Wednesday, April 02, 2025

எல் 2 - லூசிபர் 2 - எம்புரான் (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர் )


 லூசிபர் (2019)  படத்தின்  இரண்டாம் பாகம் தான் இது என்றாலும்   இது தனிக்கதை . அந்தப்படம்  ;பார்க்காதவர்களுக்கும் இது புரியும் . 180 கோடி ரூபாய்  பட்ஜெட்டில் உருவான  இந்தப்படம்  ரிலீஸ் ஆன முதல்  4 நாட்களில்  200 கோடி  வசூலைக்குவித்து விட்ட்து .இது மோகன் லாலின் சொந்தப்படம் .பிருத்விராஜ்  தான் இயக்கம் . மோகன் லால்  இந்தப்படத்துக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை  என் பிருத்விராஜ்  பேட்டி கொடுத்தது  செம காமெடி . 


 முதல் பாகமான லூசிபர் (2019)  கேரளாவில்  கொண்டாடப்பட் டாலும்  தமிழில்  பெரிய அளவில் பேசப்படவில்லை . காரணம்   இது போல  பல கதைகளை நாம் பார்த்து விட்டோம் . பிரம்மாண்டம்  இருக்கு , டெக்னிக்கலாக  நன்றாக  இருக்கிறது என்றாலும்  திரைக்கதை  அமைப்பில்  சராசரி  படம் தான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

லூசிபர்  படத்தின் கதை என்ன? மாநில முதல்வருக்கு  ஒரு மகன்  , ஒரு மகள் .வாரிசுகள்  இருவரை விட  முதல்வர் நாயகன் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார் . முதல்வரின்  மாப்பிள்ளை  அதாவது மகளின்  கணவன்  போதைப்பொருள்  கடத்துபவன் .மாநிலத்தை சீரழிக்கிறான் .முதல்வர்  உடல் நலம் இல்லாமல்  ஹாஸ்பிடலில்  இருக்கும்போது  இவை எல்லாம் நடக்கின்றன . ஒரு கட்டத்தில்   முதல்வர்  இறக்கிறார் . நாயகன்  முதல்வரின்  மருமகனிடம் இருந்து  மாநிலத்தைக்காப்பாற்ற  முதல்வரின் மகனை  முதல்வர் பதவியில் அமர்த்துகிறார் . முதல்வரின் மாப்பிள்ளையை  நாயகன் கொலை செய்து  விட்டு  வெளிநாடு போய் விடுகிறார் 



எம்புரான் (லூசிபர்   பாகம் 2)  படத்தின்   கதை - 5  வருடங்கள்  மட் டமான , மோசமான ஆட்சியை  நடத்திய  முதல்வரின் மகனான வில்லன்    திடீர் என  ஒரு டிராமா போடுகிறான் .இத்தனை  வருடங்களாக  கட் சிக்கார்களின் பிடியில் மோசமான ஆட் சி நடந்தது . இனி  நான்  மக்களுக்காக  ஏதாவது நல்லது செய்யவேண்டும் .அதனால்  இந்தக்கட் சியில் இருந்து விலகி தனிக்கட் சி  ஆரம்பிக்கிறேன்  என கதை  விடுகிறான் . 


 முதல்வரின் மகள்  கட் சிப்பொறுப்பை  ஏற்க   முன் வருகிறாள் . இது  அவளது அண்ணனுக்கு , அதாவது  வில்லனான முதல்வருக்குப்பிடிக்கவில்லை . அவளைக்கொலை செய்ய திடடம் தீட்டுகிறான் . நாயகன்  வெளிநாட்டில் இருந்து  இங்கே வந்து  முதல்வரின் மகளைக் காப்பாற்றி  முதல்வர்  பொறுப்பில் அமர வைப்பதுதான் மீதிக்கதை  


வில்லன் ஆக  டொவினோ தாமஸ் . செம கெத்தான தோற்றம் . வஞ்சகமான  நடிப்பு .  வில்லனின்   தங்கை ஆக  மஞ்சு வாரியார்  இ வரும்  கம்பீரமாக  வருகிறார் . ஆனால்  உடல் , முகம் எல்லாம் வாடிப்போய் பரிதாபகமாக  இருக்கிறார் , பாவம் 


 நாயகன் ஆக  மோகன் லால் , படம் போட்டு  ஒரு மணி நேரம்  கழித்து    வருகிறார் .இவர் ஸ்லோமோஷனில்  வருவதை  ட்ரிம்  செய்தால்  மொத்தப்படத்தில்  20   நிமிடங்கள் தான்  இவர் வரும் சீன்கள் இருக்கும் . ஓவர் பில்டப் 


பிருத்விராஜ்  நாயகனுக்கு  உதவி  புரிபவர் ஆக   வருகிறார் . மிலிட் டரி மேன்  போல  இருக்கிறார் . முதல் பாகத்தை விட  இந்த பாகத்தில்   இவருக்கு காட் சிகள் அதிகம் 


மூன்றாம்   பாகத்துக்கான  லீடு போர்சனில்  புது வில்லன் ஆக அபிமன்யுவு சிங்க் மிரட்டி இருக்கிறார் .இவர்கள் போக  சுராஜ்   வெஞ்சார மூடு , சுகந்த கோயல் , கிஷோர் , ஜெரோம் பிளின் ,எரிக் எபோனி  ஆகியோர்   அவரவர்க்குக்கொடுத்த  கதாப்  பாத்திரத்தை கச்சிதமாக நடி த்து உள்ளனர் 


தீபக்  தேவ் இசையில் 5 பாடல்கள்  பரவாயில்லை ரகம் .பின்னணி  நன்றாக  இருக்கிறது சுஜித்   வாசுதேவின் ஒளிப்பதிவில்   காட் சிகள்  பிரம்மாண்டம் .ஹாலிவுட்   தரத்தில்  இருக்கிறது அகிலேஷ்  மோகனின் எடிட்டிங்கில் படம் 3 மணி நேரம் ஓடுகிறது .2 மணி நேரமாகக்குறைத்திருக்கலாம் . முரளி  கோபி  கதை  திரைக்கதை  எழுத  பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


 1   ஒரு சாதாக்கதையை  ஓவர் பில்டப்  பிரமோக்கள்  மூலம்  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விதம் 


2  மெயின் கதைக்கு  சம்பந்தம் இல்லாமல் முல்லை பெரியாறு  பிரச்சனை ,குஜராத் கலவரம்  என உள்ளே  கொண்டு வந்தது 


3  முதாழ் பாதி  படம் முழுக்க  ஆங்கிலம், ஹிந்தி  என மாறி மாறி  ஒலிக்க விட்டு  இதை  பாண் இந்தியா  படமாக செயற்கையாகக்காட் டியது 


4    வருவாரா ?  மாட் டாரா?  என்ற  சந்தே கம்    எழும்போது   மஞ்சு   வாரியார்  கட் சி யூணிபார்ம்  சேலை அணிந்து     வரும் மாஸ் சீன் 

  ரசித்த  வசனங்கள் 


1  சொல்லவேண்டிய  விஷயத்தை ,சொல்லவேண்டிய இடத்துல  ,சொல்லவேண்டிய நபர்ட் ட   சொல்லி விடணும் குறிப்பாக பெண்கள் ..... 


2   யாரும்  மதத்தில் ஆதாயம் பார்ப்பதில்லை , முடிந்த வரை   மக்களை மோத விட்டு ஆதாயம் பார்க்கிறார்கள் 


3  அடிக்கடி  இந்த மக்கள் ஒரு பெரிய நிகழ்வுக்குப்பின்  சொல்வது செஞ்சிருக்கலாம் , செஞ்சிருக்கணும் 


4  யாருக்கு  எதிரா  குரல் எழுப்புகிறீர்களோ அவங்க கைல நீங்களே  ஒரு ஆயுதம் ஆகிடுவீங்க 


5   தெய்வ புத்திரனே  தவறு செய்யும்போது  சாத்தான் கிட் டே  உதவி கேட்பதைத்தவிர   வேறு வழி இல்லை 


6   நீ   என் இடத்துக்கு  வந்திருக்கே  , ஒண்ணு   நீ   அடி முட் டாளா இருக்கணும்  அல்லது  தைரியசாலியா இருக்கணும் 


7  பதில்   இல்லாதவனுக்கும்    பதில்   தெரியாதவனுக்கும்   இடையே   நடக்கும் சந்திப்புகள் தான் இங்கே அதிகம் 


8   கைகளுக்கு வேணா   விலங்கு  போடலாம் , ஆனா சிந்தனைகளு க்கு இல்லை 


9  ஒரு சக்தி  வாய்ந்த தலைவரால் தொண்டர்கள் மனதில் ஒரு அதிர்வு அலையை உருவாக்க முடியும் 


10 அண்ணா   அண்ணா என  கூடவே   சுத்திட்டு  கடைசில ஆப்பு   வெச்சுட மாட்டியே? 


