Sunday, April 13, 2025

KARMA (2025) -சவுத் கொரியன் வெப் சீரிஸ் - விமர்சனம் ( கிரைம் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்


 4/4/2025  முதல் நெட் பிளிக்ஸ்  தளத்தில்  வெளியான  இந்த சவுத் கொரியன்  வெப்  சீரிஸ்  விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுதல்களைப்பெற்றது . பொதுவாக  ஒரு வெப்  சீரிஸ்  பார்க்கும் நேரத்தில்   4  சினிமாப்படங்கள்  பார்த்து விடலாம் என்பதால்   நான்   வெப்சீரிஸ்களை  தவிர்க்கிறேன் . அதிகமா  டி வி சீரியல் பார்க்கும் பெண்களும் ,அதிகமா வெப்  சீரிஸ்  பார்க்கும் ஆண்களும்  அவங்க  டைமை  வேஸ்ட் பண்றாங்க என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு . நல்ல  விமர்சனங்கள்  வந்த  வெப்  சீரிஸ் களை  மட்டுமே  பார்க்கிறேன் 

மொத்தம் 6 எபிசோடு .320  நிமிடங்கள் ,தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 சம்பவம் 1 - நாயகி  ஸ்கூலில்  படிக்கும்போது  பிரபல  பத்திரிகையில்  அட் டையில்  கவர் ஸ்டோரியாக வந்து விடுகிறாள் . இதில்  நாயகியின்தோழிக்குப் பொறாமை .  3 மாணவர்கள்  உன்னை பிளைன்ட்  டேட்  பண்ண அழைக்கிறார்கள் ,வா என அழைக்கிறாள்( பிளைன்ட்  டேட்  =  முகமூடி  அணிந்தவர்களுடன் டேட்டிங்க் போவது  அவர்கள் யார் என்பது தெரியாது )  . முதலில்  யோசித்த   நாயகி பின் சம்மதம் சொல்கிறாள் . தோழியின்  சதித்திட் டப்படி  அந்த  3 மாணவர்கள்  நாயகியை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள் . பல   வருடங்கள்  கழித்து   நாயகி  இப்போது  டாக்டர்  ஆகப்பணி  புரிகிறார் . தன்  வாழ்வை   சீரழித்த  அந்த  3 பேரைப் பற்றி  விசாரிக்கிறாள்  . அவர்களில்  இருவர்   ஜெயிலில் , ஒரு ஆள் மட்டும் வெளியே . அவனைப்பழி  வாங்கத்துடிக்கிறாள் 


 சம்பவம்  2  - பச்சைக்கிளி முத்துச்சரம்  படத்தில்  வரும் ஜோதிகா மாதிரி  வில்லி  ஒரு  காதல் சதிகாரி . காதல் வலையில் யாராவது  சிக்குவார்களா? என பார்ப்பது , சிக்கினால் அவனுடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோ , வீடியோ  எடுத்து   அவனிடம் காட்டி மிரட்டுவது , பணம்  பறிப்பது  இதுதான்   வில்லியின்  தொழில் .அதற்கு  வில்லியின்  பாய் பிரண்டும் உடந்தை 


 சம்பவம்  3  . வில்லனுக்கு  ஏகப்பட்ட  கடன்  உண்டு , கடன் கொடுத்தவன்  ஒரு மாசம்  டைம் கொடுத்து அதற்குள்  கடனை அடைக்காவிடடால்  ஆளை க்ளோஸ்  பண்ணி விடுவோம் என மிரட்டியதால் பணத்தேவையில்  இருக்கிறான் . வில்லனின்  அப்பா  மிகப்பெரிய  தொகைக்கு  இன்சூரன்ஸ் எடுத்திருப்பதை த்தெரிந்த வில்லன்  தன அப்பாவையே  போட்டுத்தள்ள  முயற்சிக்கிறான் . வாடகைக்கொலையாளியை  ரெடி பண்றான் . வரும்  இன்சூரன்ஸ்  பணத்தில்  30%  கமிஷன் என  டீல் 


 மேலே   சொன்ன   மூன்று  சம்பவங்கள்  , நாயகி , வில்லி , வில்லன் , வில்லன் நெம்பர் 2 ,வில்லன் நெம்பர் 3  ஆகிய   5  பேருக்கும்  எப்படித்தொடர்பு  நிகழ்கிறது ?என்ன என்ன சம்பவங்கள்  நடந்தன  என்பது மீதி திரைக்கதை 


நாயகி ஆக   நடித்தவர்  டீன்  ஏஜ்  லுக்கில்  டாக்டர்  கெட்டப்  இரண்டிலும்  பால் மனம் மாறாத பாலகி ஆக இருக்கிறார் .நல்ல   நடிப்பு . வில்லி  ஆக   நடித்தவர்  ரொம்ப  கொடூரமாக  எல்லாம்  இல்லாமல்  சாதாரணமாக இருக்கிறார் . சுமாரான நடிப்பு . மெயின் வில்லனாக  வருபவர் , கொலையாளியாக  வரும்  சைனாக்காரன் , , வில்லி யின்   பாய்பிரண்ட்  , வில்லியிடம்  ஏமாறும்  அப்பாவி டாக்ட ர்  என  நான்கு பேர்  நடிப்பும்  சிறப்பு . இந்த  6 கேரக்ட்டர்களும் தான்  முழு வெப்சீரிஸையும் தாங்கிப்பிடிக்கின்றார்கள் 


 பின்னணி  இசை , ஒளிப்பதிவு  எடிட்டிங்க்  போன்ற   டெக்னிக்கல்  அம்சங்கள்  சிறப்பு 

சபாஷ்  டைரக்டர்


 1   கர்மா  என்பது  பூமாரங்க்   போல , கெடுவான் கேடு நினைப்பான் .  . நாம் செய்யும்  கெடுதல்கள்  நம்மையே  தாக்கும் என்ற  விஷயம் தான்  கதைக்கரு . கெட்டவர்கள்  அழிவார்கள்  என்ற  கருத்தை  சொன்ன விதம் குட் 


2   நான்  லீனியர்  கட்டில்    திரைக்கதை  அமைத்த    விதம் 


3   வில்லி   யார்   என்பது   தெரிய வரும் டிவிஸ்ட் , வில்லனை  ஆள் மாறாட் டம்   செய்து  மாட்டிக்கொள்ளும் இன்னொரு வில்லன்  போன்ற  ட்விஸ்ட்கள் அருமை 


 ரசித்த  வசனங்கள் 

1    என்  காண்டாக்ட்ல  இருக்கறவனுங்க எல்லாரும் என்னை விடப்பிச்சைக்காரனாக இருக்கிறார்கள் .


2   நீதான்  தறுதலைன்னு  பார்த்தா  உன்னை சுத்தி  இருக்கறவங்களும் அப்படித்தான் இருக்காங்க .


3   பழம்  விழுமா?ன்னு  பார்த்துட்டு   இருந்தா  கல்லடி  தான்  கிடைக்கும் .


4  ஆசைப்பட்டதை வாங்க  வக்கில்லைன்னா திருடவாவது கத்துக்கணும் .


5  தனக்குப்பிடித்தப்பெண்ணை வீழ்த்தத்தான் ஆண்கள் பணம் சம்பாதிக்கிறாங்க .


6  ஒரு நாள்   தான்   டைம் , மிஸ் ஆனா   நீ  மிஸ் ஆகிடுவே  !


7   நம்ம   தொழிலில்  கடைசி  வரை , காரியம்  முடியும்   வரை  கவனமாக இருக்கணும் 


8   ஒரு ஆள்   தன இயல்பை  மாற்றிக்கொண்டால் அவங்க சீக்கிரம் செத்துடுவாங்க  என்பது ஒரு ஐதீகம் 


9   எவ்ளோ  ஆழம் தான் தோண்டுவது ?இப்படியே தோண்டுனா பெட்ரொல்  கிடைக்கும் போலயே? 


10  டிடெக்டிவ்  தொழிலில்  கடின  உழைப்பு மட்டும் போதாது ,சோர்ஸ்  இருக்கணும் , அது நம்பகமா இருக்கணும்  


11   கர்மா   என்பது   உண்மையில் இருக்கு . செய்யும் தப்புக்கு தண்டனை உண்டு 


12  டிடெக்டிவ்  தொழில் செய்பவர்கள்  ராத்திரில எப்போ தூங்கி இருக்காங்க ? 

13  என்னை நிமிர்ந்து பார்க்கவே உனக்கு தைரியம் இல்லை , எப்படிக்கொல்லப்போறே ? 


14   நிறைய ஆம்பளைங்க பொட் டைப்பசங்களாவே  இருக்காங்க , நான் எதிர்பார்த்த மாதிரி  இருக்கும்  ஒரே ஆள் ஒரே ஆண்  நீ தான் 


15   ஜெயில்ல  இண்ட்டர்வ்யூக்கு   ஆள்   எடுக்கறாங்களா?   டீசண்ட்டா  டக் இன்  பண்ணி  இருக்கே? 



16   நீ   என் நண்பன் , அதனால  அதிகம் வலி இல்லாம சீக்கிரமா உன்னைக்கொன்னுட் டேன் 


17   அவசரப்படாதே , அவசரப்பட் டா  எல்லாத்தையும்  இழந்துடுவே 


18   கோழையான ஆண்கள்  கூட ஒரு  பெண்ணை  அனுபவிக்கலாம்னு சொன்னா வீரனா ஆகிடுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    சாலையில்  நடக்கும் நபரை கார் மோதி கொல்வதுதான் டாஸ்க் . ஆள்   சாகவில்லை , மீண்டும் காரை ரிவர்ஸில்  விட்டபின்பும்  சாகவில்லை . இப்போ  குற்றுயிரும் குலை உயருமா இருக்கும் ஆளை  சும்மா ஒரு தட்டு தட்டினாலே செத்துடுவான் .அந்த   பேக்கு  வில்லன்  காரில்  அவனை  போட்டுக்கொண்டு போய் வேறு இடத்தில் புதைக்கப்போகிறான் , எவ்ளோ பெரிய  ரிஸ்க் ? வழியில்  போலீஸ்  செக்கிங்க்  வராதா? 


2  கொலைகாரன்  சிசிடிவி  தன்னைப்பார்ப்பதை அறிந்த பின்னும் அசால்ட் ஆக இருக்கிறான் 


3  டாக்டர்  தன்னிடம்  ட்ரீட்மெண்ட்டுக்கு வரும் அழகிய  பெண்களை எல்லாம் விட்டு விட்டு  அந்த பாடாவதி  வில்லி யிடம் மயங்குவது ஏனோ ? 


