Wednesday, March 25, 2015

கமல் VS சேரன்

1  பெரும்பாலான பெண்கள்  ஆண்களுக்கு  ஏழரைகள்  தான்  என்பதை  நாசூக்காக  சொல்லவே   பெண்கள் தினம்  மார்ச் 8-ல்   கொண்டாடப்படுதோ?



========================




2  பெண்களை  வெளிப்படையாகத்திட்டுபவர்களால் ஒருபோதும்  பெண்ணுக்கு  ஆபத்து  வராது..எல்லா ஆபத்தும்   பெண்களுக்கு  வாழ்த்து  சொல்பவர்களாலேதான்




======================




பெண்ணை  வெறுப்பவன், பெண்ணால்  பாதிக்கப்பட்டவன்  ஒதுங்கிப்போவான். பெண்ணை ரசிப்பவன், பெண்ணுக்கு  பாதிப்பை  ஏற்படுத்துபவன்  நெருங்கிவருவான்




====================




பப்பாளிக்காய்  பறித்து   அதன்  பாலை  அப்டியே  எடுத்து  பசும்பால் 50%  கலந்து  3 நாட்கள்   3  வேளை  அருந்தினால்  அல்சர் குணம்  ஆகும்




====================





5  உண்மையான  அன்பு  என்பது   நாம்  அன்பு  கொண்டவர்  மனம்  மாறினாலோ , நம்மை   விட்டு விலகினாலோ  அதே  அன்பை  காலம்  முழுக்க  வைத்திருப்பதே





==================




6  இங்கே இருக்கற எல்லா  ஆண்களும்  பொறுமைசாலிகளே! பொண்ணு.ங்க  பண்ற  அலப்பறைகளை  மவுனமா  பார்த்துட்டு  கம்முனு இருக்கானே?




============================




உனக்கு  வரப்போகும் “டார்லிங்” “யாமிருக்க பயமே” என அச்சுறுத்தும் “காஞ்சனா”வாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டால்  உன் குடும்பத்தில் “யாவரும் நலம்”




====================




தியாகு = நான்  முத  சம்சாரம்  கூடவே  போய்டறேன்


தாமரை = விடமாட்டேன்.உயிர்  உள்ளவரை போராடுவேன்
இதுக்கு என்ன தான்  வழி?
 2  கோடி  குடு


=====================


9  தியாகு  ஒரு  சந்தர்ப்பவாதி , சராசரி ஆண். அவரிடம்   தாமரை  போன்ற கவிதாயினி  எப்படி  ஏமாந்தார்  என்பது விடை  இல்லா  வினா.



==================



10  நல்லவேளை, சொல்வதெல்லாம்  உண்மை  நிகழ்ச்சிக்கு  தியாகு - தாமரையை  அழைக்கலை.தாமரை  மறை கழண்டிருக்கும்


===================


11  உன் எதிரி ஒரு ஆண் எனில் கவனமாக இரு.
உன் எதிரி ஒரு பெண் எனில் இரு மடங்கு எச்சரிக்கையோடு இரு


=============

12 50 ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடியே வந்தாக்கூட 10 ரூபா எம்ப்டி டிவிடி 50 வாங்கி காபி பண்ணி 20 ரூபாக்கு வித்து 100% லாபம் பார்ப்பான் தமிழன்


==============

13 என்னை  யார்  எதிர்த்தாலும்  எனக்கு   கோபம்  வராது-சரத்



அன்னைக்கு   விஷால்  எதிர்த்துப்பேசுனப்போ  செம  காண்டானீங்களே? அது  ஏன்?


