Tuesday, April 09, 2024

THE SWINDLERS (2017) - சவுத் கொரியன் மூவி /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர்) அமேசான் பிரைம்

       

லோ பட்ஜெட்  படமாக  உருவான  இப்டம்  மொத்தம்  29  மில்லியன்  டாலர்கள் வசூல்  சாதனை  செய்தது. சிறந்த  நடிகைக்கான  விருதை நாயகியாக  நடித்த  நானாவுக்குக்கிடைத்தது.அமெரிக்காவில்  மட்டும்  முதலில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  ஹிட்  ஆனதும் சர்வதேச  அளவில்  பத்து  நாடுகளில்  பரவலாகத்திரை  இடப்பட்டது 


டைட்டில்  ஆன  ஸ்விண்ட்லர்ஸ்  என்பதற்கு  மோசடிக்காரர்கள்   என்று  அர்த்தம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை  நிகழும்  காலம்  2008


வில்லன்  சீட்டுக்கம்பெனி  நடத்தி  பல  கோடி  பணம்  சேர்ந்தது,ம்  எஸ்கேப்  ஆகிடறான். பணம்  போட்ட  பொதுமக்கல்  கம்பெனி  மேனெஜரைக்கேள்வி  கேட்கிறார்கள் , அவங்களுக்கு  பதில்  சொல்ல  முடியாம  மேனேஜ்ர்  மாடில  இருந்து  குதிச்சு  தற்கொலை  செய்து  கொள்கிறார்

 நாயகன்  ஒரு   திருடன். நாயகனோட  அப்பா  வில்லனுக்கு  போலி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணித்த்தருகிறார். அந்த  பாஸ்போர்ட்டை  வில்லன்  வாங்கிய  அடுத்த  நாள்  மர்மமான  முறையில்  நாயகனின்  அப்பா  தூக்கில்  தொங்கி இறக்கிறார்


 எந்த  நாட்டுக்கு  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணி  நாயகனின்  அப்பா  வில்லனிடம்  தந்தாரோ  அதே  நாட்டுக்கு  நாயகனும்  கிளம்புகிறான்.அப்போதானே  வில்லனைப்பிடிக்க  முடியும் ? 


ஆனால்  வில்லன்  ஒரு  விபத்தில்  இறந்ததாக்  மீடியாக்களில்  செய்தி   வருகிறது , ஆனால்  நாயகன்  அதை  நம்பவில்லை 


 அப்டியே  கட்  பண்ணினா  இப்போ  9  வருடங்கள்  கழித்து 2017 


வில்லன்  தப்பிப்போக  காரணமாக  இருந்த  பெரிய  தலைகள் , அர்சியல்வாதிகள்  மேல் விசாரணை  நடத்த  வேண்டும்  என  கோரிக்கை  கிளம்புகிறது / அந்த  லிஸ்ட்டை  வெளியிட்ட  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  தன்  உயர்  அதிகாரிகளை  ச்ந்திக்கிறார். அவங்க  கிட்டே  அவரு  பம்முவார்னு  பார்த்தா  அவங்க  தான்  இவரைப்பார்த்து  பம்மறாங்க . இந்தப்பிரச்சனையை  எப்படியாவது  முடிச்சு  விட்டுடு  என  கெஞ்சறாங்க 


  நாயகி  ஒரு  திருடி .ஒரு  நகைக்கடைல  தன்  கூட்டாளிகளோட  சேர்ந்து  நெக்லஸ்  கொள்ளை  அடிக்கறா. பப்ளிக்  பிராசிக்யூட்டர்  நாயகி  அண்ட்  கோ  வை  வேலைக்கு  அமர்த்தி   வில்லனைப்பற்றிய  டீட்டெய்ல்சை  எடுக்கிறான்


 நாயகன்  வில்லனைக்கொலை  செய்ய  அலைவது  பப்ளிக்  பிராசிக்யூட்டருக்கு  தெரிகிறது . இப்போது  பப்ளிக்  பிராசிக்யூட்டர் , நாயகன்  இருவரும்  இணைந்து  வில்லனை  சிக்க  வைக்க  திட்டம்  போடுகிறார்கள் . கடைசியில்  என்ன  ஆச்சு  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹியூன்  பின்  நடித்திருக்கிறார். அப்பாஸ்  மாதிரி  மைதா  மாவு  முகம், ஆனால்  ஆக்சனில் கலக்குகிறார்.  நாயகன்  போடும்  பல  கெட்டப்கள்  சிட்டிசன்  அஜித்  நினைவு  வருகிறது 


பப்ளிக் பிராசிக்யூட்டர்  ஆக   பார்க்  ஹி  ஷூ . நாயகன் , வில்லனை  விட  இவருக்குத்தான்  அதிக  காட்சி . கலக்கலான  நடிப்பு 


வில்லன்  ஆக  பே  சியாங்  வியூ  மிரட்டி  இருக்கிறார். ஆனால்  அதிக  காட்சிகள் இல்லை 


 நாயகி  ஆக  நானா .இவர்  புதுமுகம்  அறிமுகம், ஆனால்  புதுமுகம்  போலவே  தெரியவில்லை  பிரமாதமான  நடிப்பு .  நாயகனுடன்  டூயட்டோ  காதலோ  இல்லை 


பேங்க்  ஜூன்  ஜியோ  தான்  இசை . ஒரு  பரபரப்பான  ஆக்சன்  த்ரில்லருக்கு  பிஜிஎம்  எந்த  அளவு  விறுவிறுப்பாக  இருக்க  வேண்டுமோ  அந்த  அளவு  உழைத்திருக்கிறார்


லீ  டே  யூன்  ஒளிப்பதிவில்  கார்  சேசிங்  காட்சிகள்  கலக்கலாகப்படம் ஆக்கப்பட்டுள்ளன 


117  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  படத்தை  கிரிஸ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்

ஜாங்க்  சாங்க்  வ்யோ  என்பவர்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1 பிரமாதமான  கார்  சேசிங்  சீன்  படமாக்கப்பட்ட  விதம்  கண்ட்ரோல்  ரூமில்  இருந்து கேமரா  மூலம்  கண் காணித்து  டைரக்சன்  சொல்லிக்கொண்டே ஒரு க்ரூப்  செயல்படுவதும்  அதை  செயல்  ஆக்கம்  செய்வது  ஒரு  டீம்  என  பிரித்து  வேலை  செய்யும்  விதம்  அபாரம் 


2  வில்லனின்  கையாளை  மடக்க  ஜெயிலில்  நாயகன்  அண்ட்  போலீஸ்  டீம் போடும் திட்டம்  குட்


3  லேடியை  வைத்து வாலட்  அபேஸ்  செய்யும்  காட்சி 


4 கேபிள்  காரில்  வில்லன்  தப்பிக்கும்  காட்சி


5  க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்  , இண்ட்டர்வெல்  ட்விஸ்ட்  போக  இன்னும்  ரெண்டு  ட்விஸ்ட்  வேற 


  ரசித்த  வசனங்கள் 

1  அதிகப்படியான  சந்தேகம்  கூட  சில சமயம்  ஒருவரை  நம்பக்காரணமா  ஆகிடும்


2  ஆயிரம்  பேரை  நீ  ஏமாற்றினாலும்  நீ  ஏமாறும்  தருணம்  வந்தே  தீரும் 


3 எவ்ளோ  பெரிய  கூட்டத்தில் ஒருத்தன்  இருந்தாலும் ஒரு  சொதப்பல்காரனை  நான்  ஈசியா  அடையாளம்  கண்டு பிடிச்சுடுவேன்


4  எந்த  வேலை  செய்யறதா  இருந்தாலும்  அதுல  ஒரு  ஜாப் எதிக்ஸ்  வேண்டும்


5 எதிரே  இருப்பவன்  அமைதியா  இருக்கானேன்னு எகிறக்கூடாது ,இறக்கிட்டுப்போயிடுவேன்


6 நரியை  விடமோசாமானவன்  நீ,  ஆனா  அதை  இன்னொரு  நரி  கிட்டே  காட்டலாமா?