4 நாயகி  பழி வாங்க  15 வருடங்கள்  டைம்  எடுத்துக்கொள்வது எதுக்கு ? 


5  அப்பா  விபத்தில் இறந்து  போலீசில்  கேஸ்  விசாரணையில்  இருக்கும்போது   வில்லன்  இன்சூரன்ஸ்  ஆபீசில் போய் உடனடியாக பணம் வேண்டும் என தகறாரு செய்வது ஏனோ ?  டவுட்  வராதா?


6 மூன்று  மணி நேரத்தில் கிரிஸ்ப்   ஆக  முடித்திருக்கலாம் .இழுத்து  விட் டார்கள் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+   அடல்ட் கண்ட் டென்ட்  பெரிதாக  இல்லை என்றாலும்  கெட் ட  வார்த்தைகள் பேசும் காட் சிகள்  அதிகம் உண்டு , குடும்பத்துடன்  பார்க்க முடியாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எல்லோரும்  சிலாகித்தபடி  இது ஒன்றும் ஆஹா ஓஹோ  அபாரம் பரிமளா  ரேஞ்ச்  எல்லாம் இல்லை . பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Karma
Promotional poster
Hangul
악연
Literal meaningIll-fated Relationship
Revised RomanizationAgyeon
McCune–ReischauerAkyŏn
GenreCrime thriller
Based onKarma
by Choi Hee-seon
Written byLee Il-hyung
Directed byLee Il-hyung
Starring
Music byHwang Sang-joon[1]
Country of originSouth Korea
Original languageKorean
No. of episodes6
Production
Running time47–61 minutes
Production companies
Original release
NetworkNetflix
ReleaseApril 4, 2025

Thursday, April 10, 2025

குட் பேட் அக்லி (2025) -தமிழ் -சினிமா விமர்சனம் (கேங்க்ஸ்ட்டர் ஆக்சன் மசாலா )


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின்  சினிமாப்பட வரிசை ஆச்சரியகரமானது .இவரது முதல் படமான  த்ரிஷா இல்லைனா  நயன் தாரா (2015) பி , சி செண்ட்டர்களில்  செம ஹிட் , ஆனால்  அன்பானவன் , அசராதவன் அடங்காதவன் (2017), பஹிரா (2023)  இரண்டும்  டப்பாப்படங்கள் . மார்க் ஆண்டனி (2023)  மெகா ஹிட் . அஜித் படம் எப்படி  இருக்கிறது என்பதைப்பார்ப்போம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு பிரபலமான  தாதா .அந்த விஷயம்  தெரிந்தே  அவரை  மணக்கும்  நாயகி  குழந்தை  பிறந்ததும்  நாயகனுக்கு  ஒரு கண்டிஷன்  போடுகிறார் .போலீசில்  சரண்டர்  ஆகி  தண்டனை  பெற்று  பின்  ரிலீஸ்  ஆகி வா , அதுவரை  குழந்தையைத்தொடக்கூடாது என்கிறார் .


 அதன்படி  நாயகன்  ஜெயிலுக்குப்போய்  18 வருடங்கள்  கழித்து  வெளியே  வரும்போது  நாயகனின்  18 வயது  மகன்  ஜெயிலுக்குப்போகிறான் . தனது  எதிரிகளில்  யார்  இந்த சதியை செய்திருப்பார்கள் என்பதைக்கண்டுபிடித்து நாயகன் தன்   மகனை  நிரபராதி என நிரூபிப்பதுதான்  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  அஜித் . நீண்ட  இடைவெளிக்குப்பின் அவர்  திரையில்  கலக்கி இருக்கிறார் .நெகடிவ்  ஷேடில்  அவர் நடித்த   வில்லன்  ,மங்காத்தா  ரேஞ்ச்சுக்கு  இல்லை என்றாலும்  பல  இடங்களில்  அப்ளாஸ்  அள்ளும் நடிப்பு .


நாயகி ஆக  த்ரிஷா .ஓவர்  மேக்கப் .கொஞ்சம்   குறைத்திருக்கலாம் . நடிப்பு  ஓகே  ரகம் . வில்லன் ஆக அர்ஜுன்  தாஸ் . நடிப்புக்கு 60 மார்க்  எனில் அவரது குரலுக்கு 75  மார்க்  தரலாம் .ரகுவரனின் பேஸ்  வாய்ஸ் இவருக்கு 


பிரபு , பிரசன்னா ,,சிம்ரன்  , சுனில் , ஜாக்கிஷெராப் , சைன்  டாம் சாக்கோ , ரெடின் கிங்க்ஸ்லி   போன்றவர்கள்  சும்மா வந்து போகிறார்கள் . யோகிபாபு  ஒரே ஒரு சீனில்  வருகிறார் 


ஜி வி பிரகாஷ் குமார்  தான்  இசை . கிரீடம் (2007)  படத்துக்குப்பின் அஜித் உடன் இவர் இணையும் இரண்டாவது  படம்  இது . . த்ரிஷா இல்லைனா  நயன் தாரா (2015),மார்க் ஆண்டனி (2023)  ஆகிய  படங்களுக்குப்பின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின்  காம்ப்போவில்  3 வது  படம்  இவருக்கு . பிரித்து மேய்ந்திருக்கிறார் . பாடல்கள்  பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் பிஜிஎம் அடிபொழி 


அபிநந்தன்  ராமானுஜம்  தான் ஒளிப்பதிவு . அனைவரையம் அழகாகக்காட்டி உள்ளார் , கலர்புல்லாக இருக்கிறது 

விஜய்  வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் படம்  134  நிமிடங்கள்  ஓடுகிறது .முதல் பாதியை விட பின்  பாதி வேகம் அதிகம் 
ரவி  கந்தசாமி , ஹரீஸ்  மணிகண்டன்  ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக  இயக்கி உள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்


சபாஷ்  டைரக்டர்

1   கமல்  ரசிகர்களும் , அஜித் ரசிகர்களும் கொண்டாடும்  விதத்தில்  அவர்கள்  இருவரது  படங்களில் இருந்தும் பாடல்கள் ,காட் சிகளின்  ரெபரண்ஸ்  வைத்து  தியேட்டரை கொண்டாட வைத்த விதம் 


2  சிம்ரன் அஜித்  உடன் இணைந்து  நடித்த   வாலி  படத்தின்  சீனை  கனெக்ட்  பண்ணி  வரும் முக்கியமான சீன கலக்கல் ரகம் .ட்ரெய்லரில்   வில்லி போலக்காட்டி இருந்தார்கள் 


3  தொட்டுத்தொட்டுப்பேசும்  சுல்தானா? ஒத்த ரூபாயும் தாரேன்,இளமை  இதோ  இதோ ,  ஏஞ்சோடி   மஞ்சக்குருவி  ஆகிய   பாடல்களை  பிளேஸ்   செய்த விதம் 


4  தீனா , பில்லா  படங்களின்  சீன்களை  இந்தக்கதையோடு கனெக்ட்  செய்த  தாட் பிராசஸ் 


5  ஹீரோ   ஓப்பனிங்க் சீன் ,இன்ட்டர்வெல் பிளாக் சீன  இரண்டும்   தரம் 


6  படம் முடிந்த  பின்  ஜாக்கிசான்  படங்களில்  வருவது  போல ஷூட்டிங்க்  டைமில் நடந்தவைகளை காட்டும் 4 நிமிட சீன்கள் 


77   விஸ்வாசம்  படத்தின்  கதையையே  பட்டி டிங்கரிங்க் பண்ணி  புதுக்கதையாகக்காட்டிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   டெத்தே  நம்ம முன்  வந்து நின்னாலும் நம்ம கெத்தை மட்டும் விடக்கூடாது 


2   என்  கூட இருக்கறவங்களுக்கு ஒண்ணுன்னாலே இற ங்கி செய்வேன் , என் குடும்பத்துக்கே ஒண்ணுன்னா செய்ய மாட் டேனா? 


3   பிரியா , உன்  இடுப்பைப்பார்த்துக்க


 வாட்? 


 சாரி , உடம்பைப்பார்த்துக்கோ 


4    உன் புருசனுக்கு  ஒரு கிஸ் கொடுத்துக்கலாமா?


லேசா ;லேசா 


5  உங்க  கூட  100  வருசம்  சந்தோஷமா  வாழனும் 


 உருட்டு உருட்டு .எந்த பொண்டாட்டி தன புருஷன் கூட அவ்ளோ வருஷம் வாழணும்னு சொல்லுவா? 


6 நீங்க  எந்த  மீட்டிங்க்கும்  பக்க மாடதீங்க , நீங்க இருக்கும் இடம் தான்  மீட்டிங்க்


7 பாம்பே   பார்க்கணும்னு   ஆசைப்பட் டீ ங்க , இப்போ  மொத்த  பாம்பேயு ம்  உங்களைத்தான் பார்க்குது 


8 லோ  கார்ப்  டயட் டை க்கூட விட்டுடலாம் , ஆனா   நான் வயலென்ஸை  விட முடியாது 


9   அவன்   நமக்கு பயம்  காட்டும் முன் நாம அவனுக்கு பயத்தைக்காட்டிடனும் 


அவனுக்கு பயத்தைக்காட்டிடனும்  என சொல்லிட்டு  நீங்க ஏண்டா  பயந்து  நடுங்கறீங்க ?


10   அவரை  கரெக்ட்   பண்ணிடலாமா? 


 கரெக்ட் டாக   இருப்பவரை   எப்படிக்கரெக்ட்  பண்ணுவ ? 


11   தல   இருக்கக்கூ டாது 


என்னு தா?  உ ன்னு தா?


12   வாழ்க்கைல பிரச்சனை வந்தா ஓடக்கூடாது  எதிர்  கொள்ளனும் 


13   காசு   வாங்கற  போலீசுக்கு  காசு . வாங்காத  போலீசுக்கு    சூப்பு 

   சூப்பு   குடிக்க   நான் என்ன    சூப்பு  பாயா?


14    தலை  சுத்தி  இருக்குமோ? 


 இனிமே தான்   தல  சுத்தும் 


15   எதுக்கு   டிபன் பாக்ஸை  ஓப்பன் பண்ண வேணாம்னு சொல்றே? 


