Monday, May 06, 2013

12 ராசி -குருப்பெயர்ச்சி பலன்கள் -பரிகாரம் ( 2013 - 14 )


விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (28.5.13) கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும் நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.

எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத, அனைத்து கிரகங்களும் நட்பு பெறும் நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான் அமர்வதால், அனைத்து ராசியினருக்கும் மத்திம பலன்களே கிடைக்கும். அதாவது, நற்பலன்கள் பெறப்போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும். அதேபோல், கெடு பலன்கள் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.


சமாதான வீட்டில் குரு அமர்ந்தாலும் உலகெங்கும்... ஆட்சியாளர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு- செயல்பாடுகளால் சண்டை-சச்சரவுகள் அதிகரிக்கும். வடக்கு மூலைக்கு அதிபதியான புதனின் வீட்டில் தென்னக கிரகமான குரு அமர்வதால், பூமியில் வடக்குப் பகுதியில் இருப்பவர்களும், தெற்குப் பகுதியில் வாழ்பவர்களும் மோதிக்கொள்வார்கள். புதிதாக வானொலி, தொலைக்காட்சி சேனல்களும், நாள், வார, மாதப் பத்திரிகைகளும் வெளியாகும். 28.5.13 முதல் 12.6.14 வரையிலும் ஊடகங்களின் காலம் என்றே சொல்லலாம். வி.ஐ.பி-களின் கடந்தகால அந்தரங்க விஷயங்களும், நிகழ்கால நிழல் சம்பவங்களும் வெளியாகி பரபரப்புகள் பற்றிக்கொள்ளும். வித்யாகாரகன் புதனின் வீட்டில் குரு அமர்வதால், தேர்வு முறையில் பல மாற்றங்கள் வரும். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் வினாக்கள் அதிகம் இடம்பெறும். கடந்த கால தேர்வு முறை குளறுபடிகள் கண்டறியப்பட்டு, புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

குரு 5-ஆம் பார்வையால் சனியையும் ராகுவையும் பார்ப்பதால் விலைவாசி ஓரளவு குறையும். நாட்டில் பணப்புழக்கமும் மக்களின் வருமானமும் குறையும். தங்கம், வெள்ளி முதலான ஆபரணங்களின் விலை வீழ்ச்சியுறும் என்றாலும், 19.8.13-க்குப் பிறகு, அவற்றின் விலை அதிகரிக்கும். பெட்ரோ கெமிக்கல்களின் விலையும் சரியும். வாகன உற்பத்தி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும், டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் மற்றும் செல்ஃபோன்களின் விலையும் குறையும். பாடப்புத்தகங்களின் விலை உயரும். ஆங்கில மோகம் அதிகமாகும்.  ஆசிரியர் தேர்வு முறை சற்றே எளிதாகும். சாஃப்ட்வேர் துறையில் வேலை வாய்ப்புகளும் ஊதியமும் குறைய வாய்ப்பு உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களில் பலர் தாய்நாடு திரும்புவர். 2-வதாக திருமணம் புரிவது அதிகரிக்கும்.

புத்திரகாரகன் குரு, பகை கிரகமான புதனின் வீட்டில் அமர்வதால், கர்ப்பிணிகள் பாதிப்படைவர். குறிப்பாக 7-வது மாதத்தில் இருந்து பாதிப்புகள் அதிகரிக்கும். பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை உள்ள குழந்தைகளை புதிய நோய்கள் தாக்கும். குழந்தையின்மை அதிகமாகும். பங்குதாரர்களின் ஈகோ பிரச்னையால் பல தொழிற் சாலைகள் விற்பனைக்கு வரும்; வீழ்ச்சியடையவும் வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமையால் பாரம்பரிய குடும்பங்கள் நலிவடையும்.

தனகாரகன் குரு மிதுனத்தில் அமர்கிறார். எனவே, ரிசர்வ் வங்கி அங்கீகரிக்காத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம். ஏலச்சீட்டு திட்டங்களிலும் சேர வேண்டாம். வங்கிகளில் வாராக் கடன் அதிகரிக்கும். கடன் பெற்றுவிட்டு, தவணைத் தொகை கட்டாமல் வங்கி நடவடிக்கைக்கு பலரும் ஆளாவார்கள். கறுப்புப் பணம் அதிகம் பிடிபடும். தீவிரவாதிகள், தொலைத்தொடர்பு சாதனங்களை நவீனமாகப் பயன்படுத்தி விபத்துகளை நிகழ்த்துவர். தொலைபேசி, அலைபேசி சேவைக் கட்டணங்கள் குறையும். அ, க, ஹ (கி,ரி,பி) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஊர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். மேற்கண்ட எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் ஆரோக்கியத்திலும் பண விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அனைத்து மத வழிபாட்டுக் கூடங்களும் அசுர வேகத்தில் வளரும். வைணவ தலங்கள் பிரசித்தி அடையும். மூச்சுத் திணறல், மூளைக் காய்ச்சல், நுரையீரல் அழற்சி, சளித் தொந்தரவு, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களால் அதிகம்பேர் பாதிப்படைவர்.

குருப்பெயர்ச்சியால் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்கும். விடியற்காலையில் அதிக மழை பொழியும். பசு-கன்றுகள், பயிர்- பச்சைகள், தோப்பு-தோட்டங்கள் வளம் அடையும். வன விலங்குகளும் அபிவிருத்தியாகும். ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும். நிலங்களின் கைடு லைன் வேல்யூவை அரசு குறைக்கும். மின் தட்டுப்பாடு குறையும். புன்செய் நிலங்கள், நீர் நிலை ஆதாரங்களைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். பதுக்கல் தானியங்கள் பிடிபடும். கள்ளப் பணம் தயாரிப்பவர்கள் கையும் களவுமாகப் பிடிபடுவர். பாரதத்தின் பகை நாட்டு உளவாளிகள், தீவிரவாதிகள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

மலையாள, ஹிந்தி மொழியில் தயாராகும் திரைப்படங்கள் பிரபலமாகி விருதுகளைப் பெறும். விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவர். எழுத்தாளர்கள் நலிவடைவார்கள். பாராளுமன்றத் தேர்தலில், தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணி உருவாகி ஆட்சி அமைக்கும். மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
28.5.13 - 11.6.13 வரை மிருகசீரிடம் 3-ல்
2.6.13 - 25.6.13 வரை மிருகசீரிடம் 4-ல்
26.6.13 - 10.7.13 வரை திருவாதிரை 1-ல்
11.7.13 - 25.7.13 வரை திருவாதிரை 2-ல்
26.7.13 - 9.8.13 வரை திருவாதிரை 3-ல்
10.8.13 - 28.8.13 வரை திருவாதிரை 4-ல்
29.8.13 - 17.9.13 வரை புனர்பூசம் 1-ல்
18.9.13 - 19.10.13 வரை புனர்பூசம் 2-ல்
20.10.13 - 12.11.13 வரை புனர்பூசம் 3-ல்
13.11.13 - 30.11.13 வரை புனர்பூசம் 3-ல் வக்ர நிலை
1.12.13 - 2.1.14 வரை புனர்பூசம் 2-ல் வக்ர நிலை
3.1.14 - 26.1.14 வரை புனர்பூசம் 1-ல் வக்ர நிலை
27.1.14 - 11.3.14 வரை திருவாதிரை 4-ல் வக்ர நிலை
12.3.14 - 12.4.14 வரை திருவாதிரை 4-ல் இயல்பு நிலை
13.4.14 - 6.5.14 வரை புனர்பூசம் 1-ல்
7.5.14 - 25.5.14 வரை புனர்பூசம் 2-ல்
26.5.14 - 12.6.14 வரை புனர்பூசம் 3-ல்

பரிகாரம்:
குரு பகவான் சுய கௌரவம், தன்மானம், விடாமுயற்சி, கல்வி, நுண்ணறிவு மற்றும் ஊடகங்களுக்கு உரிய கிரகமான புதனின் வீட்டில் அமர்கிறார். எனவே, மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுய முயற்சியிலும் உழைப்பிலும் முன்னேறப் பாருங்கள். பண வசதி இல்லாதவர்களின் உயர் கல்விக்கு உதவுங்கள்; குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.


சொல்வன்மை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் இப்போது 3-ஆம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்கிறார். 28.5.13 முதல் 12.6.14 வரை, உங்களின் விரய-பாக்கிய ஸ்தானாதிபதியான குரு, 3-ல் மறைவதால், எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. எடுத்த காரியங்களை முடிக்க, அதிக முயற்சி தேவை. முக்கிய அலுவல்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தினர் கருத்துக்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். பணம் வந்தாலும் சேமிக்க இயலாமல் செலவுகள் துரத்தும். வசதி-வாய்ப்புகளைக் கண்டு தவறானவர்களுடன் நட்புகொள்ள வேண்டாம். உணவுக் கட்டுப்பாடு, மருந்து உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை அவசியம்.

உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பி-கள் நட்பாவர். தம்பதிக்குள் சச்சரவுகள் எழுந்தாலும் அந்நியோன்யம் குறையாது. குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. கடன் கட்டுக்குள் வரும். தந்தையின் உடல் நலன் சீராகும். அவருடனான கருத்துமோதல் விலகும். வழக்கு நெருக்கடிகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால், கல்வியாளர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்க விஷயம் சாதகமாகும்.

குருபகவானின் சஞ்சாரம்: 28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. தைரியமாக முடிவெடுப்பீர்கள். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபம் தரும். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.  

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு, மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை வந்துபோகும்.

29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை, உங்களின் பாக்கிய-விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குரு செல்கிறார். நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும்.

13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் குரு வக்ர கதியில் செல்வதால், வருமானம் உயரும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும். புது சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவது, மாற்றுவது குறித்த முயற்சிகளில் இறங்குவீர்கள். பங்குதாரர்கள், தங்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவர். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.   

