Sunday, January 05, 2025

A LEGEND (2024) -சைனீஸ் மூவி -- விஜயபுரி வீரன் -(2025) தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் பேண்ட்டஸி த்ரில்லர் )

     

                    

A LEGEND (2024) -சைனீஸ் மூவி -- விஜயபுரி வீரன் -(2025) தமிழ் - சினிமா விமர்சனம்  ( ஆக்சன்  பேண்ட்டஸி  த்ரில்லர் ) 


50 மில்லியன்  டாலர் செலவில்  எடுக்கப்பட்டு  பல  மடங்கு  லாபம்  அள்ளிய ஜாக்கிசான் படம் இது .10/7/2024   அன்று   சைனாவில்  வெளியான இப்படம்  இப்போது  இங்கே  தமிழ்  டப்பிங்கில்  ரிலீஸ் ஆகி உள்ளது .இது ஏற்கனவே   ஜாக்கிசான்  நடித்த  த மித் (2005) , குங்க்பூ  யோகா (2017)  ஆகிய  படங்களின்  அடுத்த  பாகம் எனக்கொள்ளலாம் .முந்தைய  இரு படங்களைப்பார்க்காதவர்கள் கூட இப்படத்தைக்காணலாம்.கதை புரியும், தனிக்கதை தான் 


நாசர்  இயக்கிய தேவதை (1997)  ,  டிவைன்  லவ்வர்ஸ் (1997) , மகதீரா (2009)  ஆகிய  படங்கள் போல  முன் ஜென்மக்கதை  இக்காலக்கதையுடன் கனெக்ட் ஆகும்  திரைக்கதை  கொண்டது . கோட்  படத்தில்  விஜய்  டி ஏஜிங்க்  தொழில்  நுட்பத்தில் இளமையாக வந்தது போல இதில்  ஜாக்கிசான்  அந்தக்கால  இளைஞர் போல  அழகாக  வந்து போகிறார் . வழக்கமான  ஜாக்கிசானின் ஆக்சன் காட்சிகள் கடைசி  20 நிமிடங்களில்  பொறி பறக்கிறது 



வாண்டுமாமா  எழுதிய  வீரப்பிரதாபன்  கதைகளில்  வருவது போல  மாமூலான  ஆக்சன்  கதை தான் இது 



ஸ்பாய்லர்  அலெர்ட்



வில்லன்  ஒரு நாட்டின் இளவரசன் . .அவனுக்கு  ஒரு தம்பி உண்டு .. அந்நாட்டின்  தளபதி  மகளை  தனது   இரண்டாவது   மகனுக்கு  அதாவது   வில்லனின் தம்பிக்குப் பெண்  கேட்கிறார் மன்னர் .ஆனால்  தளபதி  மறுக்கிறார் .  இந்தக்காலம்  போல  அப்போது  இல்லை . மாப்பிள்ளை  குடிகாரன் , பொறுக்கி என்றால் பெண் தர மாட் டார்கள் . இதனால்  கடுப்பான  மன்னன்  தளபதியைக்கொலை செய்து விடுகிறான் . வில்லன்  அந்தப்பெண் மீது ஆசைப்பட்டு  தன தம்பியையும், அப்பாவையும் கொலை செய்து தானே மன்னன் ஆகிறான் . தளபதியின்  மகள்    தான்   நாயகி . அவள்  தப்பி ஓடுகிறாள் . வில்லன்  நாயகியைத்தன் பரிவாரங்களுடன் துரத்துகிறான் 



 நாயகன்  வேறு  ஒரு நாட்டின்  படை  வீரன் . குதிரைப்படை   திரட்டும்  பணியில் தன நண்பனுடன் இருக்கிறான் . அண்டை  நாட்டின் தளபதி மகள் தான்  நாயகி  என்பது   தெரியாமலேயே  நாயகியை வில்லனிடம் இருந்து நாயகன் காப்பாற்றுகிறான் . நாயகனின் நண்பனுக்கு நாயகி   மீது  காதல் .ஆனால் நாயகிக்கு நாயகன் மீது காதல் நாயகியை  மீட்க   வில்லன்  தன்  படையுடன்  நாயகனின் நாட்டின் மீது  போர்  தொடுக்கிறான் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்ககள்  தான் மீதி திரைக்கதை 




 மேலே   சொன்னவை எல்லாம்  முன்  ஜென்மக்கதை . அதே  கேரக்ட்டர்கள்  இந்த  ஜென்மத்தில் உலா   வருகின்றன . அந்தக்கதையோடு  இந்தக்கதை எப்படி  கனெக்ட் ஆகுது  என்பது  மீதி சுவாரசியம் 



 நாயகன் ஆக  ஜாக்கிசான்  ,நண்பனாக  லே  ஜாங்க்   இருவரும் நடித்து இருக்கிறார்கள் . இளமையான  ஜாக்கிசான்  அருமை என்றாலும்  இந்தக்கால ஜாக்கிசான்  க்ளைமாக்சில்  அதகளம் செய்கிறார் . இந்த வயதிலும் அவர் போடும் ஆக்சன்  சீன்கள்  அட்டகாசம் நாயகி ஆக குல்னசர் பெக்ஸ்ட்டியர்   பெஸ்ட்   டியர்  என சொல்ல  வைக்கும்  அழகு .வில்லன் ஆக ஆரிப்   அசத்தி  இருக்கிறார் 


ஜிங்கிள்  மா  தான் ஒளிப்பதிவு . கண்களில்  ஒத்திக்கொள்ளலாம் போல    அழகான  பிரேம்கள் இசை மாதம் வாங். பின்னணி  இசை அருமை . 129   நிமிடங்கள்  படம்  ஓடுகிறது , கிட் டத் தட் ட  ஒரு தமிழ்ப்படத்தின் நீளம் தான் . திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர ஸ்டென்லி  டாங்க் 



சபாஷ்  டைரக்டர்


1  பிரம்மாண்டமான  போர்க்காட் சிகள்  அசர   வைக்கிறது 

2  நாயகியின்  அழகு , அவரது  மார்ஷியல் ஆர்ட்ஸ் 

3   க்ளைமாக்சில்  ஜாக்கி  சான் -ன்  அதிரடி  சண்டைக்காட் சி 

4   வில்லனுக்கும்,, நாயகிக்கும் நடக்கும் வாள்  சண்டை 



  ரசித்த  வசனங்கள் 



1 பெற்றோருடன்  வாழும்  பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது 

2  பிறப்பிலேயே  வாழ்க்கையைத்தொலைத்தவன்  நான் , அதனால்  வாழ்வைப்பற்றி  சிந்திப்பதில்லை 

3  ஆண்டவன்  நமக்கு  கொடுத்த உடலையும் , அழகையும்  நாம தான்  பாதுகாக்கனும் 

4  ஒருவன்  மரணத்தருவாயில்  இருக்கும்போது  அவன்  இழக்க எதுவுமே   இருக்காது 

5  ராஜாக்கள்  எப்போதும்  வெள்ளைக்குதிரைகளைத்தான் பயன்படுத்தினார்கள் 

6  காசு விஷயத்தில் கணக்குப்பார்க்கும் யாருக்கும் பெண் செட் ஆகாது 

7  உன்   வாழ்க்கையை அடுத்தவருக்கு அர்ப்பணித்து விடாதே 

8   எல்லாரையும் கொன்னுட்டு தான் மட்டும்   வாழலாம்  என    நினைப்பவன் சுயநலவாதி 

9   நமக்கு வரக்கூடிய  கனவுகள்  மூளையின் செயல்பாடுகள் . ,வாழ்க்கைக்கும்  கனவுக்கும் தொடர்பு இருக்கு 

