Tuesday, March 22, 2011

சமையல் பண்ணமாட்டேன்னு சலம்பல் பண்ணும் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg 

பொதுவா கணவன்மார்களை மிரட்ட இந்த பொண்டாட்டிங்க வெச்சிருக்கற 2 ஆயுதங்கள்ல சமையல் 2வது ஆயுதம்..முதல் ஆயுதம் என்ன?ங்கறதை தனி பதிவா தலையணை மந்திரம் போடும் தலைவியிடம் தப்பிப்பது எப்படி?ன்னு மறுக்கா போடறேன்..( மணி மேகலைப்பிரசுரம் ரேஞ்சுக்கு போய்ட்டமே...)

பெரும்பாலும் எல்லா சம்சாரங்களுமே ஒரே டெக்னிக்கைத்தான் ஃபாலோ பண்றாங்க..( சுமாரா நீ எத்தனை சம்சாரத்தை பார்த்தே..?)எனக்கு எப்படித்தெரியும்னா எல்லாம் கேள்வி ஞானம்தான்.(நான் பார்த்த எல்லா சம்சாரமுமே சுமாராத்தான் இருந்தது,..)

அவங்க வீட்டு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு நம்மால வர முடியாம போச்சுன்னா, ( தண்டம் வேற முட்டுக்கோல் வேற.. )அவங்க கேட்ட பொருள் ஏதாவது வாங்கித்தர முடியாம போச்சுன்னா( வாங்கற சம்பளம் ரூ 5000 ஆனா 5 லட்சம் ரூபாக்கு நெக்லஸ் கேட்டா),வீட்டுக்கு லேட்டா வந்தா இப்படி 10 பைசாவுக்கு பெறாத சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இந்த டெக்னிக்கை அவங்க யூஸ் பண்ணிக்குவாங்க..
http://www.newsonweb.com/newsimages/June2010/eb637c18-3465-49a8-8bb1-9c0972d798a31.jpg
எனக்கு தலை வலிக்குது... என்னமோ மாதிரி இருக்கு.. இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிட்டு அவங்க குப்பற படுத்துக்குவாங்க.. நாம என்னடா பண்றதுன்னு மல்லாக்க படுத்து யோசிப்போம்.. ( நாமளும் குப்புற படுக்கலாம்.. அப்புறம் நமக்கும் ,அவங்களுக்கும் ஒரு வித்தியாசம் இல்லாம போயிடுமே. #கோபமா இருக்கறப்பக்கூட நமக்கு பிரஸ்டீஜ் முக்கியம்).)

நமக்கு மட்டும் பசிக்குதே.. அங்கே பசியே எடுக்காதா?ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்லை... ஏன்னா சண்டை போடறதுன்னு முடிவு பண்ணுனதும் அவங்க முதல்லியே தெம்பா சாப்பிட்டு இருப்பாங்க.. 

ஹோட்டல்ல போய் சாப்பிட நமக்கு கையாலாகாது...சரி நாமே சமைக்கலாம்னு நினைப்போம்...அப்பாடா.. இப்போதான் மேட்டருக்கு வந்தேன்.. இந்தப்பதிவுல சுயமா சமைப்பது எப்படி?ன்னு பதிவர்களுக்கு சொல்லப்போறேன்..இது ஆண்களுக்கு மட்டுமானது...ஏதோ எனக்கு தெரிஞ்ச அரை குறை ஞானத்தை வெச்சு டிப்ஸ் தர்றேன்...இதைப்படிக்கிற பெண்கள் யாராவது அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு நொனை (குறை) சொன்னா நான் கடுப்பாகிடுவேன்.. (அடுப்புல வேலையா இருக்கறப்ப கடுப்பு.. ஆஹா எப்படி எதுகை மோனை தானா வருது...?)
http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ஒரு டம்ளர் அரிசியை ஒரு குண்டாவுல போட்டு அதுல ஒரு சொம்பு தண்ணி ஊற்றி ஊற வைங்க..( தண்ணி மட்டும் ஊத்துனா போதும்.. அதுவா ஊறும்..)