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற இலக்கை அடைய முடியாமல் ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். பணிச்சுமை அதிகரித்தாலும் சளைக் காமல் செய்து முடிப்பது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். 

கன்னிப்பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல வரன் அமையும். மாணவர்கள், கூடா நட்பைத் தவிர்க்கவும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.  அரசியல்வாதிகள் சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பணிச் சுமையை தந்தாலும், மனப்பக்குவத்தால் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பழநி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்வி கட்டணத்தை செலுத்துங்கள். குருவருள் கூடி வரும்.


தாரணப் புருஷராக வாழ்ந்து காட்டுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரையிலும் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ல் அமர்வதால், எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் அமைதி தவழும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். வீண் பதற்றம், பயம் நீங்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக் கும். எதிர்மறை எண்ணங்கள், கூடா நட்பு விலகும். பேச்சில் கனிவு பிறக்கும்.   

குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். நல்லவர்களது நட்பும், ஆலோசனைகளும் புதிய பாதையில் உங்களைப் பயணிக்க வைக்கும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். சோர்வு நீங்கும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால் மூச்சுத் திணறல், சளித் தொந்தரவு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 10-வது வீட்டையும் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பதவி வாய்க்கும். வழக்கு சாதகமாகும்.

குருபகவானின் சஞ்சாரம்: 28.5.13 முதல் 25.6.13 வரையிலும் உங்களின் சப்தம - விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்கிறார். உங்களின் பலவீனத்தை சரிசெய்வீர்கள். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாமனார்- மாமியார் உதவுவர். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், பேச்சு வார்த்தையால் சுமுகமாகும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். காரியங்கள் கைகூடும். சொத்து சேரும்.

29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குரு, தமது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் வேலை அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். புது பொறுப்புகள்- பதவிகளை ஏற்க வேண்டாம். சிலர், உங்கள் மீது வீண்பழி சுமத்தலாம்.

குரு 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம் நட்சத் திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்கிறார். வீண் செலவு, கவலைகள் வந்து போகும்.

வியாபாரத்தில், கடந்த கால நஷ்டங்களை சரி செய்வீர்கள். பற்று - வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். அனுபவம், பொறுப்பு மிகுந்த ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் விலகும். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், அவமானங்களும் ஏமாற்றங்களும் விலகும். உங்களின் உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வர். சக ஊழியர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு வரும்.

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மாணவர்கள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வார்கள்.  கலைத் துறையினரின் புதிய முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்.  அரசியல்வாதிகளுக்குப் பெரிய பொறுப்புகள் தேடி வரும்; தேர்தலில் வெற்றி கிட்டும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்வின் அதிர்ஷ்ட அத்தியாயத்தைத் துவக்கிவைப்பதாக அமையும்.

பரிகாரம்:  சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேன்மேலும் வெற்றி பெறுவீர்கள்.


னிவான பேச்சால் காரியம் சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரையிலும் ஜென்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம்  தேவை. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும். மருத்துவப் பரிசோதனை அவசியம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். எவருக்காகவும் வாக்கு தவறவேண்டாம். காசோலை தருவதற்குமுன் வங்கி கையிருப்பை சரிபார்ப்பது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில், சாதாரணப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க்கவும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்து இடும்போது சட்ட ஆலோசகரை ஆலோசிக்கவும். உறக்கமின்மை மன அழுத்தம் தரக்கூடும்.

குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் தம்பதிக்கு இடையே அன்பு குறையாது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மழலை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்லவிதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரையிலும், உங்கள் சஷ்டம- லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், மறைமுக எதிர்ப்பு, வீண் செலவுகள், சிறு அவமானம் வந்து செல்லும். கை- காலில் அடிபடலாம். சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்க்கவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் சிறு மனசஞ்சலம், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும்.
29.8.13 முதல் 12.11.13 வரை, உங்களின் சப்தம- ஜீவனாதிபதியான குரு தனது நட்சத்திரமான புனர் பூசத்தில் செல்வதால், மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போகவும். கடந்த காலத்தை நினைத்து வருந்துவீர்கள்.உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.

13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம் நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப் பற்றாக்குறை வந்து செல்லும். சாட்சி- கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.   வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத தொழிலில் முதலீடு வேண்டாம். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். 

உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போகவும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும். நீங்கள் பார்த்த வேலைக்கு வேறுசிலர் உரிமை கொண்டாடுவர். எனினும், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கன்னிப்பெண்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தவும். பெற்றோரை தவறாகப் புரிந்துகொள்ளா தீர்கள். மாணவர்கள், பாட சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது நல்லது. சிலர், விடுதியில் தங்கிப் படிக்க நேரிடும். அரசியல்வாதிகள் உட்கட்சி பூசலில் சிக்கிக்கொள்வதோ, தலைமையைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத் துறையினர் புதிய நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களின் உள்மனத்தில் ஒருவித குழப்பத்தைத் தந்தாலும், பணிவான போக்கால் உங்களுக்கு வெற்றி தருவதாக அமையும்.

பரிகாரம்:  காஞ்சிபுரம்-உத்திரமேருருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். பழைய கல்வி நிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நிம்மதி கிட்டும்.


மயோசிதமாகவும் சாதுரியமாகவும் செயல்படுபவர் நீங்கள். குருபகவான் இப்போது 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ல் நுழைவதால், சிக்கனமாக இருக்க நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணவரவும் உண்டு. சுபச் செலவுகளும் தொடரும். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் பயணிப்பதைத் தவிருங்கள்.

எளிய காரியங்களையும் போராடி முடிக்க வேண்டியது இருக்கும். எவரிடமும் குடும்ப அந்தரங்க விஷயங்களைச் சொல்லவேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். குரு, உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் விபத்துகளில் இருந்து மீள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வீட்டு லோன் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளி மாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் கிட்டும். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும்.

26.6.13 முதல் 28.8.13 வரை மற்றும் 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கட்டட வேலையைத் துவங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். தாயாருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். வாகன ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் சஷ்டம- பாக்கியாதிபதியான குரு, தனது சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் புகழ், கௌரவம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். அவர்வழி உறவினர்களுடன் பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.  13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம் நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்குவீர்கள். செல்வாக்கு உயரும். 

வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். தொழில் ரகசியங்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். துணி, மின்னணு- மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்து போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர் களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்தியோகத் தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். விருப்பப்பட்ட இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்களின் கனவு நனவாகும். சிலருக்கு, தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலையின் நிமித்தம் பெற்றோரைப் பிரிவீர்கள். திருமணம் தடைப்பட்டு முடியும். மாணவ-மாணவியர், திறமையை வெளிப்படுத்தி பரிசு- பாராட்டு பெறுவர்.  கலைத் துறையினரே! சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப் பூசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய அனுபவங்களை தருவதுடன், ஓரளவு முன்னேற்றம் அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்:  திருச்சி அருகே திருவெறும்பூரில் அருளும் ஸ்ரீஎறும்பீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


துவங்கியதை முடிக்கும் வரை துவளாதவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் தொடர்கிறார். வெளிச்சத்துக்கு வருவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். பல மாதங்களாக கிடப்பில் கிடந்த வேலைகளையும் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். அந்தஸ்து உயரும். தன்னிச்சையாக முடிவெடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 

உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதக மாக அமையும். உங்களின் 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை- ஆபரணம் சேரும். வழக்கில் வெற்றி உண்டு. குரு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக - பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரையிலும் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.   

29.8.13 முதல் 12.11.13 வரையிலும், உங்கள் பூர்வ புண்ணிய-அஷ்டமாதிபதியான குரு தன் நட்சத்திர மான புனர்பூசத்தில் செல்வதால், பண வரவு உண்டு. சொத்து வாங்குவது-விற்பது லாபமாக முடியும். கர்ப்பிணிகள் படிகளில் ஏறுவது- இறங்குவதோ, கடினப் பொருட்களைத் தூக்குவதோ கூடாது. பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கடன் தீர புது வழி கிடைக்கும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு, புனர்பூசம் நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும் வக்ரகதியில் செல்கிறார். எவருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன் வந்துசெல்லும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் போட்டியாளர் களை திகைக்கவைப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கை யாளர்கள் ஆவர். பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வியாபார சங்கத்தில் முக்கிய பொறுப்பில் அமர்வீர்கள். பங்கு தாரர்களால் இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன், புத்தகம், ஷேர், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.   

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் வெற்றி நிச்சயம். கலைத் துறையினரே! அலட்சியப்படுத்திய நிறுவனம் உங்களை அழைத்து பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். அரசு கௌரவிக்கும். அரசியல் வாதிகள் தலைமைக்கு நெருக்கம் ஆவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகளையும் வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவையாறு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.


சிறந்த சிந்தனைவாதி நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் 10-ஆம் வீட்டில் அமர்கிறார். உத்தியோகம், பதவி, கௌரவத்துக்கு பங்கம் வருமே என்று கலங்கவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வி.ஐ.பி-கள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை அமையும். சில தருணங்களில், வேலைகளை முடிக்க முடியாமல் மன இறுக்கத்துக்கு ஆளாவீர்கள். குரு உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், சாதுரியமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்து ஏமாந்த பணம் வசூலாகும்.

குரு 7-ஆம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடனான மோதல்கள் விலகும். அவரது உடல்நலன் சீராகும். வீடு-வாகனம் வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். குரு 9-ஆம் பார்வையால் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னைகளில் ஒன்று தீரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். மகனுக்கு, நல்ல பெண் அமைவாள். 

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் முன்கோபம், திடீர் செலவு, சொத்துப் பிரச்னை, சகோதர வகையில் வருத்தம் வந்து செல்லும். எவரையும் எவரிடமும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.பூர்வீகச் சொத்தை விற்க நேரிடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க்கவும்.