================


14  மகளிர் தினத்தன்னைக்கு கல்யாணம் ஆகாத  கன்னிப்பொண்ணாப்பார்த்து   தேர்ந்தெடுத்து   வாழ்த்து  சொல்றான்  தமிழன்


==================

15  தமிழ்  ஃபாண்ட்  சப்போர்ட்  பண்ணாத  மொபைல்வெச்சிருக்காங்கனு தெரிஞ்சும் பொண்ணுங்க  கிட்டே “ ட்வீட் இன் தமிழ்”னு அசால்ட்டா  சொல்வான் தமிழன்



=================


16  திவ்யதர்ஷினி  ஸ்கூல்யூனிஃபார்ம்   போட்டிருக்கு, ஓக்கே ,ஆனா ஸ்கூல்  பொண்ணு  மாதிரி  செயற்கையா  பேசுறது எரிச்சலா   இருக்கு



==================


17  ஒரே  ஒரு  பார்வையால்  நாம்  கொண்ட அன்பை அன்பானவருக்கு  உணர்த்தி விட  முடிந்தால் நாம் தான்  உலகின் சிறந்த  சாமார்த்தியசாலி


===================



18 உடல் நலம் சரி இல்லாதவரைப்பார்க்கச்செல்கையில் உன் கண்ணில் இருந்து வரும் கண்ணீரே அவருக்கு ஆகச்சிறந்த ஆறுதல்


=================


19 கமல்  விதை  விதைத்தார் , சேரன்   அறுவடை செய்தார்


====================


20  எதிர்காலத்தில்  தியேட்டரிலும்  படம்  ரிலீஸ் ஆகி, அதே நாளில்   டிவிடி  ஒரிஜினலும்  ரிலீஸ் ஆகும்.அப்போ  லாபம்  செமயா  இருக்கும்# கமலின் கனவு



====================

Tuesday, March 24, 2015

தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் 'குற்றம் கடிதல்'

அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' படத்துக்காக, சிறந்த உறுதுணை நடிகராக பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய 'குற்றம் கடிதல்' எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'ஜிகர்தண்டா'வில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.
சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.
முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. எனினும், பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகர் விஜய்... சிறந்த நடிகை கங்கனா ரணவத்
கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள் பட்டியல்
சிறந்த படம்: கோர்ட் (மராத்தி)
சிறந்த இயக்குநர்: ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டூஷ்கோனே, வங்காளம்)
சிறந்த தமிழ்ப் படம்: குற்றம் கடிதல்
சிறந்த இந்தி படம்: குயின்
சிறந்த நடிகை: கங்கனா ரனவத் (குயின், இந்தி)
சிறந்த நடிகர்: விஜய் (நானு அவனல்ல அவளு, கன்னடம்)
சிறந்த உறுதுணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா, தமிழ்)
சிறந்த உறுதுணை நடிகை: பல்ஜிந்தேர் கவுர் (பக்டி தி ஹானர், ஹரியானாவி)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: மேரி கோம் (இந்தி)
சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம்: சைலண்ட் சினிமா: (1895 - 1930), பசுபுலெடி பூர்ணசந்திர ராவ்
சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம் (சிறப்புத் தேர்வு) - ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா, ஜி.தனஞ்செயன்
சிறந்த சினிமா விமர்சகர் - தனுல் தாகூர்
சிறந்த குறும்படம் - மித்ரா
சிறந்த இசை - பாடல்கள்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (இந்தி)
சிறந்த இசை - பின்னணி இசை: கோபி சுந்தர், 1983 (மலையாளம்)
சிறந்த பின்னணிப் பாடகி: உத்தரா உன்னி கிருஷ்ணன், பாடல் - அழகே (சைவம், தமிழ்)
சிறந்த பின்னணிப் பாடகர்: சுக்விந்தர் சிங் பாடல் - பிஸ்மில், (ஹைதர், இந்தி)
சிறந்த நடன அமைப்பு: ஹைதர் (பாடல்: பிஸ்மில், இந்தி)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: சவுண்ட் ஆஃப் ஜாய்
சிறந்த புலனாய்வுத் திரைப்படம்: ஃபும் ஷாங்
சிறந்த சாகசத் திரைப்படம்: இன்டியாஸ் வெஸ்டர்ன் காட்ஸ்
சிறந்த கல்வித் திரைப்படம்: கோமல் & பிஹைண்ட் தி கிளாஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு: டாலி அஹ்லுவாலியா (ஹைதர், இந்தி)
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த படம்: ஒட்டால் (மலையாளம்)
சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஆஷா ஜாவோர் மாஜே - வங்காளம்
சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு - மொழி வாரியாக:
சிறப்பு விருதுக்கான படங்கள்:
ஐன் (மலையாளம்)
நச்சோம் - ஐஏ கும்பசார் (கொங்கனி)
கில்லா (மராத்தி)
பூத்நாத் ரிடர்ன்ஸ் (இந்தி)
மாநில மொழி சிறந்த படங்கள்:
குயின் - இந்தி
பஞ்சாப் 1984 - பஞ்சாபி
குற்றம் கடிதல் - தமிழ்
சந்தாமாமா கதலு - தெலுங்கு
ஐன் - மலையாளம்
கில்லா - மராத்தி
ஆதிம் விசார் - ஒடியா
ஹரிவு - கன்னடம்
ஐஏ கும்பசார் - கொங்கனி
ஒதெல்லோ - அசாமீஸ்
நிர்பஷிடோ - வங்காளம்

