Wednesday, March 25, 2026

1000 கோடியை எட்டுமா ரஜினி+கமல் காம்போ நெல்சன் படம்?


1000 கோடியை எட்டுமா ரஜினி+கமல் காம்போ நெல்சன் படம்?

 

தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் படம் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த  சிவாஜி படம் தான்.அதற்குப்பின் ஒவ்வொரு முன்னணி ஹீரோவும் தன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார்கள்.

 

கமல் படங்களில் மரோசரித்ரா (தெலுங்கு)1978,ஏக் துஜே கேலியே(ஹிந்தி)1981 ஆகிய இரு படங்களும் 500 நாட்கள் ஓடி வசூல் செய்திருந்தாலும் கமலின் சகலகலா வல்லவன் (1982) தான் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம்.அந்தக்காலத்திலேயே 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

தசாவதாரம்(2008) பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு  இடையே வெளியாகி 200 கோடி  வசூல் செய்தது.விஸ்வரூபம்(2013) மிகுந்த போராட்டஙகளுக்குப்பின் வெளியாகி 220 கோடி வசூல் செய்தது.

2022 ம் ஆண்டு வெளிவந்த கமலின்  விக்ரம் படம் அதிரி புதிரி ஹிட் ஆகி 500 கோடி வசூலைத்தொட்ட முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையைப்பெற்றது.

இதற்குப்பின் கமலின் மார்க்கெட் லெவல் வேறு எங்கோ போனது.

அதுவரை ரஜினி படங்கள் அளவுக்குக்கமல் படங்கள் வசூலிப்பதில்லை என்ற நிலை தான் இருந்தது.

கமல் படங்கள் செண்ட்டர் ஆடியன்சை அதிக அளவு கவரும்.சி செண்ட்டர் ஆடியன்சிடம் அதிக  ரீச் இருக்காது.

ஆனால் ரஜினி படங்கள் பி ,சி செண்ட்டர் ரசிகர்களைப்பெரிதும் கவர்ந்து வசூல் மழை பெய்யும் அளவுக்கு ஓடியது.

ரஜினியின் ஒரு தோல்விப்பட வசூல் கமலின் ஒரு வெற்றிப்பட வசூலுக்கு இணை ஆகும்.

 

2024ல் வெளியான ரஜினி படம் வேட்டையன்.இது சுமாராகத்தான் ஓடியது.ஆனால் அதன் வசூல் 250 கோடி.

 

அதே போல பேட்ட(2019) ,தர்பார்(2020) இரண்டும் சுமார் ரகப்படஙகள் தான்.ஆனால் இரண்டுமே 250 கோடி வசூல்.

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளி வந்த எந்திரன்  (2010) 320 கோடி ரூபாய் வசூல்.

எந்திரன் பாகம் 2 ஆக வெளிவந்த  2. (2018)

800 கோடி வசூலித்து இதுவரை வந்த தமிழ் சினிமா வசூலில் நெ 1 இடத்தில் இன்னமும் இருக்கிறது

ரஜினி நடிப்பில் வெளி வந்த கபாலி (2016) படம்  ரூ 305 கோடி வசூலித்து இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி ஒரு டிக்கெட் ரூ 1000 என்ற அளவில்  விற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைபெறுகிறது.

 

விக்ரம் புகழ் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கூலி(2025) படம் ரூ 675 கோடி வசூல் என்றாலும்படத்தின் தரத்தில் ரஜினிக்குத்திருப்தி இல்லை.

 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர்(2023) படம் ரூ 650 கோடி வசூலித்தது.

 

அதே காம்போ வில் ஜெயிலர் பாகம் 2 விரைவில் வெளி வர இருக்கிறது.இப்போது 500 கோடி ரூபாய் வசூலித்த விக்ரம் படத்தின் நாயகன் கமல் + 800 கோடி ரூபாய் வசூல் செய்த 2. பட நாயகன் ரஜினி  இருவரும் இணைந்து நடிக்கும் படம் 1000 கோடி வசூலைத்தாண்டுமா?என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

 

நெல்சன் பாணி காமெடி ஜர்னர் தான்.பொதுவாகக்காமெடிப்படஙகள் பெரிய வசூலைக்கொடுக்காது.

உள்ளத்தை அள்ளித்தா மெகாஹிட் காமெடிப்படம் தான்.அதன் வசூல் பிரமாதம் எல்லாம் இல்லை.அதனால் தான் சுந்தர் சி இயக்கத்தில்  நடிக்க  ரஜினி படம் ட்ராப்  ஆனபோது ரஜினி ரசிகர்கள் கவலைப்படவில்லை.

ரஜினி காமெடிஹீரோ  ரோலில் நடித்த தம்பிக்கு எந்த ஊரு? குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,வேலைக்காரன் ,ராஜாதி ராஜா  போன்ற படங்கள் எல்லாம் 100 நாட்கள்


ஓடினாலும் பிரம்மாண்டமான வசூலை வாரிக்குவித்த படஙகள் ரஜினியின் ஆக்சன் படஙகள் தான்.

 

அதே நிலை தான் கமலுக்கும்.கமல் நடித்த கிளாசிக்கான காமெடிப்படஙகள் ஆன மைக்கேல் மதன காமராஜன்,பஞ்ச தந்திரம்,வசூல் ராஜா எம் பி  பி எஸ் , பத்திரிக்கைகளின் பாராட்டையும் ,ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பெற்றாலும்

கமலின் இந்தியன் படம் போல் வசூலை வாரிக்குவிக்கவில்லை.

இதிலிருந்து நமக்குத்தெரிய வருவது நெல்சன் பாணி காமெடிப்படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் மூவி ஆக இருந்தால் மட்டுமே இது வசூல் ரீதியான சாதனை படைக்கும் படமாக இருக்கும்.

நெல்சன் வெளியிட்ட பிரமோ வீடியோவில் அது ஒரு ஆக்சன் மூவி மாதிரி தான் தெரிகிறது.

கமல் தான் ஹீரோ ,ரஜினி வில்லன் என பலரும் பேசி வருகிறார்கள்.சந்திரமுகி படத்தில்  படம் முழுக்க வந்த ஹீரோ ரஜினியை விட க்ளைமாக்சில்  10 நிமிடஙகளே வந்த வில்லன் ரஜினி அப்ளாஸ். அள்ளினார். லக லக லக என்ற மாடுலேசன் பஞ்ச் டயலாக் பெரிதும் பேசப்பட்டது

எந்திரன்  படத்தில் ஹீரோவாக வரும்  புரொபசர் கேரக்டரை விட  வில்லன் ஆக வந்த சிட்டி கேரக்டர் தான் பெரிதும் கவர்ந்தது. மே மே என்று சிட்டி ஆடு போல் கத்தி வில்லத்தனம் காட்டிய போது அரஙகம் ஆர்ப்பரித்தது.

எனவே நெல்சன் படத்தில் கமல் ,ரஜினி இருவருமே இரு ஹீரோக்கள் என்று பேலன்ஸ் செய்வதை விட கமல் ஹீரோ ,வில்லன் ரஜினி என்று அமைந்தால் ரசிகர்களுக்குக்கொண்டாட்டமாக இருக்கும்.

 

இதற்கு முன் கமல் + ரஜினி காம்போவில் வந்த படங்களில் படம் முழுக்க கமல் நடித்திருந்தாலும் சில சீன்களில் வரும் ரஜினி கை தட்டல்களை அள்ளிக்கொண்டது வரலாறு.

