Monday, June 10, 2013

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் ரீமேக்கானால் டைட்டில் என்ன?

Today morning I and my son tried to witness the comet C/2011 w3 Lovejoy which is very near to the sun. But we could see only the Moon and of course the lovely cloud pattern.
1. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு!- தமன்னா அதிரடி # நனையனும்னு முடிவு பண்ணுன பின் எதுக்கு முக்காடு?




------------------------


2. ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது - அமலாபால் # இப்படி எல்லாம் மனசை தளர விட்டா எதுவும் செட் ஆகாது



-------------------------


3. அஜீத் படத்திற்கு எந்த அளவுக்கு என்னை கிளாமராக நடிக்க சொன்னாலும் வாரி வழங்க தயார்-தமனா # க(இ)டை ஏழு வள்ளல்ல ஒருத்தினு நினப்பு



---------------------------


4. ஜெ வை எதிர்த்தால் இந்தியாவே ஆட்டம் கண்டுவிடும்-பழ.நெடுமாறன் # கார் வேண்டுமெனில் காரிகையிடம் நேரிடையாகக்கேட்கவும்



-----------------------


5. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பு கலைப்பு - ராகுல் # பொண்ணு மாசமாகவே இல்லையாம்.வித்தாரகள்ளி பப்பாளி,அன்னாசி ,எள்னு சாப்ட்டாளாம்்




------------------------


6. இந்தியாவில் ராமருக்கும் இலங்கையில் சீதைக்கும் கோயில் கட்டுவோம் : பா.ஜ.க # பாகிஸ்தான் ல போய் பொண்ணு கட்டுங்க பார்க்கலாம்


---------------------


7. பெட்டிக்கடை நடத்தக்கூட எனக்கு தெரியாது -மணிவண்ணன் # அடடே வசனம் நல்லாருக்கே.அமைதிப்படை 3 ல இது வருமாங்ணா 



---------------------


8. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் பாலியல் தொழிலாளியாக நடிக்க மாட்டேன் -காவ்யா மாதவன் #,மேடம். ஒரு கோடியே ஒரு லட்சம் கொடுத்தா நடிப்பீங்ளா?



------------------------


9. மேக்ஸிம்’ க்காக போஸ் கொடுத்ததில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை -ஸ்ருதி கமல் # உங்களுக்கு இல்லை, கமல் ரசிகர்ங்கற முறைல எங்களுக்கு இருந்தது


----------------------

10. என் எல்லாப் படங்களுமே ரீமேக்தான். 'பார்த்திபன் கனவு’ 'கோபுரங்கள் சாய்வதில்லை’ யின் உல்டா - கரு.”பழனி”யப்பன்.# பல படங்களின் பஞ்சாமிர்தம்?



---------------------

11.  ஆன்மீகம்னா கோயில்,குளம் போவது அல்ல, ஞானம் தேடுதல் - சிம்பு # அப்டிங்களாண்ணா? ஞானத்துக்கு என்ன வயசுங்கணா?



-----------------------


12. ஜி.வி.பிரகாஷ் இசையில் சிலிர்க்கிறேன் - பாரதிராஜா # முதல் மரியாதை கேசட் வெளியீட்டு விழாவுல இதே டயலாக்கை இளையராஜாவை வெச்சு சொன்னீங்க



--------------------


13. ஜெனிலியா வின் கல்யாணத்துக்குப் பிறகும்  நாங்க 2 பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம் - சித்தார்த் # ஜெனிலியா ஆத்துக்காரர் 1ம் சொல்லலையா?






-----------------




14. என்கூட யார் இருக்காங்க, என் பெட்ரூம்ல என்ன இருக்குனு கேட்காதீங்க - சித்தார்த் #  சரி, உங்க கூட யார் யார் இருந்தாங்க?






---------------------------




15. ஜெ தான், என் முதல் பட ஹீரோயின், ஸ்ரீதேவி அல்ல .-பாரதிராஜா # அவங்களைப்பார்க்க இப்போ அப்பாயிண்ட் கேட்கும்போது மனசுல என்ன நினைச்சீங்க்ளோ?






