Monday, March 11, 2024

MERRY CHRISHMAS (2024) - மெரி கிறிஸ்மஸ் -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

     


  2018ல்  ரிலீஸ்  ஆன  ஹிந்திப்படமான  அந்தாதூன்  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களைக்கொண்டாட  வைத்தது. இந்தியாவில்  அதிக  மொழிகளில்  ரீமேக்  ஆன  படங்களில்  டாப் 2  ஆக  அது  திகழ்ந்தது.( டாப்1  த்ரிஷ்யம்)  தமிழில்  கூட  அந்தகன்  என்னும்  டைட்டிலில்  பிரசாந்த்  நடிக்க வெளி  வர  இருக்கிறது . அப்படிப்பட்ட  செம  ஹிட்  பட  இயக்குநர்  ஆன   ஸ்ரீ  ராம்  ராகவன்   5  வருட  இடைவெளிக்குப்பின்  இயக்கும்  ஹிந்தி -தமிழ்  ஆகிய  இரு  மொழிப்படம்  தான்  இந்த மெரி கிறிஸ்மஸ்


முதல்  30  நிமிடங்கள்  பிரமாதமான  ஃபீல்  குட்  ரொமாண்டிக் மூவிமாதிரி  செல்லும்  திரைக்கதை  பின்  பாதியில்  தான்  க்ரைம்  த்ரில்லர்  ஆக  மாறும், எனவே  த்ரில்லர்  ரசிகர்கள்  அல்லாதோர்  கூட  முதல்  30  நிமிடங்களை  மிஸ்  பண்ணாமல்  பார்க்கலாம்.


ரைட்டர் ஃப்ரெட்ரிக்  டார்ட்  எழுதி  1960 ல்  ரிலீஸ்  ஆன  நாவல் ஆன  எ  பர்ட்  இன்  எ  கேஜ்  கதையைத்தழுவி  எழுதப்பட்ட  திரைக்கதை  இது. 1958ல்  அகதா  கிறிஸ்டி  எழுதிய  நாவல்  ஆன த  அன் எக்ஸ்பெக்ட்டட்  கெஸ்ட்  கதையை  மையமாக  வைத்து 1989ல்  TARKA   என்ற  கன்னடப்படம்  ரிலீஸ்  ஆனது . அதன்  அஃபிசியல்  ரீமேக்  ஆக  தமிழில்  1990 ல்  ரிலீஸ்  ஆன  கே  எஸ்  ரவிக்குமர்  + ரகுவரன்  காம்போ  படம்  ஆன  புரியாத  புதிர்  அமைந்தது . இந்த  இரண்டு  நாவல்களுக்கும்  சில  ஒற்றுமைகள்  உண்டு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திருமணம்  ஆகாதவர் . அவர்  திருமணம்  ஆகி  ஒரு  குழந்தையுடன்  இருக்கும்  நாயகியை  ஒரு  கிளப்பில்  சந்திக்கிறார். எதேச்சையாக உரையாடல்கள் வளர  அவர்கள்  இருவருக்கும்  இடையே  ஒரு  நட்பு  உருவாகிறது.தன்  வீட்டுக்கு  நாயகி  அழைக்கிறார்


நாயகன்  நாயகி  வீட்டுக்கு  செல்கிறார். இருவரும்  வீட்டில்  சரக்கு  அடிக்கிறார்கள் .குழந்தையைத்தூங்க  வைத்து  விட்டு  நாயகி  நாயகனிடம்  ஜாலியாக  ஒரு  ரைடு  போகலாமா ? எனக்கேட்க  இருவரும்  வெளியே சென்று  விட்டு  பின்  வீட்டுக்குத்திரும்புகிறார்கள் . ஒரு  அதிர்ச்சி . நாயகியின் கணவர்  நாயகியின்  வீட்டில்  கொலை  செய்யப்பட்டுக்  கிடக்கிறார். இருவருக்கும்  அதிர்ச்சி.


இதற்குப்பின்  நிகழும்  சம்பவ்ங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  விஜய்  சேதுபதி  அலட்டிக்கொள்ளாமல்  நடித்திருக்கிறார். அழகான  டான்ஸ்  ஸ்டெப்கள்  போடுகிறார். கமல்  போலவோ , பிரபு  தேவா  போலவோ  முறையாக  நடனம்  பயிலாத  அவர்  ஒரு  சாமான்யன்  ஆடும்  ஆட்டம்  போல  அவ்ளோ  யதார்த்தமாக  போடும் ஸ்டெப்களுக்கு  ஆடியன்ஸ்  தரப்பில்  அவ்ளோ  வரவேற்பு 


நாயகி  ஆக  கேத்ரினா  கைஃப்  அழகாக  வந்து  போகிறார். முகத்தில்  குழந்தைத்தனம்  , ஆனால்  உடலில்  கிளாமர்  . இந்த  வித்தியாசமான  காம்பினேஷனில்  ஜொலிக்கக்கூடிய  நடிகைகள்  இருவர்  தான்  இந்தியாவில்  இருக்கிறார்கள்  1  ஸ்ரீ தேவி  2  கேத்ரினா  கைஃப். இயல்பாக  நடித்திருக்கிறார். இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக    விருமாண்டி புகழ்  சண்முகராஜனும், ஏட்டம்மாவாக  ராதிகாவும்  நடித்திருக்கிறார்கள். ராதிகாவின்  உடல்  மொழியில் , டயலாக்  டெலிவரியில்  ரொம்பவே  செயற்கை  தெரிகிறது 


பூஜா  லதா  ஸ்ருதி  தான்  எடிட்டர். இது  ஒருவரா?மூவரா? தெரியவில்லை .144  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். 


பாடல்களுக்கான  இசை  ப்ரீதம் . பின்னணி  இசை டேனியல்  பி  ஜார்ஜ் . க்ளைமாக்ஸ்  சீனில்  வயலினைப்போட்டு  கொண்டாடி  இருக்கிறார்,


மது  நீலகண்டன்  ஒளிப்பதிவில்  டார்க்  ஷேடில்  ரம்மியமாகக்காட்சிகள்  நகர்கின்றன. பெரும்பாலான  காட்சிகள்  ஒரே  இரவில்  நடப்பதாக  காட்டி  இருப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான் 


எனக்குத்தெரிந்து  சமீப காலப்பட்ங்களில்  திரைக்கதை  எழுத  மட்டும்  11  பேர்   ஈடுபட்டிருப்பது  இதில்  மட்டும்  தான் 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்  முப்பது  நிமிடங்கள்  அட்டகாசமான  ரொமாண்டிக்  ஃபீல்  குட்  மூவி  பார்ப்பது  போல  அவ்ளவ்  யதார்த்தமான  காட்சிகள் .நடிப்பு , இயக்கம், இசை , ஒளிப்பதிவு  எல்லாம்  அருமை 


2    த்ரிஷ்யம்  படத்தில்  கொலை  நடந்த  தேதியை  மாற்றி  அமைக்க  திட்டம்  போடுவது  போல  இதில்  கொலை  நடக்கும் இடம்  ஜெராக்ஸ்  காப்பி  போல  அருகருகே  ஒரே  மாதிரி  இரு  வீடு  என்பது  மாறுபட்ட  கற்பனை 


3  வில்லன்  பர்சை  நாயகியின்  வீட்டில்  சோபாவில்  ஒளித்து  வைப்பதும்  அதை  வைத்து  பின்னப்பட்டிருக்கும்  வலைகளும்  அருமை 


4  நாயகன்  பேப்பர்  மூலம்  கப்பல் , ராக்கெட்  செய்யும்  வித்தையை  ஓப்பனிங்கில்  சாதாரணமாகக்காட்டி  பின்  ஒரு  காட்சியில்   போலீஸ்  ஸ்டேஷனில்  அதை  வைத்து  காட்டப்பட்டிருக்கும்  ஒரு  ட்விஸ்ட்  குட் 


5  க்ளைமாக்ஸ்  காட்சியில்  நாயகன்  நாயகியிடம்  மோதிரத்தை  தர  அதை  அணிவிக்கும்படி  நாயகி  சூசகமாக  தன்  கை  விரல்களைக்காட்ட  அது  ஒரு  கவிதையான  காட்சி 

 

  ரசித்த  வசனங்கள் 

1  இந்த  உலகத்துல  சின்ன  உயிரினங்கள் , பெரிய உயிரினங்கள்   எல்லாமே  ஒரு  மொமெண்ட்டுக்காகத்தான்  காத்திருக்கும். அந்த  மொமெண்ட்  வரும்போது  மிஸ்  பண்ணிடக்கூடாது 


2   துபாய்    எப்படி  இருக்கு ?


