Saturday, February 22, 2025

BROMANCE (2025) - மலையாளம் - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா )

     

                    

3 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  14/2/2025 அன்று  திரை அரங்குகளில் வெளியான இப்படம்  10 நாட்களில்  முதலீட்டைப்போல  3 மடங்கு லாபத்தை ஈட்டி இருக்கிறது .பெரிய  ஹீரோ இல்லை  . பிரம்மாண்டம் இல்லை .பில்டப் இல்லை .சாதாரண   காமெடிக்கதைதான்  32 கோடி ரூபாய் வசூல் .ஜோ  அண்ட் ஜோ (2022) ஜர்னி ஆப்  லவ் 18+(2023)  (டைட்டில் தான் 18+ படம் யூ படம் ) ஆகிய  2 வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர்  அருண் டி ஜோஸ்  அவர்களின்   ஹாட்ரிக் ஹிட் இது .இன்னும்  ஓடி டி  யில் ரிலீஸ் ஆகவில்லை 

 நாயகன்  மேத்யூ  தாமஸ்  தமிழில்  லியோ வில் விஜயின்  மகனாக  நடித்தவர் . கும்ளாங்கி ங்கி நைட்ஸ் ,தண்ணீர் மத்தின் தினங்கள் ,ஜோ  அண்ட் ஜோ (2022)  ஆகிய  படங்களில்  நடித்தவர் .விஜய் சேதுபதி நடித்த 96  படத்தின் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான்  இதன் இசைக்கு இன்சார்ஜ் .அதில்  மெலோடி சாங்க்ஸ் ஆக  இசைத்தவர்  இதில்  அதிரடி  இசை காட்டி இருக்கிறார் , படத்தின் பெரிய பலங்கள்  காமெடி , திரைக்கதை , இசை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின் அண்ணனைக்காணவில்லை என நாயகனுக்கு நாயகனின் அண்ணனின் நண்பன்  போன் பண்ணி சொல்கிறான் .உடனே   நாயகன்  அண்ணனின் நண்பனைப்பார்க்க செல்கிறான் .அண்ணனுக்கு  ஒரு காதலி உண்டு அவளுடன்  பிரேக்கப் ஆகி விட்டது. அவள் ஒரு பல் டாக்டர்  . அவளைப்பார்த்தால் ஏதாவது விபரங்கள் கிடைக்கலாம் என நாயகன்  பேஷண்ட் போல அங்கே செல்கிறான் .சில  காமடிகளுக்குப்பின்  அவளை சந்திக்கிறான் . அப்போதுதான்  ஒரு உண்மை  தெரிய வருகிறது .நாயகனின் அண்ணனுக்கு  இன்னொரு காதலி இருக்கிறாள் . அவளுக்கு  வேறு ஒரு  ஆளுடன் திருமணம்  நடக்க   இருக்கிறது .அங்கே போய் கலாட்டா  பண்ணத்தான் போய் இருக்கிறான் 


இப்போது  நாயகன் ,நாயகனின் அண்ணனின் நண்பன் , நாயகனின் அண்ணனின்  முதல்   காதலி  அனைவரும் அந்தக்கல்யாண நிகழ்வுக்குப்ப்போகிறார்கள் அங்கே  நடக்கும் காமெடி  கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 


 கதையின் ஒன்லைனைக்கேட்கும்போது   ரொம்ப சாதாரணமாகத் தோன்றினாலும்  திரைக்கதையில் சுவராஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் 


நாயகன்   ஆக மேத்யூ  தாமஸ்.காமெடியான உடல் மொழி , நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் . ரட்ஷகன் படத்தில் நாகார்ஜுனா  நரம்புகள் கோபத்தில் புடைப்பதைப்போல இவருக்கு ஸ்மார்ட் வாட்சில் பி பி எகிறுவது கலக்கல் காமெடி .


நாயகனின் அண்ணனின்  நண்பன் ஆக  அர்ஜுன்  அசோகன்  யதார்த்தமான நடிப்பு .நாயகனின் அண்ணனாக ஷியாம் மோகன்  அளவான நடிப்பு சங்கித் பிரதாப்குட் ஆக்டிங்க் 


நாயகனின் அண்ணனின்  முதல்   காதலி  ஆக  மகிமா  நம்பியார்   படம் முழுக்க வருகிறார் அழகு . நாயகனின் அண்ணனின்  இரண்டாவது  காதலி  ஆக பாரத் பூபனா  அதிக வாய்ப்பில்லை .கல்யாணப்பெண் என்பதால்  அழகாகத்தெரிகிறார் 


கோவிந்த் வசந்தா  இசையில்  பாடல்கள்  துள்ளாட்டம் போட வைக்கின்றன . பின்னணி இசையும் அருமை அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவில்  இரு நாயகிகளும் அழகு .கல்யாண  கலாட்டாக்கள்  அருமை . சமன் சாக்கோவின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகின்றது 

சபாஷ்  டைரக்டர்

1  கே எஸ்   ரவிக்குமாரின் புரியாத புதிர்  படத்தில்  ஒரு புதுமையைப்புகுத்தி இருப்பார் . ஒரு காட் சியின் முடிவு சீன அடுத்த காட் சியின் தொடக்க சீன ஆக இருக்கும் .உதாரணமாக  முதல் காட் சியில்   வில்லன்  சிகரெட்டை லைட் டரால் தீப்பற்றவைபப்து போல சீன எனில் அடுத்த சீன நாயகி கேஸ் ஸ்டவ் பற்ற  வைப்பாள் .அது போல   இந்தப்படத்தில்  ஒவ்வொரு சீனிலும் ஒரு புது  கேரக்ட்டர்  அறிமுகம் ஆகும் ..அந்த கேரக்ட்டர் இன்னொரு புது கேரக்டரை  சந்திக்கும் .. இந்த ஐடியா பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது 

2  திருமணத்தை  நிறுத்த வரவில்லை ,காதலி தன்னிடம் வாங்கிய கடனை வசூல் பண்ண வந்திருக்கிறேன் என சொல்லும் சீன  காமெடி 


3  திருமணப்பெண்ணின்  அண்ணன்  மஹிமா நம்பியாருடன்  பம்மும் சீன்கள் காமெடி 


4   செல்போனை ஹேக் செய்ய  30 நொடிகள்   வில்லனின்  போனை அபேஸ்  செய்யவேண்டும்  என்ற டாஸ்க்கை செயல்படுத்த நடத்தும் ஐடியா செம 


5  ஓப்பனிங்கில்  அந்த   பல் டாகடர்  காமெடி சீக்வன்ஸ் கல கல


  ரசித்த  வசனங்கள் 


1   அவ என்னை மொத்தமா  ஏமாத்திட்டா .எனக்கு பேனிக் அட் டாக் வரும் போல இருக்கு 


 டோன்ட் ஒர்ரி , பேனிக் அட் டாக் ல யாரும் சாகறதில்லை 


2  மிஸ்ஸிங்க்  கேஸ்ல  48 மணி நேரத்துல ஆள்  கிடைக்கலைன்னா அபாயம் 


3  இவரு  போதை மருந்து யூஸ்  பண்ணுவாரா ?


 டிப்ரஷன்ல  இருந்திருப்பான் 


 ஓஹோ , டிப்ரஷன்ல இருந்தா  அப்படிப்பண்ணலாமா? 


4  பார்டி லோக்கல்  ஆளா  இருக்கான் ?


என் கண்ணுக்கு டான் லீ  மாதிரி   தெரியறான் 


5  என்ன  போலீஸ்  நீங்க ?கண்ணுர் ஸ்குவாடுல  மம்முட்டி பண்ற மாதிரி பண்ணுவீங்கன்னு பார்த்தா.. 