7 உலகத்துல இருக்கும்  எல்லா  ஆம்பளைங்களும்  ஒரே  மாதிரி  தான்  இருக்காங்க


8  ஒருத்தன் கிட்டே  முதல்  டைம்  ஏமாந்தா  அது  அவனோட  தப்பு , ரெண்டாவது  டைமும்  ஏமாந்தா  அது  நம்மோட  தப்பு 


9  திரும்பத்திரும்ப  அவனை  ஏமாத்துவதுதான்  அவனுக்கு  தரப்போகும் தண்டனை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 என்ன  தான்  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  சரக்கு  உள்ள  நபராக  இருக்கட்டுமே?அவரை  விட  பண  பலமும், அரசியல் பலமும்  மிக்க  அதிகாரிகள்  அவரிடம்  பம்முவது  நம்பவே  முடியவில்லை , 


2 நாயகன்  பல முறை  சாவின்  விளிம்பில்  வந்து  விட்டுத்திரும்புகிறான், ஆனால்  எதற்குமே  அலட்டிக்கொள்ளவில்லை .  என்னதான்  கெத்து  காட்டினாலும்  உயிர்  பயம்  எல்லோருக்கும்  உண்டு 


3  நகைக்கடையில்  நாயகி  கிளாமர்  காட்டி  மயக்கி  கொள்ளை  அடிப்பது  எம் ஜி ஆர்  கால  டெக்னிக். அவ்ளோ  பெரிய  கடையில்  அந்த  ஒரு  ஆள்  மட்டும்  தானா? மற்ற  சேல்ஸ்மேன்  யாரும்  அந்த  போலி  நகை  மாற்றுவதைப்பார்க்க  மாட்டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தமிழ்ப்படம்  பார்ப்பது  போலவே  இருக்கு . ஒரு  துளி  ஆபாசம்  இல்லை . கண்ணியமான  காட்சி  அமைப்புகள்  அருமை .  ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  விருந்து . ரேட்டிங்  3 / 5 


மோசடி செய்பவர்கள்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
ஹங்குல்
மற்றும்
திருத்தப்பட்ட ரோமானியமயமாக்கல்க்குன்
இயக்கம்ஜாங் சாங்-வொன்
எழுதியவர்ஜாங் சாங்-வொன்
உற்பத்திசங் சாங்-யோன்
நடித்துள்ளார்ஹியூன் பின்
யூ ஜி-டே
பே சியோங்-வூ
பார்க் சுங்-வூங்
நானா
அஹ்ன் சே-ஹா
ஒளிப்பதிவுலீ டே-யூன்
இசைபேங் ஜுன்-சியோக்
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஷோபாக்ஸ்
வெளிவரும் தேதி
  • நவம்பர் 22, 2017
நேரம் இயங்கும்
117 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்US$28.9 மில்லியன் [1]

Monday, April 08, 2024

LUCK-KEY (2016) - கொரியன் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் + காமெடி த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

    


 தெலுங்கு  ஹீரோவான  வெங்கடேஷ்  டபுள் ஆக்டில்  நடிக்க இந்தப்படத்தின்  ரீமேக் உரிமையை   வாங்கி  வைத்துள்ளார். காலம்  காலமாக  நாம் எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல்  படங்களில்  பார்த்த  ஆள்மாறாட்டக்காமெடி  ஆக்சன்  படம்  தான்  இது .ஆனால்  நாம்  பார்த்ததெல்லாம்  ஒரே  ஹீரோ  டபுள்  ரோல்  பண்ணி  இருப்பார்.ஆனால்  இந்தப்படத்தில்  இரு  வேறு    ஹீரோக்கள் பண்ணி  இருக்காங்க 


 2012ல்  ரிலீஸ்  ஆன  ஜப்பானிஷ்  படமான  கீ  ஆஃப்  லைஃப்  என்னும்  படத்தின்  அஃபிஷியல்  ரீ  மேக்  இது. லோ பட்ஜெட்  படமான  இது  48  மில்லியன்  டால்ர்  வசூல்  செய்து  நம்ம  ஊர்  உள்ளத்தை  அள்ளித்தா  போல  அங்கே  மெகா  ஹிட்  ஆன  படம் கொரியன்  திரைப்பட  விழாக்களில்  பங்கேற்று  சிறந்த  நடிகர்  உட்பட  நான்கு  விருதுகளை  வென்றுள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு  கேங்கஸ்டர். யாரையாவது  கொலை  செய்ய  வேண்டும்  என  அவருக்கு  டார்கெட்  கொடுத்தால்  பார்ட்டியிடம்  பணம்  வாங்கிக்கொண்டு  கொலை  செய்ய  வேண்டிய  ஆளைக்கொலை  செய்யாமல்  அவனிடம்  விஷயத்தை  சொல்லி  நீ  எங்காவது  எஸ்  ஆகி  விடு    என  வேறு  இடம் / நகரம்/நாடு  என  அனுப்பி  வைப்பவர் 


காமெடியன்  சினிமா வாய்ப்புக்காக  காத்திருக்கும்  ஒரு  துணை  நடிகன். ஆனால்  வாய்ப்பு  எதுவும்  கிடைக்கவில்லை . வீட்டு  வாடகை  கூட  கட்ட  முடியாத  வறுமை . தற்கொலை  முயற்சி  கூட  செய்து  பார்த்து  அதிலும்  தோல்வி  கண்டவன்


 ஒரு  பப்ளிக்  பாத்ரூமில்  நாயகன் , காமெடியன்  இருவரும்  குளிக்க  வருகிறார்கள் . அங்கே  எல்லாம் டவல் , டிரஸ் , பணம்  வைக்க  லாக்கர்  கொடுத்திருப்பார்கள்.  சோப்  காலில்  பட்டு  கீழே  விழுந்த  நாயகன்   மயக்கம்  அடைகிறான். அவனது  லாக்கர்  கீ  காமெடியனிடம்  சிக்குகிறது .  இதுதான்  சாக்கு  என   காமெடியன்  தன்  லாக்கர்  கீயை  அவன்  பாக்கெட்டில்  போட்டு  விடுகிறான்


 தலையில்  அடிபட்டதால்  நாயகனுக்கு பழைய  நினைவுகள்  எதுவும்  வரவில்லை அவன்  தன்  பாக்கெட்டில்  இருக்கும் கீ யை  வைத்து  காமெடியன்  வீட்டுக்குப்போய்  அவனது  வாழ்க்கையை  வாழ  ஆரம்பிக்கிறான்


நாயகி  தான்  நாயகன்  மருத்துவச்செலவுக்கு  உதவியவள்.  அவளது  அம்மா  நடத்தும்  ஹோட்டலில்  சமையல்  மாஸ்டர்  ஆக  நாயகன்  சேர்ந்து  விடுகிறான். பிரமாதமாக  கஸ்டமர்களைக்கவர்கிறான்.  பார்ட்  டைம்  ஜாப்  ஆக  சினிமா  ஷூட்டிங்க்கிலும்  கலந்து  கொள்கிறான் 

 தாவணிக்கனவுகள்  கே  பாக்யராஜ்  போல  நாயகன்  சினிமாவில்  பிரபலம்  ஆகி  விடுகிறான்


 காமெடியன் ராஜ  போக  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான். இவனுக்கும்  ஒரு  ஜோடி  கிடைக்கிறது 


 நாயகனுக்கு  ஒரு  கட்டத்தில்  நினைவு  திரும்புகிறது . அவன்  தன்  இருப்பிடத்துக்கு  வருகிறான். அங்கே  காமெடியன்  இருக்கிறான் .இதற்குப்பின்  நிகழும்  காமெடி  கலாட்டாக்களே  மீதி  சம்பவங்கள் 


நாயகன்  ஆக  யூ  ஹாய்  ஜின்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.ஆரம்பத்தில்  இவரது  முகம்,உதடுகள்  பார்க்கவே  பிடிக்கவில்லை .பவர்  ஸ்டார்  மாதிரி  இருக்கிறாரே? என  நினைத்தேன், ஆனால்  போகப்போக  தன்  நடிப்பால்  பார்ப்பவர்  மனம்  கவர்ந்து  விட்டார் . 