11  மேடைகளை   விட பார்வையாளர்கள்   முக்கியம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   படம் போட்டு  முதல் 27 நிமிடங்கள்  ஒரே  கலவரம் , கொலை ,கற்பழிப்பு தான் .கொடூரமான  மனம் உள்ளவர்கள் மட்டுமே  பார்க்க முடியும் .பெண்கள் , குடும்பப்பாங்கான ஆண்கள்  பார்க்கவே   முடியாது 


2 புதுமையான  திருப்பங்கள் ,சுவராஸ்யமான காட் சிகள்  எதுவும் இல்லை . எல்லாம் அரைத்த மாவுதான் , புளித்த கதை தான் 


3  நாயகனின்  டெட் பாடி கிடைக்காமலேயே   அவர் இறந்து விட்டதாக  வரும் செய்தியை எல்லோரும் நம்புவது 


4  வில்லன்  தன்  தங்கையைக்கொலை செய்ய வேண்டும் எனில்  கமுக்கமாக வீட்டிலேயே  சுலபமாக  செய்திருக்கலாம், விபத்து போல   செட்டப்   செய்திருக்கலாம் . மக்கள்   முன்னா  செய்வார்கள் ?

5   மஞ்சு வாரியரை  180  நப்ர்கள்     சூழ்ந்து  கொண்ட போது   நாயகனின்  ஆட்கள்  கன்  பாயிண்ட்டில் மடக்குகிறார்கள் . நாயகன்  துப்பாக்கி  வைத்துள்ள   தன்  ஆட்களை   விலக்கி விட்டு   தனி ஆளாக  180 பே ரையும்   அடித்து வீழ்த்துகிறார் . கொடுமை 

6  வாரிசு அரசியலுக்கு  ஜால்ரா  அடிக்கும் வசனங்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-ஸ்ட்ரிக்ட்லி  18+ .குடும்பத்துடன்  பார்க்க முடியாத  கொடூரமான  வன்முறைக்காட் சிகள் உண்டு 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெரிய  பெரிய  ரைட்டர்கள் , மெத்தப்படித்தவர்கள்  இந்தப் படத்தை  ஆஹா  , ஓஹோ  அபாரம்  பரிமளா  ரேஞ்ச்சுக்கு  பிரமோட்  செய்வதைக்கண்டு யாரும் ஏமாற  வேண்டாம் ..இந்தியன் பாகம்   2  போல   தங்கலான் போல இதுவும் ஒரு டப்பாப்படமே . ரேட்டிங்   2/ 5 


L2: எம்புரான்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்பிரித்விராஜ் சுகுமாரன்
எழுதியவர்முரளி கோபி
அடிப்படையில்முரளி கோபியின் லூசிஃபர் முத்தொகுப்பு
தயாரித்தவர்
நடிப்புமோகன்லால்
ஒளிப்பதிவுசுஜித் வாசுதேவ்
திருத்தியவர்அகிலேஷ் மோகன்
இசையமைத்தவர்தீபக் தேவ்
தயாரிப்பு
நிறுவனம்
விநியோகித்தவர்கீழே காண்க
வெளியீட்டு தேதி
  • 27 மார்ச் 2025
இயக்க நேரம்
180 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
பட்ஜெட்மதிப்பிடப்பட்ட  180 கோடிகள் [ 2 ]
வசூல்₹200 கோடிகள் (4 நாட்கள்) [ 3 ]

Tuesday, April 01, 2025

வீர தீர சூரன் (2025) -(தமிழ் ) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )


நாளைய  இயக்குனர்  என்ற  ஒரு உருப்படியான நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில்  நடைபெற்றபோது  அதில் இயக்கிய குறும்படத்தை  விஜய்சேதுபதியை  வைத்து  பண்ணையாரும்  பதமினியும் (2014) என்று  தன முதல் படத்தை இயக்கினார் அறிமுக இயக்குனர்  அருண் குமார் .திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றாலும் , விமர்சகர்கள் பாராட்டைப்பெற்றாலும் கமர்ஷியலாக அது வெற்றி பெறவில்லை . சேதுபதி (2016)ஹிட் . சிந்துபாத் (2019) தோல்வி .தொடர்ந்து  3 படங்களை  விஜய்சேதுபதியை ஹீரோவாக வைத்தே  இயக்கியவர் சித்தார்த்தை  வைத்து சித்தா (2023) என ஒரு வெற்றிப்படம்  கொடுத்தார் . இப்போது  சீயான் விக்ரமை  வைத்து  தூள்  பட பாணியில்  கைதி  திரைக்கதை  அமைப்பில்  ஒரு   கமர்ஷியல் ஹிட்படம்  கொடுத்துள்ளார் .



 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  மனைவி , இரு குழந்தைகளுடன்  மளிகைக்கடை நடத்தி  மாணிக்கம் ஆக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . ஒரு கால கட்டத்தில்  மாணிக்  பாட்ஷா  ஆக   வாழ்ந்தவர் தான் ,இப்போது எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக   இருக்கிறார் 



வில்லன்  ஆக  பெரியவர் , அவரது மகன் என இருவர் . அந்த ஊரில்  பெரிய தாதாக்கள் ஒரு நாள்   ஒரு சிக்கலில் மாட்டுகிறார்கள் . அதை தனக்கு சாதகமாகப்பபயன்படுத்தி  என்கவுண்ட்டரில்  அவர்களைப்போட்டுத்தள்ள  முடிவெடுக்கிறார்  ஒரு போலீஸ் ஆபீசர்.இந்த   விஷயம்  வில்லன் ஆன 

 பெரியவருக்குத் தெரிய வர  அவர்  தன்  மகனுடன்  நாயகனைப்பார்க்கப்போகிறார் 


 ஒரு கால கட்டத்தில்   நாயகன்  பெரியவரிடம் இணக்கமாக இருந்தவர் தான் . வில்லன் நாயகனிடம் போலீஸ் ஆபீசரின் என்கவுண்ட்டரில் இருந்து  தங்கள்  இருவரையும் காப்பாற்றும்படிக் கேட்டுக்கொள்கிறார் .ஆரம்பத்தில் மறுத்த நாயகன் பிறகு ஒத்துக்கொள்கிறார் 



நாயகன்  அந்த போலீஸ் ஆபீசரைப் போட்டுத்தள்ளப்போட் ட பிளான்  ஒர்க் அவுட்  ஆகவில்லை .இதனால் கடுப்பான வில்லனின் மகன் நாயகனின்  குடும்பத்தை  கார்னர்  செய்கிறார் . இப்போது    நாயகன் வேறு வழி இல்லாமல் தன குடும்பத்தைக்காப்பாற்ற போலீஸ் ஆபீசர் உதவியை நாடுகிறான் .அந்த போலீஸ் ஆபீசர்  வில்லன்களைப்பிடிக்க  நாயகனிடம் உதவி கேட்கிறார் 


 நாயகன்   எடுத்த   முடிவு என்ன?  என்கவுண்ட்டர்  நடந்ததா?  நாயகனின் குடும்பம் காப்பாற்றப்பட்டதா? இவற்றை  எல்லாம்  பரபரப்பாக  விறுவிறுப்பாக   சொல்வதுதான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக   சீயான்   விக்ரம் . நீண்ட  இடைவெளிக்குப்பின் ஒரு கமர்ஷியல்  ஹிட் கொடுத்திருக்கிறார் . அவரது  பாடி பிட்னஸ்  அபாரம் .கமலுக்குப்பின்  தன் உடலை  வருத்தி  நடிக்கும்  ஒரு நல்ல கலைஞர்  வெற்றியை சுவைத்திருப்பது மகிழ்ச்சி   


நாயகி ஆக துஷாரா  விஜயன்  கச்சிதமாக   நடித்துள்ளார் .  காதல் காட் சிகளில்  செம   ரொமாண்டிக்  ஆக நடித்திருந்தாலும் ஒரு  சீனில் பெஞ்சில்    புரண்டு    கீழே  விழும்  சீனில்   ரிஸ்க்  எடுத்து   டூப்  போடாமல் நடித்திருக்கிறார் 