 

6  நீ தான்    ஹேக்  பண்றதுல  எக்ஸ்பர்ட் ஆச்சே ?இந்த நாய்களை  ஹேக்  பண்ணு  பார்ப்போம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

காமெடிப்படத்தில் நோ லாஜிக் ஒன்லி   மேஜிக் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கலகலப்பான  காமெடிப் படம் , அனைவரும் ரசிக்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Bromance
Theatrical Release Poster
Directed byArun D. Jose
Screenplay byArun D. Jose
Raveesh Nath
Thomas P. Sebastian
Produced byAshiq Usman
StarringMathew Thomas
Arjun Ashokan
Mahima Nambiar
Sangeeth Prathap
Shyam Mohan
Kalabhavan Shajohn
Bharath Bopanna
CinematographyAkhil George
Edited byChaman Chakko
Music byGovind Vasantha
Production
company
Distributed byCentral Pictures
Release date
  • 14 February 2025
[1]
Running time
150 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget3 cr
Box office11 cr

Friday, February 21, 2025

UNLOCK RAGHAVA (2025) - கன்னடம் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா )

               

        7/2/2025   அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று  இருக்கும் படம் ,இன்னும் ஓடிடி யில் வரவில்லை .26 நாட்கள் காத்திருக்கவும் .இது ஜாலியான  அட்வென்ச்சர்  காமெடி  ஆக்சன்  டிராமா  கேட்டகிரியில்  அமைந்த படம் . நாயகன்  ஆன மிலிந்த்   தன முதல் படத்திலேயே  நம்ம  ஊர் ஆர் பாண்டியராஜன் போல  காமெடியில்   முத்திரை  பதித்திருக்கிறார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  குரு சிஷ்யன்  படத்தில்  ரஜினி சொல்வாரே ?  ப்பூ .. இதெல்லாம் ஒரு  பூட்டா? . அது மாதிரி  நாயகன் ஒரு ஜெகஜாலக்கில்லாடி .சாவியோ , டூப்ளிகேட்  சாவியோ  இல்லாமல்  ஒரு பூட்டில்  காதை  வைத்துக்கேட்டே  அதன் மெக்கானிசம் அறிந்து சுலபமாக பூட்டைத்திறந்து விடுவார் 


நாயகன்  சின்னவயதில்  தன்  க்ளாஸ் மேட்  ஆன  ஜானகியை உயிருக்கு உயிராக நேசித்தவர் .சந்தர்ப்பசூழல்  காரணமாக  நாயகி வேறு  இடத்துக்குப்போய் விட்ட்தால் இருவரும் பிரிகின்றனர் .பல வருடங்கள்  கழித்து  நாயகியின் அப்பா ஒரு  தொல் பொருள்  ஆராய்ச்சியாளர்  ஆக இங்கே   வருகிறார். ஒரு புதையல் பானையைக்கண்டு பிடிக்கிறார் . அதன்  லாக்கைத்திறக்க   நாயகனின் உதவி தேவை 


 வில்லன்  நாயகியைக்கடத்திக்கொண்டு போகிறான் . புதையல்  பானையைக்கொடுத்தால் தான் அவள் ரிலீஸ்  என்கிறான் .புதையல்  பானையை வேறு  ஒரு கும்பல் கடத்தி விடுகிறது . நாயகன் எப்படி பெண்ணையும், புதையலையும் மீட்டான் என்பது மீதி திரைக்கதை  


 நாயகன் ஆக  அறிமுக   நடிகர் மிலிந்த் அசால்ட்   ஆக நடித்திருக்கிறார் .சண்டைக்காட் சிகளில்  விஷால்   ரேஞ்சுக்குக்கலக்குகிறார் .நாயகி  ஆக ராக்சல்   டேவிட்  பரவாயில்லை ரகம் 


காமெடியன்  ஆக  அந்த   ஊர் சாது கோகிலா  நம்ம   ஊர் வடிவேலு மாதிரி   உடல் மொழியில்கலக்குபவர்  படம் முழுக்க  காமெடி செய்கிறார் 


இவர்கள்   போக  அவினாஷ் , ஷோபா ராஜ் , ரமேஷ் பட் ,வீணா  சுந்தர் , பூமி ஷெட்டி  என  அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் 


அனூப் ஸீலின்  இசையில் பாடல்கள்  பரவாயில்லை ரகம் , பின்னணி இசை சுமார் ரகம் .ஒளிப்பதிவு லவித . ஓகே ரகம் . எடிட்டிங்க் அஜய் குமார் . 127 நிமிடங்கள்   ரன்னிங்க் டைம் 


திரைக்கதை   எழுதி இயக்கி இருப்பவர் தீபக் மதுவனஹள்ளி 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகிக்கு   நாயகன்  தான் தன்  முன்னாள் கிளாஸ்மேட்  என்பது  தெரியும் , ஆனால்   நாயகனுக்குத்தெரியாது . இந்தமுடிச்சை  வைத்து முதல் பாதி திரைக்கதையை சுவராஸ்யமாக நகர்த்திய விதம் 


2  நாயகன்   பால் மாறுகிறானா?  என்பதை  டெஸ்ட்   வைத்து நாயகி ஆழம்பார்ப்பது 


3  திரைக்கதையுடன் இணைந்து பயணிக்கும் காமெடி டிராக் 


  ரசித்த  வசனங்கள் 

1 ஜப்பானிஷ்  ஜூஸ்சி யை  எதுக்கு நீ  குடிக்கறே? 


 இதைக்குடித்துத்தான் அவங்க புத்திசாலியா இருக்காங்க .நானும் அதே மாதிரி  ஆக வேண்டாமா? 



2  வேகமா  பேக் பண்ணு  , இல்லைன்னா இதே  சூட்கேசில் உன்னை பேக் பண்ணிடுவோம் 


3  குடும்பம் என்பது ப்ளுட்  இசை மாதிரி , அதை ஏன்  நீ பூகம்பம் ஆக்கறே  ? 



4   யார்   உனக்கு டிரைவிங்க் லைசென்ஸ் கொடுத்தது ? 


 ஹேண்ட்ஸ அப் 


ஓ .துப்பாக்கி லைசென்சும் குடுத்துட்டாங்களா? 


5    அப்பா  , உங்களையும் அறியாம என் சந்தோஷங்களை பூமிக்கு அடியில் புதைச்சுட்டீங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  புதையல்   பானையை   தூக்கவே  முடியாமல் ஒருவர் தூக்கி வைப்பது போல வெயிட் உள்ளதாக முதலில் அதைக்காட்டுகிறார்கள் . பின்  அடியாள் அதை லாவகமாக , சுலபமாக தூக்கிக்கொண்டு ஓடுகிறான் . அது எப்படி ? 


2  வில்லன்   நாயகியைக்கல்யாணம்  பண்ண   நாள்   குறிப்பதும்  அந்த  மேரேஜுக்குக்காக தன மீசையை எடுத்து விட்டு  இப்போ  நான் அழகா இருக்கனா?  எனக்கேட்பதெல்லாம் ரண கொடுரம் 


3   வில்லனின்  மனைவி    வில்லன் இல்லாத போது எகிறுவதும் வில்லனைக்கண்டது பம்முவதும் ஏனோ ? . மேரேஜை பெரிதாக எதிர்க்க வில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கலகலப்பான  காமெடி ஆக்சன் டிராமா .கன்னடம்  புரிந்தால் பார்க்கலாம் . ரேட்டிங்   2.25 /5 

Thursday, February 20, 2025

BABYGIRL 2024) - அமெரிக்கன் மூவி - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் ப்ரைம் 18+

         

               

20 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு  62 மில்லியன் டாலர்கள் வசூல்  செய்த படம் இது . .30/8/2024 அன்று 81வது வெனிஸ்  சர்வதேச திரைப்பட  விழாவில் திரை இடப்பட்டு  ஹாலிவுட் நடிகை   நிக்கோல் கிட்மேன் க்கு சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்றுத்தந்த படம் . டோரண்ட்டொ   சர்வதேச திரைப்படவிழாவில் கூட  திரை இடப் பட் ட்து .உலகம் முழுக்க திரை அரங்குகளில் 25/12/2024 அன்று ரிலீஸ்  ஆகி  பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்றது . இது   ஒரு பெண் இயக்குனர் இயக்கிய  படம் என்பது குறிப்பிடத்தக்கது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு பெரிய கம்பெனியில்  மிக  உ யர்ந்த பதவி ஆன சி இ ஓ  ஆகப்பணி புரிகிறாள் .. அவளது கணவன்  ஒரு தியேட்டர் டைரக்ட்டர்  .கணவனுடன்  இல்லற வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் வாழ்கிறாள் .இந்த தம்பதிக்கு டீன் ஏஜ் வயதில் இரு வாரிசுகள் 


நாயகன்  ஒரு  இளைஞன் . நாயகியின் கம்பெனியில்   வெண்டடர்   ஆகப் பணிபுரிகிறான் . நாயகிக்கு அவனைப்பார்த்த  முதல் பார்வையிலேயே பிடித்து விடுகிறது . சில  பல சந்திப்புகளுக்குப்பின்  இருவரும் நெருக்கம் ஆகிறார்கள் 


ஒரு முறை   நாயகன் நாயகியின் வீட்டுக்கே வந்து விடுகிறான் . நாயகியின்  குடும்பத்தாருடன் சிரித்துப்பேசிப்பழகுகிறான் . இது நாயகிக்கு அறவே  பிடிக்கவில்லை .அவனிடம் ஓப்பனாக   சொல்லி விடுகிறாள் . இனி என் வீட்டுப்பக்கம் வராதே . நம் கம்பெனியில் மட்டும்  நம் சந்திப்பு இருக்கட்டும்   என்கிறாள் 