காமெடியன்  ஆக  லி ஜூன்  க்ச்சிதமாக  நடித்திருக்கிறார்.இவரது  சாக்லெட்  பாய்  தோற்றம்  இவரது  பெரிய  பிளஸ் . காதலியிடம்  பின்னாலேயே  சுற்றுவது , பம்முவது  என  சராசரி  தமிழ்  நாயகன்  போலவே  ஸ்டாக்கிங்  செய்கிறார்


நாயகி  ஆக  லிம் ஜி  லியான் அ ழகாக நடித்திருக்கிறார்.க்ளைமாக்ஸ்  காட்சியில்  காமெடியிலும்  கலக்கி  இருக்கிறார்


 காமெடியனுக்கு  ஜோடியாக  ஜோ  யூ  ஹீன்  நடித்திருக்கிறார். அமைதியான  தோற்றம்.கச்சிதமான  நடிப்பு 


112  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் பேங்க்  ஜன்  இசையில் படம்  கலகலப்பாக  நகர்கிறது . ஆக்சன்  காட்சிகளில்  பிஜிஎம் கச்சிதம்


ஜேங்க்  யூ மீ  எழுதிய  திரைக்கதையை  இயக்கி  இருப்பவர் லீ  கே  பியோக் 


சபாஷ்  டைரக்டர்


1  சாதா  மனிதன்  சினிமாவில்  பெரிய  ஆள்  ஆவது  ஒரு  சுவராஸ்யமான  நமக்குப்பழக்கமான  விஷயம்  தான், அதைக்காட்சிப்படுத்திய  விதமும், ஷூட்டிங்  ஸ்பாட்டில்  நடக்கும்  காமெடிகளும்  அருமை 


2   நாயகன்  சமையல்  கலை  நிபுணர்  ஆக  டெக்ரேட்  செய்வது, உணவை    பிரசண்ட்  செய்வது  எல்லாமே  ரசிக்கும்படியான  காட்சிகள் . நாயகியின்  குடும்பத்துடன்   அவர்  ஒன்றி  விடுவது  அருமை 


3   காமெடியன்  சிசிடிவி  கேமராவில்  தன்  ஜோடிப்பெண்ணைப்பார்த்து  அவள்  இருக்கும் இடம்  தேடி  அலையும்  காட்சிகள்  அருமை . அந்தப்பெண்  தற்கொலைக்கு  முயல்வதாக  இவராக  நினைத்துச்செயுயும்  சேஷ்டைகள்  காமெடி 


4  வில்லன்களை  ஏமாற்ற  நாயகன்  போடும்  திட்டமும்  அதை  எக்ஸ்க்யூட்  பண்ணப்  போராடுவதும் , நாயகி  வந்து  சொதப்புவதும்  சுவராஸ்யம்  

5  படத்தில்   2  செட்    ஜோடிகள்  இருந்தும்  விரசமான  காட்சிகள்  இல்லாமல்  காதல்  காட்சிகளை , கண்ணியமாக  கையாண்ட  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  இவன்  டிரஸ்சிங்  ரூம்  என்  வீட்டை  விடப்பெருசா  இருக்கு 


2  இந்த  டி வி  வித்தியாசமா  இருக்கே?  ஒருவேளை  சிசிடிவியோ ? 


3  எல்லா  வேலைகளும்  சின்ன  வேலையாதான்  ஆரம்பிக்கும்


4   சார்  நான்  ராணுவத்துல  இருந்திருக்கேன்


 சரி  நீ  அங்கேயே  இருந்துக்க


5  இந்த  ராத்திரி  நேரத்துல  இவ்ளோ  இருட்டுல  இவன்  எதுக்கு  கூலிங்  கிளாஸ்  போட்டிருக்கான் ? 


6   மிஸ்,என்ன  பிரச்சனை ?


டைரக்டர்  சார் , இவர்  என்  முகத்தைத்தவிர  மத்த  எல்லா  இடத்தையும்  பார்த்துப்பேசிட்டு  இருக்காரு 


7  தன்னோட  கனவு  பலிக்கனும்கறதுக்கால பலர்  தங்கள்  வாழ்க்கையையே  தியாகம்  செய்கின்றனர்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முன்  பின்  பழக்கமே  இல்லாத  நபருக்கு நாயகி  900  டாலர்  ஹாஸ்பிடல்  சார்ஜ்  கட்டும்  காட்சி  நம்பவே  முடியலை 


2  க்ளைமாக்ஸ்  காட்சி  டிராமா  பார்ப்பது  போல  நம்ப  முடியாமல்  இருக்கிறது . வில்லன்கள்  அவ்வளவு  எளிதில்  ஏமாறுவார்களா? 


3  25  வயதான  நாயகி 45  வயதான  அங்க்கிள்  ஆன  நாயகனை  விரும்புவதை  அவர்  வீட்டில்  எதிர்க்கவே  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காமெடி  ப்ரியர்கள் , ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்    என  அனைவரும்   பார்க்கலாம் , இந்தப்படம்  தெலுங்குப்பதிப்பில்  எப்படி  எல்லாம்  சொதப்பப்போகிறார்கள்  என்பதை  அறிய  இப்போதே  ஒரிஜினல்  வெர்சனை  பார்த்து  வைத்துக்கொள்ளலாம்  . ரேட்டிங்  3.25 / 5 


Luck Key
Theatrical poster
Directed byLee Gae-byok
Written byJang Yoon-mi
Based onKey of Life
by Kenji Uchida
Produced byJung Hee-soon
Starring
Edited byYang Jin-mo
Music byBang Jun-seok
Production
company
Yong Film
Distributed byShowbox
Release date
  • October 13, 2016 (South Korea)
Running time
112 minutes
CountrySouth Korea
LanguageKorean
Box officeUS$47.4 million

Sunday, April 07, 2024

வா இந்தப்பக்கம் (1981) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி டிராமா ) @ யூ ட்யூப்


ஒளிப்பதிவாளர் பி சி  ஸ்ரீ ராமின்  முதல்  படம்  இதுதான்  என்பது  பலருக்கும்  தெரியாத  ஒரு  விஷயம். எல்லோருமே  பூவே  பூச்சூடவா அல்லது  மவுன  ராகம்  தான்  அவரது  முதல்  படம்  என  நினைத்திருக்கிறார்கள் . முதல்  படம்  கிராமிய  சப்ஜெக் , லோ  பட்ஜெட்  படம்  என்றாலும்  பாடல் காட்சிகளில்  தன்  முத்திரையைப்பதித்திருக்கிறார். இயக்குநர்  மவுலிக்கு  இது  மூன்றாவது  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  லாட்ஜ் கம்    ஹோட்டலில்  ரிசப்ஷனிஸ்ட்  கம்  மேனேஜர்  ஆக  இருக்கிறார். தனக்கு  வரப்போகும்  மனைவி  மாடர்ன்  கேர்ள்  ஆக  இருக்க  வேண்டும்  என்பது  அவரது  விருப்பம், ஆனால்  கிராமத்துப்பெண்  தான்  அமைகிறார்.


