Saturday, March 28, 2015

டெய்லி குஷ்பூ இட்லி சாப்ட்டா நல்லதா?

1  கங்காரு க்கு சுகப்பிரசவம் ஆகிடுது.எப்படி வாழ்த்து சொல்லனும்?



கங்காருஜெய் ரிலேசன்ஸ்



================


2 காட்டுக்குள்ளே தேனை தேடித் தேடி அலுத்துட்டேன்."தேன் எங்கே கிடைக்கும்?



முதல்ல கரடியைத்தேடுங்க.கரடி இருந்தா1 கிமீ ல் தேன் இருக்கும்


================

3 டியர்,  ஃபோன்  நெம்பர்  கேட்டா  உன்  ஃபோனையே  தர்றியே? நீ வள்ளல் பரம்பரையா?

சாரி, எனக்கு நெம்பர்  தெரியாது.நீயே  பார்த்துக்கோ, ஹிஹி


===================

4  டாக்டர்!கோவம் வரும்போது கொட்டாவி விட்டா கோவம் எல்லாம் காணாம போயிடுமா?

தெரிலயே,இப்போ  எனக்குக்கோபம் வருது.கொட்டாவி  விடுங்க,  லெட் செக்


=====================

5   மிஸ்! உங்க  ஹேண்டில்ல த ஏஞ்சல்னு  இருக்கே?  தேவதை அழகா?

ச்சே,ச்சே அந்த ஆங்கிள்ல பார்க்காதீங்க. அங்க்கிள்.ஜெல் கம்பெனில ஒர்க்கிங்


==================

6  டாக்டர்.உணவே  மருந்துன்னு என்  வீட்டுக்காரர்ட்ட ஏன்  சொன்னீங்க?

என்ன ஆச்சு?

சாப்பாட்டுக்குப்பதிலா  சரக்குதான் அடிக்கறாரு


=====================


7  டியர்,உன்  பெட்  நேம்  என்ன?

 பெட்  நேம் அம்மு , சேர்  நேம்  ஜம்மு , சோபா  நேம் பொம்மு,இப்டி  ஒவ்வொரு இருக்கைல இருக்கும்போதும் ஒரு பேர்


=====================


8   அன்புமணி =அப்பா ! கதம் கதம் படத்தை எதிர்த்து போராட்டம் பண்ணலாமா?



ராம்தாஸ் = எதுக்கு?
டைட்டில்லயே தம் இருக்கே?


===============

9 அடிக்கடி என் வீட்டுக்காரர் பேபிட்ட போன்ல பேசறார்.


உன் பேபிட்டதானே?



நோ.பன் பேபிட்ட


===================


10 மேடம்.உங்க மெட்டி பத்தின கீச்சுகளைப்படிச்சபின் தான் என் சம்சாரம் மெட்டியே போட ஆரம்பிச்சிருக்காங்க.


ஓ.ஏன் ?அவங்களுக்கு சுயபுத்தியே இல்லையா?


=================


11 சப்பாத்திக்கள்ளியை கொதிக்கற எண்ணெய் வடசட்டில போட்டுட்டேன்.



அடடா என்ன ஆச்சு?



பூரி கள்ளி ஆகிடுச்சு


=================

12 டாக்டர்.டெய்லி குஷ்பூ இட்லி சாப்ட்டா நல்லதா?


ஆமா.குஷ்பூவோட பல்ஸ்க்கும் சுந்தர் சியோட பர்சுக்கும் நல்லது


=================

13 மேடம்.10 விரல்லயும் மோதிரம் போட்டிருக்கீங்களே?



ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒரு ரிங்


============

14 டாக்டர்.பேஷண்ட்க்கு் ஷாக் ட்ரீட்மென்ட் குடுக்கலாமா?வேண்டாமா?னு எதை வெச்சு தீர்மானிப்பீங்க?


கரண்ட் இருக்கா?இல்லையா?ங்கறதை வெச்சு


================

15 டியர்.தாலி ஒரு புனிதமான பொருள்.