 போலீஸ் ஆபீசர் ஆக    நடிப்பு  அரக்கன் எஸ் ஜே  சூர்யா  அனாயசமாக நடித்து இருக்கிறார் . வழக்கமாக  அவர்  கையாளும்   ஓவர் ஆக்டிங்க்  உத்தி   இதில் இல்லை .நல்ல நடிப்பு . நக்கல் , நையாண்டி , வில்லத்தனம் எல்லாம் பக்கா 


  வில்லன் ஆக  பெரியவர்  ரோலில் பிருத்வி   அருமையான  நடிப்பு . அவரது மகனாக சுராஜ் வெஞ்சாரமூடு  தமிழில் நடிக்கும் முதல் படம் இது .. முக்கியப்பாத்திரங்கள்  போக  மீதி நடித்த துணை நடிகர்கள் அனைவர் நடிப்பும்  கச்சிதம் 

டெக்னிக்கல்  டீமில்  முதல் மார்க்  ஒளிப்பதிவாளர் தேனி  ஈஸ்வருக்குத்தான் . முழுப்படமும்  ஒரே நாள்  இரவில் நடக்கும் கதை என்பதால் சவாலான வேலை தான் . அது  போக  க்ளைமாக்சில்  16 நிமிட  சிங்கிள்  ஷாட்  சீனில்  அசத்தி இருக்கிறார் . அடுத்து ஜி வி பிரகாஷ் குமார் தான் இசை .5 பாடல்களில் 3 பரவாயில்லை ரகம் . பின்னணி இசையில்  பிரித்து    மேய்ந்திருக்கிறார் . குறிப்பாக  நாயகனுக்கு ஆக்சன் சீக்வன்சில் போடப்பட் ட  பிஜிஎம்  அபாரம் ,தியேட்டர்  தெறிக்கிறது 



 ஜி கே  பிரசன்னா வின்  எடிட்டிங்கில் படம் 170  நிமிடங்கள்  ஓடுகிறது .பிளாஷ் பேக் சீனின் நீளத்தை ட்ரிம் பண்ணி இருக்கலாம் 

 திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர்  அருண் குமார் 


சபாஷ்  டைரக்டர்


1  படம் போட்டு  முதல் இருபது நிமிடங்கள்  கழித்துத்தான் ஹீரோ என்ட்ரி . முக்கியமான  கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி  விட்டு  ஹீரோ  வரும் சீனில்  டைட்டில்  போடுவது  நல்ல   உத்தி 


2  ஹீரோ , ஹீரோயின்  ரொமாண்டிக்  போர்சன்   அருமை . இருவரும் காட்டும் அன்னியோன்யம் செம 


3    போலீஸ் ஆபீசர்  எஸ் ஜே  சூர்யா  என்கவுண்ட்டர்  பிளானை  எக்சிக்யூட்  செய்யும் முன்  விவரிக்கும்  சீன் கலக்கல் ரகம் 


4   நாயகன்  கண்ணி  வெடி  செட்   செய்யும்  சீன்  பதைபதைப்பான சீன்  


5  க்ளைமாக்சில்  முக்கியமான  ட்விஸ்ட்டை  நாயகன்  நாயகியிடம்   ஓப்பன் செய்யும்போது  பாத்ரூமில் ஒரு ஆள் ஒட்டுக்கேட்பதும் , அதைத்தொடர்ந்து  நாயகன்  எடுக்கும் முயற்சிகளும் , முன்னெடுப்புகளும் அருமை 


6   தூள்  படத்தில்   வரும் ஏ சிங்கம் போல  நடந்து  வர்றான்  பாட் டை   யூஸ்   செய்த  இடம் செம . அப்ளாஸ்  தெறிக்கிறது 


7  ஹீரோ  விக்ரம்  போலீஸ் ஸ்டேஷனில்  எஸ்  ஜே  சூர்யா  முன் சரண்டர் ஆக  வரும் சீன்  செமயான ரகளையான சீன் . போலீஸ்  ஸ்டேஷனிலேயே அவர்  செய்யும்  சம்பவம்  கூஸ்பம்ப் கிளப்பும்  மாஸ்  மசாலா ஆக்சன் ஸீக்வன்ஸ் அது .அந்த சீனில்  விக்ரமின்  தெனாவெட் டான  பாடி லேங்க்வே ஜும் , எஸ்  ஜே  சூர்யா    ரீ  ஆக்சனும்  அட் டகாசம்  என்றால்  பிஜிஎம்  தேறி மாஸ் , தியேட் டரில்  கை  தட் டல்  அடங்கவே  2 நிமிடங்கள் ஆனது 


8  பெரியவரின்  கடைசிப் பெண்  ஆக வருபவரின்  வில்லித்தன  நடிப்பு மிரட் டல் ரகம்


  ரசித்த  வசனங்கள் 


1   கத்தி  இன்னும்  கழுத்துக்கிட் டே  வரலை , வர்றப்ப பார்த்துக்கலாம் 


2   உயிருக்கு முன்னாடி மானம்  எல்லாம் ..... 


3  உன் மூச்சுக்காத்தை  வெச்சே  நீ உண்மை பேசுறியா? பொய் பேசுறியா?   என்பதை சொல்லிடுவேன் 


4   எவனா   இருந்தாலும்   அவன் கிட்டே  உன் குடும்பத்தைத்தூக்கிடுவேன்னு சொல்லக்கூடாது .தூக்கிட் டே ன்னு சொல்லணும் 



5   அவன்   எங்கே ?


 தெரிஞ்சா சொல்றேன் 


 தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லு 


6   எல்லாத்தையும் மறந்துட்டேன் , குடும்பத்துக்கு ஒண்ணுன்னா  எல்லாத்தையும்  ரீ கால்  பண்ண வேண்டி வரும் 


7    என்  கிட்டே   அடி  வாங்குனவன்    சாக மாட் டான் .ஏன்னா  என்கவுண்ட்டர்  டெத் ல  ஆள்  உடம்பில் அடிபட்டிருக்கக்கூடாது , இப்போ   சொல்லு , அடி    வேணுமா? சாவு வேணுமா? 


  சார் சார்  என்னை  எவ்ளோ வேணாலும் அடிங்க சார் 


8  அவரு மாட்றதா  இருந்தா தானா மாட்டிக்கிடட்டும்  நான் உதவி செஞ்சு  மாட் டினதா இருக்க வேண்டாம் 


9  காதுக்கும் நெத்திப் பொட்டுக்கும் ரெண்டு இன்ச் தான் தூரம்'


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   படம்  செம ஸ்பீடாகப்போய்க்கொண்டு இருக்கும்போது  பிளாஸ்பேக்கை  ஓப்பன்  செய்து  அந்த டெம்ப்போவையே  குறைத்து விட்டார்கள் . படத்தின்  ஓப்பனிங்கிலேயே பிளாஸ்பேக்கை   வைத்திருக்கலாம் 


2   போலீஸ்  ஆபீசர் ஆன  எஸ்  ஜே  சூர்யாவை  வில்லன்கள்  இருவரும் ஒரு கான்ஸடபிள்  ரேஞ்ச்சுக்குத்தான் மதிக்கிறார்கள் .