 நாயகன்  வீட்டில்  அம்மா, அப்பா , அண்ணன் ,அண்ணி , அண்ணனின்  குழந்தைகள்  இருவர்  என  கூட்டுக்குடும்பம்  ஆக  இருக்கிறார்கள் . ஒரே  ஒரு  பெட் ரூம்  தான்  அந்த  வீட்டில் 


 இப்படி   இருக்கும்போது  புதிதாகத்திருமணம்  ஆகி  வரும்  நாயகி  என்னென்ன  பிரச்சனைகளை    எதிர்கொள்கிறாள்? அதை  எப்படி  தீர்க்கிறார்? என்பதை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்  ஆக  பிரதாப்  போத்தன். அசடு  வழியும்  கேரக்டரில்  அந்தக்காலத்தில்  இவரை  விட்டால்  அப்படி  சிறப்பாக  நடிக்க  ஆள்  இல்லை . அதே  போல  மனைவி  மீது  சந்தேகப்படும்  கேரக்டரில்  இவரும், சிவக்குமாரும்  பல  படங்களில்  சிறப்பாக  நடித்தவர்கள் . 


நாயகி  ஆக உமா  ஜெயதேவி  குடும்பப்பாங்கான  பெண்  ரோலில்  அருமையாக  நடித்திருக்கிறார். மாடர்ன்  டிரசில்  வரும்  காட்சிகள்  கிளுகிளுப்பு 


பக்கத்து  வீட்டுப்பெண்  ஆக  நடித்தவர்  பெயர்  தெரியவில்லை . சிறப்பான  நடிப்பு 


இஷை  ஷ்யாம். 5  பாடல்களில்  2  ஓக்கே  ரகம், 3  செம  ஹிட்  சாங்க்ஸ் . பி சி ஸ்ரீ  ராம்  ஒளிப்பதிவு 90%  கதை  ஒரு  வீட்டுக்குள்ளேயே  நடப்பதால்  சவாலான  பணிதான், ஆனால்  பாடல்  காட்சிகளில்  அவுட்டோர்  ஷூட்டிங்  என்பதால்  தன்  முத்திரையைப் பதித்திருக்கிறார்


 திரைக்கதை , வசனம் , இயக்கம்  மவுலி . இவரது  காமெடி  வசனங்கள்  அந்தக்காலத்தில்  பிரபலம் .  குடும்பப்பாங்கான  கதையைக் காமெடி  கலந்து  சொல்வதில்  வல்லவர் .


 இதில்  ஆச்சரியமாக  டபுள்  மீனிங்  டயலாக்ஸ்  கலந்து  எழுதி  இருக்கிறார்


இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது



சபாஷ்  டைரக்டர்


1   நாயகனின்  அண்ணன்  பட்டப்பகலில்  தன்  பெட்ரூம்  கதவை  சாத்தப்போகும்  முன்  அம்மாவும், அப்பாவும்  வீட்டுக்கணக்கு  பார்க்கப்போறோம், யாரும்  தொந்தரவு  பண்ணக்கூடாது  என்று  சொல்லி  விட்டு  தாழ்  போட  தம்பி  தன்  அண்ணன்  மகனிடம்  ஒரு  ரூபா  கொடுத்து  நீ  போய்  தூங்கு  என திட்டம்  போட்டு  பெட்ரூம்  கதவைத்தட்ட  வைக்க  அதைத்தொடர்ந்து  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  “ஏ” ஒன்  ரகம் 


2   ரேடியோவில்  இரு  குழந்தைகளூக்கு  இடையே  போதிய  இடைவெளி    வேண்டும்  என்ற  விளம்பரம்    வரும்போது  நாயகனின்  அண்ணன்  செய்யும்  செயல்  காமெடி 


3  நவ  நாகரீகம்  என்ற  பெயரில்  பெண்களுக்கு  நிகழும்  பிரச்சனைகளைப்பேசிய  விதம்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  இவள்  தேவதை  , இதழ்  மாதுளை ( ட்ரீம் டூயட் சாங்)


2  ஆனந்த  தாகம் , என்  கூந்தல்  பூக்கள் பூக்குமோ?  


3  சின்னச்சின்ன  இந்த  மதியம் 


4  மேரே  ஆவாஸ்  சுன்


5  ஏய் , வா , இதில்  என்ன  கோபம் :?


  ரசித்த  வசனங்கள் 


1    படிச்சுட்டு  இருக்கியே?  என்ன  எக்சாம் ?


 இண்டியன்  எக்கனாமிக்ஸ்


 தமிழ்  நாட்டின்  ஜனாதிபதி  யார்?


 அதெல்லாம்  கேட்க  மாட்டாங்க   

 ஒரு  வேளை  கேட்டுட்டா?


 எம்  ஜி ஆர்  தானே? 


 கோழி முட்டை , வாத்து  முட்டை 



2    எக்சாம் ல  என்ன  எழுதறதுன்னே  தெரியல 


 கோவிந்தா  கோவிந்தா  கோவிந்தா 


3  மதர்  க்கு  ஸ்பெல்லிங்க் என்ன?


 எம்  ஓ  டி ஹெச் ஈ  ஆர் 


 இவ்ளோ  அதிமகான  ஸ்பெல்லிங்கா  வரும் ?


 அது  ;பெரியம்மா , அதான் 


4   அடுத்த  நிகழ்ச்சி  இன்னும்  சில  மடிகளில்  தொடங்கும் , சாரி இன்னும்  சில நொடிகளில்  தொடங்கும்


5  டேய்  தம்பி, இத்தனை  நாளா  நான்  மட்டும்  தான்  வீட்டுக்கணக்கை  போட்டுட்டு  இருந்தேன்,  இப்போ உனக்கும்  கல்யாணம்  ஆகிடுச்சு , நீயும்  வீட்டுக்கணக்கை  போட  வேண்டி  வரும்,  ஆனா  நம்ம  வீட்ல  இருப்பதோ  ஒரே  ஒரு  பெட்ரூம், அதனால  ஆளுக்கு  ஒரு  நாள்  வீட்டுக்கணக்கை  போடுவோம்,  டீலா?


6  எதுக்காக உன் உடல்  பூரா  இப்படி  சேலையால  மூடி  இருக்கே?


 புருசன்  முன்னால  கை  காலை  எல்லாம்  காட்டக்கூடாதுனு  பாட்டி  சொன்னாங்க 


 இப்போ  அந்தப்பாட்டி  எங்கே?


 செத்துப்போயிட்டாங்க 


7  பைத்தியம்  என்னைப்பார்த்தா  உனக்கு  பயமா  இல்லையா?


 பாவமா  இருக்கு , புலி  வேஷம்  போட்டு  ஆடுபவர்களைக்கண்டா  பயமாவா  இருக்கும் ? 


8  நம்ம  வீட்ல  ஒரு  சாவு  நடந்தாக்கூட  எத்தனை  வேளை  சாப்பிடாம  இருக்க ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  மேன்  ஆன  நாயகன்  நடு  வீட்டு  ஹாலில்  சேரில்  அமர்ந்து  ஷூ  போடுவது  போல்  ஒரு  காட்சி .  பணக்காரங்க  வீட்டில்  வேணா  அபடி  நடக்கலாம்,  ஏழை, மிடில்  கிளாஸ்  ஃபேமிலில  செப்பல்  , ஷூ  எல்லாம்  வீட்டுக்கு  வெளில  வாசல்ல  தானே  இருக்கும்? 


