Sunday, March 29, 2015

கு அழகிரிசாமி யின் ” இரண்டு பெண்கள் ” ஒரு கில்மாக்கதையா? - சாருநிவேதிதா அலசல்

கோவில் திருவிழாக்களில் உறுமி மேளமும் நையாண்டி மேளமுமாக அடித்துப் பட்டையைக் கிளப்புவார்கள் அல்லவா? ஆட்டமும் தூள் பறக்கும். ஆடியவர், அடித்தவர், பார்த்தவர் எல்லோருமே அப்போது ஒரு உச்சகட்ட பரவச நிலையில் இருப்பார்கள். கு. அழகிரிசாமியைப் படிக்கும்போது அப்படிப்பட்ட உணர்வே ஏற்பட்டது. அதோடு அவரது கிண்டல், நையாண்டி எல்லாமும் சேர்ந்து ஏதோ வசியம் செய்யப்பட்டவர்களைப் போல் ஆகிவிடுகிறோம். இப்பேர்பட்ட எழுத்து வன்மை கொண்ட கு. அழகிரிசாமியின் பெயர்கூட இன்றைய தலை முறைக்குத் தெரிந்திருக்குமா என்று வருத்தத்துடன் யோசித்தேன். அதிலும் புதுமைப்பித்தன் இவ்வளவு பரவலாக அறியப் பெற்றிருக்கும்போது கு.அழகிரிசாமியின் பெயர்கூடத் தெரிந்திராத நிலை ஆச்சரியத்தையே அளிக்கிறது. 
வெறும் 47 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த கு.அழகிரிசாமி (1923–1970), சிறுகதைகளுக்காகவே அறியப்பட்டாலும் இசை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஓவியம், பத்திரிகை ஆசிரியர் (மலேஷியாவில் ஐந்து ஆண்டுகள் தமிழ் நேசன் பத்திரிகையில் பணி) என்று பல்வேறு துறைகளில் இயங்கித் தடம் பதித்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் கீர்த்தனைகளை எப்போதும் முணு முணுத்துக்கொண்டே இருப்பார் என்று அவரது பால்யகால நண்பரான கி.ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். கர்னாடக இசையை முறையாகக் கற்றவர். காருக்குறிச்சி அருணாசலத்தின் நெருக்கமான நண்பர். அவருக்காக அழகிரிசாமி எழுதிய இரங்கல் கட்டுரை, சங்கீத ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. தியாகராஜரின் கீர்த்தனைகளில் இருந்தே அவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் என்கிறார் கி.ரா.  அதன் விளைவுதான் திரிவேணி என்ற கதை. 
அழகிரிசாமியும் கி.ரா.வும் ஒரே ஊர்க்காரர்கள் (இடைசெவல்). கி.ரா.வைப் போலவே அழகிரிசாமியின் தாய்மொழியும் தெலுங்கு. கி.ரா.வுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்களே தனிப் புத்தகமாக வந்துள்ளது. அழகிரிசாமி, கரிசல் மண்ணைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் எழுத்து எனக்குத் தஞ்சை மாவட்டத்து எழுத்தாளர்களையே நினைவூட்டியது. தஞ்சை எழுத்தாளர்களிடம் மட்டுமே அதிகம் காணக்கூடிய கிண்டலும், கேலியும், சுய எள்ளலும், பெண்கள் மீதான அதீத ஆர்வமும், அழகிரிசாமியின் கதைகளில் அனாயாசமாகத் துள்ளி விளையாடியதால் அப்படி நினைக்கத் தோன்றியது.