3   நாயகனுக்கும்  , வில்லன் ஆன பெரியவருக்கும்  ஒரு புரிதல் இருக்கு , ஆனால்  பெரியவரின் மகனுடன் புரிதல் இல்லை . இதை  பிளாஸ்பேக்கில்   நன்கு  விளக்கி  இருக்க வேண்டும் 


4   தூள்  படத்தில்  ஒரு கொண்டாட்ட மன நிலையில்  அனைவரும் இருக்கும்போது  அந்த பாட்டு  இடம் பெற்றது . ஆனால்  இதில்  நாயகன் படுகாயம் அடைந்து  இருக்கும்போது  வருது . என்னதான்  தியேட்டரில்  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  இருந்தாலும்  அது சரியாக செட் ஆகவில்லை 


5 படத்தில்  வரும் முக்கியமான கேரக்டர்கள்  நாயகன்  , போலீஸ் ஆபீசர் ,  வில்லன் , வில்லனின் மகன்  என  நான்கு பேருமே  கெட் டவர்கள்  தான்  என்பதால்  இவர் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம்  ஆடியன்ஸுக்கு எழவில்லை , அது ஒரு மைனஸ் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கெட் ட ப்   சேஞ்ச்  எல்லாம் செய்யாமல்  ஒரு கமர்ஷியல்  ஹிட் படம் கொடுத்திருக்கும் விக்ரமு க்காகப்பார்க்கலாம் , விகடன்  மார்க்  மே  பி  43  . ரேட்டிங்  3 /. 5 


thanx - ANICHAM  APRIL ISSUE

வீர தீர சூரன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எசு. யு. அருண்குமார்
தயாரிப்புரியா சுபு
கதைஎசு. யு. அருண்குமார்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
விநியோகம்கே. செந்தில்
வெளியீடு27 மார்ச்சு 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, March 27, 2025

ROBBER (2025) -( ராபர் - தமிழ் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் )

 

அஜித் குமார் நடித்த விவேகம் படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன  மெட்ரோ  படத்தின்  திரைக்கதை ஆசிரியர் + மெட்ரோ  நாயகன்  காம்ப்போ  வில் வந்திருக்கும்  படம் என்பதாலோ  என்னவோ  மெட்ரோ  படத்தின் தாக்கம்  பல இடங்களில் தெரிந்தாலும் இது ஒரு கவனிக்க வைக்கும் படமே . 14/3/2025  அன்று   திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்   இன்னமும்  ஓ டி டி  யில் வரவில்லை .  அறிமுக  இயக்குனர் எஸ் எம்   பாண்டி  இயக்கத்தில்   உருவான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  ஒரு ஐ டி கம்ப்பெனி யில்  வேலை பார்ப்பவன் .ஒரு கேர்ள் பிரண்ட்  உண்டு , ஆனால் காதலி அல்ல .கேர்ள்  பிரண்டுக்கு   ஏராளமாக  செலவு செய்ய வேண்டி இருப்பதால்  செயின்  பறிப்புத்தொழிலை சைடு பிஸ்னஸ் ஆக வைத்துக்கொள்கிறான் .கொள்ளை  அடித்த  செயினை  விற்க  ஒரு பார்ட்டி  உண்டு . அவனிடம் வில்லனுக்கு ஒரு சமயம் மோதல் ஏற்படுகிறது 


செயின்  பறிப்பு  சம்பவத்தில்  ஒரு முறை  எதிர்பாராதவிதமாக  ஒரு பெண் இறக்கிறாள் . அந்தப்பெண்ணின் மரணத்துக்கு  வில்லன் தான் காரணம் . ஆனால்  வில்லனுக்கு  அது பற்றிய  குற்ற  உணர்ச்சி  எதுவும்  இல்லை . உயிர் இழந்த பெண்ணின் அப்பா   வில்லனைக்கண்டுபிடித்து பழி வாங்கத்துடிக்கிறார் .


 வில்லனுக்கு  ஆல்ரெடி  ஒரு துரோகி  இருந்தான் அல்லவா ? அவன்  வில்லனை மாட்ட  வைக்க ஸ்கெட்ச்  போடுகிறான் . வில்லன் மாட்டினானா?  தப்பினா? என்பது மீதி திரைக்கதை 



வில்லன்   ஆக மெட்ரொ  படத்தின்    நாயகன் சத்யா  நடித்துள்ளார் . அப்பாவி ஐ டி  ஊழியர் , கொடூரமான செயின்  பறிப்புத்திருடர்  என்று  மாறுபட் ட  இரு முகங்களை   அருமையாகக்காட்டுகிறார் .ஆக்சன்  ஸீக்வன்சில்  , தப்பி ஓடும் சீன்களில் , க்ளைமாக்சில்  இவரது நடிப்பு அருமை 


வில்லனின்  அம்மாவாக  தீபா சங்கர்  நடித்துள்ளார் . , இவர் ஆக்சுவலாக ஓவர் ஆக்டிங்க்  ஓமனா  ஜோதிகாவுக்கே  பெரியம்மா முறை .ஆனால்  இந்தப்படத்தில்  அந்த தர்மசங்கடம் இல்லை .


வில்லனுக்கே  வில்லன் ஆக  டேனியல் ஆன்னி போப்  நடித்திருக்கிறார் .வழக்கமாக காமெடியனாக வரும் இவர் இதில் கொடூரமான வில்லனாக வருகிறார் .நல்ல  நடிப்பு 


உயிர்  இழந்த  பெண்ணின் அப்பாவாக  ஜெயப்பிரகாஷ்  அனுபவம் மிக்க நடிப்பு .  வில்லனைப்பழி வாங்க இவருக்கு உதவியாக வரும் போலீசாக  ராஜா ராணி  புகழ் பாண்டியன்  கச்சிதமாக  நடித்துள்ளார் .ஜெயில் கைதியாக சென்றாயன்  அளவான   நடிப்பு 


மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார் அறிமுக  இயக்குனர் எஸ் எம்   பாண்டி  


மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார் ஜோகன்  சிவநேசன் இசையில்  பாடல்கள்  ஓகே  ரகம், பின்னணி  இசை கலக்கல்   ரகம் . ஸ்ரீ காலத்தின் எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது .விறுவிறுப்பு ,பரபரப்புக்குப்பஞ்சம் இல்லை . உதய குமாரின் ஒளிப்பதிவு குட்

சபாஷ்  டைரக்டர்


1  செயின் பறிப்பு  சம்பவங்கள்  , மக்களிடம்  இருந்து  வில்லன் தப்பி ஓடும் காட் சிகள்  அனைத்தும் அபாரம் 


2   ஜெயில் கைதி ஆனா சென்றாயன்  கதை சொல்வதும்  க்ளைமாக்சில்  அவரை வைத்து ஒரு டிவிஸ்ட்டும்  அருமை 


3  வில்லனுக்கே  வில்லன் ஆகும்  ஒரு சம்பவம் . அவன் போடும் ஸ்கெட்ச் , 1000 பவுன்  தங்கம்  மேட்டர்  எல்லாம் பிரமிக்க வைப்பவை 


4  வில்லன்  வரும் இடங்களில்  வரும் பிஜிஎம்  பட் டாசு 


  ரசித்த  வசனங்கள் 

1   தப்பைத்தப்பு  என்று  தெரிந்து  செய்பவன்  யாருக்கும் பயப்பட மாட் டான் 


2  இந்த  உலகத்தில் நல்லவன்  , கெட் டவன்   என்   யாரும்  இல்லை , மாட்டிக்கிட் டவன் , மாட் டிக்காதவன்  ரெண்டே  வகை தான் 


3 சிட்டில  டெய்லி 50 பவுன் நகை  காணாம   போகுது , ஆனா கேஸ்  பதிவு ஆவது 5 பவுன் தான் 


4   ஒரு  பொண்ணோட  பார்வை  பட் டா  போதும் , எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவான் 


5 லவ் பண்றவனும்  ,கொள்ளை  அடிக்கிறவனும் மனசுக்குள்  எதையும்  வெச்சுக்கக்கூடாது , ஸ்ட்ரெஸ்  அதிகம் ஆகிடும் 

6  நீ  என் மேல்  கை  வைப்பதை விட  என் பொருள் மேல்  கை  வைப்பது  எனக்கு அதிக கோபம் வர வைக்கும் 


7  முக்கால்வாசி திருட்டுப்பசங்க  நம்மை சுத்திதான் இருப்பாங்க 


8   இங்கே  ரெண்டு  பிரச்சனை  1 எதுவும் இல்லை  2 இருந்தாலும் ஒழுங்கா இல்லை 


9   சிட்டில  70% சிசிடிவி  தான் ஒழுங்கா ஒர்க் ஆகுது 


10 நான் திருடன் இல்லை , பிஸ்னஸ் மே ன் 


ரெண்டும் ஒண்ணுதான் 



11 இந்த உலகத்துல  உன் அம்மாவைத்தவிர வேற யாரும் உன்னை மதிக்கலை 


12 ஒரு அம்மாவுக்கு தன மகன் எவ்ளோ சம்பாதிக்கிறான் என்பது முக்கியம் இல்லை ,எவ்ளோ ஒழுக்கமா இருக்கான் என்பதுதான் முக்கியம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  அந்தப்பெண்ணின்  உயிர் போகக்காரணமாக அமைவது  தவிர்த்திருக்கலாம் .அந்த அளவும் கொடூரமாக நடக்க வேண்டிய தேவை என்ன? 