10    அவன்  கிட் டே  டைரக்டா   என் காதலைப்பற்றி சொன்னேன் .அவன் என்னடான்னா இன்டைரக் டா   அவனுடைய  வேலையைப்பற்றி   சொல்றான் 



11 கனவுல  ஒரு அழ கான  பெண்ணைப்பார்த்தேன் 


 என்னை மாதிரி னு சொல்லு 


எனக்குப்பொய்  பேச   வராது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1  நாயகியின்  அம்மாவின்  முதுகின்  மேல்புறம்  அம்பு பட்டு  அடுத்த நொடியே இறக்கிறார் .ஆனால்  விஷ  அம்பு பாய்ந்தும்  நாயகன் இறக்கவில்லை 



2  வில்லன்  நாயகியைத்தூக்கிட்டு  அல்லது கடத்திட்டுப்போகாம  நாயகியின் அம்மாவைக்கடத்தறான் , பேக்கு 



3 பொதுவா  பொண்ணுங்க  போட்டிருக்கும் செயின்  அல்லது  மாலையைக்கழட் ட  லே ட் ஆகும் .இதுல நாயகி  தொட் டவுடன்  கையோட  வருது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN  U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அம்புலிமாமா  , பாலமித்ரா , பூந்தளிர்   பத்திரிக் கை  வாசகர்கள் , ஜாக்கிசான்  ரசிகர்கள்  பார்க்கலாம் .ரேட்டிங் 2.75 / 5 

--

 சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,


A Legend
Film poster
Chinese name
Traditional Chinese傳奇
Simplified Chinese传奇
Transcriptions
Directed byStanley Tong
Written byStanley Tong
Produced by
  • Barbie Tung
  • Defu Jiang
  • Dong Yu
  • Hongbo Yin
[1]
Starring
CinematographyJingle Ma
Music byNathan Wang
Production
companies
Distributed byEmperor Motion Pictures
Release dates
  • July 10, 2024 (China)
  • August 1, 2024 (Malaysia, Singapore)
  • January 3, 2025 (Netflix (International, planned))
Running time
129 minutes
CountryChina
LanguageMandarin
BudgetUSD 50 million[2]

Saturday, January 04, 2025

ALL WE IMAGINE AS LIGHT (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

                



        பல  திரைப்பட விழாக்களில்  கலந்து கொண்டு  ஏகப்பட் ட  விருதுகளை அள்ளிக்குவித்திருக்கிறது இந்தப்படம்.பெண்  இயக்குனர் ஆன பாயல்  கபாடியா  இயக்கிய  ஆறாவது  படம் இது .  2014  ல் இவரது  முதல்  படமான   வாட் டர்மிலன்  பிஷ் அண்ட்  ஆப் கோஸ்ட்  பல விருதுகளை  வென்றது .2021 ஆம்  ஆண்டு  ஏ நைட் ஆப் நோயிங்க் நத்திங்க்  இவர்  இயக்கத்தில்  கடைசியாக  வந்த  படம் .23/5/2024 அன்று  திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட  இப்படம் 21/9/2024   அன்று  கேரள  திரை அரங்குங்களில்   ரிலீஸ் ஆனது .இப்போது  2/1/2025  முதல்  டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார்  ஓ டி டி  தளத்தில்  காணக்கிடைக்கிறது 


கேன்ஸ்  திரைப்பட  விழாவில்  1994ம் ஆண்டில் ஸ்வாகம்  என்ற  மலையாளப்படம்  திரை  இடப்பட்ட்து . அதற்குப்பின் 30   வருடங்கள்  கழித்து  இப்போது தான் ஒரு  இந்தியப் படம்    பைனல்  வரை சென்று      திரை  இடப்படுகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகி  திருமணம்  ஆனவர் .ஆனால் கணவன் இப்போது  கூட இல்லை . வேலை விஷயமாக ஜெர்மன் போனவன் இப்போ ஆள் அட்ரஸ் காணோம் .கேரளாவை சார்ந்த  நாயகி  இப்போது  மும்பையில்  ஒரு ஹாஸ்ப்பிடலில் நர்ஸ் ஆக பணி புரிகிறார் .கணவர்  விரைவில்  திரும்ப  வருவார்  என்ற  நம்பிக்கையுடன் காத்திருப்பவர் .


 நாயகியின்  தோழியும் ஒரு  நர்ஸ்   தான் . திருமணம் ஆகாதவர் இவர்கள்  இருவரும்  ஒரே  இடத்தில் பணி  செய்வதால் ஒரே வீட்டில் தங்கி  இருக்கின்றனர் இந்துவாகிய  இவர்  ஒரு முஸ்லீம்  இளைஞரைக்காதலிக்கிறார் .   தன்  தோழிக்கு ஒரு காதலர்  இருப்பது  நாயகிக்கு தெரியாது 



இவர்கள்  இருவரும்  பணியாற்றும்  அதே  ஹாஸ்ப்பிடலில்   சமையல் வேலை செய்யும் ஒரு  பெண்ணும்  இருக்கிறார் .இவருக்கு  50 வயது ஆகிறது .இவர்  குடி இருக்கும் பகுதியில் காலி பண்ணசொல்லி விட் டார்கள்.இதனால் இவர் தன கிராமத்துக்கே  போகிறார் .இவருக்குத்துணையாக   நாயகியும் , தோழியும்  போகிறார்கள் . அந்த  கிராமத்துக்கு  தன்  காதலனை வர வைக்கிறார்  நாயகியின்  தோழி .அங்கே  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி திரைக்கதை 


  நாயகி   ஆக  கனி குஸ்ருதி  கலக்கலான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். ஒரு  சீனில்  கூடஓவர் ஆக்டிங்  இல்லை .மிக இயல்பான  தோற்றம் .அமைதியான நடிப்பு 


 நாயகியின்தோழி  ஆக  திவ்யா  பிரபா  சுட்டித்தனமான  நடிப்பை  வழங்கி   இருக்கிறார் . 50 வயதான  பெண்ணாக சய்யா  கடம்  நடித்திருக்கிறார் .இவரது  நடிப்பு சுமார்  ரகம்  தான் 


படத்தில்  பாராட் ட  வேண்டிய  முதல் அம்சம்  அட்டகாசமான  ஒளிப்பதிவு ..லைட்டிங்கில்  , நாயகிகளுக்கான க்ளோசப் ஷாட்களில் கேமரா  கோணங்கள்  என  கண்களில்  ஒத்திக்கொள்ளக்கூடிய  தரமான  ஒளிப்பதிவு . பல விருதுகளை வென்றிருக்கிறார் 



ஒளிப்பதிவு  ரன்பீர் தாஸ் .115  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்

 1  கமர்ஷியல்  விஷயங்கள்  இல்லாத திரைக்கதையில்  நாயகியின்  தோழியும் , காதலனும்  ஒதுங்க  இடம் தேடுவது , காதல் கொண்டாட் டத்தில்  கழிப்பது   ஆகிய  ஜாலியான விஷயங்களை  ஜனரஞ்சகமாக காட்டியது 

2  நாயகி ,      தோழி  இருவரது  அழகும்,நடிப்பும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1 ஒரு ஆண்  குடிகாரனாக இருந்தால்   அவன் மட்டும் தான்  நாசமாகப்போவான் .பெண்  குடிகாரி  ஆக  இருந்தால்  அவள்  குடும்பமே   நாசமாகப்போகும் . ஆணுக்கு இணையாகப்பெண்ணைக்காட் ட   அவளை   குடிகாரியாகக்காட்டிடணுமா?


