Monday, March 03, 2025

OFFICER ON DUTY (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

           

   2025 ம் ஆண்டின் முதல் தமிழ் பிளாக் பஸ்டர் ஹிட் எப்படி  டிராகன் ஆக அமைந்ததோ  அது  போல  மலையாள சினிமா உலகின்           2025 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் ஹிட்  இந்த   ஆபீசர்  ஆன்  டியூட்டி . இது 20/2/2025 அன்று   திரை அரங்குகளில் ரிலீஸ்  ஆகி  சக்கை  போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் . ஓ டி டி  யில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை 


12  கோடி   ரூபாய்  பட்ஜெட்டில்   உருவான இப்படம்  ரிலீஸ் ஆகி  முதல் 10 நாட்களில்  41  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது . இன்னும் 25 நாட்களில்  நெட் ஃபிளிக்ஸ் ல வரும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1  - நாயகன்  ஒரு  போலீஸ்  ஆபீசர் . அவர்  தன் மனைவி , இரு  மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் . அவரது முதல்   மகளை  ஒரு ஆள் காதல் வலையில் வீழ்த்தி  நாசமாக்கி விட்டு அதை  வீடியோ  எடுத்து  மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறாள் .மகளின் தற்கொலைக்கு தன் கணவனின் முன் கோபம் தான் காரணம் என மனைவி நினைத்து பிரிந்து வாழ்கிறாள் . மெயின் கதைக்கும் நாயகனின்  இந்த   பர்சனல்  கதைக்கும் சம்பந்தம் உண்டு 

சம்பவம் 2 - ஒரு பஸ்  கண்டக்டர்  தன் மகளின் செயினை ஒரு கடையில் அடகு வைக்கும்போது அந்த நகை போலி என சொல்லி கடைக்காரர் அவரை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் . நாயகன்  தான்  அந்தக்கேசை  விசாரிக்கிறார். . விசாரணையில்  பஸ்  கண்டக்டர் உடைய  மகள்  தன்  காதலனுக்கு  அந்த நகையை   தந்து டூப்ளிகெட்டை  மாற்றி வைத்தது     தெரிய   வருகிறது . திடீர்  என  பஸ்  கண்டக்டர் உடைய  மகள் தற்கொலை செய்து கொள்கிறாள்.  பஸ்  கண்டக்டர்   தன் மகளது மரணத்துக்கு நாயகன் தான் காரணம்  என  கேஸ்  போடுகிறான் 

சம்பவம் 3  -  ஒரு போலீஸ்  ஆபீசர்  யாரோ  ஒருவரின்  மிரட்டலுக்கு  படிந்து  தற்கொலை செய்து கொல்கிறார் 


சம்பவம் 4   - வில்லன்கள்  க்ரூப்பில் 2 பெண்கள் , மூன்று ஆண்கள் . எல்லாரும் போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் . ஒரு இரவில் ஒரு பஸ் பயணம் மேற்கொள்கிறார்கள் . அதில் பப்ளிக்காக போதை மருந்து உட்கொள்கிறார்கள் . அதே  பஸ்சில்   நாயகனின் மனைவியும் , மகளும் பயணிக்கின்றனர் .நாயகனின் மனைவி  இந்தக்கொடுமையைத்தட்டிக்கேட்கிறாள் . பஸ் கண்டக்டரிடம்  புகார்  செய்கிறாள் . வில்லன்கள் க்ரூப் ,  நாயகனின் மனைவி,. பஸ் கண்டக்டர்  இருவரையும்  தாக்குகிற்து . போலீஸ்  வந்து  தொக்காக வில்லன்கள் க்ரூப்பை தூக்கி செல்கிறது . கைது  செய்து அழைத்துச்செல்லும்  வழியில்  அந்த  ஆபீசர்  வில்லன்கள் க்ரூப்பில் இருக்கும் இரு பெண்களை மானபங்கம் செய்கிறார்


 மெலே  சொன்ன சம்பவம்  4  தான்  மீதி  3  சம்பவங்களுக்கும்  அடி நாதம் . நாயகன் இந்த வில்லன்கள் க்ரூப்பை எப்படி டிரேஸ் செய்து பிடிக்கிறார் என்பது  மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக  குஞ்சாக்க போபன் அபாரமாக  நடித்து இருக்கிறார் . அவரது  முன் கோபம் . போலீஸ்  மிடுக்கு  எல்லாம்  அட்டகாசம் . அவரது மனைவி ஆக பிரியாமணி நடித்திருக்கிறார் . பேலியோ டயட்டில் இளைத்த மாதிரி பரிதாபமாக இருக்கிறார் . நடிப்பு குட் 


 பஸ்  கண்டக்டர்  ஆக  வரும்  ஜெக்தீஷின் நடிப்பு அருமை 


  வில்லன்கள்  க்ரூப்பில்   ஐவர் + 1  என்றாலும்  இரு ஆண்கள் , இரு பெண்கள்  அதிக ஸ்கோப் , மிரட்டி இருக்கிறார்கள் .வில்லன்  கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டாலே     அந்த  திரைக்கதை  வெற்றி பெற்று விடும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இது 


ஜெக்ஸ்  பிஜாய் தான் இசை . பின்னணி இசை  மிரட்டல் ரகம் . கலக்கி இருக்கிறார் / ரொபி  வர்கீஸ்  ராஜ்  தான் ஒளிப்பதிவு  . கன கச்சிதம்   சாமன் சாக்கோவின் எடிட்டிங்க்  ஷார்ப்   ஆக 137  நிமிடங்கள்   டைம் டியூரேசன் 


நயாட்டு , இளவீலா   பூஞ்சிரா , கன்னூர் ஸ்குவாட்   ஆகிய  படங்களில்  இயக்குனர் ஆகப்பணிபுரிந்த  ஷாகி கபீர் தான் திரைக்கதை . . இவர்  ஒரு முன்னாள்  போலீஸ் ஆபீசர். அதனால்  இவர் திரைக்கதை  அமைக்கும் படங்களில் போலீசுக்கு முக்கியத்துவம் இருக்கும்  ஜித்து  அஷ்ரப் தான் இயக்கம் . இரட்ட மலையாளப்படத்தில்  அஞ்சலியின்  கணவராக நடித்தவர் + இளவீலா   பூஞ்சிரா  படத்தில்  போலீஸ்  ஆபீசர் ஆக வருபவர் 



சபாஷ்  டைரக்டர்


1   ஒரு அறிமுக  இயக்குனர்   தன்  முதல்  படத்திலேயே  பிரமாதமான திரைக்கதை , மேக்கிங்கில்  அசத்தி இருக்கிறார் .. இது  முதல்  படம் என்ற  தயக்கம், பதட்டம் இல்லை . அனாயசமாக  பண்ணி  இருக்கிறார் 


2   ஒளிப்பதிவு  + பின்னணி  இசை  இரண்டும்  க்ரைம் த்ரில்லர்  படங்களுக்கு  எப்படி  முதுகெலும்பாக  இருக்க வேண்டும்  என்பதற்கு  எடுத்துக்காட்டு 


3  மார்ச்சுவரி  பைட்  சீக்வன்ஸ்  கலக்கல்  ரகம் , ஆக்சன்  தெறிக்கிறது 


4  வில்லன்கள்  6 பேர் . அனைவரது நடிப்பும் மிரட்டல் ரகம் 

5    நேரடியாக  கதை சொல்லாமல் நான் லீனர் கட்டில்  கதை சொன்ன விதம் அருமை 

6  வில்லன்  லைட்டரில்  தம் அடிக்கும்போது  சரக்கை  ஊற்றி  பற்ற வைக்கும் ஐடியா 


ரசித்த  வசனங்கள் 


1    என்னை எதுக்காக  இத்தனை கேள்விகள் கேட்கறீங்க ? போலீஸ்  மாதிரி  சந்தேகப்படறீங்க ? 


  ஏன்னா  நான் ஒரு  போலீஸ் ஆபீசர் 


2   தற்கொலைக்கடிதம் எழுதுபவர்கள்   அவர்களாக  எழுதும்போது இயற்கையான கையெழுத்தாக இருக்கும் ,இன்னொருவர் மிரட்டி எழுத வைத்தால்  நடுக்கமாக எழுத்து இருக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பெரும்பாலான  போலீஸ்  படங்களில்  நாயகன் சஸ்பெண்ட்  ஆனவர்  ஆக வருவதும் , டியூட்டியில்  ஜாயின்  பண்ணீயதும்  வரும்  முதல்  கேஸ்  தான்  படத்தின் கதையாக வருவதும்   ரொட்டீன்  ஆகிறது 


2    வில்லன்  க்ரூப் பாதிக்கப்பட்டது   பிரியாமணியால் . பழி வாங்க  அவரைத்தான் ரேப் செய்ய வேண்டும் . அவரது மகளை  எதனால் டார்கெட்   செய்கிறார்கள் ?


