Monday, January 22, 2024

THOLVI F.C - தோல்வி எஃப் . சி (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்


ஒரு  சாதாரண  கதைக்கருவை எடுத்துக்கொண்டு  நல்ல  திரைக்கதை  அமைத்து  வெற்றி  பெறுவது கேரள இயக்குநர்களுக்குக் கைவந்த  கலை . லேட்டஸ்ட்டாக  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  இந்த  ஃபேமிலி  காமெடி  மெலோ  டிராமா  தியேட்டர்களில்  வெற்றிக்கொடி   நாட்டி  இப்போது  ஓடிடி  யிலும்  ஹிட்  ஆகி  இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  வெட்டாஃபீஸ் . மனைவி  ஒரு  அரசாங்க  ஊழியர். இரு  மகன்கள்  உண்டு . ஒருவன்  எஞ்சினியருக்குப்படித்து  விட்டு  வேலைக்குப்போகாமல் ஹை  கிளாஸ்  டீக்கடை ./ காஃபி ஷாப்  வைத்திருக்கிறான், இன்னொரு  மகன்  சிறுவர்களுக்கான  ஃபுட்  பால்  டீம்  கோச் ஆக  இருக்கிறான். இதுவரை  எந்த  மேட்சிலும்  ஜெயித்ததில்லை 


நாயகன்  தன்  மனைவியின்  நீண்ட  நாள்  சேமிப்பான  இரண்டரை   ல்ட்ச  ரூபாய்  பணத்தை  க்ரிப்டோ கரன்சியில்  முதலிடு  செய்து  பணத்தை  இழக்கிறான். அதனால்  கடுப்பான  மனைவி  அவனை  வீட்டை  விட்டு  துரத்தி  விடுகிறாள் 


 ஏற்கனவே  முதல்  மகன் படித்த  படிப்புக்குத்தக்க  வேலை  செய்யாமல்  டீக்க்டை  வைத்ததால்  கடுப்பாகி  அவனை  வீட்டை  விட்டு  துரத்தியவர்தான்  நாயகன் . இப்போது  வேறு  வழி  இல்லாமல்   அவன்  கடையிலேயே  போய்  வேலைக்கு  சேர்ந்து  அங்கேயே  தங்குகிறான்


முதல்  மகனுக்கு  ஒரு  காதலி  உண்டு . இரண்டாவது  மகனுக்கு  அவனது  முன்னாள்  வகுப்புத்தோழி  இப்போது  டைவர்ஸ்  ஆனவளாக  சந்திக்கிறாள் .


 இந்த  இரண்டு  மகன்களின்  காதல்  என்ன  ஆனது ? நாயகனின்  மனைவி  மீண்டும்  அவனை  வீட்டுக்குள்  சேர்த்தாரா? என்பதை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் 


 நாயகன்  ஆக ஷரஃப்யுதீன்  காமெடியனாக  நடித்திருக்கிறார்.. பல  இடங்களில்  சிரிப்பு  மூட்டுகிறார்

அவரது  மனவி  ஆக  ஆஷா  மடத்தில்  ஸ்ரீகாந்த் ( பெஅய்ரே  அதுதான் ) பாந்தமான  நடிப்பு 


 முதல்;  மகனாக  ஜானி  ஆண்டனி  கச்சிதமான  நடிப்பு . ஃபுட்  பால்  கோச்சர்  ஆக  இரண்டாவது  மகன்  ஆக  இயக்குநர்  ஜார்ஜ்  கோரா  இயல்பாக  நடித்திருக்கிறார்


அவருக்கு  ஜோடியாக  மரியம்  கேரக்டரில்  மீனாட்சி   செம  க்யூட்  ஆன  முக  பாவனைகளுடன்  கோல் போடுகிறார்

ஃபுட்  பால்  டீம்  பிளேயர்ஸாக  வரும்  அனைத்து  சிறுவர்  சிறுமிகளும்  கச்சிதமாக நடித்திருக்கிண்றனர்


120  நிமிடங்கள்  மட்டும்  ஓடும்படி  படத்தை  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  லால்  கிருஷ்ணா 


விஷ்ணு  வர்மா , கார்த்திக், கிருஷ்ணன், சிஜின்  தாமஸ்  என  நால்வர்  இசை  அமைத்திருக்கிறார்கள் . இரண்டு  பாடல்கள்  ஹிட் , பின்னணி  இசையில்    பல  இடங்களில்  கை தட்டல்களை  அள்ளுகிறார்கள் 


சியாமப்பிரகாஷ் , எம் எஸ்  என  இருவ்ர்  ஒளிப்பதிவு  செய்து  இருக்கிறார்கள் . படத்தில் வரும்  மூன்று  முக்கியப்பெண்  கதாபாத்திரங்களை  அழகாகவும், கண்ணிய  உடையிலும்  காட்டியமைக்கு  ஒரு  ஷொட்டு


திரைக்கதை  எழுதி  இயக்கி  நடித்திருப்பவர்   ஜார்ஜ் கோரா


சபாஷ்  டைரக்டர் ( ஜார்ஜ் கோரா) 


1  சின்னப்பசங்களுக்கான  ஃபுட்  பால்  டீமில்  கோச்சராக  இருக்கும்   நபர்  புதிதாக  சேர்ந்த  குண்டுப்பையனிடம்  “ நீ  கோல்  கீப்பர். அவன்  கோல் போட  வருவான், நீ அதற்கு   இடம் கொடுக்கக்கூடாது  என  சொன்னதும்  அந்தப்பையன்  ஆக்சன்  ஹீரோ  மாதிரி  நடந்து  கோல்  போட  வருபவனை  போட்டு  சாத்துவது  செம  காமெடி 


2  நாயகனின்  இரண்டாம்  மகன்  ஒவ்வொரு  முறை தன்  தோழியிடம்  பேசும்போதும்  உள்ளூர  அதை  ரசித்தாலும்  நீ  என்னை  ஃபிளர்ட்டிங்  பண்றியா? என  கேட்கும்  காட்சிகள்  கலக்கல் 


3   நாயகனி ன்  முதல்  மகன்  தன்  காதலியிடம்  எப்போதும்  வீடியோ  சேட்  செய்யும்போதும்  ஒரு  சண்டையில்  முடிவதும், காதலி  அவனை  சமாதானப்படுத்துவதும்  ஒரு கவிதை  எனில்  முதன்  முதலாக  அவள்  ஆஃபீசுக்குப்போய்  அவளுக்கு  ஷாக்  சர்பரைஸ்  தரும்போது அவள்  காட்டும்  ஃபெஸ்  எக்ஸ்பிரஷன்  அசத்தல்


4  நாயகன்  ஊடலில்  இருக்கும்  தன்  மனைவியைக்காண  வீட்டு  வாசல்  வரை  வருவதும் , பின்  திரும்பிப்போவதும்  அழகு , அதை  கதவு  இடுக்கு  வழியாக  ஒளிந்திருந்து  மனைவி  பார்பப்தும்  கவிதையான  காட்சி 



  ரசித்த  வசனங்கள் 


1  உங்களுக்கு  பசி  எடுக்கும்போது நான்  சமையல்காரியா  இருக்கேன்,உங்களுக்கு  உடம்பு  சரி  இல்லைன்னா  நான்  நர்சா  இருக்கேன் , உங்களுக்கு  பணத்தேவை  ஏற்படும்போது நான்  பேங்க்கா  இருக்கேன், ராத்திரில.....