அந்த   கேரியரை ஓப்பன் பண்ணினா உன் கேரியர் க்ளோஸ் 


16   நாம   எவ்ளோ குட்  ஆக   இருந்தாலும் இந்த உலகம் நம்மை பேட்  ஆக்கிடும் 


17   அப்பா   சேர்த்து  வைத்ததுதான்  பிள்ளைக்குக்கிடைக்கும் 


18   பல   வருடங்கள்  வெயிட் பண்ணி   பின் எடுக்கும் ரிவெஞ்ச்சுக்கு தான் கிக் அதிகம் 


19   உன்  பாசை  மீட்   பண்ணனும் 


அவரு டேஞ்சரான ஆளு 


 அதை  நான் முடிவு   பண்ணிக்கறேன் 


20    வேற   ரூட் டா?   எப்பவும் என் ரூட்  ஒண்ணுதான் 


21   உயிரைக்கொடுப்பேன் என சொல்பவர்களை நம்பக்கூடாது 


22  உனக்கும் எனக்கும் எந்த பம்மல் கே சம்பந்தமும் இல்லை 


23    என்னை   சுற்றி  இருப்பவர்கள்   எல்லாரும்  பேடா  இருக்கும்போது   நான் மட்டும்   குட்  ஆக எப்படி இருக்கறது ? 


24  நீ   எனக்கு ஆப்சன்  தர்றியா?  நான் தான்   எல்லாருக்கும் ஆப்சன்  தருவேன் 


25    அவர்   யாரு ? 


 வரலாறு க்கே  வரலாறு  கேட்கறியா? 

26   நீங்க   சொன்னது எல்லாம் பிளாஷ்பேக்  லைவ் மேட்ச்  இப்போப்பார்க்கபோறீ ங்க 

27  ஜெயில்   விட்டு  ஜெயில் மாற்ற   நான் ஜெயிலர் இல்லைடா கில்லர் 

28 உன்னைக்காப்பாற்ற  புலி வரும் 

என்னைக்காப்பாற்ற  என்  அப்பாதான் வரணும் 

2ம் 1 தான் 

28   என்ன  பால் கொண் டு வர்ற?மொத்தமாப்பால் ஊத்தவா ? 

29  ஆல் கேட்ஸ்   ஓப்பன் , ஏகே  வர்றார்  வழி விட் றா 

30    TRUST  THE BEG , NEVER BEG THE TRUST 







 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    விஸ்வாசம்  பட த்தில்  அப்பா -மகள்   பாசம்  கனெக்ட்   ஆன அளவு  இதில்  அப்பா - மகன்  பாசம்  கனெக்ட்    ஆகவில்லை 


2 போலீசில்  சரண்டர் ஆகும் முன்னரே  தனக்கு 18 வருடங்கள்  தான்  ஜெயில்  தண்டனை  கிடைக்கும் என்பது நாயகனுக்கு எப்படித்தெரியும் ? மகனிடம்  18 வருட ங்கள்  கழித்து  வருகிறேன்  என எப்படி சொல்கிறார் ? 


3 அப்பா   தன்னைப்பார்க்க 18 வருடங்களாக  வரவில்லை  பிஸ்னெசில்  பிசி என அம்மா சொல்வதை எப்படி மகன்  நம்புகிறான் ?  


4  இறந்ததாக சொல்லப்படும் ஒரு  பெண்  உயிருடன்  இருப்பது போல ஒரு வீடியோ  காட்டும்போது  அது பழை யதாக இருக்கலாம் என எதனால் சந்தேகம் வரவில்லை ? லைவ் ஷோ கிடையாதே? 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்குட் பேட் அக்லி (2025)-.கதை வழக்கமான சாதா கேங்க்ஸ்டர் கதை தான் , ஆனால் ரசிகர்களைக்கவரும் மாஸ் காட்சிகள் படம் முழுக்க உண்டு , மார்க் ஆண்டனி அளவுக்கு மெகா ஹிட் ஆகாது , அஜித் ரசிகர்கள் அமர்க்களம் எனக்கொண்டாடுவார்கள் . பொது ரசிகர்கள் இது ஒரு சராசரி ஆக்சன் மசாலாப்படம் என்பார்கள் ..ஜி வி பிரகாஷின் பிஜிஎம் அட்டகாசம் ,ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 41, ரேட்டிங் - 2.75 / 5



குட் பேட் அக்லி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்புநவீன் யர்னீ
இரவி சங்கர்
குல்சன் குமார்
பூஷன் குமார்
கிருஷ்ணன் குமார்
கதைஆதிக் ரவிச்சந்திரன்
இரவி கந்தசாமி
ஹரிஷ் மணிகண்டன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஅபிநந்தன் இராமானுஜம்
படத்தொகுப்புவிஜய் வேலுகுட்டி
கலையகம்மைத்ரி மூவி மேக்கர்ஸ்
டீ-சீரீஸ்
வெளியீடுஏப்ரல் 10, 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு225–270 கோடி[1][2][3]

Wednesday, April 09, 2025

உருவம்(1991)-தமிழ்- சினிமா விமர்சனம் (சூப்பர் நேச்சுரல் ஹாரர் ட்ராமா)@அமேசான் ப்ரைம்,ராஜ் டிஜிட்டல் பிளஸ்,யூ ட்யூப் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்


உருவம்(1991)-தமிழ்- சினிமா விமர்சனம்

 (சூப்பர் நேச்சுரல் ஹாரர் ட்ராமா)

@அமேசான் ப்ரைம்,ராஜ் டிஜிட்டல் பிளஸ்,யூ ட்யூப் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்


வெள்ளிவிழா நாயகன்  மோகன் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டபோது. அவரது மார்க்கெட்டை மொத்தமாகக்காலி பண்ணிய படம் இது.யார் மேல் தப்பு,?எதனால் தோல்வி என்பதைப்பார்ப்போம்

ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தனது மனைவி,இரண்டு. குழந்தைகள்,ஒரு தங்கை ,தங்கையின் கணவன,மச்சினி இவர்களுடன்கூட்டுக்குடித்தனமாக ஒரு பங்களாவில் வசித்து வருகிறான்.


நாயகனின் அப்பாவுக்கு ஒரு இல்லீகல் மனைவி அல்லது ஆசை நாயகி உண்டு.அவர்களுக்குப்பிறந்த மகன் சொத்துக்கு ஆசைப்பட்டு கேஸ் போடுகிறான்.ஆனால் தீர்ப்பு அவனுக்கு சாதகமாக வரவில்லை.இதனால் செம கடுப்பான வில்லன் நாயகனின் குடும்பம் நாசமாகப்போக ஒரு மந்திரவாதியின் உதவியுடன் சதித்திட்டம் தீட்டுகிறான்.


பில்லி ,சூன்யம் ,ஏவல் மூலம் நாயகனுக்குப்பேய் பிடிக்க வைத்து நாயகன் மூலமாகவே அவனது குடும்பத்தை நிர்மூலம் ஆக்க முயற்சிக்கிறான்.அவனது திட்டம் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக மோகன்.மீசை இல்லாமல் நடித்திருக்கிறார்.சிட்டிசன் அஜித் கெட்டப் இந்த மோகன் கெட்டப்பில் இருந்து எடுத்திருக்கலாம்.

ஜோடி பல்லவி.அதிக வாய்ப்பில்லை.நாயகனின் குடும்பத்தைக்காப்பாற்றப்பாடுபடும் நம்பூதிரி ஆக ஆர் பி விஸ்வம் நடித்திருக்கிறார்.

ஜெயமாலா வும் ஒப்புக்கு சப்பாணி ஆக படத்தில் உண்டு


இசை இளைஇளையராஜா. ஆனால் எடுபடவில்லை.பாடல்களும் ஹிட் ஆகவில்லை.பிஜெம்மும் சொதப்பல்.


ஒளிப்பதிவு வேலுப்பிரபாகரன்.ஒரே பங்களாவில் மொத்தப்படமும் என்பதால் அதிக வேலை இல்லை


ஏ பி மணிவண்ணனின் எடிட்டிஙகில் படம் 105 நிமிடஙகள் ஓடுகிறது.


வசனம் அறுவடை நாள் புகழ் ஆர் பி விஸ்வம்.மொத்த வசனங்கள் ஏ 4 சீட்டில் அரை பக்கம் தான்.எதுக்கு தண்டமா சம்பளம்?


இயக்கம் ஜி எம் குமார்


சபாஷ்  டைரக்டர்


1 ஒரே பங்களாவில் மொத்தப்படத்தையும் முடித்தது

2 த எக்சார்சிஸ்ட் ஹாலிவுட் படக்கதையை நாசூக்காக சுட்டது

3 மொக்கைப்படம் தான் எடுக்கறோம்னு முடிவானபின் எதுக்கு இரண்டரை மணி  நேரம் தண்டமா? என பாதி அளவாகக்குறைத்தது


  ரசித்த  வசனங்கள் 

1 டில்லிக்கு ராஜாந்னால்லும் பில்லி ,சூனியத்தில் இருந்து தப்ப முடியாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 பேய். எதனால் தவணை முறையில் ஒவ்வொருவராகக்கொல்லுது?

2 நாத்திகன் ஆன நாயகன் க்ளைமாக்சில் தன் தவறை உணர்ந்து பக்திமான் ஆகிறான்.ஓக்கே ஆனால் இறந்த அப்பாவிகள் செய்த தவறென்ன?


3 திகில் படம் பயத்தை வர வைக்கனும்.அருவெறுப்பு தான் வருது.நாயகனின்  மேக்கப் கொடூரம்

4 நாயகன் வீட்டில் பூஜை  அறையில் முறையிடாமல் எதுக்கு பீச்க்கு ஓடறார்?

5 ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு இருக்கட்டும்னு சேர்த்த சீன் எடுபடவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது ஒரு குப்பைப்படம்.திகிலும் இல்லை.கதையும் இல்லை.வெட்டியா இருந்தாஇருந்தாக்கூடப்பார்க்க வேண்டாம்.ரேட்டிங் மைனஸ் 1/5

Tuesday, April 08, 2025

க.மு ,க.பி (2025)-தமிழ் சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

     


          க.மு ,க.பி (2025)-தமிழ் சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


4/4/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் அருமையான வசனங்கள்,புதுமுக நடிகர்களின் நல்ல நடிப்பு ,அறிமுக இயக்குனரின் நல்ல கதை சொல்லும் யுக்திகளுடன் கவனிக்க வைக்கும் படமாக வந்திருக்கிறது      


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் சினிமா வில் சாதிக்கத்துடிக்கும் நாளைய இயக்குனர்.அவனுக்கு ஒரு காதல்.காதலி வேலைக்குப்போகும் பெண்.வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.கல்யாணத்துக்கு முன் இனித்த காதல் கல்யாணத்துக்குப்பின் கசக்கிறது.


