Tuesday, June 25, 2024
Monday, June 24, 2024
GAM GAM GANESHA (2024) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( காமெடி க்ரைம் டிராமா ) @ அமேசான் பிரைம்
31/5/2024 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் 20/6/2024 முதல் அமேசான் பிரைம் ஓடி டி தளத்தில் காணக்கிடைக்கிறது . பல ஹிட் படங்களில் இருந்து காட்சிகளை உருவி இருந்தாலும் டைம் பாஸ் படமாக இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு அரசியல்வாதி. தேர்தல் நேரம், ஓட்டுக்குப்பணம் கொடுக்க ரூ 100 கோடி ரூபாய் ஹாட் கேஷ் ஆக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக்கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது . வில்லனின் அடியாள் ஒரு யோசனை சொல்கிறான். அதன்படி வினாயகர் சதுர்த்தி ஆர்டர் என சொல்லி பிரம்மாண்டமான ஒரு வினாயகர் சிலைக்குள் பணக்கட்டுக்களை அடைத்து லாரியில் சிலையை ஓப்பனாகவே கொண்டு வரலாம். யாரும் செக் செய்ய மாட்டார்கள் என்கிறான். அதனபடி சிலை வருகிறது
நாயகன் ஒரு வெட்டாஃபீஸ் . சின்னச்சின்ன திருட்டுகளை செய்பவன். அவனுக்கு ஒரு காதலி . லைஃபில் நல்லா செட்டில் ஆகு, அதன் பின் தான் நம்ம மேரேஜ் என்று சொன்னவள் ஒரு கட்டத்தில் பெற்றோர் பார்த்த பணக்கார மாப்பிள்ளையைக்கல்யாணம் பண்ண சம்மதிக்கிறாள் . இதனால் கடுப்பான நாயகன் மேரேஜ்க்கு இன்னும் ஒரு மாதம் இருக்கு , அதுக்குள் நான் லட்சாதிபதி ஆகிறேன் பார் என சவால் விட்டு வருகிறான்
நாயகனுக்கு ஒரு ஆஃபர் வருகிறது. பிரபல நகைக்கடையின் ஓனர் மகன் தன் அப்பாவிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் தன் கடையில் தானே கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறான். அப்பாவிடம் ரூ 7 கோடி மதிப்புள்ள ஒரு வைரக்கல் இருக்கிறது . அதைக்கொள்ளை அடித்து வர நாயகனுக்கு ரூட் போட்டுத்தருகிறான். இந்த வேலையைச்செய்தால் நாயகனுக்கு ரூ 40 லட்சம் சம்பளம்
அதற்கு ஓக்கே சொன்ன நாயகன் திட்டப்படி வைரத்தைக்கொள்ளை அடித்த பின் அதை ஆட்டையைப்போட திட்டம் போடுகிறான். காரில் வரும்போது செக் போஸ்ட் . முன்னால் 100 கோடி மதிப்புள்ள பணம் உள்ள வினாயகர் சிலை இருக்கும் லாரி. போலீஸ் செக்கிங்க் நடக்கிறது . அப்போதைக்குத்தப்பிக்க நாயகன் தன்னிடம் இருந்த வைரக்கல்லை வினாயகர் சிலைக்குள் போட்டு விடுகிறான் . அந்த சிலைக்குள் 100 கோடி ரூ பணம் இருப்பது நாயகனுக்குத்தெரியாது
இதற்குப்பின் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஆனந்த் தேவர்கொண்டா கச்சிதம். காமெடி , காதல் , புலம்பல் , ஆக்சன் என எல்லாமும் சராசரி ஹீரோ போல் சமாளிக்கிறார்
நாயகி ஆக நயன் சரிகா . நயன் தாரா போலவும் இல்லை , சரிகா கமல் போலவும் இல்லை . காரணப்பெயர் வேறாக இருக்கலாம், ஆனாலும் ரசிக்க வைக்கும் அழகு
வெண்ணிலா கிஷோர் காமெடிக்கு , ஆனால் அவருக்கான போர்சன் மிகக்குறைவே
சைதன் பரத்வாஜ் தான் இசை , 5 பாடல்கள் சுமார் ரகம் ., பின்னணி இசை சராசரி
ஆதித்யா ஜவ்வாடி தான் ஒளிப்பதிவு . நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் இன்னும் நிறைய வைத்திருக்கலாம்
ஆதித்யா சீனிவாஸ் எடிட்டிங்கில் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது . பின் பாதி ரொம்ப இழுவை
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் உதய் பொம்மி செல்லி
சபாஷ் டைரக்டர்
1 சீரியஸ் ஆன கதையை காமெடி ஆன திரைக்கதையால் வேகமாகக்கொண்டு போனவிதம்
2 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் உடல் உறுப்புக்களை திருடும் காமெடியன் டாக்டர் கேரக்டர் செம
3 பின் பாதி திரைக்கதையை இழுப்பதற்காக இரண்டாவது நாயகி , நான்காவது வில்லன் சாமியார் கேரக்டர் ஆகிய புது கேரக்டர்களை திணித்த லாவகம்,
ரசித்த வசனங்கள்
1 டைட்டானிக் நாயகி ரோஸ் கூட நம்ம கலாச்சாரத்தால் இன்ஸ்பயர் ஆகி பேரை ரோஜானு மாத்திக்கிட்டாங்க
2 பொண்ணூங்களை நாம டீஸ் பண்ணும்போது அவங்க உதட்டில் இருந்து சிரிப்பு வரனும், கண்களீல் இருந்து கண்ணீர் வரக்கூடாது
3 வீட்டுக்கு சாப்பிட வாங்க
உன் வீட்டுக்கா இன்வைட் பண்றே?