 அய்யய்யோ  சொல்லாத .. போதும் 


2  இது  கேம்  இல்லை , போர் , நீங்க   எல்லாரும்  பிளேயர்ஸ்  இல்லை , சோல்ஜர்ஸ் 


 சார் , பசிக்குது 


 வெரிகுட் , ஜெயிக்கனும்கற  பசி  தானே? 


3  போர்  வீரர்களும் , போராளிகளும்  ஆண்ட்டிங்க  பேச்சைக்கேட்க  மாட்டாங்க 


4  வின்னிங்  ஈஸ்  நாட்  எவரிதிங், இட் ஈஸ் ஒன்லி  ஒன் திங்க்


5  நாட்  ஆல்  பிளேயர்ஸ்  ஆர்  வின்னிங் , பட்  ஆல்  ட்ரீமர்ஸ்  ஆர்  வின்னர்ஸ் 


6  டியர் , இந்த  சின்ன  விஷயத்துக்காகவா  வீட்டை  விட்டு  கோவிச்சுக்கிட்டு  போறே?


 நான்  இல்லை , நீங்க தான் , கிளம்புங்க , கெட்  அவுட் 


7  சாப்பிடும்போது  அன்னைக்கு நடந்த சந்தோஷமான  விஷய்ங்களைப்பற்றி  ஷேர்  பண்ணிக்கிட்டே  சாப்பிடுவதுதான் நல்ல  ஃபேமிலிக்கு  அழகு 


8 டீ  வேண்டுமா?


 நோ 

 காஃபி ?

 நோ.  வைஃபி  பாஸ்  வோர்டு  மட்டும்  போதும்


8  என்னோட  போன  மாசக்கடன்  எவ்ளோ?

ரூ  3500

 

இந்த மாசக்கடன்  எவ்ளோ?


ரூ 4500


  சோ  டோட்டல் ரூ 8000. அடுத்த  மாசம்  தந்துடறேன், ஹிஹி


9  அண்ணா , இவ   என்  கேர்ள்  ஃபிரண்ட்


ம் ம் 

என்  பழைய  கிளாஸ் மேட்’

ம்ம்

இவ  டைவர்ஸ்  ஆன  பொண்ணு 

அடடே, ஹாய் , கிளாட்  டூ  மீட்  யூ..


10   மரியம் , நீ மீண்டும்  ஒரு  கல்யாணம்  பண்ணிக்க  ரெடியா?


 கேள்வியே  தப்பு, டைவர்ஸ்  ஆன  என்னை  இனி  யார்  கல்யாணம்  பண்ணிக்குவாங்க ?


 முன் அனுபவம்  உள்ள  ஆள்னா  கம்பெனில  உடனே  வேலை  கிடைக்குமே?


 அது  மார்க்கெட்ல , இது  கல்யாணம், நான்  உலகத்தின்  பார்வையில்  செகண்ட்  ஹேண்ட் 


11   எனக்குன்னு  சுதந்திரம்  இல்லை , எனக்கு  என்ன  வேண்டும்  என்பதை முதலில்  என்  பெற்றோர்  தீர்மானித்தனர், பிறகு  என் கணவன் 


12  கேரளாவில்  ஒரு  ஃபேமசான  பழமொழி  உண்டு . சந்திர  மண்டலத்துக்குப்போனாலும்  அங்கேயும்  ஒரு  நாயர்  டீக்கடை  இருக்கும்.  மலையாளி  ஊடுருவாத  இடமே  இல்லை 


13  என்  மேல  கோபம்  இல்லையே? 

நோ நோநாங்க  சாதாரண  மிடில்கிளாஸ்  தானே? 


14   என்  வாழ்க்கைலயே  சிரிச்ச  முகத்தோட  பேமெண்ட்  செக்  லீஃப் தருவது  இப்போதான், உனக்கு  மட்டும்  தான் 


15  ஃபெய்லியர்  ஈஸ்  ஸ்லீப்பிங்  ஸ்டோன்  டூ  சக்சஸ் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகனின்  மொத்த  உடைகளையும்  ஒரு  சூட்கேசில்  போட்டுத்தரும்போது  அதை  அவரால்  இரண்டு  கைகளாலும்  சேர்த்துப்பிடிக்க  முடியவில்லை , ஓவர்  வெயிட்  ,  கீழே  போட்டு  விடுகிறார், ஆனால்  பின்  லாங்க்  ஷாட்டில்  ஒற்றைக்கையில்  அசால்ட்  ஆக  தூக்கிச்செல்கிறார் , எப்படி ? 

2  நல்ல   ஃபேமிலி  மெலோ  டிராமாவாகப்போய்க்கொண்டிருக்கும்  கதையில்  சம்பந்தமே  இல்லாமல்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  அந்த  சிறுவனைக்கடத்தும்  ஹோமோ  பார்ட்டியுடனான  காட்சிகள்  தேவை  அற்றது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஃபேமிலியுடன்  காண  வேண்டிய  ஃபீல்  குட்  காமெடி  மெலோ டிராமா  . ரேட்டிங் 2.75 / 5 


தோல்வி எஃப்.சி
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஜார்ஜ் கோரா
எழுதியவர்ஜார்ஜ் கோரா
உற்பத்திஆபிரகாம் ஜோசப்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுசியாமபிரகாஷ் எம்.எஸ்
திருத்தியவர்லால் கிருஷ்ணா
இசை
  • விஷ்ணு வர்மா
  • கார்த்திக் கிருஷ்ணன்
  • சிஜின் தாமஸ்
தயாரிப்பு
நிறுவனம்
நாடு தழுவிய படங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுமத்திய படங்கள்
வெளிவரும் தேதி
  • 3 நவம்பர் 2023 [1]
நேரம் இயங்கும்
120 நிமிடங்கள் [2]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

Saturday, January 20, 2024

விக்கிரமாதித்தன் (1962) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ யூ ட்யூப்

 


மாலை  முரசு  நாளிதழில்  காதல்  மன்னன்  விக்கிரமாதித்தன்  என்ற  தொடர்  தினத்தந்தி  சிந்து பாத்  படக்கதை  போல  தொடர்  கதையாய்ப்படித்த  நினைவு  உண்டு . அதில்  இருந்து  ஒரு  சின்ன  போர்சனை  மட்டும்  படம்  ஆக்கி  இருக்கிறார்கள் 


1957 ல்  தொடங்கிய  படம்  என்றாலும்  ஐந்து  வருடங்கள்  கழித்துத்தான்  படம்  முடிந்து  ரிலீஸ்  ஆனது. ஒரே  ஒரு  சண்டைக்காட்சி  வாஹினி ஸ்டூடியோவில்  மூன்று  நாட்கள்  படமாக்கப்பட்டது  அப்போது  பரபரப்பாகப்பேசப்பட்டது 