இவர்களது திருமண வாழ்க்கை வெற்றியா?தோல்வி யா?என்பதை உணர்வுப்பூர்வமாக,யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்

நாயகன் ,நாயகி ஆக விக்னேஷ் ரவி ,சரண்யா ரவிச்சந்திரன் இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக நாயகியின் நடிப்பு அட்டகாசம்.ஒப்பனை இல்லாத யதார்த்தமான மாநிற அழகிகளை பாலுமகேந்திரா காலத்தில் பார்த்தது.க்ளோசப் காட்சிகள் அதிகம் என்பதால் நாயகிக்கு நல்ல வாய்ப்பு


நாயகன் சினிமாவுக்கு கதை சொல்லும் கதையில் வரும் காதல் ஜோடி ஆக டி எஸ் கே - ப்ரியதர்சினி இருவரும் பரவாயில்லை ரகம்


மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத கிளைக்கதையில் வரும் இன்னொரு ஜோடி ஆக நிரஞசன்- அபிராமி முருகேசன் இருவரும் கொஞ்சம் ஓவர்  ஆக்டிங


முக்கியமான இந்த 6 பேர் தவிர படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்


ஒளிப்பதிவு ஜி எம் சுந்தர்.ஒப்பனை இல்லாத நாயகியை அழகாகக்காட்டுவது சவாலான வேலை தான்.


பாடல்களுக்கான இசை ஷாம்நாத்.பரவாயில்லை. ரகம்.


பின்னணி இசை தர்சன்.சுமார் ரகம்.

சிவராஜ் பரமேஷ்வரின் எடிட்டிஙகில் படம் 104 நிமிடங்கள்.


ஆர்ட் டைரக்சன் கார்த்திக் .

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர். புஷ்பநாதன் ஆறுமுகம்.இவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு.

சபாஷ்  டைரக்டர்


1 ஒரே கதைக்கான காட்சிகளில் இரு வேறு காதல் ஜோடிகளை உலா வர விட்ட ஐடியா பிரமாதம்.இதனால் ஆடியன்சுக்கு போர் அடிக்காது

2 வாழ்வியல் யதார்த்தத்தைப்பிரதிபலிக்கும் செமயான வசனங்கள் பெரிய பிளஸ்

3 புதுமுகஙகளின் நடிப்பு ,குறிப்பாக நாயகியின் பர்பார்பார்மென்ஸ்

4 தேவை இல்லாத சீன்கள் என எதையுமே சுட்டிக்காட்ட முடியாத க்ரிஸ்ப் ஆன எடிட்டிங்

5 நாயகனிடம் நல்ல சீன்கள் ஆக 10 சீன் எழுதி வாங்கிக்கொண்டு ஒரு பிரபல டைரக்டர் வெறும் 150 ரூபாய் தரும்போது அதற்கு நாயகனின் எதிர் வினை செம.அனேகமாக இது இயக்குநரின் சொந்த அனுபவமாக இருக்கக்கூடும்


  ரசித்த  வசனங்கள் 

1. 

கல்யாணத்துக்குப்பின் இருக்கும் காதலை விட கல்யாணத்துக்குமுன் இருந்த காதலில் ஆழம் அதிகம்

2. எங்கே போகலாம்?


எங்கே போனாலும் கடைசியா தியேட்டருக்குத்தான் போகப்போறோம்.எங்கே போனா என்ன? எனக்கு உன் கூட இருக்கனும்.அவ்ளோதான்.

3 லவ் பண்றப்ப பெரிய தப்புக்கூட சின்னதாத்தெரிஞ்சுது.மேரேஜ்க்குப்பின் சின்னத்தப்புக்கூட சகிக்க முடியாததா ஆகிடுது


4 இண்ட்டர்கேஸ்ட் மேரேஜ்னா என்ன?

ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கறது


காதலில் ஏன் அரசியலை சேர்க்கறீங்க?


காதலே பெரிய அரசியல்  தான்


5. பொண்ணுங்களை எப்பவும் நம்ம காலுக்குக்கீழே வெச்சுக்கனும்.அப்பத்தான் நம்ம கண்ட் ரோலில் இருப்பாஙக


6. எங்கே போகனும் மேடம்?

மாமியார் வீட்டுக்கு


தப்பு பண்ணினவங்கதானே அங்கே போவாங்க?

ஒரு வெட்டிப்பையனை லவ் பண்ணி தப்புப்பண்ணிட்டேன்

7. அவன் தேடிப்போன சினிமாத்தொழிலில்தான் அவன் தொலைஞ்சு போவான்னு அப்போ எனக்குத்தெரியலை


8. வெயிட் பண்றப்ப என் மேல் கோபம் வர்லையா?


வெயிட் பண்றப்ப இன்னமும் எப்படி எல்லாம் லவ் பண்ணலாம்?என யோசிச்சுட்டு இருப்பேன்


9. வாசத்தை மட்டும் சாப்பிடலாம்னா உன் வாசமே மூணு வேளைக்கும் போதும்


நீ எப்படிப்பேசுனாலும் இன்னைக்குக்கிஸ் கிடையாது. 

10.'எப்போ கணவன் ,மனைவிக்கு நடுவே இன்னொரு நபர் வர்றாரோ அப்பவே நம்பிக்கை போயிடும்


11 லைப் டார்ச்சர் ஆக இருக்குனு குடிக்க வந்திடறோம்


லைப் டார்ச்சரா? ஒயிப் பா?

12. லவ் பண்றப்ப இருக்கும் சந்தோஷம். மேரேஜ் பண்றப்ப ஏன் இல்லை?

லவ்வரை அட்ராக்ட் பண்ணனும்னு ஒரு எக்சைட்மெண்ட் லவ் பண்றப்ப இருக்கும்..மேரேஜ் ஆன பின் இவ நம்ம மனைவி தானேன்னு எண்ணம் வந்திடும்


13 தனியா இருந்தா புருசனுக்குப்புத்தி வரும்னு நினைக்கக்கூடாது.அதுவே அவஙகளுக்குப்பழகிடும்


14.  போனைக்கட் பண்ணினா திரும்பக்கூப்பிடக்கூடாது.அதுதான் மேனர்ஸ்.

15. வெளி ல இருந்து ஒரு ஆள் தம்பதியிடம் மத்தியஸ்தம் செய்தா அது  தம்பதியில் யாரோ ஒருவருக்கு எதிராதான் அமையும்.தம்பதியே அவஙகளுக்குள் பேசி தீர்த்துக்கனும்


16. யாரோட பிரச்சனைக்கும்யாராலும் தீர்வு சொல்ல முடியாது


17. பேமிலியா இருக்கத்தானே பிளான் பண்ணினோம்? பேமிலி பிளான் ( கு.க)பண்ணலையே?

18. உனக்கு நாய் பிடிக்குமா?பூனை  பிடிக்குமா?


ஒரு வேளை சோறு போட்டாலே. காலம் பூரா வாலை ஆட்டிக்கிட்டு நன்றியோட இருக்கும் நாய்.ஆனா வாழ்நாள். பூரா. சோறு போட்டுட்டு ஒரு வேளை சோறு போடலைன்னாலும். பூனை தன்னை எஜமான் போல தாந் நினைக்கும்.

19. இந்த ஆம்பளைங்க  கிட்டே குப்பை கொட்ட நாய் படாத பாடு பட வேண்டி இருக்கு

20.  முதல். முறையா அவளோட முத்தம் அவனுக்குக்கசப்பா இருந்துது


21. ஆம்பளை நான் தான் கெத்து என சொல்லும் எவனாலும். பொண்ணுங்களைப்புரிஞ்சுக்க முடியாது


22 சும்மாதானே இருக்கே?பாத்திரங்களை. வாஷ் பண்ணி.வைக்கலாமில்ல?


வாஷ். பண்ணி வைனு சொல்லு.ஆனா சும்மா இருக்கேன்னு குத்திக்காட்டாதே


23. பாய் பிரண்டுன்னா பாய்க்கு நடுவில் வந்து படுத்துக்குவியா?

24. ஒயிப் கூட இல்லைனா. ஒரு ஆணுக்கு வெற்றி கூட தோல்வி தான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. படத்தில். வரும். இரண்டாவது ஜோடி நாயகன் சொல்லும் கதையின கேரக்டர்கள் என்பது எல்லோருக்கும் புரியுமா? ஒளிப்பதிவில் தனி கலரிங்க் காட்டி. இருக்கலாம்


2. படத்தில் வரும். மூன்றாவது ஜோடியில் கணவன் ஆணாதிக்கம்,மனைவி அடங்கிப்போதல் இரண்டுமே ஒட்டவில்லை



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சினிமாவில். வாய்ப்புத்தேடுபவர்கள்,காதலர்,தம்பதி இவர்களுக்குப்பிடிக்கும்.விகடன். மார்க். யூகம். 42.ரேட்டிங் 3/5

Monday, April 07, 2025

கடைசி தோட்டா (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)

       


                 கடைசி தோட்டா (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)


இது ஒரு லோ பட்ஜெட் படம்.ஸ்டார் வேல்யூ இல்லாத படம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - ஒரு எம் எல் ஏ வீட்டு க்கு ரெய்டு வர இருப்பதாகத்தகவல் வர அவர் தன்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை கொடைக்கானலில் இருக்கும் தன் ரிசார்ட்டில் பதுக்கி வைக்கும்படி  அடியாட்களுக்கு கட்டளை இடுகிறார்


சம்பவம் 2 - அந்த ரிசார்ட்டில். பல தரப்பட்ட நபர்கள் தங்கி இருக்க அந்த ஏரியாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இளம்பெண் கொலை செய்யப்படுகிறார்.அந்தப்பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க நாயகி ஆன போலீஸ் ஆபீசர் வருகிறார்.இன்வெஸ்டிகேசன் நடக்கிறது


சம்பவம் 3 - 60 வயது ஆன ஒரு பணக்காரப்பெண் 100 பவுன் நகைக்காகக்கொலை செய்யப்படுகிறார்


சம்பவம் 4 - இளம்பெண்ணின் கொலையை ,கொலைகாரனை நேரில் பார்த்த சாட்சி உண்டு


மேலே சொன்ன நான்கு சம்பவங்களும். எந்தப்புள்ளியில் இணைகின்றன என்பது மீதி திரைக்கதை

நாயகன் ஆக ராதா ரவி அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவரது உடல் மொழி ,கணீர் குரல் ,கம்பீரம் அனைத்தும் அருமை.அவரது மனைவி ஆக வரும் ஸ்ரீஜா ரவி கச்சிதம்.பிளாஸ்பேக் காட்சிகளில் ஓவர் ஆக்டிஙக்


நாயகி ஆக வரும் போலீஸ் ஆபீசர் ரோலில் வனிதா விஜயகுமார் தெனாவெட்டான நடிப்பு.ஆனால் சீனுக்கு சீன் தம் அடிப்பது ஓவர்


கொலையைப்பார்த்த சாட்சி ஆக ஸ்ரீகுமார் நல்ல நடிப்பு.வையாபுரி ,கொட்டாச்சி போன்ற காமெடி நடிகர்களை இயக்குநர். சரியாகப்பயன்படுத்தவில்லை


வில்லியாக வரும் பெண்ணை இன்னமும் நன்றாக உபயோகித்து இருக்கலாம்


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் நவீன் குமார்.