இல்லை, இது லைஃப்க்கான இன்விட்டேசன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனை தன் அடியாட்கள் இருவருடன் காரில் துரத்தும் வில்லன் சில ஷாட்களில் தனியாக இருக்கிறார். பின் சீட் காலி. பல ஷாட்களில் பின் சீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் . எடிட்டிங்க் ஃபால்ட்டா?
2 நாயகனோ, அவன் நண்பனோ வைரத்தை நேர்ல் பார்த்ததில்லை . ஃபோட்டோவிம் இல்லை . சைஸ் , கலர் எதுவும் தெரியாது . அப்படி இருக்கும்போது நகைக்கடை ஓனர் எக்சாக்ட் ஆக அந்த வைரத்தைத்தர வேண்டிய அவசியம் என்ன? எதையோ ஒரு ட்ம்மிப்பீசை தந்தாலும் அவர்களுக்கு அதை அடையாளம் தெரியாது . வாங்கிக்கொள்வார்கள் .
3 அவ்ளோ பிரம்மாண்டமான வினாயகர் சிலையை சும்மா பைப்பில் தண்ணீர் பீய்ச்சி அடித்தே உருக்குகிறார்கள் . அவ்ளோ பலவீனமான சிலையை ஓப்பன் ஆக லாரியில் கொண்டு வருகிறார்களே? மழை பெய்தால் கரையாதா? கவர் பண்ணி தானே கொண்டு வரனும் ?
4 நாயகன் ஒரு அவசரத்தில் வினாயகர் சிலையின் தும்பிக்கையில் வைரத்தை வைக்கிறான். பல 100 கிமீ பயணத்தில் அது இடம் மாறாதா? அதாவது உள்ளே போகாதா? நாயகன் மீண்டும் வந்து எடுக்க முயல்கையில் கை பட்டு உள்ளே போகிறது
5 சிலை மாறாட்டம் நடந்ததை விஷூவலாகக்காட்டாமல் சும்மா வசனத்திலேயே வடை சுட்டு சமாளிக்கிறார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மொக்கைக்காமெடி ரசிகர்கள் பார்க்கலாம் .ரேட்டிங் 2.25 / 5
| Gam Gam Ganesha | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Uday Bommisetty |
| Written by | Uday Bommisetty |
| Produced by |
|
| Starring | Anand Devarakonda |
| Cinematography | Aditya Javvadi |
| Edited by | Karthika Srinivas |
| Music by | Chaitan Bharadwaj |
Release date |
|
Running time | 132 minutes |
| Country | India |
| Language | Telugu |
Wednesday, June 19, 2024
THE TEARSMITH (2024) -இத்தாலி /ஆங்கிலம் -- FABBRICANTE DI LACRIME- சினிமா விமர்சனம் (டீன் ரொமாண்டிக் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 18+
2021 ஆ ம் ஆண்டு ரைட்டர் எரின் டூம் எழுதிய THE TEARSMITH நாவல் இத்தாலியில் பெஸ்ட் செல்லர் வரிசையில் 2022ம் ஆண்டு இடம் பிடித்தது உடனே கொலராடா நிறுவனம் அதன் ரைட்ஸ் வாங்கி படம் ஆக்கியது . இன் படப்பிடிப்பு ரோம் , இத்தாலி ஆகிய இடங்களில் நடந்தது .4/4/2024 முதல் நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆன இப்படம் 7/4/2024 அன்றே , அதாவது ரிலீஸ் ஆன மூன்றாம் நாளிலேயே உலக அளவில் அதிக பார்வையாளர்களைப்பெற்ற படம் ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லி ஒரு அநாதை விடுதி நடத்துபவள் .அங்கு ஏராளமான சிறுவர் , சிறுமிகள் இருக்கிறார்கள் நாயகி எட்டு வயது சிறுமியாக இருக்குமபோது அவள் பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்ததால் அநாதை விடுதியில் சேர்க்கப்படுகிறாள் வில்லி மிகவும் கறாராகவும் , கண்டிப்பாகவும் அனைவரையும் அணுகுபவள் .தான் வைத்தது தான் சட்டம் , யாரும் அதை மீற க்கூடாது , எதிர்த்துப் பேசக் கூடாது என நினைப்பவள் .தன பேச்சை மீறுபவர்களைக் கண்டிக்கத்தயங்குவதில்லை . மன ரீதியாக , உடல் ரீதியாக சித்ரவதை செய்பவள்