அரை மணி நேரம் ஊறனும். அதுக்குள்ள கடைக்கு பொடி நடையா போய் தயிர் அரை லிட்டர் வாங்கிட்டு வந்துடுங்க..இப்போ வீட்டுக்கு வந்து ஊறுன அரிசியை களையனும்.. அதாவது அந்த தண்ணியை கீழே ஊத்தனும். வை கோ வை அம்மா கழட்டி விட்ட மாதிரி..மறுபடி தண்ணி ஊத்தி மறுபடி களையனும்.. இப்போ 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும்.

அதாவது எவ்வளவு அரிசி போட்டமோ அதை விட 2 மடங்கு...கடைல வாங்குன அரிசி பழையதா இருந்தா இந்த பதம். அதுவே புது அரிசியா இருந்தா அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊத்தனும்..

குக்கர்ல 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும். அப்புறம் குக்கருக்குள்ள அரிசி குண்டாவை வைக்கனும்.அப்புறம் குக்கர் மூடியை டைட்டா மூடனும்..குக்கர் வெயிட் போட மறக்கக்கூடாது...இப்போ அடுப்புல குக்கரை வெச்சுட்டீங்க..10 நிமிஷம் டைம் ஆகும்.
http://thumbs.dreamstime.com/thumblarge_242/1204260906YAxDh5.jpg
அதுக்குள்ள ரசம் ரெடி பண்ணிடலாம்.அது ரொம்ப ஈஸி.. பி ஜே பி காரங்க வேட்பாளர் லிஸ்ட் ரெடி பண்ற மாதிரி.. எந்த கஷ்டமும் இருக்காது..முதல்ல புளி கொஞ்சம் எடுத்து ஒரு சின்ன குண்டாவுல போட்டு ஊற வைக்கனும்..( தண்ணீர் ஊற்றி)

இப்போ பெரிய அடுப்புல அரிசி வெந்துட்டு இருக்கும். சின்ன அடுப்புல புளிக்கரைசல் குண்டாவை வைங்க..2 தக்காளி எடுத்து வாஷ் பண்ணி  4 பாகமா அறிந்து புளிக்கரைசல்ல போடுங்க..அப்புறம் ரசப்பொடி 2 ஸ்பூன் போடுங்க.. 4 நிமிஷத்துல கொதிக்க ஆரம்பிக்கும்,, சீரகப்பொடி ஒரு ஸ்பூன் போடுங்க.. அப்புறம் கறி வேப்பிலை,கொத்து மல்லி தழை கொஞ்சம் போடுங்க.. 

கொஞ்சம் உப்பு போடுங்க..(ஏன் கொஞ்சம் உப்பு போட சொல்றேன்னா அதிக உப்பு போட்டு சாப்பிட்டா நமக்கு கோபம் வந்துடும்.. ஹி ஹி .. முடிஞ்சவரை குடும்பஸ்தங்க ரோஷம் இல்லாம இருப்பதே நல்லது.. )இப்போ தள புள தள புளன்னு கொதிக்கும்.. வாசம் கம கமன்னு வரும்.. சப்போஸ் வாசமே வர்லைன்னாக்கூட என்ன வாசம் ஆஹா அப்படின்னு நாக்கை சப்புக்கொட்டிக்கனும்..( எல்லாம் வெறுப்பேத்தத்தான்.. ஹி ஹி )

இப்போ ரசத்தை இறக்கி வெச்சுடுங்க.. சின்ன அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க..இப்போ குக்கர் விசில் அடிக்கும்..2 சவுண்ட் விடும் வரை பொறுத்திருக்கவும். அப்புறம் கேஸ் அடுப்பின் வேகத்தை தணிக்கவும் .7 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணவும்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD6nypfysSGGXNe2sLDCj-KK5XzCxbHT0IUwcyNhoIXSrl7if_sloBZDRfXVbDkf8HU9PN2xl6M2mbp-Ys4Tf4IO4SeLdY-Tgz4t1MO7emKgAXvFH2FytFB4VGkGMlv0uhI2Uc08-2Ire-/s1600/002.jpg
இப்போ 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. அவசரப்பட்டு இப்பவே மூடியைத்திறந்தா அம்மா கார்த்திக்கை தூக்கி வீசுன மாதிரி மூடி தூக்கி அடிக்கும். வெயிட் ப்ளீஸ்...