 
இரண்டு பெண்கள் என்ற கதை. கதை நடப்பது நாற்பதுகள் என்று யூகிக்க முடிகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் கல்யாணம் ஆகாத ஒரு இளைஞன். மேற்கொண்டு அழகிரிசாமி சொல்கிறார்: ‘‘மனித வாழ்க்கைக்கு மதுரையென்றாலும் ஒன்றுதான்; சென்னையென்றாலும் ஒன்றுதான். இரண்டும் ஒன்றுபோலவே மோசமாக இருக்கும்போது எங்கே இருந்தால் என்ன? மதுரையிலும் வீட்டு வாடகை அதிகம்; சென்னையிலும் வீட்டு வாடகை அதிகம்… மதுரையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரம்மச்சாரிகள் பேசக் கூடாது; சென்னையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரம்மச்சாரிகள் பேசக்கூடாது. மதுரையிலும் காதலிக்க வேண்டுமென்று விரும்பாத ஆண்கள் இல்லை. சென்னையிலும் காதலிக்க வேண்டுமென்று விரும்பாத ஆண்கள் இல்லை.”
மயிலாப்பூரில் ஒரு அறையை வாடகையை எடுத்துக்கொண்டு தங்குகிறான் இளைஞன். நிறைய வாசிப்பவன். தெருக்கார இளைஞர்கள் யாரும் அவனோடு பேசுவதில்லை. கிழவர்கள் மட்டும் பேசக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு பேச இளைஞனுக்கு விருப்பம் இல்லை. கிழவிகளோடும் வாலிபப் பெண்களோடும் மட்டும்தான் பேசலாம். ஆனால், அவர்களோடு பேசினாலும் உலகம் சந்தேகப்படும். சிறுவர்களோடு பேசலாமா என்றால், ‘’ஆசாமி கல்யாணமாகாதவன் என்று தெரிந்துகொண்டால், என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு சிறுவனும் தன் தன் அக்காளுடைய காதல் கடிதத்தைக் கொண்டு வருவதாகவே உறுதியோடு கருதி, மேல் நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பார்கள்.” இந்த நிலையில், இளைஞனிடம் நிறைய பத்திரிகைகளும் புத்தகங்களும் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளும் எதிர்வீட்டுப் பெண், தன் தந்தையைத் தூது விட்டு அந்தப் புத்தகங்களை வாங்குகிறாள். 
(அந்தக் காலத்தில் புத்தக வாசிப்புக்கு மக்கள் எப்படி அடிமையாக இருந்தார்கள் என்பதை அழகிரிசாமியின் பல கதைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அன்பளிப்பு என்ற அதிஅற்புதமான கதையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், வால்ட் விட்மனின் கவிதைத் தொகுதியை கதாசிரியனிடமிருந்து இரவல் கேட்கிறான்). நம் கதைக்கு வருவோம். இளைஞனின் பத்திரிகைகளும் புத்தகங்களும் எதிர்வீட்டில் இருந்து தெரு முழுவதும் போய் வருகின்றன. எதிர்வீட்டுப் பெண்ணும் இளைஞனும் ஒரே பஸ்ஸில் ‘காரியாலயம்’  போய் வருகிறார்கள்.
ஒருநாள், கடும் மழையில் அவளைத் தன்னுடைய குடையில் அழைத்து வருகிறான். தெருக்காரர்கள் ஒன்றும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இளைஞனுக்கு அந்தப் பெண்ணின் மீது துளியும் காதல் இல்லை. காரணம், அவள் அழகி அல்ல. அதைவிட முக்கியமான காரணம், கோடி வீட்டுப் பெண். அவளைப் போன்ற ஒரு கனக விக்கிரகம், பதினான்கு லட்சம் ஜனத்தொகை உள்ள சென்னையில் மொத்தம் பத்து பேர் இருந்தால் ஜாஸ்தி. அப்படிப்பட்ட சௌந்தர்யவதியை அந்த இளைஞன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒருநாள், அவள் வீட்டுக்கும் இவனுடைய உதவி தேவைப்படுகிறது.
இனி அழகிரிசாமி: மதியம் மூன்று மணி. ஈஸிசேரில் அறிதுயிலில் இருந்தபோது யாரோ கதவைத் தட்டினார்கள். வந்து நின்றவன் கோடி வீட்டுக் கனக விக்கிரகத்தின் தம்பி. ‘’வா தம்பி”. இந்த இரண்டு சொற்களைச் சொல்லும்போது என் நாக்கு தழுதழுத்தது. பேச முடியாமல் திக்கு முக்காடினேன். அவர்களுக்கு, இளைஞனிடம் உள்ள டைப்ரைட்டர் வேண்டும். தானே கொண்டுபோய் கொடுத்து, மறுநாள் போய் (அப்போதுதானே இரண்டு நாள் போக முடியும்?) எடுத்துக்கொண்டு வருகிறான்.
மறுநாள், இளைஞனை வீட்டுக்காரர் காலி பண்ணச் சொல்கிறார். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கோடி வீட்டுக்குப் போனதுதான் பிரச்னை என்று தெரிகிறது. தான் தலையிட்டிருக்காவிட்டால், தெருப் பையன்களே அவனை ஏதாவது செய்திருப்பார்கள் என்கிறார் வீட்டுக்காரர். இவனும் அறையைக் காலி செய்துவிட்டு வேறு இடம் போகிறான். ஆனாலும் எதிர்வீட்டில் சிநேகம் வைத்துக்கொண்டபோது ஒன்றும் சொல்லாத தெரு, கோடி வீட்டுக்குப் போனதும் ஏன் தன்னைத் துரத்தி அடித்தது? அவனுடைய நண்பரான பத்திரிகை ஆசிரியர் விளக்கம் சொல்கிறார்: அழகில்லாத எதிர் வீட்டுப் பெண்ணோடு பழகினால் யாருக்கும் பாதகம் இல்லை. நீங்கள் குடியிருந்த வீட்டுக்காரரும், எதிர்வீட்டுக்காரரும், அந்தத் தெருவில் இருந்த அத்தனை பேரும் அந்தக் கோடி வீட்டு அழகி மீது வெறியோடு இருந்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் எவனுமே அந்தப் பெண்ணைக் கெடுக்கவும் தயங்கமாட்டான்.
இதேபோல் இன்னொரு கதை. தகப்பனும் மகனும். ‘’இது ஒரு சிறுகதை; கட்டுரை அல்ல” என்ற அறிவிப்போடு துவங்குகிறது கதை. காரணம், இன்றைய காலகட்டத்தில் எழுதப்படும் கதைகளைப்போல் படமெல்லாம் போட்டு விளக்குகிறார் அழகிரிசாமி. ரயில் பெட்டியின் இருக்கைகளின் படம். முதலாம் எண் இருக்கையில் கதாநாயகி. இரண்டாவது எண்ணில் அவள் தங்கை. மூன்றாவது, கதை சொல்லியின் நண்பர். எதிர் வரிசையில் முதலாம் இலக்கத்தில் கதைசொல்லி. இரண்டாவது எண்ணில் கதாநாயகர். அதாவது, நாயகியின் தகப்பனார். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸில், கதாநாயகர் தன் இரண்டு மகள்களையும் மேலே குறிப்பிட்ட இரண்டு ஆசாமிகளிடம் இருந்தும் ‘காபந்து’ பண்ணி திருச்சியில் இறங்குவதுதான் 13 பக்கம் நீளும் இந்தக் கதை.
கதைசொல்லியும் அவன் நண்பரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணமும் சமீபத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. ஏன்? நண்பரைப் பற்றித் தெரியாது. ஆனால் கதைசொல்லிக்கு மனைவியாக ஒரு உலகப் பேரழகி வேண்டும். அவன் கண்ணில் அழகான பெண்கள் தட்டுப்படாமல் இல்லை. சில பெண்கள் தூரத்தில் இருந்து பார்க்க மட்டும் அழகாகவும், சில பெண்கள் போட்டோவில் மட்டும் அழகாகவும், சில பெண்கள் மூக்கு மட்டும் அழகாகவும், சில பெண்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டால் மட்டும் அழகாகவும் இருந்தார்களே ஒழிய, உண்மையில் அழகாக இல்லை. அழகான பெண்களும் கிடைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை.  ஏன்? இவன் அழகாக இல்லை. இப்படியாகக் கல்யாணம் தள்ளிக் கொண்டு போனது. ‘’ஆனால், எப்பொழுதாவது ஆகும் என்றுதான் நம்புகிறேன். என் எதிர்கால மனைவி (நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால்) உங்கள் எதிர்கால மனைவியைப் போலவே பேரழகி. ஒரு இம்மியளவு குறைந்த அழகோடு, எந்தப் பெண் வந்து எனக்குக் கனகாபிஷேகம் செய்தாலும் நான் அவளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை”. 
இந்த நிலையில் எதிர் இருக்கைக் கதாநாயகியை – அதிலும் வயது வராத பெண் – நான் காதலித்துவிடுவேனா? அது ஏன் இந்த மரமண்டைக்கு – அதாவது, கதாநாயகருக்குத் தெரியவில்லை? நாயகியின் தங்கையோ, ஏழு வயதுக் குழந்தை. ஆனால், அந்தக் குழந்தையின் மீது காற்றில் நண்பரின் சட்டை நுனி பட்டாலும், கதாநாயகர் எழுந்து நின்று கத்துகிறார். ‘’நீங்களெல்லாம் தாய் தங்கையோடு பிறக்கவில்லையா, இத்யாதி, இத்யாதி”. அந்தக் குழந்தை, தூக்கத்தில் நண்பர் மீது சாய்ந்தால் அதற்கும் ஒரு ரகளை. இப்படியே அந்தத் தகப்பனும் இரண்டு பெண் குழந்தைகளும் திருச்சியில் இறங்கிப்போகிறது.
படு கிண்டலாக எழுதப்பட்டிருந்தாலும், கதையின் உள்சரடாக மனிதர்களின் மனோவக்கிரம் பற்றிய அழகிரிசாமியின் கோபம் கொந்தளித்தபடியே இருக்கிறது. கடைசியில், வெளிப்படையாகவே முடிக்கிறார். ‘’இவனெல்லாம் ஒரு அப்பனா? ஆபாசக் களஞ்சியம். தகப்பனுக்கு மகளைப் பார்த்தால் மகளைப்போல் காட்சியளிப்பாளா?  காமக்கருவியாகக் காட்சியளிப்பாளா?” இதுபோன்ற கதைகளைப் படித்தபோது, 60 – 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகளைப் போல் தோன்றவில்லை. ஏதோ சென்ற ஆண்டுதான் ஐரோப்பாவில் இருந்து ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் எழுதிய கதைபோல் இருக்கிறது. அதே சமயம், 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற வரலாற்றுப் பதிவாகவும் நாம் கு.அழகிரிசாமியின் கதைகளைப் படிக்கலாம். வரலாற்றைப் பதிவு செய்யும் பழக்கம் இல்லாத நமக்கு, இந்தக் கதைகள் கால எந்திரத்தில் பின்னோக்கிச் செல்வதான அனுபவத்தையும் தருகின்றன.

