Tuesday, January 09, 2024

FALIMY (2023) -மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா) @ ( டிஸ்னி + ஹாட் ஸ்டார்)


 டைட்டிலைப்பார்த்ததும்  எதுனா  ஸ்பெல்லிங்க்  மிஸ்டேக்  ஆகி  இருக்குமோ? என  செக்  செய்து  பார்த்தேன். பிறகுதான்  தெரிந்தது.  நன்றாக  இருக்கும்  ஃபேமிலி  இடம்  மாறி  ஃபலிமி  என  ஆனது  போல  இது  முதல்  பாதி  காமெடி  டிராமா  ஆகவும் , பின் பாதி  ரோடு  சைடு  ட்ராவல்டு மூவி  ஆகவும்  கடைசியில்  எமோஷனல்  டிராமாவாகவும் பல  பரிமாணங்களில்  அவதாரம்  எடுக்கிறது .  தியேட்டர்களில்  ரிலீஸ் ஆன  போது  அமோக  வரவேற்பை  பெண்களிடம்  பெற்ற  படம். ஆண்கள்  தான்  விக்ரம், ஜெயிலர்  , லியோ  மாதிரி  மசாலா  ஆக்சன்  படங்களை  ரசிக்கிறார்களே? 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  தன்  அம்மா, அப்பா , அப்பாவின்  அப்பா  , தம்பி  என  கூட்டுக்குடும்பமாக  வாழ்ந்து  வருபவன். இவன்  டப்பிங்  குரல்  கொடுக்கும்  கலைஞன், இன்னும்  திருமணம்  ஆகவில்லை 


 நாயகனின்  தாத்தாவுக்கு  நீண்ட   நாட்களாக  காசி  போக  ஆசை . ஆனால்  யாரும்  அவரைக்கூட்டிச்செல்லவும்  தயார்  இல்லை , தனியே  அவரை  அனுப்பவும்  தயார்  இல்லை . அவர்  காசி  போக  மிக  ஏக்கமாக  இருக்கிறார்


 நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  பெண்  பார்த்தார்கள் . பெண்  ஒரு  ஸ்கூல்  டீச்சர். மூன்று  மாசம்  டைம்  கொடுங்க  என்று  சொன்ன  பெண்  வீட்டாரிடம்  இருந்து  பதில்  இல்லை. பிறகு  எப்படியோ  அந்த  இடம்  ஓக்கே  ஆகி  நிச்சயதார்த்தம்  நடக்கிறது 


  நிச்சயம்  ஆன  தினம்  அன்று  மேடையில்  எல்லோர்  முன்பும்  ஒரு  ஆள் மணப்பெண்ணை  பளார் என  அடித்து  விடுகிறான்.  ஒரு  தலையாக  அவளைக்காதலித்த  தறுதலை  அவன் . ஆனால்  நாயகனுக்கு  ஒரு  குழப்பம்  கலந்த  சந்தேகம். காதலனாக  இருக்குமோ  என . இதனால் அவன்  வேலையில்  நாட்டம்  இல்லாமல்  இருக்கிறான்


  ஒரு  மாற்றம்  தேவைப்படுகிறது .  அதனால்  தாத்தா  உட்பட  தன்  குடும்பத்தினரை  அழைத்துக்கொண்டு  காசி  செல்கிறான். காசி  நோக்கி  செல்லும்  பயணத்தில்  ஏற்படும்  காமெடி  சம்பவங்கள் தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  பசீல்  ஜோசப்  இயற்கையான   அமைதியான  நடிப்பு . அப்பாவிடம்  பேசும்  அந்த   ஒரு  காட்சி  போதும்  அவரது  நடிப்புக்கான  ஒரு  சோறு  பதம் .  நாயகியிடம்   வழிவது ,  மருகுவது  எல்லாம்  பக்கா .


 நாயகனின்  அப்பா  ஆக ஜெகதீஷ். ஆரம்பத்தில்  முசுடு  பிடித்த  ஆசாமி  மாதிரி  வருபவர்  போகப்போக  நம்  மனதில்  தங்கி  விடுகிறார்.

நாயகனின்  அம்மாவாக  வரும்  மஞ்சு  பிள்ளை  பிரமாதமான  நடிப்பு . ஆக்சுவலா  இவர்  ஒரு  காமெடி  நடிகை , கேரளாவில்  பல  சீரியல்களில்  நடித்திருக்கிறார். இதில்  குணச்சித்திர  நடிப்பு


நாயகனின்  தம்பி  ஆக  சந்தீப்  பிரதீப்  கனகச்சிதம் . நாயகனுக்கு  நிச்சயிக்கப்பட்ட  பெண்ணாக  ரெய்னா  ராதா கிருஷ்ணன்  அக்மார்க்  கேரளத்துப்பைங்கிளி. அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  நல்ல  நடிப்பு 


127  நிமிடங்கள்  ஓடும்படி  படத்தை  ட்ரிம்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் நிதின்  ராஜ்  அருள் . விஷ்ணு  விஜய்  இசையில்  பாடல்கள் ஓக்கே  ரகம் பின்னணி  இசை  கச்சிதம் பப்லு  அஜூ  வின்  ஒளிப்பதிவில்    காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை . காசியின்  அழகைக்கண்  முன்  நிறுத்துகிறது . 


சஞ்சோ  ஜோசப்  உடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் நிதீஷ்  சகாதேவ்


சபாஷ்  டைரக்டர் (நிதீஷ்  சகாதேவ்) 


1    நாயகனின்  அப்பா  டீ  விற்கும்   சிறுவன்  தர  வேண்டிய  சில்லறைக்காக  அவன்  பின்னால்  ஓடி  ரயிலை  தவற  விடும்  காட்சியும், அவருக்குக்கை  கொடுக்க  வந்த  அவர்    மனைவி   கீழே  விழப்போகும்போது  கணவர்  தாங்கி[ப்பிடிப்பதும்  ஸ்லோ  மோஷன்  காட்சியில்  நல்ல  ரொமாண்டிக்  சீனைப்பார்த்த  எஃபக்ட் 


2   நாயகனுக்கு  நிச்சயிக்கப்பட்ட  பெண்ணுடன்  நாயகன்  நிகழ்த்தும்  வாட்சப்  உரையாடல்கள் .  ஃபோன் கான்வோக்கள் 

3   ரயிலை  மிஸ்  செய்த  குடும்பத்துக்கு  லிஃப்ட்  கொடுக்கும்  அந்த  டிரைவர்  பண்ணும் அடாவடிகள் . அந்த  காட்சிகள்  படமாக்கப்பட்ட  விதம்


4    நாயகன்  அண்ட்  ஃபேமிலி  போலீஸ்  ஸ்டேசன்  ல    மாட்டிக்கொள்வதும்  இவர்கள்  எல்லாம்  ஒரே  குடும்பம்தானா? என  போலீஸ்  சந்தேகப்படும்  காட்சியும், அதை  அவர்கள்  எதிர்  கொண்ட  விதமும் 


5  தாத்தாவுக்கும், பக்கத்து  வீட்டு  தாத்தாவுக்கும்  உண்டான  நட்பு .  செண்ட்டிமெண்ட்  காட்சிகள் 


6  வீட்டை  க்ளீன்  பண்ண  வட நாட்டு  ஆளை  ரெடி  பண்ணிட்டு  அதற்கான  சம்பளத்தை  வீட்டில்  விட்டுச்செல்லும்  மனைவி , ஆளை  வேலை  செய்ய  விடாமல்  தன்  நண்பனை வர்ச்ச்சொல்லி  இருவரும்  சேர்ந்தே  வீட்டை க்ளீன்  பண்ணி  காசை  ஆட்டையைப்போடும்  கணவன் 


7  ஹிந்தி  மொழியை  வைத்து  பாஜக  கட்சியை  கிண்டல்  செய்யும்  காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1   பக்கத்துல  ஒரு  வெலையா  வந்தேன், அப்டியே  உன்னையும்  பார்த்துட்டுப்போலாம்னு  வந்தேன் 


 அப்டியா? என்ன  வேலை ?


 அது  வந்து ...


2  காசில  தான்  மரனத்தைக்கொண்டாடறாங்க 


3    என்  ஐநூறு  ரூபா கூட  கொஞ்சம்  சில்லறையும் விட்டுட்டுப்போய்  இருக்கானே?


 அவர்    ஒரு  சில்லறை  என்பது  அவனுக்கும்  தெரிஞ்சிருக்குமோ?


4   ஹிந்தி  தெரியாது 


  என்னபா? இந்தி  நம் தேசிய  மொழி  அப்டீங்கறாங்க 


5   வியாபாரத்தில்  நட்டம்  ஆனா  அவன்  ஃபேமிலி  மெம்பர்ஸ்  கூட  அவனை  மதிக்க  மாட்டாங்க 


6    காசில  தொலைஞ்சவங்க  கிடைக்கனும்னு நாம  நினைச்சா  போதாது , தொலைஞ்சு  போனவங்களும்  நினைக்கனும்


7  ஒருவரை  ஒருவர்  புரிஞ்சுக்காம  இருக்கறதுக்கு  மேரேஜ்  பண்ணிக்காமயே  இருந்திருக்கலாம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பயணி  ரயிலைத்தவற  விட்டால்  அவர்  குடும்பத்தினர்  டக்னு  அபாயச்சங்கிலியைப்பிடித்து  இழுத்தால்  மேட்டர்  ஓவர் . 