நன்றி - த இந்து

கடவுள் பாதி மிருகம் பாதி - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர்)

மர்மக் கதைக்கு ஏற்ற விதத்தில் இருளில் தொடங்குகிறது படம். முகத்தில் அச்சம் அப்பியிருக்க, இரவுக் காவலர் நடந்து செல்வதை கேமரா பின்தொடரும்போதே பெரும் அசம்பாவிதத்துக்கு மனம் தயாராகிவிடுகிறது. எதிர்பார்த்தபடியே காவலர் கொன்று இழுத்துச் செல்லப்படுகிறார். கொல்லும் நபரின் முகத்தைக் காட்ட கேமரா விரும்பவில்லை.
அடுத்த காட்சியில் படபடப்புடன் வீட்டில் இருந்து ஓடிவந்து காரில் ஏறுகிறாள் நேகா (ஸ்வேதா விஜய்). காரில் காத்திருக்கும் அவளது காதலன் (அபிஷேக்) காரை கிளப்புகிறான். வெளியூருக்குச் சென்று திருமணம் செய்துகொள்வது அவர்கள் திட்டம்.
வழியில் ஒரு கார் ரிப்பேராகி நிற்கிறது. அங்கு நிற்கும் ஒருவர் (ராஜ்) இவர்களது காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்கிறார். அவர் இயல்பான நபர் அல்ல என்பது சிறிது நேரம் கழித்துத்தான் காதலர்களுக்குத் தெரிகிறது. அபிஷேக்கை கத்தியால் குத்தவரும் ராஜின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காதலர்கள் தப்பிக்கிறார்கள்.
ஆனால் வேறொரு கார் மூலம் இவர்களைப் பின்தொடர்ந்து வந்து மீண்டும் இவர்களது காரில் ஏறிக்கொள்கிறார் ராஜ்.
நெடுஞ்சாலையில் ராஜ் விட்டுச் சென்ற காரில் இருக்கும் பிணத்தை போலீஸார் கண்டுபிடிக்கின்றனர். பிணத்தின் அடையாளங் களை வைத்துப் புலனாய்வைத் தொடங்கு கின்றனர். கொலையாளி, மனநல மருத் துவமனையில் இருந்து தப்பியவன் என்பது தெரிய வர, அவன் ஏறிக்கொண்ட கார் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. கார் சென்ற வழியில் விரை கிறார் போலீஸ் அதிகாரி சேது.
பல அபாயங்களுக்கு மத்தியில் நடக்கும் இந்த தேடுதல் வேட்டையின் முடிவு என்ன என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக் கிறார்கள்.
படத்தைத் தயாரித்து இயக்கி முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கும் ராஜ், காட்சியால் கதை சொல்வதில் பெருமளவு வெற்றிபெற்றிருக்கிறார். அடிப்படைக் கதை, மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியின் பின்னணி ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. ஆனாலும், அனாவசியக் காட்சி கள் இல்லாமல் கச்சிதமாகத் திரைக்கதை அமைத் திருக்கிறார். சில நீளமான காட்சிகள் அலுப்பூட்டு கின்றன. அடுத்தடுத்த திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், முடிவு எளிதாக யூகிக்கக்கூடியதாக இருப்பதால் முழுமையாக ஒன்றமுடியவில்லை. சண்டைக் காட்சிகள் படமாக்கம் அருமை. குறிப்பாக காவல் நிலையச் சண்டை. குற்றவாளியின் பின்னணியைச் சொல்லும் குறுங்கதையில் புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம்.
ராஜ் அதிகம் பேசாமல் உடல்மொழி மூலமாகவே கலக்கியிருக்கிறார். அபிஷேக்கும் ஸ்வேதாவும் எதிர்பாராத ஆபத்தில் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தையை நன்கு வெளிப்படுத்துகின்றனர். ஸ்வேதாவின் கண்கள் நன்றாகப் பேசுகின்றன. மைனாவில் காவல் துறை அதிகாரியாக வரும் சேது அமைதியாக வந்துபோகிறார். சிறிய வேடத்தில் வரும் பூஜா பளிச்சென்று மனதில் நிற்கிறார்.
ராகுல்ராஜின் பின்னணி இசை நன்றாக உள் ளது. காட்சியின் உணர்வை வெளிப்படுத்தும் கிஷோர் மணியின் ஒளிப்பதிவு படத் தின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற தலைப்பின் இரண்டாவது பாதியை மட்டுமே காட்டுகிறது படம். சைக்கோ குற்றவாளி பாத்திரத்தின் மென்மையான பகுதியையும் காட்டியிருந்தால் தலைப்புக்கு நியாயம் செய்வதுடன் படத்தின் பரிமாணமும் கூடியிருக்கும்.