2    மெயின்   கதைக்கும் , 3  பெண்களும்  சரக்கு  அடிக்கும்  சீனுக்கும் என்ன சம்பந்தம் ? 


3   நாயகியின் தோழி  நாயகியின்  கண் முன்  உடை மாற்றும்  காட் சி  எதற்கு ?  லெஸ்பியன்  கதை இல்லை . தேவை இல்லாமல்  திணிக்கப்பட் ட கிளாமர் காட் சி 


4   நாயகியின்  தோழியும் , அவளது  காதலனும்  கிராமத்தில்   ஓப்பன் பிளேஸில்  உறவு கொள்ளும்  காட்சி யும்   திணிக்கப்பட் ட கிளாமர் காட் சி தான் .இத்தனைக்கும்  பெண்  இயக்குனர் வேற 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெத்தபபடித்த  மேதாவிகள்  ஆஹா  ஓஹோ  என விமர்சித்த  படம் தான்  இது .  கொட்டுக்காளி  படம்  போல  இது  பொது மக்களுக்குப்பிடிக்காத  ஒரு டப்பாப்படம் தான் .2 மணி  நேரம்  டைம் வேஸ்ட் .ரேட்டிங்க்  2 / 5 



All We Imagine as Light
Promotional poster
Directed byPayal Kapadia
Written byPayal Kapadia
Produced by
  • Thomas Hakim
  • Julien Graff
Starring
CinematographyRanabir Das
Edited byClément Pinteaux
Music by
Production
companies
Distributed by
  • Condor Distribution (France)
  • Spirit Media (India)
  • September Film (Netherlands)
Release dates
  • 23 May 2024 (Cannes)
  • 21 September 2024 (India)
  • 2 October 2024 (France)
Running time
115 minutes
Countries
  • France
  • India
  • Netherlands
  • Luxembourg
  • Italy
LanguagesMalayalam
Hindi
Marathi
Box office$2.2 million[1]

 

Friday, January 03, 2025

MAX (2024) -கன்னடம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )

                 

        

கலைப்புலி  எஸ் தாணு  + கன்னட நடிகர்  சுதீபா (கிச்சா சுதீப் )  இருவரும்  இணைந்து லோ பட்ஜெட்டில்  மகாபலிபுரத்தில்  சூட்  செய்யப்பட் ட இப்படம்  கமர்ஷியலாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான  வெற்றி + வசூல் + விமர்சனங்களைப்பெற்றிருக்கிறது . லோகேஷ்  கனகராஜின்  கைதி பட பாணியில்  ஒரே இரவில்  ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷனில்  மொத்தக்கதையுடம்  நடப்பது போல  விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டது . வில்லி  ஆக வரலட்ஸ்மி சரத் குமார் நடித்திருப்பது கூடுதல் பிளஸ் . இந்த ஆண்டின் பிரம்மாண்டமான ஆக்சன் த்ரில்லர் இது .25/12/2024  அன்று  கிறிஸ்துமஸ்  ரிலீஸ் ஆக  வெளியான  இப்படம்  அதிரி , புதிரி வெற்றியை  ருசித்து     இருக்கிறது .ஒரு படத்துக்கு  திரைக்கதை  எந்த அளவு முக்கியம் ? ஹீரோவை நம்பாதே ,ரைட்டரை  நம்பு  என்று  பிடரியில் பொளேர்  என அடித்து சொல்லி இருக்கும் படம் இது 


இயக்குனர்  லோகேஷ்  கனகராஜின்  உதவி இயக்குனர்  ஆன விஜய் கார்த்திகேயாதான் படத்தின் இயக்குனர் .  அதனால் திரைக்கதையில் கைதி + விக்ரம் பாகம்  2   இவற்றின்  தாக்கம் அதிகம் ஆக இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  ஒரு போலீஸ்  இன்ஸ்பெக்ட்டர் . ஒரு ஏரியாவுக்கு  அடுத்த நாள் காலை ட்யூட்டியில் ஜாயின் பண்ண வேண்டியவர் . முன்  தின இரவில்  அந்த  ஸ் டேஷன்  பெண்  கான்ஸடப்பிள்  இடம்  தகராறு  செய்யும் இரு ரவுடிகளை  லாக்கப்பில் அடைக்கிறார் . அவர்கள்  இருவரும்  ஆளும்  கட் சி  அமைச்சரின்  மகன்கள் , விஷயம்  வெளியே  தெரிந்தால் பிரச்சனை ஆகி விடும் என பலரும் எச்சரிக்கிறார்கள் . நாயகன்  அதை  சட் டை  செய்யவில்லை . அந்த  இரு ரவுடிகளும்  மர்மமான முறையில்  லாக்கப்பில்  இறந்து கிடக்கிறார்கள் .அவர்களுக்குள்  மோதலா? வேறு யாராவது கொலை செய்தார்களா? என்பது நாயகனுக்கு அப்போது தெரியவில்லை .ஆனால்  அவர்கள்  இருவரும் இறந்த  விஷயம் மினிஸ்டருக்குத்தெரிந்தால் அவ்வளவு தான் . அதனால்  பிணத்தை  அப்புறப்படுத்த வேண்டும் . ஆனால் அதற்குள்  மினிஸ்டரின்  கையாளும், வில்லியம்  ஆனா  க்ரைம் பிராஞ்ச்   இன்ஸ்பெக்டர்   ரூபா   அங்கே  விசிட்  அடிக்கிறார் . இதற்குப்பின் நிகழும் அதிரடி ஆக்சன்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே. 



நாயகன் ஆக  கிச்சா சுதீப்  கலக்கி இருக்கிறார் .அவரது  உயரம், உடல் மொழி  ஆகியவை விஷாலை  நினைவுபடுத்துகிறது . ஒரு ஆக்சன்  ஹீரோவுக்கான சாமுத்ரிகா லட்ஷணம் அனைத்தும் பொருந்தி இருக்கிறது . வில்லி ஆக  வரலட்ஸ்மி சரத் குமார்  ஓப்பனிங்கில்  கலக்கலான இனட்ரோவுடன்  வந்தாலும்  பெரிய அளவில் வாய்ப்பில்லை . ஹெட்   கான்ஸடபிள்  ஆக   வரும் இளவரசு  அட் டகாசமான குணச்சித்திர நடிப்பு .வில்லன்  ஆக சுனில்   . இவரது கேரக்ட்டர்  டிசைன்  இன்னும்  வலுவாக எழுதி இருக்கலாம் 


அஜனீஷ் லோக்நாத்  இசையில்  3   பாடல்கள்   சுமார் ரகம்,  பின்னணி  இசையில்  பிரித்து மேய்ந்து விட்டார் .சேகர்  சந்திராவின்  ஒளிப்பதிவு  ஒரே இரவில்  நடக்கும் கதை என்பதால் லைட்டிங்கில் கவனம் எடுத்து உழைத்திருக்கிறது .கணேஷ் பாபுவின்     எடிட்டிங்கில்  படம் 134   நிமிடங்கள்   ஓடுகிறது .முதல் பாதி  செம ஸ்பீடு . பின்பாதி  ஓகே ரகம் . கேஜி எப்  பாணியில்  பஞ்ச்   வசனங்கள்   தெறிக்கின்றன 