2   நாயகன்  படித்தவர். கோச்  நெம்பர்  8  எங்கே  என  எல்லோரிடமும்  ஏன்  கேட்கிறார்?  ஸ்பீக்கரில்  கோச்  பொசிசன்   சொல்வார்கள் . அது  போக   ரயில்வே  ஸ்டேஷனிலேயே  கோச்  பொசிசன்  எழுதி  வைத்திருப்பார்களே? 


3    நாயகன்  தான்  வேலை  செய்யும்  இடத்தில்  ஒரு  வாரத்துக்கான  டப்பிங்  பணிகளை  முடித்து  விட்டேன்  என்கிறார்.  வேறு  ஒரு  இடத்தில்  வேறு  ஒரு  நபரிடம்  இரு  வாரப்பணிகள்  ஓவர்  என்கிறார்


4  நாயகனின்  ரசிகன்  காசியில்  தொலைந்து போன  தாத்தாவைக்கண்டு  பிடிக்க  உதவுகிறான். அவனிடம்  தாத்தா  வின்  ஃபோட்டோவைக்காட்டி  இருக்கலாமே?  தேவை  இல்லாமல்  அந்த  ஆள் மாறாட்டக்குழப்பக்காட்சிகள்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன்  காண  வேண்டிய  தரமான  படம்.  ரேட்டிங்  3 / 5 


Falimy
Theatrical release poster
Directed byNithish Sahadev
Written by
  • Nithish Sahadev
  • Sanjo Joseph
Produced by
  • Lakshmi Warrier
  • Ganesh Menon
  • Amal Paulson
Starring
CinematographyBablu Aju
Edited byNidhin Raj Arol
Music byVishnu Vijay
Production
companies
  • Cheers Entertainments
  • Sooper Dooper Films
Distributed byIcon Cinemas
Release date
  • 17 November 2023[1]
Running time
127 minutes[2]
CountryIndia
LanguageMalayalam

Monday, January 08, 2024

சபாநாயகன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)


  அசோக்  செல்வன்  கேரியரில்  முதல்  பிளாக்  பஸ்டர்  படம்  போர்  தொழில்  என்றாலும்  முதல்   சோலோ  ஹீரோ கமர்ஷியல் ஹிட்   ஃபிலிம்  என  சபாநாயகன்  படத்தை  சொல்லலாம், ஆல்ரெடி  செம  ஹிட்  ஆன  ஆட்டோ  கிராஃப் , அட்ட  கத்தி , 96 ,  ஆகிய  தமிழ்ப்படங்கள் ,  பிரேமம் , ஹ்ருதயம் , ஜூன்  ஆகிய  மலையாளப்படங்கள்  சாயலில்  வந்திருக்கும்  ஒரு  ரொமாண்டிக்  காமெடி  டிராமா  இது .


 எல்லோர்  வாழ்க்கையிலும்  பள்ளி , கல்லூரி  வாழ்க்கை  இருக்கும் என்பதால்  பள்ளிக்காதல் , கல்லூரிக்காதல்  வாழ்க்கையைப்படம்  பிடிப்பதில்  இயக்குநர்கள்  ஆர்வம்  காட்டுகிறார்கள் ., இயக்குநர்  சி எஸ்  கார்த்திகேயன்  ஒரு  கலகலப்பான  காதல்  கதையை  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் உடன்  தந்து  வெற்றி  பெற்று  இருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நண்பர்களுடன்  சரக்கு  அடித்துக்கொண்டிருக்கும்போது   நள்ளிரவில்  நடு  ரோட்டில்  போலீஸ்  கைது  செய்கிறது. அவரை  ஜிப்பில்  ஏற்றி  போலீஸ்  ஸ்டேஷன்  கொண்டு  போகும்போது  அவர்  தன்  முன்னாள் காதல்  கதைகளை  அவிழ்த்து  விடுகிறார்


நாயகன்  +2  படிக்கும்போது  ஒரு  பெண்  மீது  காதல்  வசப்படுகிறான். ஆனால்  ஒரு  முறை  கூட  அவளிடம் பேசவும்  இல்லை . காதலை  சொல்லவும்  இல்லை .  வெறும்  லாங்க்  ஷாட்  பார்வைகளிலேயே  முதல்  44  நிமிடங்கள்  பள்ளி  வாழ்க்கைக்காதல்  போகிறது 


 பள்ளி  வாழ்க்கை  முடிந்ததும்  கல்லூரி  வாழ்க்கை  .காலேஜ்  படிக்கும்போது  வகுப்புத்தோழி  ஒருத்தியைக்காதலிக்கிறான். அவளும்  காதலிக்கிறாள் . இருவரும்  அடிக்கடி  சந்திக்க  தகவல்  பரிமாற  ஒரு  காதல்  தூத்வனை  ரெடி  செய்கிறான்  நாயகன். ஆனால்  கடைசியில்   தூதுவனே  காதலின்  எமன்  ஆகிறான். காலேஜ்  லவ்  ஸ்டோரி  எபிசோட் 30  நிமிடங்கள்


காலேஜ்  காதல்  அல்வா  கொடுத்த  பின்  நாயகன்  தன்  முன்னாள்  முதல்  ஸ்கூல்  கிரஷ்  ஷை  சந்திக்கிறான்.  தன்  காதலை  அவன்  வெளிப்படுத்திய  போது  ஸ்கூலில்  படிக்கும்போதே  சொல்லி  இருக்கலாமே? முதலில்  வருபவருக்கே  முன்னுரிமை  எனக்கு  ஆல்ரெடி  ஒரு பாய்  ஃபிரண்ட்  இருக்கிறான்  என  சொல்லி  விடுகிறாள் . இதற்குப்பின்  நாயகன்  எப்படி  தன்  ஸ்கூல்  கிரஷை  அடைகிறான்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக  அசோக்  செல்வன்  டான்ஸ் , காமெடி , காதல்  என  கலந்து  கட்டி  கலக்கி  இருக்கிறார். ஆனால்  ஸ்கூல்  ஸ்டூடண்ட்  ஆக  அவரே  தனுஷ்  போல  மீசையை  எடுத்து  விட்டு  நடித்ததெல்ல்லாம்  ஓவரோ  ஓவர் . ஆனால்  அந்த  கேரக்டருக்காக  உடலை  இளைக்க  வைத்து  மெனக்கெட்டு  இருக்கிறார். அவருக்கும்  கஷ்டம், பார்க்கும்  நமக்கும்  கஷ்டம் 


ஸ்கூல்  கிரஷ்  ஆக  கார்த்திகா  முரளி  தரன்  முன்  பாதியில்  அவருக்கு  டயலாக்சே  இல்லை . சும்மா  தலைக்குக்குளித்து  லூஸ்  ஹேரை  அப்படி  இப்படி  ஒதுக்கினால்  போதும்  என  இயக்குநர்  சொல்லி  விட்டார்  போல .  ஆள்  நல்ல  ஹைட் . ஒல்லி  கில்லி  ஆக  மனம்  கவர்கிறார்.


 காலேஜ்  காதலி  ஆக   சாந்தினி  சவுத்ரி  குட் .  முக  பாவனைகளில் ஆங்காங்கே  ஜோதிகாத்தனம்  எட்டிப்பார்க்கிறது. ஓவர்  ஆக்டிங்கை  குறைத்திருக்கலாம்


கதைக்குள்  கதையாக  வரும்   வாலி  ஜோதிகா  டைப்  காதலி  ஆக  மேகா  ஆகாஷ்  போர்ஷன்  ரசிக்க  வைக்கிறது . 


போலீஸ்  கான்ஸ்டபிள்ஸ்  ஆக  வரும்  மயில் சாமி ,  உடுமலை ரவி  இருவர்  கொடுக்கும்  ரீ  ஆக்சன்கள்  சிரிப்புப்பட்டாசு 


இன்ஸ்பெக்டர்  ஆக  வரும்  மைக்கேல்  தங்கதுரை   கேரக்டரில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்   இருக்கிறது .


நாயகனின்  அக்காவாக  வரும்   விவியாசந்த்  மற்ற  மூன்று  நாயகிகளை  விட  க்யூட்டாக  இருக்கிறார். நடிப்பும்  குட் ., நண்பர்  ஆக  வரும்  அருண்  குமார்  நடிப்பும்  கல கல 


லியோன்  ஜேம்சின்  இசையில்  மூன்று  பாடல்கள்  ஹிட்  ஆகி  இருக்கின்றன. பிஜிஎம்மும் கொண்டாட்டமாக  இருக்கிறது . 


மூன்று  வெவ்வேறு  கால  கட்ட  கதைகளுக்கு  ஏற்ப  மூன்று  ஒளிப்பதிவாளர்கள் .  அனைவருமே  திறம்பட   கேமராவைக்கையாண்டு  இருக்கிறார்கள் . மூன்று  நாயகிகள் , நாயகனின்  அக்கா  என  நான்கு  பெண் கதா  பாத்திரங்களின்  க்ளோசப்  ஷாட்களும்  அழகு  . 


கணேஷ்  சிவாவின்  எடிட்டிங்கில்  ரெண்டரை  மணி  நேரம்  டைம்  ட்யூரெஷனில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். அளவு  எடுத்தது  போல  ஸ்கூல்  லைஃப்  லவ் , காலேஜ்  லைஃப்  லவ்  தலா  30  நிமிடங்கள் , கதைக்குள்  காதல்  கதைக்கு  30  நிமிடங்கள்  என  ஒதுக்கி பேலன்ஸ்  பண்ணி  இருப்பது  சிறப்பு 


திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் சி எஸ்  கார்த்திகேயன்.