1962 ஆம்  ஆண்டு  இந்தியா  - சீனா  போர்  நடந்துன் கொண்டிருந்த  பதட்டமான  சூழ்நிலையில்  தீபாவளி  ரிலீஸ்  ஆக  மூன்று  படங்கள்  வெளி  வந்தன.  எம் ஜி ஆரின் விக்கிரமாதித்தன் , சிவாஜியின்  பந்த  பாசம் , எஸ்  எஸ்  ஆர்  இன்  முத்து  மண்டபம்  என  மூன்று  படங்களுமே  ரசிகர்களின்  ஆதரவைப்பெற்றது .இந்த  சமயத்தில்  இந்தியப்பிரதமர்  நேரு  போர் நிவாரணம்  வழங்க  பொது  மக்களுக்கு  வேண்டு கோள்  விடுத்தபோது  எம் ஜி ஆர்  அந்தக்கால  மதிப்பில்  ரூ 75,000  வழங்கியதாகவும், அதன்  இன்றைய  மதிப்பு  பல  கோடிக்கு  சமம்  என்றும்  தகவல் 


நாட்டிய பேரொளி  பத்மினி -  ராகினி  இருவரின்  போட்டி  நடனம்  அந்தக்காலத்தில்  பரபரப்பாகப்பேசப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


உஜ்ஜயினிப்பேரரசின்  சக்கரவர்த்தி  விக்கிரமாதித்தன்  தான்  நாயகன். காடாறு  மாதம், நாடாறு  மாதம்  வசிக்க  வேண்டும்  என்று ஒரு  சாபம்  அவருக்கு  உண்டு . அதனால்  சக்கரவர்த்தியாக  ஆறு  மாதங்கள்  நாட்டை  ஆண்டு  விட்டு  மாறு  வேடங்களில்  சாதா  ஆளாக காடுகளில்  சுற்றித்திரிந்து  வாழ்வதை  வழக்கமாக்கிக்கொண்டிருந்தார்


நாயகன்  மாறு  வேடத்தில்  சித்தன்  ஆக  சுற்றும்போது  நாயகி  ஆன அமர  நாட்டு  இளவரசி  ரத்தின  மாலைக்கும்,  இளவரசி வைர  மாலைக்கும்  நடனப்போட்டி  நடக்கிறது . அந்தப்போட்டியில்  யார்  சிறந்த  நடனம்  ஆடுகிறார்கள்  என  சரியாகச்சொல்பவர்களுக்கு  அரசின்  பரிசு  உண்டு .


நாயகன்  ஒரு  தந்திரத்தை  உபயோகித்து  சிறந்த  நடன  தாரகை  யார்  என்பதை  அறிவிக்கிறார். உடனே  மன்னர்  உனக்கு  என்ன  வேண்டுமானாலும்  கேள் , பரிசாகத்தருகிறேன்  என  சொல்ல   நாயகன்  நாயகியையே  பரிசாகக்கேட்கிறார். இதனால்  அதிர்ச்சி  அடைந்த  மன்னர்  வேறு  வழி  இல்லாமல்  நாயகனுக்கு  மணம்  முடித்து  வைக்கிறார். நாயகன்  தான்  இந்த  நாட்டின்  சக்கரவர்த்தி  என  அறியாமல்  மன்னர்  தன்  மகளின்  பாதுகாப்புக்காக  இருவரை  கூடவே  அனுப்புகிறார்


 நாயகி  வயது  வந்த  காலத்தில்  இருந்தே  மணந்தால்  சக்கரவர்த்தி  விக்ரமாதித்தனையே  மணக்க  வேண்டும்  என்று  ஆவல்  கொண்டவள் , இப்போது  வேறு  வழி  இல்லாமல்  சித்தனை  கணவன்  ஆக  ஏற்றுக்கொள்கிறாள் . பின் ஒரு  நாளில்  சித்தன்  தான்  தன்  ஆசைக்காதலன்  விக்கிரமாதித்தன்  என்பதை  உணர்ந்து  மகிழ்கிறாள் 


தொடர்ந்து  இருவரும்  காடுகளில்  பயணிக்கும்போது   மதுரபுரி  மன்னர்  ஆன  வில்லன்  அவனது  எதிரிகளிடம்  மாட்டிக்கொண்டிருக்கும்போது  நாயகன்  வில்லனைக்காப்பாற்றுகிறான். நாயகனின்  வீரத்தில்  மகிழ்ந்த  வில்லன் நாயகன்  தான்  சக்கரவர்த்தி  என்பதை  அறியாமல்  தன்  ராஜ்ஜியத்தில்  தனக்குக்கீழ்  தளபதி  ஆக  பணியாற்ற  உத்தரவு    இடுகிறான், அதன் படி  நாயகன்  சேனாபதி  ஆகிறார்


 வில்லனுக்கு  நாயகன்  மனைவி  அழகு  பற்றி  தெரிய  வருகிறது ., அதனால்  அவளை  அடைய  நைசாக  நாயகனுக்கு  ஒரு  வேலை  கொடுத்து  வெளியூர்  அனுப்பி  விட்டு  நாயகியைக்கடத்தி  வருகிறான்


இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர்  அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார். மன்னர்  வேடம்  எப்போதும்  இவருக்கு  நன்கு  பொருத்தம். வாள்  சண்டை  இவரது  பிளஸ்  பாயிண்ட் . அந்தக்காலத்தில்  அட்டைக்கத்தி  வீரர்  என்ற  அடைமொழியில்  இவரைக்கிண்டல்  செய்தவர்கள் பலர் 


நாயகி  ஆக  பத்மினி  சிறப்பான  நடிப்பு, பிரமாதமான  நடனம். 


வில்லன்  ஆக  பி எஸ்  வீரப்பா ,  நாயகனை  விட  கட்டுமஸ்தான  உடம்புடன்  பார்ப்பவர்களை  வசீகரிக்கும்  சிரிப்புடன்  கலக்கி  இருப்பார் 


காமெடியன்  ஆக   கே  ஏ  தங்கவேலு  படம்  முழுக்க  வருகிறார். இவர்  அடிக்கடி  பேசும் ஒரு  பஞ்ச்  டயலாக்  இதில்  ரொம்பப்பிரசித்தம் 


162  நிமிடங்கள்  படம் ஓடும்படி  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் கள்  ஜம்புலிங்கம்  அண்ட்  முருகேஷ்


எஸ்  ராஜேஸ்வரராவ்  இசையில்  மொத்தம்  10  பாடல்கள் . பாடல்களை  எழுதியவர்கள்  மருத  காசி , பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம், கண்ணதாசன்ம் ஆத்மநாதன் , புரட்சிதாசன் உட்பட  பலர் 


ஆர்  சம்பத் , ராஜாமணி  இருவரின்  ஒளிப்பதிவில்  நடனக்காட்சிகளும் , வாள் சண்டைகளும்   அருமையாகப்படம்  ஆக்கப்பட்டு  இருக்கின்றன 


