளை)

9. ஹீரோயின் தோழி - யார்டி இவன்?

ஹீரோயின் - ஜஸ்ட் ஃபிரண்டுதாண்டி...

ஹீரோயின் தோழி - ஹூம்.. கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... ( ஆடியன்ஸின் செம க்ளாப்ஸ்#எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ)

10. ஹீரோயின் - ஏண்டி.. அவனுக்கு ஃபோன் போட்டு பேசட்டுமா?

ஹீரோயின் தோழி - ஹய்யோ பச்சை மண்ணு.. என்னை கேட்டுத்தான் எதுவும் செய்யும்.. ஹூம்.. நானும் அழகாத்தான் இருக்கேன்.. எனக்கு ஒருத்தனும் மாட்ட மாட்டேங்கறானே..?  (எந்த ஒரு மொக்கை ஃபிகருக்கும் ஒரு இளிச்சவாயன் உண்டு , அது இயற்கையின் நியதி #இடைச்செருகல் சொந்த டயலாக் ஹி ஹி - நன்றி குருதிப்புனல் கமல் வசனம்)


11.  காது குத்தல் ஃபங்க்‌ஷன் நல்ல படியா முடிஞ்சுதா..?

ஹூம்.. இவன் நமக்குத்தாங்க காது குத்திட்டான்..லவ்வை டெவலப் பண்ண போயீட்டு வந்திருக்கான்..

12.  இப்படி தம் அடிக்க்கறீங்களே... போலீஸ் செலக்‌ஷன் ல எப்படி ஓடப்போறீங்க?

ரயில் ஓடறதுக்கு முன்னால புகை விடறதில்லையா? எப்படி ஓடறேன்னு மட்டும் பாரு... ( வெ. க.குழு படத்தில் 50 புரொட்டா சாப்பிட்டு ஜெயிக்கும் காமெடியனின் இந்த டயலாக்கிற்கு அரங்கம் அதிரும் கை தட்டல் # தம் பார்ட்டிங்க)

13.  ஏண்டா.. காதல் அவ்வளவு சக்தியை தருமாடா..? 

அனுபவிச்சுப்பார்த்தாத்தாண்டா அதனோட அருமை தெரியும்..

14. பேசாம நீ என் கட்சில சேர்ந்துடு.. நல்லா வளர்ந்துடுவே...

28 வருஷமா வளராதவனா இப்போ வளரப்போறேன்? அட போங்கப்பா.. (இந்த டயலாக்கை பேசும் காமெடியன் அழகர் சாமியின் குதிரை பட ஹீரோ)
http://boxoffice9.com/gallery/var/resizes/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Kullanari-Koottam-Stills,Photos,Pics/Kullanari%20Koottam%20Stills00-11.jpg?m=1299302886
படத்தில் பல சீன்கள் கை தட்டலை அள்ளிக்கொள்கின்றன.... பர்சனல் லோன் வேணுமா? என பிரைவேட் பேங்க் ஸ்டாஃப் கேட்கும்போது எரிச்சலாய் மறுக்கும் ஹீரோ அடுத்த 10 நிமிஷத்துலயே சார் எனக்கு 1500 ரூபா பர்சனல் லோன் வேணும் என கேட்பது செம காமெடி...

மிஸ்டு கால் கொடுக்கும் ஹீரோவை கலாய்க்க ஹீரோயின் ரெடியாக ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்க கண்ணிமைக்கும் நேரத்தில் ஹீரோ மிஸ்டு கால் கொடுப்பது செம சீன்...

மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு..

இடைவேளை வரை காதலை கலகலப்பாக கொண்டு செல்லும் இயக்குநர் படத்தின் பின் பாதியை அப்படியே சர்வசாதாரணமாக கலர் மாற்றுவது செம..

ஃபர்ஸ்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற.. செகண்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற  என சொன்னால் கூட நம்பி விடலாம்...அந்த அளவு செகண்ட் ஆஃப்பில் களம் மாற்றம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWLPAqoSE2DQf7WTsRx3-B_s_G_5xoe5ANS8X6PYgsxUIMiUGwvhZDOTWke5HLCS6igfGehQdciBEbywFOQTrRIhF18u5QEEFZJ8im766XmM_ZTAYkE0us4y7e5Yqbk5MLIWYaunqqnLCF/s400/Kullanari-Koottam-ramya-nambeesan-3.jpg
எஸ் ஐ செலக்‌ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது...