ரஜினியின் வேகமும் ,ஸ்டைலும்  அனைவரும் அறிந்ததே.

ரஜினி யின் பிறந்த நாள் டிசம்பர் 12.கமல் பிறந்த நாள் நவம்பர் 7

ரஜினி கமல் காம்போ படம் பற்றிய தகவல்கள் ,ப்ரமோ ,டீசர்,ட்ரெய்லர் எது வந்தாலும் 12.07 என்ற டைமிலோ 7.12 என்ற டைமிலோ இருக்கும் என நெல்சன் முடிவு எடுத்து இருக்கிறார்.ஏன் எனில் இருவரின் பிறந்த நாளும் அந்த டைம் பிரேமில் கவர் ஆகி விடும்.

 

எந்த அளவுக்கு இருவரையும் பேலன்ஸ் செய்து காட்சிகள் அமைக்க வேண்டும் என்ற அரிய பணியை நெல்சன் உணர்ந்துள்ளதாகவே தெருகிறது.

பிரமோவில் கமல் ரஜினி இருவரின் ஸ்க்ரீன் பிரசன்சும் அருமை.

திரை ஆளுமைகள் வசூலிலும் 1000 கோடியை அடித்து விடுவார்கள் என்றே நான் கணிக்கிறேன்


Monday, March 23, 2026

ரஜினி+கமல் காம்போ படங்கள் ஒரு பார்வை

 


ரஜினி+கமல் காம்போ படங்கள் ஒரு பார்வை


1975லிருந்து 1985 வரை  11 வருட காலத்தில் ரஜினி ,கமல் இருவரும் இணைந்து 14 தமிழ்ப்படங்கள்,2 தெலுங்குப்படஙகள்,ஒரு ஹிந்திப்படம் என ஆக மொத்தம் 17 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.அதற்குப்பின் இருவரும் தனி ஹீரோக்களாக வளர்ந்து விட்டதால் ஒரே படத்தில் இனி இணைந்து நடித்தால் இருவருக்கும் குறைவான சம்பளம் தான் கிடைக்கும்,எனவே இனி தனித்தனியாக நடிப்போம் என கமல் ரஜினியிடம் கூறவே ரஜினியும் சம்மதித்தார்.


அமரர் டைரக்டர் கே பாலச்சந்தர் இவர்கள் இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் எனத்தன் கடைசி காலத்தில் நினைத்தார்.ஆனால் அது நிறைவேறாத ஆசை ஆனது

1. அபூர்வ ராகங்கள் 1975

இதில் தான் ரஜினி அறிமுகம்.கமல் தான் நாயகன்.தன்னை விட வயதில் மூத்த பாடகி ஆன ஸ்ரீவித்யாவை நாயகன் கமல் காதலிப்பார்.பாடகியின் கணவன் ஆக ரஜினி சில காட்சிகள் மட்டுமே வருவார்.ஆனால் ரஜினியின் நடிப்பும் இதில் பேசப்பட்டது.இந்தப்படத்துக்காக கமல் 6 மாதஙகள் மிருதங்கம் வாசிக்கப்பயிற்சி எடுத்தார்.

இதில் ரஜினி வரும் இண்ட் ரோ சீனில் கேட்டை வேகமாகத்திறந்து ரஜினி வர வேண்டும்.அதில் பல டேக்குகள் வாங்கினார் ரஜினி.ஆனால் படத்தில் அவர் வரும் சீனில் ரசிகர்கள் கை தட்டினார்கள்

கண்ணதாசன் என்ற பத்திரிக்கையில் என் ஆர் தாசன் எழுதிய  வெறும் மண் என்ற கதையைத்திருடி விட்டதாக கே பாலச்சந்தரை எதிர்த்து  சென்னை ஹை கோர்ட்டில் கேஸ் போட்டார்.வழக்கில் தாசன் வெற்றி பெற்றார்.கே பாலச்சந்தருக்கு ஜட்ஜ் ரூ 1000 அபராதம் விதித்தார்.


1 அதிசய ராகம்,ஆனந்த ராகம்,அபூர்வ ராகம்
2 கை கொட்டி சிரிப்பார்கள்
3 கேள்வியின் நாயகனே
4 ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்

போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இதில் உண்டு.

சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.கமலுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.

வணிக ரீதியாக செம ஹிட் ஆன படம்  இது


2. அந்து லேனி கதா 1976. தெலுங்கு


தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை 1974 படத்தின் தெலுங்கு ரீமேக் இது.
இதில் ரஜினி அதிகக்காட்சிகளில் வருவார்.கமல் கெஸ்ட் ரோலில் வருவார்.இதையும் கே பாலச்சந்தர் தான் இயக்கினார்.

2001ம் ஆண்டு இந்தப்படத்தின் நாயகி ஜெயப்ரதா தன் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிய படம் எனக்குறிப்பிட்டார்.

3. மூன்று முடிச்சு 1976

இதில் கமல் நாயகன்,ரஜினி வில்லன்

நாயகி ஆன ஸ்ரீ தேவியை நாயகன் கமல் காதலிப்பார்.ரஜினி கமலின் நண்பன்.ஆனால் பெண்கள் விஷயத்தில் மோசமானவர்.இது நாயகிக்குத்தெரியும்.நாயகனுக்குத்தெரியாது..இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை.

வசந்த கால நதிகளிலே என்ற சூப்பர்  ஹிட் பாடல் படத்தில் வரும்போது வில்லன் ரஜினி நீச்சல் தெரியாத கமலை படகில் இருந்து  ஆற்றில் தள்ளி விட்டு கமலை மூழ்கடிக்கும் ரஜினியின் வில்லத்தனம் அப்போது பெரிதும் பேசப்பட்டது

ரஜினி ஸ்டைலாக சிகரெட்டை தூக்கி வாயில் கவ்வும் ஸ்டைல் இதில் தான் ஆரம்பம். டீக் ஹை? என்ற பஞ்ச் டயலாக்கும் பிரபலம்.

இது 100 நாள் ஓடிய படம்.இதை இயக்கியதும் கே பாலச்சந்தர் தான்.



4. அவர்கள் 1977

இதிலும் ரஜினி வில்லன் தான்.நாயகன் கமல் நாயகி சுஜாதா இருவரும் காதலர்கள்.சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலர்கள் பிரிய நாயகியிடம் வில்லன் ப்ரப்போஸ் செய்வார்.

வில்லனுக்கும் ,நாயகிக்கும் திருமணம் நடக்கும்.இதற்குப்பின் தான் வில்லன் ஒரு சைக்கோ என நாயகிக்குத்தெரிந்து அவனை டைவர்ஸ் செய்து விடுவார்.இதற்குப்பின் நாயகனுடன் அவர் சேர்ந்தாரா? இல்லையா?என்பது க்ளைமாக்ஸ்.


இதில் கமல் பாடும் ஜூனியர் ஜூனியர் பாட்டு செம ஹிட்டு.பொம்மையை வைத்துக்கொண்டு மிமிக்ரி செய்யும் சீன் செம பேமஸ்.

அந்தக்கால கட்டத்தில் எல்லா ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் இந்தப்பாட்டைப்பாடுவார்கள்.

இது வணிக ரீதியான வெற்றி பெற்ற படம்

5. பதினாறு வயதினிலே 1977

கே பாலச்சந்தர் இல்லாமல் கமல் ,ரஜினி இருவரும் இணைந்த முதல் படம்.இயக்கம் பாரதி ராஜா.திரைக்கதை வசனம் கே பாக்யராஜ்.