திரைக்கதை  அமைத்தவர்  என்  தங்கை  புகழ்  நடராஜன்


இயக்கம்  டி ஆர்  ரகுநாத் ,  என்  எஸ்  ராமதாஸ் 




சபாஷ்  டைரக்டர்


1  பொழுதுபோக்கு  அம்சங்கள்  உடன்  கமர்சியல்  ஆக  படம் போர்  அடிக்காமல்  பாட்டு , டான்ஸ் , ஃபைட்  என  ஜாலியாகப்போகும்படி  இயக்கியது 


2    பத்மினி , ராகினி நடனப்போட்டியைப்படம்  ஆக்கிய  விதம் 


3  காமெடி  ட்ராக்கை  தனியாக  அமைக்காமல்  நாயகன்  கூடவே  காமெடியன்  படம்  முழுக்க  வருமாறு  செய்த  விதம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  போட்டி  நடனம் - நிலையான  கலை  வாழ்கவே


2  ஹனிமூன்  சாங்  - மங்கிலி மங்கா   ஜிங்கிலி ஜிங்கா 


3  டூயட்  சாங்  -  வண்ணம்  பாடுதே


4  கன்னிப்பெண்ணின்  ரோஜா  தங்கம்  கண்ட  ராஜா 

5  தீர்மானம்  சரியாக  ஆடாவிட்டால்  


6   சொக்கும்  மொழியாலே  சுழலும்  விழியாலே  உலகில்  சிக்காத 

  ரசித்த  வசனங்கள் 


1  பதவி  ஆசை  மனிதனை  என்ன  வேண்டுமானாலும்  செய்யச்சொல்லும்


2  அரச குமாரியாக  இருந்தாலும், ஆண்டவன்  குமாரியாக  இருந்தாலும்  நான் உங்கள்  மனைவி 


3   பட்டா  சுந்தரி  கும்மா , எங்கேடி  உங்கம்மா 


4    மன்னா , ஆண்டவன்  போயும்  போயும்  உங்களுக்கெல்லாம்  உதவி  செய்கிறானே?


 வில்லன் =  ஆண்டவன்  எனக்கு  மட்டும்  தான்  உதவி  செய்வான்


5  உத்தமன்  ஒருவன்  பிறந்து  விட்டால்  அவனை  நினைத்து  நித்தமும்  பெண்கள் அடைய  நினைப்பார்கள் 


6  பத்தரை  மாற்றுத்தங்கமே , உத்தமரை  நீ  மணப்பாய்


7  நான்  இந்த  வீட்டுக்கணக்குப்பொண்ணு 


 அப்போ  மச்சான், நீ  அவளைக்கணக்கு  பண்ணு 


 யோவ், கணக்கு  எழுதும்  பெண்


8  அய்யய்யோ இதுவரை  எந்த  ஆடவனும் என்னைத்தொட்டதில்லை 


 காமெடியன் , ஆடவனா?ஆடறவனா?


9  அக்கிரமத்தை  எந்த  உருவத்திலும்  நடமாட  விடமாட்டான்  இந்த விக்கிரமாதித்தன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  வீட்டில்  இருக்கும்போது  விக்கல்  எடுக்கிறது , நாயகியிடம்  தண்ணீர்  கேட்கிறார். வீட்டில்  ஒரு  சொம்பு  தண்ணீர்  கூட  இருக்காதா? வெளில  போய்  ஓடையில்  இருந்து  தண்ணீர்  முகண்டு  கொண்டு  வருகிறார்  நாயகி 


2  நாட்டின்  மன்னராக  இருந்தாலும்  சரி , கட்சியின்  தலைவராக  இருந்தாலும்  சரி , அடுத்தவங்க சம்சாரத்தை  ஆட்டையைப்போடவே  திட்டம்  போடுவது  ஏன் ? கன்னிபெண்களுக்கா  நாட்டில்  பஞ்சம் ?


3  ஒரு  சிற்றரசரின்  இளவரசியை  ஒரு  டுபாக்கூர்  சாமியார்  உடன்  அனுப்பும்போது  கூட  துணைக்கு  ஒரு  தோழி  கூட  இல்லாமல்  தனியாகவா  அனுப்புவார்கள் ? 


4  மரத்தால்  செய்யபப்ட்ட  டூப்ளிகெட்  பழங்களுக்கு  நடுவே  ஒரிஜினல்  பழத்தைக்கண்டு  பிடித்து  சாப்பிடவேண்டும், இதுதான்  போட்டி . போட்டி  நடத்துபவர்  லூஸ்  மாதிரி  கிளி  வளர்த்துவாராம்,அந்தக்கிளி  பழத்தைக்கொத்தப்போகும்போது  நாயகன்  அசால்ட்டா  அதை  எடுத்து  சாப்பிடுவாராம், பழத்தின்  வாசத்தை  வைத்து  அவராக  கண்டு  பிடித்தால்  தானே  அது  கெத்து ? 


5   எம் ஜி  ஆரை  சின்னவர் , வாத்தியார்  என  அழைப்பது  வழக்கமாக  இருக்கலாம், ஆனா  சக்கரவர்த்தி  கேரக்டரில்  நடிப்பவரை  அந்தகக்தையில்  வரும்  கேரக்டர்  மன்னா  என  அழைக்காமல்  வாத்தியாரே  என  அழைப்பது  பொருத்தமாக  இல்லையே? 


6  சில  இடங்களில் ஒரு  ஒட்டு  மீசை  வைத்த  மாறு  வேடம் , பல  இடங்களில்  நிஜத்தோற்றத்திலேயே  நாட்டின்  சக்கரவர்த்தி  உலா  வருகிறார், யாருக்குமே  அடையாளம்  தெரியவில்லை . ஒருவருமே  அவர்  உருவத்தைக்கண்டார்  இல்லயா?


7  சொந்த  சம்சாரத்துக்கு  தாலி  கட்டின  புருசனை அ டையாளம்  தெரியாதா? ஒட்டுத்தாடி  வைத்திருந்தாலும்  உயரம், உடல்  வாசனை  காட்டிக்கொடுக்காதா?