--------------------------




16.  என்ன செய்தால் தமிழர்களை , காப்பாற்ற முடியும் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன் - கலைஞர் # எதுவுமே செய்யாம இப்படியே இருந்தா போதும்








--------------------------




17. ஒரு இந்தியனைக்கூட இரவில் பசியோடு தூங்கவிடக் கூடாது!’  காங்கிரஸின் லட்சியம் - ராகுல்? # நிம்மதியா தூங்கறவனை எழுப்பி விட்டுடுவீங்க?






-------------------------------




18. வாய்தா  கேட்டார் விஜயகாந்த், நாகர்கோவில் நீதிபதி கோபமானார்: செய்தி # நல்ல வேளை சைடு டிஷ் கேட்கலை , செம காண்டாகி இருப்பாரு










----------------------




19. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் ரீமேக்கானால்  டைட்டில் ரோசாப்பூ ரவிக் காரி ;-) # ஸ்லீவ்லெஸ் கலாட்டா



------------------------


20. நான் குளித்து விட்டு வருகையில் நீ தலை துவட்ட வருவாய், பின் நீ மீண்டும் ஒரு முறை குளிக்க நேரிடுகிறது

Sunday, June 09, 2013

‘பெப்சி’ உமா வின் காதல் அனுபவம் , கடுப்பான விவேக்


பெப்சிஉமா

உமான்னு சொல்றதை விட, ‘பெப்சி உமா!’ன்னு சொன்னால் இன்னும் தெளிவா புரியும்!

ஒரே டீ.வி. சேனலில், ஒரே நிகழ்ச்சியில், ஒரே ஸ்பான்ஸர் கொண்டு பதினேழு வருடங்கள் நடத்தப்பட்ட ஒரே டயலிங் ஷோவின் ஒரே ஆங்கர் என்ற பெருமைக்குரிய ஒரே பெண் உமாதான்!

உமாவுக்கு ரசிகர்கள் குமுளியில் கோயில் கட்ட முயற்சித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன்வந்தது. எல்லாமே க்ரேஸி - ரேஸியாகப் போய் கொண்டிருந்தபோது, மீடியாவிலிருந்து காணாமலே போனவர், இப்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகுஜெயாடீ.வி.யின்ஆல்பம்நிகழ்ச்சியில் தலைகாட்டத் துவங்கியுள்ளார்.


என்னாச்சு உமா? நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்?"


பிரமாதமா ஒண்ணுமில்லை! என்ன நடக்கணும்னு விதி இருந்ததோ, அதுபடி நடந்தது. யாம் ஃபேடலிஸ்ட்! ஊழ்வினை, கர்மபலன், விதி எல்லாவற்றையும் நூறு சதவிகிதம் நம்புபவள் நான்.


சன் டீ.வி.யை விட்டுட்டு, கலைஞர் டீ.வி.க்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்புறம் அங்கிருந்தும் விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் விலகிட்டேன்.

இந்த இடைப்பட்ட மூன்று வருஷத்துல எங்க போனீங்க? என்ன செஞ்சீங்க?


When problems come, they don't come in single, they come in battallions என்பது ஷேக்ஸ்பியரின் வார்த்தை. எங்களுக்கும் அதுதான் நேர்ந்தது!


பொலிடிக்கலா ப்ரஷர், பிஸினெஸ்ல நிறைய பிரச்னை, ஆறு மாசம் படுத்த படுக்கையா ஆகிற மாதிரி படுத்தி எடுத்த நோய்... ரொம்பவே பட்டுட்டோம்.
லெப்டோ ஸ்பைரோஸிஸங்கிற எலிக் காய்ச்சலும், சிக்குன்குனியாவும் சேர்ந்து தாக்கியதில், நான் பிழைச்சதே பெரிய விஷயமாயிடுச்சு. என்னால நடக்கக் கூட முடியலை!