நன்றி  - த இந்து


வாசகர் கருத்து -படிக்கும் போதே தெரியுது நல்ல வித்தியாசமான படம் னு.. அதுல கொரை கண்டுபுடிச்சி எழுதலனா உங்களுக்கு தூக்கம் வராதே... யாராச்சும் பெரிய நடிகர் நடிச்சிருந்தா கதையே இல்லைனாலும் பாராட்டித்தள்ளுவிங்க..

உலகக் கோப்பையை ஜெயிக்க-கிரேசியைக் கேளுங்கள் 25

  • ஓவியம்: கேசவ்
    ஓவியம்: கேசவ்
  • கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
    கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
சோனா, நியூஜெர்ஸி.
இந்தியா உலகக் கோப்பையை ஜெயிக்க ஒரு வெண்பா கூறுங்களேன்?
ஜெயிக்கட்டும் பிறகு வாழ்த்துவோம் வெண்பாவால். இப்போதைக்கு ஜெயிப்பதற்கு பிரார்த்தனை செய்வோம் ‘வேண்டுதல் வெண்பா’வாய்!
அடியேனுக்கு ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஜெயிக்க, அது அமெரிக்காவானாலும் அமிஞ்சிக்கரையானாலும் கிருஷ்ணர் துணை வேண்டி ‘வேண்டுதல் வெண்பா’ எழுதும் சென்டிமெண்ட் உண்டு. கிரிக் கெட்டை தமிழில் ‘கிட்டிபுள்’என்பார்கள். கிருஷ்ணரைச் செல்லமாக ‘கிட்டன், கிட்டி’என்றும் சொல்வதுண்டு. மகேந்திர சிங் தோனியும் கிருஷ்ணரைப் போல தீராத விளையாட்டுப் பிள்ளை.
கிருஷ்ணர் பாம்பின் மீது ஆடியது போல தோனி ஆட அந்தக் கண்ணனையே வேண்டு வோம். மேலும், கிருஷ்ணர் பீதாம்பரதாரி. அதாவது தமிழில் பீதகம் (மஞ்சள் வண்ண ஆடை) அணிபவன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனியும் அணிவது யெல்லோ யெல்லோதான் (Yellow Yellow Dress). எல்லாம் சரியா வருது. கப்பு (CUP) வருதா பாப்போம். இங்கே கண்ணனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் வேண்டிக் கொண்டு, தோனியைக் கிருஷ்ணாவை போல் வரைந்தது ‘ஹிண்டு’ கேசவ்.
‘வேண்டுதல் வெண்பா’
‘சென்னைக்கு
சூப்பர்கிங் சிங்தோனி - பீதகக்
கண்ணனைப் போல் மஞ்சள் கட்டுகிறார் என்னைக்கும்
ஆடைஆள் பாதிபாதி ஆடய்யா கோகுல
மாடய்யன் போல்பாம்பின் மேல்’.
கி.கன்னையா, திண்டிவனம்.
உங்கள் மேடை நாடகத்தைக் காண விளையாட்டு நட்சத்திரம் யாராவது வந்திருக்கிறார்களா?
என்ன அப்படி கேட்டுட்டீங்க! அஃப்கோர்ஸ் என் நாடகத்தைக் காண வரும் ரசிகர்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரையில் விளையாட்டுத்தனம் கொண்ட ஸ்டார்களே! கிரிக்கெட் பிரபலம் சுனில் கவாஸ்கர் எங்கள் நாடகத்துக்கு வந்ததைப் பெருமையாக குறிப்பிட விரும்புகிறேன்.
’சியர்ஸ் எல்காட்’ டி.வி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு ஹோட்டல் லீ மெரிடினியனில் 5 நாள் கிரிக்கெட் மேட்ச்சைப் போல் ஒரு நாள் முழுக்க நடந்தது. அதற்கு பிரதம விருந்தினராக ‘சியர்ஸ் எல்காட்’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் கவாஸ்கர் சிறிது நேரம் தலைகாட்ட ‘டுவெல்த் மேன்’ போல் வருகை புரிந்தார். அங்கே குழுமியிருந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் வேடிக்கையாளர்களாக எங்கள் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் போட அழைத்தார்கள்.
ஏற்கெனவே எஸ்.வி கேப்டனாக ‘மினிமேக்ஸ்’ கிரிக்கெட் டீம் வைத்திருந்த நாங்கள், கவாஸ்கர் பார்க்கும்பட்சத்தில் நாடகம் போட வருவதாகக் கூறினோம். கவாஸ்கருடன் அன் றைய தினம் எங்கள் குழு வினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் எஸ்.வி இடம்பெறவில்லை.