சபாஷ்  டைரக்டர் (சி எஸ்  கார்த்திகேயன்)

1  மூன்று  நாயகிகள்  மற்றும்  நாயகியின்  அக்கா  என  நான்கு  பெண் கதாபாத்திரங்களுக்கு  ஆடை  வடிவமைப்பு  அழகு  + கண்ணியம் 

2  நாயகன்  குள்ள  அப்பு  கமல்  கெட்டப்பில்  வரும்  சோக  சீன்  கலகலப்பு 

3  சச்சின்  200  ரன்  அடித்தால்  லவ்க்கு ஓக்கே  என  தோழி  சொன்னதும்   பரபரப்பாக  நகரும்  காட்சிகள்  அபாரம் 

4    நண்பன்  டாக்டர்  என  பொய்  சொல்லி  சமாளிப்பதும் , நண்பனின்  தோழி  அதை  ஃபாலோ  செய்து  காதலிக்க  முயல்வதும்  செம  எண்ட்டர்ட்டெய்ன்மெண்ட் 

5  மேகா  ஆகாஷ்  ஸ்லீவ்லெஸ்  டிரசில்  இருக்கும்போது  அதை  ரசித்து  விட்டு  அதே சமயம்  அங்கே  நண்பர்கள்  வர  இருக்கிறார்கள்  என்பதை  அறிந்து  கோட்  கொடுத்து  குளிரும், இதை  போட்டுக்கோ  என்பதும்  இது  எல்லாம்  என்  மீது  இருக்கும் காதலால்  தானே  என  கேட்கும்  காட்சிகள்  காதல்  ரசம்  சொட்டும்  காட்சிகள் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   பேபிமா 

2  சீமக்காரியே

3  சிக்கிக்கிட்டா 


  ரசித்த  வசனங்கள் 


1    ஏட்டய்யா , நான்  ஒரு   காலேஜ்  ஸ்டூடண்ட்

அப்டீங்களா? இப்போ  என்ன  சல்யூட் அடிக்கனுமா?

2   இந்த  பாட்டிலில்  இருக்கும்  சரக்கு  முக்கியமான  எவிடென்ஸ். டேஸ்ட்  பண்ணனும், சாரி ,  டெஸ்ட்  பண்ணனும்,

3  படிக்கக்காலேஜ்  வந்தாலு,ம்  கத்துக்கறது  காதல்  தானே ?

4   மச்சி , அதோ  அவளை  நீ  எடுத்துக்கோ , இவளை  நான்  எடுத்துக்கறேன்

எடுக்கும்போது  யாராவது  தட்டி  விட்டுட்டா? 

5   இப்போதாண்டா  தெரியுது , கூட  ஆடுனவங்க  எல்லாம்  க்ரூப்  டான்ஸர்ஸ்  இல்லை . ஒவ்வொருத்தனும்  மனசுக்குள்ளே  ஹீரோவா  கற்பனை  பண்ணி  இருக்கானுங்க 

6   இந்தப்பழம்  புளிக்கும்னு  சொல்லும்  முன்னால்  நாலஞ்சு  தடவையாவது  ட்ரை  பண்ணிப்பார்த்திருக்கனுமில்லை?

7   ஏண்டா  எதுக்குடா  ஹேண்ட்ஸ்  அப் போஸ்ல வெளில  வர்றே? அவரு  என்ன  கைல  துப்பாக்கியா  வெச்சிருக்காரு ?

8  அய்யோ  ஹய்யோ இந்தப்பொண்ணுங்களை  எல்லாம்  பார்க்கும்போது யார்  டீச்சர் ? யார் ஸ்டூடண்ட்ஸ்னே  தெரியலையே? 

9   டேய் , பாட்டு  எல்லாம்  வேண்டாம், ஸ்ட்ரைட்டா  கதைக்கு  வா 

10   எக்ஸ்க்யூஸ்  மீ . லீக்  ஆகுது 

என்னது ?  ஓ  பியூரெட்டா?

11   நீங்க  மிஸ்டர்  அர்விந்த்  தானே?

ஆமா ,   எப்படித்தெரியும்?

உங்க  புகழ்  தான்  டிபார்ட்மெண்ட்  பூரா  “ லீக்  “  ஆகி  இருக்கே? 

12  பார்க்கறாங்கனு  தெரிஞ்சும்  போஸ்  கொடுத்து  நின்னுட்டு   கோவிச்சுட்டுப்போற  மாதிரி  இந்தப்பொண்ணுங்க  பண்ற   அலம்பல்  இருக்கே? 

13   நான்  ஐ டி... அவ  வேற  சப்ஜெக்ட்

அதனால  என்ன ? வீட்டுக்கு  ஒரு  ஆள்  ஐ டி  ல  இருந்தா  போதும் 

14   ஏன்  காமெடி  பண்றீங்க ?

நானா?  காமெடியா?  எப்போ ?


15   லவ்  பண்ணி   ஏமாத்தறவன்  மாதிரி  அலைய  விட  மாட்டேன்

 அப்படி  ஒரு  எண்ணம்  வேற  இருக்கா ?

 ஏமாத்தும்  எண்ணம்  இல்லை , ஆனா  லவ்  பண்ணும்  எண்ணம்  இருக்கு 


16 லவ்  பண்றதுக்கு  முன்னாடி  யோசிக்கனும், லவ்  பண்ணிட்டா  அப்றம்  யோசிக்கக்கூடாது 


17   நீ  அடிச்சதும்  அவன்  அவ்ளோ  தூரமாவா  தள்ளி  விழுந்தான் ?


கதை  சொல்லும்போது  10  கிமீ  தள்ளி  விழுந்தமாதிரி  சொன்னாதான்  எஃபக்ட்  ஆக  இருக்கும் 


18 காதலிக்கறவனை விட  தூது  போகிறவன்  தான்  அதிகம்  லவ்  பன்றான் 


19   ஃபர்ஸ்ட்   யார் டேட்  போட்டாங்கனு  முக்கியம்  இல்லை ,  யார்  சோல்  மேட்  ஆனாங்க  அதான்  முக்கியம் 


20   அவன்  டாக்டரா?  என்  கூட  +2  படிச்சப்ப  கம்ப்யூட்டர்  சயின்ஸ்  தானே  படிச்சான் ?


 அப்றம்  இம்ப்ரூவ்மெண்ட் ல  எம் பி பிஎஸ்  படிச்சு  டாக்டர்  ஆகிட்டான் 


21   அவளைப்பார்றா , என்  கிட்டேயே  வந்து  நீ  ஊதாரி , வெத்து  வேட்டுனு  உன்னைப்பற்ற்ய  உண்மைகளை  எல்லாம் சொல்றா


22   டேய் , நீ  ரொம்ப  நாளா  டாக்டர்  ஆகனும்னு  ஆசைப்பட்டியே? அதான்  அவ கிட்டே  சொல்லும்போது    உன்னை  டாக்டர்  ஆக்கிட்டேன் 


23   உன்  கிட்டே  பேசும்போது  அவ  உதட்டைக்கடிக்கறாளா?


  எங்கே? இப்போதான்  கையைப்பிடிக்கற  அளவு  வந்திருக்கோம், அவ  எங்கே  என்  உதட்டைக்கடிக்கறா?


 அடேய் . அவ  உன்  கிட்டேப்பேசும்போது  அவ  உதட்டைக்கடிக்கறாளா?னு  கேட்டேன்


24  அவளைப்பாருடா , சாஃப்ட்  ஆன  மான்  புல்  சாப்பிடற  மாதிரி  இருக்கா . நீ  புலி  மாதிரி  இருக்கே 


25  பொண்ணுங்க  இல்லாத  லைஃப்  எவ்ளோ  ஸ்மூத்தா  போகுது  பாரு 


26  வேஸ்ட்டிங்  டைம்  ஈஸ்  எ  க்ரைம் 


27   ஃபிரண்ட்ஷிப்க்காக  ஃபிகரைக்கழட்டி  விட்ட  முதல்  ஆள்  நீ  தான் 


  ஒரு  நிமிசம்  இரு , அவ  கால்  பண்றா


28    எங்கடா  பசங்க  ஃபிகருங்களை  விட்டு  வைக்கறானுக , எல்  கே ஜி ல  அப்ளை  பண்ணாக்கூட  ஆர்  ஏ சி  (  ரிசர்வேசன்  எகெய்ன்ஸ்ட்  கேன்சலேசன் )  தான்  கிடைக்குது 


29   நம்ம  தகுதிக்கு  மீறுனதோ  இது ?

 நம்மைதான்  யாருமே  பார்க்கலையேடா 


30  நீ  ஒவ்வொரு  டைம்  லவ்  ஃபெய்லியர் ஆகறப்ப உனக்கு  ஏற்படும்  சேதம்  எங்களைத்தாக்குது 


31  ஃபிரண்ட்னா  யார்  தெரியுமா? தன்  கூட  இருக்கறவன்  தப்பான  டெசிஷன்  எடுக்கறான்னா  அவன்  செஞ்சது  தப்புனு  சொல்லனும்


32   வாழ்வது  ஒரு  டைம், இஷ்டப்பட்டவளோட  வாழாம  கஷ்டப்படுவது  ஏன் ? 