இதில் சப்பாணி என்ற ரோலில் கமல் துணிச்சலாக படம் முழுக்க கோவணம் கட்டி வரும் கெட்டப்பில் நடித்தார்.

இதில் வில்லன் ரஜினி.இவர் பேசும் இது எப்படி இருக்கு?என்ற டயலாக் செம பேமஸ்.

ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ,ஆனா நாய் வளர்க்கலை.என்னை தான் வளர்த்தா என கமல் பேசும் சீன் பேசப்பட்டது.

5 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது

ஆனந்த விகடன் இதற்கு 62.5 மார்க் கொடுத்தது.இந்த மார்க் தான் இதுவரை விகடன் வழங்கிய அதிக பட்ச மார்க்.

தமிழக அரசின் 5 விருதுகள் கிடைத்தது.

பாடல்கள் அனைத்தும் ஹிட்.
செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா,செந்தூரப்பூவே,மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு ,ஆட்டுக்குட்டி முட்டை இட்டு  என பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆனது.

6 ஆடுபுலி ஆட்டம்  1977

இதில் கமல் நாயகன்,ரஜினி வில்லன்.ஸ்ரீப்ரியா நாயகி.இயக்கம் எஸ் பி முத்துராமன்.திரைக்கதை வசனம் - மகேந்திரன்.

இது தெலுங்கில் எத்துக்கு பை எத்து என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் ஹிட் ஆனது

கமல்,ரஜினி இருவரும் ஒரு பாரில் பந்தயம் கட்டி விளையாடுவதாக ஓப்பனிஙக் சீனிலேயே மோதிக்கொள்வார்கள்

7. இளமை ஊஞ்சலாடுகிறது 1978

இதிலும் கமல் நாயகன் ,ரஜினி வில்லன்.நாயகிகள் ஸ்ரீப்ரியா,ஜெயசித் ரா



நாயகன் ஒரு அனாதை ,வில்லன் ஒரு கம்பெனியின்  எம் டி.அதே கம்பெனியில் நாயகனை மேனேஜர் ஆக்குகிறார் வில்லன்.நாயகன் ஒரு பெண்ணைக்காதலிக்கிறார்.வில்லன் பெண் சபலிஸ்ட்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு?
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
தண்ணி கருத்திருச்சு

போன்ற மெகா ஹிட் பாடல்கள் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தன.

இயக்கம் சி வி ஸ்ரீதர்.இந்தப்படத்தில் ரஜினிய்சி வில்லன்  ஆக்கப்பரிந்துரை செய்தது கமல் தான்

8. வயசு பிலிச்சிந்தி 1978


இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் தெலுங்கு ரீ மேக் இது.அதே இயக்குநர் 

9. தப்புத்தாளங்கள் 1978

இதில் ரஜினி தான் நாயகன்.சரிதா நாயகி.கமல் கெஸ்ட் ரோல். இயக்கம் கே பாலச்சந்தர்

தமிழ்,கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது.கன்னடத்தில் தப்பித்த தல தான் டைட்டில்.

விலைமாதுவான நாயகியை நாயகன் காதலித்து மணக்கிறான்.ஆனால் சமூகம் அவர்களை நிம்மதியாக வாழ விடாது.


என்னடா பொல்லாத வாழ்க்கை 
தப்புத்தாளங்கள்
அழகான இள மங்கை

போன்ற ஹிட் பாட்டுக்கள் உண்டு

10. அவள் அப்படித்தான் 1978

இயக்குநர் ருத்ரய்யா.வின் இயக்கத்தில் வந்த படம் .பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் பாடமாக வைக்கப்பட்டது.இதன் திரைக்கதை அமைப்பு பிரமாதமாகப்பேசப்பட்டது.ஆனால் பிரம்மாண்ட வெற்றி பெறவில்லை. 

நாயகன் கமல் வில்லன் ரஜினி நாயகி ஸ்ரீப்ரியா


குறும்பட இயக்குநர் ஆன நாயகன் விளம்பர நிறுவனம் நடத்தும் நண்பனின் ஆபீசில் பணி புரியும் நாயகியைக்காதலிக்கிறான்.ஆனால் அவர்கள் காதல் கை கூடாது.

இதில் கமல்,ரஜினியை விட ஸ்ரீப்ரியாவுக்குத்தான் அதிக நல்ல பெயர்.நடிக்க வாய்ப்பும் அதிகம்.
இதில் வசனங்கள் பிரமாதமாக இருக்கும்
இளையராஜாவின் இசையில் 
உறவுகள் தொடர் கதை
பன்னீர் புஷ்பங்களே
வாழ்க்கை ஓடம்
போன்ற ஹிட் பாடல்கள் உண்டு

தமிழக அரசின் விருது பெற்ற் படம் இது


11. அலாவுதீனும் அற்புத விளக்கும். 1979

இதிலும் கமல் நாயகன்,ரஜினி வில்லன்,நாயகிகள் ஜெயபாரதி,ஸ்ரீப்ரியா

இயக்கம் ஐ வி சசி

வில்லன் பாக்தாத்தின் ஆயுதப்படைத்தளபதி அந்த ராஜ்ஜியத்தின் இளவரசி  ஆன நாயகியை விரும்புகிறார்.ஆனால் நாயகியோ  நாயகனை நேசிக்கிறாள்.யார் காதல் நிறைவேறியது என்பது தான் மீதிக்கதை.

இந்தப்படம் தெலுங்கு,தமிழ்,மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியானது.முதல் இரண்டு வாரங்கள் நன்றாக ஓடினாலும் இது வெற்றிப்படமாக அமையவில்லை

12. நினைத்தாலே இனிக்கும். 1979

தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான படம்.இதில் கமல் ,ரஜினி இருவருமே நாயகர்கள்.கே பாலச்சந்தர் தான் இயக்கம்.

இந்தப்படத்தில் பெரிதாகக்கதை இருக்காது.14 மெகா ஹிட் பாடல்கள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குத்துணை

நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்
நினைத்தாலே இனிக்கும்
பாரதி கண்ணம்மா
இனிமை நிறைந்த உலகம்
சம்போ சிவசம்போ சிவனே மந்திரம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்


ஆகிய 7 பாடல்கள் மொத்தப்பாடல்களான  14ல் செம ஹிட் ஆனவை

இதில் ரஜினி சிகரெட் டை வாயில் தூக்கிப்போட்டு ஸ்டைலாகபிடிப்பதில் பந்தயம் வைப்பார்.ஜெயிச்சா செம பிரைஸ் தோற்றால் கட்டை விரல் கட்.இந்த சீன் பெரிதும் பேசப்பட்டது

சிங்கப்பூர் ல முழுப்படமும் படமாக்கப்பட்டது

நாயகர்கள் இருவரும் ஒரு மியூசிக் ட்ரூப் நடத்துபவர்கள்.இருவருக்கும் தலா ஒரு காதலி.ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் என ஜாலியாகப்படம் போகும்

13. தாயில்லாமல் நானில்லை 1979

கமல்,ஸ்ரீதேவி இருவரும் ஜோடியாக நடித்த படம் இது.ரஜினி இதில் கெஸ்ட் ரோல் தான்

ஏழை விதவை அம்மாவைக்காப்பாற்றும் பொறுப்பு நாயகனுக்கு இருக்கிறது.ஜமீன்தார் மகளை நாயகன் விரும்புகிறார்.அம்மா என்ற உறவை விட்டு விடு,வெட்டி விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாக வா என நாயகியின் அப்பா கூற நாயகன் மறுக்கிறார்.இதற்குப்பின்  நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை

வடிவேலன் மனசு வெச்சான் மலர வெச்சான்
என்ற மெகா ஹிட் பாட்டு இதில் உண்டு

சாண்டோ சின்னப்பதேவர் கதை எழுத ஆர் தியாகராஜன் இயக்கினார்.