***
வாஸ்தவத்தில், இந்தத் தொடரில் எழுத நினைக்கும் ஆளுமைகளைப் பற்றி குறைந்தபட்சம் 500 பக்க அளவுக்காவது எழுத வேண்டும் என்ற அளவுக்கு விஷயம் கொட்டிக் கிடக்கிறது. அவர்களின் சாதனை அப்படிப்பட்டது. ஆனாலும், தூசு படிந்த நமது வரலாற்றின் பக்கங்களில் இருந்து சில ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதோடு என் பணி முடிகிறது. அழகிரிசாமியின் பிரபலமான சிறுகதையான “ராஜா வந்திருக்கிறார்”, உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக வரக்கூடியது. மானுட அறத்தைப் பற்றிப் பேசும் கதை அது. அதைப் படித்த பிறகு, ஒருவர் முன்பு இருந்ததைப்போலவே இருந்துவிட முடியாது. அவரது ஆளுமையிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதை அது.  
கு.அழகிரிசாமி இந்தக் கதைகளையெல்லாம் எந்தெந்த ஆண்டுகளில் எழுதினார், மலேஷியாவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவர் என்ன செய்தார், ஏன் அந்தக் காலகட்டம் (1952-57) பற்றி அவர் எதுவுமே எழுதவில்லை என்றெல்லாம் பல கேள்விகள் என்னுள் எழுகின்றன.  அதையெல்லாம் ஒரு ஆய்வாளர்தான் சொல்ல வேண்டும். அத்தகைய ஆய்வாளருக்காக, கு.அழகிரிசாமியின் எழுத்தும் வாழ்க்கையும் காத்திருக்கின்றன.