 நாயகன் வில்லன் ஆகமாறுகிறான் . நாயகியை மிரட்டுகிறான் . ஒரு கட் டத்தில்  நாயகியின்  கள்ளக்காதல்  நாயகியின்  கணவனுக்கும்,மகளுக்கும் தெரிந்து விடுகிறது . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


நாயகி ஆக நிக்கோல் கிட்மேன் மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார் .1990 ல் இருந்து   உலகிலேயே  அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்னும் பெருமையைத்தக்க வைத்துக்கொண்டு இருப்பவர் . நம்ம  ஊர் நயன் தாரா மாதிரி .,விருது  வாங்கத்தகுதி உள்ள   நபர்தான் .  நாயகன் மிரட்டும்போது   அதிர்ச்சி  அடைவது .மகளுக்குத்தெரிந்து விட் டதே  எனக்  கூனிக்குறுகுவது  ஏல  பலஇடங்களில்    அவர் நடிப்பு செம 


நாயகன்  ஆக  ஹாரீஸ்  டிக்கின்சன்  அழகாக வந்து  போகிறார் .அவரது  டிரஸிங்க்  சென்ஸ் ,ஸ்டைல் எல்லாம் அருமை 


ஆண்டனியா  பண்ட் றாஸ்  க்கு ஒரு டம்மி ரோல் .கணவன்  என்றாலே டம்மி தானே? ஆனால்  க்ளைமாக்சில்  நாயகியைப்பற்றிய உண்மை தெரிந்ததும் பேனிக் அட் டாக் வந்து துடிக்கும்போது பிரமாதமான நடிப்பு .


சோபியா  ஒய்ல்டி  மாநிற  அழகியாக நாயகியின்  கம்பெனியில்  பணி புரிபவராக  வருகிறார் . நிறைவான நடிப்பு 


டெக்னிக்கல் டீமில்  முதல் இடம் ஒளிப்பதிவாளர்  ஜாஸ்பர் வோல்ப் க்குத்தான் . நாயகியின்  முகத்துக்கு 

 க்ளோஸப் வைத்து பல இடங்களில்  நுணுக்கமான  நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் .கிறிஸ்தோபல் டாபியாவின் பின்னணி இசை அருமை .மேத்யூவு கணம் தான் எடிட்டர் .114   நிமிடங்கள்  படம் ஓடுகிறது .  எங்கும் போர் அடிக்கவில்லை 

திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர்  ஹலீனா  ரெய்ன்  என்னும் ஒரு பெண் இயக்குனர்

சபாஷ்  டைரக்டர்


1      நாயகன்  உடனான  முதல்  சந்திப்பில்   நாயகி அவனிடம் உனக்கு 7 நிமிடங்கள் டைம்  என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்வதும் .பிறகு   நாயகன் வில்லன் ஆக மாறிய பின்பு நாயகி  இடம்  உனக்கு 7 நிமிடங்கள் டைம்  என பூமாரங்  ஆக திருப்புவதும்   செம சீன்கள் 



2   ஓடும்   காருக்குள்   நாயகி   நாயகனிடம்  மிரட்டும்   தொனியில்  பேசுவதும் , உடனே நாயகன் வில்லன் ஆகி மிரட்டுவதும்  விறு விறுப்பான காட் சி 


3   நாயகியின் உடல் மொழி ,நாயகனின் தெனாவெட்டு   இரண்டும்   பிரமாதமாக  சொல்லப்பட்டிருக்கிறது .


4   க்ளைமாக்சில்  நாயகியின் கணவனுக்கு பேனிக் அட் டாக்  வரும்   காட்சி 


  ரசித்த  வசனங்கள் 



1  டெக்னாலஜியை மட்டுமே வெச்சுக்கிட்டு ஹேண்டில் பண்ணமுடியாது 


2  லஞ்ச்  முடிச்சுட்டு உடனே  காபி குடிக்கக்கூடாது .இது டாக் டர்  அட்வைஸ் 


3  ஒரு நாளுக்கு  எத்தனை காபி குடிப்பே?


 தட் ஐஸ்   நன்  ஆப் யுவர் பிஸ்னஸ் ..பை  த பை  7 


4   எப்போதும்   யாரிடமும்   உன் பலவீனத்தைக்காட்டிடாதே 


5   அம்மா  ,உன் முகம் செத்துப்போன  மீன் மாதிரி இருக்கு , அது ஏன் ?


6   என்னைக்கெ ட்டவன்னு நினைக்கிறாயா?


 நோ நோ ,லவ்வபில் பாய் 


7  நீ   என் பேபிகேர்ள் . நான் சொல்வதை மட்டும் நாய்க்குட்டி மாதிரி கேட்டு நடந்துக்கோ 


8 பெண்களிடம்  பவர் இருந்தா  , பதவி இருந்தா  அவங்க அதை டீல் பண்ற விதமே தனி 


9 பொண்ணுகண்ணா   ஸ் ட்ராங்கா , ஸ்மார்ட் டா  இருக்கணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனிடம் போட்டோ  எவிடென்ஸோ , வீடியோ எவிடென்ஸோ  எதுவும்  இல்லை .மிரட்டுக்கு எதற்காகப்பயப்படணும் ? பொண்ணுங்க சொல் தான் அம்பலம் ஏறும் 


2    நாயகி , நாயகனை  தனிமையில் சந்திப்பது சரி . ஆனால்  கம்பெனி  பார்ட்டியில்  பப்ளி க்காக  நாயகனுடன் டான்ஸ்   ஆடினால் இமேஜ் டேமேஜ் ஆகுமே?பயம் இல்லையா? 


3  நாயகியின்னடவைக்கையில் மாற்றம்  கண்டு கணவன்   எதுவும்  விபரம்  கேட்கவே  இல்லையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 கதையின்  ஒன லைன்  அரதப்பழசு தான் .ஆனால்   திரைக்கதையும் , நாயகியின் ந டிப்பும் பார்க்க வைக்கிறது . ரேட்டிங்   2.5 / 5 


Babygirl
Theatrical release poster
Directed byHalina Reijn
Written byHalina Reijn
Produced by
Starring
CinematographyJasper Wolf[1]
Edited byMatthew Hannam[2]
Music byCristobal Tapia de Veer[1]
Production
companies
  • 2AM
  • Man Up Films
Distributed byA24
Release dates
  • August 30, 2024 (Venice)
  • December 25, 2024 (United States)
Running time
115 minutes[3]
CountryUnited States
LanguageEnglish
Budget$20 million[4][5]
Box office$61.2 million[6][7][8]

Wednesday, February 19, 2025

தினசரி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி காமெடி டிராமா )

           

       பெரிய  பெரிய ஹீரோக்களெல்லாம் ஆக்சன் மசாலாப்பக்கம்  ஒதுங்கி  விட்ட்தால்  இப்போது  வரும் படங்கள் ,  எல்லாம்  அடிதடி , வெட்டு ,குத்து  ,வன்முறை  என சகிக்கமுடியாத  குப்பைகளாக வந்து கொண்டு இருக்கின்றன .இயக்குனர் விசு , வி சேகர்  மாதிரி  குடும்பப்படங்களை  எடுப்பவர்கள் குறைந்து விட்டார்கள் .அந்தக்குறையைப்பபோக்கும்  வண்ணம்  சமீபத்தில்  குடும்பஸ்தன்  வந்தது  போல அறிமுக  இயக்குனர்  இ சங்கர்  களம்  இறங்கி  இருக்கிறார்       


ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  ஐ டி கம்பெனியில்  வேலை செய்பவன் . பேராசைக்காரன் . பணத்திலேயே  குறியாக இருப்பவன் . தனக்கு வரப்போகும்  மனைவி  தன்னை விட அதிக சம்பளம் வாங்குபவளாக இருக்கவேண்டும் எனநினைப்பவன் . பெண் பார்க்கப்போகும் இடங்களில் எல்லாம்  இதைப்பற்றியே  பேசுவதால்  எந்தப்பெண்ணும்  அவனுக்கு  செட் ஆகவில்லை 


 நாயகி  அமெரிக்காவில்  பிறந்தவள் ஆக  இருந்தாலும்  தமிழ்க்கலாச்சாரப்படி  ஹவுஸ் ஒயிப் ஆக இருந்து கணவனைக்கவனிக்க வேண்டும் என நினைப்பவள் . இப்போது   வேலைக்குப்போகிறவள் ஆக  இருந்தாலும் திருமணத்துக்குப்பின்  வேலைக்குப்போகமாட்டேன்  என கொள்கை  முடிவு எடுத்தவள் 