29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை உங்களின் சுக-சப்தமாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்கிறார். தம்பதிக்கு இடையே மனஸ்தாபம் வந்துபோகும். தாயாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.      

         
குரு பகவான் 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூச நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்கிறார். பண வரவு, சொத்துச் சேர்க்கை உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளோ, பெரிய அளவில் எவருக்கும் கடன் தரவோ வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென பணியை விட்டு விலகுவர். புதியவர்களை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் ஏடாகூடமாகப் பேசுவர். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு.   

உத்தியோகத்தில், உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவர். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடம் எல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழல் உருவாகும். மேலதிகாரிகளுடன் பணிந்து போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று தாமதமாகக் கிடைக்கும்.

கன்னிப்பெண்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத் தில் இடம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பெற்றோரைப் பகைக்க வேண்டாம். வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.

மாணவர்களுக்கு, கணிதம் அறிவியல் பாடங்களில் அதீத கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கட்சி மேலிடம் உங்களை உற்றுக் கவனிக்கும். கலைத் துறையினர், யதார்த்தப் படைப்புகளால் புகழ் பெறலாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, பணத்தின் அருமையையும் பொறுமையின் அவசியத்தையும் உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

 பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.


ண்மையை நேசிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் அமர்கிறார். இனி, தொலைநோக்கு சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை விலகும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். திடீர் செல்வாக்கும், வசதி-வாய்ப்புகளும் கூடும்.

குரு 5-ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் புதியத் திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் பிணக்குகள் நீங்கும்; இருவரும் மனம் ஒருமித்து முடிவெடுப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். குரு 3-ஆம் வீட்டைப் பார்ப்பதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறைந்த வட்டிக்கு கடன் பெற்று, அதிக வட்டிக்கடனை அடைப்பீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன-சப்தமாதி பதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். மனைவியுடன் ஈகோ பிரச்னை வரக்கூடும். அவருக்கு கர்ப்பப்பை கட்டி, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். 

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் நெஞ்சு எரிச்சல், வாயுக் கோளாறு, தலை சுற்றல், சிறுநீர் பாதையில் அலர்ஜி வந்துசெல்லும். தம்பதிக்குள் அனுசரித்துப் போகவும்.

29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை உங்களின் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் இனம்தெரியாத கவலைகள் வந்து செல்லும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். செல்வாக்கு கூடும். சொத்து சேரும். 

13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம் நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து செல்லும். வேலைகள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 

வியாபாரத்தில், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள், ஏஜென்டுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர் பணிந்து வருவார். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். ரியல் எஸ்டேட், சிமெண்ட், கண்ணாடி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில், உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர். சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் கூடிவரும். புது வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மாணவ-மாணவியருக்கு உயர்கல்வியில் வெற்றி உண்டு. விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள். அரசியல்வாதிகள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.  
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கான அங்கீகாரத்தை தருவதுடன், பணம்- பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்:  சென்னைக்கு தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். செழிப்பு கூடும்.


னக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர் நீங்கள். குருபகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை 8-ஆம் வீட்டில் மறைவதால், உங்கள் இலக்கை எட்டிப்பிடிக்க கடும் முயற்சி தேவை. தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்; அவ்வப்போது விவாதங்களும் எழும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. பழைய கடன் பிரச்னை மனதை வாட்டும். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குரு உபய வீட்டில் மறைவதால் நல்லதே நடக்கும்.

குரு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீட்டு பிளான் அப்ரூவலாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி, ரசனைக்கேற்ற வீடு வாங்குவீர்கள். ஆபரணங்கள் சேரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோர்வு நீங்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் தோற்றப்பொலிவு, பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதி பணம் தந்திருந்த சொத்துக்கு மீதி பணமும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

29.8.13 முதல் 26.1.14 மற்றும் 13.4.14 முதல் 12.6.14 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்கிறார். எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால், உங்களின் பலவீனங்களை மாற்றிக்கொள்ள முடிவு எடுப்பீர்கள். பிரிந்திருந்தவர் ஒன்று சேருவர். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப் படுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரி யின் திருமணத்தை நடத்துவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்.     

வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். எவருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களின் கெடுபிடிகள் விலகும். மூலிகை, தேங்காய் மண்டி, எலெக்ட்ரிக்கல்ஸ், துரித உணவகங்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி, இனி ஆதரிப்பார். சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம்.

கன்னிப்பெண்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் தாமதமாகி முடியும். மாணவர்களுக்கு போட்டிகளில் பரிசு கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரிப்பர். கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். அரசியல்வாதிகள், எதிர்ப்புகளைத் தாண்டி சாதிப்பர்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவு மற்றும் அலைச்சலைத் தந்தாலும், உங்களை மகிழ்ச்சிப் படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்:  கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். முதியோர் இல்லங்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.


வெளிப்படையாகப் பேசுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். புறநகரில் மனை வாங்குவீர்கள்.

 கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களால் உதவிகள் கிட்டும். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், மதிப்பு உயரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கடன் பிரச்னை தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவியை நாடுவர்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி, அரசால் அனுகூலம் உண்டு. வெளி நாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.

29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் ராசிநாதனும் - சுகாதிபதியுமான குரு,   தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தாயாரின் முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புது வேலை கிடைக்கும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசத்திலும் 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால், நினைத்தது நிறைவேறும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர், வசதியுள்ள வீட்டுக்கு மாறுவார்கள். 

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தகச் சங்கத்தில் பதவி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும். பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. 

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். நீண்டநாளாகக் கேட்டுக்கொண்டிருந்த இடமாற்றம் கேட்ட இடத்துக்கே கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி வரும்.    
கன்னிப்பெண்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்தேறும்.

 வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். இசை, இலக்கியம், ஓவிய போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைத் துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் பெறுவர். அவர்களின் படைப்புத் திறன் வளரும். அரசியல்வாதிகளுக்கு, தலைமை ரகசிய பொறுப்பு ஒன்றை ஒப்படைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் வல்லமையையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:  திருநாங்கூர்-அண்ணன்கோவிலில் அருளும் ஸ்ரீகண்ணன் நாராயண பெருமாளையும் தாயாரையும் ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை கர்ப்பிணிகளின் பிரசவ செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். வளம் பெருகும்.


பெற்ற தாய்- பிறந்த மண் மீது அதீத பற்று கொண்டவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை 6-ஆம் வீட்டில் மறைவதால், சின்னச் சின்ன எதிர்ப்புகள் வரும். பணம் வந்தாலும் பற்றாக்குறையும் உண்டு. சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். மருத்துவச் செலவுகளும் வந்து போகும். வழக்கை நினைத்து கவலை அடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையை அறவே அகற்றுங்கள். பழைய கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சிறு சிறு விபத்துகளும் ஏற்படலாம். கவனம் தேவை.

குருபகவானின் சஞ்சாரம்: 28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், தடைகள் ஓரளவு நீங்கும். முக்கிய பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு- வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். 

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மதிப்பு கூடும். திருமணம் கூடி வரும். புறநகரில் வீட்டு மனை வாங்க முயற்சிப்பீர்கள்.

29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை, உங்களின் திருதியாதி பதியும்-விரயாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். பணத்தட்டுப்பாடு இருக்கும். பிள்ளை களால் அலைச்சலும், செலவுகளும் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். எவரையும் எவருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இளைய சகோதரர் உதவுவார்கள்.

13.11.13 முதல் 26.1.14 வரை, குரு புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரம் சுமார்தான். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். தள்ளுபடி விற்பனை, விளம்பர யுக்திகளால் லாபம் அதிகரிக்கச் செய்வீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். அரசாங்கத்தை பகைக்காதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டேஷனரி, பதிப்பகங்களால் லாபம் அடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என்று செல்லாமல், பேசி தீர்ப்பது நல்லது.   

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல், கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும்.   

கன்னிப் பெண்களுக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். மாணவர்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து போகவும். கலைத் துறையினரின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். அரசியல்வாதிகள், கோஷ்டி பூசலாலும், எதிர்க்கட்சியின ராலும் அலைக்கழிக்கப்படுவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, ஏமாற்றம் மற்றும் பணப்பற்றாக்குறையை தந்தாலும், ஓரளவு முன்னேற்றத்தை தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:  காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.


றப்போம், மன்னிப்போம் எனும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ஆம் வீட்டில் அமர்வதால் வசதி வாய்ப்புகளையும், வாழ்க்கை தரத்தையும் ஒரு படி உயர்த்துவார். சந்தோஷம் பெருகும். குடும்பத்தில் வசந்தம் வீசும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் கூடிவரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு 5-ஆம் பார்வையால் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். அவர் வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதர-சகோதரிகள் ஆதரவாக இருப்பர். வழக்கு சாதகமாகும். நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். இடம் வாங்க முயற்சிப்பீர்கள். வேலை அதிகரிக்கும். சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். 26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்காலம் குறித்த பயம், வந்துசெல்லும். வீட்டில் கூடுதல் அறை, தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.

29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் தன- லாபாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பொறுப்புகள் தேடி வரும். மகளுக்கு வேலை கிடைக்கும்; திருமணமும் கூடி வரும்.

குரு 13.11.13 முதல் 26.1.14 வரை, புனர்பூசத்திலும் 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ரகதியில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும். எனினும் வளர்ச்சி தடைப்படாது. உங்களைப் பற்றி விமர்சனங்கள் வரக்கூடும். காசோலை, முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். அரசு விஷயங்களிலும் கவனம் தேவை.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தேங்கிய சரக்கு களை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பர். உத்தியோகத்தில், உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சில புதுமைகளைச் செய்து எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கில் வெற்றி உண்டு. கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். அடி வயிற்றில் இருந்த வலி, தூக்கமின்மை விலகும்.கல்யாணம் கூடி வரும். மாணவர்களுக்கு, நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.  