33  நீ  உண்மையா  ஒரு  பொருள்  மேல  அல்லது  ஒரு  ஆள்  மேல  இஷ்டப்பட்டா  இந்த  உலகமே  உனக்கு  உறுதுணையா  நிற்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   காலேஜ்  காதலி  நாயகனைக்காதலிப்பதாக  விஷூவலாகக்காட்டுகிறார்கள் . ஆனால்  தூது  போனவனை  காதலிப்பதாக  வசனமாகத்தான்  வருகிறது . அது  விஷூவலாக  இல்லை . மேலும்  என்ன  காரணத்தால்  நாயகனை  விட்டு  அந்த  தகர  டப்பா  தாடிக்காரனை  லவ்  பண்றா  என்ற  காரணமும்  சொல்லப்படவில்லை . நம்பகத்தன்மை  இல்லை 


2    ஸ்கூல்  கிரஷ்க்கு  நாயகன்  முகம்  ஞாபகமே  இல்லை  என்பதும்  நம்ப  முடியவில்லை 


3  ஸ்கூல்  கிரஷ்க்கு  ஆல்ரெடி  ஒரு  ஆள் இருக்கிறான்  என்பதும்  வசனமாகத்தான்  வருகிறது , விஷூவலாகக்காட்சி  வைக்கவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   டீன்  ஏஜ்  இளைஞர்கள் , இளைஞிகள்  அவசியம்  பார்க்கலாம், ஆளே  கிடைக்காத  முரட்டு  சிங்கிள்கள்  தவிர்க்கவும்,  ரேட்டிங்  3 / 5 


Saba Nayagan
Theatrical release poster
Directed byC. S. Karthikeyan
Written byC. S. Karthikeyan
Produced byAravind Jayabalan
Iyyappan Gnanavel
Captain Megavanan Isaivanan
StarringAshok Selvan
Megha Akash
Karthika Muralidharan
Chandini Chowdary
CinematographyBalasubramaniem
Dinesh Purushothaman
Prabhu Rhagav
Edited byGanesh Siva
Music byLeon James
Production
companies
Clear Water Films INC.
I Cinema
Captain Mega Entertainment
Distributed byClear Water Films INC.
Captain Mega Entertainment
Release date
22 December 2023
CountryIndia
LanguageTamil

Sunday, January 07, 2024

மரகதம் (1959 ) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ யூ ட்யூப்

 


குங்கப்பூவே  கொஞ்சும்  புறாவே  செம  ஹிட்  பாட்டை  யாரும்  மறந்திருக்க  மாட்டோம், அந்த  வரியில்  டைட்டிலாக  கொண்டு  ஒரு  படமே   சமீபத்தில் வெளியானது . கருங்குயில்  குன்றத்துக்கொலை  என்னும்  நாவலைத்தழுவி  திரைக்கதை  எழுதியவர்  வீணை  எஸ்  பாலச்சந்தர் . நல்ல திரைக்கதையாக  அமைந்தும்  வெளி  வந்த  கால     கட்டத்தில்  கமர்ஷியலாக  இது  வெற்றி  பெறவில்லை 

 ( என  விக்கி  பீடியா  கூறுகிறது ) 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1  -  வில்லன்  ஒரு  கொள்ளைக்காரன், அவனைத்துரத்திக்கொண்டு  போலீஸ்  கூட்டம் வந்த  போது  அவன்  ஒளிந்திருக்கும்  இடம்  தெரிந்தும்  போலீசில்  காட்டிக்கொடுக்காமல்   நாயகி காப்பாற்றியதற்காக  வில்லன்  உனக்கு  என்ன  வரம்  வேண்டுமானாலும்  , எப்போது  வேண்டுமானாலும் கேள்  நிறைவேற்றுகிறேன்  என  வாக்குக்கொடுக்கிறான்


சம்பவம்  2 - நாயகன்  ஒரு  ஜமீன்  வாரிசு. குதிரையில்  நண்பனுடன்  உலா  வரும்போது  வீரப்பன்  ராஜ்குமாரை  பணயக்கைதியாகப்பிடித்து  வைத்துக்கொண்டது  போல   நாயகனைப்பிடித்து  வைத்துக்கொண்டு  ஜமீனுக்கு  பணம்  கேட்டுத்தூது  விடுகிறான். அப்போது  அங்கே  வந்த  நாயகி  நாயகனை  விடுவிக்குமாறு  வில்லனிடம்  கூறுகிறாள் . தன்  வாக்கை  வில்லன்  நிறைவேற்றுகிறான் 


சம்பவம்  3 - நாயகியின்  வீட்டில்  தங்கி  நாயகன்  இளைப்பாறுகிறான். இருவருக்கும்  காதல். நாயகியின்  அப்பாவிடம்  காதல்  விஷயத்தைச்சொல்லி  திருமணத்துக்கு  சம்மதம்  கேட்கிறான். ஆனால்  அவர்  மறுக்கிறார். நீங்கள்  அரசகுலம்,  என்  மகள்  தீண்டத்தகாதவள்  என்கிறார்


  சம்பவம் 4 .- இது  16  வருடங்களுக்கு  முன்பு  நிகழ்ந்த  ஃபிளாஸ்பேக். கருங்குயில்  குன்றம்   என்ற ஜமீனுக்கு  ராஜாவாக  இருந்தவர்  உடல்  ஊனமுற்றவர். அதனால்  அவர்  திருமணம்  செய்து  கொள்ளவில்லை . தன்  தம்பிக்கு  திருமணம்  செய்து  வைத்து  ஜமீனுக்கு  ராஜா  ஆக்குகிறார். ஒரு  கட்டத்தில்  தம்பிக்கு  சம்பந்தம்  செய்த  இடத்தில்  அதாவது  தம்பியின்  மனைவியின்  அப்பாவுக்கும் ,  ஜமீன்  ராஜாவுக்கும்  தீரா  பகை  ஏற்படுகிறது. அதனால்  உன்  மனைவியை  விவாகரத்து செய்  என  ராஜா  கூற  தம்பி  மறுக்கிறான். அதனால்  கோபம் அடைந்த  ராஜா  அப்போ  ஜமீனை  விட்டு  வெளியேறு  என்கிறார். இதனால்  ஆத்திரம் அடைந்த  தம்பி  என்னை  துரத்தும்  உன்னைக்கொலை  செய்யாமல்  விட  மாட்டேன்  என  கூறுகிறார். அன்று  இரவே  ஜமீன்  ராஜா  கொலை  செய்யப்பட  தம்பி  கைதாகிறார். கோர்ட்டில்  வழக்கு  நடக்கிறது . சந்தர்ப்பங்கள் , சாட்சியங்கள்  தம்பிக்கு  எதிராக இருக்கின்றன . சிறை  தண்டனை  விதிக்கப்படுகிறது . சிறையில்  இருந்து  தப்பிய  தம்பி  தன்  மனைவியைப்பார்க்கப்போகிறான். அவளுக்கு  அவனை  அடையாளம்  தெரியவில்லை . தன்  மகளைக்காண்கிறான். அவளைத்துக்கிக்கொண்டு  தப்பி  விடுகிறான்.  அந்த  தம்பி  தான்  நாயகியின்  அப்பா ,  ஜமீன்  ராணி  ஆக  வேண்டியவர்  தான்  நாயகி . நாயகியின்  அம்மாவின்  தம்பி  தான்  நாயகன், அதாவது  நாயகனின் அக்கா  மகள்  தான்  நாயகி , கட்டிக்கும்  முறைப்பெண்


நாயகி  ஜமீன்  மாளிகைக்குப்போகிறாள் . அம்மாவுக்கு  நாயகி  தான்  தன்  மகள்  என்பது  தெரியாது . இதற்குப்பின்  உண்மையான  கொலையாளியை  எப்படிக்கண்டுபிடித்தார்  நாயகி  என்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  சிவாஜி  கணேசன்  கச்சிதமான  நடிப்பு.  முதல்  பாதியில் ஓவர்  ஆக்டிங்  எந்த  இடத்திலும்  இல்லை . 


நாயகி  ஆக  நாட்டியப்பெரொளி  பத்மினி  நடிப்பு  செம ,  பாடல்  காட்சிகளுக்கான  நடனங்கள்  நளினம் 


டி எஸ்  பாலைய்யா  நடிப்பு  குட் . நாயகியின்  அம்மாவாக  சந்தியா  ( இவர்  தான்  ஜெ  வின்  அம்மா  என  நினைக்கிறேன் ) 

காமெடிக்கு சந்திரபாபு.ஒரு  பாட்டுக்கு  அவரது  நடனம்  அட்டகாசம்


203  நிமிட்ங்கள்  என  விக்கிப்பீடியா  கூறுகிறது , ஆனால்  யூ  ட்யூப்  வெர்சனில் 150  நிமிடங்கள்  எடிடட்  வெர்சன்  தான்  கிடைக்கிறது 


எஸ்  எம்  சுப்பையா  வின்  இசையில்  ஏழு  பாடல்கள், அவற்றில் மூன்று  சூப்பர்  டூப்பர்  ஹிட் 


சைலென்  பொஸ்  தான்  ஒளிப்பதிவு . ஓக்கே  ரகம் 

டிஎஸ்டி  சாமி  என்பவர்  தான்  நாவல்  ஆசிரியர் . நாவலை  திரைக்கதை   ஆக்கி  வசனம்  எழுதியவர்  முரசொலி  மாறன் . இயக்கம்  எஸ் எம் ஸ்ரீ  ராமுலு  நாயுடு 