  டூ  மச்  டிசிப்ளின் 


3  எது  பெரிய  துயரம்?னு  தெரியலை . பிடிச்சவங்க  இல்லாம  போவதா? இருக்கறவங்க  பிடிக்காம  போறதா?


4  இந்த  ஃபோட்டோவில்  ரொம்ப  ம்கிழ்ச்சியா  இருக்கீங்க? ஆனா  லைஃப்  செட்  ஆகலைங்கறீங்க?


  அதுக்காக  யாராவது  அழுதுட்டு  இருக்கற  மாதிரி  ஃபோட்டோ  எடுத்து  ஆல்பத்துல  வைப்பாங்களா?


5  அவளை  மறந்தபின்  அந்த  மோதிரத்தை  தூக்கிப்போட்டுடலாம்னு  இருக்கேன் 


தூக்கிப்போட்டா தானே  மறக்க  முடியும் ?


6   லவ்  பண்ணினவ்ங்க  செத்துப்போறதா?லவ்வே  செத்துப்போவதா? எது  துயரம்  அதிகம் ?


7  இப்போ  பிரச்சனை  கடவுள்  நம்பிக்கை  எனக்கு  இருக்கிறதா??இல்லையா? என்பதல்ல, கடவுள்  என்னை  சந்திச்சா  என்  மேல  நம்பிக்கை  வைப்பாரா? இல்லையா?  என்பதுதான் 


8   என்னால  ஈசியா  ஒரு  விஷயம்  பண்ண  முடியுதுனா  அது  தோசை  ஊத்தறதுதான் 


9   நாம  பேசிட்டு  இருந்த  படம்  இன்று  நான்  நாளை  நீ  தானே?


 இல்லை , இன்று  நீ  நாளை  நான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இந்தக்காலத்தில்  பெண்  கிடைக்காமல்  ஏக்கத்தில்  பல  ஆண்கள்  சுத்திட்டு  இருக்காங்க . அப்படி  இருக்கும்போது  அல்வாக்குட்டி  மாதிரி  நாயகி  தன்னைத்தேடி  வர  அந்த  ஆள்  நாயகி  கூட  குழந்தை  இருப்பதால்  ஓடிப்போவது  நம்பும்படி  இல்லை , அவன்  என்ன  காலம் பூரா  வெச்சுக்காப்பாத்தவா  வந்திருக்கான் ? 


2   தனக்குக்கிடைக்கலைன்னாலும்  அடுத்தவனுக்குக்கிடைக்கக்கூடாது  என்ற  மனநிலையில்  தான்  ஆண்கள்  இருப்பார்கள் .  நாயகியை  விட்டு  ஓடிப்போக  நினைக்கும்  அந்த  ஆள்  அவன்  பாட்டுக்கு ஓடிப்போகாம  எதற்காக  நாயகனிடம்  நாயகியை  அறிமுகப்படுத்தி  விட்டு  ஓட  வேண்டும் ?


3  கொலை  நடந்த  வீட்டில்  சாட்சிகள்,தடயங்கள்  கலையாமல்  இருக்க  போலீஸ்காரர்  ஒருவரை  பாதுகாப்புக்கு  விட்டுச்செல்வது  மரபு , அது  ஃபாலோ  செய்யப்படலை 


4    நாயகி  கொலை  நடந்த  வீட்டின்  ரூமுக்கு  அருகே  இன்னொரு  ரூமில்  எல்லாப்பொருள்களையும்  போட்டு  எரிக்கிறார். அடுத்த  நாள்  போலீஸ்  கேள்வி  கேட்காதா? 


5  நாயகன்  க்ளைமாக்சில்  எடுக்கும்  முடிவு  அபத்தமானது . எதற்காக  வாலண்ட்ரியாகப்போய்  மாட்டிக்கொள்கிறார் ?   

6  கதை  நடப்பது  இந்தியாவில். போலீஸ்  என்ன  மாதிரி  நடக்கும்  என்பதை  இந்தியக்காவலர்கள்  போல  தான்  காட்ட  வேண்டும், ஒரிஜினல்  நாவல்  கதைக்களம்  ஃப்ர்ஞ்ச்  நாடு.   ஃப்ரெஞ்ச் நாட்டில்  மனித  உரிமை   இருக்கும், அதை  இங்கே இருப்பது போலப்பேசிக்கொண்டு  இருப்பது  சிரிப்பை  வர வைக்குது .நம்மூரு போலீஸ்  எந்தக்காலத்தில்  மனித  நேயத்தோடு  நடந்து  இருக்காங்க ? 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ரொமாண்டிக் டிராமா  ரசிகர்கள்  முதல்  பாதியையும், க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  பின்  பாதியையும்  ரசிக்கலாம், விஜய்  சேதுபத் , கரீனா  கைஃப்  ரசிகர்கள்  முழுப்படத்தையும்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Merry Christmas
Theatrical release poster
Directed bySriram Raghavan
Written by
  • Hindi Version:
  • Sriram Raghavan
  • Arijit Biswas
  • Tamojit Das
  • Pooja Ladha Surti
  • Anukriti Pandey
  • Tamil Version:
  • Pratheep Kumar S
  • Abdul Jabbar
  • Prasanna Bala Natarajan
  • Lata Karthikeyan
Based onLe Monte-charge
by Frédéric Dard[1]
Produced by
Starring
CinematographyMadhu Neelakandan
Edited byPooja Ladha Surti
Music by
  • Songs:
  • Pritam
  • Score:
  • Daniel B. George
Production
companies
Distributed by
Release date
  • 12 January 2024
Running time
144 minutes[2]
CountryIndia
Languages
  • Hindi
  • Tamil
Budget₹60 crore[3][4]

Sunday, March 10, 2024

CHLOE (2009) ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

   

    2003ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன NATHALIE  என்ற  ஃபிரெஞ்சுப்படத்தின்  ரீமேக்  இது 10  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  14  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  படம் . கனடாவில்  ஷூட்டிங்  நடந்தது. வெறும்  35  நாட்களில்  ஷூட்  செய்த  லோ  பட்ஜெட்  படம்


 இது  ரீமேக்  படமாக  இருந்தாலும்  திரைக்கதையில்  சுவராஸ்யம்  தேவை  என்பதால்  2002ஆம்  ஆண்டு  செகரட்டரி  என்ற  படத்துக்கு  திரைக்கதை  அமைத்த   எரின்  கிரெஷிடா  வில்சனை  நியமித்து  ரைட்டிங்  ஒர்க்கை  முடித்தார்  தயாரிப்பாளர் 


13/7/2010  ஆம்  ஆண்டு  இதன்  டிவிடி  ரிலீஸ்  ஆனது. தியேட்டர்களில்  கிடைத்த  வசூலை  விட  டிவிடி  சேல்சில்  அதிக  லாபம்  கிடைத்ததாக  தயாரிப்பாளர்  தெரிவிக்கிறார்


1999 ல்  ரிலீஸ்  ஆன  வாலி  படத்தில்  நாயகன்  நாயகியிடம்  கற்பனையாக  ஒரு  காதல்  தோல்வி  கதையைக்கூறுவார். எஸ்  ஜே  சூர்யாவின்  இயக்கத்தில்  வந்த  அந்தப்படம்  செம  ஹிட்  ஆனது. படத்தில்  திரைக்கதை  அமைப்புக்கு  பாராட்டுக்கிடைத்தாலும்  அந்த  கற்பனைக்கதை  கான்செப்ட்  தமிழ்  சினிமாவுக்குப்புதுசு. அந்த  மேக்கிங்  ஸடைலை  இந்தப்படத்தில்  இயக்குநர் 2009ல்  பின்பற்றி  இருப்பார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  மகப்பேறு  மருத்துவர் .அவரது  கணவர்  ஒரு  காலேஜ்  ப்ரொஃபசர் . இவர்கள்  இருவருக்கும்  டீன்  ஏஜ்  வயதில்  ஒரு  மகன்  இருக்கிறான். நல்ல வசதியான  ஃபிளாட்டில்  மூவரும்  குடித்தனம்  நடத்தி  வருகிறார்கள் .