3  வேட்டையாடு  விளையாடு படத்தின் பாதிப்பு பின் பாதியில் தெரிகிறது . குறிப்பாக வில்லன்களின் கேரக்டர் டிசைன் , ஆச்கன்  சீக்வன்ஸ் , கெட்ட  போலீஸ்  ஆபீசரின்  செய்கை 

4  க்ளைமாக்ஸ்  முடிந்த  பின்னும் 10  நிமிடங்கள்  கழித்து  இன்னொரு எக்ஸ்ட்ரா க்ளைமாக்ஸ்    வைத்தது  தேவையற்றது 

5   வில்லன்கள்  பழி வாங்கத்தான் எல்லாம் செய்கிறார்கள் . தேவை இல்லாமல்  ஒவ்வொரு  மர்டர் ஸ்பாட்டிலும்  செயினை எடுத்து ஏன் க்ளூ கொடுக்கிறார்கள் ?

6    வில்லன்களுக்கு  எப்படி  பெயில்  கிடைத்தது ? போதை  மருந்து கேசில்    பெயில்  கிடைக்காது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+ 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பான  க்ரைம் ஆக்சன்  க்ரைம்  த்ரில்லர் சீட் எட்ஜிங்க்  த்ரில்லர்..  பார்க்கலாம். ரேட்டிங் 3.5 / 5 



Officer on Duty
Theatrical release poster
Directed byJithu Ashraf
Written byShahi Kabir
Produced by
Starring
CinematographyRoby Varghese Raj
Edited byChaman Chakko
Music byJakes Bejoy
Production
company
Martin Prakkat Films
Release date
  • 20 February 2025
Running time
137 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget12 crore[1]
Box office41 crore[2]

Sunday, March 02, 2025

காதல் என்பது பொதுவுடைமை (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

       

                 

பெற்றோர் சம்மதத்துடன்  அனைவரும்  பார்க்கலாம்  என்று சென்சார் யு/ஏ  சான்றிதழ் வழங்கி இருந்தாலும்  ஒரு  தர்ம சங்கடமான , குடும்பத்துடன் பார்க்க முடியாத ஒரு குடும்பப்படம் தான் இது .  சராசரி  கமர்ஷியல் படம் பார்ப்பவர்கள்  ரசிக்க முடிவது சிரமம் . பெரும்பாலான  மக்களால்  ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தைக்கூறும் படம்  இது  



14/2/2025  அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம் 2023 ஆம் ஆண்டு  நவம்பர்  20ல்   கோவாவில்  54 வது சர்வ தேச திரைப்பட விழாவில்  திரை இடப்பட்டது  . விருதுப்படங்களைப்பார்த்து பழக்கம்  உள்ள  பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு முற்போக்குவாதி . யூ ட்யூப் பதிவாளர் . திருமணம் ஆகி  திருமண  வயதில் ஒரு மகள் இருக்கிறாள் . நாயகியின் கணவர்  நாயகியைப்பிரிந்து  வேறு  ஒரு பெண்ணுடன்  வாழ்ந்து  வருகிறார். நாயகியின்  வீட்டில்  ஒரு பணிப்பெண் இருக்கிறார்  .


நாயகியின்  மகள் தயங்கித்தயங்கி  தன் அம்மாவிடம்  தான் ஒருவரை விரும்புவதாக சொல்கிறாள் . நாயகி   பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை . வீட்டுக்குக்கூட்டிட்டு வா ,  பேசிக்கலாம் என்கிறாள்.


இப்போ  தான் ஒரு திருப்பம். மகள் விரும்புவது  ஒரு ஆணை  அல்ல , ஒரு பெண்ணை . நாயகிக்கு  இது பெரிய   அதிர்ச்சி . தன் கணவனுக்கு   போன் பண்ணி விஷயத்தை   சொல்கிறாள் . அந்தக்குடும்பம்   இந்தப்பிரச்சனையை எப்படி எதிர்கொண்டது? . வாத விவாதங்கள்  என்ன நிகழ்ந்தது? என்பது  மீதித்திரைக்கதை   


நாயகி ஆக ரோகினி  ரகுவரன்  அபாரமாக நடித்திருக்கிறார். தன் மகள்  ஒரு லெஸ்பியன் என்பதை அறீந்து அவர் அதிர்ந்து போகும் இடத்தில் கலக்கலான நடிப்பு 


 நாயகியின் மகள்  ஆக   லிஜோ மோல்  ஜோஸ்  அமைதியாக  நடித்து இருக்கிறார் . அவருக்கு  இணையாக   அனுஷா  பிரபு நடித்திருக்கிறார்.  நாயகியின்  கணவர்  ஆக  வினீத்  குணச்சித்திர  நடிப்பை வழங்கி இருக்கிறார் . நாயகியின் வீட்டில் பணிப்பெண்ணாக  தீபா சங்கர்  கச்சிதமாக  நடித்திருக்கிறார் 


கண்ணன்  நாராயணன்  இசையில்  ஒரே  ஒரு பாடல் . சுமார்  ரகம் , பின்னணி  இசை  கச்சிதம் ஸ்ரீ  சரவணன்  ஒளிப்பதிவு  அருமை . ஒரே  வீட்டில் நடக்கும்  கதை என்பதால்  சவாலான  பணி  , ஒளிப்பதிவாளருக்கு. டானி  சார்லசின்  எடிட்டிங்கில்  படம்  120  நிமிடங்கள்  ஓடுகிறது  


திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர்  ஜெயப்பிரகாஷ்  ராதாகிருஷ்ணன் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகி , மகள்  இருவருக்குமிடையே ஆன  பாண்டிங்  சிறப்பாக சொல்லப்பட்ட விதம் 

2    தான்  ஒரு லெஸ்பியன்  என்பதை மகள்  அம்மாவிடம்  பூடகமாக  சொல்லும் காட்சி கவிதை 

3   முதல்  காட்சியிலேயே நேரடியாக  கதைக்குள் போன விதம் 

4   பெற்றோர்   தரப்பு , காதல்  ஜோடி தரப்பு வாத விவாதங்கள்  ஆரோக்கியமான சமூக அலசல் 

5  500   ரூபாய்  கடன் கேட்கும்  பணிப்பெண்ணீடம்  இந்த   விஷயத்தை வெளில  சொல்லிடாத என  பணீப்பெண்னிடம் ரூ 1000  தர  அவர் அதை மறுக்கும் காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1  காதல் என்பது கடல்  மணல்  மாதிரி . சாப்ஃப்ட்டா பிடிச்சா கைல இருக்கும், இறுக்கிப்பிடிச்சா  கை  வலிக்கும் 


2  நாம  ஒருத்தர் மேல பிரியமா இருக்கோம்னா அவங்களை ஃபிரீயா விட்டுடனும் , இறுக்கிப்பிடிக்கக்கூடாது 


3   சுலபமாகக்கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது 


4   என்னோட டேஸ்ட் எல்லாம்  தெரிஞ்ச   உனக்கு என்னோட ஃபீலிங்க்ஸ்  புரியாம போச்சே ? 


5   அவ சொல்றதைக்காது  கொடுத்துக் கேள் , அல்லது கேட்பது மாதிரி நடிக்கவாவது செய்யலாமே? 


6   இந்த   உலகில் எல்லாமே  சாத்தியம்  தான் , முதல்ல நம்மை நாம் நம்பனும் 


7  ஒரு பெண்ணை  லவ் பண்ணிட்டு  இப்போ  அவளோட பெஸ்ட்  ஃபிரண்டா  இருக்கியா?  பெஸ்ட்  ஃபிரண்டா நடிச்சுட்டு இருக்கேன்னு சொல்லு 


8  இந்த  ஆம்பளைங்க  முதல்ல  பெண்ணைக்கல்யாணம் பண்ணுவானுங்க , அப்புறம் குழந்தை கொடுப்பானுக , அப்புறம் மிதிப்பானுக 


9  பொண்ணுங்க    நீங்க  ரெண்டு பேரும்  கல்யாணம்  பண்ணிக்கிட்டா  யார்  புருசன் ?  யார்  பொண்டாட்டி ? யார் தாலி கட்டுவா? 


10    சமூகத்துக்குப்பயந்து  வெளில  வராம  எத்தனையோ பேர் இருக்கலாம் 


 வெளிப்படையா இருப்பவங்க உண்மையா இருப்பாங்க , உண்மையா  இருக்கறவங்க  வெளிப்படையா  இருப்பாங்க 


11  இயற்கைல   கறுப்பு வெள்ளை  மட்டும் இல்லை , கலர்சும் இருக்கு 


12  காதலை  உணரத்தான் முடியும் , புரிஞ்சுக்க முடியாது 


13  ஒரு ஆண்  ஒரு பெண்ணைப்புரிந்து  கொள்வதை  விட  ஒரு  பெண் இன்னொரு பெண்ணைப்புரிந்து  கொள்வது  சுலபம் 


14  பெரிய   பெரிய    தலைவர்கள் , துறவிகள் எல்லாம்  மேரேஜே  பண்ணிக்காம , குழந்தைகள்  இல்லாம   அர்த்தம்  உள்ள  வாழ்க்கை   வாழலையா?  