200 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்
இந்தப்படத்துக்காக கமல் பிரெஞ்ச் தாடி வளர்த்தார்

ரஜினி,கமல்,ஸ்ரீதேவி காம்போ கடைசியாக இணைந்த படம் இது

14   நட்சத்திரம் 1980

தாசரி நாராயண ராவ் கதை,திரைக்கதை,இயக்கம்.மோகன்பாபு,ஸ்ரீப்ரியா இருவரும் ஜோடி.

ஒரு சினிமா ரசிகன் ஒரு கதாநாயக நடிகையைக்காதலிக்கிறான்.வில்லன் நாயகியைக்கொலை செய்ய முயற்சிப்பதை நேரில் கண்ட நாயகன் பின் என்ன செய்தான் என்பது மீதிக்கதை

இதில் கமல் ,ரஜினி இருவரும் கெஸ்ட் ரோல் தான்

அவள் ஒரு மேனகை என்ற மெலோடி சாங்க் செம ஹிட் ஆனது

இந்தப்படம் பெரிய அளவில் ஓடவில்லை


15. தில்லுமுல்லு 1981

வில்லன் ஆக நடித்த ரஜினி முதன் முறையாக காமெடி ஹீரோவாக நடித்த படம் இது.கமல் கெஸ்ட் ரோல்.இயக்கம் கே பாலச்சந்தர்.வசனம் விசு

ஹிந்தியில் வெளி வந்த கோல் மால் படத்தின் அபிஷியல் ரீமேக் இது

நாயகன் அடிக்கடி லீவ் எடுத்து முதலாளியிடம் மாட்டிக்கொள்ள தனக்கு ட்வின்ஸ் பிரதர் இருப்பதாக பொய் சொல்லி சமாளிக்கும் கதை.

மீசை வெச்சா அண்ணன்,மீசை எடுத்தா தம்பி என மோசடி  செய்வார்.ஜோடி மாதவி

அய்யம்பேட்டை அறிவுடை நம்பி  கலிய பெருமாள்  சந்திரன் ஆக ரஜினி கலக்கி இருப்பார்.இவரும் தேங்காய் சீனிவாசனும் செய்யும் காமெடி செம ஹிட் 

ராகங்கள் 16 உருவான வரலாறு
தில்லுமுல்லு தில்லுமுல்லு


போன்ற மெகாஹிட் பாடல்கள் உண்டு
படம் சூப்பர் ஹிட்

16 உருவங்கள் மாறலாம் 1983

இது ஒரு வித்தியாசமான கதை.எஸ் வி ரமணன் திரைக்கதை ,இயக்கம்.

நாயகன் கடவுள் நம்பிக்கை அற்றவர்.அவர் முன் கடவுள் சிவாஜி,ரஜினி,கமல் ஆகிய உருவங்களில் மாறி மாறித்தோன்றி எதிர் காலத்தில் நடக்க இருப்பதைக்கூறுவார்.நாயகனால் அதை மாற்ற முடிந்ததா?என்பது மீதிக்கதை.

ஒய் ஜி மகேந்திரன்,சுஹாசினி ,எஸ் வி சேகர்  நடித்த படம் இது


காமனுக்குக்காமன் மாமனுக்கு மாமன் என்ற மெகா ஹிட் பாட்டு 
உண்டு

படம் விமர்சன ரீதியாகப்பாராட்டுப்பெற்றாலும் கமர்ஷியலாக ஓடவில்லை

17 கிரப்தார். 1985. ஹிந்தி

கிரப்தார் என்ற ஹிந்தி சொல்லுக்கு கைது என்று அர்த்தம்.

பிரயாக் ராஜ் இயக்கத்தில் அமிதொ பச்சன்,கமல்,ரஜினி,மாதவி நடித்த படம்

இதில் அமிதாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நாயகன் ஆக வருவார்.கமல் ஒரு முக்கிய ரோலில் வருவார்.ரஜினி கெஸ்ட் ரோலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வருவார்

இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 5 கோடி அப்போதே வசூலித்தது

டியர் ரதி (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் க்ரைம் ட்ராமா) @சன் நெக்ஸ்ட் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

                     

       டியர் ரதி (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் க்ரைம் ட்ராமா)@  சன் நெக்ஸ்ட் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

திரை அரங்குகளில் வெளியாகும்போது மக்களால் அதிகம் கொண்டாடப்படாத படங்கள் ஓடிடி ரிலீசில் கண்டுகொள்ளப்பட்டு பாராட்டுப்பெறுவதுண்டு.2/1/2026 அன்று வெளியான இந்தப்படம்  இப்போது 6/3/2026 முதல் சன் நெக்ஸ்ட் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப்பெற்று வருகிறது.

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு ஐ டி கம்பெனியில் நல்ல சம்பளம் வாங்கும் ஊழியன்.பெண்களிடம் எப்படிப்பேசுவது?பழகுவது?என்பது தெரியாத கூச்ச சுபாவி.இந்த சுபாவத்தால் இவருக்கு ஆல்ரெடி இரண்டு லவ் பெயிலயரும் உண்டு.


நாயகனின் நண்பன் அதே கம்பெனியில் நாயகனுடன் பணியாற்றும் ஊழியன்.நாயகனை சரி பண்ண அவன் ஒரு பார்லருக்கு அழைத்துப்போய் அங்கே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறான்.


அவள் தான் நாயகி.நாயகி திருமணம் ஆனவள்.கணவனால் தவறான தொழிலுக்குத்தள்ளப்பட்டு அங்கிருந்து தப்பி இந்த பார்லரில் வேலை செய்பவள்.


நாயகன் நாயகியிடம் என்னுடன் ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வேண்டும்,ஜாலியாகப்பேசி என் கூச்ச சுபாவத்தைப்போக்க வேண்டும் என்று கேட்கிறான்.நாயகியும் அதற்கு சம்மதித்து ஒரு மணி நேரத்துக்கு 5000  ரூபாய் சார்ஜ்.ஒரு முழு நாள் ஊர் சுற்ற ரூ 1,20,000 ஆகும் என்கிறாள் .நாயகனும் சம்மதிக்கிறான்.


இருவரும் ஊர் சுற்றுகிறார்கள்.நாயகியின் கணவன் தன்னிடமிருந்து தப்பிப்போன நாயகியைதேடி வருகிறான்.தன்னுடைய துப்பாக்கியை நாயகி திருடி விட்டாள் என ஒரு போலீஸ் ஆபீசர் நாயகியைத்தேடி அலைகிறார்.

இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் ,சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

வித்தியாசமான இந்தக்கதையை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் பிரவீன் கே மணி.

நாயகனாக சரவண விக்ரம் கச்சிதமாக நடித்திருக்கிறார்.டி வி சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ஆக நடித்தவர் தான் இவர்.நாயகியுடனான காம்பினேசன் காட்சிகளில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.முக பாவனைகளும்,வசன உச்சரிப்பும்,உடல் மொழியும் கச்சிதம்.