தெரியும்.அதான் டெய்லி ஆபீசுக்கு போகும்போது பூஜை ரூம்ல வெச்ட்டு போய்டுவேன்


==================

16 ஜட்ஜ் = டிகிரி ஹோல்டரை மட்டும் தான் ரேப் பண்ணுவியா?அது ஏன்?



கைதி= கற்றோரை கற்றோரே காமுறுவர்,யுவர் ஆனர்===


==============

17 ஜட்ஜ் -என்னம்மா சொல்றே?உன் பர்சை பஸ் ல ஒருத்தன் நைசா பிக்ஜாக்கெட் அடிச்ட்டானா?எப்டி?


லேடி-அதான் நைசா ன்னு சொன்னேனே?புளி போட்டு விளக்கனுமா?

==============

18 உன் புருசன் வாரா வாரம் சன்டே மட்டும் வீட்டுக்கு வருவாரா?ஏன்?


லீவிங் டுகெதர் ஆப் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழறார்.ஹிஹி=


===================


19 சென்சார் = உங்க படத்துல யாருமே டிரஸ் போடலையே ஏன்?



காஸ்ட்யூம் டிசைனர் ஓவர் சம்பளம் கேட்டாரு.கிடக்குது கழுதைனு..==


==============

20 அத்தான்.தாலி மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


ம்.5 பவுன் தாலி ,செயின் 5 பவுன்.அடமானம் வெச்சா நம்பிக்கையா 2 லட்சம் கிடைக்கும்

==================

Friday, March 27, 2015

வலியவன் - சினிமா விமர்சனம்


எங்கேயும் எப்போதும்  எனும்  முதல் படத்திலேயே  அபாரமான  சிக்சர்  அடிச்ச  இயக்குநர்  தன்  2 வது படமான  இவன்  வேற  மாதிரியில்  லேசா  சறுக்கினார். மூன்றாவது  படத்தில்  ஃபோராவது  அடிச்சார?  டொக் ஆனாரா?  என்பதை  பார்ப்போம்


ஹீரோயின்  ஒரு  பிரைவேட்  பேங்க்ல  ஒர்க்  பண்ணுது.டொக்  ஃபிகர்  ஆஃபீஸ்ல  ஒர்க் பண்ணாலே 16  பேர் லவ் லெட்டர்  தருவானுங்க, சக்க  ஃபிகர்  இருந்தா  சும்மா  இருப்பானுங்களா? ஆளாளுக்கு  பம்மறானுங்க. ஆனா  ஹீரோயின்  அவங்களை  எல்லாம்  கண்டுக்கலை. பொதுவா  பொண்ணுங்க  நல்ல  குடும்பத்துப்பையன் , எந்த  கெட்ட  பழக்கமும்  இல்லாதவன்  சைவன்  இப்டி பிடிக்காது. தண்ணி  அடிக்கறவன்  மொள்ள  மாரி  முடிச்சவிக்கி  இவனுங்களைத்தான்  பிடிக்கும்,

 வாலண்ட்ரியா  போய்  ஹீரோ  கிட்டே ஐ லவ் யூ  சொல்லுது.ஹீரோவுக்கு  ஹீரோயினை  யார்னே  தெரியல


ஃபிளாஸ்பேக்ல  தான்  மேட்டர்  தெரியுது.  ஹீரோ  சரக்கு  அடிச்சு  மப்பில்  இருக்கும்போது  ஹீரோயின்  ஒரு  டைம்   டிராப்  பண்ணி  இருக்காரு. ஒரே ஒரு  நாள் 4  மணி  நேரம்  ஹீரோ கூட  கார்ல   போனதை  வெச்சே  அவனை  லவ் பண்றாரு   * (  நாம்   எல்லாம்  ரெகுலரா டெய்லி ஒரே  பஸ்ல  காலம்  காலமா  போய்ட்டு  இருக்கோம், நம்மை  யாரும்  மனுசனாவே  மதிக்கறதில்லை 

ஹீரோ  ஹீரோயின்  கிட்டே   லவ்வை ஏத்துக்கறேன்னு  சொல்லும்போது  ஒரு ட்விஸ்ட், சும்மானாச்சுக்கும்  சொன்னேன்னு ஹீரோயின் சொல்லிடுது. பயங்கரமான   டர்னிங்க்  பாய்ண்ட்டோட இடை வேளை


 அதுக்குப்பின்  என்ன  நடக்குது என்பதே  மிச்ச  மீதிக்கத


ஹீரோவா  ஜெய். இடைவேளை  வரை  வழக்கமான  ஜெய் .  நல்ல நடிப்பு  . பாடல்  காட்சிகளில்  இளைய தளபதியை  அப்பட்டமா  காப்பி  பண்றார் . குறிப்பா  ஜில்லா  பட  நடன  அசைவுகளை .  மாத்திக்கனும். எல்லாத்தையும்  மாத்திக்கனும். 