நாயகனின்  அம்மாவும் , அக்காவும்  சேர்ந்து  சதி வேலை செய்து  நாயகியை நாயகனுக்கு மணம் முடித்து வைத்து விடுகிறார்கள் . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 



நாயகன் ஆக  ஸ்ரீகாந்த் .ஆள் இன்னமும் இளமையாக அழகாக இருக்கிறார் .சீட்டுக்கம்பெனிக்காரன் மோசம் செய்து விட்டான் என்ற தகவல் தெரிந்து அவர் துடிப்பது அருமையான நடிப்பு .ஆள்  நல்ல கலராகஇருப்பதால் மிடில் கிளாஸ் ஆள் ஆக அவரை ஏற்க  மனம் மறுக்கிறது  


 நாயகி ஆக சிந்தியா தூர்டே . நிறமாக , அழகாக இருந்தாலும்  முக லட்ஷணம் குறைவு . நடிப்பும் பெரிதாக்கவரவில்லை . வசனங்களை  ஒப்பிப்பது போலிருக்கிறது 


நாயகனின் அப்பாவாக வரும் எம் எஸ்   பாஸ்கர்  அபாரமான நடிப்பு . கலக்கி இருக்கிறார் .அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் பாந்தமான நடிப்பு .  தமிழ் சினிமாவின் பிரமாதமான குணச்சித்திர  நடிகைகளில் ஒருவர் ஆன விநோதினி நாயகனின் அக்காவாக வருகிறார் . இவரது டயலாக் டெலிவரி செம 


நாயகனின்  நண்பனாக வரும்   பிரேம்ஜி தேவை இல்லாத ஆணி .எரிச்சல் ஏற்படுத்துகிறார் .அவரது அண்ணன் வெங்கட் படங்களில் மட்டும் நடிப்பது நல்லது .இவரது ஓவர் ஆக்டிங்க் .சேஷ்டைகள் கடுப்பேற்றுகின்றன 


ராதாரவி  கெஸ்ட் ரோல் . பெஸ்ட் ஆக்டிங்க் . சாந்தினி தமிழரசன் அழகாக  வந்து போகிறார் 

இசை இளையராஜா  என டைட்டிலில் போ ட்டதில் இருந் துதான் தெரிகிறது . பாடல்களும் சுமார் .பின்னணி இசையும்  சராசரி .வழக்கமாக   இவர் பிஜிஎம் மில் கலக்குவார் 

ஒளிப்பதிவு   பிரமாதம் . டெக்கினிக்கல் சைடில்  இவர் தான் உண்மையாகஉழைத்து இருக்கிறார் .எடிட்டிங்க்  கச்சிதம் 2 மணி நேரம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1   நாயகன் தமிழ் வாத்தியார் ஆன தன அப்பாவை மட் டம தட்டி ஆங்கிலத்தில் திட் ட பதிலுக்கு அப்பா ஆங்கிலத்தில் சிங்கிள் ஷாட்டில் பேசும்  வசனம் கலக்கல் ரகம் 


2  சீட்டுக்கம்பெனி  மோசடிகள் , அதிக வட்டிக்கு ஆசைப்படும்  மக்களுக்குப்படிப்பினை ஊட்டும் கருத்துக்கள் பலம் 


3   இயக்குனர் தான்   வசனகர்த்தா .. படம் முழுக்க  இயல்பான, நகைச்சுவை இழை ஓடும் வசனங்கள் அருமை 


4  கண்ணியமான , குடும்பப்பாங்கான  படங்கள்  வருவதே  அரிது . அதை ரசிக்கும்படி தருவது  கடிது 

5  முதல்   பாதி படத்தைக்காமெடியாகக்கொண்டு போன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   உன்  முகத்தைப்பார்த்துப்பேசுபவர்களை விட நீ போட்டிருக்கும் செருப்பின் பிராண்ட் பார்த்துப்பேசுபவர்கள் தான் அதிகம் 


2   உன்னால எனக்கு ஆறுதல் மட்டும் தான் சொல்லமுடியும் 


 இந்தஉலகத்துல தனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை என ஏங்குபவர்கள் நிறையபேர் இருக்காங்க 


3   நீ  போட்டி இட நினைத்தால் நீ களத்தில் இறங்கு , இன்னொருவனைப்பிடித்து தள்ளி விடாதே 


4  இரண்டு   யானைகள் சண்டை போட் டா பாறை மேல ஏறி நின்னு அதை வேடிக்கை பார்க்கறதுதான் புத்திசாலித்தனம் 


5 வாழ்க்கைல 90% விட்டுக்கொடுத்து 10%  வாங்கணும் .100% நமக்கே கிடைக்கணும்னு நினைக்கக்கூடாது 


6  சூதாட்டத்தில் விட் ட காசைத்திருப்பிக்கேட்கறவன் முட் டாள்  சூதாட்டத்தில் பெற்ற  காசைத்திருப்பிக்கொடுப்பவன்  அடி  முட் டாள்



7   சீட்டுக்கம்பெனி ல போட் ட பணத்தைத்  தி ருப்பிக்கொடுன்னு கேட்ட முதல் ஆள் நீ தான் 


8   நான்  மிட் நைட்  2 மணிக்குத்தான் பிறந்தேன் , அதனால  நைட்  எனக்குத்தூக்கம் வராது 


 அப்போ நைட் ஷிப்ட் வேலைக்குப்போ 


9   என்னடா  , அவன் வாயைப்பார்த்துட்டு இருக்கே ?அவன் நம்மைத்தான் திட்டுறான் 


10    எனக்கு என்ன   வேணும்னு  கேட்டிருந்தீங்கன்னா   நீங்க  மனுஷன் . எப்போப்பாரு உங்களுக்கு வேண்டியதைப்பறறியே   சிந்திச்சா? 



11   காதலைப்பிரிக்க  நம்ம  ஊரில் காரணமா இல்லை ?


12   எதுக்கு இந்தப்பெருமை பேசிட்டு இருக்கே? 


 சில எருமை மாடுகளுக்குப்புரியணும்னு தான் 


13  கைல   என்ன டா? 


 பூஸ்ட் 


  சரக்கு மாதிரி இருக்கு ? 



14  குழிப்பணி யாரம்  செய்யச் சொன்னீங்களே?எத்தனை  அடி  ஆழத்துலக்  குழி வெட் டனும் ? ( இது குமுதத்தில் வந்த ஜோக் ) 


15   எதுக்காக என் பிரச்சனைகளை எல்லார் கிட் டேயும்   ஷேர் செய்தே ? 


 நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னா ஷேர்   செய்யணும்னு சொன்னியே? 


16  இட்லி ல   இத்தனை ஓட் டைகள் இருக்கே? லேத் பட்டரைல சேஞ்சதா?


 அது இடியாப்பங்க 


17 காபிப்பொடிக்கும் சீயக்காய்  பொடிக்கும் வித்தியாசம் தெரியலையா? ( இது கல்கியில்  வந்த  ஜோக் ) 


18  என்னடா?உன் முதல் இரவு பாகுபலி  மாதிரி பிரம்மாண்டமா இருந்ததா? 


19    ஆசை தான்  ஒரு மனுஷனை ஏழை ஆக்கும் 


20   வேலை செய்யற   கம்பெனியையே இந்தத்தாங்கு தாங்கறானே?வாழ்க்கை பூரா கம்பெனி தரப்போகும் பெண்ணை எப்படித்தாங்குவான் ? 


21 எப்போ ப்பாரு படிச்சுக்கிட் டே   இருக்கியே?