2   ஆயிரம்  பவுன்  நகை  சேமித்து  வைத்திருக்கும்  வில்லன்  வெரைட்டியாக  பல பெண்களிடம் போகாமல்  ஒரே ஒரு ஆசை நாயகியை மட்டுமே வைத்திருப்பது எதனால் ? 


3  வில்லனும்  , வில்லனுக்கே  வில்லனும்  மோதும்  சீன்  நம்பகத்தன்மை இல்லை . கடோத்கஜன்  மாதிரி  இருப்பவனை  வில்லன் அசால்ட் ஆக டீல்  செய்வது எப்படி ? 



4  பூமிக்கு அடியில்  புதைத்து  வைப்பது ரொம்ப ரிஸ்க் .பேங்க் லாக்கரில்  வைக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விறுவிறுப்பாக செல்லும் நல்ல க்ரைம் த்ரில்லர் தான் .மெட்ரோ   பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5  . விகடன் மார்க் 42 



Robber
Theatrical release poster
Directed bySM Pandi
Written by
Story byAnanda Krishnan
Produced by
  • Kavitha S
  • Ananda Krishnan
Starring
CinematographyN. S. Uthayakumar
Edited byN. B. Srikanth
Music byJohan Shevanesh
Production
companies
  • Impress Films
  • Metro Productions
Distributed bySakthi Film Factory
Release date
  • 14 March 2025
CountryIndia
LanguageTamil

Wednesday, March 26, 2025

அஸ்திரம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் )

             


         21/3/2025  அன்று    திரை அரங்குகளில்  வெளியாகி இருக்கும் இந்தப்படம் அறிமுக இயக்குனர் அர்விந்த் ராஜகோபால் + ஷாம் காம்போ வில் உருவான படம் பெரிய அளவில் விளம்பரம்  இல்லாமல் வந்திருக்கும் நல்ல படம் இது . தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓ  டி டி யில் ரிலீஸ் ஆகும்போது மிஸ் செய்யாமல் பார்க்கலாம்   


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 -  பல  ஆண்டுகளுக்கு  முன் ஜப்பானிய மன்னர் சதுரங்க  விளையாட்டில்  தன்னை  வெற்றி பெற்ற  சிப்பாயை  வாள்  மூலம் தன வயிற்றைக்கிழித்துத்தற்கொலை செய்ய வைக்கிறார்  அரசாங்க துரோகிகளுக்குத்தான் அது போன்ற தண்டனை வழங்கப்படும் என்பதால் அந்த சிப்பாயை துரோகி என மக்கள் நினைக்கிறார்கள் 

சம்பவம் 2 - வில்லன்  சிறு வயதில் இருந்தே செஸ்  பிளேயர் . அவனுக்கு ஒரு தம்பி உண்டு .. ஒரு நாள் வில்லனின் தம்பி வில்லனை செஸ்   விளையாட்டில் தோற்கடிக்க  வில்லன்  சம்பவம் 1ல் வந்த ஜப்பானிய மன்னர்  கதையைப்படித்தவன் என்பதால் அதே   பாணியில்  தன்  தம்பியைக்கொலை செய்கிறான் 

சம்பவம்  3  -  நாயகன்  ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவர்  ஏரியாவில்  பப்ளிக் பார்க்கில்  ஒரு ஆள் தன் வயிற்றைக்கத்தியால் கிழித்துத்தற்கொலை செய்து கொள்கிறார் . அது தற்கொலை தான் என்பதற்குப்பல சாட் சிகள் இருக்கின்றன . ஆனால்  அதே  பேட்டர்னில்  மேலும் 2   தற்கொலைகள்  வெவ்வேறு   ஊ ரில்  நடக்க   நாயகன்  உஷார்  ஆகிறான் ..அனைத்தும்  திட் டமிட் ட  கொலைகள்   என்பதை நாயகன் உணர்கிறான் 

அதை நிரூபிக்க  நாயகன் என்ன என்ன செய்தான் ? என்பது   மீதி   திரைக்கதை 

நாயகன்  ஆக ஷாம் நடித்திருக்கிறார் .கம்பீரமான நடிப்பு . ஓவர் பில்டப் எல்லாம் இல்லாமல் யதார்த்தமான   நடிப்பு . நாயகி ஆக  நிரஞ்சனி நடித்திருக்கிறார் , இவருக்கு    அதிக வாய்ப்பில்லை .வந்தவரை   பரவாயில்லை 

மனவியல் மருத்தவர் ஆக  நிழல்கள் ரவி  நல்ல நடிப்பு . வில்லனின்   சிறுவயது  கேரக்டர்  ஆக  மாஸ் டர் விதேஷ்  ஆனந்த்  நல்ல நடிப்பு .இவரது கேரக்டரை  இன்னமும் டெவலப்   செய்து   இருக்கலாம் . ஆனால்   வில்லன் வளர்ந்து   பெரிய ஆள் ஆன பின்  கேரக்டரை டம்மி   பண்ணி விட் டார்கள் .வில்லனாக நடித்தவரும் சரி இல்லை 

படம்  முழுக்க   நாயகன் உடன் வரும் கான்ஸடபிள்  கேரக்டரில்   சுமந்த்   சுமாரான நடிப்பு தான் 

கே  எஸ்   சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் . பின்னணி  இசை  அருமை .

கல்யாண்   வெ ங்கட் ராமனின்  ஒளிப்பதிவு  குட் . வில்லனின் சின்ன வயது  பையனுக்கு லைட்டிங்க் அருமை 

பூபதி  வேதகிரியின்  எடிட்டிங்கில்  படம் 2 மணி  நேரம் ஓடுகிறது .நல்ல விறு விறுப்பு 

எம் எஸ்   ஜகன்  திரைக்கதை   எழுத   இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் அர்விந்த் ராஜகோபால்


சபாஷ்  டைரக்டர்


1  பிளாக்  அண்ட்   ஒயிட்   கலருக்கும் , கொலைகளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி நாயகன் துப்பு துலக்கும் காட் சிகள் அருமை 

2  கிறிஸ்துவர்   போல   கிராஸ்   செய்யும்   முறையால்  முதலில்   குழப்பம் ஆகி  அதை  செஸ்  ராஜாவுக்கான சிம்பல் என்பதை நாயகன் கண்டு பிடிக்கும் சீன்  செம 

3  வில்லன்   சின்னப்பையனாக  இருக்கும்போது   சைக்கோவாக  நடப்பது   திகில் 

4  என்னதான் நடக்கிறது   என்பதே   புரியாமல் முதல் பாதி வரை சஸ்பென்ஸ் ஆகக்கொண்டு சென்று பின் பாதியில்  ஒவ்வோன்றாக ஓப்பன் செய்யும் விதம் 



ரசித்த  வசனங்கள் 

1    நம்ம வீட்டில் இருப்பவர்களை விட நம்மை  அதிகம் கவனிப்பவர்கள் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் 

2  கறிக்கடைக்கு வரும் கூட்டத்தை விட குழந்தைக்கருத்தரிப்பு மையத்துக்கு வரும் கூட் டம் தான் அதிகம் 

3  மதத்தையும், கடவுளையும் பிரச்சாரம் பண்ணி  வளர்க்க   வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை 

4 மதம் மாறினாதான் ரட்சிப்பார்னா அவர் கடவுள் இல்லை , கட் சித்தலைவர் 

5 மனிதர்கள்  சில விபரீத   முடிவுகள் எடுக்க கால அவகாசம் ஒரு வினாடி போதும் 

6  தோல்வி  ஒரு மனிதனை   எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் கொண்டு போகும் 

7  அரசியல்வாதிகளும், சாமியார்களும் தான்   மீண்டும் மீண்டும்   நமக்கு  அவங்க தேவையை  உணர்த்துகிறார்கள் , நம்மை  பயன்படுத்திக்கொள்கிறார்கள் 

8    மெஸ் மரிசம் என்பது  ஒரு சூடோ சயின்ஸ் 

9   வெற்றி மீது   அதீத நம்பிக்கை வைப்பது , தோல்வியை  ஏத்துக்க முடியாத நிலை   இரண்டுமே தப்பு தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன் - நாயகிக்குக்   குழந்தை  இல்லை என்பது , பிறந்த குழந்தை இறந்து விட்டது  என்பது  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது .பெண்களின் கவனத்தைக்கவர வலியத்திணிக்கப்பட் ட  காட்சி 

2   நாயகன்   தனது  கொலீக்கின்  வீட்டு சீமந்த  நிகழ்ச்சிக்கு செல்வது  அங்கே ஒரு பாட்டு என்பது ஸ்பீடு பிரேக்கர் . டி வி சீரியலா  ஓடுது ?இது ஒரு க்ரைம் த்ரில்லர் மூவி .எதுக்கு சென்ட்டிமென்ட் சீன்  ? 