 க்ளைமாக்சில் பாக்சரா  வரும்போது  பத்ரி  விஜய்  மாதிரியே  பின்றார், இப்டியே  மாதிரியா மாதிரியா  பண்ணிட்டு  இருந்தா  எப்போ   ரியலா பண்றது?




ஹீரோயினா  அரக்கோணத்தை  பூர்வீகமாக்கொண்ட  லிப் லாக் லெஜண்ட்  ஆண்ட்ரியா. ஆண்களை  வசப்படுத்தும்  தேவதையா ? 


 அறிமுகமான  புதுசுல   காஞ்சிபுரம்  பட்டுச்சேலை  மாதிரி  கசங்காம  அலுங்காம  நலுங்காம    புத்தம் புதுசா   தெரிஞ்சவர்   அனிரூத்  லிப்  லாக்  பிறகு மதுரை  சுங்கடி சேலையை  4  நாள்  போட்டு  அயர்ன்  பண்ணாம  விட்ட மாதிரி   பாவமா  இருக்கார் . ஆனாலும்  மிச்ச  மீதி  இருக்கும்  கிளாமரை தமிழன்  ரசிக்கத்தான்  செய்யறான்


அவர்  எப்போதும்  ஒரு பனியன் மட்டுமே அணிந்து  சுற்றுவது  அதிர்ச்சியாய்  இருக்கு 

புருவங்களூக்கு ஸ்பெஷல்   கேர் எடுத்து   16  விதமான  புருவ  வடிவமைப்பில்  கமலுக்கே  சவால்  விடும்  அளவு  மேக்கப்பில் கவனம்  செலுத்தறார் சபாஷ்  ஆண்ட்ரியா  ( தமிழன்  சம்ப்ந்தா  சம்பந்தம்  இல்லாம  பொண்ணுங்களைப்புகழ்வான் )


மனதைக் கவர்ந்த  வசனங்கள் 

1 சூப்பர் பிகருங்க எப்பவும் மொக்கைப்பசங்களைத்தான் லவ் பண்ணும் #,வ


2  எப்பவும் பொண்ணுங்க பசங்க யோசிக்கறதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டாதான் யோசிப்பாங்க.# வ


3 ஸார்.உங்க ஆளு சின்னப்பொண்ணா?பெரிய பொண்ணா?


ம்.நடுப்பொண்ணு # வ



4 இந்தக்காலத்துப்பசங்க பொண்ணுங்களை உஷார் பண்ண என்ன வேணா செய்வானுங்க.கால்ல விழுவாங்க.மதம் கூட மாறுவான் # வ


5 என்னதான் டோட்டல் டீம் நல்லா விளையாண்டாலும் கப் வாங்குவது கேப்டன் தான் # வ


6 சுத்தல்ல விடறது ,சிக்கல்ல.விடறது 2 மே பொண்ணுங்களுக்குக்கை வந்த கலை # வ


7 ஊர் பூரா ஒயின்ஷாப் வெச்சிருக்கானுங்க.வாமிட் பண்ண ஒரு இடம் வெச்சானுங்களா?