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   லெஸ்பியன்  ஜோடி ஆக வரும் இரு பெண்களையும்  அழகிகள ஆகவே  காட்டி இருக்கலாம் . ஒருவரை மட்டும்  திருநங்கை  போல  அல்லது ஆண் தன்மை உள்ளவராகக்காட்டி இருக்கத்தேவை இல்லை 


2  நாயகியின்  மகளுக்கு  லெஸ்பியன் ஜோடி ஆக  வரும்  பெண் தனது  திருமண  வாழ்க்கை  பற்றி  விளக்கும்  காட்சி கொடூரம் . கொஞ்சம்  நாசூக்காகக்காட்சி அமைத்திருக்கலாம் 


3  க்ளைமாக்சில்  நாயகி  தற்கொலை செய்ய முயற்சிப்பது போல ஆடியன்சை  எண்ண வைத்து  ட்விஸ்ட் தருவது தேவையற்றது 


4  வினீத்  தன்  மனைவியை  விட்டு வேறு பெண்ணுடன்  இருப்பதற்க்குக்கூறும் காரணம் சால்ஜாப்பு  மடத்தனம் 


5  நாயகி  மீது  நமக்குப்பரிதாபம் வருகிறதே  தவிர   லெஸ்பியன்  ஜோடி இணையட்டும்  என்ற  எண்ணம்  வரவில்லை . அது  திரைக்கதையின் பலவீனம் 


6  அப்பா  மகளுக்கு  முன்  தம் அடிப்பது , பிரிந்த  மனைவியின் பெட்ரூமில் கணவனுக்காக  சரக்கு  பாட்டில்  வைத்திருப்பது    தேவையற்ற  காட்சி 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  எல்லோருக்கும் பிடிக்காது . 70 , 80 களில் பிறந்தோர்  தவிர்க்கலாம் . 2 கே  கிட்ஸ்  ரசிக்கலாம் . ரேட்டிங்  2.25 / 5 . விகடன்  - 40 


Kaadhal Enbadhu Podhu Udamai
Theatrical release poster
Directed byJayaprakash Radhakrishnan
Written byJayaprakash Radhakrishnan
Produced by
  • Jomon Jacob
  • Nithiyah Atputharajah
  • Dijo Augustine
  • Vishnu Rajan
  • Sajin S Raj
Jeo Baby (Presenter)
Starring
CinematographySree Saravanan
Edited byDani Charles
Music byKannan Narayanan
Production
companies
  • Mankind Cinemas
  • Symmetry Cinemas
  • Nith's Productions
Distributed byCreative Entertainers and Distributors
Release dates
  • 20 November 2023 (IFFI)
  • 14 February 2025 (India)
CountryIndia
LanguageTamil

Saturday, March 01, 2025

டிராகன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

       

         ஓ மை  கடவுளே (2020)   என்ற  ஹிட் படத்தின் இயக்குனர்  அஸ்வத் மாரிமுத்து +  லவ் டு டே (2022)  படத்தின் இயக்குனர் + நாயகன்  பிரதீப் ரங்கநாதன்  இருவரும் இணைந்திருக்கும் படம் இது .படம் ரிலீஸ் ஆகும் முன்பே  பல சர்ச்சைகள் .  ஒரே  ஒரு ஹிட்   கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய்  சம்பளம் கேட் கிறார்  என புலம்பல்கள் . இந்தப்படமும்  மெகா  ஹிட் ஆகி விட்ட்தால்  இனி 25 கோடி ரூபாய் சம்பளம்  கேட்கலாம் . வன்முறை  , அடிதடி  இல்லாமல்  ஏ, பி, சி   என  ஆல்  சென்ட்டர்  ஹிட் அடித்திருக்கும் இந்தப்படத்தைப்பற்றிப்பார்ப்போம்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

பிளஸ் டூ  படிக்கும்போது  96% மார்க் வாங்கி கோல்டு மெடலிஸ்ட் ஆக விளங்கும்  நாயகன்  தன பள்ளித்தோழி இடம்  லவ் பிரப்போஸ்  செய்கிறார் . ஆனால் அந்தப்பெண்   சொன்னது .. உன்னை மாதிரி  நல்ல பசங்க எனக்கு செட் ஆக மாட் டாங்க , என்னை மாதிரி அழகான  பொண்ணுங்க  பொறுக்கி , ரவுடி  மாதிரி  இருக்கும் பையன் பின்னால போனாதான் கெத்து   என்கிறாள்


 பொதுவாக  இந்த மாதிரி  ஆகாவளிகளுக்கு  அழகான  பெண் காதலி ஆக அமைவாள் என்பது தலை எழுத்து . அப்படி அமைந்த பெண் ஒரு கட்டத்தில்  நாயகன்  வாழ்க்கையில்   செட்டில் ஆக வழி இல்லை  என்பதை உணர்ந்து  லவ் பிரேக்கப் செய்கிறாள் . அமெரிக்காவில்  ஒரு வரன் பார்த்து  திருமணம் செய்து கொள்கிறாள் 


நாயகன்   செம   கடுப்பு ஆகிறான் .தன்  முன்னாள் காதலியின் கணவனை  விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐடியா செய்கிறான் .போலி  சார்டடிபிகேட்   ரெடி   செய்து .போலியான  இண்ட் டர்வ்யூ  மூலம்   ஒரு மிகப்பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்கிறான் .அங்கே  அவனது திறமை மூலம் முன்னுக்கு வருகிறான் .கார் , பங்களா என லைபில் செட்டில் ஆகிறான் 


ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன்  நாயகனுக்குத்தன் பெண்ணைத்திருமணம் செய்து கொடுக்க முன் வருகிறார் . பொதுவாக  அதிர்ஷட லட் சுமி இந்த மாதிரி மடத்தனமான அட்ரசில் போய் தான் கதவைத்தட்டும் என்பதால்  நாயகனுக்கு ஜாக்பாட் அடிக்கிறது . அப்போதான்  சனீஸ்வரன்  எதிரே   வருகிறான் 


 ஒரு நாள்  எதேச்சையாக  நாயகனின் காலேஜ்  பிரின்சிபால் அவனை சந்திக்கிறார் .நாயகனின் பிராடுத்தனங்களை அறிந்து அவனை  எச்சரிக்கிறார் .ஒழுங்காக  48 அரியர்ஸையும் கிளியர் செய்து விடு இல்லாவிட்டால்  உன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவேன் என்கிறார் 


வேறு வழி இல்லாமல் அதற்கு ஓகே சொன்ன  நாயகன்  ஒரு மூன்று மாதங்கள்  லீவ்  எடுத்து  மீண்டும் காலேஜில் சேர்கிறான் . வேலை செய்யும்  கம்பெனியில் , வருங்கால மாமனாரிடம்  எதோ   போய் சொல்லி எஸ் ஆகிறான் .அவன்  48 அரியர்ஸையும்   3 மாதங்களில்  கிளியர்  செய்தானா?  அந்த கோடீஸ்வரி யைத்திருமணம் செய்தானா? இல்லையா? என்பது மீதி  திரைகக்தை 


நாயகன்  ஆக   பிரதீப் ரங்கநாதன் அசால்ட் ஆக  நடித்திருக்கிறார் .முதல் படத்தில் நடித்ததை விட இதில் அதிக வாய்ப்பு . பின்னிப்பெடல்  எடுத்திருக்கிறார் . காலேஜ்  மாணவனாக  வரும்போது அசல்  பொறுக்கி  மாதிரியே  ஹேர் ஸ்டைல் , உடல்  மொழி  அனைத்தையும்   கொண்டு வருபவர் , கம்பெனியில் வேலைக்கு சேரும்போது  பக்கா  டீசண்ட் ஆக  மாறுவது   அருமை .வருங்கால  மனைவியிடம்  போனில் சமாளிப்பது , காலேஜில்  முன்னாள்  காதலி லெக்சரர் ஆக  வருவது  கண்டு  பம்முவது  என  நடிப்பதற்கு ஸ்கோர் அதிகம் 

காதலி ஆக வும் ,காலேஜ்  லெக்சரர்  ஆகவும் வரும்  அநுபமா  பரமேஸ்வரனும் நடிப்பில், அழகில் அசத்தி இருக்கிறார் கோடீஸ்வரி  ஆக   வரும் கயோடு லோஹர்  இதில் தான் அறிமுகம் .அளவான  நடிப்பு , அளவுக்கு மீறிய கிளாமர்  என  பிழைக்கத் தெரிந்தவராக இருக்கிறார் .இவனா சிநேகா  கெஸ்ட் ரோலில் வந்து கை  தட் டல்  பெறுகிறார் 


காலேஜ்   பிரின்சிபால் ஆக   வரும் மிஷ்கின்  அசத்தி இருக்கிறார் .கிட்டத் தட் ட   வில்லன்   ரோல் .ஆனால்  நல்லவர் .கம்பெனி  எம் டி ஆக  கவுதம் வாசு தேவ்  மேனன்  மிடுக்கான நடிப்பு . நாயகனின்  அப்பாவாக  ஜார்ஜ்  மரியம்  உருக்கமான   குணச்சித்திர   நடிப்பைத்தந்துள்ளார் 