படிச்சுக்கிட் டே   இருந்தா  தப்பு இல்லை ,குடிச்சுக்கிட் டே   இருந்தா தான் தப்பு 


22    மகாவிஷ்ணு கைச்செலவுக்கே  மகா லட் சுமி தான்  ஜி பே  பன்றாளாம் 



23  ம்க்கும், உனக்கு ரொம்ப தான் அக்கறை 


 ரொம்ப நேரமா  நிக்கறேன் 


24    உன் கலர் வெண்ணெய் உருண்டை  என் கலர் எள்  உருண்டை 


25     ஒரு தனி நபருக்கு மாதம் 800 ரூபா   இ ருந்தாப்போதும்னு அரசாங்கம் சொல்லுது 


26   நாம எத்தனை தடவை சாமி கும்பிடடாலும்  இவன் சாமி ஆடுவதை  நிறுத்த மாட் டான் 








 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மாதம்  70,000  ரூபாய்  சம்பளம்   வாங்கும்   நாயகன் ஒரு கோடி ரூபாய்க்கு வங்கியில் கடன் வாங்குவது எப்படி ? முடியாது .நான்கு   வெவ்வேறு வங்கிகளில் தலா 25 லட் சம்   என சமாளித்தாலும் அதுக்கு வாய்ப்பு இல்லை 


2  என்னதான்  நாயகன்   பணப்பேய் ஆக இருந்தாலும் முதல் இரவு அன்று கூட தன மனைவியிடம்  எதிர் காலத்திட்ட்ங்கள்  பற்றி  விளக்குவது நம்பமுடியவில்லை 


3  க்ளைமாக்சில்   நாயகன் திருந்துவது   செயற்கை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் . குடும்பப்பாங்கான படங்களை விரும்பும் ஆண்களும் பார்க்கலாம் . விகடன் 

 யூக  மார்க் - 41 . ரேட்டிங்க் 2.5/ 5 

Tuesday, February 18, 2025

2K LOVE STORY (2025) - 2K லவ் ஸ்டோரி - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )

             


    இயக்குனர்  சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா  கபடிக்குழு (2009) மெகா ஹிட் .நான்  மகான் அல்ல (2010 )கமர்ஷியல்  மசாலா .அழகர்சாமியின் குதிரை (2011)   விமர்சன  ரீதியாக பாராட்டுக்களைப்பெற்றாலும் , தேசி ய

விருதைப்பெற்றாலும் கமர்ஷியலாகப்போகவில்லை . சீயான்  விக்ரம்  நடித்திருந்தும்  ராஜபாட்டை (2011)   அட் டர் பிளாப் ,ஆதலால் காதல் செய்வீர் (2013) ஹிட் . பாண்டிய நாடு  (2013)   செம்ம  ஹிட் ஜீவா (2014), பாயும் புலி (2015) ஓகே ரகம் . மாவீரன் கிட்டு (2016) குட் நெஞ்சில்  துணிவிருந்தால் (2017) . ஜீனியஸ் (2018) ,கென்னடி கிளப் (2019) , சாம்பியன் (2019)  ஈஸ்வரன் (2024) , வீர பாண்டிய புரேம் (2024) ஆறும்   சுமார் ரகங்கள் . குற்றம் குற்றமே (2022) அருமையான க்ரைம் திரில்லர் . இப்போ  வந்திருக்கும் 2K லவ் ஸ்டோரி   எப்படி இருக்கு என பார்ப்போம்     


விக்ரமன்  இயக்கத்தில்  வெளி வந்து மெகா ஹிட் ஆன புது வசந்தம் (1990) , ஏ வி எம்  மின்  பிரியமான தோழி (2003) ஆகிய  இரு படங்களும்  ஆன் , பெண் நட்பை  பெருமைப்படுத்தும்  படங்கள் . அதே  பாணியில் தான்  இதன் திரைக்கதையும் அமைந்திருக்கிறது    


சுசிணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் ஒரு லவ் ஸ்டோரியாக இருந்தாலும் அதில்  வரும் 5 நண்பர்கள்  ( இரு பெண்கள் +3 ஆண்கள் )  கடைசி  வரை நண்பர்களாகவே இருப்பார்கள் . சிம்பு வின் வல்லவன் ல கூட சிம்பு +  சந்தியா கடைசி  வரை நண்பர்களாகவே இருப்பார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன் , நாயகி  இருவரும்  சின்ன வயதில் இருந்தே க்ளாஸ் மேட் ஸ் , பேமிலி பிரண்ட்ஸ் . இருவருக்கு இடையில் நட் பு மட்டுமே   என்பதில்   அவர்கள்   இருவரும் தெளிவாக  இருக்கிறார்கள் .ஆனால்  அவர்களது  சில நண்பர்களும் உறவினர்களும்  அவர்கள் இருவரும்   திருமணம்  செய்து கொள்வார்கள் என  எதிர்பார்க்கிறார்கள் .


நாயகனை  வேறு ஒரு பெண்  லவ் பண்ண  அதற்கு  நாயகி  ஓகே   சொல்கிறாள் . ஆனால் அவர்கள் இருவரும் நெருங்கிப்பழகும்போது  நாயகிக்கு  பொஸசிவ்னெஸ் வந்து விடுகிறது . தன  நண்பனைப்பங்கு  போட ஒருத்தி வந்து விடடாள் என்ற  நட்பின் அடிப்படையிலான பொஸசிவ்னெஸ்  தான் .காதல் எல்லாம்  இல்லை . முதல் பாதிக்கதை  முழுக்க  காதல், காமெடி என நகர்கிறது 


நாயகனின் காதலி  ஒரு விபத்தில்  இறந்து விடுகிறாள் . இதற்குப்பின்  நாயகன் , நாயகி   இருவர் குடும்பத்தி லும் ஒரு முடிவு எடுக்கிறார்கள் . நாயகனுக்குப்பெண்பார்க்கும் இடத்தில்  அந்தப்பெண்ணின்  அண்ணனை  நாயகி திருமணம் செய்து கொள்ள வேண்டும் . பெண்  கொடுத்துப்பெண்  எடுப்பது . இப்படிச்செய்தால்   அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழலாம் . அவர்கள்   நினைத்தபடி  ஒரு சம்பந்தம் அமைகிறது 


ஆனால்   அந்தக்கல்யாணத்தை  நிறுத்த  இரு வில்லன்கள்  முளைக்கிறார்கள் .காமெடி கலாட்டாக்களுக்கு மத்தியில் இருவரும்  என்ன செய்தார்கள் ? என்பது மீகி திரைக்கதை 



நாயகன் ஆக   புதுமுகம் ஜெகவீர்  நடித்திருக்கிறார் . முக சாயலில் யுவன் சங்கர் ராஜா போல் இருக்கிறார் , தோற்றம் , உடல் மொழி ஓகே   ரகம் , ஆனால் நடிப்பு ? இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் 


 நாயகி ஆக , நாயகனின் தோழி ஆக மீனாடசி  கோவிந்த ராஜன்  நடித்திருக்கிறார் .இவர்  ஜெனிலியா டிசோசா  சாயலில் இருக்கிறார் . நடிப்பு ஓகே ரகம் 


 முதல் பாதியில் நாயகனின் காதலி ஆக வருபவர்   பெயர்   தெரியவில்லை .ஆனால் அழகாக , போஷாக்காக , கொழுக் மொழுக் என இருக்கிறார் . அநியாயமாக  அவரை சாகடித்து விட்டார்கள் 


பால  சரவணன் நாயகனின் நண்பன்  ஆக வருபவர் பெரிய அளவில்  காமெடி எல்லாம் செய்யவில்லை , ஆனால் பேசிக்கொண்டே இருக்கிறார் 


 பின் பாதியில் திருமணத்தை  நிறுத்த   முனையும் காமெடி வில்லன் ஆக சிங்கம் புலி கலகலப்பாகக்கலக்கி இருக்கிறார் . பொதுவாக   வில்லன் எனில் கோபம் வரணும், ஆனால் நமக்கு சிரிப்பு வருகிறது 


ஜெயப்பிரகாஷ் , விநோதினி , நிவேதிதா  ராஜப்பன்   என அனைவரும்  கொடுத்த வேலையை சிறப்பாக செய்து   இருக்கிறார்கள் 

 டி இமானின் இசையில்  நான்கு பாடல்கள் .2 ஹிட் ஆகி விடும் .பின்னணி இசை சுமார் ரகம் தான் தியாகுவின் எடிட்டிங்கில் 127 நிமிடங்கள்படம் ஓடுகிறது .கடைசி  40 நிமிடங்கள் இழுவை .வி எஸ் ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில்  நாயகனின்   தோழி , காதலி , மனைவி என  மூவரையம் க்ளோஷப்பில்   அழகாகக்காட்டி இருக்கிறார் 

 கதை , திரைக்கதை எழுதி   இயக்கி இருப்பவர்  சுசீந்திரன் .அவரது  பழைய  திறமைகள்  பெரிதாக வெளிப் படவில்லை .அஸிஸ் டெண்ட்  டைரக்டர்ஸ்  அறியாக அமையவில்லை போல 

சபாஷ்  டைரக்டர்


1  மூன்று  நாயகிகளை அழகாக கண்ணியமாகக்காட்டிய விதம் 


2  சிங்கம் புலியின் காமெடி போர்சன்  ( இந்தக்காமெடி டிராக்கை எழுதிக்கொடுத்தது யார் என தெரியவில்லை ) 


3 போர்   அடிக்காமல்  படம் நகர்ந்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   12  வருசமா   சினி பீல்டில் இருக்கீங்க , ஒரு கதை கூடவா ரெடி பண்ணலை ? 