கலைத் துறையினரே! வெகுநாட்களாக எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிலும் வெற்றி பெறுவர்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி செல்வம், செல்வாக்கு, திடீர் யோகங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்:  தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்க்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர் நீங்கள். குரு இப்போது 4-வது வீட்டில் அமர்கிறார். முன்னெச்சரிக்கை தேவை. உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். திருமணம், கிரகப்பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அப்ரூவல் இல்லாமல் வீடு கட்ட துவங்க வேண்டாம். வங்கி லோனும் தாமதமாகவே கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சு வலி, கை, கால் வலி வந்துபோகும். பண வரவும் உண்டு; செலவும் உண்டு. வாகன இன்சூரன்ஸ் போன்றவற்றை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள். விபத்துகள் வந்துபோகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை குறித்து நல்ல பதில் வரும். சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்க்கவும்.

குருபகவானின் சஞ்சாரம்:  28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன- பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு பதவியில் இருப்பவர்களின் உதவியால், தடைப்பட்ட காரியங்களை சாதிப்பீர்கள். புறநகர் பகுதியிலாவது வீடு- மனை வாங்கலாம் என முயற்சிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். அவர் வழி சொத்தை பெறுவதில், தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் மதிப்பு- மரியாதை கூடும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு எழும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். எவரையும் எவருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு.

29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை, உங்களின் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்கிறார். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப் பட்ட சுபகாரியங்கள் கூடிவரும். பிள்ளைகளின் கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரைகுறையாக நின்ற கட்டட பணியை மீண்டும் துவங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூச நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ரகதியில் செல்வதால் வசதி- வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.

வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் லாபம் வரும். உத்தியோகத்தில் வேலை நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற ஒரு பயம் இருக்கும். சம்பளம் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகக் கிடைக்கும்.   

கன்னிப்பெண்கள், தங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.  மாணவர் களுக்கு கல்வியில் அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினருக்கு, பணவரவு சுமார்தான். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அரசியல்வாதிகள் தடைகள், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அலைக்கழிப்பை தந்தாலும் இறுதியில் மனத்தெளிவும் முன்னேற்றமும் தருவதாக அமையும்.

பரிகாரம்:  கும்பகோணம் அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை அமாவாசை நாளில் சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.


பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்
ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் வயிற்றுவலி, குன்மம் முதலான ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம், தீர்க்காயுள் கிட்டும். பாவங்கள் விலகும். கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும்... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்

.
ஸ்ரீ கணேஸாய நம:
குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:


கருத்து:
குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு ஆசார்யரும், புத்திமான்களுள் சிறந்தவரும், வாக்குக்கு ஈஸ்வரரும், புத்தி ரூபியும், நீண்ட தாடி, மீசை உள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், யௌவனம் உள்ளவரும்...
அமிர்தமயமான பார்வை உள்ளவரும், கிரகங்களுக்குத் தலைவரும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், அழகிய உருவம் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவரும், மொட்டு போன்ற காந்தியுள்ளவரும்...
உலகங்களால் பூஜிக்கத் தகுந்தவரும், லோக குருவும், நீதிசாஸ்திரம் அறிந்தவரும், நீதியைச் சொல்கிறவரும், அங்கிரஸ்ஸினுடைய புத்திரரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், பிதாமகனுமாகத் திகழும் குருவின் நாமங்களை படிப்பவர்கள் ஆரோக்கியமாகவும், பலவானாகவும், ஸ்ரீமானாகவும், புத்திரவானாகவும் திகழ்வார்கள். அத்துடன், அவர்கள் 100 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். பாவங்கள் விலகும்.
எவர் ஒருவர் வியாழக்கிழமையாகிய குருவாரம் அன்று சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் - இவைகளாலும், புஷ்பம், தீபம் முதலான உபகாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜிப்பாரோ, அவ்வாறு பூஜித்து பிராமணர்களுக்கு போஜனமும் செய்து வைக்கிறாரோ, அவருக்கு குருவினால் ஏற்பட்ட பீடைகளும் விலகும்.

thanx - sakthi vikatan

Sunday, May 05, 2013

30 வகை குளுகுளு உணவுகள்

வெயில் கதகளி ஆடும் கால கட்டம் இது. கூடவே, இந்த சீஸனுக்கே உரித்தான அசௌகரியங்களான நாவறட்சி, நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவை வாட்டியெடுக்கும். இவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் வகையில், 30 வகை 'குளுகுளு’ உணவுகளை, சுவையாக தயாரித்து இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
''உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, பூசணி, கேழ்வரகு, எலுமிச்சை, மோர் போன்ற பொருட்களைக் கொண்டு, பல்வேறு உணவு வகைகளை பார்த்துப் பார்த்து செய்து கொடுத்திருக்கிறேன். இவற்றைப்  பயன்படுத்தினால், கோடையின் உக்கிரத்தை நீங்கள் அதிக சிரமமின்றி கடந்து செல்ல உதவிகரமாக இருக்கும்'' என்று ஆருயிர் தோழியாக, அக்கறை ததும்ப கூறுகிறார் தீபா.
பூசணி கூலர்
தேவையானவை: வெள்ளை பூசணி - ஒரு துண்டு, பனங்கற்கண்டு - தேவைக்கேற்ப,
செய்முறை: வெள்ளை பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக்கவும். பிறகு, அதை வேக வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டவும். பனங்கற்கண்டு கலந்து பருகவும்.
நீர்கடுப்பை நீக்கும் பானம் இது! ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பருகலாம்.

சின்ன வெங்காயம் துவட்டல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய்யை காயவிட்டு... நறுக்கிய வெங்காயம், மிளகு - சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கீழே இறக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

 தேங்காய்  வெல்ல பால்
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பால் - கால் கப்
செய்முறை:  பாலைக் காய்ச்சி கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் பால், தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.
இதை தோசை, இட்லி, ஆபத்துடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அல்லது,  அப்படியே பருகலாம். தேங்காய்ப் பால் வயிறு, வாய் புண்களை ஆற்ற வல்லது!

ஜவ்வரிசி பகாளாபாத்
தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், தயிர் - ஒரு கப், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, கேரட் துருவல் - 4 டீஸ்பூன்,  கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேக வைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும்.

 மேங்கோ கப்
தேவையானவை: மாம்பழம் - ஒன்று, தயிர், பால், சர்க்கரை - தேவைக்கேற்ப.
செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைத்து சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கவும். ஒரு சிறிய கப்பில் சிறிதளவு  தயிர், காய்ச்சி வைத்திருக்கும் பால் சேர்த்து, மேலே சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். இதே போல் சில கப்புகளில் செய்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.
இது... இனிப்பும், புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்.

 பச்சைப் பயறு கீர்
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், பால் - ஒன்றரை கப், முந்திரி, பாதாம் - தலா 10.
செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். ஆறிய பின்னர், வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அதனுடன் கலக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதனை அடுப்பில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கினால்... பச்சைப் பயறு கீர் ரெடி!
பச்சைப் பயறு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

 சம்மர் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின்பு பருப்புகளுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சூடான சாதத்துடன் நெய், உப்பு, சிறிதளவு அரைத்த பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட... உடல் குளிர்ச்சி பெறும்.

 லெமன் பானகம்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - ஒன்று, புதினா - சிறிதளவு, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை:  வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்... லெமன் பானகம் ரெடி! இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்... சுவை கூடும்.
கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.

 பாசிப்பருப்பு துவையல்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய்  - 4, தேங்காய் துருவல் - அரை கப், பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு... பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால்... பாசிப்பருப்பு துவையல் தயார்.
இந்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

 கீரைச் சாறு
தேவையானவை:மணத்தக்காளி கீரை - ஒரு கப், மோர் - ஒரு கப்,  மிளகுத்தூள். சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  மணத்தக்காளி கீரையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோடையில் இது அருமருந்து!

 முளைப்பயறு ட்ரீட்
தேவையானவை:முளைகட்டிய பயறு - ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முளைப்பயறை ஆவியில் வேகவைக்கவும் (குக்கரிலும் வேகவிடலாம்). இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்தால்... முளைப்பயறு ட்ரீட் ரெடி!
இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைத்து வயதினரும் சம்மரில் சாப்பிடலாம்.

 நீராகாரம்
தேவையானவை: சாதம் - ஒரு கப், மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதல் நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் மோர், உப்பு சேர்த்துப் பருகவும்,
நீராகாரம் உடல் சூட்டை தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.

 தேங்காய்ப் பால் ரசம்
தேவையானவை: தேங்காய்ப் பால் - ஒரு கப், புளி - நெல்லிகாய் அளவு, தக்காளி - ஒன்று, பூண்டு - 4 பல், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைத்து உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப் பாலை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்... ரசம் தயார். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு பல் சேர்த்து தாளித்து... கொதிக்கவிட்டு இறக்கி வைத்த ரசத்துடன் சேர்க்கவும். மேலே மிளகு - சீரகப்பொடி, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 அரிசி  மோர் கஞ்சி
தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், மோர் - இரண்டு கப், சின்ன வெங்காயம் - 5, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைக்கவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.

 ராகி மோர்க்களி
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், புளித்த மோர் - ஒன்றரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, மோர் மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் தாளிக்கவும். இதில் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, அடுப்பை 'சிம்’மில் வைத்து கிளறவும். நன்கு வெந்து பளபளவென வந்த பின்பு இறக்கி... சிறிய கிண்ணங்களில் பரிமாறவும்.

 ஃப்ரூட் லஸ்ஸி
தேவையானவை: தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 4
செய்முறை: மாதுளை முத்துக்களை அரைத்து தயிருடன் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். பருகும்போது இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.