8  ஏழையின் சிரிப்பில் இறைவனைப்பார்க்கலாம்னு சொல்வாங்க.நான் ஏழையையே இறைவனாப்பார்க்கிறேன் #,வ



9 கிப்ட் கொடுக்காத ஆம்பளையையும்

கிஸ் கொடுக்காத பொண்ணையும் இந்த உலகம் மதிக்கறதே இல்ல


10 லவ் பண்ணுனவளை  விட்டுத்தர்றது  கையாலாகாத்தனம்,  அவளையே    எப்பாடு பட்டாவது  கல்யாணம் பண்ணிக்குவதே ஆம்பளைத்தனம் # வ


11 நாமெல்லாம்   ஒரு  பொண்ணை  இம்ப்ரெஸ் பண்ண  குறைந்த பட்சம் 5 வருசம்  ஆகும். இதெல்லாம்  வேலைக்கே ஆகாதுப்பா # வ


12 நான்வெஜ்   ஃபிகரை  இம்ப்ரெஸ்  பண்ணவே  நம்மால  முடியறதில்லை. தயிர் சாதத்தை  இம்ப்ரெஸ்  பண்ண  நம்மால ஆகாது # வ




13 பொண்ணுங்க  பின்னால லவ்வுக்காக சுத்தறவனை  எனக்குப்பிடிக்காது.ஆம்பளைன்னா கெத்தா இருக்கனும் # வ



14 யோசிக்கறவன் லவ் பண்ணக்கூடாது. லவ் பண்றவன்  யோசிக்கக்கூடாது # வ  (  ஏய்யா 2 ம்  1 தானே? )



15 என்னைத்தோக்க வெச்சவங்க கிட்டே இருந்து எதையாவது ஒண்ணை கத்துக்குவேன் # வ


16 எல்லாப்பையனுக்கும்  தன் அப்பாதான்  முத  ஹீரோ, அதே போல்  எல்லா அப்பாக்களுக்கும்  தன்  பையன் தான்  அடுத்த   ஹீரோ # வ


17 அப்பாவை ஹீரோவா மகனும் , மகனை ஹீரோவா அப்பாவும் நினைப்பது இயல்பு .ஆனா ஒருவர் கண் முன் மற்றவர் அவமானப்படுத்தப்படுவது கொடுமை






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  லிப் லாக் லெஜண்ட் ஆன்ட்ரியா முழு நாயகியாக நடிக்கும் முதல் படம் யூ சர்ட்டிபிகேட் என்பது அதிர்ச்சி அளிக்கிறது# வலியவன்

2 நீ நல்லவனா?கெட்டவனா?,னு ஒரு பாட்டு.காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் வேலை வேணும் பாட்டு இசையை உல்டா ரீமிக்ஸ் #,வ

3 ஆண்ட்ரியாவோட பூர்வீகம் திருப்பூரா?எப்பவும் துக்ளியூன்டு பனியனோடயே சுத்துது # வ


4 ஆண்ட்ரியா நடு முதுகுல ஒரு ஜான் ஆரத்தில் வட்ட வடிவத்தில் டாட்டு குத்தி இருக்கு. - இன்று ஒரு வெட்டித்தகவல் #,வ

5 ஹீரோ ஸ்கூட்டில வர்றாரு.நல்ல வேளை ஹீரோயின் ராயல் என்பீல்டு பைக் ல வர்ல.#,வ


6  இடைவேளை  விட்டதும்  பெரிய  திருப்பம். படத்தில்  இல்ல, தியேட்டர்ல. பக் சீட்  லேடிக்கு  2  பேரு  கோன் ஐசும்   பப்சும்  வாங்கித்தர்றானுங்க


7  ஹீரோ  ஹீரோயினுக்கு   ஃபோன் பண்ணி  லிப்ஸ்டிக்கை நல்லா டீப்பா  போட்டு ட்டு  வா ங்கறாரு # அதுல  என்ன டேஸ்ட்  இருக்கும் ?



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஹீரோவை சிக்ஸ் பேக்  வைக்க வெச்சது  அதை  போஸ்டர்ல  ஊர்  பூர்  ஒட்ட வெச்சது . பார்க்கறவங்களுக்கு   ஏதோ  ஆக்சன்  படம்னு  நம்ப  வெச்சது 



2  ஆண்ட்ரியாவை  அழகா  படம்  பூரா  காட்டியது காட்ட  வெச்சது


3   க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்  நல்லாருக்கு.
















இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   முதல்  படமான  எங்கேயும்  எப்போதும்   நிஜமா  உங்க  கதையா?  மண்டபத்தில்  யாராவது எழுதி  வெச்சதை   அடிச்ட்டு  வந்துட்டீங்களா? 