நாயகியின்  கணவர்  நம்ம  ஊர்  கமல் , கார்த்திக் , சிம்பு , தனுஷ் , அர்ஜூன்  இவர்களின்  தீவிர  ரசிகர்  போல . பொண்ணுங்க  கிட்டே  கடலை  போடுவது , அவங்க  கூட  ரவுண்ட்  அடிப்பது  என்றால்  மிகவும்  பிடிக்கும்.  இவரது  செல்  ஃபோனில்  ஒரு  காலேஜ் ஸ்டூடண்ட்  ஆன    மாணவி  உடன் இருக்கும்  ஃபோட்டோவை  நாயகி  பார்க்கிறார்.அவருக்கு  தன்  கணவர்  நடத்தையில் சந்தேகம்  வருகிறது 


கணவரை  டெஸ்ட்  செய்ய  முடிவெடுக்கிறார். அவர்கள்  குடி  இருக்கும்  வீட்டுக்கு  அருகில்  குடி  இருக்கும்  ஒரு  கால்  கேர்ள்  ஆன   வில்லியை  சந்திக்கிறார். வில்லி  தான்  டைட்டில்    கேரக்டர் .  நாயகி  வில்லியிடம்  தன்  கணவர்  பற்றிய  விபரங்களை  சொல்லி  அவர்  பெண்  விஷயத்தில்  வீக்  ஆனவரா? என்பதை  செக்  செய்து  ரிப்போர்ட்  தரச்சொல்லி  அதற்கான  சம்பளத்தையும்  தருகிறார்


வில்லி  நாயகியிடம்  ரிப்போர்ட்  தருகிறார்.  நாயகி  சந்தேகப்பட்டது  சரிதான்  நாயகன்  ஒரு ஜொள்ளு பார்ட்டி  தான்  என  ரிப்போர்ட்  தருகிறார். இது  சம்பந்தமாக  அடிக்கடி  நாயகியும் , வில்லியும்  சந்திக்க  நேர்கிறது


இதற்குப்பின்  திரைக்கதையில்  ஒரு  திருப்பம்  நடக்கிறது . வில்லி  நாயகியை  மிரட்ட  ஆரம்பிக்கிறார். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி    கேத்ரீன்  ஆக  ஜூலியனா மூர்  திறம்பட  நடித்திருக்கிறார். அவரது  கண்ணியமான  கோட்  சூட்  ஆடை  வடிவமைப்பு , ஹேர்  ஸ்டைல்  , முக  அழகு  அனைத்தும்  அருமை 


  வில்லி  ஆக  அமண்டா  ஸ்டேஃபிரைட் பிரமாதபப்டுத்தி  இருக்கிறார். நாயகியை  விட  இவருக்குத்தான்  அதிக  காட்சிகள் .   நாயகியை  விட  இவர்தான்  அழகு. நாயகிக்கு  குடும்பப்பாங்கான  ஆடை  வடிவமைப்பு  எனில்  இவருக்கு  மாடன்ர்  கேர்ள்  ஆடை  வடிவமைப்பு . பின்  பாதியில்  வில்லித்தனம்  காட்டும்போது  கவனம்  ஈர்க்கிறார்


நாயகன்  ஆக  லியாம்  நீன்சன்  நடித்திருக்கிறார். பேருக்குத்தான்  நாயகன் . ஆனால்  கெஸ்ட்   ரோல்  தான். அதிக  காட்சிகள்  இல்லை 


நாயகியின்  மகனாக  மேக்ஸ்  நடித்திருக்கிறார். இவருக்கும்  காட்சிகள்  அதிகம்  இல்லை 


 மொத்தம்  நான்கே  கேரக்டர்களை  வைத்து  ஒரு  படம்  பண்ணி  இருப்பது  சுவராஸ்யம் 

ரூசன்  ஸ்டெப்சன்  எடிட்டிங்கில்  படம்   96  நிமிடங்கள் ஓடுகின்றன

மைக்கேல்  டான்  இசை . பல  இடங்களில்  பிஜிஎம்  கலக்கல் ரகம் பால்  சரோசி  தான்  ஒளிப்பதிவு . இரு  நாயகிகளுக்கும்  க்ளோசப்  ஷாட்கள்  பல  வைத்து   தன்  திறமையை  நிரூபித்து  இருக்கிறார் 


  எரின்  கிரெஷிடா  வில்சனின்  திரைக்கதைக்கு  உயிர்  கொடுத்து  இயக்கி  இருப்பவர் அலோம்  எகாயன் 


சபாஷ்  டைரக்டர்


1   வில்லி  நாயகி  சொன்ன்படி   நாயகனை  சந்திக்காமலேயே  வாலி  அஜித்  போல  கற்பனையாக  நாயகியிடம்  கதை  சொல்லும்  காட்சிகள் 


2   வில்லி  நாயகியை  பழி வாங்க  நாயகனை  டார்கெட்  வைக்காமல்  நாயகியின்  மகனை  டார்கெட்  செய்வது  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கைப்புண்ணுக்கு  கண்ணாடி  எதற்கு ? என்று  தமிழில்  ஒரு  பழமொழி  உண்டு . அது  போல  ஆண்களின்  குணம்  தெரியாதா? இதுக்கு  டெஸ்ட்  வேற வைக்கனுமா?  வேலில  போற  ஓணானை  நாமே  வெற்றிலை  பாக்கு  வைத்து  அழைத்த  கதையாக  நாயகி  செய்வது  வம்பை  விலை  கொடுத்து  வாங்குவது  போல  நம்பவே  முடியாத  கான்செப்ட்


2  நாயகனே  ஒரு  ப்ளேபாய். அப்படி  இருக்கும்போது  அவர்  தன்  மனைவியை  சந்தேகப்படுவது  எந்த  விதத்தில்  சரி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு ., ஏ  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எரோட்டிக்  த்ரில்லர்  ரசிகர்கள் , ஆண்கள்  பார்க்கலாம் .   ரேட்டிங்  2.5 / 5 


Chloe
US theatrical release poster
Directed byAtom Egoyan
Screenplay byErin Cressida Wilson
Based onNathalie...
by Anne Fontaine
Produced by
Starring
CinematographyPaul Sarossy
Edited bySusan Shipton
Music byMychael Danna
Production
companies
Distributed by
Release dates
  • September 13, 2009 (TIFF)
  • March 10, 2010 (France)
  • March 26, 2010 (United States and Canada)
Running time
96 minutes[2]
Countries
  • United States
  • Canada
  • France
LanguageEnglish
Budget$10 million[3]
Box office$13.6 million[2]

Saturday, March 09, 2024

RICKY STANICKY (2024) -அமெரிக்கன் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

 


ஆஸ்கார்  அவார்டு  வின்னரான  இயக்குநர்  பீட்டர் ஃபாரெல்லி  இயக்கிய  காமெடி  மெலோ  டிராமா  இது. அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சி  ரீதியாக  இல்லாவிட்டாலும்  வசன  ரீதியாக  சில  பச்சைகள்  உண்டு. அதைத்தவிர்த்திருந்தால்  சிறுவர்களும்  கண்டு  களிக்கும் காமெடிப்படம்  ஆக  ஆகி  இருக்கும். ஜஸ்ட்  மிஸ்டு .7/3/2024 முதல்  அமேசான்  பிரைம்  ஓடி டி  யில்  காணக்கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கும்  உண்டு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நண்பர்கள்  மூன்று  பேர்  சின்ன  வயதில்  இருந்தே  ஊரில்  குறும்புத்தனங்கள்  செய்து  அதற்கு  ஒரு  கற்பனைக்கதாபாத்திரம்  உருவாக்கி  பழியை  அந்த  கேரக்டர்  மீது  போட்டு  இவர்கள் தப்பிப்பவர்கள் 

.ரிக்கி ஸ்டானிக்கி  என்பது  ஒரு  கற்பனை  கேரக்டர். இவர்கள்  மூவரும்  பெரியவர்கள்  ஆகி , திருமணம்  ஆன  பின்பும்  இது தொடர்கிறது.  எங்காவது  ஜாலி  டிரிப்  அடிக்க  வேண்டும்  என  மூன்று  நண்பர்களும்  நினைத்தால்  ரிக்கி  ஸ்டானிக்கி  உடல்  நிலை  சரி  இல்லாமல்  சீரியசாக  இருக்கிறான்  என்று  பொய்  சொல்லி  கிளம்பி  விடுவார்கள் 


ஒரு  கட்டத்தில்  மூன்று  நண்பர்களின்  குடும்பத்தார்  ஒரு  விழாவில்  ரிக்கி  யை  சந்தித்து  ஆக  வேண்டும்  என  முடிவெடுக்கின்றனர். இல்லாத  ஒரு  கேர்க்டரை  எப்படி  உள்ளே  கொண்டு  வர  முடியும் ?> மூன்று  நண்பர்களும்  ஐடியா  பண்றாங்க. அவர்களுக்கு  சமீபத்தில்  அறிமுகம்  ஆன  ஒரு  குடிகாரனை  நடிக்க  வைக்க  முயற்சி  செய்கிறார்கள் 