கார ணம், சியர்ஸ் எல்காட் மினிமேக்ஸ் கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங்கில் பிஸி. கோபி இருக் கிறான். ஆனால், குள்ள மாக இருப்பதால் போட்டோவுக்குக் கீழே, மறைந்துவிட்டான். நான் போட்டோ எடுக்கும் சமயம் ‘பவுண்டரி லைனில்’ டின்னர் ஃபீல்டு செய்ய முந்திவிட்டேன்.
நான்கு ரன்கள்தான் என்று நினைத்த போது ‘தேர்டு அம்பயர்’ சிக்ஸர் சொன் னால் எப்படி மைதானம் அலறுமோ, அது போலவே கவாஸ்கர் எங்கள் நாடகம் பார்க்கப்போகும் நல்ல சேதி யைக் கேட்டவுடன் எங்கள் ‘கிரேசி குழுவினர்’ ஸ்டேடியத்தில் இல்லாம லேயே சந்தோஷ சத்தமிட்டார்கள். கிச்சா மட்டும் ‘யார்ரா கவாஸ்கர்..?’ என் றான். ‘ஏண்டா… கிரிக்கெட் தெரி யாதா?’ என்று நாங்கள் தலையில் அடித் துக்கொள்ள, கிச்சா ‘யார்ரா அவன் கிரிக்கெட்?’என்று தன் கிரிக்கெட் ஞானத்தை வெளிப்படுத்தினான்.
கிரிக் கெட் சுத்தமாக, நாடகம் அசுத்தமாகத் தெரியாத கிச்சா ஆங்கிலத்தில் ஆஸ்கர் வாங்கியவன் (சிரசாசனத்தில் ஏ,பி,சி, டியை தலைகீழாகச் சொல்வான்). அவனை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப் பாளராக அமர்த்தினோம். நாடகம் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘வெயிட் எ மினிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ்’ என்று சொல்லிவிட்டு பாதி நாடகத்தில் மேடையேறி ‘‘பாலாஜி (மாது) கடசீயா… நீ சொன்ன டயலாக் என்ன?’ என்று கேட்டு, உடனே அதை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப்பான்.
கடைசி வரை கிரிக்கெட் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘நீங்க என்ன வேல பாக்குறீங்க?’ என்று கேட்டு கழுத்தறுத்தான். ஒரு கட்டத்தில் கவாஸ்கர் கிச்சாவைக் கழட்டிவிட்டுவிட்டு நாடகத்தைக் கைத்தட்டி சிரித்து ரசிக்கத் தொடங்கினார்.
‘எப்படி சார் எங்கள் டிரான்ஸ்லேட்டர் இல்லாம டிராமாவைப் புரிஞ்சுண் டீங்க?’ என்று டின்னரின்போது நாங் கள் கேட்டோம். ‘கிரிக்கெட்டும் காமெடியும் மொழிக்கு அப்பாற்பட்டது’ என்று ஆரம்பித்து, கிரிக்கெட்டுக்கும் காமெடிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ‘கமெண்ட்ரி’ கொடுத்தார்.
கவாஸ் கரிடம் கிரிக்கெட் தெரிந்த எங்கள் நாடக இயக்குநர் காந்தன் டெண்டுல்கரைப் பற்றிக் கேட்டபோது ‘நீங்க வேணா… பாருங்க மிஸ்டர் காந்தன்... அந்தப் பையன் (சச்சின்) என்னைத் தொட்டுண்டு டொனால்ட் பிராட்மேனைத் தூக்கி சாப்பிடப் போறான்’என்று ஜோஸ்யம் சொன் னார். கவாஸ்கர் வாயால் ’கிரிக்கெட் ரிஷி’ பட்டம் சச்சினுக்கு அன்றே கிடைத்துவிட்டது.
சமீபத்தில் நாடகம் போட இலங்கைக்குச் சென்ற போது, ஹோட்டல் சமுத்ராவில் கமெண்ட்ரி கொடுக்க தங்கியிருந்த கவாஸ் கரிடம் கிச்சா சென்று ‘சார்… இப்போதான் நீங்க ‘கWasகர்’… அன்றைக்கு ‘கவ்Isகர்’ என்று தனது Is, Was, Past Tense- Present Tense ஆங்கிலப் புலமையைக் காட்ட, Tense ஆன சுனில் கவாஸ்கர், இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற கிலியில் ‘ரன் அவுட்’ ஆனாலும் பரவாயில்லை என்கிற ரீதியிலும் பீதியிலும் ஓடியது ஞாபகத்துக்கு வருகிறது!