இசை சுவாமிநாதன் ராஜேஷ்.ஒரு கானாப்பாட்டு ரசிக்கும்படி உள்ளது.பின்னணி இசை சுமார் ரகம்


ஒளிப்பதிவு மோகன் குமார்.ஒப்பேற்றி வைத்திருக்கிறார்


லோகேஷின் எடிட்டிங் கில் படம் 107 நிமிடங்கள் ஓடுகிறது


சபாஷ்  டைரக்டர்

1 ஒரே பங்களாவில் மொத்த படத்தையும் முடித்தது

2 ராதாரவியின் கேரக்டர் டிசைனை நன்கு வடிவமைத்தது


  ரசித்த  வசனங்கள் 

1. பேனா ரொம்பப்பழசா இருக்கும் போலயே?


ஓல்டு ஈஸ் கோல்டு


2. இந்த உலகில் தேவைக்காக எடுப்பது தப்புன்னா தேவைக்கு அதிகமா வைத்திருப்பவர்களிடம் எடுப்பது தப்பு இல்லை

3. வாழ்ந்து முடிச்சவஙகளைப்பத்தி யோசிப்பதை விட வாழப்போறவங்களைப்பத்தி யோசிப்பது நல்லது


4 நல்ல வேளை நமக்கு ஆண்டவன் குழந்தை பாக்கியத்தைத்தர்லை.தந்திருந்தா இத்தனை அனாதைக்குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்திருக்க முடியுமா?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வயதான தம்பதியர் 100 பவுன் நகைகளை வீட்டில் பீரோவில் வைத்து பூட்டி வைக்காமல் சும்மா செல்பில் அசால்ட்டா வைத்திருப்பது எதனால்?

2 வில்லி+வில்லன் இருவரும் அரைகுறையாகக்கொலை செய்து விட்டு சரி எப்படியும் செத்திடுவா என செல்வது ஏன்? கன்பர்ம் பண்ண வேண்டாமா?

3 மனைவியை. இழந்த. பெரியவர் சோக மயமாக இருக்கிறார்.திடீர் என சிரித்த முகத்துடன் ஜாலியாக இருக்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டாப்பார்க்கலாம்.தியேட்டரில் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை.விகடன் மார்க் யூகம் - 38

ரேட்டிங் 1.75 / 5

Sunday, April 06, 2025

TEST(2025)- தமிழ் -சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @நெட்பிளிக்ஸ்


TEST(2025)- தமிழ் -சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @நெட்பிளிக்ஸ்


திரை அரங்கு வெளியீடாக இல்லாமல் நேரடியாக நெட் பிளிக்சில் 4/4/2025 முதல் ரிலீசான இந்தப்படம்  கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் கை மையமாக வைத்து உருவாகிய ஸ்போர்ட்ஸ் டிராமா.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன். இந்திய கிரிக்கெட் அணிப்0ஒ0ப்யின் முன்னணி வீரர்.ஆனால் இப்போதுசாங்க்ஸ்ச்களில் அவரால் சோபிக்க முடியவில்லை.அவர்டீமை விட்டுத்தூக்கப்படலாம் என ஒரு பேச்சு மீடியாக்களில் உலா வருகிறது.இப்போது நடக்க இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் தான் அவரது கடைசி மேட்ச் என ஒரு வதந்தி.அதனால் அவர் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.இவருக்கு ஒரு மனைவி ஒரு மகன் .


நாயகி திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்.ஒரு முறை கரு தரித்து கலைந்து விட்டது.பல சிகிச்சைகளுக்குப்பின் டாக்டர்கள் கடைசி வாய்ப்பாக ஒரு நாள் குறிக்கிறார்கள்.அந்த நாளில் நாயகி தன் கணவனுடன் சேர வேண்டும்.நாயகியின் முன்னாள் வகுப்புத்தோழன் தான் நாயகன்.நாயகியின் அப்பா தான் நாயகனுக்குக்கிரிக்கெட் குரு ,ஆலோசகர் எல்லாம்.ஆனால் கடைசி சில மேட்ச்களில் நாயகன் சரியாக விளையாடாததால் அவரைக்கடுமையாக விமர்சனம் செய்ததால் நாயகியின் அப்பா உடன் நாயகன் பேசுவதில்லை.அவரது மரணத்துக்குக்கூட போகவில்லை.


வில்லன் மூலிகை பெட்ரோல் ராமர் போல மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும் பிராஜக்ட்க்காக உழைக்கிறார்.ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அவருக்கு 50 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது.பைனான்ஸ் காரன் நெருக்குகிறான்.வில்லனுக்குப்பணத்தேவை இருக்கிறது.50 லட்சம் கடன்+ குழந்தைக்கரு சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் கட்ட வேண்டும்.


வில்லனின் மனைவி தான் நாயகி.நாயகனின் மகனின் ஸ்கூல் டீச்சரும் கூட



இப்போது நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சில் இந்தியாவைத்தோற்க வைக்க 100 கோடி பணம் தர ஒரு க்ரூப் ரெடியாக இருக்கிறது.


வில்லன் நாயகனின் மகனைப்பணயக்கைதியாக வைத்து நாயகனை மேட்சில் தோற்கும்படி மிரட்டுகிறான்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆக சித்தார்த் கச்சிதமான நடிப்பு.ஒரு காலத்தில் அற்புதமாக ஆடி இப்போது பார்மில் இல்லாத வலியை செமயாகப்பிரதிபலிக்கிறார்.அவரது மனைவியாக மீரா ஜாஸ்மின்.அதிக வேலை இல்லை


நாயகி ஆக நயன் தாரா.பரிதாபமாக இருக்கிறார்.அவரது முகத்தில் களை இல்லை.உடலில் வனப்பு இல்லை.உடல் மொழியில் உற்சாகம் இல்லை.நடிப்பில் குறை இல்லை.ஐயா காலத்து நயனை ரசித்தவர்கள் பார்த்தால். மனம் நோவது உறுதி


வில்லன் ஆக மாதவன் அனுபவம்  மிக்க நடிப்பு.விரக்தி ,ஏமாற்றம் ,இயலாமை,கோபம் அனைத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறார்


வில்லனின் நண்பன் ஆக காளி வெங்கட் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


சுமந் குமாருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் சசிகாந்த்.


விராஜ் சிங் கோலி தான் ஒளிப்பதிவு.குட் ஒர்க்.சுரேசின் எடிட்டிஙகில்  படம். 141 நிமிடங்கள் ஓடுகிறது.

சக்தி ஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்


சபாஷ டைரக்டர்


1 நாயகன்,நாயகி,வில்லன் மூவர் நடிப்பும் அருமை.சம வாய்ப்பு.

2 முதல் பாதி பர பரப்பான திரைக்கதை

3  மக்களுக்கு கிரிக்கெட் மேல் இருக்கும் கிரேசை வைத்து திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 


1. வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான்.ரூல்ஸ்தான் அதோட அழகே!


2. களத்தில் இறங்கி விளையாடனும்.நோ. சாய்ஸ்


3. லட்சத்தைப்பார்க்காதே! லட்சியத்தைப்பார்


4. பொய் சொல்றவஙகளோட நான் பிஸ்னெஸ் பண்றதில்லை


5. சிம்ப்பிள் மேட்டர் .சால்ட் வாட்டர்


6. இந்தியா ஜெயிக்கனுமா? நீ ஜெயிக்கனுமா?


போரில் ஒரு வீரன். சண்டை போடுவது தன்னைக்காப்பாத்திக்கவா? தன் நாட்டைக்காப்பாத்தவா?

7. இந்த உலகம். நாளை எப்படி இருக்கனும்னு. இன்னைக்கே கனவு காண சிலரால் தான் முடியும்

8. பணம்,புகழ் இன்னும் எதெதுக்கோ ஆட பலர் இருக்காஙக.ஆனா கேம்க்காக ஆட அர்ஜூன் மட்டும் தான்


9 கனவு கண்டா மட்டும் போதாது.ஜெயிக்கனும்.ஜெயிச்சாதான் மதிப்பு.ஒன்லி வின்னர்ஸ் ஆர் கிரேட்


10. சராசரி என்னும் சாக்கடைல விழாதே

11. ஒன்லி வின்னர்ஸ் ஹேவ் டேலண்ட்


12 தோற்பதும் ,ஜெயிப்பதும் ஒரே காயினின் இரு பக்கங்கள்


13. ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு வெற்றி இருக்கும்.ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு தோல்வி இருக்கும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகி ஒரு ஸ்கூல் டீச்சர்.அவரது போன் பேட்டரி டவுன் ஆகி இரு முக்கியக்கட்டங்களில். பிரச்சினை .பவர் பேங்க் வெச்சுக்க மாட்டாரா?

2 நாயகி ஒரு டீச்சர்.உடை கண்ணியமா இருக்க வேண்டாமா? பேக் நெக் லோ யு நெக் ஜாக்கெட் 


3 நாயகன் வில்லநால். ட்ராப்செய்யப்படும். வரை படம் ஸ்பீடு.அதற்குப்பின் தொய்வு.பின் பாதி நம்ப முடியாத  காட்சிகள்

4 நாயகனிந் மகன் மிஸ்சிங்.கவலையில் சோகமாக நாயகன்.ஆனால் அம்மா மீராஜாஸ்மின் நிம்மதியா தூங்கறார்?