சபாஷ்  டைரக்டர்


1  போலீஸ் ஸ்டேஷனில்  நாமும் ஒரு பார்வையாளராக இருப்பது போல  நம்மை உணர வைக்கும் விதத்தில் அட்டகாசமான திரைக்கதை 


2  வில்லனைக்குழப்ப நாயகன் போடும் திட்டங்கள்  குட் 


3   ரவுடிகளைக்கொலை  செய்தவர் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பதை  க்ளைமாக்சில் சொன்ன விதம் 


4  நாயகனுக்கு ஜோடியாக நாயகியே , டூயட்டோ இல்லாதது  பெரிய  பிளஸ் . மொக்கைக்காமெடி டிராக்கும் இல்லை 



  ரசித்த  வசனங்கள் 

1  யுத்தத்தை முதன் முதலில்  யார் ஆரம்பிக்கிறார்களோ அவங்களை எனக்குப்பிடிக்காது . அதே சமயம்  யுத்தத்தைக்கண்டு பயந்து ஓடறவங்களையும் எனக்குப்பிடிக்காது


2  எங்க அப்பாவை ஜெயில்ல போடுங்க , மொபைல் கேம் ஆடவவிடமாட் டிங்கறார் 


3   சில யுத்தங்கள் எப்போ  எப்படி ஆரம்பித்தது என்பதே தெரியாமல் தொடங்கும் 


4  ஒவ்வொரு போலீஸ்  ஸ்டேஷன்லயும்  ஒரு இன்பார்மர் இருப்பான் 


5  எதிரிங்க  யுத்தத்தைத்தொடங்குவாங்கன்னு நாம காத்திருக்கூடாது .நாமே  தொடங்கிடணும் 


6   யுத்தத்தை நாம முதலில் தொடங்கினாதான் நம்மோட பலம் என்ன?என எதிரிக்குத்தெரியும் ,எதிரியோடு பலவீனம் என்ன?  என்பது நமக்குத்தெரியும் 


7 மேக்ஸ்  என்றால் மேக்சிமம் மாஸ் 


8  ஒவ்வொரு வீரனுக்குப்பின்னாலும் ஒரு கமாண்டர் இருந்து ஆணை இட்டுக்கொண்டு இருக்க முடியாது .அப்படி செஞ்சா அந்தப்போரில் சுவராஸ்யம் இருக்காது 


9  அவன்  கேம் என்ன?ன்னு தெரியாம அங்கே போனா நாம தான் அவன் கிட் டே  மாட்டுவோம் 



10     ஆயிரம் சேனைகள் , ஆயிரம் யானைகள்  வன்ஹாலும் என் புள்ளை  ஒத்தை ஆளா  சமாளிப்பான் 


11  மே க்ஸ்  கிட் டே  பேசும்போது  மேக்சிமம்  சைலன்ஸோட  இருக்கணும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லி  போலீஸ் ஸ் டேஷனுக்கு  வந்து  ஒரு ஆணியும்  களை யவில்லை என்பது மைனஸ் 


2    வில்லியைக்கவனம்  திசை  திருப்ப நாயகன் பாடும் பாட்டு  செயற்கை 


3  வில்லன் , வில்லி இருவரது கேரக் டர்   டிசைன்களும்  இன்னும் பலமாக எழுதி இருக்க வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பான  ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்களை திருப்திப்படுத்தும்  ஒரு நல்லபடம் .பெண்களும் ரசிக்கலாம் . ரேட்டிங் 3.25 / 5 


Max
Theatrical release poster
Directed byVijay Karthikeyaa
Produced byKalaippuli S. Thanu
Sudeepa
StarringSudeepa
Varalaxmi Sarathkumar
Sunil
Samyukta Hornad
Sukrutha Wagle
Anirudh Bhat
CinematographyShekhar Chandra
Edited byS. R. Ganesh Baabu
Music byB. Ajaneesh Loknath[1]
Production
companies
Distributed byKRG Studios
Release date
  • 25 December 2024
Running time
134 minutes[2]
CountryIndia
LanguageKannada

Thursday, January 02, 2025

MURA(2024) மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ராபரி ஆக்சன் ராபரி த்ரில்லர் ) @அமேசான் ப்ரைம்

           

              

ரோஷன் மேத்யூ + அன்னா பெண்  காம்ப்போவில் வெளியான கப்பீலா (2020)  என்ற  மலையாளப்படத்தை இயக்கிய முகமத்   முஸ்தபா  இயக்கிய  இரண்டாவது  படம் தான் இது . உப்பும்  மிளகும் என்ற  மலையாள  டி வி  சீரியல் எடுத்த சுரேஷ்  பாபுதான் இதன் திரைக்கதை ஆசிரியர் . திருவனந்தபுரம் , தென் காசி , சென்னை ,பெங்களுர்  ஆகிய நகரங்களில்  57 நாட்களில்  படமாக்கப்பட்ட  லோ பட்ஜெட் படம் இது 8/11/2024  அன்று  திரை  அரங்குகளில் வெளியான  இப்படம் இப்போது  அமேசான் ப்ரைம்  ல தமிழ்  டப்பிங்க்கில்  கிடைக்குது . வசூல் ரீதியாக  இது பெரிய  வெற்றிப்படமாக  அமையவில்லை என்றாலும்  ஆக்சன்  சீக்வன்சில்  தெறிக்க விட் ட  படம் ஒ  டி டி யில் செம ஹிட் ஆகி விட்ட்து 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  ஒரு லோக்கல்  தாதா.சின்னச் சின்ன  அடிதடி ,கட்டப்பஞ்சாயத்து   என  நடத்தி வருபவர் . அவரிடம்  நான்கு இளைஞர்கள்  புதிதாக  வேலைக்கு சேர்கிறார்கள் .வில்லன் மேல்  பாசமாக இருக்கிறார்கள் . வில்லனுக்கு ஒரு டாஸ்க்  வருகிறது . ஒரு இடத்தில் கறுப்புப்பணம் கோடிக்கணக்கில்  இருக்கிறது .அதை கொள்ளை அடிக்க வேண்டும் . வில்லன் அந்த நான்கு இளைஞர்களிடம் அந்த வேலையை ஒப்படைக்கிறான் .