ரிக்கி  ஸ்டானிக்கி  கேரக்டரில்  அந்த  குடிகாரன்  பிரமாதமாக  பர்ஃபார்மென்ஸ்  செய்கிறான். நண்பர்கள் பணி  புரியும்  கம்பெனி  ஓனரின்  மனதைக்கவர்ந்து  வேலையும் வாங்கி  விடுகிறான். சம்பளம்  நண்பர்கள்  வாங்குவதை  விட  ஒரு  மடங்கு  அதிகம் , இதனால்  பொறாமைப்பட்ட  நண்பர்கள்  அந்த  குடிகாரனை  விரட்ட முடிவெடுக்கிறார்கள் . இதற்குப்பின்  நடந்தது  என்ன? என்பதுதான் மீதி  திரைக்கதை 


ரிக்கி  ஸ்டானிக்கி ஆக , குடிகாரனாக  நாயகன்  ஆக  ஜான்  செனா  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.முக  சாயலில்  ஆர்னால்டு  ஸ்வார்செனேகர்  போல  இருக்கிறார். பிரபலங்கள்  போல  அவர்  செய்யும்  மிமிக்ரிகள்  அருமை. குடும்பத்தினர்    மனம் கவர்வது ,  கம்பெனி  ஓனரின்  தவறுகளை  தைரியமாக  சுட்டிக்காட்டி  பெயர்  பெறுவது  எல்லாமே  ரசிக்க வைக்கிறது 


 மூன்று  நண்பர்களாக  ஜாக்  எஃப்ரான் , ஆண்ட்ரூ , ஜெமாரின்  மூவரும்  இயல்பாக  நடித்திருக்கிறார்கள் நண்பர்களின்  மனைவிகளாக  வரும்  இருவரும்  கச்சிதம். குறிப்பாக  டி வி  ஷோ  நடத்தும் நாயகியின்  நடிப்பு  சிறப்பு 


பேட்ரிக்  ஜான்  விட்டோ  வின்  எடிட்டிங்கில்  படம்  114  ஃநிமிடங்கள்  ஓடுகின்றன, எங்கும்  போர்  அடிக்கவில்லை .  காமெடியாக  முக்கால்வாசி  போன  படம்  க்ளைமாக்ஸில் செண்ட்டிமெண்ட்  சீனுடன்  எமொஷனலாக  முடிகிறது  டாவ்  பால்மரின்  இசையில்    காமெடிக்காட்சிகளுக்கான  பிஜிஎம்  கச்சிதம் ஜான்  பிராலே  ஒளிப்பதிவில்  முத்திரை  பதித்து  இருக்கிறார்


டேவிட்  , ஜேசன்  டெக்கர்  ஆகிய  இருவரும்  எழுதிய  கதைக்கு  8  பேர்  கொண்ட குழு  திரைக்கதை  எழுதி  இருக்கிறது , ஆஸ்கார்  அவார்டு  வின்னரான  இயக்குநர்  பீட்டர் ஃபாரெல்லி   படத்தை  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  நாய்க்குட்டி  கரையோரம்  இருக்கும்  வாத்தை மிரட்ட  வாத்து  மிரளாமல்  நாய்க்குட்டியை  தண்ணீருக்குள்  இழுத்துச்செல்லும்  காட்சி  காமெடி கலகல 


2  கம்பெனி  ஓனர்  மேடையில்  பேசும்போது  அவரையும்  அறியாமல்  செய்யும்  கோணங்கித்தனங்களை  நாயகன்  சுட்டிக்காட்டியதும்  நாயகனின்  நண்பர்களிடம்  இத்தனை  நாட்களாக  இதை ஏன்  நீங்கள்  கவனிக்கலை? என  கேட்பது  காமெடி 


3   ஒரு  வயசான  பாட்டி  நாயகன்  மீது  சந்தேகப்பட்டு  எடக்கு  மடக்கான  கேள்விகளைக்கேட்டு  மடக்குவதும்  படாத  பாடுபட்டு  நாயகன்  எஸ்கேப்  ஆவதும்  கலக்கல் 


4  ஹீரோ  ஆஃப் த  வீக்  டி வி  புரோகிராமுக்கு  நாயகன்  தேர்வாவதும்  அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகளும்  அருமை 

  ரசித்த  வசனங்கள் 


1 குழந்தைங்கன்னாலே  ஜாலி  தான் 


 அபப்டியா? ஆனா  என்  பெற்றோர்  என்னைப்பற்றி  அப்படி  நினைக்கலை  போல 


2    நீ  ஏன்  சட்டை  போடாம  இருக்கே?


  என்  பேபியோட  ஸ்கின்  டூ ஸ்கின்  காண்டாக்ட்ல  இருக்க 

3   அந்த  மாட்டுக்கு கஞ்சா  போடறாங்கனு  நினைக்கறென். கறக்கற  பால்  செம  கிக்  தருது 

4  என்  முழு  பேமண்ட்டையும்  அட்வான்சா  இப்பவே  தரனும், இல்லைன்னா  நான்  நடிக்க  வர  மாட்டேன் 


 இப்போப்பாதி,   வேலை  முடிஞ்சதும்  மீதி


 இந்த  டீலுக்கு  நான்  ஒத்துக்க  மாட்டேன் 


சரி  நாங்க  வேற  ஆளைப்பார்த்துக்கறோம்


 ஓக்கே , எனக்கு  டீல்  பிடிச்சிருக்கு 


5  கேட்கறேனேன்னு  தப்பா  நினைக்காத, நீ  பயங்கரக்குடிகாரன்  தானே?  உன்  பாடி  எப்படி  இவ்ளோ  ஃபிட்டா  இருக்கு ?


போதை மருந்து   எடுத்துக்கறேன்


 சுத்தம், இது  வேறயா? 


6  வாழ்க்கையை  எங்கே  ஆரம்பிச்சாலும்  நீ நினைக்கும்  உயரத்தை  அடைந்து  விடலாம் 

7   என்ன?  உன்  கை  இப்படி  நடுங்குது .  ஏன்?  என  யாராவது  கேட்டா  நான்  சொல்வது  போல  சொல்லி  சமாளி

நிறுத்து  , எனக்கு  டயலாக்ஸ்  சொல்லிக்கொடுத்தா  பிடிக்காது . நானே  சொந்தமா  சொல்லனும் 


8   டியர்,  ஒரு  சந்தோஷமான  விஷயம்  சொல்றேன்,  உன்  முகம்  ஏன்  இஞ்சி  தின்ன  குரங்கு  மாதீரி  ஆகுது ?


 அது  வந்து ,சந்தோசமா  இருக்கும்போது   என்  முகம்  இப்படித்தான்  ஆகும் , ஹிஹி 


9  ரிக்கி  ஒரு  பர்த்டே  கேண்டில்  மாதிரி, எவ்ளோதான்  ஊதினாலும் அணைய  மாட்டேங்கிறான், திரும்பத்திரும்ப  விஸ்வரூபம்  எடுத்து  நிற்கிறான் 


10  நீ  பொய்  சொன்னதை  விட  நீ  ஏன்  பொய்  சொன்னே? எனபதை  என்னால  புரிஞ்சுக்க  முடியல


11   எந்த  ஒரு  தருணத்திலும்  நாம  மாறனும்னு  நினைச்சா  அதுவாகவே  மாறலாம்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  காட்சி  ரீதியாக  யூ , வசன  ரீதியாக  18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  காமெடிக்கதை  தான் , பார்க்கலாம் , ரசிக்கலாம் ., ரேட்டிங்  2.75 / 5


Ricky Stanicky
Release poster
Directed byPeter Farrelly
Written by
  • Jeff Bushell
  • Brian Jarvis
  • James Lee Freeman
  • Peter Farrelly
  • Pete Jones
  • Mike Cerrone
Story by
  • David Occhino
  • Jason Decker
Produced by
Starring
CinematographyJohn Brawley
Edited byPatrick J. Don Vito
Music byDave Palmer
Production
companies
  • Footloose Productions
  • Rocket Science
  • VicScreen
  • Smart Entertainment
  • Blue Rider Media
  • Bright White Light
Distributed byAmazon MGM Studios
Release date
  • March 7, 2024
Running time
113 minutes[1]
CountryUnited States
LanguageEnglish

Friday, March 08, 2024

இந்திராணி முகர்ஜி கதை - புதைக்கப்பட்ட உண்மை (2024) - ஹிந்தி/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா டாக்குமெண்ட்ரி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