5 கதை ரெடி பண்ணினேன் , ஆனா பிரிஞ்சா  இருக்குன்னாங்க 



 ஐயோ ராமா , அது பிரிஞ்ச்   இல்லை  கிரிஞ்ச் 



2  என்னது > அவனை லவ் பண்றியா? மட் டமான டேஸ் ட் டா இருக்கே ? 


3   பார்ட்டி  பண்ண 5000   ரூபாய் கொண்டு வந்திருக்கேன் 


 கடைசில  வீட்டுக்குப்போறப்ப மிச்ச காசுல பார்சல் வாங்கிட்டுப்போலாம்னுநினைச்சிருப்பியே? 


ஆமா,  எப்படித்தெரியும் >? 


 நீ  கொண்டு  வந்திருப்பதே  மிச்சக்காசு தான் 



4  எமோஷனல் சிச்சுவேஷன்ல லீகலாப்பார்க்கிறவன் மனுசனே  இல்லை 


5   நாம எவ்ளோ லவ்வைக்காண்பிக்கறோமோ அதே  அளவு லவ்வை அவனும் காண்பிக்கணும்னு தான் எல்லாப்பொண்ணுங்களும் நினைப்பாங்க 


6  கலப்புத்திருமணத்துக்குன்னு ஒரு மேட்ரிமோனியல் கிடையாது 


7 பொண்ணு பிடிச்சிருக்கா?இல்லையா?


 இன்னும் பொண்ணையே கண்ல காட் டலை யே? 


8  லவ்வே  பண்ணி இருந்தாலும்  வீட்டில் மாப்பிள் ளை பார்த்தா அவங்க சொல்படி கேட்பவ தான் இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க 


9  நம்மைக்கத்தியால குத்துனவனைக்கூட விட்டுடலாம், ஆனா லவ் பண்ணி ஏமாத்திட்டுப்போனவளை 

 விடவே கூடாது 


10 லவ் பண்ற பொண்ணு  நம்மை வேண்டாம்னு  விட்டுட்டு  விலகிப் போனாலும் அவ வாழ்க்கை நல்லா அமையட்டும்னு வாழ்த்துபவன் தான் உண்மையான காதலன், மனுஷன் 


11 ஒரு பொண்ணு எந்தப்பழியையும் தாங்கிக்குவா , ஆனா தப்பே பண்ணாம தப்புப்பண்ணினதா பொய்ப்பழி சுமத்தினா தாங்கிக்கவே மாட் டா 


12  இந்த ஆம்பளைங்க மேரேஜ்க்கு முன்னாடி வரை ஒரு முகமூடி போட்டிருப்பாங்க 


13 வைப்பையா? அப்படின்னா?


 நீங்க ஒய்பையே மறக்கற  ஆளு 


14 அடுத்தவங்க  என்ன சொல்வாங்கன்னு யோசிச்சுக்கிட் டே  இருந்தா   நமக்கான வாழ்க்கையை நாம வாழவே  முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பிரியமான   தோழி மாதிரி கதை  போய்க்கிட்டு இருக்கு , மாத்துங்க என யாரோ சொல்லி இருக்க வேண்டும் டக்னு காதலியை சாகடிச்சுட்டு திரைக்கதையை டைவர்சன் எடுத்தது சரி , ஆனா அதை அழுத்தமாகக்காட்டலை 


2  ஓப்பனிங்  சீன்ல நாயகனின்  காதலி  ஐடியா கே க்கும்போது  நாயகன் தரும் ஐடியா  கற்பனை வற ட் சி 


3 பின் பாதி  டி வி சீரியல் பார்ப்பது போல நாடகத்தன்மையுடன் அமைந்தது 


4  சிட்டிக்குள் அவன் பைக் நல்லா ஓட் ட மாடடான், காரில் போக சொல்லி இருக்கணும்   என ஒருட யலாக் வருது . பைக்கே  ஒழுங்கா ஓட் டாதவன் கார் எப்படி ஓட்டுவான் ? 


4  நாயகியின்  மென்சஸ்  ஆகும் தேதி  அம்மாவுக்குத்தெரியாது , ஆனா நன்பனுக்குத்தெரியும்  என அம்மாவிடம் நாயகி பேசும் டயலாக் முகம் சுளிக்க வைக்கிறது நட் பின் பெருமையை சொல்ல இதுதான் வசனமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - படம்   கல கலப்பாகப் போகுது . பிரியமான  தோழி பார்க்காதவர்கள்  பார்க்கலாம், ரேட்டிங் 2.25 . 5 . விகடன் யூக மார்க் -40 


2K Love Story
Theatrical release poster
Directed bySuseenthiran
Written bySuseenthiran
Produced byVignesh Subramanian
G. Dhananjayan (presenter)
Starring
CinematographyV. S. Anandha Krishna
Edited byThiyagu
Music byD. Imman
Production
company
City Light Pictures
Distributed byCreative Entertainers & Distributors
Release date
  • 14 February 2025
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, February 17, 2025

FIRE (2025) -பயர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) 18+

       


                 மாநிற  மா அழகி நந்திதாதாஸ் + ஷபானா  ஆஸ்மி  இணைந்து நடித்த  மற்றும் தீபா  மேத்தா  இயக்கத்தில் வெளிவந்த  பயர் (1996)என்னும் படத்தின்  கதைக்கும், இந்தப் படத்தின்  கதைக்கும் சம்பந்தம் இல்லை . அது ஏ  செண்டர் ரசிகர்களுக்கான எரோட்டிக் த்ரில்லர் . இது பி , சி  செண்டர் ரசிகர்களுக்கான கில்மா  க்ரைம் த்ரில்லர்


நாகர் கோயிலில்  நடந்த  உண்மை ம்பவத்தின் அடிப்படையில்  இதன் திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளது . டாக்டர்  டி  காசியின்  உண்மை சம்பவ  வாழ்க்கை  தான்  படம் பெண்களுக்கான விழிப்புணர்வுப்படமாக எடுக்க வேண்டிய இந்தக்கதையைக்காசுக்கு ஆசைப்பட்டு  பிட் பட ரேஞ்ச்சுக்கு  இறங்கி  எடுத்திருக்கிறார்கள்


அறிமுக  இயக்குனர்  ஜெ சதீஷ் குமார் என்னும் ஜேகேஎஸ்    என்பவர் தான்     நாயகன்  ஆக போலீஸ் ஆபீசர் ஆக நடித்து இயக்கியும் இருக்கிறார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  ஒரு பிசியோதெரபிஸ்ட்  டாக்டர் ..அவர்  இரண்டு நாட் களாக  காணவில்லை  என  அவரது பெற்றோர்  போலீசில்  புகார்  தருகின்றனர் .போலிஸ் விசாரணையில்  ஆரம்பத்தில் அவரைப்பற்றி  எல்லோரும் நல்ல விதமாகத்தான் கூறுகிறார்கள் .அவருக்கு எதிரிகள் யாரும்  இருப்பதாகத்தெரியவில்லை.ஆளும் கட் சி   அமைச்சர்   போலீஸ் ஆபீசர் ஆன நாயகனுக்கு  போன் பண்ணி இந்தக்கே ஸைப்பற்றிய எந்த அப்டேட்  கிடைத்தாலும் தனக்கே  முதலில் தகவல் தர வேண்டும் என்கிறார் 



வில்லனின்  கிளினிக்கில்  ரிசப்ஷனிஸ்ட்  ஆகப்பணி  புரியும் ஏழைப்பெண் ஆன துர்காவை  வில்லன் காதலிக்கிறான் .பிறகு  துர்கா  தற்கொலை செய்து கொள்கிறாள் .இட்லி  மாவுக்கடை  வைத்திருக்கும்  ஒரு  ஏழைப்பெண்ணை பல  சிக்கல்களில் இருந்து  காப்பாற்றி வில்லன் அவளைப்பாதுகாக்கிறான் . கணவனை இழந்த அனிதா என்ற  பெண்ணை  வில்லன்  காதல்  வசனம் பேசி  மயக்குகிறான் . ஜிம்முக்கு வரும்  ஒரு லேடி  தன கணவன் பாரினில் இருப்பதால்   தனிமையில்  இருப்பதாக சொல்லி  வில்லனிடம்  மாட்டுகிறாள்  .