இதே  வேலையை  ஆல்ரெடி செய்ய முயன்ற  2 பேர்  தோற்றுப்போய் விட்ட  தகவலையும்  வில்லன் சொல்ல  அந்த நான்கு  பேரும்  அந்த 2 பேரின்  விபரங்களை  வாங்கி  அவர்களை சந்தித்து  அவர்களைக்கூடடாக சேர்த்து ரிஸ்க்  எடுத்துப்பணத்தைக்கொள்ளை  அடித்து  விடுகிறார்கள் .இப்போது வில்லனிடம்  தங்கள்  கமிஷன் எவ்வளவு ? எனப்பேரம் பேசுகிறார்கள் . வில்லனுக்கு அந்த டாஸ்க்கைத்தந்த ஆளுக்கும் , 6 இளைஞர்களுக்கும்  மோதல் உருவாகிறது .இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள் , அதிரடி ஆக்ஸன்கள் தான்  மொத்தப்படமும் 


வில்லன்  ஆக  சுராஜ்   வெஞ்சார மூடு  கச்சிதமாக நடித்திருக்கிறார் . வில்லி  ஆக  கனி குஸ்ருதி  பிரமாதப்படுத்தி இருக்கிறார் . 6  இளைஞர்களும்  நடிப்பில் குறை வைக்கவில்லை 

கிறிஸ்ட்டி  ஜோபி யின்  பின்னணி இசை  அருமை .பஸீல்  நாசரின் ஒளிப்பதிவு  குட் . சாமன்  சாக்கோ வின்  எடிட்டிங்க்  ஷார்ப் . . திரைக்கதையை  சுரேஷ் பாபு எழுத  முகமத்   முஸ்தபா  விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்

1  ஸ்ட ண்ட் மாஸ்டர்  தான்   முக்கியப்பங்கு வகிக்கிறார் .ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம் . ஷூட்டிங்க்  போலவே  தெரியவில்லை . நிஜமான  சண்டை போலவே  இருக்கிறது 


2  படத்தின்   பின் பாதி   எல்லாம்  பரபரப்பான  தீப்பொறி   பறக்கும்    திரைக்கதை 


  ரசித்த  வசனங்கள் 


1    அம்மா,அப்பாவுக்கு ரீபிளேஸ்மென்ட்டே  கிடையாது , அவங்க இடத்தை வேற யாராலும் நிரப்ப முடியாது 


2   என்னடா இது ? ரொம்ப வயசான பொண்ணு மாதிரி இருக்கு ? 


    ஓல்டு   ஈஸ்  கோல்டு


3  நான் வேணா  பில்   பே பண்ணிடவா? 


 நீ இதுக்கு முன்னால எப்பவாவது எங்கேயாவது பில்    பே பண்ணி இருக்கியா? 


4   டியர் , நாம  ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கலாம் 


 ஐயோ , இப்போ  வேணாம்,நான் படிக்கணும் 


எதனால இந்தப்பொண்ணுங்க எப்போப்பாரு படிக்கணும்னு டீசன்ஸி இல்லாம பேசறாங்க ? 

5   பணத்தை பத்திரமா வெச்சுக்கோ ,அதுக்கு ரீபிளேஸ்மென்ட்ட்டே கிடையாது 


6   கூட  ஷேர்  பண்ணிக்க துணை இல்லாதப்ப   எவ்ளோ  பணம்  சம்பாதிச்சாலும்  வேஸ்ட்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மொத்தப்படமே  2 மணி நேரம்  தான்.  ஆனால்  மெயின் கதைக்கு உள்ளே வர 45  நிமிடங்கள் ஆகிறது . இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் .


2  அவ்ளோ  பணத்தை   ரொம்ப சுலபமாக  கொள்ளை  அடிப்பதாகக்காட்டியது நம்பும்படி இல்லை 


3   வன்முறை  தூக்கல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+   வன்முறைக்காட்சிகளுக்காக  ஏ சர்ட்டிபிகேட்  பெற்ற  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள் ,சண்டைப் படக்காடசிகளை  விரும்பிப்பார்ப்பவர்கள் , பைட்டுக்காகவே படம் பார்ப்பவர்கள்  தவற  விடக்கூடாது படம்  . ரேட்டிங்  2.75 / 5 


Mura
Directed byMuhammad Musthafa
Written bySuresh Babu
Produced byRiya Shibu
StarringHridhu Haroon
Suraj Venjaramoodu
Kani Kusruti
Maala Parvathi
CinematographyFazil Nazer
Edited byChaman Chakko
Music byChristy Joby
Production
company
Distributed byHR Pictures
Release date
  • 8 November 2024
CountryIndia
LanguageMalayalam

Wednesday, January 01, 2025

THE SMILE MAN (2024) தி ஸ்மைல் மேன் (தமிழ் ) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )

     

                   நாட்டாமை , சூரிய வம்சம் , நட்புக்காக  போன்ற  மெகா  ஹிட் படங்களில்  நடித்த  சரத் குமாரின் 150 வது  படம்  இது . ஆனால்  பெரிய அளவில்  பிரமோஷன் இல்லை .;போர்த்தொழில்  என்ற   லேட் டஸ்ட்  ஹிட்  கொடுத்தவர் அதே  பாணியில்  ஒரு த்ரில்லர்  படம்  நடித்தும்  போதுமான  அளவு  விளம்பரம் தராதது எதனால்?என்பது தெரியவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  க்ரைம்  பிராஞ்ச்  போலீஸ் ஆபீசர் .5 வருடங்களுக்கு முன்  நடந்த ஒரு விபத்தில்  அவருக்கு  அல்சைமர் வியாதி வந்து விடுகிறது . விரைவில்  அவர் தனது பழைய  நினைவுகளை எல்லாம் பரிபூர்ணமாக இழப்பார் என டாக்டர் சொல்லி விட் டார் .இதனால்  உடனடியாக நாயகன்  5 வருடங்களுக்கு முன்  நடந்த  ஒரு சீரியல் கில்லர்  பற்றி  ஒரு புத்தகம்  போடுகிறார் .அந்த புத்தகம்  வெளியானதும்  அந்த சீரியல் கில்லிங்க்   பேட்டர்னில்  ஒரு கொலை நடக்கிறது .

இந்தக்கொலையை விசாரிக்க  ஒரு புது ஆபீசர்  நியமிக்கப்படுகிறார் . இந்த ஆபீசரின் அப்பாவும்,  நாயகனும் சேர்ந்து தான்  5 வருடங்களுக்கு முன்  அந்த  ஸீரியல்  கில்லர்  கேஸை  டீல் செய்தது . அப்போதே  அந்த சீரியல் கில்லர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் , இப்போது  அதே  பாணியில்   நடக்கும்  கொலைகள் , அந்த  கில்லர்  உயிரோடுதான் இருக்கிறானா?  அல்லது அதே    பேட்டர்னில்  கொலை செய்யும் புதிய காப்பிகேட்  கில்லரா?  என்பதை  நாயகனும் , புது ஆபீசர்  டீமும்  இணைந்து கண்டு பிடிப்பதுதான் மீதி திரைக்கதை 

நாயகன் ஆக  சரத் குமார்  அனுபவம் மிக்க  அருமையான நடிப்பு .   ஆற்றாமை , மறதி  ஆகியவற்றால்  அவர் அவதிப்படும் காட்சிகள் செம .அவரது நடிப்பில்  ஒரு புதிய  உடல் மொழி  தென்படுகிறது .க்ளைமாக்சில்  வில்லனுடன் போடும் பைட்  தடிப்பு 

இரண்டாம்   நாயகன்  ஆக  வரும் ஸ்ரீ குமார்  முகத்தில்  நடிப்புக்கான  முயற்சியே இல்லை .மிகப்பெரிய  மைனஸ்  இந்த ஆர்ட்டிஸ்ட் செலக்சன் தான் இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக வரும் சிஜா ரோஸ்   நல்ல  ஆக்டிங் , ஆனால் அதிக வாய்ப்பில்லை .  ஓய்வு பெற்ற  போலீஸ் ஆபீசர் ஆக  வரும் கைதி  புகழ் ஜார்ஜ் மரியன்  கச்சிதமான நடிப்பு . கலையரசன்  நடிப்பு  இன்னும் மெருகேறி இருந்திருக்கலாம் .பிளாஷ்பேக்கில் வரும் இனியா  ஓகே ரகம் .அந்தக்குழந்தை   பேபி  ஷாலினி போல  ஓவர் ஆக்டிங் . +  அதீத  டயலாக் சுரேஷ்மேனனின்  உடல் மொழி  , நடிப்பு கச்சிதம் 