3  படம் முழுக்க   நாயகனுடன்  உலா வரும்  அந்த கான்ஸ்டபிள்   கேரக்ட்டர்  செய்தவர்  ஈரோடு மகேஷ் சாயலில் இருந்தாலும்  நடிப்பு சுத்தமாக வரவில்லை 

4  ஒரு கேசில்  நாயகனுக்கு  கையில் அடிபடுவது  முதல் பாதி முழுக்க  அவர் கையில் கட்டுடன் வருவது  தேவை இல்லாத காட் சிகள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட் ட  கதை அம்சம் கொண்ட  நல்ல படம் , நடிகர்கள்  தேர்வு , திரைக் கதையில்   கவனம் கொண்டிருந்தா இன்னமும் நல்ல வெற்றி கிடைத்திருக்கும் . விகடன்  மார்க் 41 , ரேட்டிங்  2.75 / 5 


Asthram
Theatrical release poster
Directed byAravind Rajagopal
Written by
  • Jegan M. S
Produced byDSM Dhana Shanmugamani
Starring
CinematographyKalyan Venkatraman
Edited byBhoopathy Vedhagiri
Music byK.S. Sundaramurthy
Production
company
Best Movies
Distributed byFive Star Company
Release date
  • 21 March 2025
CountryIndia
LanguageTamil

Tuesday, March 25, 2025

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )


கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம்  ( ரொமாண்டிக் டிராமா  )


இயக்குனர்  கே  ரங்கராஜ்  நெஞ்சமெல்லாம் நீயே (1983) , பொண்ணு  பிடிச்சிருக்கு (1984) , நிலவு சுடுவதில்லை ( (1984) ஆகிய  சுமார்  ரகப்  படங்களாக தொடக்கத்தில் தந்தாலும்  உன்னை நான்  சந்தித்தேன் ( (1984), உதயகீதம் ( (1985 ) ,நினைவே  ஒரு சங்கீதம் ( (1987) ஆகிய   வெள்ளி விழாப் படங்களைத்தந்தவர் .இவரது  17 வது படமாக எல்லைச்சாமி (1992) அமைந்தது . நீண்ட  இடைவெளிக்குப்பின் 33  வருடங்களுக்குப்பின்  ஒரு படம் தந்திருக்கிறார் . ஆனால்   இவர் இன்னும் அப்டேட்  ஆகவில்லை .1980களில்  வந்த   கதை அம்சம்  கொண்ட காட்சி களுடன் தான்  திரைக்கதை  அமைத்திருக்கிறார் . மோசம்  என சொல்லி விட முடியாது .பிரமாதம் என கொண்டாடிடவும் முடியாது


இரண்டு  மோசடிப்பேர்வழிகளின்  காதல்  கதை என்பதால் இதற்கு  2 -420 'S-143   என   டைட்டில்  வைத்திருக்கலாம் .14/3/25   அன்று   திரை  அரங்குகளில் வெளியான  இந்தப்படம்  இன்னும் ஓ டி டி யில் வர வில்லை . 20 நாட்கள் ஆகும் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு  பெரிய கோடீஸ்வரரின் கம்பெணி யில் நாயகன் மேனேஜர் ஆகப்பணி புரிகிறான் . குதிரை  ஏற்றம் , குதிரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவன் .. ஓனர்  வெளியூர் சென்று இருப்பதால்  ஆல்  இன்  ஆல்  நாயகனே  பார்த்துக்கொண்டிருப்பதால்  பார்ப்பவர்கள் அவன் தான்  ஓனரோ என குழப்பம் அடைய வாய்ப்பு உண்டு .


ஒரு பெரிய பணக்காரர்  வீட்டில்  வயதான  அம்மாவைப்பராமரிக்கும் நர்ஸ்  கம் பணிப்பெண் ஆக நாயகி பணி புரிகிறார் . பங்களாவில்  இருக்கிறார் . மார்க்கெட்  போக வர காரில் போகிறார் .  பார்ப்பவர்கள்  இவர்  ஒரு செல்வச் சீமாட்டி  என நினைக்க வாய்ப்பு உண்டு 


நாயகன்  , நாயகி இருவரும் பரஸ்பரம்  ஒருவரை  ஒருவர்  பெரிய  பணக்காரர் என தவறாக நினைக்கிறார்கள் . இருவருமே  ஒரு பந்தாவுக்காக அதை மெயிணட்டெயின் செய்கிறார்கள் .இவரைக்கல்யாணம் பண்ணிக்கொண்டால்  லைபில் செட்டில் ஆகி விடலாம் என இருவருமே தவறாகக்கணக்கு போடுகிறார்கள் . இவர்களது  சந்திப்பு , காதல் , பெண்பார்க்கும் படலம்  என முதல் பாதி கலகலப்பாகச்செல்கிறது .


 ஒரு கட்டத்தில்  இருவரது  சுயரூபமும்  இருவருக்கும் தெரிய வர பிரேக்கப் செய்கிறார்கள்


 தனது சொந்தக்கம்ப்பெனி யில் சினிமாவில்  ஹீரோவாக நடிக்க  ஒரு கோடீஸ்வரி  . ஆள்  தேடுகிறாள் . நாயகன் விண்ணப்பிக்கிறான் .அந்தக் கோடீஸ்வரிக்கு  நாயகனைப்பிடித்து விடுகிறது .நீ  என் வாழ்க்கையிலேயே ஹீரோவாக இரு என்கிறாள் 


ஒரு கோடீஸ்வரன் கம்ப்பெனியில்  நாயகிக்கு  வேலை கிடைக்கிறது .அவனுக்கும் நாயகியைப்பிடித்து விட  திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் . நாயகி  சம்மதம் சொல் கிறாள் 


 நாயகன் , நாயகி   இருவருக்கும் அவரவர் ஆசைப்படி  கோடீஸ்வர   வரன் அமைந்ததா?  அல்லது  காதல் தான் பெரிது என  எண்ணி  அவர்கள்   இருவரும்   திருமணம்  செய்து  கொள்கிறார்களா?என்பது க்ளைமாக்ஸ் 

நாயகன் ஆக ஸ்ரீகாந்த் அழகாக வந்து போகிறார் . ஏப்ரல் மாதத்தில் , ரோஜாக்கூட்டம்  கால கட்டத்தில் எப்படி இருந்தாரோ அதே அளவு இளமையடன் இருக்கிறார்  ரொமான்ஸ்  கை கொடுத்த  அளவு   காமெடி  இவருக்குக் கை கொடுக்கவில்லை .


 நாயகி ஆக பூஜிதா பன்னாட நடித்திருக்கிறார் .நாயகன் அளவுக்கு  அழகிலும் பர்சனாலிட்டியிலும் இவர்  இல்லை என்றாலும்  பரவாயில்லை ரகம்  


கே ஆர்   விஜயா  , டெல்லி கணே ஷ்   இருவரும்  கெஸ்ட்    ரோலில்  வந்தாலும் நடிப்பு இதம் . இயக்குனர் கம் காமெடியன்  சிங்கம்புலி  அவ்வப்போது  சிரிப்பூட்டுகிறார் 


கோடீஸ்வரன்  , கோடீஸ்வரி ஆக  வரும் பரதன் ,நிமி இமானுவேல்  இருவருமே  பரிதாபமாக  இருக்கிறார்கள் . ஒரு பணக்கார கெத்து இல்லை 



ஆர்  கே   சுந்தர்   இசையில் பாடல்கள்  சுமார் ரகம் , பின்னணி இசை   தேவலாம் ரகம் .கே கே   வின் எடிட்டிங்கில்  படம்  2 மணி நேரம் ஓடுகிறது .ஒளிப்பதிவு  தாமோதரன் . நாயகனை மட்டும் அழாகாகக்கா ட்டி  இருக்கிறார் 


திரைக்கதை   எழுதி   இயக்கி இருக்கிறார்  கே  ரங்கராஜ் 


சபாஷ்  டைரக்டர்

1  முதல் பாதி  திரைக்கதை   ஒகே ரகம் .ஸ்ரீகாந்த்தின்  நடிப்பு குட் , சிங்கம்புலியின் காமெடி  டிராக் பரவாயில்லை ரகம் 



2  கோடீஸ்வரன்  , கோடீஸ்வரி  பற்றிய   க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட்  பி  சுமார் ரகம் 



  ரசித்த  வசனங்கள் 

1   நீங்க  இந்து இல்லை ?