2  நாயகன்  வீட்டிலும் , நாயகன்  வேலை  செய்யும்  ஹோட்டல்  லாட்ஜிலும்  லேண்ட்  லைன்  ஃபோன்  இருக்கிறது . வீட்டில்  எல்லோரும்  வெளியே  போய்  இருக்காங்க   என்பதை  நாயகி  நாயகனுக்கு  ஃபோன்  போட்டு  சொல்ல  மாட்டாரா?  லேட்டாக  வந்த  நாயகன்  நாயகியிடம்  நீ  ஏன்  எனக்கு  ஃபோன்  பண்ணவில்லை  என்று  கேட்க  மாட்டாரா?


3  நாயகன்  மெக்கானிக்கிடம்  செகண்ட்  ஹேண்ட்  ஸ்கூட்டர்  வாங்கும்போது  ஆர் சி  புக்  வாங்க  மாட்டாரா?


4 நாயகன்  வரும்  ஸ்கூட்டர்  ஒரு  ஸ்மெக்ளரோடது  என்பதால்  12  பைக்குகளீல்  போலீஸ்  ஆஃபிசர்ஸ் 24 பேர்  வருகிறார்கள். அடுத்த  ஷாட்டில்  ஜீப்பில்  ஏறு  என்றதும்  12    பைக்குகள்  2  பைக்  + 2  ஜீப்  ஆக  மாறியது  எப்படி ? 


5   நாயகன் - நாயகி  இருவரின் பக்கத்து  வீட்டு  பைத்தியப்பெண்ணின்  கதை  மடத்தனமா  இருக்கு . திருமணம்  ஆன  புதிதில்  கணவன்  அந்தப்பெண்  குளிக்கும்போது  பாத்ரூமில்  வந்து  கலாட்டா செஞ்சானாம், அவ  பயந்துட்டாளாம். என்ன  கொடுமை  சார்  இது ? 


6  பக்கத்து  வீட்டுப்பெண்ணின்  கணவன்  ஒரு  சைக்கோவாம், அவனை  ஏமாற்ற  அந்தப்பெண்  ஒரு  பொம்மையை  கீழே  போட்டு  உடைத்து  ஒரு  மாதிரி  சிரித்ததும்  அவன்  நம்பி  விடுகிறானாம், ஆனா  அதை  நாம  நம்பனுமே? 

/

7  பைத்தியமாக  நடிக்கும்  பெண்ணின்  கணவன்  காலை  9  மணிக்கு  ஆஃபீஸ்  போய்  விட்டு மாலை  6  மணிக்கு  வருகிறான். நாயகி  அவளை  சந்திக்க  வேண்டும்  எனில்  காலை  9.15   டூ  மாலை  5  வரை பார்த்திருக்கலாம், பேசி  இருக்கலாம்  சரியாக  அஞ்சே  முக்காலுக்கு  போய்  ஏன்  மாட்டிக்கொள்கிறார்?


8  நாயகன்  தன்  அண்ணன்  மகன்  10  வயது  சிறுவனிடம்  ஒரு  சீட்டைக்கொடுத்து  சித்தப்பாவுக்கு  உடம்பு  சரி  இல்லை , மெடிக்கல்  ஷாப்ல  போய்  இதை  வாங்கிட்டு  வா  என  நிரோத்  என  எழுதித்தருகிறான். என்ன  மடத்தனமான  காட்சி . காமெடிக்கு  என்றாலும்  இப்படித்தான் லூஸ்  தனமா  சீன்  எழுதனுமா? 


9   அடைத்து  வைக்கபப்ட்ட  அந்த  பைத்தியப்பெண்ணுக்கு நாயகி  சாப்பாடு  கொடுக்கிறாள், எப்படி ? ஒரு  ஆறடுக்கு  டிஃபன்  கேரியரில்  அதை  ஜன்னல்  கம்பி  வழியாக  இழுக்க  முடியாமல்    தடுமாறுது , அம்மா, அறிவுக்கொழுந்தே.. ஒரு  தட்டில்  சாப்பாடு  போட்டு  அதில்  சாம்பார்  ஊற்றி  தந்தால்  கம்பி  வழியாக  உள்ளே  போகாதா? 


10   நாயகி  பட்டிக்காடாக  இருந்து  நாயகன்  விருப்பத்திற்கு  இணங்க  நாகரீக  மங்கை  ஆவது  ஓக்கே , ஆனால்  திடீர்  என  ஒரு பார்ட்டியில்  ஹிந்தியில்  பாடுவது  எல்லாம்  ஓவரோ  ஓவர். கர்நாடக  சங்கீதம்  திடீர்  என  கற்றவர்  மாதிரி  வேற  காட்றாங்க  , அவங்க  பிராத்மிக்  எக்சாமே  பாஸ்  பண்ணாம  எம்  ஏ  ஹிந்தி  முடிச்சவங்க  மாதிரி  பாட்டுப்பாடுவது  ஓவர் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  காட்சி  ரீதியாக  யூ  தான், ஆனால்  வசன  ரீதியாக  ஆங்காங்கே  18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பி சி  ஸ்ரீராம் , இயக்குநர்  மவுலி  ரசிகர்கள் , அந்தக்கால  காமெடிப்ரியர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 


வா இந்தப் பக்கம்
இயக்கம்மௌலி
தயாரிப்புதமிழரசி
பொன்மலர் இண்டர்நேஷனல்
இசைஷியாம்
நடிப்புபிரதாப் போத்தன்
உமா
ஜெயதேவி
வெளியீடுமே 291981
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Saturday, April 06, 2024

ராமாயி வயசுக்கு வந்துட்டா (1980) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ யூ ட்யூப் 18+

    


 நடிகை  கீர்த்தி  சுரேஷின் அம்மா  மேனகா  புதுமுகமாக  அறிமுகம்  ஆன  படம்  இது . இவரது  இயற்பெயர்  பத்மாவதி.இவர்  ஒரு  கால கட்டத்தில் இந்தியாவில்  அதிக  சம்பளம்  வாங்கும்  நடிகைகளில்  ஒருவராக  இருந்தாராம். அட்டென்சன்  சீக்கிங்கிறாக  வைக்கப்பட்ட  டைட்டில்  மற்றும்  கீர்த்தி  சுரேஷின்  அம்மா  தான்  நாயகி  என்பதால்  பார்ப்போம்  என  முடிவு  செய்தேன்.அந்தக்காலத்தில்  எடுக்கப்பட்ட  ஒரு  விழிப்புணர்வுப்படமாகவே  இயக்குநர்  முயன்றிருக்கிறார். இது  கமர்ஷியலாக  வெற்றிப்படமா?இல்லையா? என்ற  தகவல்  கிடைக்கவில்லை 


மேனகா  வின்  இரண்டாவது  படம்  சாவித்திரி.ஆனால் அது  சரியாகப்போகவில்லை .ரஜினியுடன்  இவர்  நடித்த  நெற்றிக்கண்  செம  ஹிட்.மலையாளப்படங்களில் அ திகம்  நடித்த  இவர்   தெலுங்கு , தமிழ்  உட்பட  மொத்தம்  116  படங்களில் நடித்தார். சமீபத்தில்  வந்த  அண்ணாத்த  படத்திலும்  நடித்திருக்கிறார்