8  வில்லன்  ஒரு  பொம்பளைப்பொறுக்கி , நாயகனின்  மனைவியையே  அடைய  நினைத்தவன், அவனுக்குப்போய்  தான் காப்பாற்றிய  பெண்னை  மணமுடித்து  வைத்து  அப்பெண்ணின்  வாழ்க்கையையே  வீணாக்கி  விட்டாரே  நாயகன் ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்கள் ,  பத்மினி  ரசிகர்கள் , கமர்ஷியல்  ஃபிலிம்  ஆர்வலர்கள்  பார்க்கலாம் , ரேட்டிங் 2.5 / 5 


Vikramaadhithan
Theatrical release poster
Directed byT. R. Raghunath
N. S. Ramadas
Screenplay by'En Thangai' Natarajan
Produced byM. A. Ethirajulu Naidu
S. V. Namasivayam
StarringM. G. Ramachandran
Padmini
Sriranjini
CinematographyR. Sampath
V. Rajamani
Edited byC. P. Jambulingam
S. Murugesh
Music byS. Rajeswara Rao
Production
company
Jaya Bharat Productions
Release date
  • 27 October 1962
Running time
162 minutes
CountryIndia
LanguageTamil

Friday, January 19, 2024

NERU (2023) -THE TRUTH - மலையாளம் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்


 த்ரிஷ்யம் , த்ரிஷ்யம் 2 , பாபநாசம் படங்களின்  இயக்குநர்  ஜீத்து  ஜோசஃப்  உடன்  மோகன்  லால்  இணையும்  படம்  இது ., தியேட்டர்களில் 21/12/2023  அன்று  ரிலீஸ்  ஆகி  ஒ டி டி  யில் 21 /1/2024  அன்று  வெளியாக  இருக்கும்  படம் . இப்படம்  உலகம்  முழுவதும்  இதுவரை  21/12/2023  முதல்  6/1/2024   வரை  34  கோடி  ரூபாய்  வசூல்  செய்து  ஹிட்  ஆன  படம் . ஜீத்து  ஜோசஃபின்  இயக்கத்துக்காக  பலரும்  பாராட்டி இருந்தாலும்  என்  பார்வையில்  திரைக்கதையில்  மிக  பலவீனமானதாக  அமைந்த  படம்  ஆகவே  பார்க்கிறேன்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  விழி  ஒளி  இழந்தவர். 12  வயதில்  இருந்து  அவருக்கு  பார்வை  தெரியாது . ஆனால்  வளர்ப்புத்தந்தை  கற்றுக்கொடுத்த  சிற்பக்கலையை  11  வயதிலேயே  கற்றவர் . ஒருவரின்  முகத்தை  கை  விரல்களால்  தடவிப்பார்த்தே  தத்ரூபமாக  சிலையாக  வடிவமைக்க  அவரால்  முடியும் 


  வில்லன்  ஒரு  பொறம்பாக்கு . அரசியல்வாதியின்  மகன் .இவனுக்கு  திருமணம்  நிச்சயம்  ஆகி  இருக்கிறது . திருமணப்பத்திரிக்கை  வைப்பதற்காக  நண்பரின்  வீட்டுக்கு  வ்ருகிறான். அந்த  வீட்டுக்கு  அருகில்  நாயகியின்  வீடு  இருக்கிறது 


 அடுத்த  நாள்  நாயகியின்  வளர்ப்புத்தந்தை , அம்மா  இருவரும்  வெளியே  போகிறார்கள் , நாயகி தனியாகத்தான்  இருப்பார்  என்பதைத்தெரிந்து  கொண்டு   அந்த  சமயத்தில்  அங்கே  வந்து  நாயகியை  பாலியல்  வன்  கொடுமை  செய்து  விடுகிறான் 


நாயகி  போலீசில்  புகார்  கொடுக்கிறார். கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . நாயகி  தரப்பில்  ஆஜர்  ஆன  வக்கீல்  வில்லனிடம்  விலை  போனதால்  கேஸ்  சரியாக  நடக்கவில்லை 


அப்போதுதான்  நாயகனிடம்  இந்தக்கேஸ்  வருகிறது . அவர்  எப்படி  சாமார்த்தியம்  ஆக  வாதாடி  கேசை  செயிக்கிறார்  என்பதுதான்  மீதிக்கதை 


 நாயகி  ஆக   அனஸ்வரா  ராஜன்  விழி  ஒளி  இழந்த   சிற்பி  ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். கோர்ட்டில்  அவர்  லாவகமாகப்பேசும்போது  கைதட்டல்களை  அள்ளுகிறார்


 நாயகன்  ஆக  மோகன்  லால் . ஓவர்  வெயிட்  போட்டு  விட்டார் .  நடிப்பில்  குறை  இல்லை 


வக்கீல்  ஆக சித்திக்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அவரது  மகளாக  வரும்  பிரியாமணி   சப்ஸ்ட்டியூட்  வக்கீல்  ஆக  வாதாடுகிறார்


நாயகனின்  ஜூனியர்  வக்கீல்  ஆக சாந்தி  மாயாதேவி  அதிக  வாய்ப்பில்லை .நாயகியின்  வளர்ப்புத்தந்தை  ஆக ஜெகதீஷ்  அற்புத  நடிப்பு 

ஜட்ஜ்  ஆக  வரும்  மேத்யூ  வர்கீஸ்  ஓக்கே  ரகம் 


152  நிமிடங்கல்  டைம்  டியூரேஷன்  வரும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்  வினாயக் .இசை  விஷ்ணு  ஷியாம் . பின்னணி  இசையில்  பரபர;ப்பை  ஊட்டுகிறார்


சதீஷ்  குரூப்பின்  ஒளிப்பதிவு  ரசிக்க  வைக்கிறது 


சாந்தி  மாயாதேவி  உடன்  இணைந்து  திரைக்கதை  எழுதீருக்கும்  ஜீத்து  ஜோசஃப்  படத்தை  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்

1   எதிர்க்கட்சி  வக்கீல்களாக  அப்பா , மகள்  என  இருவ்ரும்  மாறி  மாறி  வாதிடும்  ஐடியா குட் 


2  இதுவரை  கோர்ட்  ரூம்  டிராமாக்களில்  எல்லாம்  பார்க்காத  ஒரு  காட்சி இருக்கிறது, கூண்டில்  ஏறும்  சாட்சிகள்  வக்கீல்  கேட்கும்  கேள்விக்கு  அவரைப்பார்த்து  பதில்  சொல்ல  ஜட்ஜைப்பார்த்து  பதில்  சொல்லவும்  என  சைகையால்  வக்கீல் ஒவ்வொரு  முறையும்  நாசூக்காக  உணர்த்துவது  ஃபிரெஷ்  ஆன  காட்சி 


3  நாயகியிடம்  நாயகன்  கோர்ட்டில்  எப்படிப்பேசவேண்டும்  என  பயிற்சி  தருவதும்  அதன்படி  அட்சர சுத்தமாக  நாயகி நடந்து  கொள்வதும்  அருமை . நாயகனின்  திட்டம்  நிறைவேறியதும்  எதிர்க்கட்சி  வக்கீல்  அந்த  தந்திரத்தை  உணர்வதும்  அருமை 


ரசித்த  வசனங்கள் 


1  க்ராஸ்  எக்சாமினெஷன்  ஈஸ்  நாட்  எ  கேரக்டர்  அசாசினேஷன் 


2 சோசியல்  மீடியாவில்  இந்த  கேசைப்பற்றி  பரபரப்பா  பேச்  விடலாமா? 


ஆனா  அது  கோர்ட்  நடவடிக்கையை  பாதிக்காது 


3      அறிமுகம்  இல்லாத  எதிராளியை  விட  நன்கு  தெரிந்த  எதிராளி  ஆபத்தானவன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   விழி  ஒளி  இழந்த  நாயகியை  பெற்றோர்   வீட்டில்  தனியாக  விட்டுச்செல்வது  நம்பும்படி  இல்லை . வேலைக்காரப்பெண்ணும்  ஏன்  கிளம்பிச்செல்கிறார்? அவர்கள்  வரும்  வரை  துணைக்கு இருக்கலாமே? 