2  ஃபேஸ்  புக்   ட்விட்டர்  வாட்சப்   ல  அக்கவுண்ட்  வெச்சிருக்கறவங்களை  அசிஸ்டெண்ட்ஸா  வெச்சிருக்கீங்களா? பாதி வசனம்   உருவுனவதாவே  இருக்கு ?


3  தொழில் முறை   பாக்சரான   வில்லனை  ஹீரோ ஜஸ்ட்  லைக் தட்  ஜெயிப்பது எல்லாம்   நம்ப முடியல .பத்ரி  , மான்  கராத்தே    உல்டா 


4   ஸ்டோரி  டிஸ்கஷன்  வெச்சீங்களா?  மறந்துட்டீங்களா? 


5 வில்லனை  அடிப்பது  போல்  வீடியோ  எடுத்த  ஹீரோ டக்னு   அதை  வாட்சப்ல  ஹீரோயினுக்கு  அனுப்பாம   ஏன் லேட்  பண்ணி   பின்   ஃபோன்  கீழே விழுந்ததால்  வீடியோ  அவுட்னு  பம்மனும்?

6   என்னதான்  பாக்சராக  இருந்தாலும்  வில்லனுக்கு   650 கோடி  காண்ட்ராக்ட்  போடப்படுவது  செம  காமெடி  இந்தியாவில் கிரிக்கெட்  வீரருக்கே  அம்புட்டு  மதிப்பு  இல்லீங்கோ


7  போட்டியில்  விட்டுக்கொடுத்தால்  500  கோடி தரப்படுவதாய்  சொல்லும்  சீன்   நம்பவே  முடியல



8  கதையின்  மையக்கரு  அப்பாவை   மகன்  கண்  முன்  அவமானப்டுத்திய  வில்லனை  ஹீரோ  பழி  வாங்குவது. அந்த  அவமானப்படுத்தப்பட்ட  சீன்  சரியா  எடுக்கப்படலை. மொக்கையா இருக்கு




சி  பி  கமெண்ட்  = வலியவன்  - முன் பாதி  ஜாலி  பின் பாதி  காதல்  கலாட்டா, சுமார் ரகம் - விகடன்  மார்க் = 40    ரேட்டிங்  = 2.5 / 5




ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  சுமார்



 ரேட்டிங் = 2.5 / 5


ஈரோடு சண்டிகா வில்  படம்  பார்த்தேன்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27 /3// 2015 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை


1 வலியவன் =ராயல் ,சன்டிகா, அ பூரணி

2 மனதில் ஒரு மாற்றம்


3 நதிகள் நனைவதில்லை’
4 சுட்ட பழம் சுடாத பழம்
5 CSK
6 DRAGON BLADE  ( அபிராமி )

7 காலகட்டம் ( அண்ணா)

8 சரித்திரம் பேசு ( சங்கீதா)

9 JIL ( TELUGU)


10 THE DARK BURKING


#27/3/15



1 வலியவன்

கவுதம் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இதுவரை தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், அவர் தனியாக சோலோ நாயகியாக இதுவரை நடித்ததில்லை. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென், விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமார், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால் முதல்முறையாக சோலா நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ள படம் 'வலியவன்' என்பது குறிப்பிடத்தக்கது. 


எனவே இந்த படத்தின் ரிலீஸை அவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் சரவணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, 'இந்த படத்தின் ஹீரோயின் கேரக்டரை நான் உருவாக்கியபோது என் மனதில் தோன்றியது ஆண்ட்ரியா மட்டுமே. அவரை தவிர இந்த கேரக்டருக்கு நான் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கவில்லை' என்று கூறினார்.


எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கியுள்ள மூன்றாவது படம் வலியவன்' என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய், ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும், சுபாரக் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். எஸ்.கே ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.


டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ள நா.முத்துக்குமார் மூன்று பாடல்களை எழுதியுள்ளார். மேலும் விவேகா இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



 மனதில் ஒரு மாற்றம்


கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால் முத்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘மனதில் ஒரு மாற்றம்’. 
இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர்.  இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநரான ஜனா வெங்கட் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சு.பார்த்திபன் அவர்களின் குரு குலத்தில் சினிமா கற்றவர். மேலும் இயக்குநர் சாமி அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் இயக்கிய குறும் படமான ‘வின்னிங் ஸ்டார்’ 2004-ம் ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நடந்த குறும் பட  விழாவில் திரையிடப்பட்டது.  அடுத்ததாக 2007-ல் இவர் இயக்கிய ‘அப்பா என் செல்லம்’ குறும் படமும் பாராட்டினைப் பெற்றது. அதேபோல் இப்போது இயக்கி இருக்கும் இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ படமும் எல்லோராலும் பாராட்டப்படும் என நம்புகிறார்.
ஒளிப்பதிவாளர் சாய் நந்தா.  இவர் மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும் ஹாஜீ அனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றியவர். அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். இவருடைய அப்பா பூபதி அவர்கள் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.
படம் பற்றி பேசிய இயக்குநர் ஜனா வெங்கட்,  “ஆணுக்கும், பெண்ணுக்கும் வாலிபப் பருவத்தில் ஏற்படுகிற வேதியியல் மாற்றம், அவர்களைப் பொருத்தவரையிலும் காதல் திருவிழா.
ஆனால் இந்தக் காதல்  திருவிழா எத்தனை பெற்றோர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பது சதவிகிதம் நிராகரிக்கப்படுகிறது என்றுதான் பதில் வரும். ஆகவே, எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு விஷயம்தான் திருவிழா. ஒரு சாரருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு சாரருக்கு துக்கத்தையும் கொடுப்பதற்கு பெயர் திருவிழாவே அல்ல.  அந்த வகையில் இந்தக் காதலும் திருவிழாவே இல்லை.                                                 
இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும்தான், புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால் ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவு செய்திருக்கிறோம். இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால் படம் முடிந்து வெளியே போகும்போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மனநிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள் என்று நம்புகிறோம்.
‘புகையிலை புற்று நோயை உண்டாக்கும்’.. ‘குடி குடியைக் கெடுக்கும்’.. ‘சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கானது’ போன்ற எச்சரிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுபோல், காதலினால் ஏற்படுகிற கொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மனதில் ஒரு மாற்றம் திரைப்படம் இளைஞர்களால் மட்டுமின்றி பெற்றோர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.’’ என்கிறார் டைரக்டர் ஜனா வெங்கட்.                    
பாம்யார்ட் S.சரவணன் இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 