லியோன்  ஜேம்ஸின் இசையில் 6 பாடல்கள் . 3 செம ஹிட் . பின்னணி   இசையும் அருமை  சிலம்பரசன் பாடிய  ஏண்டி என்னை விட்டுப்போன ?பாடலில்   தியேட் டரில் ஆராவாரம் .நிகித்  பூமியின் ஒளிப்பதிவில்  பிரம்மாண்டமாக  காட் சிகள்  அழகு .பிரதீப்  ராகுவின் எடிட்டிங்கில்  படம் 155 நிமிடங்கள் ஓடுகிறது 


 பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து   கதை எழுதி ய  அஸ்வத் மாரிமுத்து  திரைக்கதை  எழுதி   இயக்கி  இருக்கிறார்  



சபாஷ்  டைரக்டர்


 1  டி ராகவன்    எப்படி டிராகன் ஆக  மாறுகிறான் என்ற   தாட்  பிராசஸ்    அருமை . D RAG"AVA"N ராகவன்  ல இருக்கும் அவள் ஐ  (AVA)  தூக்கிட்டு   ஓ  போடு . எனும் சீனில் தியே ட்டரில் ஆரவாரமான  கை  தட் டல் 


2  ஆன் லைன்  இண்டர்வ்யூ நடக்கும்போது   நாயகன் ஏமாற்று வதும் , கவுதம்   நாயகனிடம்  இந்த ரூமை  சுற்றிக்காட் டு  எனும்போது  நாயகனின் சமாளிபிகேஷனும் அருமை 

3   காலேஜ்  மீண்டும்  போகும்போது அங்கே  முன்னாள்   காதலி லெக்சரர் ஆக  இருப்பது  டிவிஸ்ட்   என்றால்   அவள் நாயகனுக்கு உதவுவது , அதற்கு சொல்லும் காரணம் ட ச்சிங்க் 


4   காலேஜ் லைபில்  குட்டி டிராகன் ஆக  ஒரு உருப்படாதவன் இருப்பதைக்கண்டு நாயகன் மனம்  வெதும்புவது வெடிச்சிரிப்பு 


5  மிஸ்கின்   கொடுக்கும் இடைவேளை  டிவிஸ்ட்  அசத்தல் 

6 மங்காத்தா  , சதுரங்க  வேட் டை  மாதிரி   படங்களில்   நாயகன் கெட் டவன்  ஆக  இருந்தாலும் ஜெயிக்கிறான் என்ற தவறான மெஸேஜை சொல்வார்கள் . இதில்  நாயகன்  நல்லவன் ஆக  இருப்பதே  சிறப்பு என்பதை உணர்வது பாசிட்டிவ் ஆன விஷயம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மேரேஜ்  பண்ணிட்டு   எங்களை எல்லாம் மறந்துடாத 


 மேரேஜ்  பண்ணப்போறதே  உன்னைத்தான் ,.ஐ லவ் யூ


2  ஐ லைக்  பேடு பாய்ஸ், .கெத்தா  இருக்கும் 


3  ஏண்டி , அந்த பாரீன் மாப்பிளையை  ரிஜெக்ட் பண்ண ரீசனே இல்லை . அப்புறம் என்ன சொல்லி ரிஜெக்ட் பண்ணினே ? 


அந்த பாரீன் மாப்பிளையை  ரிஜெக்ட் பண்ண ரீசனே இல்லை. அதனால  யோசிக்கிறேன் 


4  ஒரு தப்புப்பண்றதால நாம லைப் பூரா நல்லா இருக்கலாம்னா  அந்தத்தப்பைப்பண்றதுல தப்பே இல்லை 


5  தோத்துக்கிட் டே  இருக்காங்க   என்பதற்காக  நமக்குப்பிடிச்ச டீ மை விட்டுக்கொடுக்க முடியாது , மாத்திக்க முடியாது 


6   ஹனிமூன்  எங்கே  போலாம்னு இருக்கே? 


 எங்கே  போனா என்ன? எப்படியு ம் பெட் ரூம்;ல தான் இருக்கப்போறோம் 


7   டிகிரி   என்பது  அஸ்திவாரம்  மாதிரி .நீ அஸ்திவாரம்  இல்லாமையே பில்டிங்க் கட்டிட் டே


8   உன் கூட   என்ன   ரிலேஷன்ஷிப் ? 


 வெக்கேசன்ஷிப்  . ஒண்ணா   சேர்ந்து ஊர் சுத்துவது 


9  மியா கலி பாவே வந்தாலும் அசர மாட்டேன் 


10  பசங்க  அட்டென்சன்   தர்லைன்னா  நாம  தான் அட்டென்சன் கேதர்  பண்ணனும் 


11   அவ   நல்ல பெண்ணாச்சே?  உன்னை எப்படி செலகட்   பண்ணினா ?


12    ஒரு   தப்புபண்ணிட்டு   ஈஸியா  அதைக்கடந்துடலாம்னு நினைக்கிறே  , ஆனா காலம் பூரா அந்த குற்ற உணர்வு உன்னைத்துரத்திக்கிட்டே  இருக்கும் 


13  பண்ணின   தப்புக்களை கரெக்ட்  பண்ண   எல்லாருக்கும்    சான்ஸ்  கிடைக்காது 


14   அப்புறம் என்ன?   லவ்வை சொல்லி செருப்படி வாங்கறது ? 


15   கெத்து   காட்டினா  பொண்ணுங்க ரசிப்பாங்க , ஆனா  வாழ்க்கைல செட்டிலானாதான் நம்ம கூட வாழ நினைப்பாங்க 


16  அனுபவத்துல சொன்னா   பூமரா? 


17   லவ் பண்ணின    நாளில் இருந்து   எனக்காக எத்தனையோ செய்திருக்கே,   ஆனா உனக்காக நான் எதுவுமே செய்ததில்லை 


18   நான்     உனக்கு  தகுதியானவன்  இல்லை 


19    அமெரிக்காவில்  படிச்சுட்டு  ஏண்டி   இப்படி பழைய   சோறா இருக்கே? 


20  நான்   கெட்டவன்   தான் , ஆனால்  இன்னொருத்தன் வாழ்க்கையை அழிச்சிட்டு  அதன் மூலம்   வாழும் அளவு கெட் டவன்    இல்லை 


21  வாழ்க்கைல எல்லாரும்  வெற்றியின் பின்னால் தான் ஓடிட்டே  இருக்காங்க . ஆனா   சிலர் மாத்திரம் தான் கீழே  விழுந்தாலும்    மீண்டும்  எழுந்து   ஓடுவாங்க 


22   நிறைய   தப்புப்பண்ணி   திருந்தி  வாழ்பவன்  வாழ்க்கைல நல்லா இருப்பான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஆன்   லைன்   இண்டர்வ்யூ நடக்கும்போது   நாயகன் ஏமாற்று வது  ஓகே , ஆனால்   நேரில்   வரும்போது  ஒரு  ரி  டெஸ்ட்   வைக்க   மாட்டார்களா? 


2  நாயகன்  வாழ்க்கையில்  பல கட்டங்களில்  தன்  உயர்வுக்காக  ஏமாற்று கிறான் . ஆனால்  க்ளைமாக்சில்  திடீர் என திருந்துவது எப்படி ? 


3  திருமண   மண்டபத்தில்  நாயகன்   தாலி கட்டாமல்  எழுந்து   செல்வது சரி .ஆனால்   கோடிஸ்வரப்பெண், மாமனார்  ரி  ஆக்சன் என்ன? என்பதை சொல்லவே இல்லை . . திருமண  பந்தலில்  அப்டி  விட்டுப்போக சம்மதிப்பார்களா?  


4   கடந்த  10 வருட  வினாத்தாள்களைப்படித்தால் போதும் , எக்ஸ்சாம்ல பாஸ் ஆகிடலாம் என காதலி சர்வ சாதாரணமாக சொல்கிறாள் . அதுவே  80%  மொத்த   சிலபஸ்   ஆக இருக்குமே? அத்தனையையும் ஒரு ஆளாக  காதலி டைப் செய்து தருவது எப்படி ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 படிக்கின்ற   மாணவர்கள்  மனதில்  ஒரு பாசிட்டிவான எண்ணத்தை  விதைக்கும் நல்ல படம் .குடும்பத்துடன் பார்க்கலாம் . இது  ஆல் செண்ட்டர்  ஹிட் மெட்டிரியல் . விகடன் மார்க் யூகம் 46 . குமுதம் ரேங்க்கிங்க்  நன்று . ரேட்டிங்க்  3 / 5 


Thanx to anicham 1/3/2025 issue


Thursday, February 27, 2025

ANAMADHEYA ASHOK KUMAR (2025) -கன்னடம் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்,)




7/2/2025    அன்று  திரை அரங்குகளில்  வெளியான  இந்தப்படம் கமர்ஷியல் ஆக  மெகா ஹிட் ஆகவில்லை என்றாலும் விமர்சகர்களிடையே பாசிட்டிவான வரவேற்பைப்பெற்றுள்ளது .இன்னும்  ஓ டி டி  யில்  வரவில்லை .ஒன்றே முக்கால் மணி நேரம் தான் ரன்னிங்க் டைம் என்பதால் இதை ஒரு குயிக் வாட்ச்  ஆகவே பார்த்து விடலாம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  நம்ம ஊர்  நக்கீரன் கோபால் மாதிரி இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட்   ரிட்டையர் ஆன ஒரு  சீனியர் கிரிமினல் லாயரைப்பேட்டி  எடுக்கிறார் அந்தப்பேட்டியின் போது  ஒரு அடையாளம் தெரியாத நபரால்  அந்த லாயர் கொலை செய்யப்படுகிறார்  நாயகனுக்கும் காயம் ஆகி இருக்கிறது சுய பாதுகாப்புக்காக லாயரைக்கொலை செய்த கொலையாளியை நாயகன் தாக்கிக்கொன்று விடுகிறார் 