நன்றி  - தினமணி

எவர் க்ரீன் ஹீரோ யார்?

டாக்டர்.எனக்கு உடம்பு பூரா அடிபட்டிடுது அடிக்கடி.



ஏன்?



அடிக்கடி ஜோக்ஸ் படிச்சு மொட்டை மாடில இருந்து விழுந்து புரண்டு சிரிப்பேன்


==============


2 டாக்டர். கட்டவெரல்ல கல்லுகுத்துனா கல்லீரலுக்கு நல்லதாமே?நிஜமா?


யோவ்.அப்போ பாம்பு கொத்தி வாய்ல நுரை வந்தா நுரையீரலுக்கு நல்லதா?


==============


3 நர்ஸ் நளினா = ஒரு மணி நேரமா ரிசப்ஷன்ல வெயிட் பண்றீங்க.எந்த டாக்டரைப்பார்க்கனும்?


லொள் ஆள் = செல் போன் சார்ஜ் ஏத்த வந்தவனுங்க=


===============

4 என் பேரு பன் பேபி.என் தங்கச்சி பேரு பப்ஸ் பாபி


ஓஹோ.வெஜிடபிள் பப்சா? எக் பப்சா?=


==============


5 வழக்கமா பொண்ணு கூட தனியா பேசனும்னுதானே மாப்ளை கேட்பாரு?


ஆமா.ஆனா இவரு கூச்ச சுபாவியாம்.பொண்ணோட தங்கச்சியும் இருக்கனும்கறாரு

==============

6 ஆபீஸ் டைம் ல லேடி ஸ்டாfஸ் கிட்டே பேசிட்டிருக்கக்கூடாது.



அட போங்க சார்.ஸ்கூல் ல படிக்கும்போதும் இதான் சொன்னாங்க.நாங்க எப்போதான் முன்னேற?


================


7 ஒல்லியா ஒரு சின்ன வீடு வெச்சிருந்த நீங்க இப்போ குண்டா ஒரு சின்ன வீடு வெச்சிருக்கீங்களே?


சின்னக்கோடு பக்கம் பெரிய கோடு போடும் டெக்னிக்தான்

==================

8 ஜோசியரே! நீங்க சொன்னபடி கல்யாண முருங்கைப்பூ வை டெய்லி கூந்தல் ல வெச்சேன்.மேரேஜ் ஆகிடுச்சு.


குட்.



டைவர்ஸ் ஆக ஏதாவது பூ இருக்கா?

==================

9 அளவு சாப்பாடு எவ்ளவ்?


ஏ சி ரூம்ல சாப்ட்டா 100 ரூபா.சும்மா FANமட்டும் போதும்னா 80 ரூபா.



FAN ,லைட் எல்லாம் ஆப் பண்ணிடுங்க.60 ரூபா.ok?


==============


10 நீ ஏன் பொண்ணுங்க பின்னாலயே சுத்திட்டு இருக்கே?