நாயகன் நாயகிக்கு முன்பே அங்கேயே தங்கி இருப்பவன் . அவனும் அநாதை தான் எல்லோரையும் கரித்துக்கொட்டும் வில்லி நாயகனை மட்டும் பாசமாக தன மகன் போல பார்த்துக்கொள்கிறாள் . அதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை . ஒருவேளை அவன் வில்லியின் உண்மையான மகனின் சாயலாக இருக்கலாம், யாருக்குத்தெரியும்? வில்லிக்குப்பிறந்த மகனாகவும் இருக்கலாம்
நாயகன் மிகவும் முரட்டுத்தனமாக அவ்வப்போது நாயகியிடம் நடந்து கொள்வான் .இதனால் நாயகிக்கு ஆரம்பத்தில் இருந்து நாயகன் மீது கொஞ்சம பயம் . ஆனால் நாயகனுக்கு நாயகி மீது அளவற்ற அன்பு இருப்பது நாயகிக்குத்தெரியாது , நாயகியின் தோழிக்கு மட்டும் தெரியும்
ஒரு செல்வந்தர் குடும்பம் நாயகன் , நாயகி இருவரையும் தத்து எடுக்கிறது . அவர்கள் வீட்டுக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள் இப்போது இருவரும் டீன் ஏஜ் . ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்
அக்கம் ,பக்கம் இருப்பவர்களுக்கு ,ஸ்கூல் ஸ்டுடன்ட்ஸ்க்கு நாயகன், நாயகி இருவரும் அண்ணன் , தங்கை என நினைப்பு
நாயகன் , நாயகி இருவரும் படிக்கும் பள்ளியில் வில்லன் படிக்கிறான் .நாயகிக்கு ஒரு நாள் வில்லன் பிரபோஸ் செய்கிறான் .நாயகிக்கு அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் . நாயகன் மனதில் தனக்கான இடம் என்ன? என்பது அவளுக்கு தெரியவில்லை மர்மம் ஆக இருக்கிறது .
நாயகி என்ன முடிவு எடுத்தாள் ? நாயகி வில்லனுடன் சேர்ந்தாளா? நாயகனுடன் சேர்ந்தாளா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகி ஆக கேத்ரினா பெரியோலி பால் அல்வா மாதிரி அப்பாவி முகத்துடன் மனம் கவர்கிறார்.அவரது இளமையும் அழகும் தான் படத்தின் பெரிய பிளஸ் .அவரது ஆடை வடிவமைப்பு செம .நடிப்பு,துடிப்பு எல்லாம் வாவ் ரகம்
நாயகன் , வில்லன் இரண்டும் தண்டக்கடன் . பெரிதாக மனதில் ஒடடவில்லை .வில்லி தோற்றம் , நடிப்பு இரண்டும் மிரட்டல் ரகம்
அநாதை விடுதி யில் நாயகிக்குத்தோழி ஆக வருபவர் , பள்ளித்தோழி ஆக வருபவர் யாரும் ஒட் டவில்லை
அலெசான்ட்ரா ஜெனோவசி இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 சாதா லவ் ஸ்டோ ரியை நான் லீனியர் கடடில் இன்ட்ரஸ்ட் ஆக்கிய விதம்
2 நாயகன் ஒரு சைக்கோ வா? புரியாத புதிரா? என நாயகி குழம்பும் காடசிகள்
3 வில்லி நாயகியை தண்டிக்க வரும்போது அவர் கவனத்தை திசை திருப்ப நாயகன் தன கையைக்காயப்படுத்திக்கொள்ளும் காடசி
4 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் நாயகியின் தோழியின் காதல் கிளைக்கதை கவிதை
ரசித்த வசனங்கள்
1 நம்ம மனசுக்கு யாரைப்பிடிச்சிருக்கோ அவங்க தான் நம்மை அழ வைக்கவும் முடியும்
2 என் அன்பு அவளுக்குத்தெரியனும்னு அவசியம் இல்லை .அன்பை தம்பட்டமடிச்சா அதுக்குப்பேரு அன்பு இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லியின் கேரக்ட்டர் டிசைனில் குழப்பம்
2 வில்லனுக்குப்போதிய அளவு போர்ஷன் ஒதுக்கப்படாதது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டீன் லவ் ஸ்டோரி ரசிப்பவர்கள் பார்க்கலாம் .ரேட்டிங் 2.5 / 5
| The Tearsmith | |
|---|---|
Italian Netflix poster | |
| Italian | Fabbricante di lacrime |
| Directed by | Alessandro Genovesi |
| Written by |
|
| Based on | The Tearsmith by Erin Doom |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Luca Esposito |
| Edited by |
|
| Music by | Andrea Farri |