நன்றி - த இந்து

கொம்பன் -ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம் - கார்த்தி பேட்டி

“இயக்குநர் முத்தையாவோட வாழ்க்கையில் அவருடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் நடந்த ஈகோ யுத்தத்தைத்தான் கதையாக வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் கூட நடந்திருக்கின்றன” என 'கொம்பன்' படம் எப்படித் தனக்கு நெருக்கமானது என்று உற்சாகமாகத் தொடங்கினார் கார்த்தி
கொம்பன் படத்தின் கதை என்ன?
ராமநாதபுரம் ஏரியா ஆப்பநாடு பகுதியில் ஆடு வியாபாரம் செய்கிறவன்தான் கொம்பையா பாண்டியன். தண்ணி அடிக்காத, கெட்ட பழக்கம் இல்லாத நல்லவன். இந்த மாதிரியான கதாபாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணியது இல்லை. மாமனார் - மருமகன் ஈகோதான் கதைக்கரு. ராஜ்கிரண்தான் நடிக்கணும்னு பல ஆண்டுகளாக இந்தக் கதையை வைத்திருந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
திருமணமான புதிதில் புது மாப்பிள்ளைகள் மாமனாரை வம்புக்கு இழுப்பார்கள். அவர் வீட்டில் இருக்கும்போதே, “உங்கப்பா சாப்பிட்டாரா”னு கிண்டல் பண்ணுவாங்க. கல்யாணம் ஆன உடனே மாமனார் - மருமகன் இருவருக்குள் நடக்கும் காமெடி, உரசல் எல்லாம் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
கல்யாணத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பல கதைகள் வந்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு நடப்பது பற்றிய காட்சிகள் அமைந்த படங்கள் குறைவு. அதிலும் மாமனார் - மருமகன் உறவில் சமீபத்தில் எந்தப் படமும் வந்ததில்லை. அந்த வகையில் ‘கொம்பன்' அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
படத்தின் விளம்பரங்களில் ‘பருத்தி வீரன்’ படத்தின் சாயல் தெரிகிறதே..
‘பருத்தி வீரன்' படத்தில் இருந்து வேற மாதிரித் தெரிய வேண்டும் என்று மீசை எல்லாம் வைத்துப் போய்ப் பார்த்தால் எல்லாருமே அந்த மாவட்டத்தில் இதே மாதிரிதான் மீசை வைத்திருந்தார்கள். அந்த ஊர்க்காரனாக மாற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாமே பண்ணியிருக்கிறேன்.
‘பருத்தி வீரன்' படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு அப்படத்தின் ஞாபகம் வராமல்தான் நடித்திருக்கிறேன். ‘கொம்பன்' ஆரம்பிக்கும்போது ‘பருத்தி வீரன்' ஞாபகம் வந்தாலும், முடியும்போது கண்டிப்பாக இது வேறு படம் என்று ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
தொடர்ச்சியாகக் கிராமத்து வேடங்களே வருகிறது என்று லட்சுமி மேனன் சலித்துக்கொண்டிருக்கிறார் கவனித்தீர்களா?
திரையுலகை விட்டு விலக இருக்கிறார் என்று செய்திகள்கூட வந்தது. பிறகுதான் அந்தச் செய்தி தவறு என்று கேள்விப்பட்டேன். லட்சுமி மேனனுக்கு உண்மையில் நடிப்பைவிடப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஒரே மாதிரியான கிராமத்து வேடங்களே வருகிறதே என்ற எண்ணம் அவங்ககிட்ட இருக்கிறது.