ஜோடியா போலாம்னு கூடவே நடப்பேன்.அவங்க பயந்து வேகமாப்போவாங்க.பின் தங்கிடறேன்


================



11 பொண்ணு மாமிச மலை மாதிரி இருக்கே மாமா?


போட்டோ அனுப்பும்போதே என் பொண்ணு ஒரு குணக்குன்று னு சொல்லி இருந்தேனே மாப்ள?


=================

12 டியர்.நான் ஓக்கே சொல்லலைன்னா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணுவீங்களா?



ச்சே ச்சே அடுத்த சைட்க்கு அட்டெம்ப்ட் .ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தைமடம்


===============


13 குருவே! சம்பிராதய படி எண்ணெய் சட்டி கழுவுனா எமனுக்கு ஆகாதாமே?


இப்டியே வேலை செய்ய முடைப்பட்டு எதுனா சாக்குபோக்கு சொல்.ஊரே உனை கழுவி ஊத்தும்

===============

14 நீங்க  ஜி மெயில்  யூஸ்  பண்றீங்களா? ஹாட் மெயிலா?


அஃபிசியலா  ஜி மெயில்,  வாட்சப்  வீடியோக்கு  ஷேரிங்க்கு  ஹாட் மெயில், மேட்சுக்கு மேட்ச்


======================


15  பெண்டிங்க்  ஒர்க்ஸ்  எல்லாம்  முடிச்ட்டேன்.


ஓஹோ. ஆஃபீஸ்  ஒர்க்கா?


 இல்லை. ஹேர்பின்  பெண்ட்  மாதிரி  இருக்கும் இடை  பற்றிய  கவிதை  ஒர்க்ஸ்


=====================

16 நெத்தில  நாமம் போட்ட பெண்கள் பார்த்ததில்லை.ஏன்?

பொதுவா  பொண்ணுங்களுக்கு  ஆம்பளை நெத்தில  நாமம்  போட்டுத்தான்  பழக்கம்


=================


17   ஒரு சில பாடல்கள் கேட்குறப்ப அப்ப செய்துட்டு இருக்குற வேலைய ஒரு நிமிஷம் மறக்கடிச்சிடுது

என்ன  வேலை?


பாட்டு கேட்கற வேலைதான்,ஹிஹி


======================


18  டியர்,சாம்பார்ல சால்ட்  கம்மியா இருக்கு.


சாரிங்க,வந்திருப்பது  உங்க  வீட்டு  சொந்தம்தானேன்னு அ”சால்ட்”டா  இருந்துட்டேன்



======================


19  வழிவதை அனுமதிக்காத பெண்ணிடம், யாரும் வாலாட்டுவதில்லையாமே?ஏன் அப்டி?

என்ட்ரி குடுக்கும்போதே கேட்டை படீர்னு சாத்துனா எப்டி வருவான் தமிழன்?


===============


20 டாடி.ராமர் ஏன் நம்மை மாதிரி இல்லாம பச்சை கலர் ல இருக்காரு?

ஏன்னா அவர் தான் "எவர் க்ரீன் ஹீரோ" ஆச்சே?