இப்போ சாப்பாடு, ரசம், தயிர் ரெடி... சாப்பிடுங்க.. சாம்பார் எங்கே?ன்னு கேட்கறீங்களா? நாம்பளே சாம்பார் மாதிரி தான் இருப்போம்...ஹி ஹி 

இந்தப்பதிவு ஹிட் ஆகித்தொலைத்தால் அடுத்தடுத்து தக்காளி சாதம் செய்வது எப்படி? லெமன் சாதம் செய்வது எப்படி? போன்ற பல பதிவுகள் வரும்.. ஹி ஹி 

இந்தப்பதிவு வழக்கம் போல் ஊத்திக்கிச்சுன்னா மறுபடி இதே பதிவை தலைப்பை மட்டும் மாற்றி மீள் பதிவாக வரும்.. ஹி ஹி

டிஸ்கி 1 - சினிமாவைத்தவிர இவனுக்கு எந்த மேட்டருமே தெரியாது போலன்னு இனி யாரும் எள்ளி நகையாட மாட்டாங்க...இந்தக்கொடுமைக்கு அந்த கொடுமையே தேவலாம்கற முடிவுக்கு வந்துடுவாங்க..

டிஸ்கி 2 - நான் ஏதோ என் சம்சாரம் கூட சண்டை போட்டுட்டனோன்னு யாரும் நினைக்க வேனாம், என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ..(இதுல கூட சினிமா டைட்டில்). அப்போ என் பொண்டாட்டி கெட்டவாளா?ன்னு சண்டைக்கு வர வேணாம்..

(மன்னிப்பு)  டிஸ்கி 3 - இது வழக்கமா நான் போடறது தான்.இந்தப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தினால் சாரி.. தாவணி சுடி  மிடி. இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்..

டிஸ்கி 4 - டைட்டில்ல சலம்பல் எனும் வார்த்தை வந்துள்ளதே அதுக்கு அர்த்தம் என்ன? என்பவர்களுக்கு  ஹி ஹி எனக்கே தெரியாது.. சமையல், சம்சாரம்,சமாளிப்பு இந்த 3 வார்த்தைகளுக்கும் எதுகை மோனையா எனக்கு ஒரு வார்த்தை தேவைப்பட்டுச்சு...அதுக்கு தகராறு, அலம்பல்,போன்ற அர்த்தங்கள் இருக்குன்னு நினைக்கறேன்..

டிஸ்கி 5  - படம் 2 - ல் இருக்கும் பெண் அணிந்திருக்கும் சேலை சண்டே மண்டே சாரியாம்.. அப்படினா அந்த 2 நாள் மட்டும் தான் அதை கட்டனுமா?ன்னு கேட்டேன்.. அதுக்கு காரணம் யாருக்கும் தெரியல.. ஹி ஹி

லஞ்சம் உண்டு, ஊழல் உண்டு ஓட்டு போடு ராசா.....

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/mkilaignnan.jpg 

1. கொ.மு.க., மாநிலத் தலைவர், "பெஸ்ட்' ராமசாமி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை; நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். சிலிண்டர் சின்னத்தைக் கேட்டுள்ளோம்; தமிழகம் முழுவதும் தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்.

ஹா ஹா சிலிண்டர்னாலே ரொம்ப லேட்டாத்தானே கிடைக்கும்.. அது சரி.. நீங்க இப்போ வேஸ்ட் நாம சாமி ஆகிட்டதா சொல்றாங்களே.. உண்மையா?பின்னே என்ன? எலக்‌ஷன் வரும் வரை கலைஞரை எதிர்த்துட்டு இப்போ ஒரு சீட்டுக்காக அவர் கால்ல விழுந்திருக்கீங்களே.. வெட்கமா இல்லை?


--------------------------------------------

2. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, தலைமைத் தேர்தல் கமிஷன் கடிதம்: பொதுத் தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 200 மீட்டருக்குள் தேர்தல் பிரசாரம் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்; பள்ளிகளில் இருந்து 200 மீட்டருக்குள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.