ஆனா ஒருவழியா அதுல இருந்தெல்லாம் மீண்டு வந்து, இப்ப முன்ன இருந்ததை விட தெளிவா, பல மடங்கு செல்வத்தோட வளமா இருக்கோம். அதுக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்!


மீடியாங்கிறது வசீகர புகழ் வட்டம். அதுல இருந்து மறைஞ்ச போது உங்களுக்கு வருத்தமாக இருந்ததா?


மீடியாவை விட்டு விலகியது வருத்தமே இல்லை! ஆனால், என் கூட இருந்த பெரிய ப்ரெண்ட்ஸ் கும்பல் அப்படியே காணாமல் போய் விட்டதுதான் வேதனையாக இருந்தது.


நான் செழிப்பா சிரிச்சுக்கிட்டு இருக்கும்போது, எத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தாங்க. அதுவே கஷ்டப்படறோம்னு தெரிஞ்சதும் ஓடியே போய்ட்டாங்க! அப்பத்தான் எனக்கு உண்மையான ஞானமே வந்தது.


ஐயா, கண்ணதாசா! நீ பெரிய தீர்க்கதரிசி!"ன்னு அவரைப் போற்றாத நாளே இல்லை. குளத்துல நீருமில்ல; கொக்குமில்ல, மீனுமில்ல" என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை!


அந்தக் கஷ்டமான காலத்தில் எங்களோடு துணை நின்று, எங்களைப் பெரிய பள்ளத்திலிருந்து மீட்க கைகொடுத்து உதவிய இரண்டே ஜீவன்கள் எங்க அப்பா- அம்மாதான்.


இப்ப, நாங்க மறுபடி ஜோரா வலம்வர ஆரம்பிச்சதும், அதே கூட்டம் சுற்றிச் சுற்றி வருது. ஆனால் இப்பவும் நான் அவங்களை விரட்டலை. சுடுசொல் பேசலை. மனசுக்குள்ளேயே சிரிச்சுக்கிறேன். எதுக்குமே வேதனைப்படாம வேடிக்கை பார்க்கிற ஞானத்தை 37 வயசுலேயே கொடுத்துவிட்ட கடவுளுக்கு நன்றி பல!


சரி, கொஞ்சம் பழைய கதை பேசுவோம்...
வெறும் உமா, பெப்ஸி உமா ஆனது எப்படி?


91-92 நான் ஸ்கூல் ஃபைனல்ல இருந்தேன். அப்ப, என் தோழியோட அண்ணா ஒருத்தர், தூர்தர்ஷன்ல இருந்தார். அவரு, ‘வாருங்கள் வாழ்த்துவோம்!’னு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்துத் தர முடியுமான்னு கூப்பிட்டார். வீட்டுல யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கும் கேமரா முன்னால நின்னு பேச கூச்சமாதான் இருந்தது. ஆனாலும், ரொம்ப வற்புறுத்தி அழைச்சதால, சும்மா ட்ரை பண்ணிப் பார்ப்போமேன்னு போனேன். அதைப் பார்த்த சன் டீ.விக்காரர்கள்டயலிங் ஷோவுக்கு அழைச்சாங்க! சும்மா ஜாலியா பேச ஆரம்பிச்சேன். நானே எதிர்பார்க்கலை. பெரிய ஃபேன் கிளப்பே உருவாயிடுச்சு. அது தானா வந்த கூட்டம். எதையும் எதிர்பார்க்காம, அன்பால் திரண்ட கூட்டம்!
கமல், ரஜினி கூட எல்லாம் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்துச்சு இல்லையா?


ஆமாங்க! பாரதிராஜா, மணிரத்னம், சுபாஷ் கய் போன்ற முன்னணி இயக்குநர்கள் கிட்ட இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. ஆனால் பேஸிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி. நடிக்கிறதுக்கு ரொம்பப் பொறுமை வேணும். பாவம்... தமிழ் சினிமா... பிழைச்சுப் போகட்டும்னு விட்டுட்டேன்!