 இந்தக்கேஸை விசாரிக்கும் போலீஸ் இந்தக்கொலைக் கேசில்  நாயகன் தான் முக்கிய சாட் சி   என்றாலும்  நாயகன் தான் பிரைம் சஸ்பெக்ட்டும் கூட   என   நினைக்கிறது நாயகனே  லாயரைக்கொலை செய்து இருக்கலாம்  எனவும்  சந்தேகிக்கிறது 


 நாயகனுக்கும்  லாயருக்கும் என்ன முன் விரோதம் ?  எதனால்   நாயகன்  அந்தக்கொலையை   செய்தான் என்பது மீதித்திரைக்கதை 


நாயகன்   ஆக  கிசோர்  குமார்   நடித்திருக்கிறார்  கச்சிதமான    நடிப்பு லாயர்  ஆக   நடித்தவரும்  கதாபாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார்  விசாரிக்கும்   போலீஸ்  ஆபீசர்  ஆக வருபவர்  சிக்ஸ் பேக்  பாடியுடன் ட்ரிம் ஆகஇருக்கிறார் பாராட்டுக்கள் 



ஆசாத்தின்  பின்னணி இசையில்  விறு விறுப்பு இருக்கிறது .கே ஏசுவின் எடிட்டிங்கில் படம் 104 நிமிடங்கள் ஓடுகிறது . சுனில்  ஹூனாலி தான் ஒளிப்பதிவு .மொத்தப் படமும்  ஒரே  அறையில்  நடப்பது போல  காட்சி  அமைப்பு இருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு  சவாலான பணி தான் 


பென்னி  தாமஸ்   என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய  சாகர்   குமார்  இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


1   இது  ஒரு லோ பட்ஜெட்  படம் என்பதால்  மிகக்குறைந்த  எண்ணிக்கையில்  நடிகர்கள் , லொக்கேஷனும்  ஒரே ஒரு இடம் தான் . செலவே  இல்லாமல் பார்த்துக்கொண்ட விதம் 


2  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமான படம் எல்லாம் இல்லை .போர் அடிக்காமல் போகிறது .ரேட்டிங் 2.5 / 5 


Anamadheya Ashok Kumar
Theatrical release poster
Directed bySagar Kumar
Screenplay by
  • Sagar Kumar
  • Benny Thomas
Starring
CinematographySunil Honnali
Edited byK Yesu
Music byAzad
Production
company
SKN Films
Distributed byJanani Pictures
Release date
  • 7 February 2025
Running time
1 hour 44 minutes
CountryIndia
LanguagesKannada, Tamil

Wednesday, February 26, 2025

சாட்சி பெருமாள் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ டென்ட் கொட் டா

 

          இந்தப் படம்  ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவானது .திரை  அரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக டென்ட் கொட்டா   ஓ டி டி  யில் ரிலீஸ் ஆகி உள்ளது .பல  திரைப்பட  விழாக்களில்  பங்கேற்று 12 விருதுகளை அள்ளிக்குவித்த படம் . ஒரு மணி  நேரம் தான் டைம்  டியூரேசன்  என்பதால் ஒரு குயிக் வாட்ச்  ஆகவே இதைப்பார்த்து விடலாம்              


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின்  பேத்திக்குக்காதுகுத்து .அந்த விழாவில் தோடு  எடுத்துக்கொடுக்கணும் , 12,000  ரூபா  செலவு  ஆகும் .ஆடி மாதம் என்பதால் தொழில் சரி இல்லை , கையில்காசு இல்லை . நாயகன்  ஒரு பத்திரப்பதிவு   தனியார் அலுவலகத்தில்  வேலை செய்பவர் .பத்திரம்   எழுதும்போது சாட்சிக்கையெழுத்துப்போடுபவர் .ஆடி மாதத்தில் பத்திரப்பதிவு எதுவும் நடக்காது என்பதால்  வேலை இல்லை . நாயகனின் மருமகன்  அவர் காது படவே  எகத்தாளமாகப்பேசுகிறான் . அவன் வாயை அடைக்க  எப்படியாவது  தோடு  சீர் செய்ய வேண்டும் .நாயகன் என்ன செய்தார் என்பது மீதி திரைக்கதை 


 நாயகன்  ஆக  நடித்தவர் இயற்கையான கிராமத்து வெள்ளந்தி மனிதர் பாத்திரத்தை அப்படியே உள்  வாங்கி நடித்திருக்கிறார் .அவரது  மனைவியாக வருபவரின் டயலாக்  டெலிவரி அருமை .படத்தில் நடித்த   மீதி  கேரக்ட்டர்களும் கச்சிதமான நடிப்பை   வழங்கி  இருக்கிறார்கள் 


  திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர்  வினு .ஆனால்  டைட்டிலில் ஆங்கிலத்தில் விண்ணு  என  வருகிறது . நே மாலஜி , நியூமராலஜி ஆக இருக்கலாம் 

சபாஷ்  டைரக்டர்


1  கிராமத்து மக்களின்  வாழ்வியலை யதார்த்தமாகக்காட்டிய விதம் 


2   ஒளிப்பதிவு  ,லொக்கேஷன்  செலக்சன்  இரண்டும் அருமை 


  ரசித்த  வசனங்கள் 

1   மெட்டியை அடகு வெச்சா வீட்டுக்கு ஆகாது


2 ஆடி மாசமும் அதுவமா அவனவன் பொண்டாட்டியை தங்கத்தால் இழைச்சுக்கிட்டு  இருக்கான் .இவன் என்னடான்னா  மெட்டியை அடகு வைக்க வந்திருக்கான் , தரித்திரம் பிடிச்சவன் 


3  செய்யறது பூரா அயோக்கியாத்தனம்  , ஆனா சாமி எப்படிக்கும்பிடறான் பாரு 


4 இந்த மாதிரி  களவாணிப்பயல்களுக்குத்தான் சாமி கருணை காட்டுது 


5  காலைல  ஒரு உதவி கேட்டிருந்தேனே ?


 காசைத்தவீர   என்ன உதவி வேணாலும் கேளு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன் வறுமையிலஷ்டப்படுவதாக காட்டுகிறார்கள் . ஆனால்  டியூட்டியில்  முதல்   நாளிலேயே   ஒரு பார்ட்டியிடம் 3000 ரூபா , இன்னொரு பார்ட்டியிடம் 5000  ரூபாய் சம்பாதிக்கிறார் . அது போக   ஓனர் ஒரு 1500  ரூபாய்  தருகிறார் . மொத்தம்  9500   ரூபாய் .நமக்குப்பார்க்கும்போது எழும் கேள்வி . ஒரு மாசத்துக்கு  எப்படியும் 25,000  ரூபாய்  அசால்ட் ஆக  வருமானம் வரும் போலயே  .அந்தப்பணம் எல்லாம் என்ன ஆச்சு ? என்பதே .அவர் மீது பரிதாபம் வரவில்லை 


2   ஒரு சீனில்   கோபத்தில்   நாயகன்  ஒரு ஆளிடம்  தன பாக்கெட்டில்  இருந்த பணத்தை வீசி எறிகிறார் .நகரத்து ஆட்கள்  வேணா  பணத்திமிரில்   அப்படி செய்யலாம், ஆனால் பணக்கஷ்டத்தில் இருக்கும் ஏழைக்கு அது லட் சுமி .அவமானப்படுத்த மாட் டார்கள் 


3  க்ளைமாக்சில்  ஒரு ஆள்   நாயகனுக்கு உதவுகிறான் .அவன் தன சொந்தத்தங்கைக்கே  உதவாதவன் , அறிமுகம் இல்லாத ஆளுக்கு அவ்ளோ பணம் தருவானா? 