2   ரேப்பை  நேரில்  பார்த்த  சாட்சி  இல்லை . சிற்பத்தை  வடிவமைத்தது  நாயகி  தான்  என்பதற்கு  ஆதாரம்  இல்லை , நாயகியின்  அப்பா  கூட  அதை  வடிவமைத்திருக்கலாம்  என்ற  வாதம்  வரும்போது  அப்போதே  ஆன்  த  ஸ்பாட்  நாயகி  யாரோ  ஒருவரின்  முகத்தை  ஜட்ஜ் முன்னால்  தடவி  சிற்பம்  செய்து  காட்டி  இருந்தால்  அப்பவே  படம்  ஓவர் . அந்த  சீனை  க்ளைமாக்ஸ்  வரை  இழுக்க  வேண்டுமா?


3  எதிர்க்கட்சி  வக்கீலை  நாயகிய்டன்  தனிமையில்  இருக்க  ஜட்ஜ்  எப்படி  ஒப்புக்கொள்கிறார்? 


4  நாயகியை  ரேப்  செய்த  வில்லன்  மீண்டும்  நாயகி  வீட்டுக்கே  வந்து  மிரட்டுவது  ஓவர். நம்பும்படி  இல்லை. ஆள்  வைத்து  மிரட்டி  இருக்கலாம்


5  எதிர்க்கட்சி  வக்கீல்  ஃபேக்  ஆன  சிசிடிவி  ஃபுட்டேஜை  ரெடி  செய்ய  ஐடியா  கொடுப்பதை வீடியோ எடுத்து  வைத்துக்கொள்ளும்  காட்சியும்  ஏற்கும்படி  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜீத்து  ஜோசஃப் + மோகன்  லால்  ரசிகர்கள்  பார்க்கலாம். பிரமாதம்  என்றெல்லாம்  சொல்லி  விட  முடியாது . ரேட்டிங்  2/.5 / 5


Neru
Theatrical release poster designed by Rosemary Lillu
Directed byJeethu Joseph
Written by
  • Santhi Mayadevi
  • Jeethu Joseph
Produced byAntony Perumbavoor
StarringMohanlal
CinematographySatheesh Kurup
Edited byV. S. Vinayak
Music byVishnu Shyam
Production
company
Distributed by
  • Aashirvad Release (India)
  • Phars Film Company (overseas)
  • Aashirvad Cinemas Co. LLC (overseas)
Release date
  • 21 December 2023
Running time
152 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹ 32.6 Crore[1]

Thursday, January 18, 2024

காதல் தி கோர் (2023) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


நெட்டிசன்களால்  ஆஹா  ஓஹோ  அபாரம்  பரிமளா  ரேஞ்சுக்குக்கொண்டாடப்பட்ட  ஒரு  படம்  இது . நடிகர்கள் , நடிகைகளின்  தரமான  நடிப்பு  இருந்தாலும் , கதைக்கரு , திரைக்கதை  அமைப்பு   ஆகியவற்றில்  நம்பகத்தன்மையே  இல்லாத  ஒரு  படமாகவே  நான்  இதைப்பார்க்கிறேன். 


தென்னிந்திய  மொழிகளில்  இது  மாதிரி  ஒரு  கேரக்டரை  ஏற்று  நடிக்கும்  துணிச்சல்  2013ல் மும்பை  போலீஸ்  எனும்  மலையாளப்படத்தில்  நடித்த  பிருத்விராஜ்க்கு  இருந்தது . இப்போது  மம்முட்டிக்கு  வந்திருக்கிறது . மம்முட்டியின்  சொந்தப்படம்  இது .. 54 வதுஇந்திய  பனோரமா  பிரிவில்  இடம்  பெற்ற  படம் இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  65  வயதான  அப்பா , 40  வயதான  மனைவி , 18  வயதான  மகள்  இவர்களுடன்  ஒரு  வீட்டில்  வசித்து  வருகிறார். இவர்   ஒரு  கட்சியில்  உறுப்பினராக  இருக்கிறார். ஊரில்  நாயகனுக்கு  நல்ல பெயர்  இருப்பதாலும் , கட்சியில்  அவரது  பணி  மெச்சத்தக்கதாகவும்   இருப்பதால்  பஞ்சாயத்துத்தேர்தலில்  கட்சி  சார்பாக  வார்டு  கவுன்சிலர்  ஆக  நிற்க  கட்சி  அவருக்கு  ஒரு  வாய்ப்பளிக்கிறது 


இந்த  சமயத்தில்  தான்  நாயகனுக்கு  ஒரு  அதிர்ச்சி  செய்தி  காத்திருக்கிறது . நாயகனின் மனைவி  விவாக  ரத்து  கேட்டு  நோட்டீஸ்  அனுப்பி  இருக்கிறார். கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . ஊரில்   நாயகனுக்குக்கெட்ட  பெயர்  ஏற்படுமோ  என  நாயகன்  பயப்படுகிறான்.மனைவியை  சமாதானப்படுத்த  நினைக்கிறான்


இதற்குப்பின்  கதையில்  நடந்த  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை . நாயகிக்கு  விவாக  ரத்து  கிடைத்ததா?  நாயகன்  தேர்தலில்  வெற்றி  பெற்றானா? என்பது  க்ளைமாக்ஸ் 


  நாயகன்  ஆக  மம்முட்டி  அபாரமான  நடிப்பு . இதுவரை  காட்டாத  சில  முக பாவனைகளால்  கவர்கிறார்.அதிகம்  யாரிடமும்  பேசாத  ரிசர்வ்  டைப்  ஆக  அவர்  தன்னைக்காட்டிக்கொள்வது  குட் 


 நாயகி  ஆக  ஜோதிகா. தரமான  நடிப்பு. வழக்கமாக  ஓவர்  ஆக்டிங்  செய்யும்  நடிகை  ஆன  இவர்  இதில்  அடக்கி  வாசித்து  இருக்கிறார் 


நாயகனின்  அப்பாவாக  ஆர்  எஸ்  பணிக்கர்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்துகிறார் 


நாயகனின்  மகளாக  அனகா  மாயா  ரவி  சில  காட்சிகளே  வ்ந்தாலும்  சீரான  நடிப்பு 


114  நிமிடங்கள்  மட்டும்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  பிரான்சிச்  லூயிஸ் 


மாத்யூஸ்  புலிக்கன்  இசையில்  அடக்கி  வாசித்து  இருக்கிறார். பின்னணி  இசையில்  பல  இடங்களில்  மவுனமே  கதை  சொல்கிறது 


சாலு  கே  தாமஸ்  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார். கச்சிதம் 


ஆதர்ஸ்  சுகுமாரன்  பால்சன்  ஸ்கரியோர்  ஆகியோர்  எழுதிய  திரைக்கதைக்கு  ஜியோ  பேபி  உயிர்  ஊட்டி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் (ஜியோ  பேபி) 