நகரத்தில் வளர்ந்த பெண், மார்டனான பெண். ஆனால் கிராமத்து வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவதால் அனைவருமே அதே மாதிரியான வேடத்திற்கு அவரைக் கூப்பிடுகிறார்கள். ஒரு நடிகையாக அவங்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். மற்றபடி சினிமா மேல கோபம் எல்லாம் இல்லை. திறமையான நடிகை.
அண்ணனும், தம்பியும் வெவ்வேறு கதைக்களங்களில் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?
அமையுறதுதான். நல்ல கதைகள், நல்ல இயக்குநர்கள் நம்மைத் தேடி வர வேண்டும். நல்லவேளை எனக்கு அவரை மாதிரிப் படங்கள் அமையவில்லை. அவர்கூட யார் போட்டி போடுவது? இருவருடைய படங்களும் வேறு மாதிரி அமைவது சந்தோஷமாக இருக்கிறது.
ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் மாதிரி உங்களுக்குப் போட்டி யார்?
ஏன் இப்படிச் சிக்கலில் மாட்ட வைக்க நினைக்கிறீர்கள். என்னுடைய முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும்தான் போட்டி. என் படத்தைப் பார்க்க வருபவர்கள் என்னிடம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லையே!
எனது முந்தைய படத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பொறுத்துதான் அடுத்த படத்திற்கு மக்கள் வருகிறார்கள். முந்தைய படத்தைவிட இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது, எவ்வளவு தரமாக இருக்கிறது இதைதான் பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்குமே அவருடைய முந்தைய படத்தோடுதான் போட்டி என்பது என் கருத்து.
வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
ஒவ்வொரு படத்துக்கும் உழைக்கிறேன். நிறைய உழைத்த படங்கள் சரியாகப் போகாதபோது ரொம்ப வருத்தப்படுவேன். ஆனால், அப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த படத்தைப் பாதிக்கும். ஒரு படம் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. ஆனால், எல்லாப் பொறுப்பும் என்னைத்தான் பாதிக்கும். தோல்வி வரும்போது எல்லாம் அடுத்த படம் ஜெயிக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு எழுந்துவிடுவேன்.
இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கணும் என்று நீங்கள் நினைத்த படம் எது?
‘மெட்ராஸ்' அப்படி நான் பண்ணிய படம்தான். அந்தப் படம் எனக்காக உருவாக்கப்பட்டதில்லை. கதையைப் படித்தபோது ரொம்ப பிடித்தது. என்னை அப்படத்துக்குப் பொருத்திக் கொண்டேன். மற்றபடி நான் பார்க்கும் படங்கள் நல்லாயிருக்கும்போது, நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது இல்லை. படம் நல்லாயிருக்கும் பட்சத்தில் படக்குழுவினருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டிவிடுவேன். அது தான் என்னுடைய பாணி.
உங்கள் படத்தின் கதை, காட்சிகள் பற்றி உங்கள் மனைவியிடம் பேசுவீர்களா?
நீங்க வேற. அப்படி எல்லாம் பேச ஆரம்பித்தால் வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டிற்குப் போனால் சினிமாவை மறந்துவிடுவேன். படத்தைப் பற்றி பேசினாலே, “24 மணி நேரமும் படத்தைப் பற்றி சிந்திக்கிறீங்களே” என்று மனைவி கேட்பார். அதனால் என் படத்தைப் பற்றி மனைவியோடு விவாதிப்பதில்லை.