லூஸ்தனமா இருக்கு.. ஒலிப்பெருக்கியோட சத்தம் 2 கி மீ வரை கேட்கும்.. வெறும் 200 மீ தூரம் விலக்கு இருந்தா போதுமா?

------------------------------------------

3. பத்திரிகை செய்தி: டிரான்ஸ்பார்மர் பழுதால் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமம், நான்கு நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. வெளிச்சத்திற்காக கிராம மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி இரவை கழித்து வருகின்றனர்.

ஏன்? உங்க சொந்த பந்தங்கள் யாரும் தி மு க வுல இல்லையா? இப்படி தீப்பந்தம் ஏந்தும்படி ஆகிடுச்சே..?


---------------------------------------------
http://vimarisanam.files.wordpress.com/2010/09/15-sept-thuglaq.jpg?w=500&h=665
4. ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு:வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில், ம.தி.மு.க., உள்ளது. நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல. கட்டுமானத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும், தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை.வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில், ம.தி.மு.க., உள்ளது. நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல.


எங்கே போனாலும் கேவலப்படறதுதான் உங்க தனித்தன்மையா?  நீங்க பேசாம திருக்குறள்ல தீ நட்பு, கூடா நட்பு அதிகாரத்துல இருக்கற குறளை எல்லாம் படிச்சுப்பாருங்க...

----------------------------------

5. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேட்டி: தேர்தலுக்கு முன் குற்றம் புரிந்தவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றால், குற்றத்தில் இருந்து அவர் விடுபட்டவராக எப்போதிலிருந்து கருதப்படுகிறது? 1989ம் ஆண்டு தேர்தலுக்கு முன், "போபர்ஸ்' பீரங்கி ஊழலில், ராஜிவ் மீது குற்றம் சாட்டப்பட்டு, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. ராஜிவ் குற்றவாளி என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என பொருள் கொள்ளலாம் என்பதை, பிரதமர் மன்மோகன் சிங் உணர்ந்துள்ளாரா?

உங்களுக்கு இந்தியாவோட வரலாறே தெரில.. பதவில இருந்தா அவர் நிரபராதி.. பதவி பறி போனா அவர் குற்றவாளி...

---------------------------------------


6. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: ஜப்பான் நாட்டு புக்குஷிமா அணுமின் உலைகளில் ஏற்பட்டுள்ள அபாய நெருக்கடி, இந்தியாவில் மேற்கொள்ள உள்ள அணு மின் உலைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நில நடுக்கத்தால் பாதிக்கும் இடமாக நாம் கருதும் ஜெய்தாபூர் அணுமின் உலை விஷயத்திலும், கவனமாக செயல்பட வேண்டும்.

அப்படியே அந்த அணு உலைகளால திராவிடக்கட்சிகளுக்கு உலை வைக்க முடியுமா?ன்னு பாருங்க..

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_j0VZegZNOSGquvjFuB8B6jwRrHiFvvVNpOtVK-XX6UdwEpvGpKqDiFLqf19O7g5Y6lpqq6R_7q-gHPWQSjDUhPBro-41rHf8ZxrsN7e5TPIRW4TZzMkoM6PfIZZ6p93yY2nIQ93B34Ai/s320/thuklaq.jpg

7. பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பேட்டி: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்றாக இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய பலம். இதனால், வட மாவட்டங்களில், தி.மு.க., அமோக வெற்றி பெறும். லோக்சபா தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தோம் என்பது உண்மை தான்; எங்கள் எதிர்பாராத தோல்விக்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.


5 வருஷத்துக்கு ஒரு தடவை கால்ல விழற ஆளை மாத்துவீங்க.. இதுல என்ன பெரிய மாற்றம்?

-----------------------------------
8. ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் சீனிவாசன் பேச்சு: தன் பிரச்னைக்காக, சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்று மவுனவிரதம் மேற்கொண்ட கருணாநிதி, தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என இயக்கங்கள் நடத்த முயன்ற தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் அமைப்புகளுக்கும் கூவம் கரையில் தான் இடம் ஒதுக்கினார். அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த முன் வராமல் காவல்துறையைக் கொண்டு தாக்குதல் நடத்திய தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்.