காதல் என்பதை முத்தத்தில் சொல்லி விட்டாய்.. மவுனத்தில் உணர்த்தி விட்டாய் பாடல் வரிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே தரம்.. ஒளிப்பதிவு  கண்ணுக்கு குளிர்ச்சி.. எடிட்டிங்க் உட்பட்ட டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் ஓக்கே ரகம்
.
படத்தில் டைட்டில் தான் சரி இல்லை.. இன்னும் கவித்துவமாய் வைத்திருக்கலாம்.. அதே போல் ஆரம்பத்தில் செல் ஃபோன் ரீ சார்ஜ் செய்யும் பெண்ணிடம் ஹீரோ பேசும் டபுள் மீனிங்க் டயலாக்கை கூட கட் பண்ணி விடலாம்....


இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு  இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப்பூச்செண்டு கொடுத்துப்பாராட்டலாம்..
ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று


ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 140 நிமிடங்கள் ஓடுகிறது...


 டிஸ்கி -1. சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 2 -  
  SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

நடமாடும் வாக்குச்சாவடி... இந்த கைல துட்டு.. அந்த கைல ஓட்டு......

Hilarious political cartoon images

1. நடிகர் வடிவேலு: தி.மு.க.,வில் உறுப்பினராக நான் இல்லை. ஆனால், மக்களில் ஒருவராக, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை பிரசாரத்தின்போது எடுத்துச் சொல்வேன். திருவாரூரில், கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் என் பிரசாரத்தை துவக்க உள்ளேன்.


அதெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மானஸ்தன் அடுத்த தேர்தல்ல கேப்டன் எங்கே போட்டி இடுவாரோ அங்கே  சுயேச்சையா நின்னே அவரை மண்ணை கவ்வ வைப்பேன்னு பேசுனாரே... அவரைப்பார்த்தா சொல்லுங்க.... 


--------------------------------------------------



2. தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள்: இந்தியாவில், 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பூகம்பம் வந்தாவது திராவிடக்கட்சித்தலைவர்களை காவு வாங்கிட்டா நாளை வரும் புதிய சந்ததியினராவது ஆரோக்ய அரசியலை எதிர் கொள்றாங்களா? பார்ப்போம்..

-----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Hyc_n1ggzMnWfYeuQW_5nsDrporis1TJcV2EpF0-677UOtqLUHHfyQPHsydKs_Q1BeGeb7pbaz9MFd7yNogC5zOibFhS2b6tzKCkScCrKUMAYE8ZQQNiaMb1xSn4WISURgnz5G1LOyI/s400/DN_12-02-09_E1_04-03%2520CNI2.jpg

3. பத்திரிகைச் செய்தி: நாகை அடுத்த வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் கிலி என்ற தம்பியப்பன் (40). பா.ம.க., நாகை ஒன்றிய (கிழக்கு) செயலர். இவரது வீட்டில், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பார்த்தீங்களா? பா  ம க கட்சிக்காரங்களுக்கு நாட்டுப்பற்றே இல்லைன்னு யாரும் இனி சொல்லிட முடியாது..நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....

------------------------------------------

4. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி: மைசூரில் இருந்து வந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் நிற்கிறார்; அவருக்கு எதிராக மண்ணின் மைந்தனை நிறுத்தி உள்ளேன். சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்துவிட்டது. ஜெயலலிதாவை, சசிகலா ஆட்டிப்படைக்கிறார்.

வீட்டுலதான் பொம்பள ராஜ்யம்னா நாட்டுலயும் ..........
-----------------------------------
http://i51.tinypic.com/nmk9r4.jpg
5. ம.தி.மு.க., பொதுச் செயலர்வைகோ பேட்டி:தமிழகத்தில் இனி தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க., அமையும். இந்த முறை, ம.தி.மு.க., தேர்தலில் போட்டியிடாமல், வெளியில் இருந்து கவனிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

முடிவில் மாற்றம் இல்லை.. ஆனால் மனதில் ஏமாற்றம் உண்டு.. சரி விடுங்க.. அடுத்த எலக்‌ஷன்ல 15 சீட் யாராவது தந்துடுவாங்க... 

-----------------------------------------

6. தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: டாஸ்மாக் மூலம், பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் விற்க நடவடிக்கை எடுப்பது குறித்து, அ.தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை எதிர்த்தும் பொது வேட்பாளரை களமிறக்குவோம்.

ஆமா.. அப்படியே இறக்கீட்டாலும்... அவருக்கு ஒரு குவாட்டர் வாங்கிக்குடுத்து பொது வேட்பாளரை மது வேட்பாளர் ஆக்கிட மாட்டாங்களா? எங்க கொட நாடு கோமளவல்லி..?
------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvwq9texoyipfA0xlJeYiHAPn8-9mzwOg8I2BrXaM0J8o-vEtRYkZbHLo-z1lsZB21JtYkqdfWfuAcogv2SF0UVWyx4ixkdxyCFX63Mm_AfbpZ1KmPitKsybrrnCnEk2b5k5k9-RyKqcU/s400/4.bmp
7. சிவசேன தலைவர் பால் தாக்கரே பேட்டி: இந்தியாவை சீரழிக்கும் இரண்டு விஷயங்கள், ஒன்று தேர்தல், மற்றொன்று ஜனநாயகம். ஊழலுக்கு அடித்தளமே தேர்தல் நடைமுறைகள் தான். எனவே, இவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிக அவசியம்.

ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்..

--------------------------------

8. இந்திய தேசிய லீக் மாநில தலைமை நிலைய செயலர் நாகூர் ராஜா பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், 10 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இரண்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஒரு சீட்டாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை அழைத்து பேசவில்லை. ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். அ.தி.மு.க.,வுக்கு எதிராக, 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.

அட போங்கப்பா.. ஆனானப்பட்ட வைகோவே அவமானப்பட்டு நிக்கறாரு.. வந்துட்டாங்க பெருசா.. இது டபுள் மீனிங்க் வேற.....

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYeJdbyCaihqNYxbf9O2Almbf4f-dljtyjKfqVjr1moTvzYpb3X52S8Btahsypfy4wHSkzectnzO4Gh_1ievPPztUPiN3X1vIq1_2uwNkjjRgEayc1ZePM3It3Ojg1n-UwcTFsQKrAiULO/s1600/tamilmakkakural_blogspot_man.jpg
9. சமத்துவ மக்கள் கட்சிநிறுவனர் சரத்குமார் பேட்டி: நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் அ.தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம். ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து, தமிழகத்தை ஜெயலலிதா மீட்டெடுப்பார் என நம்புகிறோம்.

அது சரி.. உங்க கட்சிக்கு 3 சீட் குடுப்பவருடன் மட்டுமே கூட்டணி என்பது தானே உங்க கொள்கை? இதே எலக்‌ஷன்ல கலைஞர் 4 சீட் கொடுத்திருந்தா அவர் கால்ல விழுந்திருப்பீங்க.. பெரிய யோக்கியவான் மாதிரி நடிக்கறாங்கப்பா...


டிஸ்கி - இன்று 4 படங்கள் ரிலீஸ் ஆகுது. குள்ளநரிக்கூட்டம், சட்டப்படி குற்றம்,சாந்தி அப்புறம் நித்யா,அல்லி ராஜ்யம்... பார்ப்போம் எது முதல்ல மாட்டுதுன்னு.....

ஆளும் தி மு க அதிர்ச்சி.... விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள்...காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSeQ3uz3yUFOxjjYS_ayOZ0nlfAEGoltEhBz9h9x3bA-PE2qQICGa30jCu7Ovsi5E73sKgx7FDm6McpWP1z9F1-BfKqnwvv7-bJwJu3eM_g6wmoAjwOBPYRYKv3oL8cTg6jx1qhuqoZYww/s1600/parisutham.JPG 

கூட்டணிகள் இறுதியாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி,  பிரசாரப் பயணமும் தொடங்கிவிட்டது. ஆனால், 'கதாநாயகர்கள்’ மனதில் என்ன இருக்கிறது?!  (வேறென்ன.. ?  குழப்பம்தான்...)


 தமிழகத் தேர்தல் களம் எந்த அலையும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோலத்தான் இப்போது தளும்பிக்கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் விகடனின் சர்வேக்கள் மக்களின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதி பலித்தன

.( எல்லா சஞ்சிகைகளும் அப்படித்தான் சொல்லிக்கறாங்க..)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு என்று தனித் தனியாக சர்வேக்களை வெளியிட்டோம். இந்தத் தேர்தல் களத்தின் காலம் மிகக் குறுகிவிட்டதால், ஒட்டுமொத்தமாக மக்களின் மனசையும் அறிய பொது சர்வே எடுக்கப்பட்டது!

( எப்படியோ உங்களுக்கு வேலை மிச்சம்)


அ.தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க கழற்றிவிடப்பட்ட பரபரப்பான சூழல் ஒரு பக்கம்... இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று வீதிக்கு வீதி பேசப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை மறுபக்கம்... தேர்தல் சூடு பரவிய சூழலில் மக்களிடையே நம் படை ஊடுருவியது 

.(ஊடுருவுனது நீங்கதான்னு தெரியுமா? மாறு வேஷத்துல ஊடுருவுனீங்களா?)

மார்ச் 19, 20 தேதிகளில் விகடன் நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100 பேர்கொண்ட குழு, மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் எனத் தமிழகம் முழுக்கப் புகுந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, சர்வே கேள்வித் தாளை நீட்டியது விகடன் படை! 