சபாஷ்  டைரக்டர்


1  தெளிவான  திரைக்கதை .  குழப்பம்  ஏற்படுத்தும்  சம்பவங்கள் ஏதும்  இல்லாமல்  ஆல்  செண்ட்டர்  ஆடியன்சுக்கும்  புரியும்  வண்ணம்  கதை  சொன்ன  விதம் 


2  கதைப்படி  நாயகிக்குத்தான்  காட்சிகள்  அதிகம், நாயகன் ஆக  சிவாஜியை  நடிக்க  வைத்த  சாமார்த்தியம்  குட் 


3  ஏழு  பாடல்களில் மூன்று  பாடல்கள்  செம  ஹிட் . பாடலைப்படமாக்கிய  விதம்  அழகு 


4  பத்மினியின் ஆடை  அலங்காரங்கள் , நாயகி- நாயகன்  கெமிஸ்ட்ரி , நாயகியின்  நடனம்  அனைத்தும்  அருமை 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பாலும்  நீரும்  போல் 


2  மாலை  மயங்குகின்ற  நேரம் 


3  கண்ணுக்குள்ளே  உன்னைப்பாரு 


4  பச்சைக்கிளி  போல  பவளச்சரம்  போல  பருவ  அழகு  ஜொலி  ஜொலிக்க 


5 ஆடினாள்  நடனம்  ஆடினாள்   அமுதத்தமிழ்  மொழியில் 


6 குங்குமப்பூவே  கொஞ்சும் புறாவே 


7  காவிரி  பாயும்


  ரசித்த  வசனங்கள் 


1   இவள்  தீண்டத்தகாதவளா? ஆம், என்னைத்தவிர  வேறு  யாரும்  தீண்டத்தகாதவள் 


2  உன்னை  நம்பாவிட்டால்  இந்த  உலகத்தில்  நம்பிக்கை  என்ற  வார்த்தைக்கே  அர்த்தம்  இருக்காது 


3  பதினாறு  வருடங்களுக்கு முன்  கவர்னருக்கு  என்  அப்பா  செய்த  சமையல்  இது  , அதை  அப்படியே  பத்திரமா  வெச்சிருந்து  உனக்குத்தர்றேன்


4  என்னை கழுதை  வேணும்னாலும்  கூப்பிடு  ஆனா  அண்ணா  என்று  மட்டும்  கூப்பிட்றாதே!

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  வீட்டில்  பணிப்பெண்ணாக  இருப்பவர்  கழுத்தில்  ஒரு  நெக்லஸ் , செயின் , கையில்  வளையல்கள்  என  தக தக  தங்கமாக  ஜொலிக்கிறதே? வசதியாக  இருந்தாலும்  வேலைக்கு  வந்த  இடத்தில்  இப்படி  ஆபரணங்களை  அணிவார்களா? ( இதுல காமெடி  என்னன்னா  நாயகி எந்த  விதமான  நகையும்  அணியவில்லை ) 


2  கடற்கரையில் ஒதுங்கிய  நாயகி  கடல்  நீரில்  நனைந்து  இருக்கிறாள் , அவளைக்காப்பாற்றிய  பெண் நாயகியின் ஈர  உடைகளை  மாற்ற  ஏற்பாடு  செய்யாமல்  ஒரு  போர்வையை  மட்டும்  போர்த்தி  விடுகிறார்


3 நாயகியின்  அப்பா  நாயகிக்கு  எழுதிய  கடிதத்தை  நாயகியிடம்  நாயகியின்  அம்மா  தான்  தருகிறார். தன்  கணவனின்  கையெழுத்தே  அவருக்கு  பார்த்த  ஞாபகம்  இருக்காதா?  சந்தேகமாக  இதை  எங்கேயோ  பார்த்தது  போல்  இருக்கே  ? என்கிறார்


4 நாயகியின்  அம்மா  உண்மையான  கொலையாளி  யார்? என்பதை  இந்த  உலகத்துக்குச்சொல்வேன் , கண்டுபிடிப்பேன்  என்கிறார். 16  வருடங்களாக  என்ன  செய்து  கொண்டுஇருந்தார் ? 


5  நாயகியின்  அப்பா  ஒரு  கட்டத்தில்  தன்  மகள்  ஆன  நாயகியிடம்  இந்த  அரணமனையில்  யாருக்கும்  தெரியாத  ரகசிய  வழிகள்  எனக்குத்தா தெரியும்  என்கிறார். ஆனால்  வில்லன்  ரக்சியமாக  பொற்காசுகளை  வைத்த  குகை  இருக்குகிடம்  தெரியவில்லை ?


6  மெயின்  வில்லனைப்பின்  தொடர்ந்து  நாயகி  ரகசியக்குகைக்குள்  போகும்போது  தலையில்  பூச்சூடி  இருக்கிறார். அந்தப்பூ  வாசம்  வில்லனுக்குத்தெரியவில்லையா? பூவாசம்  தன்னைக்காட்டிக்கொடுத்து  விடும்  என  நாயகிக்குத்தெரியாதா? 


7  பிஞ்சகன்  16  வருடங்களாக  மன்னனின்  வைரங்களை  ஒரு  குகையில்  பாதுகாத்து  ஏன்  வைக்க  வேண்டும் ? டெய்லி  அல்லது  அப்பப்ப  வந்து  பார்த்துட்டுப்போக  அது என்ன  அத்தை  பெண்ணா?  அதை  எடுத்துக்கொண்டு  எங்காவது  ஓடி  இருக்கலாமே?


8  நாயகன்  நாயகியின்  அப்பா  போல  மாறு  வேடம்  அணிந்து  வருகிறார். அவர் தான்  தன்  அப்பா  என  நினைத்து  சில  ரக்சியங்களை  நாயகி  கூறுகிறார். பொதுவாக  பெண்களுக்கு அறிவு , புத்திக்கூர்மை  அதிகம், தன்  சொந்த  அப்பாவுக்கும், மாறு வேடம்  போட்ட தன்  காதலனுக்கும்  வித்தியாசம்  தெரியாதா?  உடல்  மொழி , வியர்வை  வாசம்  காட்டிக்கொடுக்காதா?   

  

9   ஜமீன்  வாரிசான  நாயகன்  ஒரே  ஒரு  கட்டை  மீசையை  ஒட்டு  மீசையாக  வைத்துக்கொண்டு  ஒரு  வீட்டில்  வேலை  பார்க்கும்போது  யாருக்குமே  அவரை  அடையாளம்  தெரியவில்லை  என்பது  பூச்சுற்றல்


10  கொலைகாரன்  அடியாளுக்கு  எழுதிய  கடிதத்தில்  கொலை  பற்றி  விபரமாக  எழுதி இருக்கிறது.  இருவருமே  ஒரே  இடத்தில்  தான்  இருக்கிறார்கள்?  எதற்கு  கடிதம்  எழுதி  சாலிட்  எவிடென்சை  உருவாக்கி  சிக்கிக்கொள்ள  வேண்டும் ?



11  சிவாஜி  யின்  கடைசி  30  நிமிட  நடிப்பு  ஓவர்  ஆக்டிங்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியாக்ஜப்போகும்  ரொமாண்டிக்  டிராவாகப்பார்க்கலாம், க்ரைம்  த்ரில்லர்  என விளம்பரபபடுத்தினாலும்  த்ரில்லிங்க்  எலிமெண்ட்ஸ்  அதிகம்  இல்லை , சிவாஜி - பத்மினி கெமிஸ்ட்ரிக்காக, பாட்டுக்காக  பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 /5 


Saturday, January 06, 2024

பணத்தோட்டம் (1963) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ யூ ட்யூப்

 


1963  ஆம்  ஆண்டு  பொங்கல் ரிலீஸ்  ஆக  ஜனவரி 11  அன்று  வெளியான  பட,ம். பல  ஊர்களில்  70  நாட்கள் ஓடின. சில  ஊர்களில்  50  நாட்கள்  ஓடி  வசூலை  வாரிக்குவித்த  படம்.. சென்னை  பிளாசாவில்  84  நாட்கள், சென்னை  கிரவுன்  மேகலாவில்  70  நாட்களும்  ஓடின . . 


சி என்  அண்ணாதுரை  எழுதிய  ஒரு  புத்தகத்தின்  பெயர்  தான் பணத்தோட்டம் . அதையே  படத்தின்  டைட்டில்  ஆக்கி  விட்டார்  எம் ஜி ஆர் . ஆனால்  அந்தக்கதைக்கும் , இந்தக்கதைக்கும்  சம்பந்தம்  இல்லை . எம் ஜி ஆர்  நடிப்பில்  பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆன  முதல்  படம்  இது 


கே   சங்கர்  இயக்கத்தில்  எம்  ஜி ஆர்  நடித்த  இந்தப்படத்தின்  ஷூட்டிங்  மாலையில்  நடந்தது. அதே  சமயத்தில்  சிவாஜி  நடித்த  ஆலயமணி  படத்தின்  ஷூட்டிங்  காலையில்  நடந்தது. இயக்குநர்  பல  காட்சிகளில்   நான்கு  டேக்  , ஐந்து  டேக்  என   எம் ஜி ஆரை ட்ரில்  வாங்கினார். ஒரு  கட்டத்தில்  எம் ஜி ஆர்  எனக்கு  என்ன  நடிப்பு  வருதோ  அதை  எடுத்துக்குங்க . என்னிடம்  ஓவர்  ஆக்டிங்கை  எதிர்பார்க்க  வேண்டாம், அதை  எல்லாம்  காலை  அங்கே நடக்கும்  ஷூட்டிங்கில்   வைத்துக்கொள்ளுங்கள்  என்றாராம். இப்படத்தின்  க்ளைமாக்ஸ்  காட்சி  முதல்  நாள்  காலை  முதல்  அடுத்த  நாள்  இரவு   வரை  தொடர்ச்சியாக  எடுக்கப்பட்டது 