4 கிராமத்து  மக்களிடம்  சேமிப்பு இருக்கும் . நாயகன் தினசரி  சம்பாதிக்கும் பணத்தின் சேமிப்பை என்ன செய்தார் ? என்பதற்கு பதில் இல்லை 


5  நாயகனை  சாட் சி   சொல்ல கோர்ட்  போக வேண்டாம்  என ஒரு ஆள் அடிக்கிறான் .அதை தன முதலாளியிடமோ , சம்பந்தப்பட் ட பார்ட்டியிடமோ சொல்லாமல் மறைக்கிறார் .மாடு முட்டிடுத்து என பொய் சொல்கிறார் . அது எதனால் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 நல்ல படம் தான் பார்க்கலாம் . ஆனால்   சில கேள்விகள்  எழுகின்றன . ரேட்டிங்க்  2.5 / 5 

Tuesday, February 25, 2025

DHOOM DHAAM (2025)- ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

              



ஜெயம் ரவி +கங்கனா ரணவத் காம்போவில்  ஜீவாவின் இயக்கத்தில் வெளியான   தாம் தூம் (2008)  படத்தின் கதைக்கும் , இந்த   தூம் தாம்  படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .14/2/2025அன்று வெளியான இப் படம் நெட் பிளிக்ஸ்  ல தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது 

           


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு வெட்னரி  டாக்டர் .அவருக்கு பெற்றோரால் நிச்சயிக்கப்பட் ட  திருமணம்  நடக்கிறது . அன்று இரவு அவர்களுக்கு முதல் இரவு . எங்கே  கொண்டாட  விடறாங்க ? ரூம் கதவை ரெண்டு பேரு டொக் டொக்னு தட்றாங்க . யாருடா இந்த நேரத்துல என பார்த்தா அவங்க  நாயகனிடம் "சார்லி  எங்கே?" அப்டினு கேட்கறாங்க



சார்லி  யார்?  என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் .வேலியே பயிரை மேய்ந்த கதையா   ஒரு வில்லன் போலீஸ் ஆபீசர்  10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கிறார் ., அதை  நாயகனின் மாமா வீடியோ எடுத்துடறார் . அந்த வீடியோ ஆதாரத்தை  ஒரு பென்  டிரைவில்  பதிவு பண்ணி  நாயகனுக்கு தந்த மேரேஜ் கிப்ட் பேக்கில் போ ட்டுடறார் .அந்த பென்  டிரைவ் சார்லி கம்பெனி பென்  டிரைவ் . இரண்டு வெவ்வேறு கும்பல் அதைத்தேடுது . வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் கும்பல் , அவங்களைப்பிடிக்கக்களம் இறங்கி இருக்கும் சி ஐ டி கும்பல் . இந்த இரண்டு தரப்புமே நாயகன்  அண்ட் நாயகியைத்துரத்தறாங்க 


இதுல நாயகன் ஒரு அம்மாஞ்சி . அவருக்கு தெனாலி  கமல் மாதிரி  ஏகப்படட போபி யாக்கள் இருக்கு .உயரமான இடத்தைக்கண்டால் பயம் , அடைபட் ட இடத்தைக்கண்டால்  பயம்  என 12 டஜன் போபியாக்கள் இருக்கு . நாயகி ஒரு கன்  பைட் காஞ்ச்சனா . விஜயசாந்தி மாதிரி ஆக்சன் நாயகி . . இந்த இரண்டு கும்பலிடம் இருந்தும் நாயகி  நாயகனை எப்படிக்காப்பாற்றினார் என்பதுதான் மீதிக்கதை 


 நாயகி  ஆக     யாமி கவுதம்  அதகளப்படுத்தி இருக்கிறார் .தெனாவெட் டான  பேச்சு , ஆக்சன்  ஸீக்வன்ஸ்   என சிக்ஸர் அடிக்கிறார் நாயகன்ஆக  பிரதீப் காந்தி அடக்கி வாசித்து இருக்கிறார் .பயந்த சுபாவம் உள்ளவராக அவர் காட்டும் முக பாவனைகள்  கச்சிதம் 


ரிஷப சேத  இயக்கி இருக்கிறார் . எடிட்டிங்க்  செம ஷார்ப் .108 நிமிடங்கள் டைம் டியூரேசன் 

சபாஷ்  டைரக்டர்


1  நிச்சயதார்த்தத்தின்போது பெண்ணைப்பற்றி அவர் அப்பா , அம்மா சொல்லும்  தகவல்கள்  எல்லாம் பொண்ணு ரொம்ப சாத்வீகம் என்பது போல இருப்பதும் , திருமணத்துக்குப்பின்  எல்லாம் தலைகீழாக  இருப்பதும்  நிஜ வாழ்வில் அப்படித்தான் இருப்பதால் நம்மால் ஈசியாக கனெக்ட் ஆக்கிக்கொள்ள முடிகிறது 


2  நாயகன் கார்  ஓட்டத்தடுமாறும்போது  நாயகி  டிரைவிங்  சீட்டில் அமர்வதும் நான் கார்    ரேஸ்  எல்லாம்  கலந்திருக்கேன் என்பது    அடிபொழி  ஆக்சன் ஸீக்வன்சுக்கான  லீடு 


3   தன மனைவிக்கு ஒரு ஆபத்து என்றதும் நாயகன்  ஆக்சனில்  இறங்குவது அதைக்கண்டு நாயகி பெருமைப்படுவதும்   கச்சிதம் 



4 படம் முழுக்க  சே சிங்க் இருந்தாலும் கிடைத்த கேப்பில்  எல்லாம் காமெடி , ரொமான்ஸ் கலந்தது சிறப்பு 


5  நாய் கக்கா போய்  இரண்டு நாட்கள்  ஆகுது  என்னும் வசனம் பட ஓப்பனிங்கில்  வருகிறது . அது தான் படத்தின்  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்   என்பது   செம  ஐடியா 



  ரசித்த  வசனங்கள் 



1   பசங்களை  விட பொண்ணுங்க  எந்த அளவு   கம்மியா  பேசறாங்களோ அந்த அளவுக்கு அவங்களுக்குப்பாதுகாப்பு 


2  மேரேஜ் ஆகி பர்ஸ்ட்  நைட் இன்னும் முடியல , அதுக்குள்ளே    நீ , வா , போ என   மரியாதை  இல்லாம புருசனைப்பேசறே ?   


3  பொண்ணுங்க  தேவைக்குன்னு பொய் சொல்றதில்லை , வேற வழி இல்லாம தான் பொய் சொல்றோம் 


4 பேச்சிலர் பார்ட்டியைத்தான் பூஜைன்னு சொன்னியா? 


5  என்னைப்பழி வாங்கத்தான் இவ உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட் டா 


6  சரியான உறவு நல்ல தம்பதியை சேர்த்து வைக்கும் 


7  நான்  ஒரு வெட்னரி டாக் டர் . அதனால  வெஜிட் டேரியன் .நான்வெஜ் எப்படி சாப்பிட முடியும் ? ஒரு டாக்ட்டரால பேஷண்டை சாப்பிட முடியமா? 


8   ஏத்துக்கும்  குணத்தை ஏத்துக்கறேன்னு சொல்லு 


9  விலங்குகள் யாரையும் எடை போடாது .ஜட்ஜ் பண்ணாது 


10 நிறைய  அழகான  பொண்ணுங்களுக்கு நடுவில் என்னை நானே ரிஜெக்ட் செய்து கொள்வேன் 


11   எந்த அளவு உன் போபியாவை எதிர்கொள்கிறாயோ அந்த அளவு உன் பயம் குறையும் 


12  திஸ்  ஈ ஸ்  அவர்  எக்ஸ்போஷர் தெரபி 


13  பார்க்க  ஹல்க்  மாதிரி  இருக்கான், ஆனால் சில்க் மாதிரி  வேலை  பன்றான் 


14    நான்  உங்களை மேரேஜ்  பங்க்சன்ல பார்க்கலையே? 


 அவ ஷை டைப் . யார் கண்ணுக்கும் தட் டுப்பபட மாட் டா 


15 நான்   உங்க அப்பனுக்கே அப்பன் டா  இதுதான் கோடு  வோர்டு 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



காமெடிப் படத்தில்  எதுக்கு லாஜிக் பார்க்கணும், ஜாலியா சிரிப்போம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆக்சன் ,சேசிங்க் ,காமெடி  என படம் பூரா செம ஸ்பீடு ன்.பார்க்கலாம் .ரேட்டிங் 2.75 / 5 

Monday, February 24, 2025

PAINKILI (2025) - பைங்கிளி - மலையாளம் சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

       


  14/2/2025  ல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம்  மீடியம் ஆகத்தான் ஹிட்  ஆகி இருக்கிறது .ஓடி டி யில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை                  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு மைனர் . இன்னும் 18 வயது ஆகவில்லை . ஆனால் அவளது பெற்றோர் அவளைத்திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்துகின்றனர் .இதனால் கடுப்பான நாயகி  வீடடை விட்டு ஓடி விடத்தீர்மானி த்து பல முறை முயற்சித்தும் அப்பாவிடம் மாட்டி பே க் டு த பவுலியன்  என வீட்டுக்கே வருகிறார் 



நாயகன்  சொந்தமாகத்தொழில் செய்பவர் .அம்மா,அப்பா ,நண்பர்கள்  ஏன அவர் பாட்டுக்கு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் .தொழில் சம்பந்தமாக ஒரு பொருள் வாங்க வெளியூருக்குப்போகிறார் . அங்கே  அவரது பைக்கை ஒருவன் திருடி விடுகிறான் . அவனைத்துரத்தப்போய் எதிர்பாராத விதமாக அவனைக்கொலை செய்து விடுகிறார் . கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மன நலம் சரி இல்லாதவர் போல நடித்து  ஒரு சர்ட்டிபிகேட் ரெடி செய்கிறார் . இந்த விஷயம்  நாயகன் உடைய .அம்மா,அப்பா ,நண்பர்கள் யாருக்கும் தெரியாது .நிஜமாகவே நாயகன் மன நலம் குன்றி இருக்கிறான் என ஊரில் சேதி பரவுகிறது 