thanx  - the hindu



  • Gow  
    Enaku Surya Na Romba Pidikum Karthi Unga Padam Madras சூப்பர் Komban Padam Vetri Pera Vazhthukal
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Shankar  
      சூரியாவிடம் ஒரே போன்ற நடிப்பு உள்ளது.நமக்கு அவரிடம் இருந்த லயிப்பு போய் அலுப்பு வந்து விட்டது.இவரும் ஒரு groove இல் வந்து விட்டார்.இந்த இருவரின் அளப்பல்கள் வேறு நம்மை படுத்துகின்றன.
      Points
      15400
      2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • பூபாலன்  
        அண்ணணோடு மோதினா அண்ணன் படம் ஓடாது
        3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Jay  
          ஒரு ஆண் அவன் வீட்டிலேயே அவன் செய்யும் தொழில் பற்றி சுதந்திரமாக பேச முடியவில்லை என்பதை கூட ஏதோ பெரிய நகைச்சுவை போல சொல்லிகொள்கிறான் ! கொடுமை !
          Points
          3525
          3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
          • செல்வகுமார Chozhan  
            சாதிய ரீதியான படங்களில் நடிப்பதை முதலில் நிறுத்தவும். ஏற்கனவே பருத்திவீரனில் சேர்வையாக, இப்போ கொம்பனில் மறவராக. நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்து ஒரு தமிழரான நீங்களே எப்படி இது போன்ற படங்களில் கூச்ச நாச்சம் இல்லாமல் நடிக்கீன்றீர்கள்? கடந்த மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட கொலைகள். பாதிக்கப்பட்டது தமிழ் சமூகங்களான தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்), கோனார் (இடையர்), நாடார்(சானார்). கொலை செய்தது ஒரே சமூகம்....
            3 days ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • shankar  
              இன்னும் இந்த தமிழ் சமூகம் இப்படி எதாவது பிடித்துகொண்டு உருப்படாமல்போய் கொண்டு இருங்கள்...படத்தை படமாக பாருங்கள் அது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.have tolerance .