ஆலயமணி ,பணத்தோட்டம்   இரண்டு  படங்களுக்கும்  நாயகி  சரோஜாதேவி தான். இயக்குநர்  கே சங்கர்  தான். இருவரும்  பமபரம்  போல்  வேலை  செய்தார்கள்   என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே  பாடலில்   ஒரு  தலைவன்  இருக்கிறான்  மயங்காதே  என்ற  வரி  வரும், அது  தன்னைத்தான்  குறிக்கிறது  என  கலைஞர் சட்டசபையில்  சொன்னதாகவும்  எம் ஜி ஆர்  அதை  மறுத்து  அறிஞர்  அண்ணாவைக்குறிக்கிறது  என  கலைஞருக்கு  நோஸ்கட்  கொடுத்ததாகவும்  சொல்கிறார்கள்


இந்தப்படத்தைத்தொடர்ந்து  1963ல் எம் ஜி ஆர்  நடிப்பில்  வந்த  கொடுத்து  வைத்தவள் , தர்மம்  தலை  காக்கும் ,பெரிய  இடத்துப்பெண் ,நீதிக்குப்பின்  பாசம் , பரிசு  என   அனைத்தும்  வெற்றிப்படங்களே!


பாடல்  வரிகளில்  பேசுவது  கிளியா? இல்லை  பெண்ணரசி  மொழியா? பாடலில்  வரும்  சேரனுக்கு  உறவா? இல்லை  செந்தமிழர்  நிலவா? என்ற  வரி  மூலம்  எம் ஜி ஆர் ப் கேரளாவைச்சேர்ந்தவர்  என்ற  குறியீடு  இருக்கும்


எடிட்டர்  ஆக  இருந்த  கே  சங்கர்  இயக்குநர்  ஆன பின்  வந்த  முதல் எம் ஜி ஆர்  பட  வாய்ப்பு  அது . முதலில்  அவர்  அந்த  வாய்ப்பை  மறுத்தார்.  படத்தின்  வெற்றி  விழாவில்  எம் ஜி ஆர்  அதை  சுட்டிக்காட்டி  இப்போது  என்ன  சொல்கிறீர்கள்  எனக்கேட்டாராம். அதற்குபின்  இருவரது  காம்ப்போவில்  கலங்கரை  விளக்கம் , சந்திரோதயம், குமரிக்கோட்டம்   உடபட  பல  படங்கள்  வந்தன . 


கண்ணதாசன்  கதை , திரைக்கதையில்   சிவகங்கை  சீமையிலே  என்ற  படத்துக்கு  முதலில்  வைக்கப்பட்ட  டைட்டில்  ஊமையன்  கோட்டை . அதில்  எம் ஜி ஆர்  தான்  முதலில்  ஹீரோ வாக  நடித்தார். ஏதோ  சில  காரணங்களால்  அதில்  இருந்து  எம் ஜி ஆர்  விலகிக்கொள்ள  பின் ஜெமினி கணேசனை  ஹீரோ  ஆக்கி  படத்தை  முடித்தனர். அதனால்  தான்  இயக்குநர்  கே  சங்கருக்கு  எம்  ஜி ஆர்  மீது  மனத்தாங்கல்  இருந்தது



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  அம்மாவுடன்  வீட்டில் வசித்து  வருபவர். பட்டதாரி. தன்  சேமிப்புக்கணக்கில்  பணம்  செலுத்த  வங்கிக்குப்போகிறார். அப்போது  வில்லன்  நாயகனிடம்  சேஞ்ச்  இருந்தால்  கொடுங்கள்  எனக்கேட்டு  நைசாக  கள்ள  நோட்டைக்கை  மாற்றி  விடுகிறான். நாயகனைப்போலீசில்  பிடித்துக்கொடுக்கிறார்  பேங்க்  மேனேஜர் 


லாக்கப்பில்  இருந்த  நாயகன்  ஒரு  கட்டத்தில்  தப்பி  ஓடுகிறான். போலீஸ்  துரத்துகிறது . நாயகியின்  வீட்டுக்குள்  புகுந்து  அடைக்கலம்  கேட்கிறான்  நாயகன்.நாயகனுக்கும், நாயகிக்கும்  இதன்  மூலம்  பழக்கம்  ஏற்படுகிறது 


 கள்ள  நோட்டு  கும்பலைப்பிடிக்க  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஸ்பெஷலாக  நியமிக்கப்படுகிறார். நாயகியின்  அப்பாவிடம்  மேனேஜராக  வேலை  பார்ப்பவன்  தான்  சைடு  வில்லன்.  கள்ள  நோட்டுக்கும்பல்  தலைவன்  தான்  மெயின்  வில்லன்.   மெயின்  வில்லன்  யார்  என்பது  க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்டில்  தான்  தெரியும் 


 போலீஸ்  ஆஃபீசர்  நாயகியைப்பெண்  பார்க்க  வருகிறார்., இருவருக்கும்  திரும்ணம்  நிச்சயம்  ஆகிறது சைடு  வில்லன்  நாயகன் - நாயகி  இருவரும்  பார்க்கில்  டூயட்  பாடுவதை  நாயகியின்  அப்பாவான  தன்  முதலாளியிடம்  போட்டுக்கொடுத்து  விடுகிறான்


 மெயின்  வில்லனுக்கு  கையில்  ஆறூ  விரல்கள்  உண்டு . இந்த  தடயத்தை  வைத்து  நாயகன்  மெயின்  வில்லன்  யார் ? என்பதைக்கண்டறிய  முயற்சிக்கிறான்.  நாயகன்  அவன்  முயற்சியில்  எப்படி  வெற்றி  அடைகிறான்  என்பது  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர். அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்/. அவரது  ஃபேவரைட்  ஆன  அம்மா  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  உண்டு .   வழக்கம்  போல்  மாறு  வேடம்  போட்டு  பாடும்  காட்சிகளும்  உண்டு .


 நாயகி  ஆக  கன்னடத்துப்பைங்கிளி  சரோஜா  தேவி. இவரது  தாய்  மொழி  கன்னடம்  என்பதால்  இவரது  தமிழ்  உச்சரிப்பு  ஒரு  மார்க்கமாக  இருக்கும், ஆனால்  அதையும்  கொஞ்சல்  மொழி  என  ரசிகர்கள்  கொண்டாடினார்கள் 


சைடு  வில்லன்  ஆக  நம்பியார்  அசத்தி  இருக்கிறார். இரு  சண்டைக்காட்சிகளும் இவருக்கு  உண்டு .  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  அசோகன்  கச்சிதமான  நடிப்பு 


மெயின்  வில்லன்  பற்றி  சொன்னால்  சஸ்பென்ஸ்  போய்  விடும் 


  நாகேஷின்  காமெடி  டிராக் உண்டு . மெயின்  கதைக்கும்,  காமெடி  டிராக்கிற்கும்  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  காமெடி  குட் . 

இர்ண்டரை  மணி  நேரத்திற்கும்  குறைவாக  ட்யூரெஷன்  அமையும்  படி  டிரிம்  பண்ணி  இருந்தார்  எடிட்டர் 


விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இசையில்  6  பாடல்கள் . நான்கு  பாடல்கள்  செம  ஹிட் 


பி எஸ்  ராமய்யாவின்  கதைக்கு திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கே  சங்கர் 


சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோவுக்கு  ஓப்பனிங்  சாங்  , ஓப்பனிங்  ஃபைட்  சீன்  எல்லாம்  வைக்காமல்  முதல்  காட்சியிலேயே  கதைக்கு  நேரடியாக  சென்ற  விதம் 


2  அம்மா  செண்ட்டிமெண்ட்  சீன் , ரொமாண்டிக்  போர்சன்  இரண்டையும்  சரியாக  மிக்ஸ்  செய்து  கமர்சியலாக  படத்தை  தந்த  விதம் 

3    வில்லனின்  ஆறு  விரல் மேட்டரில்  வரும்  ட்விஸ்ட் 


4  மெயின்  வில்லன்  யார்  என  அறிய  வரும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒரு  நாள்  இரவு கண்  உறக்கம் பிடிக்கவில்லை  ( நாயகி  சோலோ  சாங் ) 


2  ஒருவர்  ஒருவராய்  வந்தோம் , இருவர்  இருவராய்  இணைந்தோம்


3  என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே? இருட்டினில்  நீதி  மறையட்டுமே? 


4  பேசுவது  கிளியா? இல்லை , பெண்ணரசி மொழியா? ஹோய்

5  ஜவ்வாது  மேடை இட்டு 

  குரங்கு  வரும்  தோட்டமடி  பழத்தோட்டம்

மனத்தோட்டம்  போதும்  என  மாயவனார் 


  ரசித்த  வசனங்கள் 


1  உன்  காலில்  ஒட்டுன  சேற்றை  ஏன்  என்  வீட்டில்  கொண்டு  வந்து  விடறே? 


2  நம்ம  முதலாளி  பார்க்க  யானை  மாதிரி  இருக்காரு , ஆனா  பொண்டாட்டியைப்பார்த்தா  பூனை  மாதிரி  ஆகிடறாரே? அது  ஏன் ? 


3  உங்களுக்கு என்ன  வேலை  தெரியும் ?