எங்கே.. பாடம் புகட்டறது,.? அவங்க தான் திகட்டற அளவு கதாநாயகியை களம் இறக்கீட்டாங்களே..மக்கள் மதி மயங்குவது நிச்சயம்... 
Hilarious political cartoon images

Monday, March 21, 2011

பங்குனிதேர் உற்சவம் -சென்னிமலையில் ஒரு உற்சாக உலா..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpO6dgaJc4OFurCXq9JC2YrzJiFKxksuLzLDlPYwcsjaDBVzdT9uBGrsG0HAj86folCq2rsWLZeOutsvd04l5FhDWyhWfu2XgdyQ_LTjLdcYvX6RHD_4pz1xGQKKAYU3idzlBdlthNv1t/s400/thaipusam6_creativespark.jpg 

நேற்று பங்குனித்தேர்த்திருவிழா...வழக்கமா தைத்தேர்க்கு இருக்கற உற்சாகமும், மக்கள் கூட்டமும் இதுல 4 மடங்கு கம்மியா இருந்தது.சென்னிமலையோட மக்கள் தொகை 1,76,000 .அதுல வெறும் 500 பேர் வந்தாக்கூட தேரை இழுக்கலாம்.. ஆனா காலைல 6 மணில இருந்து வேட்டு வெச்சு  7 மணிக்குத்தான் கூட்டம் சேர்ந்தது.வேட்டு சத்தம் கேட்டு அங்கங்கே மனித தலைகள் தெரிய ஆரம்பித்தன.


தைத்தேர்க்கு வெளியூர் ஆட்கள் நிறைய வருவாங்க.. கூட்டம் செமயா இருக்கும்.. ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..


மக்களிடையே பக்தி குறைந்து வருவதும், அவர்களிடையே  கடவுள் பற்றிய உண்மையான நம்பிக்கை அருகி வருவதும் வருத்தமான விஷயங்கள்.ஏன்னா தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.

எப்படின்னா ஒரு ஸ்கூல்ல ஹெச். எம் .கண்டிஷனா இருந்தா அந்த ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் பங்க்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஒரு ஆஃபீஸ் அல்லது கம்பெனியின் மேனேஜர் கண்டிப்பானவரா இருந்தா அங்கே வேலை செய்யறவங்களும் ஒழுங்கா வேலை செய்வாங்க..அதே போல் முன்பெல்லாம் கடவுள் பற்றிய பயம் அதிகமா இருந்தது. தப்பு பண்ணுனா சாமி கண்ணை குத்திடும் என்று பயமுறுத்தி வெச்சிருந்தாங்க..

மனசாட்சிக்கு பயப்படாதவன் கூட சாமிக்கு பயப்பட்டான்.சாமி சும்மா விடாது.. தண்டனை உண்டுன்னு பயந்தான்.சின்ன வயசுல நோட் புக்கோ,பேப்பரோ மிதி பட்டா சரஸ்வதி சாமியை அவமானப்படுத்திட்டே.. உனக்கு இனி படிப்பே வராதுன்னு சொல்வாங்க..காசை,அல்லது பணத்தை தெரியாம மிதிச்சாக்கூட லட்சுமி சாமியை அவமானப்படுத்தீட்டே.. உன் கிட்டே செல்வம் தங்காது.. உன் கிட்டே லட்சுமி சேர மாட்டா அப்படிம்ப்பாங்க..
http://www.thedigitaltrekker.com/wp-content/uploads/2009/02/20090208-045908.jpg
ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?


கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட புராணங்கள், பக்தி இலக்கியங்கள் படிப்பது தப்பில்லை.இப்போ இருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் திரு நீறை நெற்றி நிறைய இட்டுக்கறாங்க..?அது சும்மா கம கமன்னு வாசம்  வீசுமே.. தலை வலியை காணாம போகச்செய்யுமே..நிறைய பேரு பவுடர் அடிச்சுட்டு ஒரு துளி கீற்று பவுடரை திருநீறு மாதிரி இட்டுக்கறாங்க..

கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது..ஒரு அசாதாரணமான அமைதி கோயில்ல இருக்கும். பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சனைகள், ஆஃபீஸ் தலை வலிகள் எல்லாத்துக்கும் ஒரு அரு மருந்தா கோவில் விசிட் நமக்கு கை கொடுக்கும்.

நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்.. மனசுல ஒரு நிம்மதி இருக்கும்.சாமி கும்பிடறவங்க பெரும்பாலும் அவங்களுக்கு என்ன தேவை என்பதை கோரிக்கையா வைக்கிறான்.அதற்கான காணிக்கையை உண்டியல்ல போடறான்.. இதுக்குப்பெயர் பக்தியா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwZICUISpjB2rN7jRhZmg14nYiQjwfWFezMsF5VwlJVAKK7hdPE14jYYdUxNgn6D6sPiZ5L61QfXDwjQ51EB1ERNj7Cq4FCINUjHmWYbbWBPLdgjC0bta0wLScWFoDMKAhxAhcFU0qojU/s1600/SAM_1546.JPG
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
யாம் பாட கேட்டே யும் வாள் தடங்கன்,
,மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மாதேவன் வார்க்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதி வாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் கண் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்....




இந்தப்பாட்டு திருவெம்பாவைல வருது..மார்கழி மாசத்துல விடியற்காலைல 5 மணிக்கு எழுந்து பச்சைத்தண்ணில குளிச்சு ,நெற்றில பட்டை இட்டுக்கிட்டு வெறும் வேட்டி மட்டும் கட்டி சட்டை இல்லாம குளிர்ல ஈஸ்வரன் கோயிலை சுற்றி வருவாங்க..பாட்டு பாடிக்கிட்டே ..( திருவெம்பாவை)

பாட்டுக்கு அர்த்தம் புரியனும்னு அவசியம் இல்லை.. கேட்டாலே புண்ணியம்னு சொல்வாங்க..

ஒண்ணும் வேணாம் காலைல எழுந்ததும் சுப்ரபாதம் பாட்டு டேப்ல போட்டு கேளுங்க.. மனசுல ஒரு எழுச்சி தோணும்.. மன அமைதி கிடைக்கும்.
http://tconews.files.wordpress.com/2008/07/dsc00863.jpg
அப்புறம் மனிதனின் மிருக குணங்களை  இறைவனின் சந்நிதானம் அடக்க வல்லது. குறிப்பா சைவம் மட்டும் சாப்பிடறவங்க இதை உணர முடியும்.ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.

நான் ஏன் சைவத்தை பற்றி இந்த அளவு சொல்றேன்னா மனிதனோட உணவுப்பழக்க வழக்கம் அவனோட கேரக்டரை தீர்மானிக்குது..அசைவத்தை தவிர்க்க முடியாதவங்க அதை குறைக்கலாம்..

சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.

கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்.இந்த வித்யாசத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்றேன்.நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?
http://img.dinamalar.com/data/aanmeegam/large_160032500.jpg
1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.

2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.

கட்டுரை எங்கேயோ ஆரம்பிச்சு இங்கே வந்து நிக்குது..கடவுள் இருக்காரா? இல்லையா? முன் ஜென்மம் என்பது உண்மையா?பொய்யா?கர்ம வினைப்பயன் என்பது என்ன? ஜாதகம் என்பது உண்மையா? வரும் வாரங்களில் பார்ப்போம்.

வை கோ வை இழுக்க கலைஞர் பகிரங்க முயற்சி.. அரசியல் உலகில் பர பரப்பு

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg 

கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதை இப்போதும் நிரூபித்துக்கொண்டே தான் இருக்கிறார்,வை கோ வை இழுக்க வீரமணி மூலம் தூது விட்டு இருக்கிறார்.