ஏகப்பட்ட காதல் கணைகள் உங்க மீது வீசப்பட்டிருக்கும். ஆனால் சுகேஷை காதல் கல்யாணம் செய்து கொண்டது எப்படி?


ட்ரூ... ட்ரூ! எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆன செய்தி கேட்டதும் பல பேர், யாருப்பா அந்த லக்கி மேன்?" என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். நடிகர் விவேக் கூட கலாய்த்தார். யாருங்க அது சுகேஷ்? எனக்கு அவரைக் கொஞ்சம் கூட பிடிக்கலைங்க! அகில இந்திய பெப்ஸி உமா ரசிகர் மன்றத் தலைவரா நான் இருக்கும் போது ரொம்ப அநியாயங்க!" என்று செல்லமாய் சண்டையே போட்டார்.


நானும், சுகேஷும் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தில் நடிச்சோம். எட்டு மாதங்கள் குடும்ப நண்பர்களாகப் பழகிய பிறகு, அவர் ப்ரபோஸ் செய்தார். எனக்கும் அவரைப் பிடிச்சுருந்தது. ஆனா எங்க வீட்டுல பலத்த எதிர்ப்பு. ஆர்ப்பாட்டம் பண்ணலை; சீன் போடலை. பக்குவமா ஹேண்டில் பண்ணி, பெரியவங்களை கன்வின்ஸ் செய்து, கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.


அவர் பஞ்சாபி என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்ங்கிறதால, எந்தப் பிரச்னையும் இல்ல. சுகேஷ் நல்ல பக்திமான். அனந்த பத்மநாப சுவாமி கோயில், ஷீரடி பாபா கோயிலுக்கு தினசரி போய் கும்பிடும் பழக்கமுள்ளவர். நல்லவர், என்னைப் புரிந்தவர். எங்கள் மகன் விஷாலுக்கு ஒன்பது வயதாகிறது.

ஜெயா டீ.வி.யில் நடத்தி வரும்ஆல்பம்நிகழ்ச்சி பற்றி...

நடிகர் சிவக்குமார், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பிரபு, டைரக்டர் மகேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷனர் நட்ராஜ் போன்ற வி..பி.கள் சில புகைப்படங்களைப் பார்த்து, தங்கள் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுவாரசியமான நிகழ்ச்சி அது. ‘லைஃப் ஜர்னி த்ரூ ஃபோட்டோஸ்னு வெச்சுக்குங்களேன்!

ஆல்பம்நிகழ்ச்சியில் நீங்க சந்திச்சுப் பேச விரும்பும் ஆண் வி..பி. யார்? பெண் வி..பி. யார்?


சோ, ஜெயலலிதாம்மா!"

ஓகே. வாழ்க்கையே ஒரு நம்பிக்கைதாங்க!

கீப் கோயிங்... கீப் ஆன் கோயிங் உமா!


நன்றி - கல்கி

தா.பாண்டியன் VS நமீதா ,ஹன்சிகா , அடங்கோ



பட்டிமன்ற சொம்பு...


1. நான் கவர்ச்சிக்கன்னியா 10 வருஷம் வலம் வரனும்,முடியுமா ஜோசியரே? 
பாதிதான் முடியும், ஹி ஹி

----------------------------

2. எல்லா லோனும் வாங்கி விட்டு திருமணம் செய்யும் ஆண்மகனை திருமணத்திற்கு பிறகு பெண் மதித்தால் தான் ஆச்சர்யம்

------------------------

3. அருகில் இருப்பவர்களின் அருமை நமக்குத்தெரிவதில்லை, தொலைவில் அவர்கள் விலகிச்சென்றபின்னே மனம் ஏன் மன்றாடுது என்று புரிவதில்லை 



---------------------


4. உதிர்ந்த பின்னும் மனதை கனக்கச் செய்கின்றன சில சவுரிகள்...!!