நாயகியாக நடித்திருப்பவர் தமிழுக்கு அறிமுக நாயகி ஹஸ்லி.இவர் சில மலையாளப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர்.கண்களும் ,முக பாவனைகளும் இவருக்கு பிளஸ்.

வில்லன் ஆக நடித்திருப்பவர்  ராஜேஷ் பாலச்சந்திரன்.க்ளைமேக்சில் நாயகியைக்கண்டதும்  அவரைக்கொல்லத்துடிப்பது,அதுவரை எல்லோரிடமும் நக்கல்,நையாண்டி கலந்து உரையாடுவது என வில்லத்தனத்தில் வெரைட்டி காட்டி இருக்கிறார்.

முக்கியமான இந்த மூன்று கேரக்டர்கள்(நாயகன்,நாயகி,வில்லன்)போக சின்னச்சின்ன ரோல்களில் வரும் லாட்ஜ் மேனேஜர்,நாயகியின் தோழி,நாயகனின் நண்பன் என அனைத்துக்கேரக்டர்களையும் சுவராஸ்யப்படுத்தியது அருமை.

ஒளிப்பதிவு லோகேஷ் இளங்கோவன். நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ்,சேசிங் சீன்களில் முத்திரை பதித்திருக்கிறார்.

இசை ஜோன்ஸ் ரூபர்ட்.பாடல்கள் சுமார் ரகம்,பின்னணி இசை ஓக்கே ரகம்.



சபாஷ்  டைரக்டர்

1 நாயகியின் கேரக்டர் டிசைன் ஒரு மார்க்கமாக இருந்தாலும் படம் முழுக்க அவரை கண்ணியமாகவே காட்டி இருப்பது அருமை

2 படம் முழுக்க பிளாக் காமெடி வைத்தால் போர் அடித்து விடும் என ஒரு காட்சி பிளாக் ஹியூமர் டயலாக்ஸ் எனில் அடுத்த சீன் சேசிங் சீன்,அடுத்து நாயகன்-நாயகி உரையாடல் சீன் என ஜனரஞசகமாக சீன்கள் வடிவமைத்த விதம் அருமை.

3 வசனஙகள் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன.இயக்குநர் எழுத்தாளர் பாலகுமாரனின் ரசிகர்+ வாசகர் என்பது பல இடங்களில் தெரிகிறது


  ரசித்த  வசனங்கள் 


1 பொண்ணுங்களுக்கு மட்டும் ஆண்டவன் ஸ்பெசல் டேலண்ட் கொடுத்திருக்கான்.ஈசியா மூவ் ஆன் ஆகிடறாங்க

2 ரிலேசன்ஷிப்ல இருந்தப்போக்கூட இப்படிக்கட்டிப்பிடிச்சதில்லை.பிரேக்கப் ஆனபின் கட்டிப்பிடிக்கறா.

3 பசங்க ளுக்குப்பொண்ணுங்களைப்பிடிக்கக்காரணமே தேவை இல்லை,ஜஸ்ட் க்ராஸ் பண்ணிப்போனாப்போதும்.ஆனா பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட காரணங்கள் வேணும்


4 சப்போஸ் நான் செத்துப்போய்ட்டா என்னடா செய்வே?


கொன்னே போட்ருவேன்.


5 அடுத்தவங்களைத்தொந்தரவு செய்யாம அவனவன் வாழ்க்கையை வாழ்ந்தா சரி

6. புக்ஸ் பிடிக்குமா உனக்கு?

எஸ்,ஆனா படிக்கத்தான் பிடிக்காது.

7 போலீசா?ஐ டி கார்டைக்காட்டாம பான் கார்டைக்காட்டிட்டுப்போறான்?

8 உலகத்துல நம்மைப்பத்தி யோசிக்கவும் ஒரு ஆள் இருக்கு என்ற Feel இருக்கு பார்,அதான் லவ்.

9 யார் இல்லாதப்ப நம்ம தனிமையை உணர முடியுதோ அவஙக தான் நம்ம லவ் இன்ட்ரஸ்ட்

10 எனக்கு ஒரு ஸ்பெசல் டேலண்ட் இருக்கு.நான் யாரையாவது காதலிச்சா அவளுக்கு உடனே மேரேஜ் Fix ஆகிடும்.

11 இயற்கையும்,பொண்ணும் ஒண்ணு.யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லன் துப்பாக்கியுடன் சுற்றுகிறான்,கண்டபடி சுடுகிறான்.போலீஸ் வரவே இல்லை.

2 துப்பாக்கியைப்பறிகொடுத்த ஒரு போலீஸ் ஆபீசர் நாயகியிடம் அதைப்பெறும்போது எந்த ரீ ஆக்சனும் காட்டாமல் இருப்பது ஏனோ?

3 இது காதல் கதையா?க்ரைம் கதையா? காமெடி கதையா?என்ற குழப்பம் ஆங்காங்கே தென்படுகிறது.

4 க்ளைமாக்ஸ்  சீனில் நாயகி திடீர் என சிரிப்பது,நாயகன் பயந்து ஓடுவது,டக் என அந்த இடத்தில் படத்தை  முடிப்பது சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரிவது சிரமம்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ ஒரு இதழ் முத்தக்காட்சி உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசன ரொமாண்டிக் க்ரைம் பிளாக் காமெடிப்படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5

Sunday, March 22, 2026

ACCUSED (2026) -ஹிந்தி /தமிழ் - குற்றம் சாட்டப்பட்டவர் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் டிராமா )@ நெட் பிளிக்ஸ்

             

      உயர்  பதவியில்  இருக்கும்  ஒரு பெண்  என்ன மாதிரியான பிரச்சனைகளை எல்லாம்  எதிர்  கொள்ள  வேண்டி  இருக்கும் ? அதை   எப்படிக்கடந்து   வருவது?  போன்ற  பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம் இது . பொதுவாக காலம் காலமாக  ஆண்கள்   மீது   வைக்கப்படும்,  மீ டு(  #ME TOO)  பிரச்சனை     ஒரு பெண்ணின் மீது   வைக்கப்படும்போது அதன்   தாக்கங்கள் என்ன ? என்ற  வித்தியாசமான  கதைக்களத்தில்  இந்தப்படம்  பெண்களின் பிரச்சனைகளைப்பேசுகிறது      


இதே  டைட்டிலில்  2025ம் ஆண்டு வெளியான  தமிழ்ப்படத்துக்கும் , இதற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை . நெட்  பிளிக்ஸ் ஓ  டி டி  தளத்தில்  தமிழ்   டப்பிங்கில்  வெளியாகி  உள்ள  இந்த  ஹிந்திப்படத்தில்  கொங்கனா  சென் , பிரதிபா ரந்தா   ஆகியோர்  முக்கிய ரோல்களில் நடித்து இருக்கிறார்கள் . அனுபூதி காஷ்யப் இயக்கி இருக்கிறார் . இது  யு  படம் தான் , குடும்பத்துடன்  பார்க்கலாம் . ரன்னிங்க்  டைம்  105 நிமிடங்கள்   தான் . சின்னப்படம் .டைட்டில்  டைம்  கட்  பண்ணினால்  97 நிமிடங்கள்  தான் படம்       


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  லண்டனில்  ஒரு மிகப்பெரிய தனியார்  மருத்துமனையில்  மகப்பேறு  மருத்துவராக  இருக்கிறார் .  இவருக்குத்திருமணம்  ஆகி  விட்டது . இவரது   வாழ்க்கைத்துணை  இன்னொரு தனியார்  மருத்துமனையில் மருத்துவராக  இருக்கிறார்.  ஒரு குழந்தையைத்தத்து  எடுத்து  வளர்க்க   முடிவு எடுத்து இருக்கிறார்கள் .