1  கதைக்கரு  ஒரு  மார்க்கமாக  இருந்தாலும்  காட்சி  ரீதியாக  கண்ணியமாக  வடிவமைத்த  இயக்குநரின்  சாமார்த்தியம், 

2    செலவே   இல்லாமல்  ஒரே  வீட்டு  லொக்கேஷனில்  முழுப்படத்தையும்  முடித்த  லாவகம் 


  ரசித்த  வசனங்கள் 

1  வேண்டாதவங்களா  இருந்தாலும்  முகத்துக்கு  நேராகத்தான் எதுவா  இருந்தாலும்  சொல்வாங்க 


2   அப்பா , உங்க  கூட பேசாம  இருந்தது  கோபத்தால்  அல்ல , சங்கடத்தால் 


3   நான்  எடுத்த  முடிவில்  இருந்து  பின்  வாங்கினா  அது  எனக்கு  நானே  செய்து  கொள்ளும்  துரோகம் 


4   நம்மை  நேசிக்கறவங்க  நம்மை  விட்டுப்போய்டுவாங்களோ? என்ற பயம்  எல்லோருக்கும்  இருக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இருபது  வருடங்களாக  நாயகன் - நாயகி  உறவு  நான்கே  முறை  தான்  நடந்து  என  கோர்ட்டில்   தெரிவிக்கும்  தகவல்  அதிர்ச்சி  அளித்தது  என்றாலும்  இப்போ  எடுத்த  முடிவை  அப்போதே  ஏன்  எடுக்கவில்லை?  என்ற  கேள்விக்கு  பதில்  இல்லை 


2  நாயகன்  நாயகியின்  வாழ்க்கையையே  சீரழுத்து  விட்டு  ரொம்ப  கூலாக  சாரி  என்று  சொல்வது  ஏற்றுக்கொள்ளும்படி  இல்லை 


3  நாயகன்  ஒரு  ஹோமோ  என்று  தெரிய  வந்ததும்  அதிர்ச்சியும், அருவெறுப்பும்  அடைந்த  நாயகி  ஒரு  கட்டத்தில்  இன்று  ஒரு  நாளாவது  என்  கூட  இதே  பெட்ரூமில்  இருக்க  முடியுமா? என்று  கேட்பது  கஷ்ட காலம்


4  ஊர் மக்கள் நாயகன்  ஹோமோ  மேட்டர்  தெரிந்தும்  அதை  சாதாரணமாக  எடுத்துக்கொள்வதாகவும், அது  அவர்  பர்சனல்  மேட்டர்  என்று  சொல்வதாகவும்  காட்டி  இருப்பது  காதில்  பூ 


5   கோர்ட்டில்  நாயகனுக்கு  எந்த  தண்டனையும்  வழங்காதது  ஏன்?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மம்முட்டியின்  மாறுபட்ட  நடிப்பு  மட்டுமே  பிளஸ் , மற்றபடி  சின்ன  வயதில்  காது  குத்தல்  விழா  நடத்தாதவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2 / 5 


Kaathal – The Core
Theatrical release poster
Directed byJeo Baby
Written by
  • Adarsh Sukumaran
  • Paulson Skaria
Produced byMammootty
Starring
CinematographySalu K. Thomas
Edited byFrancies Louis
Music byMathews Pulickan
Production
company
Mammootty Kampany
Distributed byWayfarer Films
Release date
  • 23 November 2023
Running time
114 minutes
CountryIndia
LanguageMalayalam
Box officeest. ₹14.5

Wednesday, January 17, 2024

பாபா பிளாக் ஷீப் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் ப்ரைம்

 


ரஜினியே  நடித்திருந்தும்  பாபா  அட்டர்  ஃபிளாப்  ஆகி  விட்டது. கோடம்பாக்கம் ஒரு  செண்ட்டிமெண்ட்  செம்மலான  உலகம், என்ன  தைரியத்தில்  இயக்குநர்  இப்படி  ஒரு  டைட்டில்  வைத்தார்  என  தெரிய வில்லை 

  ஷங்கர்  படங்களில்  பெரிய  பிளஸ்  பாயிண்ட்டே  ஃபிளாஸ்பேக்  போர்சன் மனதை  நெகிழ்ச்சி  ஆக்கும்படி  இருக்கும். அதே  பாணியில்  கடைசி  20  நிமிடங்கள்  தான்  படத்தின்  கதையே  வருகிறது , அது  வரை  ஸ்கூல்  ஸ்டூட்ண்ட்சின்  ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்  தான்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஸ்கூலில் படிக்கும்  ஒரு  மாணவன்  தற்கொலைக்கடிதம்  எழுதி  வைத்தது  நாயகி  கையில்  சிக்குகிறது . அதை  எழுதியது  யார்  என  தேடும்  படலத்தில்  நிகழும்  சம்பவ்ங்கள்  தான்  கதை . பரபரப்பான  கடைசி  20  நிமிடங்கள்  தான்  மெயின்  கதை 


மர்ந்தைக்கொடுக்கும்போது  தேன்  கலந்து  கொடுக்க வேண்டும்  அல்லவா?அதனால்  முன்  பாதி  பூரா  வேற  கதை 


 பாய்ஸ்  ஸ்கூல், கோ எட்  ஸ்கூல்  இரண்டும்  அருகருகே  இருக்கிறது . இரண்டையும்  இணைக்கிறார்கள் . அந்த  இரு  ஸ்கூல்  மாணவர்களும்  அடித்துக்கொள்கிறார்கள் ., அவர்கள் கவனத்தை  திசை  திருப்ப  ஸ்கூல்  எலக்சன் , கல்ச்சுரல்  புரோகிராம், எக்சாம்  என  என்ன  என்னவோ செய்து  கவனைத்தைக்கவர்கிறார்கள் ,  இதில்  ஒரு  காதலும்  உண்டு 


நாயகி  ஆக  அம்மு  அபிராமி   காலேஜ்  ஃபைனல்  இயர்  படிப்பவர்  போல்  இருக்கிறார். கோலிக்குண்டு  கண்கள்  பிளஸ் 

 நாயகன் ஆக   ஆர் ஜே  விக்னேஷ்காந்த்  நடித்திருக்கிறார் 


விருமாண்டி  அபிராமி ,  போஸ்  வெங்கட் , வினோதினி , ஜி பி  முத்து  போன்றோர்  கெஸ்ட்  ரோல்களில் 


சந்தோஷ்  தயாநிதி  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  துள்ளல்  ரகம் 


விஜய்  வேலுக்குட்டி  எடிட்டிங்/ ரெண்டே  கால்  மணி நேரம்  டியூரெசன். சுதர்சன்  சீனிவாசன் ஒளிப்பதிவு  குட் 