====================


=================

'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் மாஸ் ஹிட் ஆனது எப்படி? - ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். 'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக கவலையுடன் இருக்கிறார். அவரது அம்மாவுக்கு உடல் நலம் குன்றி தற்போது தேறிவருகிறார். ஒரு தயாரிப்பாளராக ஆர்வத்துடன் இருக்கிறார். அவரது முதல் இந்திப் படம் தயாராகிவருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் வீழ்ந்த சில மணி நேரங்களில் அவரது கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. குர்தா, ஜீன்ஸ் என நிறைவாகக் காட்சியளித்த ரஹ்மானிடம் இரானியப் படம், இளையராஜா, அவரது எதிர்காலம் என அனைத்தையும் பேசினோம்.
சமீபத்தில் நீங்கள் எழுதி, இசையமைத்து பாடிய 'மென்டல் மனதில்' பாடலுக்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
அது ஒரு மென்மையான, ஜாலியான பாடல். பாடலாசிரியர் வைரமுத்து அப்போது ஊரில் இல்லை. ஆனால் மணிரத்னத்துக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இதற்கு முன்னர் 'அலைபாயுதே' படத்தில் 'என்றென்றும் புன்னகை' பாடலை சேர்ந்து எழுதியுள்ளோம். எனவே மீண்டும் அப்படி ஒரு சூழல் எங்களுக்கு அமைந்தது.
அது எப்படி மணிரத்னம் மட்டும் உங்களிடமிருந்து விசேஷமான இசையை பெறுகிறார்?
அவர் தான் என்னை திரைப்படங்களில் அறிமுகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது மணி, வைரமுத்து, நான் என நாங்கள் மூவரும் தனியாக ஒரு பிராண்ட் (Brand) ஆகிவிட்டோம். நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வேலை செய்யலாம் என்று நினைத்தால் கூட முடியாது. ஏனென்றால் மக்களின் எதிர்பார்ப்பு அப்படி. அது ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அதைத் தர நினைக்கிறோம்.
பாடல் உருவாக்கத்தின்போது உங்கள் மூவரிடையே நிறைய கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் ஏற்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ காதல் கண்மணியை பொருத்தவரை என்ன நடந்தது என்று கூறுங்கள்.
எனக்கு சில விஷயங்கள் பிடிக்காது. சில நேரங்களில் ஒலிக்காக வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஒலி மிக முக்கியம். அது வார்த்தைக் குவியலைத் தவிர்க்கும். மக்களின் கவனத்தை சட்டெனக் கவர வேண்டும். அவர்களுக்கு, முன் இருந்தது போல பொறுமை இருப்பதில்லை
'ஒகே கண்மணி' படத்தில், 'நானே வருவேன்' என்ற பாடலில் அந்தரா என்ற அழகான இசைக் கருவியை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் வார்த்தைகள் சிக்கலாக இருந்தன. எனவே ஒரே வார்த்தை (சின்னஞ்சிறு) திரும்ப திரும்ப வருமாறு மாற்றினோம். பாரம்பரிய கலைகளில் இருக்கும் முறைதான் அது. உதாரணத்துக்கு 'தும்ரிஸ்' என்ற பாடல் வகையை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வரும். ஏனென்றால் இசை சிக்கலாக இருக்கும். எனவே வார்த்தைகள் சிக்கலாக இருக்கக் கூடாது. 'யாத் பியா', 'மோரே சஜ்னி' போன்ற தும்ரி பாடல்களை கேட்டீர்கள் என்றால், ஒரே வரி மீண்டும் மீண்டும் பாடப்படும். கேட்பவர்களுக்கு கவனம் செலுத்த அது எளிமையாக இருக்கும்.
நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள், இந்தி படம் ஒன்றை தயாரிக்கிறீர்கள். இசை அல்லாத மற்ற துறைகளுக்கு செல்வதன் காரணம் என்ன?
இந்திய சினிமாவில் ஒரு வெறுமை இருப்பதாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக என்னுடைய வளர்ச்சி அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா எனப் பார்க்கிறேன். ஒன்று வெற்றி பெற்றால் அதையே அனைவரும் செய்கின்றனர். ஆனால கலைக்காக ஒரு சிலரே இருக்கின்றனர். என்னால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. மக்களுக்கு என்ன பிடிக்கும், நமது இசையில் தொலைந்து போன சுவை என இரண்டுக்குமான ஒரு சமநிலையை நான் தேடுகிறேன். அனைத்து அம்சங்களிலும் இந்த சமநிலை எட்ட முடியுமா என்று பார்க்க கடந்த 4 வருடங்களாக இதற்காக உழைத்து வருகிறேன்.
நீங்கள் இசையமைத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோது எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்? சென்ற வருடம் லிங்கா, காவியத் தலைவன் ஆகிய படங்கள் அப்படி அமைந்தன.
நான் நிறைய படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து தவறு செய்துவிட்டேன். சிலருக்கு நான் முடியாது என சொல்லிருக்க வேண்டும். அதிகமான அழுத்தம், உறக்கமில்லாத இரவுகள் என ஒரு அணியாக எங்கள் முதுகு தேய நாங்கள் வேலை செய்தோம். அவற்றுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என உணர்கிறேன். நான் இயற்கையாக விரும்பும் (கலையை) ஒன்றை வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கிறது. அதிக வேலைப்பளுவில், அழுத்தங்களோடு வேலை செய்வது நல்லதல்ல.
லிங்கா அதில் ஒன்று என ஒப்புக்கொள்கிறீர்களா?
சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடவேண்டிய நிர்பந்தம். அந்தப் படத்தை பொருத்தவரையில் என்ன ஆனது என மக்களுக்குத் தெரியும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். இசைக் கலைவை. பின்னணி இசைக் கோர்ப்பு என அனைத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் காவியத் தலைவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் ஒரே நேரத்தில் வந்தது. அது அசந்தர்ப்பமான சூழல்.
சில தரப்பு மக்கள், உங்கள் இசை 90-களில் இருந்தது போல இல்லை என கூறுகிறார்கள்
எனக்குப் பெருமையாக உள்ளது. என்னிடம் ஏதோ ஒன்று அவர்களுக்கு பிடித்துள்ளதே (சிரிக்கிறார்)
அத்தகைய கருத்துகளை கேட்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?
ஒரு படைப்பாளியாக நான் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். எனது அன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். நீங்கள் ரசித்த ஒரு முன்னாள் நடிகையிடம் இன்று சென்று, "எனக்கு உங்களை பிடிக்காமல் போய்விட்டது" எனக் கூறமுடியுமா?
வசந்தபாலனோடு இணைந்து வேலை செய்தீர்கள். இந்த வருடம் விக்ரம் குமாரோடு இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இயக்குநர்களோடு எளிதாக வேலை செய்வதை விட்டு, உங்களுக்கு பரிச்சயமில்லாத இயக்குநர்களுடன் வேலை செய்வது ஏன்?