 நாயகி   நாயகனைக்காதலிப்பது போல நடித்து  தன்  வீட்டில் இருந்து தப்பிக்க ஒரு டிராமா போடுகிறார் . இதற்குப்பின் என்ன ஆனது என்பதுதான்  மீதித்திரைக்கதை 



நாயகன்  ஆக  சஜின் பாபு கலக்கி இருக்கிறார் .அவரது உடல் மொழி பிரமாதம் தன்னையே சுற்றி  வரும் பெண்ணைக்கண்டுக்காமல் இருப்பது , வலிய வந்து தன்னைக்காதலிக்கும் நாயகியின் டிராமா புரியாமல் அவர் வலையில்  வீழ்வது , பைத்தியம் ஆக நடிப்பது  என  நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார் 


நாயகி  ஆக அனஸ்வரா ராஜன் .இவரது இளமைக் குறும்புகள் ,சுட்டித்தனங்கள் எல்லாம் அட் டகாசம் பெரும்பாலான கேரளா நாயகிகள் கொழுக் மொழுக்  என இருக்க இவர் ஸ்லிம் பிட் ஆக இருப்பது கண்களைக்கவர்கிறது ( பின் குறிப்பு - கொழுக் மொழுக் நாயகிகளையம்  நாங்கள் ரசிப்போம் ) 


சந்து சலீம் குமார் ,ரோஷன் ஷாநவாஸ்  ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார்கள் 


பகத் பாசில்  நடித்த ஆவேசம்  படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் தான் இந்தப்படத்தின் கதை , திரைக்கதை , நடிகர் ஸ்ரீ ஜித் பாபு தான் இயக்கம் 


அர்ஜுனும் சேதுவின் ஒளிப்பதிவு  கலக்கல் ரகம் ,,, ஜெஸ்ட்டின் வர்கீசின் இசையில் இரு பாடல்கள்செம ஹிட் , பின்னணி இசை ஓகே ரகம் . எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் செய்து இருக்கலாம் .இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  அனஸ்வரா  ராஜன்  துள்ளலான  நடிப்பு ,நாயகன் சஜின் பாபு வின் அமரக்கள மான  பங்களிப்பு  இரண்டும் பெரிய பிளஸ் 


2 படம் முழுக்க எல்லாவற்றையும் காமெடியாக அணுகிய விதம் 


3   ஹார்ட் அட்டாக் என்னும்  பாடலை  மாறுபட்ட   கோணத்தில் படமாக்கிய விதம் 


4  கெஸ்ட் ரோலில்   இயக்குனரின் பங்களிப்பு , நடிப்பு அருமை 



  ரசித்த  வசனங்கள் 



1   சும்மா  அவனைப்பார்த்து சிரி ,போதும் கூகுள் பே  பண்ணிடுவான் ,எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரிதான் 


2 பாஸ்  , உங்களை மாதிரி  ஒரு முட்டாளை  ஒரு  பொண்ணு   எப்படி லவ் பண்ணும் ?  இன்சூரன்ஸ்  ஏஜன்ட்  ஆக இருக்கும் 


3  நானும்  ஒரு ரவுடி , நீயும்  ஒரு ரவுடி . ஒரு ரவுடியோட வாழ்க்கைல இன்னொரு ரவுடி புகுந்து தகராறு செய்யக்கூடாது 


4 ஜெயிலுக்குப்போவது டூர்  போற   மாதிரி  இல்லை .எல்லாரையும் கூட்டிட்டுப்போக , நீ மட்டும் போய்ட்டு வா 


5   லீகல் கன்சல் டெண்ட்  ஆக தான்  இப்ப இருக்கான்  , முதல்ல  ரவுடியா இருந்தான்


6   நீ   பைத்தியம்னு ஒத்துக்கிட் டா  பல   பிரச்சனைகள் தீரும் 



7  நான்   அவளைக்கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட் டென் 


 அதை  மலை மேல வந்துதான் சொல்வியா? அடிவாரத்துலயே சொல்லி இருக்கலாமில்ல? 


8 நிஜமா  என்னை லவ் பண்றியா?  வேற பொண்ணு கிடைக்காததால் என் கிட் டே  வர்றி யா? 


9 கண்ணின்  கருவிழி   கருப்புதான் .ஆனால் அது காணும் காட் சிகள் எல்லாம் கலர் புல் 


10  சாரி  மிஸ் , இந்த மிக்சியை ரெடி பண்ண முடியாது 


 சட்னி தந்தா போதும் . ஏழரை  மணிக்கு வேணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   முதல் பாதியில்பரபரப்பாகக்காட் டப்பட் ட   கொலை   வழக்கு   பின்  பாதியில்  அ ட்ரஸையே காணோம் 



2  நாயகி   பலரையும் தன்  லவ் டிராமாவில் மயக்குவது ஒரு கட்டத்தில் அவரது கேரக்ட்டரை சந்தேகப்பட வைக்கிறது 


3  படம் முழுக்க காமெடி இருக்க வேண்டும் என்பதற்காக சீரியஸ் ஆன சீன்களை எல்லாம் கோட் டை விட்டு விட் டார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - காமெடிப் படம் தான் , ஆனா எல்லாருக்கும் பிடிக்காது .ரேட் டிங் . 2.5 / 5 

Sunday, February 23, 2025

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ? (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)

       


       சவுந்தர்யா ரஜினி  இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ரெடி செய்த கதை இது . யாரடி நீ மோகினி  கால கட்டத்தில்  உருவான  இந்த ஐடியா ஏனோ  செயல் படுத்த முடியாமல் போய் விட்ட்து .இப்போது  இந்தக்கதையில்  தான் நடித்தால்  சரியாக இருக்காது  என நினைத்து  தன  தங்கை மகனை  நாயகன் ஆக்கி இயக்கி இருக்கிறார் .பவர் பாண்டி (2017) , ராயன் (2024)  ஆகிய  படங்களுக்குப்பின் தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் மூன்றாவது படம் இது .21/2/2025     அன்று திரை  அரங்குகளில்  வெளியான இப்படம் சூப்பர் ஹி ட்டும் ஆகவில்லை , பிளாப்பும் ஆகவில்லை .பரவாயில்லை ரகம் என பெயர் எடுத்திருக்கிறது           


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்  சமையல்காரர்  (செப்) பணிக்காக்கப்படித்துக்கொண்டு இருப்பவர் . நாயகி ஒரு சாப்பாட்டு சீதை .இந்த ஒரு காரணம் போதாதா? இந்தக்காலப்பெண்களுக்கு சமையல் என்றால் என்ன என்றே  தெரியாத நிலை இருக்கும்போது ஆண்கள் சமையல் கலையைக்கற்று அதன் மூலம் பெண்களைக்கவர்ந்து வருகிறார்கள் .



நாயகன் , நாயகி இருவரும் காதலிக்கிறார்கள் .பின்னால் தான் நாயகி ஒரு கோடீஸ்வரர் மகள் என்பது நாயகனுக்குத்தெரிய வருகிறது .    நாயகியின்  அப்பா  தன்  மகளின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .நாயகனை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் நாயகியின்  அப்பாவுக்கு  லங்க்ஸ்  கேன்சர் ஸ்டேஜ் 4 , இன்னும் 6 மாதங்கள் தான் உயிரோடு இருப்பார் என்பது நாயகனுக்குத்தெரிய வருகிறது ,இந்த  விஷயம் நாயகிக்குத்தெரியாது 



 உயிரோடு இருக்கும் வரை அவர் நிம்மதியாக மகளுடன் இருக்கட்டும் என நாயகன்  நாயகியைத்தவிர்க்கிறார் .லவ் பிரேக்கப் ஆகிறது 



நாயகனுக்கு  வீட்டில் ஒரு பெண்பார்க்கிறார்கள் . பெண்பார்க்கும் வைபவத்தின் போதுதான் அந்தப்பெண் நாயகனின்  கிளாஸ்  மேட் , ஸ்கூல் மேட்  என தெரிகிறது . இருவருக்கும் சம்மதம் . அப்போதுதான் நாயகியின் திருமணப்பத்திரிக்கை நாயகனுக்கு வருகிறது 


நாயகன் அந்த திருமணத்துக்கு செல்கிறான் .அந்த  திருமண  விழாவில்  ஒரு பெண் அறிமுகம் .ஆகிறாள் அவளுக்கும் நாயகனின் சமையல் பிடித்துப்போய் காதலிக்கிறாள் .நாயகிக்கு  உண்மை தெரிய வருகிறது .இப்பொது  நாயகன்  இந்த மூவரில் யாரைத் திருமணம் செய்து கொண்டான் என்பது க்ளைமாக்ஸ் 



நாயகன்   ஆக  பவிஸ் நாராயண்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .முதல் படம் என்ற  தயக்கமே இல்லாமல்  கலக்கி இருக்கிறார் .உடல் மொழி , முக  பாவனை  , டயலாக் டெலிவரி அனைத்திலும் தனுஷின் பாதிப்பு இருப்பது   பிளசா?  மைனஸா?  என்பதை காலம் தான் தீர்மானிக்கும் 


நாயகி ஆக அனிகா சுரேந்திரன் .இவரை  பேபி அனிகாவாக  பல படங்களில் பார்த்து இருப்பதால் இப்போது அவரைக்குமரியாக ரசிக்க முடியவில்லை , நடிப்பு ஓகே ரகம் 


மற்ற  இரு நாயகிகள் ஆக வரும் பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா ரங்கநாதன்  இருவருமே  மெயின் நாயகியை விட அழகாக இருக்கிறார்கள் 


 நாயகனின் நண்பன் ஆக மேத்யூ தாமஸ்  கலக்கி இருக்கிறார் .இவரது காமெடியும் அருமை .காதல் கதையும் அருமை 


சரத்   குமார்  நாயகியின் அப்பாவாக கெஸ்ட் ரோலில் வருகிறார் .அனுபவம் பேசுகிறது .நாயகனின் அம்மா , அப்பாவாக  சரண்யா  பொன் வண்ணன் , ஆடுகளம் நரேன் அசத்தி இருக்கிறார்கள் 


ஜி வி பிரகாஷ் குமார் இசையில் நான்கு பாடல்களுமே அருமை , அதிலும் மேரேஜ்  பங்க்ஷனில்  பாடும்  கோல்டன் ஸ்பாரோ கலக்கல்   ரகம் , அதற்கான  நடன அமைப்பும் அருமை .