 நாயகி  15 வருடங்களாக  இதே  மருத்துமனையில் சிறப்பாகப்பணியாற்றியதால்  அவருக்குப்பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது . இதே  மருத்துமனையில்   டீன்  டாக்டர் ஆகப்பணியாற்ற  பதவி  உயர்வு கிடைக்க  இருக்கிறது .


 இந்த சமயத்தில் தான் அந்த மருத்துமனை  நிர்வாகத்துக்கு  ஒரு இ மெயில்  வருகிறது . நாயகி மீது  பாலியல்  குற்றச்சாட்டு  சுமத்தி   அந்தப்புகார்  இருக்கிறது .நிர்வாகத்துக்கும் , நாயகிக்கும் பெரிய அதிர்ச்சி .


தொடர்ந்து  இதே  போல  எட்டு  வெவ்வேறு  மெயில்கள்   வருகின்றன . நாயகி சஸ்பெண்ட்  செய்யப்படுகிறாள் . விசாரணை நடக்கிறது .


சமூக  வலைத்தளங்களில்  இந்த விஷயம்   பரவி நாயகிக்குப்பெயர் கெடுகிறது . நாயகியின்  வாழ்க்கைத்துணையும்  உண்மை  நிலவரம்  கண்டறிய  ஒரு பிரைவேட்  டிடெக்ட்டிவை நியமிக்கிறார் .


இதற்குப்பின்  நடக்கும்  சம்பவங்கள்  தான் மீதித்திரைக்கதை 


திரைப்பட  இயக்குனர் அபர்ணா சென்  அவர்களின்   மகள் ஆன கொங்கணா  சென் சர்மா  இரு தேசிய விருதுகளை வென்றவர் மிஸ்டர் அண்ட்  மிஸஸ்  அய்யர் (2003), தல்வார் (2016)  போன்றவை  அவர்  பெயர் சொல்லும் படங்கள் . நாயகி  ஆக அவரது ஆளுமை  மிக்க நடிப்பு  தமிழ்   சினிமாவில்  ஜெயலலிதாவை   நினைவு படுத்த்துகிறது . அவரது  உடல் மொழி , ஆடை  வடிவமைப்பு  அனைத்தும் அருமை . டீன்  டாக்டருக்கு   உண்டான   கெத்தை  அவர்   வெளிப்படுத்துவதும் , விசாரணை அதிகாரியை  லெஃப்ட்  ஹேண்டில்    டீல்   செய்யும்  இடமும் செம .

லாபட்டா  லேடிஸ் (2023) படம் மூலம்  அனைவர்  மனதையும்  கவர்ந்த பிரதீபா  ராந்தா  நாயகிக்கு  வாழ்க்கைத்துணையாக வருகிறார் .இவரது  நுணுக்கமான   நடிப்பு , சண்டை போடும் உரிமை , கலங்குவது , அழுவது   என நடிப்பில்  பல ;பரிமாணங்களைத்தொட்டு   இருக்கிறார் 


படத்தில்   இந்த  இரு முக்கியமான  கேரக்டர்கள்  தவிர  மீதி அனைத்து  நடிக , நடிகையரும்  அவரவர்  பாத்திரத்தை  உ ணர்ந்து  நடித்து  இருக்கிறார்கள் 

டெக்னிக்கல்  அம்சங்கள்   ஆன  ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்க்  அனைத்தும்  கச்சிதம் . கதைக்களம்  லண்டன்   என்பதால்   காட்சிகளில்  ஒரு ரிச்னஸ்   தெரிகிறது 

சபாஷ்  டைரக்டர்


1  சர்ச்சைக்குரிய  ஒரு விஷயத்தை  குடும்பத்தோடு பார்க்கும் அளவு கண்ணியமாக நெறியாள்கை செய்த விதம் 


2  நாயகி  மீது  தப்பு  இருக்கிறதா?  இல்லையா? என்பதை சஸ்பென்ஸ்   ஆகக்கொண்டு போன விதம் 


3  ஒரு பெண் மீது கேரக்ட்டர் அஸாசினேஷன்   எப்படிப்பிரயோகிக்கப்படுகிறது எனக்காட்டிய  விதம் 


4  குற்றம்  சுமத்தப்பட்டதாலேயே  இந்த சமூகம்  எப்படி  அவரை  டீல்  செய்கிறது   என்பதை  உண்மைக்கு நெருக்கமாகப்படமாக்கிய விதம் 


5   கூர்மையான  வசனங்கள்  படத்துக்குப்பெரிய பலம் 



  ரசித்த  வசனங்கள் 



  1  கைல  போன்  இருந்தா என்ன வேணா  செய்யலாம்னு நினைக்கறாங்க 


2   அவங்க   உன்னை விசாரிக்கும்போது  எந்த பதிலும் சொல்லாம நோ   கமெண்ட்ஸ்  என சொன்னா மட்டும் போதும் , ஓகே? 


நோ   கமெண்ட்ஸ்  



3   அதிகாரத்தை  யூஸ்   பண்ணலாம், ஆனா அப்யூஸ்   பண்ணைக் கூடாது 



4  பேசணும்னுதான்   சொன்னீங்க , ஆனா குறுக்கு  விசாரணை  செய்யறீங்க ?


 கிரிமினலைத்தான் குறுக்கு  விசாரணை   செய்வாங்க 


5 காதல்   வந்தா  எல்லாத்தையும்   மந்தமாக்கும் 


6  ஒரு பொண்ணு  பலவீனமான   நிலையில்  இருந்தா  எனக்குப்பரிதாபம் வராது, கோபம் தான் வரும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  இந்தப்படத்தை சைக்கலாஜிக்கல்  திரில்லராகக்   கொண்டு செல்வதா? பேமிலி   டிராமாவாகக்கொண்டு  செல்வதா? என்ற  தடுமாற்றம்  இயக்குனரிடம்   படத்தின் பின் பாதியில்   தெரிகிறது 



2  குழந்தை தத்து  எடுக்க முடிவு  எடுத்த பின்   இந்தக்குற்றச்சாட்டால்   வாய்ப்பு 

 கை   நழுவிப்போவதைக்கண்டு கண்ணீர் விடுவது எதற்கு ? எத்தனை  அநாதை  விடுதிகள் ? எத்தனை   குழந்தைகள்   இருக்கின்றன ?


3   நாயகிக்கு  இதற்கு   முன்   வேறொருவருடன்  ஒரு வாழ்க்கை  இருந்தது , அவருடன்  பிரிவு நிகழ்ந்தது எதனால் ?  என்ற  சம்பவங்கள்   மெயின் கதைக்கு சம்பந்தம்  இல்லாதவை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 13 +   clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு மெலோ  டிராமா . திரைக்கதை  மெதுவாகத்தான் நகரும் ,பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் ,  படம் பார்க்க ஆண்களுக்குப்பொறுமை மிக அவசியம் . ரேட்டிங்க்  3 / 5 

Saturday, March 21, 2026

தடயம் (2026)-தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் )@ஜீ 5

                 

         தடயம் (2026)-தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் )@ஜீ 5

ஆந்திரா- தமிழக பார்டரில் நடந்த

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை இது.மொத்தம்  6 எபிசொடுகள்.ஒவ்வொரு எபிசோடும்20 நிமிடங்கள் டூ 26 நிமிடங்கள். ஆக மொத்தம்  இரண்டே முக்கால் மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்து விடலாம்.