முதல் கட்ட  விசாரணையில்  இந்த நான்கு பெண்களைப்பற்றித்தான்  விபரங்கள்  கிடைக்கிறது . இந்த நான்குபேரில் ஒருவர்  அல்லது இந்த நான்கு  பேரின்  நெருங்கிய  உறவினர் தான் கொலையாளி என நாயகன் யூகிக்கிறான் 


இந்த சமயத்தில்  இரண்டு  திருப்பங்கள்  நிகழ்கிறது . வில்லனைக்கொன்றது நான் தான்  என  ஒரு ஆள் போலீசில் சரண்டர் ஆகிறான் .காணாமல்  போன  தன மகன்  போன் பண்ணி  விட் டான் .மிஸிங்க்  கேஸை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம் என வில்லன் -ன் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில்  வந்து சொல்கின்றனர் . இந்தக்குழப்பங்களுக்கு என்ன காரணம்? உண்மையில் நடந்தது என்ன? என்பதை  நாயகன் எப்படிக்கண்டு பிடித்தார்? என்பது மீதித்திரைக்கதை 


வில்லன் ஆக  பாலாஜி முருக தாஸ்  பிளே  பாய்  ரோலை  சரியாகப்பண்ணி  இருக்கிறார் .படத்தில்   அவர் 8 பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல காட் சிகள் .இதற்கு  80 லட்சம்  ரூபாய்  சம்பளம் வேற . வாழ்வு தான் 


 நாயகன் ஆக  போலீஸ் ஆபீசர் ஆக நடித்து  இருப்பவர்  இயக்குனர் ஜெ சதீஷ் குமார்.போலீசுக்கான   கம்பீரம்  இல்லை .ஹேர் ஸ்டைல் மிடுக்கான உடல் மொழி எதுவும் இல்லை 


பாதிக்கப்பட் ட   பெண்களாக ரக்ஷிதா  மகாலட்சுமி , சாந்தினி தமிழரசன் , சாக்ஷி  அகர்வால் , காயத்ரி  ஷான்   நான்கு பேருக்கும்  கிளாமர்  ரோல் . அழகாக வந்து போகிறார்கள் 


ஆளும் கட் சி   அமைச்சர்  ஆக  ஸ் சிங்கம்புலி  பரவாயில்லை ராக் நடிப்பு . சப்  இ ன்ஸ்பெக்ட்டர் ஆக  சுரேஷ்  சக்ரவர்த்திக்கு  அதிக வேலையில்லை 


சதீஷ்  ஜி யின் ஒளிப்பதிவு  அருமை . அவருக்குக்கொடுக்கப்பட் ட  வேலை  படத்தில்   வரும் எட்டு  பெண்களை கிளாமராகக்காட்டுவது . டி கே யின்  இசையில்  பாடல் கள்   சுமார் ரகம் .பின்னணி  இசை அதை விட சுமார் ரகம் 

127   நிமிடங்கள்  படம்   ஓடுகிறது . முதல் பாதி  க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், பின் பாதி கில்மா  க்ரைம் த்ரில்லர்

சபாஷ்  டைரக்டர்

1  பட  ரிலீஸ் க்கு ஒரு நாள்   முன்பே  சமுக வலைத்தளங்களில்  ஆஹா , ஓஹோ ,அபாரம்  பரிமளா ரேஞ்ச்சுக்கு விமர்சனங்கள்  வர வைத்த லாவகம் 


2    நான்   அவன்   இல்லை பாணிக்கதை தான் .அதை  உண்மை சம்பவத்துடன்  மேட்ச்  செய்தது 

  ரசித்த  வசனங்கள் 


1  பொருளோட மதிப்பை நான் பார்ப்பதில்லை .அதைப்பெறுபவர்களின்  தகுதி  இருந்தாப்போதும் 



2  பாஸ்போர்ட் விசாரனைக்காக வரலை , உங்க பாஸ்ட்  லைப்  பற்றி விசாரிக்க வந்திருக்கோம் 


3  எங்கே யாவது , எப்பவாவது  பிரியா  இருந்தா   கால் பண்ணுங்க 


4  ஆபீசை   உன் வீடு மாதிரி   பார்த்துக்கோ .நான் உன்னைப்பார்த்துக்கறேன் 


5  நான்   உன்னை லவ் பன்றதா   சொல்லவே   இல்லையே?  நீயா  அப்படி நினைச்சுக்கிட் டா  அதுக்கு   நானா  பொறு[ப்பு ? 


6  பிடிச்சது  ஒரே  கேசு , அதையும்  விடச்சொல்றாரு 


7    பாதிக்கப்பட் ட  நீங்க  எதனால   போலீசில்   புகார் தர்லை ?


 கப்பல்  கவிழும்போது  தான் தப்பித்தால் போதும் என நினைப்பாங்களா? கப்பலை க்காப்பாற்றுவது எப்படி?என யோசிப்பார்களா? 


8   நான்   சொல்றபடி   செஞ்சா   உன் வாழ்க்கைல   பிரச்சனையே  இல்லை .  அப்படி இல்லைன்னா   உன் வாழ்க்கையே பிரச்சனை தான் 


9  எனக்கு   அமைந்த   வாழ்க்கையும்  சரி  இல்லை .நானா  தேடிக்கிட் ட  வாழ்க்கையும்  சரி  இல்லை .


10  தெரிஞ்சே   தப்புப்பண்ணும் ஆண்களை விட்டுடுறீ ங்க , தெரியாம  தப்புப்பண்ணும்  பெண்களை பிடிச்சுக்கறீங்க 


11  பெண் பிள்ளைகளை   செல்லமா  வளர்த்தாப்போதாது .பாதுகாப்பா வளர்க்கணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  ஆக வரும் போலீஸ்   ஆபீசர்  யூயூனிபார்ம்  சர்ட்  மேல்  பட்டன்  எப்பவும்   ஓப்பனாவே  இருக்கு .ஹேர் ஸ்டைலில் போலீஸ் கட்டிங்க் இல்லை . விசாரணை   செய்யும்போது  எந்த  ஆபீசர்   கை  கட்டி அடக்கமாக இருக்கிறார் ? 


2  போலீஸ்   கிட்டே   அந்தப்பெண்   என்   இடுப்பில்  அடிபட்டுடுச்சு என  டாக்டர்  கிளினிக் போனேன்  என வாக்கு மூலத்தில் சொல்லுது . கட்  பண்ணி  பிளாஷ்பேக்   ஓப்பன் ஆகும்போது டாக்டர்   இடம்  எனக்கு சோல்டர்ல வலி என சொல்லுது 


3 துர்கா   தூக்கு  மாட்டிக்கொள்ள முயற்சிக்கும் சீனில்  ஒரு  அடி  கூட உயரம் இல்லாத ஸ்டூலில் நிக்குது 


4   வில்லன் எல்லா எவிடென்ஸையும் ஆபீசில் வைத்து விட்டு  துர்கா  கண்ணில்  படும்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இளிச்சவாயனா? 


5  பிசியோதெரபிஸ்ட்  ஆக   எத்தனையோ  பெண்கள்  இருக்கும்போ து   குடும்பப்பெண்கள்  எதனால் ஆண் பிசியோதெரபிஸ்ட்  இடம்  போகிறார்கள் ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்கள்   பார்க்க வேண்டிய  விழிப்புணர்வுப்படம் தான் . ஆனால்  எடுத்த  விதத்தில் , பிரசண்ட்  செய்த தன்மையில்  ஆண்களுக்கான  படமாக   வந்திருக்கு . விகடன்  மார்க்  40 . ரேட்டிங்  2/5 

Sunday, February 16, 2025

NARAYANEENTA MOONNAANMAKKAL (2025) -நாராயிணியின் மூன்று ஆண் வாரிசுகள் - மலையாளம் - சினிமா விமர்சனம் (பேமிலி டிராமா )

 

                       

மிகவும்  பொறுமை காக்கும் பெண்கள் ,ஆண்களுக்கு மட்டும் இந்தப்படம் பிடிக்கும்,மிக மெதுவாக செல்லும் திரைக்கதை .அதனால்  மாமூல் ஆக்சன்  மசாலாப்படங்களை ரசிப்பவர்வைகள் ,காமெடி ,டூயட்  போன்ற  கமர்ஷியல் அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் தவிர்க்கவும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாராயணி   என்ற  அம்மா  சீரியஸ் ஆக  இருக்கிறார் . அவருக்கு மூன்று மகன்கள் .இரு மகன்கள்  அம்மாவுடன் கூட்டுக்குடும்பமாக  வசிக்கின்றனர் . முதல் மகனுக்கு திருமணம் ஆகி  19 வயதில் ஒரு மகள் உண்டு . இரண்டாவது   மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை  மூன்றாவது  மகன்  வீடடை  எதிர்த்து ஒரு முஸ்லீம் பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு பாரினில் செட்டில் ஆகி விட்டான் .அவனுக்கு  18 வயதில் ஒரு மகன் உண்டு 