இந்துவும்  இல்லை   தந்தியும்  இல்லை, வைஷாலி 



2  ஒரு குதிரை மேல  யானை  சவாரி போகுது 


3    ஏங்க , உங்களுக்கு    மூளை  இருக்கா? 


 இருந்தா  உன்னை ஏன்  மேரேஜ்   பண்ணிக்கப்போறேன் ? 


4  வேலை என் அப்பா   உடம்புக்கு செட் ஆகலை , படிப்பு எனக்கு செட் ஆகலை 


5  நீங்க  எதனால அவரை சார்னு கூப்பிடறீங்கன்னு யோசிக்கிறார் 


 டக்னு கேட் டா  எப்படி ? யோசிக்கநும் ,  ஐ மீன்   யோசிச்சு  பதில் சொல்லனும் 


6    அவரு  கேனத்தனமாப் பேசுவதைப்பார்த்தா அவரும் என்னை லவ் பண்றார்னு தோணுது 


7  எனக்கு வெட்கமா   இருக்கு 


 அதெல்லாம் கூட இருக்கா ? 


8    நுங்கை  நோண்டித்தின்னவன் நீ , நொந்து  நூடுல்ஸ் ஆனவன் நான் 


9  வாடா மல்லி க்கலர் இருக்கா ? 


 வாடுன மல்லிக்கலர்   ஒக்கே வா? 


10    ஏன்   இப்படிப்பதர்றீங்க ? 


 சரி வேற   மாதிரி  பதர்றேன் 


 11  ஒரு ஐடியா  , நாம எல்லோரும் ட்வின்ஸ்  என  சொல்லிடலாமா? 


12   யாரோ   கதவைத்தட்ட்றாங்க 


கதவு தானாகவா  தட்டிக்கும் ?  யாராவதுதான் தட்டுவாங்க 


13   இந்த   நேரத்துல    எங்கே  போனீங்க ?


 வந்த நேரத்துல பாத்ரூம் போனேன் 


14   பனாமா   போகணும் 


 பிணமா  போகணும் னு நினைச்சுட் டேன் 


15   போனைப்போட  சொல்லு 



 கீழேயா போடணும் ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1   எ ம் ஜி ஆர் , சிவாஜி காலத்தில் செல்போன்   கிடையாது .அதனால் அந்தக்காலபபடங்களில் ஏர்போர்ட்டில் ஒருவரை வரவேற்க  அல்லது ரிஸீவ் செய்ய  கையில் அவர்கள்  பெயர் எழுதிய போர்டைபிடித்து  நிற்பார்கள் . இந்தக்காலத்தில்  வாட்ஸாப்பில்    போட்டொ  அனுப்பினாப்போதுமே? 


2  ஆள் மாறாடடம்  அந்தக்காலத்த்தில்   நடந்தது ஓகே  , ஆனா  இப்போ ஐடி கார்டு  கேட்கலாமே? 


3  கோடீஸ்வரனிடம்  பிஸ்னஸ்  டீல்  செய்த பெண்மணி   அவரை போட்டோ வில் கூடப்பார்த்திருக்க மாடடாரா? 


4  ஒரு கோடீஸ்வர  தொழில்   அதிபரின்  போட்டோ மீடியாக்களில் வந்திருக்காதா? 


5  ஹீரோ  ,  ஹீரோயின்   கெமிஸ்ட்ரியே  ஒர்க் அவுட் ஆகவில்லை . அவங்க சேர்ந்தா  என்ன ? சேராட்டி என்ன? என்ற எண்ணம் தான் ஆடியன்ஸுக்கு வருது 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமாரான  காதல் கதை , போர் அடிக்காமல் போகுது . டி வி ல போட் டாப்பார்க்கலாம் . விகடன் மார்க் மே பி 40 . ரேட்டிங்க்  2.25 / 5 


Konjam Kadhal Konjam Modhal
Theatrical release poster
Directed byK. Rangaraj
Written byK. Rangaraj
Produced byMy India Manickam
Starring
CinematographyDhamodharan
Edited byKay Kay
Music byR. K. Sundar
Production
company
Sri Ganapathi Films
Release date
  • 14 March 2025
CountryIndia
LanguageTamil

Monday, March 24, 2025

பொன் MAN - PON MAN (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( டார்க் காமெடி த்ரில்லர் ) @ ஜியோ ஹாட் ஸ்டார்


30/1/2025   அன்று  திரை அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது 14/3/2025 முதல்  ஜியோ  ஹாட் ஸ்டார்  ஓடிடி  யில் காணக்கிடைக்கிறது . வெறும்  3 கோடி    ரூபாய  பட்ஜெட்டில்  உருவான  இப்படம் 18 கோடி ரூபாய்   வசூல்     செய்து  அசத்தி இருக்கிறது  பத்திரிக்கைகளின்  பாராட்டு மழையில்  நனைந்த  இந்தப்படம்  எல்லாத்தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்காது .


கும்பாலங்கி நைட்ஸ் , ஆன்ட் ராயிடு குஞ்சப்பன்  வெர்சன் 5.25, நான்  தான் கேஸ் கொடு  ஆகிய வெற்றிப்படங்களில்  தயாரிப்பு வடிவமைப்பாளராகப்பணி ஆற்றிய  ஜோதிஷ் சங்கர்  இயக்கம்.,  இயக்குனர் ஆக அவரது  முதல் படம் இது. 


கொல்லம்  மாவடடத்தில் குறிப்பாக மூணாந்துருத்தி என்ற இடத்தில்  . பெரும்பான்மையான படப்பிடிப்பு நட ந்தது , ..ஜி ஆர் இந்து கோபன்  எழுதிய  நாலஞ்சு   செருப்புக்கார்  என்ற   நாவலின் திரை  வடிவம் இது ..பஸீல்  ஜோசப்  + லிஜோமோல்  ஜோஸ்   காம்போவில்  உருவான  படம்  செம  ஹிட் ஆகி இருப்பதால் இதே  ஜோடி ராசியான ஜோடியாக வலம் வரும் என இண்டஸ்ட்ரி டாக் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகிக்கு  திருமணம்  நிச்சயம் ஆகி விட்ட்து .விரைவில்  திருமணம்  சீராக 25 பவுன் நகை போடவேண்டும் , ஆனால் கையில் காசில்லை . நாயகியின் அண்ணன்  ஒரு வெட்டித்தண்டம் . கட் சி , சரக்கு , குடி  என  இருப்பவன் .அம்மா மட்டும்  தான் அப்பா இல்லை .சொந்தக்காரர்கள்  அதிகம் பேர்  திருமணத்துக்கு வருவார்கள்  நல்ல மொய் கலெக்சன் கிடைக்கும்  என்ற  நம்பிக்கையில்  கடனுக்கு   நகை வாங்க முடிவு செய்கிறார்கள் 



நாயகன்  ஒரு நகைக்கடையில்  ஏஜென்ட் ஆக  இருக்கிறான் . இது மாதிரி  விசேஷ  காலத்தில்  கடனாக நகையைத்தந்து  மொய்ப்பணம்   வசூல் ஆனதும்  பணத்தை  வசூலிக்கும் வேலை . மொய்ப்பணம்  வரவில்லை எனில்  கொடுத்த   நகையை  திருப்பி  வாங்கி  ஜுவல்லரி ஷாப்பில் ஒப்படைக்க வேண்டும் . 50%  பணம்  வசூல் ஆனால்  மீதி  50% க்கு அதற்கான நகையை  ரிட்டர்ன்  எடுக்க   வேண்டும் . இதுதான் நாயகனின் பணி 