2012 ஆம்  ஆண்டு  நிகழந்த  சீனா போரா  கொலை  வழக்கில்  என்ன  நடந்தது ? உண்மைக்குற்றவாளி  யார்?   என்பதை  விவரிக்கும்  வெப்  சீரிஸ்  தான்  இது . இதில்  பங்கு  பெற்றவர்கள்  அனைவருமே   உண்மைக்கதாபாத்திரங்கள் தான் .   என்பது  கூடுதல்  சிறப்பு. ஷாரூக்கான்  உட்பட  பல  ஹிந்தி பிரபலங்கள்  உடன்  நெருக்கமாக இருந்த  மீடியா  பர்சன்கள்  தான்  குற்றம்  சாட்டப்பட்டவர்கள்  என்பதால்  இது  கூடுதல்  கவனம்  பெறுகிறது. 2012ல்  நிகழ்ந்த  கொலை  2015ல் தான்  உலகத்துக்குத்தெரிய  வருகிறது. 2015ல்  கைதான  குற்றவாளி  ஆறரை  வருடங்கள்  சிறை  தண்டனையில்  இருந்து  விட்டு  இப்போது  பெயிலில்  வந்திருக்கிறார். வழக்கு  தீர்ப்பு  இன்னும்  வரவில்லை 

 இந்த  வெப்சீரிஸ்  ரிலீஸ்  ஆக  சிபிஐ  தடை  வாங்கி  இருந்தார்கள் . தீர்ப்பு  வருவதற்கு  முன்  வெப்  சீரிஸ்  ரிலீஸ்  ஆகக்கூடாது  என்றார்கள். அந்தத்தடையை  மீறி  தயாரிப்பு  நிறுவனம்  இதை  போராடி  ரிலீஸ்  செய்து  இருக்கிறார்கள்   


மொத்தம்  நான்கு  எபிசோடுகள் .முதல்  எபிசோடு  50   நிமிடங்கள்  ,அடுத்த  3  எபிசோடுகளும்  40  டூ 45  நிமிடங்கள்   ஆக  மொத்தம்  180  நிமிடங்கள் ,   ஒரே  சிட்டிங்கில்  3  மணி  நேரத்தில்  பார்த்து  விடலாம். விறுவிறுப்பான சுவராஸ்யமான  சம்பவங்கள்  உண்டு .அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை , குடும்பத்துடன்  பார்க்கலாம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


இந்திராணி  முகர்ஜி   ஐ என்  எக்ஸ்  மீடியாவின்  சீஇஓ  ஆகப்பணியாற்றி  வந்தார். அவரது  கணவர்  பீட்டர்  முகர்ஜி  ஸ்டார்  டி வி  யின்  சீஇஓ  ஆக  பணி ஆற்றி  வந்தார். இந்தியாவின்  வலிமை  வாய்ந்த  டாப் 50  பெண்களில்  ஒருவர்  ஆக  இவர்  திகழ்ந்தார். பல  விருதுகளையும்  பெற்றுள்ளார். 


2012 ஆம்  ஆண்டு  இந்திராணி  முகர்ஜி யின்  தங்கை  சீனா  போரா  திடீர்  என  காணாமல்  போகிறார். அவர்  அமெரிக்கா  போய்  இருக்கிறார்  என்று  இந்திராணி  முகர்ஜி  அறிக்கை  விட்ட  பின்  அனைவரும்  அமைதி  ஆகி  விட்டனர் .


ஆனால்  2015  ஆம்  ஆண்டு  வேறு  கேஸ்  விஷய,மாக  ஒரு  டிரைவர்  கைது  செய்யப்பட்டபோது  அவர் அனுமதி  பெறாமல்  ஒரு  துப்பாக்கி  வைத்திருந்தார்.அது  பற்றிய  விசாரனையில்  அந்த  டிரைவர்  இந்திராணி  முகர்ஜியின்  தூண்டுதலின்  பேரில்  சீனா  போராவை  எரித்துக்கொலை  செய்ததாக  ஒப்புதல்  வாக்கு  மூலம்  அளிக்கிறார். உடனே  இந்திராணி  முகர்ஜி  கைது  செய்யப்படுகிறார். சீனா  போரா  இந்திராணி  முகர்ஜியின்  தங்கை  அல்ல , மகள்  தான்  என்ற  உண்மை  தெரிய  வருகிறது 


இந்திராணி  முகர்ஜிkகு  14  வயதாக  இருக்கும்போது  அவரது  சொந்தத்தந்தையால்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாகிறார். அம்மாவிடம்  சொன்னபோது  வேறு  யாரிடமும்  சொல்லாதே  என  எச்சரிக்கை  விடுக்கப்பட்டு  வேறு  உறவினர்  வீட்டுக்கு  அனுப்பி  வைக்கப்படுகிறார். இரண்டு  வருடங்கள்  கழித்து  மீண்டுய்  அம்மா, அப்பா  இருக்கும்  வீட்டுக்கு  வருகிறார். அவரது  16  வது  வயதில்  மீண்டும்  தன்  சொந்த  அப்பாவால்   பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாகிறார். . 


 இந்த  முறை    இந்திராணி  முகர்ஜி  கர்ப்பம்  ஆகிறார். நான்கு  மாதங்கள்  ஆகி  விட்டதால்  கருவைக்கலைக்க  முடியாது  என  டாக்டர்  சொல்லி  விட்டதால்  குழந்தை  பெற்றுக்கொள்கிறார். அந்தக்குழந்தை  தான்  சீனா  போரா 


சித்தார்த்  தாஸ்  என்பவரை  இந்திராணி  முகர்ஜிk  சந்திக்கிறார். இருவருக்கும்  காதல். இவர்கள்  திருமணம்  செய்து  கொள்கிறார்கள் . 1986ல் திருமணம்  ந்டக்கிறது . 1988ல் மைக்கேல்  என்ற  மகன்  பிறக்கிறான். 1990ல்  இந்திராணி  முகர்ஜிk  தன்  இரண்டு  குழந்தைகளையும்  தன்  பெற்றோர்  பொறுப்பில்  விட்டு  விட்டு  கொல்கத்தா  செல்கிறார். கம்ப்யூட்டர்  படிப்பு  படிக்கிறார். 1993ல்  சஞ்சீவ்  கண்னா  என்பவரை  சந்திக்கிறார். அவரைத்திருமணம்  செய்து  கொள்கிறார். விதி  என்ற  மகள் 1998ல்  அவர்களுக்கு  பிறக்கிறது . 2001 ல்   அவர்கள்  மும்பைக்கு  குடி  போகிறார்கள் .


2002  ஆம்  ஆண்டு  இந்திராணி  முகர்ஜிk  பீட்டர்  முகர்ஜியை  சந்திக்கிறார். அவரை  மூன்றாவது  கணவராக  திருமணம்  செய்து  கொள்கிறார்.  மகளான  விதி யை  பீட்டர்  முகர்ஜி  தத்து  எடுத்துக்கொள்கிறார்


தந்து  பெற்றோர்ள்  வளர்ப்பில்  இருக்கும்  தன்  முதல்  மகள்  ஆன  சீனா  போரா , மகன் மைக்கேல்  இருவரையும்  தன்  இருப்பிடத்திற்கு  வரவழைக்கிறார்.  பொது  இடங்களில்  தன்னை  அம்மா  என்று  அழைக்கக்கூடாது , அக்கா  என்று  தான்  சொல்ல  வேண்டும்  என  நிபந்தனை  விதிக்கிறார்வேறு  வழி  இன்றி  அவர்கள்  அதற்கு  ஒத்துக்கொள்கின்றனர். இருவருக்கும்  வசதியான  வாழ்க்கையை  அளிக்கிறார்


 இந்திராணி  முகர்ஜி  யின்  மூன்றாவது  கணவர்  ஆன  பீட்டர்  முகர்ஜியின்  முதல்  மனைவிக்குப்பிறந்த  ராகுல்  என்பவருடன்  சீனா  போராவுக்குப்பழக்கம்  ஏற்படுகிறது .  காதல்  ஆக  மலர்கிறது . இந்தக்காதலுக்கு  பீட்டர்  முகர்ஜி  சம்மதம்  சொல்கிறார். ஆனால்  இந்திராணி  முகர்ஜிக்கு  இது  பிடிக்க  வில்லை . காரணம்  நேரடியாக  இல்லாவிட்டாலும்  சுற்றி  வளைத்து  ராகுல் , சீனா  போரா  இருவருக்கும்  அண்ணன்   தங்கை  உறவு  தான்  ஆகிறது


ஆனால்  அவரது  கண்டிப்பை  மீறி   இருவரும்  காதலிக்கிறார்கள் . சீனா போரா  பணம்  கேட்டு  தன்  அம்மாவை  அடிக்கடி  மிரட்டி  வருகிறார். தராவிட்டால்  தான்  தங்கை  அல்ல  , மகள்  தான்  என்ற  உண்மையை  சொல்லி  விடுவேன்  என்கிறார்


 இதனால்  திட்டம்  போட்டு  இந்திராணி  முகர்ஜி  தன்  கணவர்  பீட்டர்  முகர்ஜி  உடன்  இணைந்து  சீனா  போராவை  கொலை  செய்கிறார்கள் 