 இப்படத்தின்  ஷூட்டிங்  வத்தலக்குண்டு  என்ற  கிராமத்தில்  நடைபெற்றது . அந்த  ஊர்  மக்கள்  நாயகி  ஆன  மேனகா  கிராமியப்பெண்ணாகவே  மாறியதை  ஆச்சரியமாகப்பார்த்தார்களாம் . நியூஸ்  பேப்பரில்  புதுமுகம்  தேவை  என்று  விளம்பரம்  கொடுத்து  அதில்  தேர்வானவர்  இவர் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி , நாயகன்  இருவருமே  சிறு  வயதில்  இருந்தே   க்ளாஸ்மேட்ஸ் , ஸ்கூல்  மேட்ஸ் , முறை  மேட்ஸ். அதாவது  இருவரும்  முறைப்பெண் , முறைப்பையன்  உறவு  முறை. இருவரது  பெற்றோர்களுமே  அருகருகே  வீட்டில்  வசிப்பதால்  சின்ன  வயதில்  இருந்தே  இவனுக்குத்தான்  இவள்  என  வாய்  வழி நிச்சயம்  செய்து  விட்டார்கள் 


நாயகன் , நாயகி  இருவரும்  பருவ  வயதை  அடைந்த  பின்னும் இருவரும்  உடல் அளவில்  வளர்ந்த  அளவு  மனதளவில்  மெச்சூர்  ஆகவில்லை.  ரொம்ப  அப்பாவிகள் . ஊர்  முழுக்க  இவர்கள்  இருவரும்  வருங்கால  தம்பதி  என்பது  தெரியும் 


 ஒரு  நாள் அந்த  ஊரில்  இருக்கும்  பாட்டி  சும்மா  கிண்டலுக்கு நாயகியிடம்  திருமணத்தன்று  இரவு  என்ன  நடக்கும்? தெரியுமா? அது  தெரிந்தால்  தான்  திருமணம்  செய்து  வைப்பார்கள்  என   விளையாட்டாகக்கூற  நாயகி , நாயகன்  இருவரும்  தனித்தனியே  கிளம்பி  ஊராரிடம்  விளக்கம்  கேட்கிறார்கள் 


 நாயகனுக்கு  ஒரு  பெண்  வாய்  வழி  வசனமாக  தியரி  பாடம்  நடத்துகிறாள் .  வில்லன்  நாயகிக்கு  இதுதான்  சாக்கு  என  பிராக்ட்டிகல்  கிளாஸ்  எடுத்து  விடுகிறான்


 நாயகி  கற்பு  பறி  போன  விஷயம்  ஊர்  முழுக்கப்பரவி  விடுகிறது .பஞ்சாயத்து  கூடுகிறது . கெட்டுப்போன  பெண்ணை  எங்கள்  வீட்டு  மருமகளாக  ஏற்றுக்கொள்ள  மாட்டோம்  என  நாயகனின்  பெற்றோர்  கூற  பஞ்சாயத்து  முடிவுப்படி  கெடுத்த  வில்லனுக்கே  நாயகியை  தாரை  வார்க்க  ஏற்பாடு  நடக்கிறது 


 இவ்வளவு  நடந்தும்  நாயகிக்கு, நாயகனுக்கு  அந்த  விபரம்  எதுவும்  புரியவில்லை . சிலர்  யோசனைப்படி  அவர்கள் இருவரும்  ஊரை  விட்டு  ஓடி  விடுகிறார்கள் 


 பட்டணம்  வந்ததும்   ஒரு  ஆதரவற்ற  அனாதை  இல்லம்  நடத்தும்  தம்பதியிடம்  அடைக்கலம்  புகுகிறார்கள் .அங்கே  இன்னொரு  வீணாப்போன  வில்லன்  இருக்கிறான் . 


 முதலில்    அவன்  நாயகியை  இல்லீகலாக  அடைய  முயற்சி  செய்கிறான்.

அது  பலிக்க  வில்லை , அடுத்ததாக  லீகலாக  அதாவது  நாயகியை  மேரேஜ்  பண்ண  முயற்சி  செய்கிறான்


இதற்குள்  கிராமத்தில்  இருந்து  நாயகனின்  அப்பா  அவனைத்தேடி  வந்து  அவனை  ஊருக்கு  அழைத்துச்சென்று  விடுகிறார்


 இப்போது  நாயகி  தன்னைக்கெடுத்த  வில்லனை  திருமணம்  செய்து  கொண்டாரா?கெடுக்க  நினைக்கும் புது  வில்லனைத்திருமணம்  செய்து  கொண்டாரா?அல்லது  நாயகனைக்கரம்  பிடித்தாரா? என்பது  தான்  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஆக  புதுமுகம்  என்ற  சுவடே  தெரியா  வண்ணம்  மேனகா  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.இவரது  அழகும், அப்பாவித்தனமும், இளமையு   தான்  படத்தின்  மூல  தனம், உணர்ந்து  செய்திருக்கிறார்


 நாயகன்  ஆக  உதய சங்கர்  சுமாராக  இருக்கிறார்.  வெகு சுமாராக  நடிக்கிறார்

கங்கை  அமரன் இசையில்  பாடல்களெல்லாம்   நன்றாக  இருக்கின்றன  . பிஜிஎம்  சுமார்  ரகம்  தான் 


இயக்கம்  வி  அழகப்பன்



சபாஷ்  டைரக்டர்


1   பெரும்பாலும்  புதுமுகங்களை  வைத்தே  மொத்தப்படத்தையும்  எடுத்து  முடித்ததால்  கால்ஷிட்  பிரச்சனை, சம்ப்ளப்பிரச்சனை  இருந்திருக்காது 


2   திரைக்கதை  சுமாராக  இருந்தாலும்  கிளாமராக  டைட்டில் வைத்த  லாவகம் 


3  நாயகியை  அறிமுகப்படுத்தியது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சந்தைக்குப்போன  மச்சான் , ஜாடையில கண் அடிச்சான் ( டைட்டில்  சாங்) 

2  நான்  தான்  உங்கப்பண்டா , நல்ல  முத்துப்பேரன்  டா ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் ) 


3  அடி  ராமாயி  என்  ராசாத்தி  புது  ரோசாப்பூ   (  தோழிகள்  கிண்டல்  சாங் ) 


4  நாலு  வகைப்பூவில்  (  டூயட்) 


  ரசித்த  வசனங்கள் 


1 நம்ம  ஊர்  ஜனம் இருக்கே? யாராவது  கறுப்பா  வாந்தி  எடுத்தாக்கூட  காக்கா  காக்காவா  வாந்தி எடுத்தாங்கனு  சொல்வாங்க 


2  உன்  பொண்ணுக்கு  மூக்கு  சிவந்திடுச்சு , சீக்கிரமாவே  மூலைல  உக்காந்துடுவா 

3  அரச  மரத்தை  சுத்திட்டு  அடி  வயித்தை  தொட்டுப்பார்த்தா   நடக்குமா? என்  கிட்டே  வா , பூரா  விபரமும்  சொல்றேன் 

4 குழந்தைக்கு  நோய்  வந்த  பின்   மருந்து  தருபவர்  டாக்டர் , நோய்  வராம  பார்த்துக்கறவ  தாய் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிறுமியாக  இருக்கும்போது  நாயகி  ஒரு  முயலைத்துரத்துவதாக ஒரு  காட்சி. முயல்  நடைபாதையில்  ஓடுது. பொதுவாக  காட்டு  முயல்  செடி கொடிகள்  இருக்கும்  காட்டுக்குள்  தான்  ஓடும் . அருகிலேயே  அவ்ளோ  தாவரங்கள்  இருக்க  அங்கே  ஓடாமல்  நடை  பாதையில்  ஓடுவது  ட்ரெய்னிங்  கொடுத்த  சர்க்கஸ்  முயல்  ஆகத்தான்  இருக்கும் 


2  நாயகி  சிறுமியாக  இருக்கும்போது  அதாவது 13  வயதில்  அவளது  முறை  மாமன்  கூடவே  ஒன்றாக  அருகருகே  படுத்துத்தூங்க  பெற்றோர்  அனுமதிப்பது  எப்படி ? என்ன  தான்  நிச்சயிக்கப்பட்டவர்கள்  என்றாலும்  திருமணத்துக்கு முன்  ஒரு  கிராமத்தில்  இப்படி  படுக்க  1980களில் அனுமதித்தார்களா? 