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: வைகோவுக்கு வீரமணி திறந்த மடல்!
சென்னை, மார்ச் 21,2011
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளரை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோக்கு அவர் இன்று எழுதிய திறந்த மடல்:

"அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiUmyuVFFeIGTdM0PJ-59cv63dyJonmK4IAB5iQ60A0Fu4XahSTq6zhnkdd5fRoub8RkijMbGm-tlPnHtOgsD0INUXBm1PQPzbg1_x3ZG-r4WU1ZJuteX2JaOfSn3PLS2SPEJhKAcVlZbp/s400/0016.JPG
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?
தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வதாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் "ஆரிய மாயை" பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. 

இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.
வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!


கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!
என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5i6muKCDDt6hlslqkPStoIWT6Zqym8vw0drJWwr0WxX7a4h234PLi9khfKMRV1iMEIbxhTHJw5Z7xQgUzLZut4LO1O4nguJ6kd1YNm9EYHZxirLLpU8LcYBXrQ2uOi1kd1x8k0JyWtk/s1600/vaiko.jpg
ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது?

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது - அவரது இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவையல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

அவரது தற்போதைய ஆலோசகர் சோ., சுப்ரமணிய சுவாமி இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்னையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட "பொடா" கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!


எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?


சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் "பளிச்சிடும்" நிலை உண்டு.


அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.


- இவைபோன்ற பல்வேறு பிரச்னைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் - அதன் தலைவர் கருணாநிதியுமாகத்தான் இருப்பார்கள்.

ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் "நீரடித்து நீர் விலகாது" என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி "விஸ்வரூபம்" எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.
வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கருணாநிதி - தங்களை அம்மையார் "பொடா"வில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது தலைவர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.


உள்நோக்கமற்ற வேண்டுகோள் நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.


பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்
என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!"
இவ்வாறு அந்தக் கடித்தில் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதன் மூலம் வை கோவை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கலைஞர் திட்டம் போட்டிருக்கிறார்.. தாய்க்கழகத்தில் இணைய சான்ஸ் இருக்கு எனவே  ம தி மு க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

தி மு க வின் கதாநாயகி தமிழ்நாட்டுக்கு வில்லி

http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg 

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு வரை ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக பேசப்பட்டு வந்தது...எப்படியும் தி மு க வீழ்ந்து  விடும் என்ற நம்பிக்கையோடு தேச நலன் விரும்பிகள் நினைத்து வந்தார்கள். கலைஞர்  வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடையே பெரிய பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 யார் வந்தாலும் ஊழல் தான் பண்ணுவாங்க...இவர் வந்தாலாவது நமக்கு கிரைண்டர் கிடைக்கும், இலவச பஸ் பாஸ் கிடைக்கும் என பேசி வருகிறார்கள்..எத்தனை  பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை என்ற சோர்வே மிஞ்சுகிறது...


.1. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அனைத்து தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருமாவளவனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம்; கருணாநிதியை ஆறாவது முறையாக முதல்வராக்க என்னென்ன வழிமுறை யுக்தி என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம்.


அடடா.. பச்சோந்தி என்ன அழகா பேசுது பாருங்க.. இதே ஆளு அன்புமணிக்கு  மந்திரி பதவி தரப்படலைன்னா என்னமா கூவுவாரு,,?
----------------------------------------------

2. வருமான வரித்துறை அதிகாரி தகவல்: வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்தும், அப்பணத்தைக் கொண்டு, அவர்கள் ஏதாவது சொத்து வாங்கியிருந்தால், அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். வேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு வசூலிக்கப்படும் வரியில் 10 சதவீதம், தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும்.

ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?

-------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341
3. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆஹா.. தமிழன்னா இப்படித்தான் இருக்கனும்... பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு..பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கஷ்டம்னா பரிதாபப்படமா பழி வாங்கத்துடிக்கறாங்களே...

-------------------------------------

4. மத்திய அமைச்சர் அழகிரி: தி.மு.க., கூட்டணி அமைய, என் பங்கு மட்டுமல்ல, அனைத்து கூட்டணித் தோழர்களின் பங்கும் உண்டு. அவர்கள், கூட்டணி வெற்றிக்கு தூண்டுகோலாக இருப்பர்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. மக்கள் மாக்களாகத்தான் இன்னும் இருக்காங்க என்பதை நிரூபிக்க....