----------------------------


5.  தமிழ் நாட்ல டாஸ்மாக் எங்கெங்கே இருக்குன்னு ஒரு மேப் ரெடி பண்ணுனா அதுக்கு மப்பு மேப்புன்னு பேர் வைக்கலாமா? 



-------------------------


என்ன நடக்குது இங்க..!



6. ஹவுஸ் ஒயிஃப் , பங்களா ஒயிஃப்களை விட ஆஃபீஸ் வேலைக்குப்போகும் பொண்டாட்டிகளே புருஷனை எதிர்த்துப்பேசுகிறார்கள் # அவ தாளிப்பு






------------------------




7.நஸ்ரியா அவ்வளவு அழகா?  “ நாங்க எந்த ஃபிகரைத்தான் அழகில்லைன்னு ஒதுக்கி இருக்கோம், எல்லா ஃபிகரும் நல்ல ஃபிகரே!






---------------------




8. டியர், உங்க கிட்டே அதிக உரிமை எடுத்துக்கறது தப்பா?



 ச்சே, ச்சே , ஏ டி எம் கார்டையே  எடுத்துக்கறயே அதுதான் தப்பு






---------------------




9. (என் சொந்த ) சம்சாரம் என்னோடு ஒரு வார்த்தைதான் பேசியிருக்கும் அப்படியே ஷாக் ஆகி விட்டேன்!



-------------------------


10. தலைவரே! ஜெயிலுக்குப்போக ஏன் பம்மறீங்க?



 'சித்திரையில் நிலவுச் சோறு.’ ஆனால், சிறையில் அளவுச் சோறு, பத்தலை ;-)






--------------------




11. நந்தினி , நந்திதா ,நந்தியா இவங்க 3 பேரு புருஷன் திட்றாங்களா? அன்பா கூப்டறாங்களான்னு கண்டு பிடிக்கவே முடியாது # ஏய், நந்தி , இங்கே வா




---------------------




12. ஒவ்வொரு  நல்லவனுக்கு பின்னும் கெட்டவன் என்னும் மறுபக்கம் உண்டு ஆனால் எந்த  கெட்டவனுக்கு பின்னும் நல்லவன் என்கிற மறுபக்கமே கிடையாது.#பபி






----------------------




13. கேத்ரீனா கைஃபின் தங்கச்சிக்கு பெரிய பெரிய வாய்ப்பு ( சினிமாவுல ) வரும்னு பட்சி சொல்லுது






----------------------




14. நான் உங்ககிட்டலாம் அவ்வளவா பேசினதே இல்ல ஆனா இவ்ளோ அன்பு .



 பேசி இருந்தா சண்டை தான் வரும், பேசாம இருந்தாங்காட்டிதான் அன்பு வந்துச்சு






-------------------------




15. டியர் டேமேஜர்  சார், நாளைக்கு லீவ் வேணும். எதுக்குன்னு கேட்காதீங்க. காலண்டரை பார்த்துக்குங்க - உங்க கீழ்ப்படியாத டீம் லீடர்




-------------------------




16. மும்பைல எனக்கு ரன்பீர் பிடிக்கும்.


 ஓஹோ அப்போ டாஸ்மாக்ல ரன் விஸ்கி , ரன் ஜின் பிடிக்குமா?




-------------------


17. சமந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீங்க -சித்தார்த்# சமத்தா சேர்ந்து இருந்தா ஏன் கேட்கறோம்? பிரிஞ்சதால்தானே காரணம் கேட்கறோம்



--------------------------


18. டெல்லியில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் கால் டாக்ஸி - GIRL'S TALKஸி



------------------------



19. சாலிகிராமம் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம். # மாசமா இருக்காங்ளோ என்னவோ?



-------------------------


20. நெஞ்சை நிமிர்த்தி நிற்பவர்கள் நாம் மட்டுமே-தா.பாண்டியன்# ஹலோ அப்போ நாங்க யாரு ? - நமீதா ,ஹன்சிகா




-------------------------------