3  நதிகள் நனைவதில்லை’
இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி, திரு.மயில்சாமி அண்ணாதுரை, ‘நதிகள் நனைவதில்லை’ படத்தைப் பார்த்து இயக்குனர் பி.சி.அன்பழகனை பாராட்டியிருக்கிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான இந்தியா அனுப்பிய ‘மங்கள்யான்’ பயணத்திற்கு பெரும் பங்காற்றிய விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை, தனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கும் இல்லை என்றும் அதற்கு நேரமும் இல்லை என்றும் கூறி வந்த நிலையில், நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படத்தை பார்க்க விருப்பப்பட்டார்.
அதன்படி சமீபத்தில் சென்னை இசைக் கல்லூரியில், உள்ள தாகூர் பிலிம் சென்டர் பிரிவியூ தியேட்டரில் அவருக்காக திரையிடப்பட்ட காட்சியில், தனது மனைவியுடன் வந்து மயில்சாமி அண்ணாதுரை ‘நதிகள் நனைவதில்லை’ படம் பார்த்தார்.
படம் முடிந்த பிறகு, படத்தில் நன்றாக நடித்த ஹீரோ ப்ரணவ்வையும், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனையும் வாழ்த்திய மயில்சாமி அண்ணாதுரை, “படத்தின் கதையும், வசனங்களும், பாடல்களும், படமாக்கப்பட்ட விதமும் தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.
மேலும் “உச்ச கட்டமாக படத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் காட்சிகளும், டேம் காட்சிகளும் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கின்றன. கன்னியாகுமரியின் ஒட்டு மொத்த அழகையும் வெண்திரை இல்லாமல் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளையும் ரசிக்கும் படியாக படமாக்கியுள்ள இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், குடும்பத்தோடு பார்க்க கூடிய உயர்ந்த கருத்துக்கள் கொண்ட காட்சிகளை வைத்து, இது ஒரு முக்கியமான படம், என்று சொல்லும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார். படம் முடிந்த பிறகும், படத்தின் அநேக காட்சிகள் மனசை விட்டு அகல மறுக்கின்றன. இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு இந்த படம் திருப்பத்தை தரும்.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றும் பாராட்டினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘நதிகள் நனைவதில்லை’ பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, பாடல்களை வெளியிட்டார். சினிமா நிகழ்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வரும் மயில்சாமி அண்ணாதுரை, கலந்துகொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றொர்கள், தங்கள் கனவுகளை பிள்ளைகளின் தலையில் போட்டு உடைக்கக் கூடாது.. அவரவர் கால்களில்தான்… அவரவர் பயணங்கள்.. நம்பிக்கையில்லாத மனிதனுக்கு இதயமும் சுமைதான்… குறுக்கு வழியின் துணை கொண்டு, மஹால்களை கட்டுவதைவிட…நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வமாகும் என்ற உயர்ந்த கருத்துக்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘நதிகள் நனைவதில்லை’.
இதில் ப்ரணவ், மோனிகா, நிசா, காயத்திரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டு கல்யாணம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செளந்தர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை தவசிராஜ் செய்திருக்கிறார்.
தான் இயக்கும் படங்களின் மூலம் மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல கருத்துக்களையும், மக்களுக்கு நம்பிக்கை தரும் விஷயங்களையும் சொல்லும் பி.சி.அன்பழகனின், இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.


சுட்ட பழம் சுடாத பழம்


ஆர்.ஆர். சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் ஆர்.சிவன், ஆர்.செல்வன் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு சுட்ட பழம் சுடாத பழம் என பெயரிடப்பட்டு உள்ளது.


இதில் ராஜா, காஷ்மீரா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகின்றனர். ரோபோ சங்கர், மகாநதி சங்கர், சுருளி மனோகர், கிங்காங், பயில்வான் ரங்கநாதன், லதாராவ், ஆர்.செல்வம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவா.ஜி இயக்குகிறார்.


குழந்தைக்காக மழலை பட்டாளம், களத்தூர் கண்ணம்மா போன்ற குழந்தைகளுக்கான பட வரிசையில் குழந்தைகள் படமாக இப்படம் தயாராகிறது என்றார் இயக்குனர். முழு நீள காமெடி படமாகவும் இருக்கும் என்றார்.


இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், தனது சொந்தக் குரலில் கொங்கனிக்கா, கொங்கனிக்கா என்ற பாடலை பாடி அதற்கான காட்சியில் ஆடி நடித்துள்ளார். குழந்தைகளும், பெற்றோரும் சேர்ந்து பார்க்கும் படமாக உருவாகிறது என்று தெரிவித்தார்.
இப்படத்தின் பாடல்களுக்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். ஆர்.ஹெச் அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். பின்னணி இசை: கணேஷ் ராகவேந்திரா, எடிட்டிங்: இளங்கோவன், நடனம் : ரமேஷ் ரெட்டி, செந்தாமரை, பாடல்: முத்து விஜயன், ஜெயமுரளி, வைரபாரதி.