Production company | |
| Distributed by | Netflix |
Release date |
|
Running time | 105 minutes |
| Country | Italy |
| Language | Italian |
Tuesday, June 18, 2024
MAIDAAN (2024) -- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஸ்போர்ட்ஸ் டிராமா+ மோட்டிவேஷனல் டிராமா +பயோகிராபிக்கல் டிராமா ) @ அமேசான் பிரைம்
பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் டிராமா , மோட்டிவேஷனல் டிராமா ,பயோகிராபிக்கல் டிராமா .என்றாலே திரைக்கதை டெட் ஸ்லோவாகத்தான் நகரும், ஆனால் இது விதிவிலக்காக செம ஸ்பீ டாக நகர்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
1952ல் நடந்த ஹெ ல்சிங்க்கி ஒலிம்பிக்கில் யூகோஸ்லாவியா அணி 10 கோல் போட்ட்து இந்தியா ஒரே ஒரு கோல் போட்டு படு தோல்வி அடைந்தது 1952 டூ 1962 இந்திய கால்பந்து அணியின் கோச் ஆக செயல்படட ஸையத் அப்துல் ரஹிம் என்பவரின் 10 வருட போராட் டம் தான் மெயின் கதை
ஹெ ல்சிங்க்கி ஒலிம்பிக்கில் இந்தியாவின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் சொல்லபபடடன . 1 காலில் ஷு போடாமல் இந்திய வீரர்கள் விளையாடியது 2 வீரர்கள் தேர்வில் அரசியல் தலையீடுகள்
சுதந்திரமாக தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு வீரர்கள் தேர்வுக்காக இந்தியா முழுக்க சுற்றி பல மாநிலங்களில் இருந்து வீரர்களைத்தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறார். அவர் பட் ட பாடுகள் தான் திரைக்கதை
நாயகன் ஆக அஜய் தேவ் கான் வாழ்ந்திருக்கிறார் என்பதே சரி . உடல் மொழி , பார்வை , வசன உச்சரிப்பு எல்லாம் அடடகாசம் . அவரது மனைவி ஆக பிரியாமணி கனகச் சித்தம் . , வீரர்களாக வரும் அனைவருமே கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருக்கிறார்கள்
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஐந்து பாடல்கள் .பின்னணி இசை கச் சிதம்
துஷா காந்தி ரே தான் ஒளிப்பதிவு கலக்கல் ரகம். மேட்ச்சை நேரில் பார்ப்பது போல இருந்தது . தேவ ராவ் எடிட்டிங்கில் படம் 3 மணி நேரம் ஓடுகிறது , ஆனால் ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை
சபாஷ் டைரக்டர்
1 தனக்கு கேன்சர் என்பதை அறிந்த பின் இந்தியன் கோச் ஆக வாய்ப்பு கேட்டு நாயகன் அனைவர் முன்னும் அவமானப்படும் காடசி கலக்கல் ராகம்
2 நாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நபர்களைப்பார்த்து வில்லன் பிரமித்து நிற்க அப்போது ஒலிக்கும் பிஜிஎம்
3 பிரான்ஸ் அணியுடன் ஆன கேமில் இந்தியா பிரமாதமாக விளையாடி வெற்றிக்கு மிக அருகில் சென்று டிரா செய்தபின் மொத்த மைதானமும் எழுந்து நின்று வெல் ப்ளே இந்தியா என குரல் எழுப்புவது அபாரம்
4 எதிர் அணி வீரர் ஒருவர் இநதியா வீரரை தன ஷு லேஸ் கட்டி விட சொல்லி லந்து பண்ணும்போது நாயகன் காட்டும் ரீ ஆக்சன் செம
5 செலவை மிச்சம் பண்ண மேட் ச்சில் இந்தியா விளையாட பாரின் போகாது என பைனான்ஸ் மினிஸ்ட்டர் முடிவு எடுப்பதும் நாயகன் போய் வாதாடும் காடசியும்
6 இந்திய அணியின் கோல் கீப்பர் கோல் போஸ்ட் உயரத்துக்கு இருப்பதும் எதிர் அணியினர் திகைப்பதும்
7 ஒவ்வொரு மேட் ச் நடக்கும் முன்பும் நாயகன் நிகழ்த்தும் வீர உரை
8 படத்தில் காட்டப்ப டும் ஆறு மேட் ச் களும் செம விறுவிறுப்பு
ரசித்த வசனங்கள்
1 வீடு பலவீனமா இருக்குனு அதன் கூரைய மட்டும் மாத்துனா அது சரி ஆகிடுமா?