(அய்யய்யோ கொஸ்டீன் பேப்பரா..?எஸ்கேப்னு யாரும் ஓடலையா?)
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற காட்சிகள் இன்னமும் அரங் கேறாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மக்களின் மனநிலை இது.
(செல்லாது செல்லாது)


தேர்தல் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்போது, அதில் தெறிக்கும் அனல் குற்றச்சாட்டுகளும், பரஸ்பரப் புகார்களும், பணம் - பலம் விளையாட்டுக்களும், வாக்காளர்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். இருந்தாலும், இன்று இதுதான் தமிழக மக்கள் மனசு!
(மனம் விரும்புதே யாரை யாரை.. அறியாமலே.. சசம்ஜு சக்கும் சஜம்சு ஜக்கும்... அய்யய்யோ மறந்தேனடா... யார் கிட்ட நான் பணம் வாங்குனேண்டா...வேட்பாளர் பேரே தெரியாதடா.....#நேருக்கு நேர்)


''நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது அ.தி.மு.க. கூட்டணி. காங்கிரஸ் தந்த குடைச்சலில் தி.மு.க-தான் குட்டையைக் குழப்பிட்டு இருந்தாங்கன்னு பார்த்தா, 'நாங்க மட்டும் இளைச்சவங்களா?’னு அதிரடி பண்ணி, ஜெயலலிதா நல்லா காமெடி பண்ணினார். அவர் ஜெயிக்கக் கிடைச்ச நல்ல வாய்ப்பை அவரே குறைச் சுக்கிட்டார்'' என்ற குரல்களைப் பல இடங்களில் கேட்க முடிந்தது. 

  (போயஸ் தோட்டத்தில் ஓர் ஆண்ட்டி...அவர் நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி...கொண்டு வந்தார் ஒரு கூட்ஸ் வண்டி.. அதை மதிக்காம,மதிக்காம போட்டுடைத்தார்டி...கலைஞர் தான் இந்நாட்டு மன்னர்...)

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்கவைத்து இருக்கிறது. ''தலைநகரைவிட்டு தலை தப்பிச்சாப் போதும்னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுறார். அவருக்கே எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு. அதைப் பயன் படுத்திக்காம, வெற்றி பெறுவோம்கிற மமதையில் ஜெயலலிதா தப்பான முடிவு களை எடுத்துட்டார். அவரை நினைச்சுப் பரிதாபப்படக்கூட முடியலை'' என்றார் ஸ்ரீரங்கத்துக்காரர்  ஒருவர். 

( தோல்வி நிலையென நினைத்தால் ....தோழி நிலையை நினைக்கலாமா?மானத்தை இழந்தோம்.. வெட்கத்தை இழந்தோம்.. ரோஷத்தை இழக்கலாமா? #ஊமை விழிகள்)


ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தத் தேர்தலில் 'கொஞ்சமாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறது சர்வே. 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டுப் போடுவேன்’ என்று சுமார் 46 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதே நேரம், சுமார் 26 சதவிகி தத்தினர் 'இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னதும் முக்கிய விஷயமாகும்.

(என்ன என்ன நினைக்குது ஏதோதோ நினைக்குது. வண்ன வண்ன ஊழல்கள் கோடி ரூபா...)

வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப் பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பலர், 'இது வைகோவுக்குச் இழைக்கப்பட்ட அநீதி’ என்றே கருத்துச் சொல்கிறார்கள்.
( நீ இல்லை என்றால் கூட்டணீயில் இல்லை ஒரு கலவரமே.. ஏ  ஏ ஹே..உன்னோடு வந்தாலும், உன்னோடு நின்றாலும் தோல்வி தோல்வி....)


''ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ.ராசா கைது, சி.பி.ஐ. சோதனை, சாதிக் பாட்சா தற்கொலை என்று தி.மு.க கட்சி மேல் விழுந்த ஊழல் கறையால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த அம்மா இப்பவே ஆட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று தேனி ஏரியாவில் அலுத்துக்கொண்டார்கள் மக்கள்.

( ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?)


உசிலம்பட்டியில், 'ஜெயலலிதா வந்தா, சட்டம் - ஒழுங்கு சரியா இருக்கும். அதிகாரிங்க பயப்படுவாங்க. நிர்வாகம் சரியா நடக்கும். அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்? கலைஞர் வந்தா, டி.வி, மிக்ஸிலாம் கிடைக்கும். அதனால கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்’ என்றார் ஒரு பெரியம்மா.


(மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே இது மாறுவதெப்போ..தேறுவதெப்போ நம்ம கவலே..)

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு, கருணாநிதியைவிட ஜெயலலிதாவே கூடுதல் சதவிகிதத்தைப் பெற்று இருப்பது வியப்பு. யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியைவிட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது, ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது

. ( அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..நான் தாண்டா ஒரு மிக்ஸிக்கு ஓனர்..)


தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2,081 வாக்காளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்தான் கட்டங்களில் இடம்பெற்றுஉள்ளன