---------------------------

5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: திருவாரூர் தொகுதியில், பீர், பிராந்தி மற்றும் ரம் பாட்டில்கள் என, மொத்தம், 1,858 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை, கருவூலத்தில் வைத்துள்ளோம். விசாரணைக்குப் பின், இவற்றை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்குவதா அல்லது வேறு எந்த வகைகளில், "டிஸ்போஸ்' செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


அதை ஏன் டிஸ்போஸ் பண்ணனும்? எலெக்‌ஷன் கமிஷன் ஆஃபீசர்களுக்கு அதைப்பற்றி எக்ஸ்போஸ் பண்ணுனா போதுமே..ஊத்தி மூடிட மாட்டாங்க..?

-------------------------------
http://www.dinamani.com/Images/article/2011/2/17/cartoonfeb17b.JPG

6. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது: மம்தா மீதும், அவரது கட்சி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் அறிவித்த தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்னைக்கு, ஹோலி பண்டிகை முடிந்ததும், கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர்.

ஹோலி பண்டிகைல கலர் பொடி பூசுவாங்க...மம்தா உங்க முகத்துல கரியைப்பூசப்போறாங்க..

--------------------------------

7.  தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:மத ரீதியாக நாங்கள் தேர்தலை அணுகவில்லை; மக்களும் அப்படி அணுகக் கூடாது. பா.ஜ., ஆளும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை, தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அதெல்லாம் சிந்திக்க எங்கே விடறாங்க.. நாடு முழுக்க தேர்தல் கதாநாயகி பற்றித்தான் பேச்சு.. தமிழ்நாடு நாசமாப்போகப்போவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கே..

------------------------------------
 8. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேட்டி: அ.தி.மு.க.,வை இயக்கும் ஒருவர், என் வீட்டு முன்,எங்கள் கட்சியின் கொடியை அவமதித்தார். இது குறித்து, ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினேன். இதற்கு அவரிடமிருந்து இதுவரை பதில் கடிதம் வரவில்லை. இதன் காரணமாக, அ.தி.மு.க.,வுடன் எங்கள் உறவு முறிந்தது; இனி, சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

அம்மாவுக்கும் சரி, அவங்க கட்சிக்காரங்களுக்கும் சரி ஆளுங்களை அவமானப்படுத்தித்தான் பழக்கம்..  உங்க கட்சிக்கொடி எதுன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது... தெரியாம பைக் துடைச்சிருப்பாங்க....

--------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/veeramani-karunanidhi.jpg
9. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறைகளைச் சீரழித்து நவீன தொழில் நுட்பம் என்ற பெயரில், இயற்கைக்கு விரோதமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், உற்பத்தி செய்யப்படும் விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், நம் தேகத்திற்கும், தேசத்திற்கும் ஆரோக்கிய மற்ற நிலை உருவாகிறது.

தேகத்துக்கு ஆரோக்கியமற்ற நிலைன்னு சொன்னா சாரு நிவேதிதா கோவிச்சுக்குவாரு... அவர் நாவலை குறை சொல்றோம்னு....தேசத்துக்கு ஆரோக்கியமற்ற நிலை உருவாகுதுன்னா கலைஞர் கோவிச்சுக்குவாரு... அவரோட தேர்தல் அறிக்கை கதாநாயகியை நாம குறை சொல்றோம்னு....

-------------------------------------------

10. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி:தேர்தலில், விலைவாசி உயர்வு, "ஸ்பெக்ட்ரம்' முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி பா.ஜ., பிரசாரம் மேற்கொள்ளும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், டெல்டா மாவட்டங்களில் நதிகள் இணைப்பு, சாயக் கழிவு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எல்லாம் வேஸ்ட் தான்..  தி மு க தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகி தமிழ்நாட்டின் பவர்ஃபுல் வில்லி

------------------------------------------
டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...

டிஸ்கி 2 - கடந்த 2 தினங்களாக வலைப்பக்கம் வராமல் போனவர்களுக்கு மட்டும் எனது முன் தினப்பதிவுகள்



3.