2 ஒரு சாதா பிளேயரை ஸ்பெசல் பிளேயரா மாற்றுவது எது ?
திறமை
போக்கஸ் இருந்தா மட்டும் தான் டேலண்ட் யூஸ் ஆகும்
3 யார் காத்திருக்காங்களோ அவங்களுக்கு நல்லது நடக்கும்
4 DON'T CRITICISE WHAT YOU DON'T UNDERSTAND .YOU NEVER WALKED WITH THAT MAN'S SHOE
5 ஒரு ஆளை அவமானப்படுத்துனதுக்கே ஒரு கோல் போட்டுட்டாங்க .மொத்த டீமையே அவமானப்படுத்துனா என்ன ஆகப்போகுதோ ?
6 மரத்தை நாம நடறோம் , யாரோ பழம் சாப்பிடறாங்க
7 பலவீனத்தை உணர்ந்தவன் தான் பலசாலி ஆக முடியும்
8 தம் அடிக்கும் கேட்ட பழக்கத்தால்தான் உங்களுக்கு லாங்க்ஸ் கேன்சர் வந்தது இப்போ மீ ண்டும் தம் அடிச்சா எப்படி?
இப்போ இதை நான் விட்டா குணம் ஆகிடுவேனா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு ஸ்போ ர்ட்ஸ் மே னுக்கு முக்கியத்தேவை பாடி பிட்னஸ் தான் , ஆனால் கோச் ஆக வரும் நாயகன் தம் பார்ட்டியாக இருப்பது , கேன்சர் வருவது இவை நெருடுகின்றன. ஆனால் உண்மை சம்பவம்
2 வில்லன் க்ளைமாக்சில் திடீர் என மனம் மாறுவது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் , இல்லாதவர்கள் , அனைவரும் காண வேண்டிய அற்புதமான படம் ரேட்டிங் 3.75 / 5
| மைதானம் | |
|---|---|
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர் | |
| இயக்கம் | அமித் சர்மா |
| மூலம் திரைக்கதை | சைவின் குவாட்ராஸ் அமன் ராய் அதுல் ஷாஹி அமித் சர்மா |
| மூலம் உரையாடல்கள் |
|
| மூலம் கதை | சைவின் குவாட்ராஸ் ஆகாஷ் சாவ்லா அருணாவா ஜாய் சென்குப்தா |
| உற்பத்தி | ஜீ ஸ்டுடியோஸ் ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் ஆகாஷ் சாவ்லா அருணாவா ஜாய் சென்குப்தா போனி கபூர் |
| நடித்துள்ளார் | |
| ஒளிப்பதிவு | துஷார் காந்தி ரே ஃபியோடர் லியாஸ் (விளையாட்டு) |
| திருத்தியவர் | தேவ் ராவ் ஜாதவ் ஷாநவாஸ் மொசானி (விளையாட்டு) |
| இசை | ஏஆர் ரஹ்மான் |
உற்பத்தி நிறுவனங்கள் |
|
| மூலம் விநியோகிக்கப்பட்டது | ஜீ ஸ்டுடியோஸ் |
வெளிவரும் தேதி |
|
நேரம் இயங்கும் | 181 நிமிடங்கள் [2] |
| நாடு | இந்தியா |
| மொழி | ஹிந்தி |
| பட்ஜெட் | ₹235 கோடி [3] |
| திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம் | மதிப்பீடு ₹68.09 கோடி [4] |
Monday, June 17, 2024
மகாராஜா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லனுக்கு அன்பான மனைவியும் அழகான ஒரு பெண் குழந்தையும் உண்டு. மகள் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறான். வில்லன் ஊரார் பார்வைக்கும் , மனைவி பார்வைக்கும் சாதாரண எலக்ட்ரிக்கல் கடை ஓனர் . ஆனால் நிஜத்தில் அவன் ஒரு கொடூரமான கொள்ளைக்காரன் கம் கொலைகாரன் . அவனுக்கு இரு கூட்டாளிகள் உண்டு .மூவரும் சேர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் புகுந்து நகைகளைக்கொள்ளை அடிப்பது , வீட்டில் பெண்கள் இருந்தால் ரேப் செய்து கொலை செய்வது இவைதான் பார்ட் டைம் ஜாப்
நாயகன் சலூன் கடை வைத்திருக்கிறான் .அவன் கடையில் தாடி ட்ரிம் பண்ண வந்த வில்லன் தன மகளுக்காக வாங்கி வைத்திருக்கும் பிறந்த நாள் பரிசான தங்கச்செயினை மறந்து வைத்து விட்டு வந்துவிடுகிறான் .நாயகனின் கடையில் இருக்குபோது வில்லனின் கூட்டாளியுடன் கொள்ளை சம்பவம் பற்றி போனில் பேசுவதை நாயகன் கேட்டு விட்டதாக வில்லன் நினைக்கிறான் .