ராஜ்  மோகன்  ஆறுமுகம்    கதை , திரைக்கதை  இயக்கம் 




சபாஷ்  டைரக்டர்


1  ஃபுட்  பால்  சின்னம் சீதாப்பழம்  சின்னம் இரண்டும்  ஒயிட்  அண்ட்  பிளாக்கில்  ஒரே  மாதிரி  இருப்பதால்  குழபத்தில்  ஓட்டு  பிரிவது  நல்ல  கற்பனை 

2  கெமிஸ்ட்ரி  லேபில்  டீச்சர்  கொடுக்கும்  எச்சரிக்கை  மீறி  மாணவர்கள்  செய்யும்  அடாவடி  காமெடி  கலாட்டாக்கள் 

3  சய்ன்ஸ்  எக்ஸ்பிஷனில்   பேராசிரியர்  கு  ஞான  சம்பந்தன் அவர்களிடம்  பொம்மையிடம்    காசு  போடச்சொல்லி  ஆட்டையப்போட்டு  விட்டு  முன்னே  பின்னே  தெரியாதவங்க  காசு  கேட்டா  தரக்கூடாது  என்பதுதான்  இந்த  பிராஜெக்ட்டே  என  கலாய்க்கும்  காட்சி 

4 க்ளை,மாக்சுக்கு  கொஞ்சம்  முன்  ஜி  பி  முத்து  பேசும்  சீஃப்  கெஸ்ட்  ச்பீச்  செம 



  ரசித்த  வசனங்கள் 


1  மக்கள் தொகை  அதிகம்  ஆனதுக்குக்காரணம்  வீட்டு  வேலை  செய்வதை  விட்டு  விட்டு  வீட்டில்  வேலை  செய்ததுதான் 


2  டூ  கே கிட்ஸ்  வீணாப்போகக்காரணமே  நாம  எது  செஞ்சாலும்  கிரிஞ்ச்  என  சொல்வதால்  தான் 


3  ஃபர்ஸ்ட்  பெஞ்ச்  ஸ்டூடண்ட்    பாடத்தை  கவனிப்பான், லாஸ்ட்  பெஞ்ச்  ஸ்டூடண்ட்  க்ளாஸ்  முழுவதையும்  கவனிப்பான் 


4  உலகம்  பூரா  தேர்தல்  என்றால்  ஒரே  ஃபார்முலா தான் . தான்  ஜெயிக்க  எவன் கால்ல  வேணாலும்  விழுவான் 


5     என்ன  சார்? உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும்  சண்டை , அதனால  ஸ்கூலுக்கு ஒரு  நாள்  லீவ்  வேணுமா?


  போன தடவை  எனக்கும், என்  பொண்டாட்டிக்கும் சண்டை, லீவ்  கொடுங்கனு  கேட்டப்ப  கொடுக்கலை 


6  ஃபுட்  பால்  சின்னத்துல  ஓட்டுக்கேட்கறீங்களே? நாட்டுக்காக  ஃபுட்  பால் விளையாடும்  வீரர் பெயர்  சொல்லுங்க  பார்ப்போம்


 பிகில் 


7  மோட்டிவேட்  பண்ரதுக்கு இவரு  பெரிய  சமுத்திரக்கனி 


7  ஹேப்பி  வளைகாப்பு  மேடம்


 எதுக்கு  மேடம் ? அக்கான்னே  கூப்டு


 உங்க  தங்கச்சியை  லவ்வறேன்., அக்கானு  கூப்ட்டா  முறை  மாறிடுமே? 


8  பிராஜெக்ட்ல  சிங்கம் , ஆடு  இந்த  ரெண்டு  பொம்மையையும்  பக்கத்துல  வெச்சிருக்கியே? சிங்கம்  ஆட்டை  சாப்பிட்டுடாதா?


 இது  புரட்டாசி  மாசம், அசைவம்சாப்பிடாது  சார்


9  எவ்ளோ  பெரிய  பிரச்சனையா  இருந்தாலும்  ஒரு  சாரி  கேட்டா  முடிஞ்சிடுது 


10  ஹாய்  கூகுள் , என்  ஆள்  எங்கே  இருக்கிறாள் ?


 சுரேஷ்  கூட 


11  சன்னி  லியோன்  படம் சர்ச்  போட்டா  திண்டுக்கல்  ஐ  லியோனி  ஃபோட்டோ  வருதே?


12   கல்ச்சுரல்  புரோகிரமை  கேர்ள்ஸ்  பார்த்துக்குவாங்க 


 அப்போ  கேர்ள்ஸை  யார்  பார்த்துக்குவாங்க ?


13  வலிச்சா  எல்லாரும்  அழுவாங்க, ஆனா  ஒரு  பொண்ணு  சந்தோஷத்தோட  வலியைத்தாங்கிக்கிட்டா  அது  பிரசவ  வலி  தான்


14  செத்த  பயலுகளானு  ஈசியா  சொல்லிடலாம், ஆனா  சாவு  சாதாரண  விஷயம்  இல்லை 


15  சாக  வழி  தேடாதீங்க   வாழ  வழி  தேடுங்க 


16  கோபத்துக்கு  ஆயுசு  கம்மி , ஆனா  அன்புக்கு  வலிமை  அதிகம் , 


17 சாக  100  வ்ழிக்ள் இருக்கு  ஆனா வாழ  கோடி  வழிகள்  இருக்கு 


18  எவ்ளோ  பெரிய  பிரச்ச்சனையா  இருந்தாலும்  ஃபிரண்ட்ஸ்  கிட்டே  மனம்  விட்டுப்பேசினாலே  அது  லேசாகிடும். பாதியா  குறைஞ்சிடும்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    கதைக்களம்  ஸ்கூலில்  நடப்பதாகவும், கதை  மாந்தர்கள்  ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ்  போலவும்  சொல்லப்படுகிறது, ஆனால்  நடிகர்கள்  தேர்வு  காலேஜ்  ஃபைனல் இயர்  போல  தடிமாடுகள்  மாதிரி  இருக்காங்க 


2  ஒரு  வகுப்புக்கு இத்தனை  மாணவர்கள்  தான்  இருக்க  வேண்டும்  என  கட்டுப்பாடு  இருக்கும்போது இரு  ஸ்கூலையும்  இணைக்கும்போது  ஒவ்வொரு வகுப்பிலும்  இரு  மடங்கு  மாணவர்கள்  இருப்பார்களே? அதுக்கு  பர்மிஷன்  உண்டா? 


3  ஞாபக சக்தி  வளர  வல்லாரைக்கீரை , வெண்டைக்காய்  இவற்றை  சாப்பிட்டால்  தான்  நல்லது , ஆனா  தயிர்ல  சர்க்கரை  கலந்து  சாப்ட்டா   ஞாபகசக்திக்கு  நல்லதுனு  ஒரு  டயலாக்  வருது . அஸ்கா  சர்க்கரை  உட  நலனுக்குக்கேடு, ஏன் இப்படி  தவறான  தகவல் தருகிறார்கள் ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   டீன்  ஏஜ்  காரர்களுக்குப்பிடிக்கும், தங்கள்  பள்ளி  வாழ்க்கையை  திரையில்  காண  விரும்புபவர்களும் பார்க்கலாம், ரேட்டிங்  2 / 5