 டாக்டர்  கை  விரித்து விட் டார்  எந்த நேரமும் மரணம் நிகழலாம் .பாரினில்  இருந்து மூன்றாவது  மகன் தன குடும்பத்துடன் வந்து விட் டான் . ஆனால்  அவன் வந்து  ஒரு வாரம் ஆகியும் மரணம் நிகழவில்லை .. ஒரு வாரத்தில் வெளிநாடு போக வேண்டும்  


இந்த  சூழலில்   முயன்று முக்கிய சம்பவங்கள்  அந்த வீட்டில்  நிகழ்கின்றன 


சம்பவம் 1 - நாராயினியின்  கணவர்   இடம்  தன்  நிலத்தை அடமானம் வைத்து 2 லட்ச ரூபாய்  கடன் வாங்கியவர் இப்போது 40 லட்ச ரூபாய்   தந்து  நிலத்தை     மீட்க   தயாராக இருக்கிறார் .ஆனால் மூத்த  மகன்    தர  மறுக்கிறார் .80 லட்ச ம்   கேட்கிறார் 


சம்பவம் 2  - உங்க   உறவும் வேண்டாம் , சொத்தும் வேண்டாம் என  வீட்டை விட்டு  வெளியேறி  காதலியுடன்  பாரீன் போன கடைசி மகன்  இப்போது  பாகப்பிரிவினை  கோருகிறான் . மூத்த அண்ணன்  தர  மறுக்கிறார் .  இத்தனை வருடங்களாக  , அம்மா , அப்பாவைப் பராமரித்தவன் நான் .   பொறுப்பில்லாமல்  ஊரை விட்டு  ஓடியவன் நீ . இப்போ  சொத்து மட்டும் வேண்டுமா? என்கிறார் 


சம்பவம் 3  - நாராயினியின்  முதல்  மகனின்  19 வயது   மகள் +  நாராயினியின்  கடைசி மகன் உடைய 18 வயது   மகன் இருவரும்  நெருக்கமாக ப்பழகுகிறார்கள் . அதாவது  பெரியப்பா  மகள் , சித்தப்பா  மகன்   உடன் நெருக்கம் காட்டுகிறாள் .அக்கா , தம்பி முறை    ஆகும்  இவர்களது  இன்செஸ்ட்  லவ்  இருவரது பெற்றோ ருக்கும் தெரியவருகிறது 


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள்  தான் மீதித் திரைக்கதை 

மூன்று  மகன்களாக   முறையே அலென்ஸியர் , ஜோஜூ  ஜார்ஜ் , சுராஜ்  வெஞ்சாரமூடு  ஆகிய மூவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் .அந்தந்த  கேரக்ட்டர்கள்  ஆகவே  வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்லலாம் 

முதல்  மருமகள் , மூன்றாவது மருமகள்    ஆக  முறையே  சஜிதா  மடத்தில் , ஷெல்லி   கிஷோர்  இருவரும்  குடும்பப்பாங்கான முகத்துடன் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் இன்செஸ்ட்  லவ்  ஜோடி ஆக   தாமஸ் மேத்யூ+ கார்கி ஆனந்தன் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும்  டீன் ஏஜ் கேர்ள் ஆக  வரும் கார்கி ஆனந்தன்  அம்மாவிடம்  சிடுமூஞ்சி  ஆக இருப்பது , காதலனிடம்   குழைவது , அப்பாவிடம் நார்மல் ஆக இருப்பது , தோழியுடன்  கல கலப்பாக கலாய்ப்பது  என நுட்பமாக  முக   உணர்வுகளை  வெளிப்படுத்தி  இருக்கிறார் . இவர் வருங்காலத்தில்  ஒரு த்ரிஷா  அல்லது  நயன் தாரா  போல  புகழ்  பெறுவது உறுதி 


ராகுல் ராஜ் தான் இசை . ஒரு மெலோடி சாங்க்  நன்றாக இருக்கிறது .பின்னணி  இசை  ஓகே ரகம் ஜியோதி ஸ்வரூப் பாண்ட்  தான்  எடிட்டிங்க்  107  நிமிடங்கள்  படம் ஓடுகிறது . இரண்டரை மணி  நேரம்  ஓடியது போல பிரமை அப்பு  பிரபாகரின் ஒளிப்பதிவு  அருமை . ஊர்த்திருவிழா , குளக்கரை , நாயகியின்  க்ளோஸப்  ஷாட் என கலக்கி இருக்கிறார் சரண்  வேணுகோபாலின் வசனத்தில்  பல இடங்கள்  பாராட்டும்படி இருக்கிறது . கதை திரைக்கதை  எழுதி .இயக்கி  இருப்பவரும் இவரே 

சபாஷ்  டைரக்டர்


1  ஒரு ஊரில்  நடக்கும் சம்பவத்தை நாம் நேரில் கண்டு களிப்பது போல மனதுக்கு நெருக்கமாக காட்சிகளை அமைத்தது 


2  அனைவரது  கேரக்ட்டர்  டிசைன் . நடிப்பு உயிரோட்டம் 


3  இரண்டு  மகன்களும்  சாகாமல்  இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில்  தலையணை வைத்து அழுத்தி கொன்று  விடலாமா?என முயன்று  பின் முடிவை மாற்றி விடும் சீன்  உருக்கம் 


4   அக்கா - தம்பி முறை உள்ள  இருவரும்  காதலிப்பதை  நெருடல்  இல்லாமல் காட் சிகளை அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  சோஷியல்  ஒர்க் ,  சோஷியல்  சரவீஸ்  இரண்டுக்கும் வித்தியாசம்  இருக்கா? அதுவே எனக்குத்தெரியாது 


2  இழவு காண வந்தவர்  = அம்மா இறந்துட் டாங்களாப்பா 


   இன்னும்  இல்லை 


 அடடா , செய்தி கேட்ட்தும்  அவசரமா  சாப்பிடாம  கூட  வந்துட்டென்  


 உள்ளே  தோசை  இருக்கு 


3  இஞ்சினியரிங்க்  படிச்சது  ஒரு பயனும்  இல்லை . சாதா   டிகிரி போதும் 


4  ஏம்மா , நீ இன்னும் முஸ்லிமா தான் இருக்கியா? 


 இன்னும் மதம் மாறலை 


5  எதனால   சோகமா இருக்கே? 


 அம்மாவின் மரணத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேன் 


 பெத்த அம்மா எப்போ சாவா என  எதிர்பார்த்துட்டு இருக்கோமே ? இது பாவம் இல்லையா?


6 டாகடர் , எங்க அம்மா  எதனால இன்னும் சாகலை ?


 தேவையான ஊட் டச்சத்து  கிடை ச்சிடுச்சு போல 


அப்போ  உணவு  கொடுப்பதை  நிறுத்திடவா? 


 அடப்பாவமே . போகும்போது  நிம்மதியாப்போகட்டும் 



7  எல்லா உறவிலும் ஒரு எல்லை தேவை 


8      மே     ஐ  கம்  இன்  ?


 நோ . இன்விடேஷன்  வெச்சா கூப்பிடுவாங்க . வா 


9 நீ  கோபமா  இருக்கும்போது ரொம்ப அழகா இருக்கே 


 சும்மா என்னை சமாதானப்படுத்த எதையாவது சொல்லாத 


10   உன் கிட்டே    நிறைய   சொல்லணும் .ஆனா எல்லாம் மெஸ்  ஆகி ஜாம் ஆகி இருக்கு . அப்புறமா மெயில் பன்றே ன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  தனது அண்ணன்  மகளும் , , தம்பி மகனும்  தனி  அறையில்  தம் அடிப்பதைக்கண்டிக்காமல்  அவர்ளுடன் சேர்ந்து ஜோஜு ஜார்ஜ்  தம் அடிப்பது நெருடல் 


2   அக்கா , தம்பி   முறை என்றாலும்  இருவரும்  அடிக்கடி  ஜோடி சேர்ந்து  சுற்றும்போது  யாரும் கண்டுக்கவே இல்லை 


3   2017 ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படமான  பிளாக் ஸ்னோ  என்ற  படத்தின் படி டிங்கரிங்க்  அட்லிவெர்சன் தான் இது .டைட்டிலில்   க்ரெடிட்  கொடுக்கவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-


சென்சார்  சர்ட்டிபிகேட்  படி  யு/ஏ  தான் .ஆனால்   லிப் லாக் சீன்கள் இரண்டு உண்டு .18+ தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரிஜினல்  ஆன 2017 ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படமான  பிளாக் ஸ்னோ பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5