வில்லன் தன கடையில் மறந்து வைத்து விட்டு சென்ற தங்கசெயினை வில்லனிடம் ஒப்படைக்க நாயகன் வில்லனின் வீட்டுக்கு வரும்போது கச்சிதமாக போலீஸ் வில்லனைக்கைது செய்ய அங்கே வருகிறது . நாயகன் தான் தகவல் கொடுத்து போலிஸில் தன்னை மாட்டி விட்டதாக வில்லன் தவறாக நினைக்கிறான்
13 வருட சிறை தண்டனைக்குப்பின் வில்லன் வெளியில் வருகிறான் . இதற்குப்பின் நிகழும் அதிரி புதிரி சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக விஜய் சேதுபதி கலக்கி இருக்கிறார் . முதல் பாதியில் மனநலன் பாதிக்கப்பட்டவர் போல நடப்பது பின் பாதியில் ஆக்ரோஷம் என மாறுபட் ட நடிப்பை வழங்கி இருக்கிறார்
வில்லன் ஆக அனுராக் காஷ்யாப் நாயகனுக்கு இணையான வேடம் .சிறப்பான நடிப்பு
போலீஸ் ஆபிஸர் ஆக நட்டி கச்சிதம் முனீஸ்காந்த்தும் ஓகே ரகம் .சிங்கம் புலி மிரட்டி இருக்கிறார்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் நித்திலன் சுவாமிநாதன் குரங்கு பொம்மை (2017) இயக்குனர்
பிலோமின் ராஜ் எடிட்டிங் அட்டகாசம் .நான் லீனியர் காட்டில் திரைக்கதை ஜாலவித்தை புரிகிறது தினேஷ் புருஷோத் தமன் ஒளிப்பதிவு அருமை
வில்லனின் மனைவியாக அபிராமி கச்சிதம் . மம்தா மோகன் தாஸ் , திவ்ய பாரதி ,பாரதி ராஜா என எல்லாருமே அருமையான நடிப்பு
சபாஷ் டைரக்டர்
1குப்பைத்தொட்டிக்கு லட்சுமி என பெயர் வைத்த தைர்யம் . மூதேவியைக்குறிக்கும் சொல் அது
2 என் பொண்ணு தப்பு பண்ணி இருக்க மாடடான்னுசொன்னனே? திட்டிட்டீங்க, மன்னிப்புக்கேளுங்க என நாயகன் அ டம் பிடிக்கும் காடசி
3 இடைவேளை பிளாக்குக்கு முன் வரும் அந்த சண்டைக்காடசி ஓவர் வயலன்ஸ் என்றாலும் அந்த ஆக்சன் ஸீக்வன்ஸ் வடிவமைத்த சண்டைப்பயிற்சி இயக்குனர் உழைப்பு அபாரம்
4 OLD BOY (2013) ரெட்ட (2024) ஆகிய இரு படங்களின் க்ளைமாக்ஸை நினைவு படுத்தினாலும் சாமார்த்தியமாக அதை திரைக்கதைக்குள் நுழைத்த நுட்பம் பிரமாதம்
ரசித்த வசனங்கள்
1 உனக்கு மகாராஜான்னு பேரு வெச்சதுக்குப்பதிலா உம்மணாம்மூஞ்சி ராஜான்னு பேரு வெச்சிருக்கலாம் , இப்படி முகததை வெச்சிருந்தா எந்த நாய் கடைக்கு வரும்? ஐயோ சார் , நான் உங்களைச் சொல்லலை
2 யாருய்யா அவன் ?
போலீ ஸ் சார்
போலீ சா?
பேரு போலீ ஸ் சார் , ஆனா ஆக்சுவலா அவன் ஒரு திருடன் சார்
3 ஒருத்தன் லட்சத்துல லஞ்சம் தர்றான்னா கோடில ஏதோ பதுக்கறான்னு அர்த்தம்
4 பழனி இஞ்சி நீர் ஒர்க்ஸ் அப்படினு எழுதி வெச்சிருக்கான். இஞ்சினியர்னு கூட எழுதத்தெரியல
இப்பவெல்லாம் எழுதப்படிக்கத்தெரியாதவன் தான் பெரிய ஆள் ஆகிறான்
5 இந்த வலி எல்லாம் எனக்கு சாதாரணம் , ஆனா நா ன் உனக்குக்கொடுத்த வலி இருக்கே அது காலத்துக்கும் இருக்கும்
1 82 பவுன் நகையை அசால்ட் ஆக ஆட்டையைப்போடும் போலீஸ் ஆபிஸர் வெறும் 5 லட்ச ரூபாய்க்கு ஆசைப்படுவது நம்ப முடியவில்லை
2 வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள் முதலில் வீட்டு ஆட்கள் சத்தம் போடாமல் வாயை அடைக்க வேண்டாமா? அக்கம் , பக்கம் வீடுகள் இருக்கே?