   


ஸ்பாய்லர்  அலெர்ட்


1999ல் கதை நடக்கிறது.

நாயகன் ஒரு ஊரில் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்கிறார்.அதே இடத்தில் நாயகி இன்ஸ்பெக்டர் ஆக  வேலை பார்க்கிறார்.இருவரும் ஜோடி கிடையாது.காதலர்களோ,தம்பதியினரோ கிடையாது.


ஒரு பால் காரன் மூலம் ஒரு வீட்டில் நடந்த கொலைகள் பற்றிய தகவல் கிடைக்கிறது.ஒரு வீட்டில் கணவன்,மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார்கள்.கணவனின் அரைஞாண் கயிறு,மனைவியின் தாலி செயின் மட்டும் காணவில்லை.மற்ற நகைகள் எல்லாம் அப்படியே இருக்கிறது.எனவே பணத்துக்காக நிகழ்ந்த கொலை இல்லை என்பது தெரிய வருகிறது.

இதைப்பற்றி  துப்பு துலக்க ஆந்திரா போகும்போது ஒரு அதிர்ச்சித்தகவல் கிடைக்கிறது.அங்கேயும் இதே பேட்டர்னில் 76  கொலைகள் நடந்திருக்கிறது.

எதற்காக இந்தக்கொலைகள் நடக்கிறது?யார் அந்த சீரியல் கில்லர்(கள்) என்பதை நாயகன் எப்படிக்கண்டுபிடிக்கிறார் என்பதே மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக சப் இன்ஸ்பெக்டர் ஆக இயக்குநர் சமுத்திரக்கனி நன்றாக நடித்திருக்கிறார்.தன் சீனியாரிட்டிக்கு மதிப்பில்லை,தன் வயது ,அனுபவத்துக்கும் எந்த மரியாதையும் இல்லை என்பதை உணர்ந்து அவர் துடிக்கும் காட்சிகள் சிறப்பு.

பொதுவாக போலீஸ் ஹீரோ சப்ஜெக்ட்டில் ஓவர் பில்டப்கள் இருக்கும் .அதெல்லாம் இதில் இல்லை.

நாயகனுக்கு உயர் அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ரோலில்  ஷிவதா வருகிறார்.இவருக்கு அதிக வாய்ப்பில்லை.சும்மா அழகுக்காக ,ஒரு நாயகி வேண்டுமே என்பதற்காக புக் செய்து விட்டார்கள் போல் தோன்றுகிறது.

மூணாறு ரமேசின் ஆணவம் மிக்க நடிப்பு கச்சிதம்

ராஜ் திரன் தாஸ்,பிரேம்,சுந்தர் பாண்டியன்,புலிப்பாண்டி ,வினாயகன்,அழகன் தமிழ்மணி  போன்றோர் அவரவர்க்குக்கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்து  இருக்கிறார்கள்.


தினேஷ் குமாரின் எடிட்டிங் கில் நான் லீனியர் கட்டில் திரைக்கதை 1999 க்கும் 1995 க்கும் போய்ப்போய் வருகிறது.


நவீன் குமார் பழனிவேல் தான் கதை,திரைக்கதை ,இயக்கம்.தயாரித்து இருப்பவர் அஜய் கிருஷ்ணா



சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் சமுத்திரக்கனியின் கேரக்டர் டிசைன்,அவரது நடிப்பு அருமை.மிக இயல்பாக இருந்தது.

2 கொலைகாரர்களாக வரும் இருவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் பிரமாதம்.கொலை ஏன் நடக்கிறது என்பதை ஓப்பனிஙகில் அவர்கள் விளக்குவது,க்ளைமாக்சில் டீட்டெயில் ஆக சொல்வது கச்சிதம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி யின் திருமானத்தில் நடக்கும் பிரச்சனைகள்,அதை அவர் கையாளும் விதம் இவை எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை.சும்மா ஜவ்வு இழுப்பாக சீரிசை இழுக்கவே பயன் பட்டிருக்கிறது


2 ஒரு ஸ்டேஷனில் ஹையர் ஆபீசர் உத்தரவு போடுவார்.அவருக்குக்கீழ் பணியாற்றும் அதிகாரி  அந்த உத்தரவுக்குக்கீழ்ப்படிந்து நடப்பார்.இதில் எல்லாம் தலை கீழ்.சப் இன்ஸ்பெக்டர் ஆன நாயகன் எல்லா விபரஙகளையும் கண்டு பிடித்து நாயகி ஆன இன்ஸ்பெக்டருக்கு சொல்கிறார்.அடுத்து என்ன செய்ய வேண்டும்?என்ன பிளான்?என்பதையும் அவரே சொல்கிறார்.எஸ் சார் ஓகே சார் என ஹையர் ஆபீசர் கேட்டுக்கொள்கிறார்.எந்த ஊர் போலீஸ் ஸ்டேசனில் இப்படி நடக்கும்?

3 திரைக்கதை அமைக்கும் போது ஹெச் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் ரெடி பண்ண வேண்டும் என்று இயக்குநர் முயற்சித்திருப்பது நன்கு தெரிகிறது.ஆனால் அவர் முயற்சியில் 25% கூட நிறைவேறவில்லை

4  க்ளைமாக்சில் ஒரு எமோஷனல் சாங்க் வைத்து கொலையாளிகள் மீது இரக்கம் வர வைக்க என்னென்னனோ செய்வது எதற்கு?

5 க்ளைமாக்சுக்கு முந்தைய சீனில் நாயகன் கொலையாகிகளைப்பார்த்துத்தேவை இல்லாமல் 72 கொலைகள் செய்தது எதற்கு?எனத்திட்டுகிறார்.அடுத்த சீனில் கொலையாளிகளை நியாயப்படுத்த முனைவது ஏன்?,இயக்குநரிடம் ஒரு தெளிவு இல்லையே?

6 முதல் எபிசொடிலேயே கொலையாளிகள் யார் என்பது தெரிந்து விட்டதால் சஸ்பென்ஸ் ,ட்விஸ்ட்க்கு வேலை இல்லை..இன்வெஸ்டிகேஷன் போர்சனில் புதுமை இல்லை.ரெகுலர் டெம்ப்ளேட் என்கொயரீஸ் தான்.சலிப்பு.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம் உள்ள சராசரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.உண்மை சம்பவம் தான் கதை என்பதால் எழும்  சுவராஸ்யம் திரைக்கதையில் இல்லை.ரேட்டிங் 2/5

Thursday, March 19, 2026

துரந்தர் த ரிவஞ்ச் (துரந்தர் பாகம்2) - ஹிந்தி/தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)

               

              இந்தியாவில்  நிகழும்  பல  பயங்கரவாதங்களுக்குக்காரணம்  பாகிஸ்தான்  நாட்டின்  பயங்கரவாதிகள்  இந்தியாவுக்குள் ஊடுருவியதுதான் காரணம் , அதனால்  ஒரு சீக்ரெட்  ஏஜெண்ட்டை   உளவாளியாக   பாகிஸ் தான்  அனுப்பி  அந்த நாட்டில்  இருக்கும்  தீய் சக்திகளுடன்  கலந்து  அவர்களைக்கருவறுக்க வேண்டும்  என்ற டாஸ்க்  உடன்   பாகிஸ்தான்   போய்  அங்கே   இருக்கும்  ஒரு முக்கியமான   பயங்கரவாதியிடம்  வேலைக்கு சேர்ந்து  அவனது வலது கை  ஆகவே   மாறி   இந்தியாவுக்கு ஆதரவாக  செயல் பட் ட   நாயகனின்   கதைதான் முதல் பாகத்தின் கதை . 