5  சி.எஸ்.கே – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா
csk
சி.எஸ்.கே – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா படத்தின் பாடல்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அறிமுக இயக்குனர் எஸ்.சத்தியமூர்த்தி இயக்கும் படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா. இவர், பிரகாஷ் ராஜ், கே.வி. குகன் ஆகியோரிடம் உதவியாளராய் பணிபுரிந்தவர். புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் மோகன் இந்த த்ரில்லர் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். எஸ்.எஸ்.பிலிம் பேக்டரி படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து இசையமைப்பார் சித்தார்த் மோகன் கூறுகையில், “இப்படத்தில் வேலை செய்தது தினம் தினம் ஒரு புது அனுபவமாய் இருந்தது. இயக்குனர் சத்தியமூர்த்தி எழுதியுள்ள முருகன் பாட்டு அனைவரின் எண்ணங்களை வருடும் வண்ணம் அமைத்துள்ளோம். ‘காஞ்சிபோன’ என்ற பாடலை எழுதியது மிகவும் புதிய அனுபவமாய் இருந்தது. அனைவரது கவனத்தை ஈர்க்க ஒரு விதமான பிசிக் சப்தத்தை பின்னணி இசையில் சேர்த்துள்ளோம். அனைத்து பாடல்களும் எல்லாவிதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு உறுதுணையாய் இருந்த பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி.” எனக் கூறினார் அறிமுக இசையமைப்பாளர் சித்தார்த் மோகன். இதனிடையே சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா படத்தின் பாடல்கள் பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை வைப்ரன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.


6  தனது புதிய படத்தைப் பற்றி ஜாக்கி சான்
dragon-blade-poster
தனது அடுத்த புதிய படமான ‘டிராகன் பிளேட்’ (Dragon Blade) படம் குறித்த சில தகவல்களையும் ஜாக்கி சான் குணசீலனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரையேறும் சரித்திர கால, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய படம் டிராகன் பிளேட்.

அடுத்த இரண்டு வாரங்களில் தனது புதிய படத்தை விளம்பரப்படுத்த மீண்டும் கோலாலம்பூருக்கு வருகை தரவிருப்பதாகவும் ஜாக்கி சான் தன்னிடம் தெரிவித்ததாகவும் குணசீலன் கூறியுள்ளார்.
உலக அரங்கில் ஜாக்கி சான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், பழக்கவழக்கங்களில் மிகுந்த பணிவும், எளிமையும், சாதாரண மக்களோடு மக்களாக கலந்து பழகும் தன்மையும் கொண்டவராக இருந்தார் என்றும் குணசீலன் ஜாக்கி சான் குறித்து புகழாரம் சூட்டினார்.
“நான் அவரோடு இருந்த 2 மணி நேரமும் சிரித்த முகத்துடனேயே இருந்த ஜாக்கி சான், நான் கேட்ட கேள்விகளுக்கும், சலிக்காமல் பதிலளித்தார். அவரோடு அன்று நான் செலவிட்ட அந்த இரண்டு மணி நேரங்களும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக அமைந்துவிட்டது. டத்தோ விருது கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம், ஜாக்கி சானோடு இரண்டு மணி நேரம் அளவளாவிய பெருமைமிகு தருணம் என பிப்ரவரி 1 எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது” என மகிழ்ச்சியும், பெருமையும் பொங்க டத்தோ குணசீலன் தெரிவித்துள்ளார்.

7 காலகட்டம்



சரித்திரம்பேசு”
அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு” என்றுபெயரிட்டுள்ளனர்.அகிலன் படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு இதில் ஜோடி கிடையாது.இளம் ஜோடிகளாக கிருபா – கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள்.
“பதினெட்டாம் குடி” என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். பசங்க படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் யோகேஸ்வரன் போஸ் ஜோடியாக நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ்,செல்லத்துரை,கிரிகெட் மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் – வி.விஸ்வம்
இசை – ஜெயகுமார். இவர் இசையமைப்பாளர் தேவாவிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியவர்.

சரித்திரம்பேசு படம் பற்றி என்ன சொல்கிறார் இயக்குனர்!
தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கும் கிருபாவும் அவரது நண்பர்களும் கொலை என்று சொன்னாலே தூரம் ஓடுபவர்கள். ஆனால் சூழ்நிலை அவர்களை எப்படி கோபக்காரர்களாக மாற்றியது என்பதை திரைக்கதை அமைத்து கமர்ஷியல் படமாக்கி இருக்கிறேன்.முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி ஆக்ஷன் கலந்து பரபரப்பான படமாக உருவாகிறது. அகிலன் படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணனின் கதாபாத்திரம்பரபரப்பாக பேசப்படும் என்கிறார் இயக்குனர் ஸ்ரீ மகேஷ்



நன்றி  - மாலை  மலர்    தினமணி