 பூசணி இட்லி
தேவையானவை: இட்லி மாவு, பூசணி துண்டுகள் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணியை சிறிய துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.
வெயிலுக்கு ஏற்ற காலைச் சிற்றுண்டி இந்த பூசணி இட்லி! இதற்கு கிரீன் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.

முளைகட்டிய வெந்தய களி
தேவையானவை: புழுங்கல் அரிசி - 50 கிராம், முளைகட்டிய வெந்தயம் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் வேகவிடவும். பின்பு பொடித்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அரிசி - வெந்தய விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து களி போல கிளறி சாப்பிடவும்.
உடல் சூட்டை தணிக்கும் களி இது! உடல் நலம் காக்க, இதை தினமும் சிறிதளவு  சாப்பிடலாமே!

 பூசணி பொரியல்
தேவையானவை: வெள்ளை பூசணிக் கீற்று - ஒன்று, மிளகு - 4, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, புளி - கொட்டைப்பாக்கு அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளை பூசணியை சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் பொடிக்கவும். வெந்த பூசணிக்காயுடன் புளிக் கரைசல், உப்பு, வறுத்த அரைத்த பொடி சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய விட்டு, சீரகம் தாளித்து, வேக வைத்த கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

 முளைப்பயறு தோசை
தேவையானவை: முளைகட்டிய பயறு - அரை கப், தோசை மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இந்த தோசை மிகவும் சத்துமிக்கது.

 ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால் ஸ்ட்ரா பெர்ரி பழத் துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம்.
தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

 வெள்ளரி மோர் கூட்டு
தேவையானவை: வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4, கெட்டி மோர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

 அவல் ஃப்ரூட் சாலட்
தேவையானவை: அவல் - ஒரு கப், பச்சை திராட்சை - 10, வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம் பழம் - 10, பப்பாளி - ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் - கால் கப்.
செய்முறை: வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை 5 நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

 புளி பானகம்
தேவையானவை: புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி கொதிக்கவிட்டு, வெல்லக் கரைசல், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நீர் கடுப்பு ஏற்படும்போது கிராமப்புறங்களில் இந்த பானகத்தை பருகுவார்கள். இது சோர்வை நீக்க வல்லது.

 முள்ளங்கி ராய்தா
தேவையானவை: முள்ளங்கி - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி - தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

 மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்
தேவையானவை: கேரட், வெள்ளரிப் பிஞ்சு - தலா ஒன்று, மோர் - தேவையான அளவு, மிளகு - 4, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கேரட், வெள்ளரியை சுத்தம் செய்து... புதினா, மிளகு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை மோருடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துப் பருகவும்.
இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.

 பசுமை சட்னி
தேவையானவை: கொத்தமல்லித் தழை - ஒரு கப், புதினா இலைகள் - அரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித் தழை, புதினா இலைகளை சுத்தம் செய்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்தால்... பசுமை சட்னி தயார்.
வதக்காமல் அப்படியே அரைப்பதால் சத்துகள் வீணாகாது! இது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

 தர்பூஸ் டிரிங்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன்  தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இதை அப்படியே பருகலாம். அல்லது, குளிர வைத்தும் பருகலாம்.

 கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட், எலுமிச்சம் பழம் - தலா ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை கழுவி சுத்தம் செய்து தோல் சீவாமல் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.
இது விட்டமின் 'ஏ’ மற்றும் வைட்டமின் 'சி’ நிறைந்த பானம்!

 லெமன்  ஜிஞ்சர் டிரிங்க்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், தேன் - தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக குறுகிய பின்பு இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக... கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

thanx - aval vikatan

ராமதாஸ்.கைது -போர்க்களமான வட மாவட்டங்கள்!

சித்திரை முழுநிலவுப் பெருவிழா, சித்ரவதைப் பெருவிழாவாக மாறி மரக்காணத்தில் மரண கானம் கேட்டது. சட்டசபையில் ஜெயலலிதா பாய்ச்சல், அரசியல் தலைவர்களுடன் திருமாவளவன் சந்திப்பு, ராமதாஸ் கைது, மீண்டும் வன்முறை... என வடமாவட்டங்கள் பதற்றத்தில் கிடக்கின்றன. ஒவ்வொரு ஸ்பாட்டிலும் நடந்த கொந்தளிப்புகள் பற்றிய கொதிநிலை ரிப்போர்ட் இங்கே... 


சட்டமன்றம் 


''சுய லாபத்துக்காக அப்பாவிப் பொதுமக்களை சாதி மதரீதியாகத் தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்குக்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதக் கருணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்'' - மரக்காணம் கலவரம் குறித்து நடத்தப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. விளைவு? காவல் துறையினரின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸை, போலீஸ் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்தது.  


தைலாபுரம் தோட்டம் 


தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ''மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட காவல் துறையைக் கண்டித்தும் உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரியும் விழுப்புரத்தில் ஏப்ரல் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என அறிவித்திருந்தார் ராமதாஸ்.



 அன்று இரவே விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யான மனோகரன், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியையும் தந்தார். ஆனால், சட்டசபையில் ஜெயலலிதாவின் காரசாரப் பேச்சை அடுத்து, பா.ம.க-வின் ஆர்ப்பாட்டத்துக்கு அவசர அவசரமாக தடை விதிக்கும் வேலையில் இறங்கியது விழுப்புரம் காவல் துறை. 29-ம் தேதி இரவு 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்த நோட்டீஸ், விழுப்புரம் பா.ம.க. அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இது, பா.ம.க. தொண்டர்களை மேலும் கொதிப்படையச்செய்தது.


விழுப்புரம்   


மறுநாள் காலை 7 மணியில் இருந்தே விழுப்புரம் ரயில் நிலையம் அருகே தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விழுப்புரம் நகர எல்லைக்கு ராமதாஸ் வந்ததும், அவரை காவல் துறையினர் தடுத்துக் கைதுசெய்ய முற்பட்டனர். 'ஆர்ப்பாட்டம் நடத்தும்போது கைதுசெய்யுங்கள்’ என்று கூறிவிட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு விரைந்தார். காரில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே, தயாராக இருந்த காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.


 மாலையே விட்டுவிடுவார்கள் என்று, மிகுந்த உற்சாகத்தோடு கைதாகினர் தொண்டர்கள். காவல் துறை வழக்குப் பதியப்போகிறது என்ற செய்தி மதியம் போல் தொண்டர்களிடம் காட்டுத் தீயாகப் பரவ, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபத்தின் மதில் சுவற்றில் ஏறிக்குதித்து தப்பி ஓடத் தொடங்கினர்.


இரவு 7 மணிக்கு, விழுப்புரம் மாவட்டக் குற்றவியல் நீதிபதி முகிலாம்பிகை முன்பு ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டனர். சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், வன்முறையைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் 384 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு 15 நாள் சிறைக் காவலில் திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர். 'ராமதாஸுக்கு முதுகு வலி இருப்பதால், அவர் போலீஸ் வாகனத்தில் வர முடியாது. சொந்த வாகனத்தில் வர அனுமதிக்க வேண்டும்’ என்று அனுமதி கேட்டனர். சொந்த வாகனத்தில் காவல் துறை பாதுகாப்போடு திருச்சிக்குச் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.


ராமதாஸ் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, செஞ்சியில் ஐந்து பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்துக் கணக்கை ஆரம்பித்தனர். அடுத்தடுத்து திண்டிவனத்தில் சாலை மறியல், முகையூரில் மரங்கள் வெட்டிச் சாய்த்தல் என வன்முறை காட்டுத் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் சம்பத். 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் காவலில் ஈடுபட்டபோதும், இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 36 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. விழுப்புரம் அருகே வாணியம்பாளையத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் அலுவலகம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.  


திருவண்ணாமலை 


திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் எட்டு இடங்களில் பா.ம.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். வந்தவாசி, ஆரணி, போளூர், கீழ்பென்னாத்தூர், சேத்பட் ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளைப் பதம் பார்த்தனர். மாவட்டம் முழுக்கக் கிட்டத்தட்ட 30 இடங்களில் மரங்களை வெட்டிப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்தனர். இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 13 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அய்யம்பாளையம் அருகே ஹீரோ ஹோண்டா வண்டிகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி மீது சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 90 சதவிகிதத் தீக்காயங்களுடன் லாரி ஓட்டுனர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மரம் வெட்டியது, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது என 167 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கடலூர் 


பா.ம.க-வின் கோட்டையாகத் திகழ்ந்த கடலூரில் பெரியளவில் போராட்டங்கள் வெடிக்கவில்லை. காரணம், அது வேல்முருகன் வசம் வந்துவிட்டதுதானாம். ராமதாஸ் விழுப்புரத்தில் கைதுசெய்யப்பட்ட நேரத்தில், 'மாலை 5 மணிக்குள் ஐயா விடுதலை செய்யப்படாவிட்டால், கடலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், சாலைமறியல் நடத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை கடலூர் பா.ம.க-வினர் நிறைவேற்​றினர். அதனால், மாவட்டம் முழுவதும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், சேத்தியாதோப்பு, நெய்வேலி போன்ற பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு 300 தொண்டர்கள் கைதானார்கள். கடலூர் மாவட்டம் முழுக்க 20 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து சுக்குநூறாக்கப்பட்டன.


புதுச்சேரி 

ராமதாஸை உடனடியாக விடுவிக்கக் கோரி புதுச்​சேரியில் பூரணாங்குப்பம், அரியூர், திருபு​வனை மற்றும் மதகடிப்பட்டு ஆகிய இடங்களில் பா.ம.க-வினர் சாலைமறியல் நடத்தினர். மறியல் போராட்டத்தின்போது நான்கு பேருந்துகள், இரண்டு வேன்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக சில மணி நேரங்களுக்கு அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தி​வைக்கப்பட்டன.