3 சலூனில் ட்ரிம்மர் எக்ஸ்ட்ரா வெச்சிருக்க மாட்டாங்களா? அல்லது அட்லீ ஸ்ட் பேட்டரி எக்ஸ்ட்ரா வெச்சிருக்க மாட்டாங்களா?
4 பல கொள்ளை ,கொலை, ,ரேப் செய்த கொடுரனைக்கைது செய்ய வரும் போலிஸ் கை விலங்கு எடுத்து வர மாட்டார்களா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மகாராஜா(2024)- அட்டகாசமான திரைக்கதை. அனைவரது உயிரோட்டமான நடிப்பு +. விஜய் சேதுபதி க்கு செம ஹிட் படம்.விகடன் மார்க் 45.குமுதம் ரேங்க்கிங் நன்று.ரேட்டிங் 3.5 /5.க்ளைமாக்ஸ் மட்டும் கொரியன் மூவி OLD BOY(2017)+ரெட்ட(2024)மலையாளம். சாயல்
Wednesday, June 12, 2024
HIT MAN (2024) - ஆங்கிலம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் பிளாக் காமெடி க்ரைம் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்
படத்தின் நாயகன் ஆன க்ளென் பவல் மற்றும் இயக்குநர் ஆன ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள் .2001 ஆம் ஆண்டு டெக்சாஸ் மந்த்லி மேகசின்ல வந்த ஒரு ஆர்ட்டிக்கிளை பேஸ் பண்ணி கதை ரெடி பண்ணி இருக்காங்க
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் காலேஜ் புரொஃபசர். உளவியல் பாடம் எடுப்பவர். பார்ட் டைம் ஜாப் ஆக போலீஸ் இன்ஃபார்மர் போல செயல்படுகிறார். அதாவது யாருக்காவது யாரையாவது கொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் வாடகைக்கொலையாளியை நியமித்து கொல்வார்கள் இல்லையா? அந்த வாடகைக்கொலையாளி போல வேடம் இட்டு குற்றவாளிகளுடன் பழகி அவர்கள் வாயால் வாக்கு மூலம் வாங்கி தக்க ஆதாரங்களுடன் அவர்களை போலீசில் சிக்க வைப்பார்
தசாவதாரம் கமல் போல பல கெட்டப்களில் உலா வந்து தான் ஒரு ஹிட்மேன் என்பதை நம்ப வைத்து குற்றவாளியிடம் பேசி போலீசில் மாட்டி விடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார்
ஒருமுறை நாயகன் நாயகியை சந்திக்கிறார். நாயகி திருமணம் ஆனவர். கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்டவர். ஒரு கட்டத்தில் தன் கணவனைக்கொலை செய்து விடலாம் என நினைக்கிறார். அதற்காக நாயகனை ஹிட் மேன் என நினைத்து அவரை வாடகைக்கொலையாளியாக நியமிக்க முற்படுகிறார்
முறைப்படி நாயகன் நாயகியை போலீசில் மாட்டி விட்டிருக்க வேண்டும். ஆனால் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் விதிப்படி நாயகன் நாயகி மீது காதல் கொண்டதால் நாயகியை தப்பிக்க விடுகிறார். மேலும் நாயகிக்கு அட்வைஸ் செய்து கொலை எல்லாம் வேண்டாம், உங்களுக்கு அவரைப்பிடிக்கவில்லை எனில் அவரை விட்டு விலகிச்சென்று உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள் என அனுப்பி விடுகிறார்
அதே போல் நாயகியின் கணவனும் நாயகனை சந்தித்து தன் மனைவியைக்கொலை செய்யுமாறு கேட்கிறார், அவரையும் போலீசில் மாட்ட விடாமல் தப்ப வைக்கிறார்
ஒரு கட்டத்தில் நாயகி தன் கணவனைப்போட்டுத்தள்ளி விடுகிறார். இன்சூரன்ஸ் பணத்துக்காகத்தான் கொலை செய்தார் என போலீஸ் சந்தேகிக்கிறது
இதற்குப்பின் நாயகன் நாயகியை எப்படிப்போலீஸிடம் இருந்து நாயகியைக்காப்பாற்றுகிறார் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக க்ளென் பவல் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவரது மாறுபட்ட கெட்டப்கள் , முக பாவனைகள் , உடல் மொழி அனைத்தும் அருமை . நாயகி உடனான ரொமான்ஸ் காட்சிகளில் பாடி கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் , பயாலஜி அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
நாயகி ஆக அட்ரியா அர்ஜோனா ஒரு அழகுப்பதுமை . கண்கள் , புன்னகை இரண்டுமே அவரது பிளஸ் பாயிண்ட்ஸ். படம் ஆரம்பித்து முதல் 25 நிமிடங்கள் ஸ்லோவாகப்போகும் இவரது எண்ட்ரிக்குப்பிறகுதான் ஸ்பீடு எடுக்கும். இவரது காஸ்ட்யூம் டிசைன் அருமை
நாயகியின் கணவன் ஆக வருபவர், நாயகனின் கொலீக் ஆக வந்து க்ளைமாக்சில் நாயகனையே மிரட்டுபவர் என கவனிக்க வைக்கும் கதாப்பாத்திரங்களும் உண்டு
சாண்ட்ரா அடேர் தான் எடிட்டிங். 115 நிமிடங்கள் ஓடியதே தெரியவில்லை .