5 நயன் பேசும் தன் கனவு விருப்ப டயலாக் தெற்கத்திக்களளன் டயலாக் உல்டா


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - TEST(2025)-தமிழ்- (த்ரில்லர்)@நெட்பிளிக்ஸ் - கிரிக்கெட் ரசிகர்களைக்குறி வைத்து எடுக்கப்பட்ட மேட்ச் பிக்சிங் கதைக்கரு கொண்ட  படம்.மாதவன்,சித்தார்த்,நயன் தாரா மூவர் நடிப்பும் அருமை.ஆனால் நம்ப முடியாத திரைக்கதை,ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் படத்தின் பலவீனம்.விகடன் மார்க் 41 ரேட்டிங் 2.25 / 5

Saturday, April 05, 2025

TRAUMA (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹைப்பர் லிங்க் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் )




DRAMA    என்ற  ஆங்கில  சொல்லுக்கு நாடகம்  என்று பொருள்  , இது அனைவருக்கும் தெரிந்த  வார்த்தை .  ஆனால் TRAUMA  என்ற  ஆங்கில  சொல்லுக்கு  ஒரு நிகழ்வின் காரணமாக பேரதிர்ச்சிக்கு ஆளான நிலை என்று பொருள், இது  எத்தனை பேருக்குத்தெரியும் ?  டைட்டிலை  எதற்காக அவ்ளோ சிரமப்பட்டு ஆங்கிலத்தில் வைக்க வேண்டும் ? என்பது தெரியவில்லை . பல மொழிகளில்  மொழி பெயர்க்க  சிரமம் எனில் ரஜினியின் பட டைட்டில் மாதிரி  பெயர்ச் சொல்லாக வைக்கலாமே? 


 21/3/2025 அன்று  திரை   அரங்குகளில்  வெளியான இந்தப் படம்  இயக்குனர்  தம்பி துரை  மாரியப்பனின் இயக்கத்தில்  வெளி வந்திருக்கும் படம் . ஓ  டி டி  யில் இன்னமும்  வெளியாகவில்லை .ஜனரஞ்சகமாகவும் இந்தப் படம் வெற்றி பெறவில்லை , விமர்சன ரீதியாகவும் பாராட் டுப் பெறவில்லை . எங்கே  தப்பு  நடந்தது என்பதைப்பார்ப்போம் 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம் 1 - நாயகி ஒரு பெட்ரோல்  பங்க்கில் பெட்ரோல்  போடும்  பணியில்  இருக்கிறார் . அம்மா, அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் .அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு  இருக்கிறார்கள் .நாயகன்  நாயகியை சுற்றி  சுற்றி  வந்து  ஒன்   சைடாக லவ்வுகிறான் .நாயகி அவனைக்கண்டுக்கவில்லை என்றாலும் உள்ளூர அவனைப்பிடித்திருக்கிறது . ஒரு சமயம்  நாயகி பெட்ரோல்  பங்க்  ஓனர் வீட்டுக்கு இரவில் தனிமையில்  சென்று கலெக்சன் பணத்தை  ஒப்படைக்கும்போது   ஓனர்   நாயகியிடம் தவறாக நடந்து கொள்ள   முயற்சிக்கிறார் .அப்போது  நாயகன் எம் ஜி ஆர் மாதிரி ஆஜர் ஆகி காப்பாற்றுகிறார் .இந்த சம்பவத்துக்குப்பின் நாயகி , நாயகன் இருவரும் நெருக்கம் ஆகிறார்கள் . ஒரு கட்டத்தில்  ஓவர்  நெருக்கம் ஆகி நாயகி கர்ப்பம் அடைகிறார் . ஆனால்   நாயகன் எஸ்கேப் . வீட்டுக்குத் தெரிந்து  நாயகி க்கு செம   திட்டு கிடைக்கிறது .கருவைக்கலைக்கட்டாயப்டுத்தப்படுகிறார் 


 சம்பவம்  2  - திருமணம்  ஆன தம்பதிக்குக்குழந்தை .இல்லை . ஆண்மைக்குறைவு தனக்கு இருக்கிறது   என்பதை  கணவன் , மனைவியிடம் மறைக்கிறான் . செயற்கைக்கருத்தரிப்பு மையத்தில் இருவரும் போய் சிகிச்சை எடுத்து வருகிறார்கள் . அது   ஒரு டுபாக்கூர்  ஹாஸ்பிடல் .அதன்   ஓனர்  ஆள்   வைத்து  பணம் பறிக்கும் வேலை செய்பவன் .அவனது  ஏற்பாட்டின் படி   வில்லன்   அந்த மனைவி  மயக்கத்தில் இருக்கும்போது   பாலியல் வன்கொடுமை செய்து  அதை வீடியோ  ஆக எடுத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறான் 


 சம்பவம்  3  - இது  ஒரு காமெடி டிராக் .காமெடியன்   தன நண்பனுடன் சேர்ந்து  கார்களைத்திருடி  விற்கலாம் என முயற்சிக்கிறான் . ஒரு காரை  ஆட் டையைப்போட்டு  கிளப்பும்போது  காரில்  டிக்கியில் ஒரு டெட் பாடி இருக்கிறது 



 மேலே   சொன்ன மூன்று  சம்பவங்களையும்  எந்தப்புள்ளி இணைக்கிறது ?  கடைசியில் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை 



முதல் கதையின்  காதல் ஜோடிகளாக பார்த்தோஸ் - பூர்ணிமா ரவி  இருவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள் .நல்ல கெமிஸ்ட்ரி. பார்த்தோஸ் க்கு கிட்டததட்ட   வில்லன் ரோல் .நன்றாக நடித்திருக்கிறார் . பூர்ணிமா ரவி    காதல்  ததும்பும் புன்னகையிலு ம் சரி , கருவைக்கலைக்க முடியாது என அப்பாவிடம் கதறும்போதும் சரி அருமையான நடிப்பைவெளிப்படுத்தி இருக்கிறார் 



இரண்டாம்  கதையின்  ஜோடியாக  விவேக்  பிரசன்னா - சாந்தினி   தமிழரசன்  இருவரும்  கச்சிதமாக  நடித்து இருக்கிறார்கள் . குற்ற  உணர்வில்  கூனிக்குறுகும்போதும் சரி ,மனைவியிடம்   அன்பை வெளிப்படுத்தும்போதும் சரி  விவேக்  பிரசன்னா   பிரமாதமான  நடிப்பு .. குழந்தை  மீது  ஆர்வம்  கொண்டவராக  சாந்தினி   தமிழரசன்  அம்மாவின் ஏக்கத்தைப்பிரதிபலிக்கிறார் 


 மூன்றாம்  கதையில் காமெடியன்கள் ஆக ஈஸ்வரும்  இன்னொரு   நபரும்  நடித்திருக்கிறார்கள் . ஈஸ்வரின் நடிப்பு பரவாயில்லை ரகம் , ஆனால்  அவரது நண்பராக   வருபவர்   பெண் வேடம்  போட்டு  காமெடி  என்ற பெயரில் செய்வது எல்லாம் மரண மொக்கை 

 ராஜ் பிரதாப் இசையில் நான்கு பாடல்கள்   சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் .அஜித்  சீனிவாசனின்  ஒளிப்பதிவு   ஓகே ரகம்  இரு நாயகிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது  கேமரா . முகண்வேலின்    எடிட்டிங்கில்  படம்  112  நிமிடங்கள்  ஓடுகிறது .  மிக மெதுவாக  நகர்வது பலவீனம் 


கதை , திரைக்கதை   எழுதி   இயக்கி இருக்கிறார் தம்பி துரை  மாரியப்பன்

சபாஷ்  டைரக்டர்


1   லோ  பட்ஜெட்  படம் என்பதால்  குறைவான  நடிகர்கள் ,குறிப்பிட் ட  சில லொக்கேஷன்களில் படத்தை முடித்த விதம் 


2   படத்தில்   நடித்த  இரு நாயகிகளின்  அழகும், இளமையும், நடிப்பும் பிளஸ் 


3  மேலோ  டிராமாவாக   ஆரம்பித்து  க்ரைம் த்ரில்லர் ஆக முடித்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   உலகிலேயே  பெரிய கொடுமை  குழந்தை கொடுக்கத்தகுதி இல்லாதவன் ஆக ஒரு ஆண்  இருப்பதுதான் 


2  சம்சாரம்  கிட்டே   சொல்லும் ஒவ்வொரு பொய்யும் பலூன்ல  அடைக்கும் காற்று மாதிரி , ஒரு நாள் வெடித்து வெளியே வந்தே தீரும் 


3 பிக் பாக்கெட்  காரனை விட பிச்சைக்காரன் அதிகமா சம்பாதிக்கிறான் . எல்லாரும் கூகுள் பே   யூஸ் பண்ணினா பிக் பாக்கெட்  காரன்  கத என்ன ஆகும் ? 


4  வாழ்க்கைல  வலியே  இருக்கக்கூடாது  என கடவுளை  வேண்டுவாங்க .ஆனா பிள்ளை பெற்றுக்கொள்ளும் வலியைத்தா என நான் வேண்டுகிறேன் 


5  இந்த  உலகம்   எதை நோக்கிப்போய்க்கொண்டு இருக்கு தெரியுமா? பணம்  இருக்கறவன் கிட் டே  இருந்து  பணம்  பறிக்கும்  வேலை யில் 


6   உன்னை மாதிரி  நண்பன்  100 பேர்  வரலாம், ஆனா   பணம்   வருமா?


7   பணம்   தான் மிகப்பெரும் ஆயுதம்  


8 குழந்தை  வேண்டி   ஒரு கூட் டம்  , அம்மா , அப்பா  இல்லாத அனாதைக்குழந்தைகள்  ஒரு பக்கம் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   பெட்ரொல்  பங்க்  ஓனர்  வீட்டுக்கு  கலெக்சன்  பணம் தரப்போகும்போது  நாயகி ஒரு பேக் உடன்  செல்கிறார் .ஆனால் திரும்ப வரும்போது  அந்த பேக்கை  அங்கேயே  விட்டு வருகிறார் .கண்டினியுட்டி மிஸ்ஸிங்க் 


2   இவ்ளோ  பிரச்சனை நடந்த  பின்னும்  அதே பெட்ரொல்  பங்க்  ஓனர்   இடம் நாயகி வேலை பார்ப்பது எப்படி ? 


3 திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகியும் நாயகிக்கு தன கணவன்  மேல் தான் குறை என்பது தெரியாதா> ?பல   ஹாஸ் பிடல்ஸ் போயாச்சு . ரிபோர்ட்  தெரியாமயா  இருக்கும் ? 


4  பெட்ரொல்  பங்க்  ஓனர்    மீது   நாயகி போலீசில்  புகார் தராதது எதனால் ? 