நாயகிக்குத்திருமணம்  நடக்கிறது . நாயகன்  25 பவுன் நகை  தந்து விடுகிறான் . நாயகியின் கணவன் தான் வில்லன் .இவன் ஒரு முரடன் . குடிகாரன் .மீன்  பண்ணையில்  வேலை செய்பவன் . இவனுக்கு திருமணம் ஆன ஒரு தங்கையு ம் , திருணம் ஆகாத இன்னொரு தங்கையும் உண்டு . திருமணம்  ஆன   தங்கைக்கு பெண்டிங்க்  நகை போட வேண்டி இருக்கு. திருணம் ஆகாத இன்னொரு தங்கைக்கு  சீராக   நகை போட வேண்டி இருக்கு .இரண்டுமே  வில்லனுக்கு சீராக  நாயகி கொண்டு வந்த  25 பவுன்   நகையை   வைத்துத்தான்  மேக்கப் செய்யவேண்டும் 


 எதிர்பார்த்தபடி  மொய்  வசூல் ஆகவில்லை . 13 லட்ஷ  ரூபாய்  தர வேண்டும் . 6 லட்சம்  தான் வசூல் ஆகி இருக்கு .மீதி 7 லட்ஷம்  பாக்கி   தர வேண்டும் . இந்த   பாக்கியை நாயகன்  வசூல் செய்தானா?   இல்லையா?   என்பது  மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக பஸீல் ஜோசப்  அருமையாக நடித்திருக்கிறார் . ஆனால்  அவரது கேரக்ட்டர்  டிசைனில்   சில குழ ப்பங்கள் . நாயகி ஆக முதல் பாதியில்  அடக்கமான பெண்ணாகவும் , பின் பாதியில்  தைர்ய லட் சுமியாகவும்  , மாறுபட் ட  நடிப்பை   வழங்கி  இருக்கிறார் லிஜோமோல்  ஜோஸ்  


வில்லனாக சஜின் கோபு  அசல் முரடனாகவே வாழ்ந்திருக்கிறார் . ஆஜானுபாவகமான தோற்றம் , நாயகியின் அண்ணனாக  ஆனந்த  மன்மதன்  அசத்தி இருக்கிறார் 


ஜெஸ்ட்டின்  வர்கீசின்   இசையில்  பாடல்கள்   பரவாயில்லை ரகம் . பின்னணி இசை சிறப்பு நிதின் ராஜ் அருளின் எடிட்டிங்கில் படம்  127 நிமிடங்கள்   ஓடுகிறது .மெதுவாக திரைக்கதை நகர்கிறது . சானு ஜான்   வர்கீசின் ஒளிப்பதிவு பிரமாதம் . கொல்லத்தின் அழகைக்கண் முன் நிறுத்துகிறது 


 நாவல்  ஆசிரியர்  இந்துகோபன் , ஜெஸ்ட்டின் மேத்யூவு இருவரும் இணைந்து திரைக்கதை   எழுதி இருக்கிறார்கள் .நிஜமாக நிகழ்ந்த  சம்பவத்தை நேரில் பார்ப்பது போல உயிரோட் ட,மான  காட் சிகள்  [படத்தின்ப பலம் 

சபாஷ்  டைரக்டர்


 1   இந்த   நகைக்கடை ஏஜென்ட்  கடனுக்கு நகை தரும் கான்செப்ட்டே  புதுசு . கவரிங்க்   நகை தான் நாம் கேள்விப்பட்டது . தங்க நகையே   கடனாகத்தருவார்கள்  என்பது புதுசு .அந்தக்கதைக்களத்தில் களமாடியது அருமை 


2   படத்தில் அனைத்து முக்கியக்கேரக்டர் களும்  சித்தரிக்கப்படட விதம் அருமை  அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் 



3  அடுத்து   என்ன நடக்குமோ   என்ற   டென்சன் பில்டப் ஆகும் விதம் சிறப்பு 



4  நாயகன், நாயகி , வில்லன்   , நாயகியின் அண்ணன்  என  நான்கு கேரக்டர்களின்  நடிப்பும் அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அலை பாயம்  கடலோரம்  அசையாது நடை போடு 


2  மணவாட்டியே மணவாட்டியே  மணவாளன் கை கோர்க்கும் 


  ரசித்த  வசனங்கள் 

1   வாழ்க்கைல பொறுமை ரொம்ப முக்கியம், எதுக்கெடுத்தாலும் முறைச்சுக்கிட்டு இருந்தா   முன்னேற  முடியாது 


2 நம்ம ஸ்டேட்டசைத்தீர்மானிப்பதே பணம் தான் 


3  வாழ்க்கைல த்ரில் இல்லைன்னா அந்த வாழ்க்கை வீண் 


4   வெத்தலை பாக்கு வாங்கவே வக்கில்லையாம், பீடிக்கு உலக்கை வேணுமாம் 


5  மடியில்   ஜுவல்லரி , நடமாடும்   ஜுவல்லரி  , இப்போ   தூங்கும்    ஜுவல்லரி   ஆக ஆகிட் டான் 


6   என் தங்கை இப்படி சொல்வா என   எதிர்பார்க்கலை .தோளில் அவளை சுமந்து பீச் எல்லாம் சுத்தி இருக்கேன் 


 உலகில் யாருமே   செய்யாத   காரியத்தை இவரு  செய்த   மாதிரி  பேசறாரு 


7  கிடைக்கற நேரத்துல சந்தோஷமா இருக்கணும் , கிடைக்காத   நேரத்தில் போராடனும் 


8   அலெக்ஸ்சாண்டர்  மாதிரி   போராடி ஜெயிப்பேன் 


9  இங்கே   பொண்ணுங்களுக்குப்பஞ்சம் இல்லை, நகைக்குத்தான் பஞ்சம் 


10  பாவிகளோட   பாரத்தை மட்டும்  நீ   சுமந்துக்கோ , என் பாரத்தை நான் சுமக்கிறேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன், , வில்லன்   , நாயகியின் அண்ணன்  என  பல  கேரக்டர்கள் , அவர்களது  நண்பர்கள் அனைவரும் குடிகாரர்கள் .காட்சிக்கு காட்சி  சரக்கு அடிக்கறாங்க . டி டோட்டலரக்ள் , பெண்கள்   முகம் சுளிக்கும்படி  தண்ணி  அடிக்கும்  சீன்கள் அதிகம் 


2  உன் கிட் டே  எப்படி  நகையை     வசூல் செய்யணும்னு எனக்குத்தெரியும் என்ற  டயலாக்கை நாயகன் வில்லனிடம் 6 தடவை சொல்றார் . ஆனா  கடைசி வரை  நீட்  விலக்கு ரகசியம்  மாதிரி   அவர் எதுவுமே செய்யலை 


3   நாயகன் கை வசம் 6 லட்சம்  பணம்   இருக்கு .அதை பேங்க்கில்  கட் டனும் , அல்லது  நகைக்கடையிடம்  ஒப்படைக்கணும், இரண்டும் செய்யாமல்  தண்ணி போட்டுட்டு மப்பில் பீச்சில்  விழுந்து கிட க்கார் 


4   வில்லனுக்கு  வீட்டில்  நகை வைத்திருப்பது ஆபத்து  என்பது   தெரிந்து  விட்டது ,ஒண்ணா   நகையை   தங்கை வீட்டில் வைக்கணும் , அல்லது  பேங்க்   லாக்கரில் வைக்கணும் , அதை செய்யாமல்  இடுப்பில்  வேட்டியில்  13 பவுன் நகையை   பொட்டலம்   கட்டிக்கொண்டு   அலைவது எனோ ? 


5  வில்லன்   நாயகனைக்கத்தியால் வயிற்றில்  குத்தியதும்   நாயகன்  அலறணும் , அலல்து  ஹாஸ்பிடல் போகணும் .எதுவும்   செய்யாமல்  வில்லனைப்பார்த்து   சவால் விட்டுட்டு இருக்கார் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரளாவில்  சூப்பர்  ஹிட்   என்பதால் பார்த்தேன் . ஆனால்  எனக்குப்படம்  பெரிய அளவில் பிடிக்கவில்லை .நம்ப முடியாத காட் சிகள்   அதிகம் . மாறுபட் ட  கதைக்களம், நடிப்பு   மட்டுமே  பிளஸ் . ரேட்டிங்க்  3 / 5 



Ponman
Theatrical release poster
Directed byJothish Shankar
Written byG. R. Indugopan
Justin Mathew
Based onNalanchu cheruppakkar
by G. R. Indugopan
Produced byVinayaka Ajith
Starring
CinematographySanu John Varghese
Edited byNidhin Raj Arol
Music byJustin Varghese
Production
company
Ajith Vinayaka Films
Distributed byAjith Vinayaka Release
Release date
  • 30 January 2025
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget3 crore[2]
Box office18.30 crore[2]