வேலூர் 

30-ம் தேதி மாலை முதலே வேலூரில் பா.ம.க-வினர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளைத் தாக்கத் தொடங்கினர். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில், 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம் அடைந்தன. இருவருக்கு மண்டை உடைந்தது. திருப்பத்தூரில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தை திப்பம்பட்டி என்ற இடத்தில் வழிமறித்த பா.ம.க-வினர், பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு தீயிட்டுக் கொளுத்தினர். சென்னையில் இருந்து வேலூருக்கு வந்த அரசுப் பேருந்து, வாலாஜா அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் 

இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு டு திருக்கழுக்குன்றம் சாலை வழியாகச் சென்ற  ஐந்து அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. கூடம் என்ற பகுதியில் 15 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி டவுன் பஸ்ஸை எரித்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் சென்ற பயணிகள் பேருந்தை தாமல் பகுதியில் மடக்கி, இரவு 10.45 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். திருப்பதிக்கு செல்லும் பேருந்து ஒன்றும் கொளுத்தப்பட்டது. பென்னேரிக்கரை என்ற பகுதியில் தனியார் பேருந்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 33 பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பா.ம.க-வினர் கைதுசெய்யப்பட்டனர்.
வடக்கு மாவட்டங்களில் மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்க வேண்டிய தலையாய கடமை காவல் துறைக்கு இருக்கிறது.

- ஜூ.வி. டீம் 


      ''ஆட்சி அமைக்க 18 தொகுதிகள்தான் தேவை!''


தடாலடி ராமதாஸ்

விழுப்புரத்தில் கைதுசெய்யப்பட்ட ராமதாஸ், திருச்சி சிறைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன் நமக்கு கொடுத்த பேட்டி.


''உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பற்றி..?'' 

(சிரித்துக்கொண்டே) ''ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இதுகுறித்து ஜெ.ஜெ. அவர்களைத்தான் கேட்க வேண்டும்.''

''கடந்த முறையைவிட இந்த முறை சித்திரை திருவிழாவுக்கு ஏன் அதிக கெடுபிடிகள்?'' 

''அங்கே திரண்ட கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டனர். அதனால், அரசியல்ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்ற வெறிதான்.''


''மற்ற கட்சிகள் அனைத்தும் பா.ம.க-வைத் தனிமைப்படுத்துவதாக நினைக்கிறீர்களா?'' 

''தேசியக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது; திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் தனிமைப்படுத்திவிட்டோம். எங்களை யார் தனிமைப்படுத்த முடியும்? எந்தக் கட்சி எங்களை வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும், யாருடனும் கூட்டணி சேர மாட்டோம். கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும் என்ற கலைஞர் வசனம்போல (சிரிக்கிறார்) எங்களுடைய முடிவில் மாற்றம் கிடையாது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும், தி.க. போன்ற சில அமைப்புகளும் எங்களுக்கு எதிராக இருக்கின்றனர். எங்கள் தரப்பில் எவ்வளவோ நியாயம் இருந்தாலும் எங்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர்.''


''சித்திரைத் திருவிழாவின்போது தொல்பொருள் சின்னமான மாமல்லபுரம் கோயில் மீது தொண்டர்கள் ஏறி சேதப்படுத்தினார்களே?''
'

'லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடும்போது, அதை யாராலும், ஏன் எங்களால்கூட கட்டுப்படுத்த முடியாது.''

''2016-ல் உங்கள் மகன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது எந்த அளவுக்கு சாத்தியம்?'' 

''என் மகன் தலைமையில் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் 2016-ல் நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி அமையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் சுலபமாக நாங்கள் வெற்றிபெறுவோம். அதன் பிறகு எங்களுக்குத் தேவையானது 18 இடங்கள். தெற்கே அல்லது மேற்கே தேசியக் கட்சிகளோடு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லாதவர்கள் ஒருங்கிணைத்து சுலபமாக ஆட்சி அமைப்போம்.''


''வரும் நாடாளுமன்றத் தேர்தலில்?'' 

''10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது நம்பிக்கை. உறுதியாக ஆறு இடங்களில் வெற்றிபெறுவோம்.''



''உங்கள் தலைமையில் கூட்டணி அமைப்பீர்களா?'' 

''தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக, 46 ஆண்டு காலமாக தமிழக மக்கள் எதிர்பார்த்த ஒரு கூட்டணியை பா.ம.க. அமைக்கும். இதுவரை மாற்றுக் கட்சிகள் வந்தது இல்லை. கிட்டத்தட்ட 46 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைச் சீரழித்து சின்னாபின்னப்படுத்திவிட்டன. அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிட்டத்தட்ட 55 சதவிகித வாக்காளர்களுக்கு வந்துவிட்ட நிலையில், அதைப் பூர்த்திசெய்கிற ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும்.''

''சட்டசபையில் ஜெயலலிதா, உங்கள் கோரிக்கையை ஏற்று வழக்கு போட்டுள்ளோம் என்றாரே?'' 

''மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவங்களை காவல் துறையினர் அப்பட்டமாக மறைத்து, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையைத்தான் முதல்வர் படித்துள்ளார்.''



 குரு கைதானது பழைய கேஸ்! 

ராமதாஸ் கைதுசெய்யப்பட்ட அன்றைய தினமே, எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்த காடுவெட்டி குருவும் கைதுசெய்யப்பட்டார். மாலை 6.30 மணிக்கு இரண்டு சுமோ மற்றும் ஒரு டெம்போ டிராவலர் சகிதம் வந்த மாமல்லபுரம் போலீஸார், எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குள் நுழைந்து காடுவெட்டி குருவை கைதுசெய்தனர். கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக இப்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார் குரு.

 அமுக்கப்பட்ட ஆறுமுகம்! 

 காடுவெட்டி கைதான அதேவேளையில், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தைக் கைதுசெய்தனர் மாமல்லபுரம் போலீஸார். இரவு 7 மணிக்கு பாலூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டார். சித்திரை விழாவுக்குக் காவல் துறையால் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறியதற்காக அவர் மீது வழக்கு. 10 மணியைக் கடந்து விழா நடத்தியது, புரதான சின்னங்களைச் சேதப்படுத்தியது, சுற்றுசூழல் மாசுபடுத்தியதை சுத்தம் செய்யாதது, திறந்த வகை வாகனங்களில் ஆட்களை கொண்டுவந்தது ஆகியவை குற்றச்சாட்டுகள். திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை,  வரும் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 மரக்காணத்தைத் தொடர்ந்து வந்தவாசி... 

 மரக்காணம் கலவரம் நடந்து இரண்டு தினங்கள் கழித்து... கடந்த 27-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அத்திப்பாக்கம் காலனியைச் சேர்ந்த சிலம்பரசன், கார்த்திக் என்ற இருவர் மர்மக் கும்பலால், கத்தி மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் கடுமையாகத் தாக்கப்பட்ட சிலம்பரசன், சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இதனால், வந்தவாசியில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நீடிக்கிறது.

''மரக்காணத்தில் நீங்க அடிச்சீங்களே... இப்போ நீங்க வாங்கிக்கங்க'' என்ற வார்த்தைகளைத் தாக்குதலின்போது குறிப்பிட்டதாக, சிலம்பரசன் தரப்பு கூறினர். இதனால், விசாரணைக்குப் பின் வழக்குப் பதிவதாக காவல் நிலையத்தில் கூறப்பட்டது. இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் குடியரசு கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட  பல்வேறு தலித் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது, வந்தவாசி காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட எஸ்.பி. முத்தரசி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து கார்த்திக், சிலம்பரசனைத் தாக்கியதாக செம்பூரைச் சேர்ந்த குப்பன், குமார் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர். இதைக் கண்டித்து சென்னாவரம், மாம்பட்டு, செம்பூர் பாதிரி உள்ளிட்ட இடங்களில் பா.ம.க-வினர் போராட்டம் நடத்தினர். அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, வந்தவாசியில் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
வன்னியர், தலித் ஆகிய இரு சமூகத்தினரும் கணிசமாக வாழும் வந்தவாசியில் நடந்த இந்தச் சம்பவம், நடுநிலையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

THANX - JU VI 

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 10




சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிட்டதோடு, அங்கு வேலை செய்த ஊழியர்களின் நலனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கென சில நிபந்தனைகளையும் விதித்தது.



ஊழியர்கள் அனைவரும் தொழிலாளர் நலச் சட்டத்தின் படி ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிவாரணம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என குறிப்பிட்ட நீதிமன்றம், அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு ஒவ்வொரு வருடத்துக்கு 16 வேலை நாட்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். ஆலை மூடப்பட்டதால பணியாளர்களின் குடும்பம் தவித்து போகாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். தூத்துக்குடியை சுற்றிலும் உள்ள பகுதியில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அந்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த தீர்ப்பு ஆலை நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. கோடிக்கணக்கில் முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலையை திடீரென மூடினால் அலுமினிய உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். அதனால் ஆலையை உடனடியாகமூட வேண்டும் என்பதை மட்டுமாவது மூன்று வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி ஏற்கவில்லை. இதனால் ஆலை மூடப்பட்டது.



இந்த தகவல் கிடைத்ததும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்களின் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்த இந்த வெற்றியை நினைத்து மகிச்சி அடைந்தார்கள். தூத்துக்குடி நகரமே மிகுந்த உற்சாகம் அடைந்தது. தொடக்கத்தில், ஆலை செயல்பட தொடங்கினால் தங்களுக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என நம்பி ஏமாந்து போயிருந்த வணிகர்கள், இந்த உத்தரவை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக அவர்கள் தங்களின் வாழ்த்துக்களை இந்த போராட்டத்தில் ஈடுபட்டாவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். 