கிரஹாம் ரெனால்ட்ஸ் தான் இசை பின்னணி இசை பல இடங்களில் சுவராஸ்யம்
ஷேன் இ கெல்லி யின் ஒளிப்பதிவு அருமை
சபாஷ் டைரக்டர்
1 போலீஸ் டீம் நாயகனிடம் மைக்ரொஃபோனைப்பொருத்தி நீ போய் அவளிடம் பேசு என அனுப்பும்போது நாயகன் நாயகியைத்தப்பிக்க வைக்க என்ன டெக்னிக்கை ஃபாலோ பண்ணி காம்வெர்சேஷனை வளர்த்துகிறார் என்ற கான்செப்ட் அபாரம், காமெடியாகவும் இருந்தது, புத்திசாலித்தனமாகவும் இருந்தது
2 படத்தின் டைட்டிலைப்பார்த்து இதில் வயலன்ஸ் , ரத்தம் தெறிக்குமோ என யாரும் பயப்படத்தேவை இல்லை , ஒரு காட்சியில் கூட ரத்தம் , வன்முறை இல்லை . இது ரொமாண்டிக் டிராமாவாகவே 90% மூவ் ஆகும்
3 போலீசின் கண்காணிப்பில் நாயகன் நாயகியிடம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் அந்த நீளமான காட்சி அபாரம். அந்தக்காட்சியில் நாயகன் நாயகி இருவரது நடிப்பும் முக பாவனைகளும் செம
4 நாயகனின் கொலீக் நாயகன் - நாயகி இருவரையும் மிரட்டும் காட்சியும் அதை அசால்ட் ஆக நாயகன் டீல் செய்யும் காட்சியும்
ரசித்த வசனங்கள்
1 உங்களுக்கான ஐடெட்ண்ட்டியை நீங்கள் தான் உருவாக்கனும்
2 எல்லாரையும் போல நீங்க இருக்கக்கூடாது . சம்திங் ஸ்பெஷல் உங்க கிட்டே இருக்கனும்
3 உன்னை மாட்டிவிடச்சொன்னா அவளுக்குக்கிளாஸ் எடுத்துட்டு இருக்கே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கதையின் முக்கிய சம்பவம் ஆன நாயகியின் கணவன் கொலை விஷூவலாக ஆடியன்சுக்குக்காட்டப்படவே இல்லை. அதைக்காட்டாமல் அதை வைத்தே திரைக்கதை பயணிப்பது எப்படி ?
2 நாயகன் மேல் சந்தேகப்படும் போலீஸ் டீம் நாயகனைத்தனியாக நாயகியை சந்திக்க அனுப்புவது ஏன் ? வீடியோ கேமரா செட்டப் உடன் அனுப்பி இருக்கலாமே?> ஆடியோ மட்டும் இருப்பதால் தானே நாயகனால் ஏமாற்ற முடிந்தது ?
3 நாயகியின் கணவன் உஷார் பார்ட்டி , அவனை எப்படி நாயகி கொலை செய்தாள் ? என்பது விஷூவலாககாட்டப்படாததால் நம்பகத்தன்மை இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+ காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொமாண்டிக் டிராமா பார்க்க விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம். டைம் பாஸ் மூவி ரேட்டிங் 2.75 / 5
| Hit Man | |
|---|---|
Release poster | |
| Directed by | Richard Linklater |
| Screenplay by |
|
| Based on | "Hit Man" by Skip Hollandsworth[1] |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Shane F. Kelly |
| Edited by | Sandra Adair |
| Music by | Graham Reynolds |
Production companies |
|
| Distributed by | Netflix |
Release dates |
|
Running time | 115 minutes[2] |
| Country | United States |
| Language | English |
| Budget | $8.8 million[3] |
| Box office | $1 million[4] |


.jpg)
.jpg)
.jpg)