 விக்ரம்  மோகன் தான்  ஒளிப்பதிவு .பெரும்பாலான  காட்சிகள்  இரவு நேரத்தில்  வருவது போல  இருப்பதால் சவாலான பணி  தான் . இசை கவாஸ்கர் அவினாஷ் . பின்னணி  இசையில் சில  புதிய முயற்சிகள்  எடுத்திருக்கிறார் 


ஷியாம் ,பிரவீன் ஆகிய  இருவரும் தான்  இயக்குனர்கள் . திறமை உள்ளவர்கள் தான் , இன்னும் மெருகேற்ற வேண்டும் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன் , சீரியல் கில்லர்  இருவரும்  முதன் முதலாக  சந்தித்துக்கொள்ளும்  பரபரப்பான காட்சி 

2  பின் பாதி  பரபரப்பான , விறுவிறுப்பான  காட்சிகள் 

3   இதயத்துடிப்பை  எகிற வைக்கும் பின்னணி இசை 


ரசித்த  வசனங்கள் 

1  பழசை  எல்லாம் மறக்க  அல்சைமர் என்னும்  மறதி  வியாதி ஒரு வரம் 


2  அப்பா  இல்லாத  வலியை விட அப்பாவுக்கு என்ன ஆச்சு ?என்பது  தெரியாத  வலி தான் அதிகமா இருக்கு 


3  நாம  செய்யற வேலை நமக்குப்பிடிச்சு  இருக்கா?இல்லையா?என்பது வேலை முடிஞ்ச்ச ரிசல்ட்  வந்தாதான் தெரியும் 


4  கொலைகாரன் என்ன சொல்ல வர்றான்?  என்பது  ஒரு புறம் , யாருக்கு அதை சொல்ல  வர்றான் ?என்பது இன்னொரு புறம் 


5   அதிகமா சாதனை செய்தவருக்கு சின்னதா  தடுக்கி  விட் டாக்கூட அது பெரிய விஷயமாத்தெரியும் 

6  ஒருவர்     கோபமா   இருக்காரா?  அப்செட்டா இருக்காரா?   என்பதை முகத்தைப்பார்த்தே  சொல்ல  முடியாது 

7  எனக்கு யாருமே இல்லாத மாதிரி உனக்கும் யாரும் இருக்கக்கூடாது 


8  ஒரு போலீஸ்காரரின் உண்மையான பலம் அவரோட ஞாபகங்கள் தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பொதுவா போலீஸ் ஆபீஸருக்கு அவரோட சொந்த ஊரில் போஸ்ட்டிங்க் போடமாடடாங்க . இது  விதி .இப்போ  அது மாறிடுச்சா? 


2   ஐந்து  வருடங்களாக  ட்யூட்டியில்  இல்லாமல்  சிகிச்சையில்  இருக்கும்  நாயகன்  தாடியில்  இருப்பது ஓகே , ஆனால் இப்போது ஆன்  ட்யூட்டியில்  இருக்கும்  போலீஸ் ஆபீசர்  எதனால்  தாடியுடன்  இருக்கிறார் ? 


3   எந்த  போலீஸ் ஆபீசர்  ட்யூட்டியில்  இருக்கும்போது  தன ஹையர் ஆபீசரிடம்  கை  கட்டி  அடக்கமா  பேசி  இருக்கார்  ?  அட்டென்ஷனில்   நின்னு  பேசுவதுதான் வழக்கம் ?


4   த போன் கலெக்ட்டர்  THE  BONE COLLECTOR (`1999) , மெம்மாயர் ஆப் எ மர்டரர்- MEMOIR OF A MURDERER  (2017) ,அஞ்சாம்  பாதிரா -ANJAAM PATHIRAA (2020)ஆகிய படங்களில்  இருந்து பல காட் சிகள்  உருவப்பட்டு  சேர்க்கப்பட்டு உள்ளது அப்பட்டமாகத்தெரிகிறது 


5   பிளாஷ்பேக்  போர்ஷனில் அழுத்தம்  இல்லை . சீரியல் கில்லர்  உருவானதற்கு  நியாயமான காரணம் இல்லை . நாயகன்  உடல்  நிலை சரி இல்லாமல்  இருக்கும்போது  அந்தக்கேஸை  எடுக்கும் தேவை என்ன?  என்பதற்குப்பதில் இல்லை 


6 புதிய ஆபீசரின்  போலீஸ்  டீம்  சரி இல்லை .அதிலும் ஒருவர் சீரியஸான  கட்டங்களில்  மொக்கை ஜோக் அடிப்பது எரிச்சல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ராட்சஷன் , போர் தொழில் பாணியில்  பிரமாதமாக  வந்திருக்க வேண்டிய படம் .முதல் பாதி  திரைக்கதை  தொய்வின் காரணமாக மெகா ஹிட் ஆகும் வாய்ப்பை   நூலிழையில் தவற  விட்ட  ஒரு நல்ல  படம் . விகடன்   மார்க் - 42 .குமுதம்  ரேங்க்கிங்க் - ஓகே .அட்ரா  சக்க  ரேட்டிங்  2.75 / 5 


thanx - ANICHAM  1/1/2025 

Friday, December 27, 2024

FLOAT (2024)-கனடா /ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்

               

        9/2/2024   அன்று திரை அரங்குகளில்  வெளியான இப்படம்  2023 ஆம் ஆண்டிலேயே  இரு திரைப்பட விழாக்களில் திரை இடப்பட்டு  வரவேற்பு பெற்ற  படம் . ரைட்டர்   கேட் மார்ச்சண்ட்  தன வெப்சைட்டில்  எழுதிய  கதையை  வாங்கி  திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் . 100 நிமிடங்கள்  தான்  டைம்  டியூரேஷன்  என்பதால்  ஒரு குயிக்  வாட்ச் ஆகவே இதைப்பார்த்து விடலாம் .தமிழ்  டப்பிங்கிலேயே அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியின் பெற்றோர்  மிகவும்  வசதி படைத்த செல்வந்தர்கள் , ஆனாலும்  மகளை  அருகில் இருந்து  கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை .பிஸ்னஸ்  விஷயமாக  ரவுண்டிங்க்கிலேயே  இருக்கிறார்கள் .நாயகி தன்  பெற்றோரைப்பார்த்தே  நான்கு  வருடங்கள் ஆகின்றன .இதனால்  நாயகி தன் பெற்றோர்   மீது  மன வருத்தத்தில்  இருக்கிறார் 