3  என்னதான் அப்பாவியாக  இருந்தாலும்  கிராமத்தில்  இருந்து பட்டணம்  வந்த  நாயகன் - நாயகி  இருவரும்  பொதுப்போக்குவரத்தான  பஸ்சில்  போகாமல் ஆட்டோவில்  போய் சார்ஜ்  தர  கையில்காசில்லாமல்  தவிப்பது  நம்பும்படி இல்லை


4 வில்லனின்  பங்களாவில் தங்கும்  இருவரும்  தனி  அறையில்  தூங்கும்போது  ரூம்  கதவை  உள் பக்கமாகத்தாழ்  இட்டுக்கொள்ள  மாட்டார்களா? சின்னத்தம்பி பிரபுவை  விட  அப்பாவி போல 


5  நாயகன், நாயகி  இருவருமே  சின்ன  வயதில்  இருந்தே  கிளாஸ்மேட்.. இருவரும்  ஒரே  அளவு  தான்  படித்திருக்கிறார்கள் , அப்படி  இருக்கும்போது மளிகை  சாமான்  லிஸ்ட்  என  சொல்லி   வில்லன் ஒரு  வெள்ளை  சீட்டில்  லவ்லெட்டர்  எழுதி  நாயகியிடம்  கொடுக்கச்சொல்லும்போது  அதை  வாங்கிப்பார்த்துப்படிக்க  மாட்டாரா? 


6  வில்லன்  வீட்டில்  தான்  நாயகி  தங்கி  இருக்கிறார். தடை  சொல்ல  யாரும்  இல்லை. அந்த  பேக்கு  வில்லன் லவ்  லெட்டரை  நாயகியிடம்  நேரடியாகத்தராமல்  நாயகனிடம்  தந்து  தூது  விடுவது  ஏன் ? 


7 நாயகி  நாயகனை  நீ  வா  போ  என  ஒருமையில்  தான்  அழைக்கிறார். திடீர்  என  வாங்க , போங்க  என  மரியாதையாக  அழைப்பது  ஏன் ? திருமணமும்  ஆகவில்லை , அவருக்கு  மன  வலர்ச்சியும்  இல்லை . எப்படி  திடீர்  மெச்சூரிட்டி  வந்தது ? 


8 நாயகன்  நாயகியிடம்  என்ன  திடீர்னு  என்னை  வாங்க  , போங்க  என  மூன்றாவது  மனுசன்  கிட்டே  பேசுவது போல்  வித்தியாசமா  நடந்துக்கறே  என  கேட்கும்போது  நாயகி  அப்படி  அவனைக்கூப்பிடுவது  ஆறாவது  முறை . அஞ்சு தடவை  காது  கேட்கலை  போல 


9  நாயகி  அடிக்கடி  ஹேண்ட்  பேக்கை  எடுத்துக்கிட்டு  போற  மாதிரி காட்றாங்க. நான்  கூட  வேலைக்குப்போறதா  நினைச்சேன். ஒரு  டைம்  நாயகியே  சொல்லுது . கடை  வீதிக்குப்போறேன்  அப்டிங்குது. காசு  ஏது ?


10 க்ளைமாக்ஸ்  ல  நாயகி  நான்  சரத்  சந்திரர்  நாவலை அதிகம் படித்தவள்  என  ஒரு  டயலாக்  வருது ,ஆனா  2  மணி  நேரப்படத்துல  ஒரு  சீன்ல  கூட  பாப்பா  புக்  படிக்கிற  மாதிரி  காட்சியே  வர்லை 


11  படம்  முழுக்க  நாயகி  சின்னத்தம்பி  பிரபு  மாதிரியே  அப்பாவியா  வருது . திடீர்னு க்ளைமாக்ஸ்ல  கே  பாலச்சந்தர்  நாயகி  மாதிரி  மெச்சூரிட்டியாப்பேசுது


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  18+  இல்லை , ஆனால்  வசனம்  ஆங்காங்கே  லைட் க்ரீன்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கீர்த்தி  சுரேஷ்  ரசிகர்கள் பார்க்கலாம். ரேட்டிங்  2/ 5 


ராமாயி வயசுக்கு வந்துட்டா
இயக்கம்வேந்தன்பட்டி அழகப்பன்
தயாரிப்புடி. பி. எஸ். எல். ஞானமணி
ஸ்ரீ துர்கா கம்பைன்ஸ்
எல். மனோகரன்
இசைகங்கை அமரன்
நடிப்புஉதயசங்கர்
மேனகா
வெளியீடுசனவரி 121980
நீளம்3230 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Friday, April 05, 2024

REST IN PEACE (2024) - அர்ஜெண்ட்டீனா- சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 

       7/3/2024  அன்று  47 வது  மலாகா  திரைப்பட  விழாவில் திரையிடப்பட்ட  இந்தப்படம்   சிறந்த  நடிகர் ,    சிறந்த  துணை   நடிகர் ஆகிய  இரு  விருதுகளை  வென்றது . இது  த்ரில்லர்  ஃபிலிம்    என  பிரமோட்  செய்யப்பட்டாலும்  இது ஒரு  எமோஷனல்  ஃபேமிலி  டிராமா  தான். ஆனால்  விறுவிறுப்பாக  நகரும்  ஒரு  த்ரில்லர்  மூவி 

21/3/2024ல்  அர்ஜ்ண்ட்டீனா  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  27/3/2024  முதல்  ஒளிபரப்பாகிறது.1994 ல்  நடைபெற்ற  ஒரு  வெடிகுண்டு  விபத்து சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  எழுதப்பட்ட  நாவலின்  திரை  வடிவம்  இது


ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  தன்  மனைவி ,   10  வயது  மகள் , மகன்  உடன்  இனிமையான  குடும்ப  வாழ்க்கை  நடத்தி  வருகிறான்..திடீர்  என  அவனுக்கு  பண  நெருக்கடி  வருகிறது .கம்பெனியில்  பணியாளர்களுக்கு  சம்பளம்  தரக்கூட  பணம்  இல்லை .வியாபாரத்தில்  நட்டம்  மகளின்  ஸ்கூல்  ஃபீஸ்  கட்ட  பணம்  இல்லை .இந்த  நெருக்கடியை  சமாளிக்க  நாயகன்  வில்லனிடம்  பண  உதவி  கேட்கிறான்


 ஆனால்  ஏற்கனவே  நாயகனின்  வீட்டை  அடமானமாக  வைத்து  வாங்கிய  கடனுக்கே  இன்னும்  வட்டி , அசல்  கட்டாமல்  இருப்பதால்  வில்லன்  புதிதாகக்கடன்  தர  மறுப்பதோடு  பழைய  கடனுக்கான  கால  அவகாசமாக  ஒரு  வாரம்  காலக்கெடு  விதிக்கிறான். அந்த  ஒரு வாரத்துக்குள்  அசல், வட்டி  அடைக்காவிட்டால்  நடப்பதே  வேறு  என்கிறான் 

 

 இதன்  பின்  நாயகன்  மிகுந்த  மன  உளைச்சலுக்கு  ஆளாகிறான்.மனைவி  நாயகனை  சமாதானப்படுத்தினாலும்  அவளுக்கும்  கடனை  நினைத்துக்கவலையாக  இருக்கிறது 


 இப்படி  இருக்கும்போது  நாயகன் ஒரு  இடத்துக்குப்போகும்போது  அங்கே  ஒரு  வெடிகுண்டு  வெடிக்கிறது . அதில்  மாட்டிக்கொண்ட  நாயகனுக்கு  லேசான  காயம்  தான் . ஆனால்  நாயகனின்  சூட்கேஸ்  தூக்கி  எறியப்பட்டு  போலீசால்  கைப்பற்றப்பெற்று   நாயகியிடம்  ஒப்படைக்கப்படுகிறது