ஸ்பாய்லர்  அலெர்ட்

முதல்  பாகத்தில்    மெயின்  வில்லன்  ஆக வருபவரிடம்  நாயகன்  வலது கை  ஆக இருப்பான் ,அந்த   வில்லனுக்கு ஒரு தம்பி இருப்பான் .முதல் பாகத்தில்  மெயின் வில்லனை  நாயகன்  தீர்த்துக்கட்டி விட்டாலும்   நெம்பர்  2  பொசிசனில் தான்   நாயகன்  அங்கே   இருப்பான் . வில்லனின்  தம்பியைத்தந்திரமாக   ஜெயிலுக்கு  அனுப்பி விட்டு  நாயகன்   எப்படித்தந்திரமாக  செயல்பட்டு  இந்தியாவுக்கு  சாதகமாக   செயல்படுகிறான்   என்போதுதான்  இந்த பாகத்தின்   கதை ,


 முதல்   பாகத்தில்  நாயகன்  சீக்ரெட்    ஏஜென்ட்  ஆக  எப்படி   ஊடுருவுகிறான்  என்பது கதை ஆக இருந்தது . இதில்  நாயகன்  சீக்ரெட் ஏஜென்ட்  ஆக  உருவானது   எப்படி என்பதைக்காட்டுகிறார்கள் 


நாயகன் ஆக ரன்வீர் சிங்க் அதகளம் செய்திருக்கிறார்.ஆக்சன் சீக்வன்சில் அவரது பங்களிப்பு ,வேகம் அருமை.

நாயகி ஆக வரும் சாரா அர்ஜூன் பரவாயில்லை.

முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் மாதவனின் கேரக்டர் டிசைன் அருமை.அவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேசும் அதிகம்

நாயகி சாரா அர்ஜூன் முதல் பாகம் அளவு இதில் மனதில் நிற்கவில்லை.


அர்ஜூன் ராம் பால்,சஞ்சய் தத்  ஆகியோர் நடிப்பு படத்துக்குக்கூடுதல் பலம்

மற்ற அனைத்து கேரக்டர்களின் நடிப்பும் கச்சிதம்.


சஸ்வத் சச்தேவின் இசை ரகளை.பி ஜி எம் தெறிக்கிறது.

சிவக்குமார் வி பணிக்கரின் எடிட்டிஙகில் படம் 230 நிமிடங்கள்.

விகாஷ் நவ்லகா வின் ஒளிப்பதிவில் காட்சிகள் படு பிரம்மாண்டம்.

எடிட்டர் ஆன சிவக்குமார் வி பணிக்கர் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர்  ஆதித்யா தார்

 


சபாஷ்  டைரக்டர்

1  ஆக்சன் சீக்வன்ஸ்  அதகளம் . முதல்  10 நிமிடங்களில் , க்ளைமாக்ஸ்  10 நிமிடங்களில்  கலக்கிவிட்டார்கள்.   பின்னணி  இசை , ஒளிப்பதிவு , சவுண்ட்  எபக்ட்  அனைத்தும்  கலந்து கட்டி  வேறு ஒரு  கட்டத்துக்கு  படத்தை  எடுத்து செல்கிறது 

2    கிட்டத் தட்ட    4 மணி  நேரம்  ( 3 மணி நேரம்  50 நிமிடங்கள்   ரன்னிங்க் டைம் )  ஓடும்  படத்தை  போர் அடிக்காமல்  பொழுதுபோக்கு அம்சங்களுடன் தருவது  சாதாரண    விஷயம்  இல்லை . முதல்  10 நிமிடங்கள் , இண்ட்டர்வெல்   பிளாக்  சீன் , க்ளைமாக்ஸ்  என  அரங்கம்  அதிரும்  சீன்கள்  கலக்கல் ரகம் 

3 பணமதிப்பிழப்பு  (டிமாண்ட்டிசைசேசன் )  இந்தியாவில்   வந்த போது   அதை  விமர்சித்தவர்கள்   அதிகம் . ஆனால்  அது எதனால் கொண்டு வரப்பட்ட்து  என இவர்களாகவே  ஒரு கற்பனைக்கதையை  எடுத்து விடுகிறார்கள் . அபாரமான கற்பனை .ஆனால் நம்ப முடியாத காமெடி.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  முதல் பாகத்திலும் சரி , இரண்டாம்  பாகத்திலும் சரி  இடைவேளைக்கு  முன் வரும் அரை மணி நேரம்  கொஞ்சம் டல்  தான் . திரைகக்தை ரொம்பவே   தொய்வு 

2    மிகப்பெரிய  பயங்கரவாதிகள் , தீவிரவாத   தலைவர்கள்  எல்லோரும்  ஒத்தையிலா  வந்து  மாட்டிக்கொள்வார்கள் ? அவர்களுக்கு என  செக்யூரிட்டி , அல்லக்கைகள் ,   பாதுகாப்பு   என எதுவும்  இருக்காதா? 

3   நாயகன் + நாயகி  இருவருக்கும்   இடையிலான  எமோஷனல்  கனெக்ட்  முதல்   பாகம் போல்  இதில் இல்லை , இருவரும்  இணைந்தால்   தேவலை  என்ற   எண்ணம்  நமக்கு  வரவே   இல்லை 

4   இந்தியாவுக்கும்   பாகிஸ்தானுக்கும் ஆகாது  என்பது சரி , முறைப்படி  திரைக்கதையில்  இந்தியாவை உயர்த்தி ,, பாகிஸ்தானை மட் டம்  தட்டி  சீன்கள்  வைத்திருக்க வேண்டும் , ஆனால்  இந்துக்களை  உயர்த்தியும்  ,முஸ்லீம்களை   தாக்கியும்   சீன்கள்  அமைக்கப்பட்டிருக்கிறது 

5   இந்துக்கள்  கோழைகள்  என்று  பொருள்  வருவது போல   சில இடங்களில்  வசனம்  வருகிறது , சென்சாரில் எப்படி விட்டார்களோ ? தவிர்த்திருக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+ ஓவர் வன்முறை,ரத்தக்களறி



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆக்சன் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற படம்.முதல் பாகத்தை விடவே எங்கேஜிஙக் ஆக இருக்கிறது.ரேட்டிங்க் 3/5



Dhurandhar: The Revenge
Theatrical release poster
Directed byAditya Dhar
Written byAditya Dhar
Additional screenplayOjas Gautam
Shivkumar V. Panicker
Produced by
Starring
CinematographyVikash Nowlakha
Edited byShivkumar V. Panicker
Music byShashwat Sachdev
Production
companies
Distributed byJio Studios
Release date
  • 19 March 2026
Running time
229 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget250–475 crore (combined with part 1)[2]
Box officeest. ₹56.66 crore[3]