  எல்லா  வேலையும்  தெரியும்.  ஆனா  எந்த  வேலை  கொடுத்தாலும்  ஒரு  தடவை  சொல்லிக்கொடுக்கனும்


4  உங்களுக்கெல்லாம்  எந்த  மடையன்  வேலை கொடுப்பான்னு  சொன்னாங்க . இப்போ  உங்க  பேரை  சொல்லனும்  அவங்க  கிட்டே 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  படித்தவர் , பேங்க்கில்  தன்  சேமிப்புப்பணத்தை  டெபாசிட்  செய்யும்போது  யாரோ  ஒரு ஆள்  சேஞ்ச்  கேட்க  கொடுத்து  விடுகிறார்.  பேங்க்கில்  கூட்டமே  இல்லை , கவுண்ட்டரிலே  வாங்கிக்கொள்ளுங்கள்  என  சொல்லி  இருக்கலாமே?கள்ள  நோட்டு  அது 


2  நாம்  கட்ட  இருக்கும்  பணத்தில்  இரு  கள்ள  நோட்டுக்கள்  இருந்தால்  அதை  எரித்து  விடுவார்கள்  அல்லது  அழித்து  விடுவார்கள் . போலீசில்  பிடித்துக்கொடுப்பார்களா? 


3  கள்ள  நோட்டுக்கும்பலைப்பிடிக்க  ஸ்பெஷல்  ஆஃபீசர்  ஆகப்பொறுபேற்கும் அசோகன்  இன்ஸ்பெக்டரிடம்  “ நேத்து  ஒருத்தனை  கைது  பண்ணீங்களே? அவன்  மூலம்  ஏதாவது  தகவல்  தெரிந்ததா? என   கேட்கிறார். இல்லை  என  பதில்  வருது . அப்போது  சில  போலீஸ்  ஓடி  வந்து  செல்வம்  தப்பிச்சுட்டான்  என  சொன்னதும்  அசோகன்  வேகமாக  ஓடுகிறார். கள்ள்  நோட்டு  வழக்கி;ல்  கைதானவர் தான் செல்வம்  என  அவருக்குத்தெரியாதே?


4  லாக்கப்பிலிருந்து  தப்பிய  நாயகனை  போலீஸ்  ஊரெல்லாம்  தேடுது . நாயகனின்  வீட்டுக்கு  போலீஸ்  கண்காணிப்பு  போட மாட்டாங்களா? தப்பிய  நாயகன்  நேரா  தன்  வீட்டுக்குத்தான்  வர்றார்


5  ஆஃபீசர்  அசோகன்  நாயகி  வீட்டுக்கு  வந்த  போது  அங்கே  ஒளிந்த  நாயகன்  போர்வையால்  உருவத்தை  மூடி  காய்ச்சல்  வந்தவர்  போல்  படுத்து  இருக்கிறார் அவர்  முகத்தையே அசோகன்  பார்த்ததில்லை, ஆனால்  பெண்  பார்க்க  நாயகி  வீட்டுக்கு  அசோகன்  வந்தபோது   அன்னைக்கு அந்த  திருடன்க்கு  அடைக்கலம்  கொடுத்தாயே? என்கிறார்


6  வில்லன்  நாயகனின்  அம்மாவைக்கழுத்தில்  சுடுகிறான் அடுத்த  காட்சியில்  அம்மா  கையில்  முழங்கையில்  கட்டுப்போட்டு  இருக்கிறார். இட  மாறு  தோற்றப்பிழை?


7  கள்ள நோட்டு  கும்பலை  நாயகன்  கண்டுபிடிக்க  எந்த  முயற்சியும்  செய்ததாகத்தெரியவில்லை .    தானாத்தேடி  வந்து  ஒரு  ஆள்  க்ளூ  கொடுக்கிறான். இவரு  நாயகி  கூட  டூயட்  தான்  பாடிட்டு இருக்காரு   


8  நாயகி  வீட்டில்  மேனேஜராக  இருக்கு  வில்லனைக்கண்காணிக்க   வேண்டும்  என  நாயகன்  நாயகியிடம்  உதவி  கேட்கிறார். அப்போது  எதற்கு  நாயகி தோள்களை  அந்த  தடவு தடவுகிறார் ? 


9  இன்ஸ்பெக்டர்  ஆன  அசோகன்  ஒரு  சீனில்  புல்லட்டில் வர்றார் , இன்னொரு  சீனில்  சைக்கிளில்  வருகிறார். ஏன் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெரிய  பிரமாதமான    கதை  எல்லாம்  இல்லை , சராசரி  மசா;லாப்படம்  தான்  பாடல்களுக்காகவும் , எம் ஜி ஆர் 0 சரோஜாதேவி  ஜோடிக்காகவும்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5 


பனத்தோட்டம்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கே. சங்கர்
மூலம் திரைக்கதைபசுமணி
மூலம் கதைபிஎஸ் ராமையா
உற்பத்திஜி.என்.வேலுமணி
நடித்துள்ளார்எம்.ஜி.ராமச்சந்திரன்
பி.சரோஜாதேவி
ஒளிப்பதிவுதம்பு
திருத்தியவர்கே.நாராயணன்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
தயாரிப்பு
நிறுவனம்
சரவணா பிலிம்ஸ்
வெளிவரும் தேதி
  • 11 ஜனவரி 1963
நேரம் இயங்கும்
135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Friday, January 05, 2024

கிடா (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ட்ராமா த்ரில்லர்) @ அமேசான் பிரைம் , ஆஹா தமிழ்

 


திரைப்பட  விழாக்கள்  பலவற்றில்  கலந்து  கொண்டு  விருதுகளைக்குவித்த  படம்  இது 17  வருடங்கள்  அசிஸ்டெண்ட்  டைரக்டராக  பணி  ஆற்றிய  அறிமுக  இயக்குநர்  ரா  வெங்கட்  தன் அனுபவத்தை  வைத்து  முதன்  முதலாக  கவரிமான்  பரம்பரை  என்ற  டைட்டிலில்  விஷ்ணு  விஷால் -ஷிவானி ராஜசேகர்  நடிப்பில்  உருவாக  இருந்த  படம்  சில  காரணங்களால்  கைவிடப்பட்டது . அடுத்த  பிராஜக்ட்  தான்  இந்தக்கிடா. விருதுக்குத்தகுதியான  படங்கள்  கமர்ஷியலாகப்போவது  சிரமம் என்ற  பொது  விதியை  உடைத்து  ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்ற படம்  இது . நல்ல  சினிமா  ரசிகர்கள்  அவசியம்  காண  வேண்டிய  , தவற  விடக்கூடாத  படம் இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு  கிராமத்தில்  ஒரு  தாத்தா  , பாட்டி  தன்  பேரனுடன்  குடிசையில்  வசிக்கிறார்கள் . இரண்டு  நாட்களில்  தீபாவளி  வர  இருக்கிறது . பேரனுக்குப்புது  டிரஸ்  வாங்க  ரூ  2000  தேவைப்படுகிறது . தன்னிடம்  இருக்கும்  சின்ன நிலத்தை  விற்கலாம்  என  முடிவு  செய்கிறார். ஆனால்  யாரும்  வாங்க  முன்  வரவில்லை .  சிலரிடம்  கடன்  கேட்டுப்பார்க்கிறார். யாரும்  தரவில்லை . எனவே  பேரன்  ஆசையாக  வளர்த்த  ஆட்டுக்கிடாவை  விற்க  முடிவு  செய்கிறார்.  விலை  எல்லாம்  பேசி  அட்வான்ஸ் வாங்கிய பின் திருடர்கள் நால்வர்  அந்த  ஆட்டை  ஆட்டையைப்போட்டு  விடுகின்றனர் . இது ஒரு  டிராக் 


நாயகன் ஒரு  மட்டன்  கடையில்  பல  வருடங்களாக  வேலைபார்த்து வருபவன். ஓனருக்கு  ரொம்ப  செல்லம், ஆனால்  ஓனர்  மகனுக்கு  நாயகனைப்பிடிக்காது ஒரு  கட்டத்தில்  லேட்டாக  கடைக்கு  வேலைக்கு  வந்த  காரணத்தால்  இனி  வேலைக்கு  வர   வேண்டாம்  என  ஓனர்  மகன் சொல்லி  விடுகிறான். இதனால்  கடுப்பான  நாயகன்  தீபாவளி  அன்று  உன்  கடைக்கு    எதிரில்  ஒரு  கடை  போட்டு  வியாபாரம்  செய்கிறேன்  என  சவால்  விடுகிறான்..  எங்கெங்கோ  ஆடு  வாங்கப்போய்  கிடைக்காமல்  கடைசியாக  அந்த  தாத்தாவிடம் வந்து  சேர்கிறான்.. இது இன்னொரு   டிராக்


 நாயகனின்  மகன்  தன்  சொந்தக்காரப்பெண்ணைக்காதலிக்கிறான். இருவரும்  தீபாவளி  அன்று  காலையில்  வீட்டை  விட்டு , ஊரை  விட்டு  ஓடிப்போக  திட்டம்  போடுகிறார்கள் . நாயகனின்  மகன்  ஒரு  ஆட்டோ  டிரைவர் . தாத்தாவின்  ஆட்டைக்களவாடிய  களவாணிகளை  நாயகனின்  மகன்  ஆட்டோவில்  தான்  துரத்திச்செல்கின்றனர் . இங்கே  அவன்  பிசியாக  இருப்பதால்  சொன்னபடி  ஊரை  விட்டு  ஓடிப்போக  அவனால்  முடியவில்லை . இது  இன்னொரு  டிராக்


 இந்த  மூன்று  டிராக்  கதை  மாந்தர்களும்  ஒரே  டிராக்கில்  இணைந்து  பயணிக்கும்போது  என்ன  நடக்கிறது ? என்பதுதான்  கதை ‘  கதையின்  சுருக்கத்தைக்கேட்டால்  ரொம்ப  சாதாரணமாகத்தோன்றும், ஆனால்  திரைக்கதை  அமைத்த  விதம் , நடிகர்கள்  தேர்வு , கேரக்ட்ர்  டிசைன்  வடிவமைத்த  அழகு  எல்லாமாகச்சேர்ந்து  இதை  ஒரு  பிரமாதமான  படமாகக்கொண்டு  வந்திருக்கிறது 


 நாயகன் ஆக காளி  வெங்கட் . மிக  யதார்த்தமான  நடிப்பு .  முதலாளியிடம்  பணிவாகப்பேசுவதும் , ஓனர்  மகனிடம்  கோபமாக  சவால்  விடுவதும்  மாறுபட்ட  நடிப்பு .