சீனா  போராவின்  செல்  ஃபோனை  இந்திராணி  முகர்ஜி  வைத்திருந்து  அதன்  மூலம்  ராகுலுக்கு  பிரேக்கப்  மெசேஜ்  அனுப்பி  சமாளிக்கிறார்.   சீனாபோராவின்  பாஸ்போர்ட்டே  தன்னிடம்  தான்  இருக்கிறது . பின்  எப்படி  அவர்  அமெரிக்கா  சென்று  இருக்க  முடியும்  ? என  ராகுலுக்கு  சந்தேகம். என்ன  காரணத்துக்காக  பிரேக்கப்  என்றும்  அவருக்குக்குழப்பம்.  போலீசில்  புகார்  அளித்திருக்கிறார். தன்  செல்வாக்கால்  லோக்கல்  போலீஸ்  ஸ்டேஷன்  பிரச்சனைகளை  இந்திராணி  முகர்ஜி  சமாளித்து  இருக்கிறார்


இதில்  ஆர்ட்டிஸ்ட்  பர்ஃபார்மென்ஸ்  என்று  எதையும்  , யாரையும்  சொல்ல  முடியாது . எல்லாருமே  நிஜ  கேரக்டர்கள் . இந்திராணி  முகர்ஜி  வில்லாதி  வில்லி  ஆக  இருந்திருக்கிறார்


   வெப்  சீரிஸ்  சித்தரிப்பின்  படி  அவருக்கு  மூன்று  கணவர்கள்  என்று   சொல்லப்பட்டாலும்  அவர்  சின்ன  வயதில்    இரு  வேறு  நபர்களுடன்  ஓடிப்போனவர்  என  விக்கி  பீடியா  சொல்கிறது . ஆக  மொத்தம் லீகல்  ஆக  மூன்று  துணைகள் , இல்லீகல்  ஆக  இரு  துணைகள்   ஆக  மொத்தம்  ஐந்து  துணைகள் 


தன்  அப்பா  தான்  தன்னை  பாலியல்  வன்  கொடுமைக்கு  ஆளாக்கினார்  என்பது  நிஜமான  சம்பவமா? அல்லது  தன்  மேல்  இரக்கம்  வர  இந்திராணி  முகர்ஜி  அடித்து  விட்ட  கட்டுக்கதையா?என்பது  தெரிய வில்லை .டி என்  ஏ  டெஸ்ட்  நடத்தினால்  தான்  உண்மை  வெளியே  வரும், ஆனால்  சீனா  போரா  கொலைக்கேசுக்கு  அவரது  பயலாஜிக்கல்  ஃபாதர்  யார்  என்பது  அவசியம்  இல்லாததால்  அந்த  சோதனை  நடக்கவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  இந்த  கேஸ்  முழுக்க்   முழுக்க  இந்திராணி  முகர்ஜி  சார்பாகவே காட்டப்படுகிறது . அவரது  வக்கீல்  பேட்டி  , இந்திராணி  முகர்ஜி  பேட்டி , மக்ன் , மக்ள்  பேட்டி  என  காட்டப்படுகிறது . மிக  சுவராஸ்யமாக  இருந்தது 


2   போலீஸ்  கமிஷனர்  இந்திராணி  முகர்ஜிக்கு  ஆதர்வாக  செயல்பட்டதால்  பணி  மாற்றம்  பெற்றது , ஐ என்  எக்ஸ்  மீடியா  ஷேர்களை  விற்று  இந்திராணி  முகர்ஜி  வெளியேறியது  போன்ற  பரபரப்பான  உண்மைகள்  சுவராஸ்யம்


  ரசித்த  வசனங்கள் 


1  இந்திராணி  முகர்ஜிk - என் அழகு  எப்படி  இருந்ததுன்னா  ஆண்கள்  என்னைத்திரும்பிப்பார்க்கும்  அளவிற்கு , பெண்கள்  இவளிடம்  என்ன  இருக்கிறது ? என  மயங்கும்  அளவுக்கு 

2  இந்திராணி  முகர்ஜி யின் மகன் மைக்கேல் = என்  அம்மாவிடம்  வசதியான  வாழ்க்கை  வேண்டும், ஆடம்பரமான  வாழ்க்கை  வேண்டும்  என  நாங்கள் எதிர்பார்க்கலை . எல்லார்  முன்னும்  அன்பாக  அம்மா  என்று  அழைக்கும்  உரிமை தான்  கேட்டோம், ஆனால்   கடைசி  வரை  அதை  அவர்  தரவில்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஆட்டோ  டிரைவரை  இந்திராணி  முகர்ஜி  நம்பியது எப்படி ?  என்  தெரியவில்லை .காரியம்  முடிந்ததும்  அவனை  வேறு  ஊருக்கு  அனுப்பி  இருக்கலாம், அல்லது  வேறு  உலகத்துக்கே  அனுப்பி  இருக்கலாம். இவ்ளவ்  பெரிய  சாட்சியை  எப்படி  விட்டு  வைத்தார்கள் ? 

2   சீனா  போரா  எதற்காக  பணம்  கேட்டு  அம்மாவை   மிரட்ட  வேண்டும் ? ராகுலிடம்  வசதி  இருக்கு , ராகுலின்  அப்பாவிடம்  இல்லாத  பணமா? 


3  இந்த  காலகட்டத்தில் டைவர்ஸ்  கேஸ்  நடந்து  டைவர்ஸ்  கிடைக்க  4  டூ 6  வருடங்கள்  ஆகின்றன. இந்திராணி  முகர்ஜிக்கு  மட்டும்  டக்  டக்  என  டைவர்ஸ்  எப்படிக்கிடைத்தது ? 


4  இந்திராணி  முகர்ஜி யின்  இரண்டாவது  கணவரும்  இந்தக்கொலைக்கு  உடந்தை  என்கிறார்கள் , மூன்றாவது  கணவரும்  உடந்தை  என்கிறார்கள் . ஆனால்  முதல்  கணவர்  இந்த  கேஸ்  பற்றி  எந்தக்கருத்தும்  சொல்லவில்லை , அது  ஏன் ? அவர்தான்  சீனா  போராவின்  அப்பா  ( என  விக்கி  பீடியா  சொல்கிறது ) 

5   இந்திராணி முகர்ஜியின்  மகன்  மைக்கேலை  ஒரு  மன  நல  மருத்துவமனையில்  அடைத்து  போதை  மருந்து  செலுத்தி  கொடுமைப்படுத்தி  இருக்கிறார்கள் . ஆனால்  அது  தனி  கேசாக  ஃபைல்  செய்யப்படவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுவராஸ்யமான  சம்பவங்கள் , ரசிக்கும்படி  இருக்கிறது . பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5 



Thursday, March 07, 2024

வளையம் (2020) -தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


சம்சாரம்  மிஸ்சிங்  என  போலீஸ்  ஸ்டேஷனில்  கேஸ்  கொடுத்தாலே  போலீசின்  முதல்  சந்தேகப்பார்வை  புருசன்  மேல்  தான்  விழும். அந்த  மாதிரி  மிஸ்  ஆன  சொந்த  சம்சாரத்தைத்தேடி   புருசனே  துப்பறியக்களம்  இறங்கும்  கதை  தான்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பெற்றோர்  நிச்சயத்த  பெண்ணை  பெண்  பார்த்து திருமணம்  செய்து  கொள்கிறான். வாழ்க்கை  சந்தோசமாகப்போய்க்கொண்டு  இருக்கிறது .  மனைவிக்கு  இரவு  நேரங்களில்  யாரோ  அடிக்கடி மெசேஜ்  அனுப்புவதும், அவருக்கு  மனைவி  பதில்  அனுப்புவதும்  நாயகனுக்குப்பிடிக்கவில்லை . இது  சம்பந்தமாக  இருவருக்கும்  வாக்குவாதம் நடக்கிறது. அன்று  இரவு  மனைவி  மிஸ்  ஆகிறாள்  

 நாயகன் போலிஸ்  ஸ்டேஷனில்  புகார்  கொடுக்கிறான். பிறகு  பர்சனல்  ஆகவே  தன்  மனைவியின்   காலேஜ்  கால  நண்பர்களை  விசாரிக்கிறான்.காலேஜ்  படிக்கும்போது     தன்  மனைவியை  ஒருதலையாகக்காதலித்த  தறுதலை  ஒருவன் ,  காதல்  பிரப்போஸ்  செய்தும்  மறுத்து  விட்டாள்  என்ற  கடுப்பில்  இருக்கும்  ஒருவன் , அவள்  மேல்  ஆசைப்பட்ட  ஒருவன்  என  மூன்று  பேர்  தன்  மனைவியின்  வாழ்வில்  குறுக்கிட்டிருக்கலாம்  என  நாயகன்  சந்தேகிக்கிறான். இதற்குப்பின்  நாயகன்  துப்பு  துலக்கி  உண்மையை  எப்படிக்கண்டுபிடிக்கிறான்  ?  என்பதே  மீதிக்கதை 