லியோன் பிரீட்டொ வின் ஒளிப்பதிவில் காட் சிகளில்  இளமை  கொப்புளிக்கிறது .மூன்று நாயகிகள் + காமெடியனின் காதலி என நான்கு பெண்களையும் அழகாக்கா ட்டி இருக்கிறார் 


ஜி கே  பிரசன்னாவின் எடிட்டிங்கில் படம் 131 நிமிடங்கள் ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் தனுஷ் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகனின் பெண்பார்க்கும் படலத்தில் தன கிளாஸ் மேட் டே    மணப்பெண்ணாக  இருப்பதைப்பார்த்து நாயகன் வியப்பதும் . டே ய்  நீயா?என பெண் இயல்பாகப்பேசுவதும் கல கல .நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரியை விட இந்த ஜோடி கெமிஸ்ட்ரி பிரமாதம் 


2  காமெடியனின்  காதல் கதை போர்சன்  மனதைத்தொடுவதாக உள்ளது .காமெடியனின் கேரக்ட ர் டிசைனும் அருமை 


3  இடைவேளைக்குப்பின்   வரும் திருமணக்கொண்டாட் டத்தில் எதிர்பாராத வரவாக ஒரு புதுக்காதலி கிடைப்பது  சுவராஸ்யம் 


4   பாடல்களைப் படமாக்கிய விதம் ,ஆர்ட் டைரக்ஷன் ,ஒளிப்பதிவு , இசை அனைத்தும்  தரம் 



  ரசித்த  வசனங்கள் 



1   இதயத்தைப்பிடுங்கி  காலில் போட்டு நங்க்  நங்க்  என மிதிச்சா அது தான் காதல்  


2   இஞ்சி  தின்ன குரங்கு மாதிரி ஏண்டா இருக்கே? 


நான் குரங்குன்னா அப்போ நீயும் அம்மா குரங்கு தானே? 


3   உன் வாழ்க்கைல எதுவும் நார்மலாவே  நடக்காதா? 


4   எதுவும்   கேட்காம ,  எதுவும்   தெரியாம   வர்றதுதான் லவ் 


5    ஏண்டி நீ ஸ்கூலில் சுமாராத்தானே இருப்பே?இப்போ எப்படி இவ்ளோ அழகா இருக்கே? 


6  நீ சரியான பைத்தியம் 


 எல்லா ஜீனியஸையும் இந்த உலகம் முதலில் அப்படித்தான் நினைக்கும் 


7   பொண்ணுங்க தான் தங்கள் காதலை ஓப்பன் பண்ணாம இழுத்தடிப்பாங்க , ஆனா பசங்க அபப்டி இல்லை 


8  லவ்வர்ஸுக்கு லேட்டாதான் தங்கள் காதல் தெரியும் ,ஆனா அவங்க பிரண்ட்ஸுக்கு முதலிலேயே தெரிஞ்சுடும் , மோப்பம் பிடிச்சுடுவாங்க 


9   சமைக்கறது தான் உலகிலேயே பெரிய கலை 


10   பக்கத்தில் இருப்பவங்க நாம சமைத்ததை சிலாகிக்கும்போது கிடைக்கும் இன்பம் இருக்கே? 


11   ஐந்து  நாட்களாக   அவன்  சாப்பிடவே இல்லை 


 நாங்க சண்டை போட் டே  2  நாட்களாகதானே ?



12   ரிஸ்க்   எடுக்காம லைப்ல எதுவும் சாதிக்க முடியாது 


13   எப்பவுமே ஒரு பையனுக்கு தான் காதலிக்கும் பெண் முன்னால்  தான் ஒரு பெரிய ஆள் ஆகணும்னு எண்ணம் இருக்கும் 



14 தன்னுடைய  காதலன் ஒரு நாள் பெரிய ஆளா வருவான் என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் 


15   அம்மா , தோராயமா  நீ இன்னும் எத்தனை வருடங்கள் உயிரோட இருப்பே? 



16   பசங்களுக்கு திடீர்னு நம்ம மேல இன்ட்ரஸ்ட் போயிடுச்சுன்னா அவங்களுக்கு வேற ஒரு  காதலி உருவாகிட்டா ங்கனு அர்த்தம் 



17  லவ்வுக்கும் , லவ் பெய்லியருக்கும் நடுவே மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் 


18   ஒரு  பொண்ணு நீ வேணாம்னு முடிவு பண்ணிட் டா  நீ என்ன முயற்சி செஞ்சாலும் ரீச் ஆக முடியாது 


19  ஓ சி ல  குடிக்க ஊரு விட்டு ஊரு கூட வருவானுங்க 


20   காதல்  இருக்கும்போது தரும் சுகத்தை விட இல்லாதப்ப தரும் வலி அதிகம் 


21   நான் வேணா   அ வ கிட் ட  உன் லவ்வைப்பற்றி சொல்லட் டா? 


 உன் லவ்வைப்பார்த்துக்கவே உனக்கு வக்கு இல்லை 


22   பணக்காரப்பசங்க  என்ன சொன்னாலும் சிரிக்க ஒரு பொண்ணுங்க கூட் டம் சுத்திக்கிட் டே  இருக்கும் 


23   காதலிக்கும்போது ஒரு மரமே நம் மீது விழுந்தாலும் நமக்குத் தெரியாது , லவ் பிரேக்கப் ஆன பின் ஒரு மருதாணி நம்மைப்படுத்தும் பாடு இருக்கே /.. 



24   நீ   சமையல்காரனா? 


 இல்லை ,ஒரு செப் 


 இரண்டும் ஒன்னு தானே? 


25   பார்க்க  பொறு க்கி மாதிரி  இருக்கும் பசங்க தான் நல்லவங்களா இருப்பாங்க 


26  காதலி போயிட் டா  வேற   காதலி கிடைப்பா . ஆனா நண்பன் போயிடடா அவனை மாதிரி ஒருத்தன் கிடைப்பானா? 


27  பொய்யான புருஷன் பொண்டாட்டியா வாழ்வதை விட உண்மையான நண்பன்  - தோழி ஆக வாழலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  படத்தில்     வரும் அனைத்துப்பெண் கேரக்ட ர்களும்  சரக்கு அடிக்கிறார்கள் . இது எதுக்கு ? தேவை இல்லாத தலைவலி 


2  கோடீஸ்வரி ஆன  நாயகி  நாயகன் நல்லா சமையல் கற்றவன் என்பதற்காககாதலிப்பது நெருடுகிறது 


3  நாயகனுக்கு தான் காதலிக்கும் நாயகி கோடீஸ்வரி என்பதே தெரியாது   என்பதும் நம்ப முடியவில்லை 


4   நாயகன்  - நாயகி இருவரும் க்ளைமாக்சில் சேரவேண்டும் என்ற தவிப்பே ஆடியன்ஸுக்கு வரவில்லை .மற்ற  இரு பெண்களில் யாரையாவது கட்டிக்கிட் டா தேவலை என்று தான் தோன்று கிறது  இது திரைக்கதையின் பலவீனம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம் ஜாலியாகப்போகிறது .நான்கு அழகிகள்  இருப்பதால் ,பாடல்கள் ,  இசை  அருமை என்பதால்  ஆண்கள் பார்க்கலாம் .விகடன் மார்க் யூகம் - 41 .ரேட்டிங்க் 2.75 / 5 



Nilavuku En Mel Ennadi Kobam
Theatrical release poster
Directed byDhanush
Written byDhanush
Produced byDhanush
Kasthuri Raja
Vijayalakshmi Kasthuri
Starring
CinematographyLeon Britto
Edited byPrasanna GK
Music byG. V. Prakash Kumar
Production
companies
Wunderbar Films
RK Productions
Distributed byRed Giant Movies
Release date
  • 21 February 2025
Running time
131 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box office5.7 crore [2]