ஒரு கட்டத்துக்கு மேல் சிலரிடம் அதிகமான உரிமை எடுத்துக் கொள்வோம். அது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்டதும் கூட. மணிரத்னம், அஷுடோஷ், ஷங்கர் போன்றவர்களிடம் அது நல்ல விஷயம். ஏனென்றால் அவர்கள் எனக்கு புதிய சவால்களைத் தருகின்றனர். எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம் தான் இயக்குகின்றனர். புதிய இயக்குநர்கள் புதிய விஷயங்களை கண்டறிய இடம் தருகிறார்கள்.
'முகம்மது' என்ற உங்கள் இரானிய படத்தின் நிலை என்ன் ? அதை நீங்கள் ஒப்புக் கொண்ட காரணம் என்ன?
வேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தொகுப்பு இன்னும் முடியவில்லை. இரானிய படங்களின் ரசிகன் நான். முக்கியமாக மஜித் மஜிதியின் படங்களுக்கு. ஒருநாள் இம்தியாஸ் அலி என்னைக் கூப்பிட்டார். யூடிவி நிறுவனத்திடம், மஜிதி, அவருடைய படத்தில் நான் வேலை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமா வரலாற்றில் குறிப்பிட்டத்தக்க திரைப்படமாக அது இருக்கும்.
ஆனால் அந்தப் படத்துக்கு இசையமைப்பது எளிதாக இருந்திருக்காதே
அவரது எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. ஒருவகையில் அது நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் வேலை செய்யும் முறையை தெரிந்துகொள்ள விரும்பினேன். அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள், காட்சிகளை எப்படி எழுதுகிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். இரண்டு முறை இரானுக்கு பயணம் செய்துள்ளேன். இரண்டுமே அற்புதமான அனுபவமாக இருந்தன.
உலகம் முழுவதும் ஓய்வின்றி பயணம் மேற்கொள்ளுகிறீர்கள். உங்கள் மூன்று குழந்தைகளுடன் செலவிடம் நேரம் இருக்கிறதா?
நாங்கள் சேர்ந்து பல திரைப்படங்களை பார்ப்போம். குறிப்பாக 3டி அனிமேஷன் திரைப்படங்கள்.
உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்குமான பாசப் பிணைப்பைப் பற்றி சொல்லுங்கள்? அவரிடமிருந்து நீங்கள் கற்றதென்ன? ஆஸ்கர் மேடையிலேயே அவரைப் பற்றி நீங்கள் பேசினீர்கள்
அதுதான் வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், எதற்காக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும் என தெரியும். அம்மா கடுமையாக உடல்நலம் குன்றி இருந்து, இப்போது தான் தேறி வருகிறார். அவர் உடல்நலம் தற்போது பரவாயில்லை. ஆனால் முன் இருந்தது போல இல்லை.
சென்னையின் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த ஒரு சாதாரண மாணவனான நீங்கள் தற்போது சர்வதேச அளவில் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளீர்கள். இதற்காக எப்படி உங்களை மாற்றிக் கொண்டீர்கள்?
வானிலையும், மண்டலமும் மாறும்போது அனைத்தும் மாறும். அங்கு 3 அடுக்கு உடைகள் அணிந்து கொள்வேன். ஸ்டூடியோக்களை பொருத்தவரை இங்கிருப்பது போன்ற வசதிகள் அங்கு எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. இசை குறிப்புகள் அனைத்தும் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கேற்றார் போல சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பழக்கப்பட எனக்கு 10 வருடங்கள் ஆனது.
நீங்கள் தனியாக இசையமைப்பதற்கு முன்னர் இளையராஜாவின் குழுவில் இசைக் கலைஞராக பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். இன்னமும் அவருடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
அவரை கடைசியாக ஓர் இசை விழாவில் சந்தித்தேன். நான் வெளிநாடுகளில் இருக்கும்போது விழாக்கள், திரையிடல்கள் என எங்காவது பல்வேறு இசையமைப்பாளர்களை அடிக்கடி எதேச்சையாக சந்தித்து வருகிறேன். இங்கு சென்னையில் என்னால் அப்படி வெளியில் செல்ல முடிவதில்லை. வேலை அல்லது குடும்பம் அல்லது என் இசைப்பள்ளி என எப்போதுமே ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பேன். எனவே வெளியில் செல்ல நேரம் இல்லை. எங்களுக்கிடையே பரஸ்பரம் மரியாதை உள்ளது.
நீங்கள் அதிகம் புத்தகம் வாசிப்பதுண்டா?
(சிறிது நேரம் யோசித்துவிட்டு) கடைசியாக நான் படித்த புத்தகம், ஹண்ட்ரட் ஃபுட் ஜர்னி (Hundred Foot Journey) மற்றும் பீலே (Pele) படங்களின் திரைக்கதை புத்தகம். அவையும் புத்தகங்கள்தானே!
இசையைப் பொருத்தவரை தற்போது தமிழில் பல புதிய இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். நீங்களே புகழ்ந்துள்ள சந்தோஷ் நாராயண், மேலும் அனிருத், ஜி.வி.பிரகாஷ், இந்தியிலும் பலர் உருவாகியுள்ளனர். திறமையானவர்கள் கையில்தான் இசை இப்போது இருக்கிறது என சொல்லமுடியுமா?
இசையில் கண்டறிய நிறைய உள்ளது. வெறும் ஹிட் பாடல்களை மட்டுமே தரவேண்டும் என கேட்கக் கூடாது. காலத்தைக் கடந்த இசையைத் தர ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவருக்கென ஒரு விதியை வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் இசையை நாம் ஏன் இன்னும் விரும்புகிறோம்? ஏனென்றால் அவை காலத்தை வென்றவை. ரசிகர்களுக்கு இன்னமும் அவற்றுடன் ஓர் இணைப்பு உள்ளது. நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன். அதேதான் இளம் இசையமைப்பாளர்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
உங்கள் இசைப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான எதிர்கால திட்டம் என்ன?
புதிதாக ஒரு கட்டிடம் வேண்டும் என்பது பெரிய பணியாக இருந்தது. தற்போது அது கிடைத்துள்ளது. இசையைப் பற்றி தெரிந்துகொள்ள அது அற்புதமான இடமாக இருக்கிறது. சில நேரங்களில் அங்கிருக்கும் மாணவர்களைக் கண்டால் பொறாமையாக உள்ளது. ஏனென்றால் நான் வளரும்போது அப்படி ஒரு இடம் எனக்குக் கிடைக்கவில்லை. தனிப்பட்ட அடையாளத்தோடு மாணவர்கள் பொழுதுபோக்குத் துறையில் வேலை செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். முக்கியமாக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நேரம் கிடைக்கவில்லை என கூறுகிறீர்கள். தினசரி தொழுகை செய்ய நேரம் கிடைக்கிறதா?
அதுதான் எனக்கு உயிர்மூச்சு.
உங்கள் தினசரி வாழ்க்கை சமநிலையில் தானே இருக்கிறது?
நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து செய்து வரவேண்டும். நாளை செய்துகொள்ளலாம் என்பதற்கே இடமில்லை. அதைத்தான் நான் சமீப காலங்களில் உணர்ந்துள்ளேன். நாளை பிரார்த்தனை செய்து கொள்ளலாம், நாளை இசையமைக்கலாம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எதாவது செய்யவேண்டுமென்றால், இன்றே செய்ய வேண்டும்.
©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா


நன்றி -த இந்து



  • அவர் ஒரு சினிமா இசையமைப்பாளர் என்பதை தாண்டி அவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக அவருடைய மெண்டல் பாலன்ஸ். வாழ்க்கையையும் தொழிலையும் அவர் பார்க்கும் விதம். ஏனோ, அவரை பார்க்கும் போது எனக்கு தோனியின் நியாபகம் வரும். இருவருமே mr.கூல். வெற்றியை மூளைக்கும், தோல்வியை மனதுக்கும் எடுத்து செல்லாதவர்கள். தற்பெருமையை கிட்டே வர விடாதவர்கள். முக்கியமாக அதிகம் பேசாதவர்கள். ரஹ்மானின் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
    about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
    • Dilli Babu  
      இசைப்புயலின் இரானிய படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
      Points
      6140
      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • நடராஜன்-மேட்டூர்அணை.  
        தமிழ் சினிமா வெற்றிடத்தை நிரப்ப 'சீக்கிரம்' வாருங்கள் ரகுமான் சார். தொடர்ந்து தங்களது இசையில் மெய்மறந்து பாடல்கள் கேட்க, பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.
        Points
        1465
        about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Sriramachandran Manickam at State Government 
          உங்கள் பேட்டி மிகவும் மனநிறைவை தந்தது. நன்றி.
          Points
          1575
          about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • சேரமான் Nadunilai  
            பக்குவப்பட்ட மனிதர் !
            Points
            9820
            about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Kmsdgl  
              பெரும் புதையல் தன இருப்பிலிருந்து புயலாய் கிளம்பி உயர்ந்து புவியை தனது இசை பிம்பத்தின் மென் சுழற்சியில் சுழல வைத்து மெய்மறக்க செய்துகொண்டிருந்து சற்றே ஓய்ந்தாலும் மீட்சி பெறலாம் ஆனால் வெளியாகிவிட்ட புயல் மீண்டும் தனது துவக்கமாகிய - தாய் இடப்புதையலை தேடி சென்றடைதல் சாத்தியமா