வீழ்ச்சியடைந்த பங்குகள்



ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் அறிந்ததும் அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் அதிர்ந்தார்கள். அதற்கு ஏற்ப தேசிய பங்குச் சந்தையில் ஸ்டெர்லை நிறுவனத்தின் பங்குகள் தேக்கம் அடைந்து 8 சதவிகிதம் சரிவை சந்தித்தது. இருப்பினும் வழக்கு விசாரணையை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வந்ததால் விரைவிலேயே அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவில் இருந்து மீண்டது.



இந்தியாவில் அலுமினிய உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டத்தால் சர்வதேச அளவில் அலுமினியத்தின் விலை உயரும் என்று வர்த்தகர்கள் பதறினார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த சமயத்தில் கருத்து தெர்வித்த வர்த்தக வல்லுனர்கள், 'இந்த ஆலையின் உற்பத்தி என்பது சர்வதேச அளவில் மிகவும் சொற்பம். அதனால் இங்கு உற்பத்தி முடங்கியதால் சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை விண்ணை முட்டி விடும் என்று சொல்வது அபத்தமானது' என இந்த விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.


உச்ச நீதிமன்றத்திற்கு போன ஆலை நிர்வாகம்



ஆலையை சென்னை உயர் நீதி மன்றம் மூட உத்தரவிட்டதும் உடனடியாக டெல்லிக்கு சென்று உச்ச 
நீதிமன்றத்தின் கதவை தட்டியது, ஸ்டெர்லைட் நிர்வாகம். 'மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை ஆகியவற்றின் அனுமதியை பெற்று ஆலை இயக்கப்பட்டது. இந்த ஆலையினால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தேசிய மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் சான்று கொடுத்து இருக்கின்றன.

இந்த அமைப்புகள் கொடுத்த பரிந்துரைகளை எல்லாம் தவறாமல் நிறைவேற்றி வருகிறோம். ஆனால் இது எதையுமே சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஆலையை மூட உத்தரவிட்டு விட்டது, அதனால் ஆலையை மீண்டும் இயக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது. இதனால் ஆலை நிர்வாகம் நிம்மதி அடைந்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை 20 வாய்தாவாக நடைபெற்றது. அதன்பின்னர், 2012 அக்டோபர் 1 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பின் நிறைவு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.



உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ ஆலையின் வாதங்களுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்தார். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர் மட்டும் அல்லாமல் ஸ்டெர்லைட் கழிவுகளின் மாதிரிகளையும் வைகோ சேகரித்தார். அதனை அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் என்பவருக்கு அனுப்பி அதனை ஆய்வு செய்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என கேட்டு இருந்தார்.



 
ஆலைக்கழிவு
சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் அந்த மாதிரிகளை பரிசோதனை செய்து ஒரு அறிக்கையை வைகோவுக்கு அனுப்பினார். அதில், 'ஆலையை சுற்றிலும் எடுக்கப்பட்ட நீரை பயன்படுத்தினால் விளைநிலங்கள் அடியோடு நாசம் அடையும். நச்சு கலந்த தண்ணீரை குடித்தால் கால்நடைகள் இறந்துபோகும். மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, ஆயுள் காலம் குறையும்" என்று அதில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். அவர் தந்திருந்த அந்த பரபரப்பான அறிக்கையை வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.


இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்த குழுவின் அறிக்கை ஆலை நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருந்தது. அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவுக்கு உள்ளேயே இருக்கிறது. தாமிரக்கழிவுகள், சல்ஃபர், ஆர்சனிக் கழிவுகளால் மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை. குடிநீரும் மாசு அடைந்து இருக்கவில்லை என குறிப்பிட்டனர்.



இந்த வழக்கைன் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்து தூத்துக்குடி நகர மக்கள் பரபரப்பாக காத்திருந்தார்கள். ஆனால், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே அதிரடியில் இறங்கி ஆலையை மூடியது தமிழக அரசு..

அந்த விவரம் நாளை பார்க்கலாம்...


diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html


 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html


மரியான் -ஏ.ஆர்.ரஹ்மான் + யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி!!

.ரஹ்மானிடம் பேசி எவ்வளவு நாட்களாகிவிட்டன?

 
''என் கால்ல எத்தனை சக்கரங்கள் கட்டப்பட்டிருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஓடிக்கிட்டே இருக்கேன். அதான்... இந்த வருஷம் 'மரியான்’, 'கோச்சடையான்’, 'ஐ’னு தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்துப் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப நல்ல விஷயம்ல!'' எனப் புன்னகைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


'' 'வந்தே மாதரம்’ தொடங்கி இப்போ 'மரியான்’ வரை இயக்குநர் பரத்பாலான்னா உங்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தானே?''



''அப்படியும் வெச்சுக்கலாம். எனக்கு அமைஞ்ச நல்ல விஷயங்களில் என் நண்பர்களும் உண்டு. பரத்பாலா, மணிரத்னம், திருலோக், ராஜீவ் மேனன்னு நிறைய நல்ல நண்பர்களைக் கடவுள் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு மைல்கல் இருக்கும். அப்படி என்னோட மைல்கல்லைத் தாண்டியும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுபோனது இந்த நண்பர்கள்தான். 



நான் ஜிங்கிள்ஸ் பண்ணும்போதே அது சுமாரா இருந்தா, என் நண்பர்கள் யாரும் திருப்தி அடைய மாட்டாங்க. 'இன்னும் நல்லா வேணும்’னு சொல்லிச் சொல்லி என்னைக் கடுமையா உழைக்கவெச்சாங்க. 'வந்தே மாதரம்’ ஆல்பம் இயக்கியவர் பரத்பாலா. இப்ப அவரே 'மரியான்’ பண்றதால், நிறைய எதிர்பார்ப்பு வந்துருச்சு. சினிமாவை இயக்குறதுக்காகக் கிட்டத்தட்ட 10 வருஷம் உழைச்சிருக்கார். அந்தஉழைப்பின் பலன் 'மரியான்’ல தெரியும். பரத் பாலாவுக்கு இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் நிறையச் சாதிப்பார்!''



'' 'மரியான்’ படத்தில் உங்க இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கார். எப்படி அமைஞ்சது இந்தக் கூட்டணி?''



''கடல்ராசா பாட்டைக் கேக்கறீங்களா? யுவனோட குரல்ல எப்பவுமே ஒரு ஜீவன் இருக்கும். அவரோட குரலைக் கேட்கும்போது எல்லாம் 'இவரை எப்படியாவது நம்ம இசையில் ஒரு தடவை பாட வெச்சி டணும்’னு நினைச்சுட்டே இருப்பேன். அது இப்போதான் அமைஞ்சது. யுவனே கடல்ராசாவா மாறிப் பாடி அசத்திட்டார்!''



''வீட்டுக்குள்ளேயே சத்தம் இல்லாம இசை வாரிசு உருவாகுதா? திரைப்பட விழாவில் உங்க மகன் அமீன் பிரமாதமா பியானோ வாசிச்சாரே?''



''அவர் அந்த திரைப்பட விழாவில் பியானோ வாசிச்சது எனக்கே தெரியாது. என்கிட்ட அவர் சொல்லவும் இல்லை. இன்டெர்நெட்ல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் மேடையிலேயே அசத்திட் டார். கடவுள்தான் அவரை வழிநடத்தணும். இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கார். கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!''


''இளம் இசையமைப்பாளர்கள் ஒருபக்கம் மிரட்டுறாங்க. இன்னொரு பக்கம் நிறைய இளைஞர்கள் குட்டிக் குட்டியா ஜிங்கிள்ஸ் போட்டு யூ டியூப்ல ஹிட் ஆகிடுறாங்களே?''


''ஆமா, நல்லதுதானே? இப்ப வர்ற இளைஞர்களுக்கு நிறையத் திறமை, தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கிற துக்கு அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நான் சின்னப் பையனா இருந்தப்போ, அண்ணா சாலையில் ஒரே ஒரு கடையில்தான் 'மியூஸிக் மேக்கர்’ங்கிற புத்தகம் கிடைக்கும். அதை வாங்க நான் சைக்கிள் எடுத்துட்டு அலைவேன். இப்போ உள்ள பசங்களுக்கு கூகுள், யூ டியூப் மூலமா எல்லாத்தையும் எளிதாக் கத்துக்க முடியுது. அட, அரேபியன் ஸ்டைல் மேக்அப்பைக்கூட வீட்ல உட்கார்ந்துக் கிட்டே பண்ணிடுறாங்க. இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா உழைச்சா, அதில் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்!''



''இசை படிக்கிறவங்க எல்லாரோட கனவும் பெரும்பாலும் சினிமாவாதான் இருக்கு. ஆனா ஹாலிவுட், இரானியப் படங்கள் எல்லாம் பாடல்களே இல்லாமல் வந்தாலும் ரசிக்கவைக்குது. இந்திய சினிமாவில் மட்டும்தான் பாடல்கள் இருக்கு. சினிமாவுக்கு இன்னும் பாடல்கள் தேவையா?''


''இந்திய சினிமாவில் பாட்டு இருக் கிறதால்தான் இன்னும் கெட்டுப் போகாம இருக்கு. (சிரிக்கிறார்) ஒரு நல்ல பாட்டு நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது. ஒரு பாட்டைப் பாடினாலே நம்மோட காதல், சோகம், மனைவி, குடும்பம்னு எல்லா உணர்வுகளும் வந்துட்டுப் போகுது. 


அதனால பாட்டு எப்பவுமே நல்ல விஷயம்தான். ஆனா, இப்போபாடல் களும் ஒரு மாதிரி ஃபார்முலாவுக்கு உள்ளே சிக்கிக்கிச்சு. அதை உடைக்கணும்னு நான் ஆசைப்படுறேன். மத்த வங்க கதையில் நான் வேலை பார்க்கும்போது அது சாத்தியம் இல்லை. அதனால், நானே கதை பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



''இயக்குநர் ரஹ்மான்..! ஆச்சர்யமா இருக்கே?''