 நாயகன்  ஆக லக்ஸ்  சடலவாடா  என்பவர்  நடித்திருக்கிறார். பொம்மை  போன்ற  முகம், ஆனால்  சமாளித்து  நடித்திருக்கிறார்.  நாயகி  ஆக  டிகங்கானா   சூர்ய வம்சி , அதிக  வாய்ப்பில்லை , வந்த வரை  ஓக்கே  ரகம் 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வருபவர்  தான்  நாயகனை  விட  நன்றாக  நடித்திருப்பவர், அனுபவம்  பேசுகிறது 


எடிட்டிங்க்  உபேந்திரா.140 நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். சேகர்  சந்திரா  தான்  இசை . பாடல்கள்  சுமார்  ரகம்,,  இசை  , பின்னணி  இசை  அதை  விடவே  சுமார. ராமகிருஷ்ணாவின்  ஒளிப்பதிவு  பாஸ்  மார்க்  தரத்தில்  தான்  இருக்கிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ரமேஷ்  கடுமுலா


சபாஷ்  டைரக்டர்


1  வேறு  ஒரு  கேசுக்காக  லாக்கப்பில்  அடைக்கப்பட்ட  தாடிக்காரன்  தான்  குற்றவாளி  என்பதை  வாட்ச்மேன்  சாட்சி  சொன்னதும்  போலீஸ்  ஸ்டேசனில்  நடக்கும்  சம்பவம்  அட்டகாசம் 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட் 


  ரசித்த  வசனங்கள் 

1    எதிர்  ஃபிளாட்டில்  காணாமப்போன பெண்  பற்றி  விசாரிக்கனும்


 சார், அதை  என்  மனைவி  கிட்டேக்கேட்டா  எப்படி  அவளுக்குத்தெரியும் ?பொண்ணுங்களுக்கு  இதைப்பற்றி  என்ன  தெரியும் ?


 அப்போ  வீட்டில்  ஆம்பளைங்க  யாராவது  இருந்தாக்கூப்பிடுங்க 


2 உன்  ஆக்டிங்  நல்லாருந்ததுனு  என்  ஃபிரண்ட்ஸ்  எல்லாரும்  சொன்னாங்க, ஆனா  எனக்கென்னவோ  அது  சரியாப்படலை, ஒரு ஏஞ்சல்  ஏஞ்சலா  நடிக்கறதுல  என்ன  கஷ்டம்  இருந்துடப்போகுது ? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  பக்கத்து  வீட்டு  ஆள் போலீஸ்  கிட்டே  தான்  சினிமாவுக்குப்போய்  இருந்த்தா  சொல்லும்போது  என்ன  படம்?னு போலீஸ்  ஆஃபீசர்  கேட்கவே  இல்லை . பல  படங்களில்  குற்றவாளி  இப்படி   சமாளிக்கும்போது  என்ன படம் ? கதை? என்னா?னு  கேட்டு  மடக்குவாங்க (  சமீபத்தில்  வந்த  போர்த்தொழில்  படத்தில்  கூட  ஒரு  சீன்  இருக்கும்) 


2போலீஸ்  ஆஃபீசர்  வாட்ச்மேனிடம்  குற்றவாளியை அடையாளம்  காட்ட முடியுமா? எனக்கேட்டு  ஒரு ஸ்டாம்ப்  சைஸ்  ஃபோட்டோவைக்காட்டுகிறார். வாட்ச் மேன் 10  அடி  தொலைவில்  நிற்கிறான். அவ்ளவ்  தொலைவில்  இருக்கும்போது  அவ்வளவு  சின்ன  ஃபோட்டோ  அவன்  கண்களுக்கு  எப்படித்தெரியும்?

3  ஒரு  விபத்து  போலீஸ்  ஸ்டேஷன்  வாசலில்  ந்டக்கிறது ,அடிபட்டவனை  செக்  பண்ணிப்பார்த்து  போலீஸ்  ஆஃபீசர்  ஆம்புலன்சுக்கு  ஃபோன்  பண்ணுங்க  என  சொன்ன பின்  தான்  ஃபோனே   பண்றாங்க . டக்னு  பண்ணி  இருக்க வேண்டாமா? 

4  வில்லன்  க்ளைமாக்ஸ்ல  அழுதுட்டு  இருக்கான். நாயகி  வில்லனிடம்  நீ  இந்த  அளவு  என்  மேல  லவ்  வெச்சிருப்பேன்னு  எனக்கு  அப்போ  தெரியாதுனு  சொல்லி  அழுதுட்டு  இருக்கா. சொதப்பல்  சீன்


5 வில்லன்  போலீசை  திசை  திருப்ப  நாயகியை  மயக்க  நிலைக்குக்கொண்டு  போன பின்  நாயகியின்  ஃபோனில்  இருந்து  வேறு  ஒரு   நபருக்கு  ஒரு  டம்மி  மெசேஜ்  அனுப்புகிறான். நாயகியின்  ஃபோன்  லாக்  பேட்டர்ன்  வில்லனுக்கு  எப்படித்தெரிந்தது ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொழுது  போகலைன்னா  பார்க்கலாம்,  சுமார்  ரகம்  தான் . ரேட்டிங்  1.75 / 5 


Valayam
Release poster
Directed byRamesh Kadumula
Written byRamesh Kadumula
Produced byLaksh Chadalavada
Starring
CinematographyRamakrishna
Edited byUpendra
Music byShekar Chandra
Production
company
Sri Thirumala Tirupati Venkateswara Creations
Release date
  • 21 February 2020
Running time
140 minutes
CountryIndia
LanguageTelugu

Wednesday, March 06, 2024

சிங்கப்பூர் சலூன் (2024) - தமிழ் -சினிமா விமர்சனம் ( மோட்டிவேஷனல் டிராமா ) @ அமேசான் பிரைம்

   


 2011 ல்  ஜீவா  நடிப்பில்  வெளியான  ரவுத்திரம்  தான்  இயக்குநர்  கோகுல்  இயக்கத்தில்  வந்த  முதல்  படம் பரபரப்பாகப்பேசப்பட்டது , ஆக்சன்  மசாலா. 2012ல் .விஜய்சேதுபதி \நடிப்பில்  வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காமெடி  ஜர்னரில்   உருவானது .2016ல்  கார்த்தி யின்   நடிப்பில் வெளிவந்த  காஷ்மோரா  ஹாரர்  த்ரில்லர்  ஆக  அமைந்தது .2019ல்  வெளியான  மலையாளப்படமான  ஹெலன்  படத்தின்  ரீமேக்காக  இவர்  உருவாக்கிய   அன்பிற்கினியாள் 2021 ல் ரிலீஸ்  ஆகி  வரவேற்பைப்பெற்றாலும்  வசூல்  ரீதியாகப்போகவில்லை 


தனது  ஒவ்வொரு  படத்தையும்  வேவ்வேறு  ஜ்ர்னரில்  உருவாக்கும்  இவர்  இம்முறை  மோட்டிவேஷனல்  டிராமா  ஜர்னரில்  இதை  உருவாக்கி  உள்ளார். கலவையான  விமர்சனங்களைப்பெற்றாலும்  வசூல் ரீதியாக  இது  ஒரு  வெற்றிப்படமே 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்    சிறு  வயதில்  இருந்தே  அவர்கள்  சொந்த  ஊரில் சிங்கப்பூர்  சலூன்  வைத்திருந்த  சிகை  அலங்கார  நிபுணர்  ஒருவருக்கு  பரம  விசிறி. அவரைப்போலவே  தானும்  ஒரு    புகழ்  பெற்ற  ஹேர்   டிரஸ்சராக    உருவாக  வேண்டும்  என்பதுதான்  அவரது  லட்சியம். பொதுவாக  பெற்றோர்  தங்கள்  மகன்  ஒரு டாக்டர்  ஆக  இஞ்சினியர்  ஆக  ஆசைப்படுவார்களே  தவிர  இந்த  மாதிரி  வேலைக்கு  எல்லாம்  அனுப்ப  மாட்டார்கள்  . அது  அவர்கள்  பரம்பரைத்தொழிலும்  கிடையாது . நாயகன்  தன்  கனவுப்  பணியை  நிறைவேற்றினரா?  இல்லையா? என்பதுதான்  படத்தின்  மொத்தக்கதையே