5  க்ளைமாக்சில்   வில்லன்  செய்யும் ஓவர் ஆக்டிங்  சகிக்கவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட் டா  பார்க்கலாம் என்ற அளவில் தான் இருக்கு .சுமாரான படம் . விகடன் மார்க்  39 . ரேட்டிங் 2/ 5 



Trauma
Theatrical release poster
Directed byThambithurai Mariyappan
Written byThambithurai Mariyappan
Produced byS Uma Maheshwari
Starring
CinematographyAjith Srinivasan
Edited byMugan Vel
Music byRS Rajprathap
Production
company
Turm Production
Release date
  • 21 March 2025
CountryIndia
LanguageTamil

Friday, April 04, 2025

SWEET HEART-ஸ்வீட் ஹார்ட் (2025) -( தமிழ் ) - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி டிராமா )

 


யுவன் சங்கர் ராஜாவின் சொந்தப்படம் இது . அபார்ஷன்  ( கருக்கலைப்பு )   என்பது   தவறானது . பெண்களை  உடல் ரீதியாக  , மனோ ரீதியாக  பலவீனப்படுத்தும் என்ற  சமூக  நல கருத்தை  முன் வைத்த நல்ல  படம் .ஆனால் என்ன காரணத்தாலோ  கமர்ஷியலாக  வெற்றி பெற வில்லை . 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட் ட இப்படம்  1 கோடி  மட்டுமே  கலெக்சன்  செய்தது .14/3/2025   அன்று   திரை அரங்குகளில்   ரிலீஸ் ஆன இப்படம்  ஒரு வேளை  ஓடி டி   யில் ரிலீஸ் ஆகும்போது  வரவேற்பைப் பெறலாம்  . காதல் , கலாட் டா , காமெடி   என கமர்ஷியலாக  ஜாலியாகத்தான் திரைக்கதை   நகர்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  யின் அப்பாவும் , தாத்தாவும் ஆணாதிக்கம்  மிக்கவர்கள்  இருந்தாலும்  அம்மா, அப்பா  இருவரும் லவ் மேரேஜ் என்பதால்   நாயகிக்கு காதல் , கல்யாணம், குடும்பம் என்பதில் விருப்பம்  உண்டு 


  நாயகன்  சிறுவனாக இருந்தபோது   நாயகனின்  அம்மா வேறு  ஒரு நபருடன்  ஓடி விட் டார் .இதனால்  நாயகனுக்கு  குடும்பம் , குழந்தை , கமிட்மென்ட்  இவ்ற்றில் நம்பிக்கை இல்லை 


இப்படிப்பட் ட  எதிர்  எதிர்  குணங்கள்  கொண்ட   நாயகனும், நாயகியும்  காதலிக்கிறார்கள் . நாயகி திருமணத்துக்கு முன்பே  கர்ப்பமும் ஆகிறார் 


 நாயகியின் பெற்றோருக்கு  விஷயம்  தெரிந்து  காதலை  எதிர்க்கின்றனர் .


 இதற்குப்பின்   காதலர்கள்  சேர்ந்தார்களா?  கரு என்ன ஆனது ? என்பது மீதி திரைக்கதை 

நாயகன் ஆக   ரியோ  ராஜ்  நடித்திருக்கிறார் .இவரது  முகம் தாடி  வைத்து  சோகமாக  கஞ்சா கேஸ்  போல  இருந்தாலும்  நடிப்பு நன்றாக  இருக்கிறது .டயலாக்  டெலிவரியும் அருமை . பொதுவாக   தாடி  ஒரு மனிதனை சோம்பேறி ஆகக்காட்டும்  என்பது  என்  தனிப்பட் ட  கருத்து  . ஆனால்  கேரளாவில்  தாடி வைத்த  நபர்க ளைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் 


நாயகி ஆக   கோபிகா  ரமேஷ்  நடித்திருக்கிறார் .. களை யான முகம் . நடிப்பும்  பரவாயில்லை . ஆனால் இவரது தோழி ஆக  காமெடியனுக்கு  ஜோடி ஆக வரும் பவுசி  இவரை விடக்கலர் , அழகு , வனப்பு  அனைத்திலும்  சிறப்பு 



நாயகனின்  நண்பன் ஆக   காமெடியன் ஆக  அருணாச்சலேஸ்வரன்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .அவரது சுறு சுறுப்பு ,டைமிங்க் விட்  அவருக்குப்பெரிய பிளஸ் 


நாயகி யின்  அப்பாவாக ரஞ்சி பணிக்கர்  பிரமாதமாக   நடித்திருக்கிறார் ..நாயகனின் அம்மாவாக துளசி  கச்சிதமாக நடித்திருக்கிறார் 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில்  7 பாடல்கள் .ஆனால்  பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை . தனது   சொந்தப்படம்  என்றாலும்  கூட சிரத்தை  இல்லாமல்  இசை அமைத்து விட் டாரோ   என்ற  எண்ணம் எழுகிறது . பாலாஜி  சுபராமணியனின்  ஒளிப்பதிவில்   நாயகியின்  தோழியை அழகாககாட்டி உள்ளார் . தமிழரசனின்  எடிட்டிங்கில்  படம் 144 நிமிடங்கள்   ஓடுகிறது . நான் லீனியர்  கட்டில்   கதை  முன் பின் ஆக  நகர்வது   சுவராஸ்யம் 


 திரைக்கதை   அமைத்து  இயக்கி இருப்பவர் எஸ்   சுகுமார் 

சபாஷ்  டைரக்டர்


 1    நாயகனின்  நண்பன்   அந்த விஷயத்தில் எல் போர்டு என்பதும் , காதலியுடன்  அவர் செய்யும்  கோக்குமாக்கான ரகளையும் கலக்கல்  காமெடி 


2  இதோ  இன்னும்   10 நிமிடத்தில்   வந்துடறேன்   என  தனது காதலியிடம் நாயகனின்  நண்பன்    படம் முழுக்க   சொல்லிக்கொண்டே  இருப்பது   ரகளை 


3   அனாதை ஆசிரமத்தில்  குழந்தைகளுடன்  பிறந்த நாள்     கொண்டாடும்  நாயகன்  சொல்லும் வசனம் டச்சிங்


4  நான் லீனியர்  கட்டில்     திரைக்கதை   அமைத்தது   கூடுதல் சுவராஸ்யம் 


5    நாயகியின்  வீட்டுக்குள் எப்படி   நுழைவது என்ற கனவு ஐடியா செம காமெடி 


6  எதிர்  வீட்டு ஆண்ட்டி  பிரசவ  வலி யால் துடிப்பதும்   அவர்களால்   நாயகன்  மனம்   மாறுவதும்    கே   பாக்யராஜ் பாணி சென்ட்டிமெண்ட் சீன் 


7  நாயகனின்   தோழி ஆக   வரும் அந்த லேடி   டாக்டர்  நடிப்பு   ரொம்ப யதார்த்தம் 



  ரசித்த  வசனங்கள் 


1  பொண்ணுங்க   எப்போ , எப்படி   மாறுவாங்க  என்பதை   யாராலும்   யூகிக்க  முடியாது 


2   இது  நீ   பண்ணுன தப்புக்கு , இது நான்  பண்ணப் போற  தப்புக்கு 


3   நீங்க  பிறக்கும்போதே வாங்கின  வீடா இது ? ? ரொம்பப்பழசா இருக்கு ?


4  மனிதன்  கண்டுபிடித்ததில் பெரிய விஷயம் இந்த குடும்பம், கல்யாணம் என்ற செட் டப் தான் 


5    லவ்  மேட்டர் .....


 இதுல லவ் எங்கே  இருக்கு ? மேட்டர் ..  தான் இருக்கு 



6    செல்ப்   ரெஸ்பெக்ட்க்கும் ,ஈகோ  வுக்கும் சின்ன வித்தியாசம் தான் 


7  ஒரே  ஒரு சாரி   யாராவது  கேட்டிருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்காது . நாங்க பிரிஞ்சிருக்க மாட்டொம் 


8   நாங்க   எல்லாம் பிராக்டிக்கலா  யோசிச்சப்ப அவ மட்டும் குழந்தையை ஒரு உயிரா பார்த்திருக்கா 


9    இன்னைக்கு   வேண்டாம்  என தோணுவது    நாளை   வேணும் என தோணும் 


10    எனக்குப்பிடிச்ச மாதிரி ஒரு முடிவு எடுக்கக்கணும்னாக்கூட நான் உங்க கிட் டே தான் கேட்கணும் ? 


11   நான்   வாழ்க்கைல நிறைய   தப்புப்பண்ணி இருக்கேன் .இப்போ இவளை விட்டுட்டுப்போனா அதுதான்  நான் செய்த பெரிய தப்பு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  , நாயகி வீட்டுக்கு  திருட்டுத்தனமாக அனைவரும் வீட்டில் இருக்கும்போது   ஐந்து   முறை  வந்திருக்கிறார்   என்பது , அபார்ட்மென்ட்டில்  யாருமே    அவரை கவனிக்கவில்லை என்பது காதில் பூ  ரகம் 


2   நாயகிக்குப்பிறந்த நாள்  அன்று    ஷாக்   கொடுக்க  குடும்பத்தினர்   அனைவரும்  நாயகியின்   பெட் ரூமில் நுழைவது, நாயகி காதலனுடன்  மாட்டிக்கொள்வது    முக்கியமான சீன்  , ஆனால்   நாயகி பெட் ரூம் கதவை எதனால்  தாழ் போடவில்லை ? 


3   நாயகியின்  பிறந்த நாள்   அன்று தான்   சம்பவம்   நடக்கிறது .ஆனால் நாயகனுக்கு   தேதி தெரியவில்லை . நாயகனின் நண்பனுக்கு  நாயகியின்  பிறந்த நாள்   தெரிகிறது 


4  என்ன தான்  காமெடிக்கு  என்றாலும்    நாயகியின்    அப்பாவும்  இளமையில்  திருமணத்துக்கு   முன்பே  நாயகியின் அம்மாவை கர்ப்பம் ஆக்கினார் என்பது  கண்ணியமான காட் சி அல்ல 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+ 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியலாக செம ஹிட் ஆகி இருக்க வேண்டிய ரகளையான  காமெடிப்ப டம் . ரேட்டிங்க்   2.75 / 5 .விகடன் மார்க் 42 



Sweetheart!
Theatrical release poster
Directed bySwineeth S. Sukumar
Written bySwineeth S. Sukumar
Produced byYuvan Shankar Raja
Starring
CinematographyBalaji Subramanyam
Edited byTamil Arasan
Music byYuvan Shankar Raja
Production
company
YSR Films
Distributed byFive Star K. Senthil
Release date
  • 14 March 2025
Running time
144 minutes
CountryIndia
LanguageTamil
Budget5 crore
Box office1.2 crore[1]

Thursday, April 03, 2025

THE DOOR (2025) - தி டோர் (தமிழ் ) - - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் )