''இயக்குநர் ஆகணும்னு ஆசை தான். ஆனா, அதுக்கு இசையை மறந்து நிறைய விஷயங்களில் கவனம் செலுத் தணும். அதில் எனக்கு இஷ்டம் இல்லை. அதனால் கதை, திரைக்கதை மட்டும் பண்ணியிருக்கேன். என் நண்பர்கள்கிட்ட முதல்ல சொல்லிப் பார்த்தேன். அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது. தயாரிப்பாளரும் கிடைச்சிட் டாங்க. அடுத்த வருஷம் என் கதையை யாராவது இயக்குவாங்க. படம் இசை, குடும்பம் சம்பந்தப்பட்டதா இருக்கும். ஹீரோ, ஹீரோ யின் மாதிரியான ஃபார்முலா விஷயங்கள் இருக்காது. ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்!''


''நீங்க மலையாளப் படத்தில் நடிக்கப்போறதா நியூஸ் வந்துச்சே?''



''அப்படியா... எனக்கு அப்படி எந்த ஐடி யாவும் இல்லை. இருக்கிற வேலைகளைப் பார்க்கவே எனக்கு நேரம்இல்லை. இதில் எங்கே நடிக்க? அதே மாதிரிஅமெரிக்கா வில் செட்டில் ஆகப்போறேன்னு எழுது றாங்க. அமெரிக்காவில் எனக்கு ஒரு வீடு, ஒரு ஸ்டுடியோ இருக்கு. இங்கே என்ன வேலை செய்றேனோ, அதையே அங்கேயும் செய்றேன். அமெரிக்கா எனக்கு வசதியா இருக்கு. ரோட்லஃப்ரீயா நடந்து போக லாம். ரோட்டுக் கடையில் காபி சாப்பிட லாம். யாரும் தொந்தரவு பண்றதில்லை. எனக்கு அதுதான் வேணும். அதனால் வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் இருக்கிறேன். அவ்ளோதான்!''


''எங்க எல்லாருக்குமே ரிலாக்ஸ் பண்ண ரஹ்மான் பாடல்கள் இருக்கு. நீங்க ரிலாக்ஸ் பண்ண என்ன பண்ணுவீங்க?''



''(சிரிக்கிறார்) பாட்டே கேட்க மாட்டேன்... ஒரு ரூம்ல அமைதியா உட்கார்ந்து சும்மா யோசிப்பேன். செம ரிலாக்ஸ் ஆகிருவேன்!''


''இத்தனை வருஷம் ஆகியும் இன்னொரு ரஹ்மான் வரவே இல்லை. உங்க இடத்தை யார் பிடிக்க முடியும்னு நினைக்கிறீங்க?''


''யார் நினைச்சாலும் பிடிக்க முடியும். என் இடத்தைப் பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும் மக்களோட அலைவரிசையும் சிங்க் ஆச்சுன்னா, நாளைக்கு என் இடத்தில் நீங்க இருப்பீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள் கேட்டா, அது நல்ல பாட்டு. அவங்க கேக்கலைன்னா, அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான். அதை மனசுல வெச்சுட்டுதான் வேலை பார்க்கிறேன்!''  


''பாடல்களுக்கு ரொம்ப மெனக்கெடுவீங்க. மாறுவேஷத்தில் விதவிதமான சத்தங்களைத் தேடிச் சுத்துவீங்கன்னு கேள்விப்பட்டோம்?''


''நானா? நான் ஒண்ணும் ரஜினிகாந்த் இல்லைங்க. அவர்தான் அமைதியான இடம் தேடி அப்படி எல்லாம் விதவிதமா சுத்துவார். எனக்கு டியூன் வேணும்னா, இருக்கிற இடத்திலேயே அமைதி ஆகிருவேன். எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு கணக்கு எதுவும் இல்லை. அமைதியா இருக்கும்போது கிடைக்கிற சக்தி வேற எதிலேயும் கிடைக்காது!''


''ரஜினி, கமல் ரெண்டு பேரிடமுமே பழகி யிருக்கீங்க... அவங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயம் என்ன?''


''ரஜினி சார் எந்த முடிவையும் யோசிச்சு எடுக்கமாட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள இருக்கிற ஆன்மிக மனசு என்ன சொல்லுதோ அதைவெச்சு முடிவு எடுப்பார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதில் மனிதத்தன்மைஇருக் கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.


 கமல் சார் மூணு தலைமுறைக்கு சாதிக்க வேண்டியதை ஒரே ஆளா சாதிச்சுட்டார். அப்புறம் நீங்க நம்புவீங்களான்னு தெரியலை... ரெண்டு பேர்கிட்டயும் நான் அவ்வளவாப் பேசினதே இல்லை. 'கோச்சடையான்’ பாட்டுகளுக்காக டியூன் ரெடி பண்ணும்போது ரஜினி சார்கிட்ட கொஞ்சம் பழகினேன். ஒரு பாட்டில் அவரைப் புகழ்ந்து அவரே சொல்ற மாதிரி ஒரு வசனம் வரும். அதைச் சொல்றதுக்கு அவ்ளோ கூச்சப்பட்டார். ரொம்ப வற்புறுத்தி அந்த வசனத்தைப் பேசவெச்சோம். அந்த எளிமைதான் ரஜினி!''  



''கலையில் சாதிச்ச பலரும் அடுத்த கட்டமா ஏதோ ஒண்ணைத் தேடுறாங்க. ரஹ்மான் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கிற விஷயம் என்ன?''


''அது தெரிஞ்சாதான் தேடிப் பிடிச்சிருவேனே? ஏதோ ஒண்ணைத் தேடி ஓடிட்டே இருக்கேன். என்னோட தேடல் முடியும்போது எல்லாமே போதும்னு நானே நின்னுடுவேன். எனக்குனு எந்த ஏக்கமோ, ஆசையோ கிடையாது. எல்லாத்தையும் இறைவன் கையில் கொடுத்தாச்சு. அவர் வழிநடத்துவதால்... சந்தோஷம், துக்கம் எல்லாம் ஒரே மாதிரிதான் கடந்துபோகுது.


கோபம், சோகம், பொறாமை எல்லாமே நம்மைப் பலவீனப்படுத்தும் விஷயங்கள். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தும்போது, இந்தக் குணங்கள் கொஞ்சம்கொஞ்சமாக் கரைஞ்சுபோயிடும். நாமளும் வேலையில் கவனம் செலுத்தி ஜெயிக்கலாம்!''


''என்ன இருந்தாலும், இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்குறது கஷ்டமாச்சே?''


''நானும் மனுஷன்தான். எனக்கும் தடுமாற்றங்கள் வரும். ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புகளைப் பத்தி யோசிக்கும்போது நாமெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப் போட்டுட்டு வேலை பார்க்கக் கிளம்பிடுவேன்!''


thanx - vikatan


readers view

1.ரஹ்மானோட தன்னடக்கம் எந்த இசையமைப்பாளருக்கும் கிடையாது என்பதை தான் இந்த கட்டுரை சொல்கிறது. வாழ்த்துக்கள் ரஹ்மான். இந்திய இசையை முதன் முதலாக உலக அரங்கிற்கு எடுத்துசென்று, உலக நாயகனுக்கு முன்னதாக ஆஸ்கர் வாங்கி ஆப்பு வைத்து, நிறைய பாடகர்களுக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கொடுத்து, எண்ணிலடங்கா வாத்தியங்களின் வெளிப்பாடுகளை செவிக்கு தந்த நீங்கள் ஒரு 'Break Thru'.


2/ இளையராஜாவை வம்பிழுக்காமல் இருக்க முடியவில்லை.....

ஒரு பொங்கல் நாள் சன் டிவி நிகழ்ச்சியில் இளையராஜா சொன்னார்... நன்கு நினைவு இருக்கிறது. எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று க்யூவில் நிற்கிறார்கள். வேறு நாதியே இன்றைக்கு இசைத் துறையில் கிடையாது, அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால், நான் அமைப்பது தான் இசை, அதை கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி.. வேறு வழியில்லை.... என்றார்....

அன்றைக்கு நினைத்தேன்... கடவுள் என்று ஒருவர் இருப்பதை மறந்து இப்படிச் சொல்கிறாரே என்று... அதன் பிறகு அவர் மேல் இருந்த மரியாதையே போச்சு...

இந்த பேட்டியைப் படிக்கும் போது ரஹ்மானின் அடக்கம் பிரமிப்பூட்டுகிறது.... அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது... வாழ்க வளமுடன். 



3. இசைஞானியின் சாதனையை ஒரு காலத்திலும் எந்த ஒரு ரகுமானாலும் தொட்டு பார்க்க கூட முடியாது என்பதே உண்மை.... சிறிய உதாரணமாக எடுத்து கொள்ளுங்கள், ரஜினி படமாகட்டும், கமல் படமாகட்டும், மணிரத்தினத்தின் படமாகட்டும்... இசைஞானியின் இசையில் வெளிவந்தது போல் மற்ற இசைஅமைப்பாளர்கள் இசையில் வந்தவை நிலைத்து நிற்கவில்லை என்பதே உண்மை... ரஜினியின் சொந்த படமான வள்ளி படத்தில் வந்த யாதொரு பாடலுக்கு இணையாக , மற்ற இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த ரஜினி படங்களில் பாடல்கள் நிலைக்க வில்லையே... ரகுமானின் இசையில் பாடல்கள் தற்காலிக வெற்றி நிச்சயம்... ஆனால் இசைஞானி இசையில் தான் பாடல்கள் மனதில் அப்படியே படிந்து விடும்... அதாவது, பிறந்தவருக்கும் , வளர்பவர்களுக்கும், வளர்ந்து முதிந்தவர்களுக்கும், இசைஞானி அவர்களின் தாலாட்டு இல்லாது உறக்கம் கிடையாது...


4