 நாயகியின்  அம்மா  ஒரு நாள்  நாயகிக்கு போன் பண்ணி  டாக்டருக்குப்படிக்க ஒரு வாய்ப்பு வந்திருக்கு , நீ  உடனடியாக டொராண்டோ செல் என்கிறார் . அங்கே போய்  அங்கேயே  தங்கிப்படிக்க வேண்டும் . தங்குமிடம்  எல்லாம் செட்  செய்ய கால அவகாசம் தேவை .அதனால்  நாயகி  அந்த ஊருக்கு அருகில் இருக்கும் தன அத்தையின் ஊருக்கு சம்மர் வெகேஷன் மாதிரி போகிறாள் . அங்கே இருந்து கொண்டே  டொரெண்ட்டோ வில் தங்குமிடம்  ரெடி  பண்ணி விட்டுப்போக  ஐடியா 


அங்கே  நாயகனை சந்திக்கிறாள் . பார்த்த  உடனேயே  நாயகிக்கு நாயகனைப்பிடித்து விடுகிறது .நாயகனுக்கு அம்மா, அப்பா இல்லை . ஆனால் ஒரு தங்கை இருக்கிறாள் .  அப்பா ஸ்தானத்தில்  இருந்து தனது  தங்கையைப்பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நாயகனுக்கு இருக்கிறது . ஆனால்  நாயகனின்  தங்கைக்கு   நாயகனைக்கண்டாலே  பிடிக்காது . ஹிட்லர்  பட  மம்முட்டி மாதிரி  எப்போதும்  கண்டிஷன் போடும் அண்ணனாக  நாயகன்  இருப்பதால் சுதந்திரப்பறவை ஆக  விரும்புகிறாள் 


 நாயகன்  ஒரு  இடத்தில் ஸ்விம்மிங்க் கோச் ஆக வேலை செய்கிறான் . நாயகனுடன்  நேரம் செலவழிக்கும்  ஆசையில் நாயகி நீச்சல் கற்றுக்கொள்ள  அங்கே  போகிறார் . இருவருக்கும்  நெருக்கம் அதிகரிக்கிறது .திருமணத்துக்கு முன்பே  உடல்  உறவு நடக்கிறது 


 ஆனால்  திருமணம் பற்றிப்பேச்சு  எடுத்தபோது  நாயகன் சரியாகப்பிடி கொடுத்துப்பேசவில்லை . சம்மர் வெகேஷனுக்காகத்தானே? இங்கே வந்தே? என நாயகி  மனம் வருந்தும்படி  நாயகன் பேசி விடுகிறான் . ஜாலிக்காகப்பழகியதாக  நாயகன்   தன்னைக்குற்றம் சாட்டியது  நாயகிக்குப்பிடிக்கவில்லை .மேற் கொண்டு  நாயகனிடம்  இது பற்றி விவாதிக்கவில்லை 


இதற்குப்பின்  இந்தக்கதையில்   நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி திரைக்கதை 

நாயகி  வேவர் லீ  ஆக ஆண்ட்ரியா பேங்க்  நடித்திருக்கிறார் .படம் முழுக்க மற்றவர்கள்  இவர் பெயர் சொல்லிக்கூப்பிடும்போது  நம் காதுக்கு பேர் அண்ட்  லவ்லி  என்று கூப்பிடுவதாகத்தோன்றுகிறது .இவர் கனடா  நடிகை மட்டுமல்ல. ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட . குடும்பப்பாங்கான முகம் .இளமையான  தோற்றம் . வசீகரமான சிரிப்பு  இவரது  பிளஸ் . படத்தைத்தாங்கி  நிற்பதே  இவர் தான் 



நாயகன் ஆக ராபி  அமல் .இவர் தான் படத்தின்  தயாரிப்பாளரும் கூட .அளவாக  நடித்திருக்கிறார் . இயல்பான  தோற்றம் , உடல்மொழி  பிளஸ் 


நாயகியின்  அத்தை , நாயகனின் தங்கை  ஆக  வரும் நடிகைகளும்  யதார்த்தமாக  நடித்திருக்கிறார்கள் 


அல்பன்சா  சின்  தான் ஒளிப்பதிவு .மனிதர் இயற்கை  விரும்பி போல . பல காடசிகளில்  கடல் அழகு , மரங்களின் அழகியலை க்காட்டுகிறார் 


பின்னணி  இசை  இருவர் .மெலோடி   விரும்பிகள் போல . குட் 


எடிட்டிங்க்  கச்சிதம் .100 நிமிடங்கள்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  தெளிவான  திரைக்கதை . சிறுகதை அல்லது  நாவல் படிப்பது போல  இருக்கிறது 


2  நாயகன் -  நாயகி  இருவருக்குமான கெமிஸ்ட்ரி 


3  கண்ணைக்கவரும்  ஒளிப்பதிவு .காதுகளைப்பதம் பார்க்காத மெல்லிய இசை 



  ரசித்த  வசனங்கள் 


1  நீ  சரியான பிற்போக்குவாதி .800 வயசு இருக்குமா? உனக்கு ?


 1000 வயசுன்னு  சொல்லேன் 



2   என்னைப்பற்றி  என் பெற்றோர்களுக்கு எதுவும்  தெரியாது   அதே  மாதிரி தான்  அவங்களுக்கும் என்னைப்பற்றி எதுவும் தெரியாது 



3  நம்ம கூட  இருக்க ரத்த சம்பந்தமான  உறவுகள்  தான்   வேணும் என  இல்லை  


4  என்ன  திடீர்னு சைலன்ட் ஆகிட் டே? 


  பகல்  கனவு  காண்பவர்கள் அப்படித்தான் இருப்பாங்க 


5  நீ  கரெக்ட்டா  கத்துக்கிட் டே 


 சும்மா புகழாத. சின்னக்குழந்தை கூட  இதைக்கத்துக்கும் 


6  பசங்கன்னா  அவங்களுக்கு வேண்டியதை அவங்களே  பார்த்துக்குவாங்க .ஆனா பெண் குழந்தைகள்னா சிரமம் 


7   என்  திருமணம்  வாழ்க்கை ஒர்க் அவுட்  ஆகலை .ஆனாலும் நான் சந்தோஷமாத்தான் இருக்கேன் 


8   அப்பா , எதனால  எனக்கு நீங்க போன்  கூட பண்ணலை? 


 அதான் அம்மா  பன்றாளே ? 


 நீங்க எதனால பண்ணலை ? 


 பொண்ணுங்களுக்கு அம்மா கிட் ட  பேசத்தான்  பிடிக்கும் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகியின்  முகத்தில்  காதல் கொப்புளிக்கிறது . ஆனால்  நாயகன் முகத்தில் நாயகி அளவுக்கு காதல் உணர்வு வரவில்லை 


2  நாயகியின் பெற்றோர்  கேரக்ட்டர்  டிசைன்  புரிந்தகொள்ள முடியவில்லை . ஒருவேளை பாரினில் அப்படித்தா னோ? 