 தாத்தாவாக  பூ  ராமு   அமைதியாக   , சோகமாக  வந்து  அனைவர்  மனதையும்  கவர்கிறார். பேரன்  ஆக  மாஸ்டர்  தீபன்  கச்சிதம்

ப்டத்தில்  நடித்த  அனைத்து  நடிகர்களுமே  யதார்த்தமாக  தங்கள்  பணியைச்செய்திருக்கிறார்கள் .


123  நிமிடங்கள்  ஓடும்படி  கச்சிதமாக  படத்தை  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் ஆனந்த  ஜெரால்டின். தீசன்  இசையில்  இரண்டு  பாடல்கள்  அருமை , பின்னணி  இசையும்  ஓக்கே  ரகம் எம்  ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவில் பகலில், இருட்டில்  காட்சிகள்  கச்சிதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன



சபாஷ்  டைரக்டர் (ரா  வெங்கட் )


1   சொந்தக்காரரிடம்  ரூ  5000  கடன்  கேட்ட  போது  அப்றமா  கடைப்பக்கம்  வாங்க  என  அனுப்பி  விட்டு  கடைக்கு  வந்த போது  200  ரூபாயை  செலவுக்குக்கொடுப்பதும்  அதை  அவர்  வாங்க  மறுப்பதும்  நெகிழ்ச்சியான  காட்சி 


2   ரூ  10,000  மதிப்புள்ள  ஆட்டுக்கிடாவை  விலை  பேசும்  நாயகன்  கைல 10 பைசா  இல்லாமல்  சமாளிக்கும்  விதம்  அருமை . ஒவ்வொரு  வீடாகப்போய் மட்டன்க்கு  ஆர்டர்  எடுத்து  50%  அட்வான்ஸ் வாங்கி  தான்  கொடுக்க  வேண்டிய  அட்வான்ஸ்  தொகையை  சேர்த்துல்  உத்தி அருமை 


3  களவாணிகள்  செல்லும்  டாட்டா  ஏஸ்  இருட்டில்  நிற்கிறது . தேடி  வந்தவர்கள்  பார்க்கும்போது  அடையாளம் தெரியவில்லை . தீபாவளிக்கு  முன்  தினம்  என்பதால்  அங்கே  சில  சிறுவர்கள்  புஷ்வாணம்  வைக்க  வான்  நோக்கி  பூச்சொரியும்  மத்தாப்பு  ஒளியில்  திருடர்களை  அடையாளம்  கண்டு  துரத்தும்  இடம்  மாஸ்  சீன் 


4   சில்லறைக்காசாக  உண்டியலில்  சேர்த்த  1000  ரூபாய்க்காசுகளை  உறவினர்  வீட்டில் கொடுத்து  ரூபாய்  நோட்டாக  மாற்றப்போனபோது அந்தப்பெண்  கூட  500  ரூபாய்  சேர்த்துத்தருவதும் , பட்டாசுகளைப்பரிசாகத்தருவதும் மனித  நேயம்  மலரச்செய்யும்  உணர்ச்சிகரமான  காட்சி


  ரசித்த  வசனங்கள் 


1  காலைல  வெள்ளனே ( விடியல்காலை) வந்து  டீக்கடையைத்திறக்கனும், நீ  பாட்டுக்கு  பொண்டாட்டியைக்கட்டிப்பிடிச்சுட்டே  கிடந்தா..?


 நீ  வந்து  பார்த்தியாக்கும் ?  பக்கத்துலயே  விட  மாட்டேன்கறா


 அப்றம்  எப்டி  3  புள்ளைக  பெத்தே?


2   நான்  பார்த்த  நாய்கள்  எல்லாம்  ஒண்ணு  குலைக்கும்  அல்லது  கடிக்கும், இதுக  ரெண்டும்  செய்ய  மாட்டேங்குது. நாம  உக்காந்தா  அதுவும்  உக்காருது , நாம  எந்திரிச்சா  அதுவும் எந்திரிக்குதே?


3  திருடனுக்கு  ஃபிட்னஸ்தான்  முக்கியம், நாய்  துரத்துது , ஓடாம  மரத்தைப்பிடிச்சு  தொங்கிட்டு  இருக்கே? 


4 குடிகாரனுங்க  பூரா  குழந்தை  மாதிரி , குழந்தை  எங்காவது  திருடுமா?


இவனைப்பார்த்தா  குழந்தையையே  திருடுனவன்  மாதிரி  இருக்கான் 


5  குடிக்கனும்னு  கூப்ட்டா  ஓடி  ஓடி  வருவானுங்க , ஆனா  உதவினு  கூப்பிட்டா  ஒரு  பய  வர  மாட்டான்


6  உதவி  என்பது  ஒருத்தரு  ஒருத்தர்  மாத்தி  செஞ்சுக்கறதுதானே?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  காட்சியில்  பேரன்  வாசலில்  ஆட்டுக்கிடா  உடன்  படுத்துத்தூங்குவதைப்பார்த்த தாத்தா  தன்  மனைவியை எழுப்பி  அவனை  உள்ளே  கூட்டிட்டுப்போய்  படுக்க வை  என்கிறார். ஏன் ? அதை  அவர்  செய்ய  மாட்டாரா? தூங்கிக்கொண்டிருக்கும்  மனைவியை  ஏன்  எழுப்பனும் ? ஆணாதிக்க  உணர்வு . இந்த  கேரக்டர்  மேல்  எப்படி  பரிதாபம்  வரும் ?   


2  பேரனின்  கேரக்டர் டிசைனில்  ஒரு குழப்பம். தான்  ஆசையாக  வளர்த்த  கறுப்பன்  என்னும்  கிடாவை  விற்றுத்தான்  தீபாவளி  டிரஸ்  வாங்கித்தர  முடியும்  எனில்  எனக்கு  தீபாவளி  டிரசே  வேண்டாம்  என  உறுதியாக  மறுக்கும்  பேரன்  அடுத்த  சில  காட்சிகளிலேயே  மனம் மாறுவது  எப்படி ? அவன்  கண்  முன்னாலாயே  ஆட்டைப்பேரம்  பேசி  விற்கும்போது  அவன்  எதுவுமே  சொல்லவில்லையே? 


3  டாடா  ஏஸ்  வண்டியில்  ஐந்து  ஆடுகளைத்திருடி  எடுத்துச்செல்லும்  களவாணிகள்  அந்த  வண்டியின்  பாடியை  கவர்  போட்டோ , துணி  போட்டோ  மூடாமல்  போகிறார்கள் . வழியில்  அனைவரும்  பார்க்கிறார்கள் . ஈசியா  ட்ராக்  பண்ணிப்பிடித்து  விடுவார்கள்  என  தெரிய  வேண்டாமா?


4  மட்டன்   வாங்க  அட்வான்ஸ்  கொடுத்த  ஆட்கள் தீபாவளிக்கு  முந்தின  நாள்  இரவே  காளி  வெங்கட்  வீட்டில்  வந்து  வருவாரா? வர  மாட்டாரா? என  தகறாரு  செய்வது  நம்பும்படி  இல்லை . தீபாவளி  அன்று  காலையில்  மட்டன்  தருவதாகத்தானே  பேச்சு? 


5  மிட்  நைட்டில்  உண்டியல்  காசு  எடுத்து  பாட்டி  அந்தக்கடைக்குப்போய்  பேரனுக்கு  டிரஸ்  எடுத்து  விடுகிறாள் . உடனே  தாத்தாவுக்கு  ஒரு  ஃபோன்  போட்டு  சொல்ல  மாட்டாளா? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  =- க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  த்ரில்லர்  படத்துக்கு உண்டான  விறுவிறுப்புடன் , பிரமாதமான  திரைக்கதையுடன்  2023 ஆம்  ஆண்டின்  சிறந்த  டாப் 10  படங்கள் பட்டியலில்  நிச்சயம்  இடம் பிடிக்கும்  படம்  இது . ரேட்டிங்  3. 5 / 5 


கிடா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ரா. வெங்கட்
உற்பத்திஸ்ரவந்தி ரவி கிஷோர்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஎம்.ஜெயபிரகாஷ்
திருத்தியவர்ஆனந்த் ஜெரால்டின்
இசைதீசன்
தயாரிப்பு
நிறுவனம்
வெளிவரும் தேதி
  • 11 நவம்பர் 2023
நேரம் இயங்கும்
123 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்