 நடிகை  பாவனா  நம்மள் (2002)   என்ற  மலையாளப்படத்தில் அறிமுகம் ஆனாலும் நாயகியாக நடித்த முதல் படம்   ஸ்வப்னக்கூடு (2003) .என்ற  மலையாளப்படம் .  தமிழில்  இவர் நடித்த முதல் படம் சித்திரம் பேசுதடி (2006) . தமிழில் இவர் நடித்த கடைசிப்படம்  அசல் (2010) 15  வருட இடைவெளிக்குப்பின்  ஒரு கம் பேக் படமாக இந்த ஹாரர் திரில்லர் கதையில் நடித்துள்ளார் .க்ரைம் திரில்லர்  பாணியில்  எடுக்கப்பட் ட இந்த ஹாரர் த்ரில்லர் எப்படி ?என்பதைப்பார்ப்போம் . இது 28/3/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி ஓடுகிறது 



ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம்  1 -  கணவனை இழந்து  விதவை ஆக இருக்கும் ஒரு பெண்  தனது 16 வயது  மகளுடன்  தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் .அவரது பெயரில்  கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் இருக்கிறது .அந்த நிலத்தை ஆட்டையைப்போட வில்லன்கள் குழு  மூவர் அவரை சுற்றி வருகின்றனர் .ஆனால்  அந்தப்பெண்  நிலத்தை விற்கத்தயார் இல்லை 


சம்பவம் 2 - அந்தப்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகுகிறார்  ஒரு ஆள் .அந்தப்பெண்  அவரை நம்புகிறாள் .ஒரு கட்டத்தில் தான் அவளுக்குத் தெரியவருகிறது .அந்த ஆள்  வில்லன்கள்  க்ரூப்பின்  கையாள் .வில்லன்கள்  க்ரூப்  அந்தப்பெண்ணைக்கொலை  செய்து விடுகிறது .கொலை செய்த  இருவரும்  சாலை விபத்தில்  இறக்கிறார்கள் .அந்த விபத்தை நேரில் பார்த்த மூன்றாவது ஆள்  அதிர்ச்சியில்  மாரடைப்பில்  மரணம் அடைகிறார் .இப்போது  மிச்சம் இருப்பது  அந்தப்பெண்ணின் ஆசைக்காதலன் , மோசடிப்பேர்வழி  மட்டும் தான் 


 சம்பவம் 3  - நாயகி  ஒரு ஆர்க்கிடெக் ( கட்டிடக்கலை நிபுணர் ) நாயகியின் அப்பா ஒரு வக்கீல் .இவர்  ஒரு சாலை விபத்தில் இறக்கிறார் . அந்த சமயம்  நாயகி  கட்டிட  வேலை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த  வேலை பாதியில்   நிற்கிறது .மூன்று  மாதங்கள் கழித்து மீண்டும் வேலை ஆரம்பிக்கும்போது தொடர்ந்து  கொலை , தற்கொலை  விபத்து என  4 துர்மரணங்கள் நிகழ்கின்றன .நாயகிக்கு  இப்போது  சந்தேகம் வருகிறது .இந்த பில்டிங்கில் என்ன மர்மம் ?எதனால்   தொடர்ந்து  மரணங்கள்  நிகழ்கின்றன? 



சம்பவம் 4  - நாயகி   தங்கி இருக்கும் வீட்டில்  சில அமானுஷ்ய சம்பவங்கள்  நிகழ்கின்றன. நாயகி  ஒரு போலீஸ்  ஆபீசர்  உதவியை நாடுகிறார் . பேரா நார்மல்  ஆக்ட்டிவிட்டி நிபுணர் ஒருவர் நாயகிக்கு உதவியாக வருகிறார் 


 பிளாஷ்பேக்கில்  நிகழநத  சம்பவம் 1 ,2  ஆகியவற்றுக்கும்  20 வருடங்கள் கழித்து  இப்போது நடக்கும்   சம்பவம்  3, 4 ஆகியவற்றுக்கும்  என்ன சம்பந்தம் என்பது மீதி திரைக்கதை  


நாயகி ஆக   பாவனா  யதார்த்தமாக நடித்துள்ளார் . 15 வருடங்கள்  கேப்  விழுந்திருந்தாலும் அவர் முகத்தில் , உடலில் அதே இளமை . பயப்படும்  காட் சிகளில்  இன்னமும்  கவனம் தேவை .தமிழ் சினிமாவில் 

  பேய்ப்படங்களில் , திகில்  காட் சிகளில்  முகத்தில் பய உணர்வுகளை பிரமாதமாக வெளிக்கொணர்ந்தவர்கள் யார் ? , நூறாவது நாள் நளினி ,  ராமராஜன் இயக்கிய ஹலோ யார் பேசறது ?படத்தில் ஜீவிதா 



நாயகிக்கு உதவியாக வரும் போலீஸ்   ஆபீசர்  ஆக  கணேஷ் வெங்கட்  ராம் நடித்துள்ளார் .போலீஸ்   ஆபீசர்  ஆக   வரும் இவர்  எப்படி   தாடியுடன் , போலீஸ்  கட்டிங்க்  இல்லாத   ஹேர் ஸ்டை லில்  வருகிறார் என்பது தெரியவில்லை .இவரது  சிரிப்பும்,தத்துவ வசனங்களும் செயற்கை 


நாயகியின்  ரூம்  மேட் ஆக  வரும்  தோழி கேரக்ட்டரில்  சிந்தூரி  சிடு சிடு  முகமாக  ஆரம்பக்காட் சிகளில்  வருவது  எதற்கு  என்பது தெரியவில்லை 


இவர்கள் போக  ரமேஷ் ஆறுமுகம் , ஜெயப் பிரகாஷ் , ஸ்ரீ  ரஞ்சனி  உட்பட  பலரும்  கொடுத்த வேலையை  சரியாக செய்து இருக்கிறார்கள் 


ஜி  கவ்தமின் ஒளிப்பதிவில்  பாவனாவின் க்ளோசப் காட் சிகள் ,கொடைக்கானலில் இயற்கை   அழகுகள் அருமை .திகில்  படங்களில்  முக்கியம் அம்சமே  பின்னணி  இசை தான் . ஆனால்   இசை அமைப்பாளர்  வருண் உன்னி  அதில் கோட் டை விட்டு விட் டார்  . வெகு சுமாரான பிஜிஎம் . அதுல்   விஜயின்  எடிட்டிங்கில்  படம் 132   நிமிடங்கள்   ஓடுகிறது . பிளாஷ்பேக்  ரொம்ப நீளம் .இன்னமும்    ட்ரிம்   செய்து இருக்கலாம் .   சவுண்ட்   டிசைனிங்க்  இன்னமும்  துல்லியமாக அமைத்திருக்கலாம் 


கதை , திரைக்கதை  எழுதி இயக்கி இருக்கிறார்  ஜெயதேவ்  40 வருடங்களுக்கு  முன்   மலையாள கில்மாப்படங்களை இயக்கியவர் பெயரை டைட்டிலில்    ஜெய்  தேவ்     என பிரித்துப்போடுவார்கள் .அவரா?என்பது தெரியவில்லை 


சபாஷ்  டைரக்டர்

1 நாயகியும் , அவரது தோழியும்  தங்கி இருக்கும் வீட்டில்  நிகழும்  அமானுஷ்ய சம்பவங்கள்  நல்ல திகில் 


2   எடுத்துக்கொண்ட கதை ஹாரர் த்ரில்லர்   என்றாலும்   அமைத்த திரைக்கதை   க்ரைம் த்ரில்லர்   என்பதால் கூடுதல் சுவராஸ்யம் 


3  பாவனாவின் அழகும், நடிப்பும் 


  ரசித்த  வசனங்கள் 


1   நான்கு சுவருக்குள்  அடைந்து கிடக்காம மீண்டு வந்ததுக்கும் மீண்டும்  வந்ததுக்கும்   வாழ்த்துகள் 


2  அவங்கவங்க பாதுகாப்பு அவங்கவங்க கைகளில், குறிப்பாகப்பெண்கள் 


3    எல்லார்  வாழ்க்கைலயும்  நல்லதும் இருக்கும் ,கெட்டதும் இருக்கும், பாசிட்டிவை மட்டும் எடுத்துக்குவோம் 


4  இந்த உலகில் நம்மை விட அபாயகரமான சக்திகள் இருக்கின்றன 


 மனிதர்கள்   தான் இருப்பதில் அதிக அபாயம் 


5   ரொம்ப டயர்டில் தூங்கினா கெட்ட கனா வரும் 


6  நம்ம  கண்களுக்குத்  தெரி யாத  நிறைய   விஷயங்கள்   இந்த   உலகில் இருக்கின்றன 

 


7   ஒரு   வக்கீல்  ஒரு  பத்திரத்தில்    சாட் சிக்கையெழு த்து  போட்டிருந்தா  அதில் எதோ  வில்லங்கம்  இருக்கு என அர்த்தம் 


 8    சில நேரங்களில்  கதையை  விட நிஜம்  சுவராஸ்யமான இருக்கும் 


9   மனிதனின் தீராத வியாதி பேராசை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பட  டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை 


2   நாயகியும் , தோழியும்  ஒரே  வீட்டில் தங்குகிறார்கள் . இருவரும்  பெண்கள் . தனித்தனி  அறைகளில்  எதனால்  தங்கணும் ? திகில் , பேய்  பிரச்சனைகள் வந்த பின்னாவது ஒரே அறையில் தங்கி இருக்கலாம் 


3   வில்லனின்  அடியாளுக்கு  கோடீஸ்வரியைக்காதலிக்கும் வாய்ப்புக்கிடைக்குது .அவளைக்கல்யாணம்  பண்ணிக்கொண்டால்   அவன் கோடீஸ்வரன் . அதை செய்யாமல்   வில்லன் க்ரூ ப்புக்கு உதவி செய்து  சில லட் சங்களை சம்பளமாக வாங்குவார்களா? யாராவது ? 


4  படம்  போட்டு  97 வது   நிமிடத்தில்  வரும் பிஜிஎம்  பாடும் வானம்பாடி  படத்தில் வரும் அன்பே, அன்பே ,  அன்பே  பாடும் பாடல்  எங்கே  பாடலின்  தீம்  இசை 


5   வில்லன்  நாயகியிடம்   எல்லா உண்மைகளையும் எதனால் சொல்லணும் ?  அவன்  பாட்டுக்கு எனக்குத்தெரியாது என எஸ்கேப்  ஆகி இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு மணி நேரத்தில்   முடிக்க வேண்டிய கதையை  இரண்டு மணி நேரம் இழுத்திருக்கிறார்கள் . மற்றபடி  நல்ல க்ரைம் த்ரில்லர் தான் . விகடன் மார்க் யூகம் 39 . ரேட்டிங்   2 / 5