3 நாயகனின்  தங்கைக்கும் , நாயகனுக்கும்  நல்ல  நட் பு   உண்டாக  நாயகி தான் காரணம்  என நாயகன் நாயகியைப்பாராட்டுவதாக ஒரு காட் சி  வருது .ஆனால்  அந்த மாதிரி நாயகி  பெரிதாக எதுவும் செய்யவில்லை 


4  திரைக்கதை  மிகவும்  பிளாட்டாக  இருக்கு . திருப்பம் , சுவராஸ்யம் எதுவும் இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆஹா  , ஒஹோ என்றெல்லாம்   சொல்லமுடியாது .சராசரி  தரத்தில்   ஒரு காதல் கதை .ரேட்டிங்க்   2. 5 /5 


Float
Film poster
Directed bySherren Lee
Written byJesse LaVercombe
Sherren Lee
Based onFloat by Kate Marchant
Produced byRobbie Amell
Aaron Au
Jeff Chan
Jamie D. Greenberg
Matthew Kariatsumari
Aron Levitz
Chris Paré
Shawn Williamson
StarringAndrea Bang
Robbie Amell
CinematographyAlfonso Chin
Edited bySimone Smith
Music byDan Mangan
Jesse Zubot
Production
companies
Distributed byElevation Pictures
Lionsgate
Release date
  • September 30, 2023 (VIFF)
Running time
100 minutes
CountryCanada
LanguageEnglish

Wednesday, December 25, 2024

FEAR (2024) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் )

                    பெண் இயக்குனர் ஆன ஹரிதா கோகினேனி  இயக்கிய  இந்தப்படம்  அமரிக்கன் கோல்டு பிக்சர்  திரைப்பட விழாவில் கலந்து கொண்டு    சிறந்த  திரைக்கதைக்கான விருது பெற்றது .ஜூலை  2024  அன்று  திரைப்பட  விழா வில்  கலந்து கொண்டாலும்  தியேட் டர்களில்  ரிலீஸ்  ஆனது 14/12/2024   அன்று தான் . ஓடிடி  யில் வர  25 நாட்கள் ஆகும்     


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு மனநலக்காப்பகத்தில் மனநோயாளியாக  அட்மிட் ஆகி இருக்கிறார் .அவ்வப்போது அவரைக்காண அவரது  பெற்றோர்  வந்து  செல்கிறார்கள் . நான்- லீனியர்   கட்டில்  அவர்  சிறுமி ஆக  இருக்கும்போது நடந்த சில சம்பவங்கள் , டீன் ஏஜில்  இருந்த போது நடந்த சில சம்பவங்கள், இப்போது நிகழ்காலத்தில் நடக்கும் சில சம்பவங்கள் மாற்றி மாற்றிக்காட்டப்படுகின்றன .


நாயகிக்கு ஒரு ட்வின்ஸ்  சிஸ்டர்  உண்டு . ஒரு பாய் பிரண்ட்  உண்டு .தனது பாய் பிரண்டுடன்  தான் மட்டுமே  பழகவேண்டும் ,பேச  வேண்டும் என்ற பொஸசிவ்னெஸ்  உள்ள  குணம்  கொண்டவராக  நாயகி  இருக்கிறார் .இது போக  அடிக்கடி  எதையாவது , யாரையாவது  பார்த்து  பயப்படுபவராகவும்  இருக்கிறார் .


இந்தப்பிரச்சனை  எல்லாம்  அவருக்கு எதனால்  உண்டானது ?அவர் குணம்  ஆனாரா? கடைசி  வரை குணா ஆகவே  தொடர்ந்தாரா?   என்பது  க்ளைமாக்ஸ் 


வேதிகா  இந்து  சிந்து என  இரு வேடங்களில்  நடித்திருக்கிறார் .அவரைப்பொறுத்தவரை  தனக்குக்கொடுத்த  வேலையை சரியாக செய்து விட் டார் .அர்விந்த்  கிருஷ்ணா   என்பவர்  நாயகன் ஆக  வருகிறார் .ஆனால் அவர் வரும் காட்சிகள் 10 நிமிடங்கள்தான் . ஜெயப்பிரகாஷ் , சாயாஜி ஷிண்டே  போன்ற  வீணடிக்கப் பட் ட கலைஞர்கள்  பாவம் . 


அனுப்  ரூபன் தான் இசை .சுமார் தான் ஒளிப்பதிவு ஆண்ட் ரூ.வேதிகாவை அழகாகக்கட்டி இருக்கிறார் .இயக்குனர்  தான் எடிட்ட்ரும் .2 மணி நேரம் படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  ப்ரியாமணி நடிப்பில்  வெளியான சாருலதா (2012)  படத்தில்   இருந்து ஒன்லைன்  எடுத்துக்கொண்டு  அந்த அட்லீ  ஒர்க் தெரியக்கூடாது என ட்ரீட்மெண்ட்டில் தனுஷ்  நடித்த  3 , மயக்கம்   என்ன? ஆகிய  படங்களில்  இருந்து  பை  போலார்  டிஸ் ஆர்டர்   கான்செப்ட்டை சாமார்த்தியமாகப்புகுத்தி  படம்  எடுத்தது 


2  பத்துப்பைசாவிற்குப்பிரயோஜனம்  இல்லாத  இந்தக்கதையை  வேதிகாவிடம்  சொல்லி  உங்களுக்கு  டபுள்  ரோல், ஆனால் சிங்கிள்  பேமண்ட்  தான் என  எதையாவது  சொல்லி கால்ஷீட்  வாங்கியது 


3  பொது மக்களால்  கொஞ்சம் கூட ரசிக்க முடியாத , சகிக்க முடியாத  இந்தக்குப்பை யை  அவார்டு  பெற்ற  படம் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இன்ஸ் டா  பக்கத்தில்  பிரமோ செய்தது 


4  பணம்  கொடுத்தோ , அல்லது   குறுக்கு வழியிலோ  திரைப்பட  விழாவில்  விருது  வாங்கியது 


  ரசித்த  வசனங்கள் 


 ஒரு சீன்   கூட நல்ல டயலாக்கே  இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  படம் முழுக்க  என்ன என்னமோ  கம்பி கட்டும்  கதை எல்லாம்  சொல்லிட்டு க்ளைமாக்சில்  இவை அனைத்தும் நாயகியின்  மனப்பிராந்தி  என  சொல்லும்போது செம கடுப்பாக இருக்கிறது 


2  படம்  முழுக்க  நாயகி செய்வது  இரண்டே  வேலைகள்  1  யாரையாவது பார்த்து பயந்து கத்துவது  2  என் காதலன் சம்பத் கூட நீ சேராத .பேசாத   என டயலாக்  பேசுவது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - படத்துல  கண்டென்ட்டும்  இல்லை ,அடல்ட்  கண்ட்டெண்ட்டு ம்  இல்லை .18 வயது  மட்டுமல்ல ,எந்த வயது ஆடியன்ஸும் பார்க்கக்கூடாத குப்பைப்படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சினிமா பிரபலங்கள்  பலரும்   சூரி  நடித்த கொட்டுக்காளி  படத்தைக்கொண்டாடினார்கள் . ஆஹா  ஓஹோ  அபாரம் பரிமளா  என்றார்கள் . ஆனந்த விகடன்  57 மார்க் கொடுத்துப்படம்  அட் டகாசம்   என்றது .அதை நம்பிப்போய்  வெறுத்தவர்கள்  ஏராளம் . அதை விட மோசமான  டப்பாப்படம்  இது . யாம் பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம்   என்ற  நல்ல எண்ணத்தில்  விமர்சனம்  போடறேன் .எஸ்கேப்  ஆகிக்குங்க 


ரேட்டிங் - ஜீரோ / 5 


Fear
Theatrical release poster
Directed byHaritha Gogineni
Written byHaritha Gogineni
Produced by
  • AR Abhi
  • Vanki Penchalaiah
Starring
CinematographyI. Andrew
Edited byHaritha Gogineni
Music byAnup Rubens
Production
company
Dattatreya Media
Release date
  • 14 December 2024
CountryIndia
LanguageTelugu