நாயகன்  ஆக  அர்  ஜே  பாலாஜி  கச்சிதமாக  நடித்திருக்கிறார். வழக்கமாக  அவர்  பேசும்  லொட  லொட  பேச்சு  இதில்  மிஸ்சிங்  என்றாலும் ரசிக்க  முடிகிறது


நாயகனின்  மனைவியாக  மீனாட்சி  சவுத்ரி  அழகான  பொம்மை  போல  வந்து  போகிறார். அதிக  வாய்ப்பில்லை . நாயகனின்  மாமனார் ஆக  சத்யராஜ் , வித்தியாசமான  காமெடி  ரோல். வெளுத்து  வாங்கி  இருக்கிறார். பேங்க்  பேலன்ஸ்  4  கோடி  இருந்தும்  கஞ்சப்பிசினாரி  ஆக  இருக்கும்  மாந்தோப்புக்கிளியே  சுருளிராஜன்  ரோல்  அவருக்கு 


நாயகனின்  இன்ஸ்பிரேஷன் சிகை  அலங்கார  நிபுணர்  ஆக  லால்  திறம் பட  நடித்திருக்கிறார். ஃபிளாஸ்பேக் காட்சிகளில்  நாயகனுடன்  ஆன  பாண்டிங்  நன்கு  சொல்லப்பட்டிருக்கிறது 


ரோபோசங்கர்  நாயகனின்  சகலையாக  வந்து  கலகலப்பு  ஊட்டுகிறார். 


ஜான்  விஜய் , தலைவாசல்  விஜய் , இமான்  அண்னாச்சி  உட்பட  ஏராளமான  நட்சத்திர  பட்டாளங்கள் . இத்தனை  பேர்  கால்ஷீட்டையும்  வாங்கி   நடிக்க  வைப்பது  சிரமமான  விஷயமே 


விவேக்-மெர்வின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் . ஜாவேத்  ரியாசின்  பின்னணி  இசை  சிறப்பு 


ஆர்  கே  செல்வா  வின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது . எஸ்  சுகுமாரின்  ஒளிப்பதிவு  கச்சிதம் 


 திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர்  கோகுல் 

சபாஷ்  டைரக்டர்


1  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  சிறுவனுக்கு  சுன்னத் நடக்கும் காட்சிகள்  கலகலப்பு .  அந்தக்காட்சியில்  பலியாடு  போல  சிறுவன்  செல்வதை  கவுண்டமணி  காமெடி  டிராக்கின்  தீம்  இசையை  ,மேட்ச்  செய்தது  சிறப்பு 


2   ஸ்கூலில்  லேட்டாக  வரும்  மாணவர்கள் , ஹோம் ஒர்க்  செய்யாத  மாணவர்களுக்கு  தண்டனையாக  அவர்களை  அவமானப்படுத்துவதாக  நினைத்து  மாணவிகள்  அருகே  அமர  வைக்க  ஆசிரியர்  உத்தரவு  போடுவதும்  கொண்டாட்டம்  ஆன  மாணவர்கள்  தினசரி  ஒரு  தப்பு  செய்து  மாணவிகள்  அருகே  அமர்வதும்  கலக்கல்  காமெடி .,நாம்  படிக்கும்போது  இந்த  டெக்னிக்  தெரியாமல்  வளர்ந்து  விட்டோமே  என  எண்ண  வைக்கிறது 


3  கஞ்சப்பிசினாரி  மாமனாருக்கு  சரக்கு  வாங்கிக்கொடுத்து  3  கோடி  ரூபாய்  செக்கில்  சைன்  வாங்கும்  காட்சி  கொஞ்சம்  நீளம்  என்றாலும்   ரசிக்க  வைத்தது


  ரசித்த  வசனங்கள் 


1   எக்ஸ்பயரி  ஆகப்போறவனுக்கு  எக்ஸ்பயரி  மாத்திரையா? 


2  ஒரு  அழகான  பெண்ணோட  அப்பா  சிரிச்சு  இப்போதான்  பார்க்கிறேன்


3   தொழிலை  தொழிலாகப்பார்க்காமல்  கலையாகப்பார்க்கனும்


4   எதுவும்  ப்ரம்பரைத்தொழில்  கிடையாது. யாருக்கு  என்ன  பிடிக்குதோ  அந்தத்தொழில்  செய்யலாம்


5  படிப்பு  வர்லைன்னா  இவன்  சிரைக்கத்தான்  லாயக்குனு  சொல்லிடக்கூடாது  என்பதற்காகவே   படிச்சேன் 


6  உன்  வேலையில்  நீ  சின்சியராக  இரு, மத்ததெல்லாம்  உன்னைத்தேடி வரும்


7  மத்தவங்களைத்திருத்தற  வேலை  எத்தனை  பேருக்குக்கிடைக்கும் ?


8   அடிக்கறதே  தண்ணி .. அதுக்கு  மிக்சிங்க்கு  எதுக்கு  தனியா  ஒரு  தண்ணி ?

9   எப்பவும்  சைடு  சிஷ்  சாப்பிடற  மசங்களைக்கூட  வெச்சுக்கவே  கூடாது 


10  சக்சஸ்  ஈஸ்  நாட்  ஏன்  ஆப்சன், தட்  ஈஸ்  மஸ்ட் 


11   என்னை  மாதிரி ஆளுங்க  மேலே  வரனும்னா  யாராவது  என்னை  நம்பனும்


12   நாம  கீழே  இருக்கும்  வரை  தான்  கொண்டாடுவாங்க , மேலே  போய்ட்டா  அதை  சகிச்சுக்க  மாட்டாங்க 


13  ஒருத்தன்  நினைச்சா  தன்  திறமையை  ஒரு  லேண்ட்  மார்க்  ஆக  மாற்ற  முடியும் 


14  கோயிலுக்கு  எதிரே  இருட்டுக்கடை  அல்வா  கடை  இருக்குனு  முதல்ல  சொன்னாங்க , இப்போ இருட்டுக்கடை  அல்வா  கடை  க்கு  எதிரே  கோயில்  இருக்குனு  சொல்றாங்க ., இதுதான்  வளர்ச்சி 


15  ஒரு  ஹேர்  டிரஸ்சர்  நினைச்சா ஒருவரை  இந்த  உலகம்  பார்க்கும்  பார்வையிலிருந்தே  மாற்ற  முடியும் 

16  அடையாளத்தை  யாரும்  விற்கவும்  மாட்டாங்க , இழக்கவும்  மாட்டாங்க 


17  எப்பவும்  நாமே  ஜெயிச்சுட்டு  இருக்க  முடியாது . நேத்து  நாம  ஜெயிச்சோம், இன்னைக்கு  இவன்  ஜெயிக்க்றான் , நாளை  அவன்  ஜெயிப்பான் ,

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நகை  கடனாகக்கொடுக்கும் ந்பர்  நைட்    டைமில்  ஏன்  கொடுக்கனும்? காலைல  தரலாமே?  பேங்க்கில் அடமானம்  தானே  வைக்கப்போகிறார்?


2  நைட்  டைமில்  பைக்  கவரில்  அசால்ட்டாக 5 லட்சம்  ரூ  மதிப்புள்ள  நகைகளை  வைத்துக்கொண்டு  திருட்டுக்கொடுக்கும்  காட்சி  நம்ப  முடியவில்லை


3   மரத்தை  வெட்டும்போது  பல  கிளிகள்  இறப்பது  போல  சீன். பொதுவாக  மரத்த  வெட்டும்  அதிர்வில்  எல்லாக்கிளிகளும்  பறந்து  தப்பிவிடும்.  மரம்  கீழே  விழும்  வரை  கிளிகள்  வெயிட்  பண்ணிட்டு இருக்குமா? 


4  பஞ்சு  மிட்டாய்  சாப்பிடும்  சீன்  வரும்போது  அபாய  அறிவிப்பு  போட்டிருக்கலாம்


5  சுன்னத்  காமெடி  டிராக் கல  கல  தான், ஆனால்  கொஞ்சம்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுய  தொழில்  செய்பவர்களுக்கு மோட்டிவேஷன்  தரக்கூடிய  படம்  தான், பார்க்கலாம், ரேட்டிங்  2.5 / 5 


சிங்கப்பூர் சலூன்
இயக்கம்கோகுல்
எழுதியவர்கோகுல்
உற்பத்திஐசரி கே. கணேஷ்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஎம்.சுகுமார்
திருத்தியவர்செல்வா ஆர்.கே
இசைபாடல்கள்:
விவேக்–மெர்வின்
ஸ்கோர்:
ஜாவேத் ரியாஸ்
தயாரிப்பு
நிறுவனம்
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
மூலம் விநியோகிக்கப்பட்டதுரெட் ஜெயண்ட் திரைப்படங்கள்
வெளிவரும் தேதி
  • 25 ஜனவரி 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்