 வெடி  விபத்தில் நாயகன்  இறந்திருக்கலாம்,  என  போலீஸ்  கருதுகிறது . ஆனால்  டெட்  பாடி  கிடைக்காததால்  நாயகி  அதை  நம்பவில்லை 


 இந்த  சம்பவத்தை  சாக்காக  வைத்து  நாயகன்  தற்காலிகமாக  எல்லாப்பிரச்சனைகளிலிருந்தும்  தப்பிக்க  வேறு  ஊருக்கு  சென்று  விடுகிறான் 


 அந்த  ஊரில்  வேறு  பெயர் , வேறு  ஐ டி  கார்டு  ரெடி  பண்ணி  ஒரு  ஷாப்பிங்  காம்ப்ளெக்சில் , ரெஸ்டாரண்ட்டில்   பணி  புரிகிறான். ஓனரின்  மனைவி  நாயகனை  அன்புடன்  நடத்துகிறாள் . ஒரு  கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தின் போது  ஓனர்  ஹார்ட்  அட்டாக்கில்  இறந்து  விட   சில  நாட்களில்  நாயகன்  ஓனர்  மனைவியுடன் நெருக்கமாகி  இருவரும்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் 


நாயகி  இப்போது  வில்லனுடன்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறாள் . ஏற்கனவே  நாயகன்  மூலம்  பிறந்த  இரு  குழந்தைகளுடன்  இப்போது  வில்லன்  மூலம்  பிறந்த  ஒரு  குழந்தையும்  உண்டு 


 15  வருடங்கள்  கழிகின்றன .  ஃபேஸ் புக் மூலம் நாயகன்  தன்  மகளுக்கு  திருமணம்  என்பதை  அறிகிறான். அவர்களை  நேரில்  பார்க்க  கிளம்புகிறான்.

இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை 



நாயகன்  ஆக  ஜாக்கிங்  ஃபரியல்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். பின்  பாதியில்  வரும்  வயதான  கெட்ட்ப்பில்  அசப்பில்  அஜித் குமார்  போலவே  சாயல்  (  காட்  ஃபாதர்   எ  வரலாறு  கெட்டப் ) இளவயது  கெட்ட்ப்பில்  செமயான  நடிப்பு ,வயதான  கெட்டப்பில்சராசரி  நடிப்பு  அவருடையது 


 வில்லன்  ஆக  கேப்ரியல்  கொயட்டி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்,குள்ளநரித்தனம், வில்லத்தனைம்  இரண்டையும்  சரி  சமமாக  வெளிப்படுத்துகிறார்



நாயகி  ஆக  கிரிசெல்டா சிசிலியானி  கலக்கி  இருக்கிறார். முதல்  பாதியில்  நாயகனுடன்  இருக்கும்போதும்,  பின்  பாதியில் வில்லனுடன்  இருக்கும்போதும்  பேலன்ஸ்  பண்ணி  நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ்  காட்சியில்  இவர்  நடிப்பு  அருமை 


மகனாக , மகளாக  வருபவர்களுக்கு  அதிக   காட்சிகள்  இல்லை  வந்தவரை  ஓக்கே  ரகம் 


ஃபெடரிகா ஜசிட்  தான்  இசை . பின்னணி  இசை  நல்ல   விறுவிறுப்பு  ரோட்ரிக்கோ  வின்  ஒளிப்பதிவு  சிறப்பு 

ஒன்றே  முக்கால்  மணி  நேரம்  ஓடும்படி  க்ரிஸ்ப்  ஆக  கட்  செய்திருக்கிறார்  எடிட்டர் 


மார்க்கோ  ஒசாரியா  விடோய் ,  செபாஸ்டியன்  போரன்ஸ்டின்  ஆகிய  இருவரும்  திரைக்கதை  எழுத   செபாஸ்டியன்  போரன்ஸ்டின்  இயக்கி  இருக்கிறார்



சபாஷ்  டைரக்டர்


1  முதல்  காட்சியிலேயே  கதை  அரம்பம்  ஆகி விடுவது  சிறப்பு , செம  விறுவிறுப்பாக  காட்சிகள்  நகர்கின்றன


2  கடன் நெருக்கடியால் நாயகன்  கஷ்டப்படும்  காட்சிகள்  மனதுக்கு  நெருக்கமாக  அமைந்திருக்கிறது . எல்லோருக்குமே  கடன்  இருக்கும்  என்பதால்  ஈசியாக  கனெக்ட்  ஆகி  விடுகிறது 


3  க்ளைமாக்ஸ்  காட்சியில் நாயகன்  , நாயகி  நடிப்பு  அருமை 


4  நாயகன்  தன்  மகன்  வில்லனை  அப்பா  என  அழைப்பது  கண்டு  மருகுவது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லன்  தன்  ஓனரின்  மனைவியோடு  நெருக்கம்  ஆவது  எப்படி? என்பதை  டீட்டெய்லாகக்காட்டிய  இயக்குநர்  நாயகி  வில்லனுடன்  இணைந்தது  எப்படி  என்பதை  விஷூவகாலக்காட்டவில்லை . இது பின்னடைவு 

2    வில்லன்  பணத்துக்காக  நாயகனை  அவ்ளோ  தூரம்  நெருககடி  தருபவன்  நாயகன்  காணாமல்  போனதும்  நாயகியிடம்  நீங்க  கடனைக்கட்ட  வேண்டியதில்லை  எனக்கூலாக  சொல்வது  எப்படி ? 


3   வில்லன்  நாயகியை  எப்படி  வீழ்த்தினார்     என்பது  சொல்லப்படவில்லை .பண  நெருக்கடிதான்  காரணமா? இல்லை  வில்லனின்  செல்வாக்காலா?என்பது  சொல்லப்பட்டிருக்க  வேண்டும்


4  நாயகன்  கடந்த  15  வருடங்களாக  தன்  மனைவி  என்ன  ஆனாள்   என்பது  ப்ற்றிக்கவலைப்படாமல்  இருப்பது  எப்படி ?


5  நாயகன்  கடைசி  வரை  தன்  மகன் , மகளை  சந்திக்காமல்  இருப்பது  ஏன் ?

6  நாயகன்  தான்  மட்டும்  இன்னொருத்தியுடன்  வாழலாம், ஆனால்  தன்  மனைவி  தனிமையாக  இருப்பாள்  என்று  எதிர்பார்க்கலாமா? வில்லனுடன்  இணைந்து  மனைவியைக்கண்டு    ஜெர்க் ஆவது   ஏன்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு  ஃபேமிலி  டிராமா  என்பதால்  பெண்களுக்குப்பிடிக்கும்,த்ரில்லர்  மோடில்  சொல்லப்பட்டிருப்பதால்  ஆண்களுக்கும்  பிடிக்கலாம் , ரேட்டிங்  2.5 / 5 


Rest in Peace
Promotional release poster
SpanishDescansar en paz
Directed bySebastián Borensztein
Screenplay by
  • Marcos Osorio Vidal
  • Sebastián Borensztein
Based onDescansar en paz: ¿nunca soñaste con dejar todo y empezar de nuevo?
by Martín Baintrub
Produced by
Starring
CinematographyRodrigo Pulpeiro
Edited byAlejandro Carrillo Penovi
Music byFederico Jusid
Production
companies
  • Kenya Films
  • Benteveo Producciones
Distributed byNetflix
Release dates
  • 7 March 2024 (Málaga)
  • 21 March 2024 (Argentina)
CountryArgentina
LanguageSpanish